கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-13
மழை ‘ஜோ’ வென்று பொழிய தொடர ஒதுங்குவதற்கு இடம் தேடியவன் ஒரு கடை முன்பு வண்டியை நிறுத்தி ருத்ரா உடன் ஓரம் ஒதுங்கினான் பைக்காரன். நிமிடத்தில் பிடித்துக் கொண்ட மழையில் இருவருமே தொப்பலாய் நனைந்து விட்டார்கள். தலைகவசத்தை கழட்டியவன் அவனின் காப்பி கொட்டை நிற விழிகளால் மழை நீரில் விளையாடிக் கொண்டு இருக்கும் ருத்ராவை பார்த்தான். ஸ்ரீ அவள் கையை பிடித்ததே அவனுக்கு நினைவு வர அவளின் கையை பட்டென்று பிடித்து அவன் பக்கம் திருப்பிட அவனை கேள்வியாக பார்த்தாள் ருத்ரா. “என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? ஆமா நீ ஏன் காலேஜ்க்கு வந்த? நாளைக்கு அவங்க எல்லாரும் நீ யாருன்னு கேப்பாங்க..” என சிணுங்கினாள் ருத்ரா. அவள் கேள்வியில் அவளை முறைத்தவன், “ருத்ரா.. அன்னிக்கே உன் கிட்ட கேக்கணும்ன்னு நினைச்சேன்.. நீ திரும்பவும் தூக்கத்துல பயந்து கத்துனியாமே?” என வேண்டும் என்றே அவளின் அவள் மறக்க நினைக்கும் நினைவை பற்றி கேட்டான். அவள் அதனை பற்றி மறக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் உண்டு. ஆனால் அவளின் பயம் இன்னும் போகவில்லையே என்ற வருத்தம். அவன் கேட்ட கேள்வியில் அமைதியாய் தரையை பார்த்தாள்.
“இங்க பாரு ருத்ரா, பழைய பிரச்சனைய பத்தி யோசிக்காத.. அது எல்லாம் முடிஞ்சி போனது. நீ பயபுட்ரதுக்கு காரணமே இல்ல.. நிலவன் உயிரோடையே இல்ல. அதனால இன்னும் அவன் சொன்னது, பண்ணது நினைச்சி பயப்புடாத. நீ அதை எல்லாம் மறக்கணும் தான் உன்ன இந்த காலேஜ்ல சேர்ந்துக்க சொல்லி வீட்டையே மாத்தி இங்க தங்க வச்சி இருக்கேன். சோ இனிமேல் ரொம்ப யோசிக்காத.. அவன் செத்துட்டான். நீயும் அந்த கம்ப்ளைன்ட்டும் வாபஸ் வாங்கிட்ட விடியோவையும் என் கிட்ட ஒப்படைச்சிட்டு எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்ட.. சோ பயப்புடாத” என வாடிய முகத்துடன் நிற்பவளை பார்த்து ஆறுதல் கூறினான். அதற்கு சம்மதமாய் தலை அசைத்த ருத்ரா, “புரிது யுகா.. ஆனாலும்.. எனக்கு பயமா இருக்கு.. அவன் சம்பந்தப்பட்ட விஷயம் ஏதாவது கேள்விபட்டாலே எனக்கு திக்குன்னு இருக்கு.” என்று வெளரிய முகத்துடன் கூரியவளுக்கு குளிரில் லேசாய் நடுக்கம் எடுத்தது. “எனக்கு புரியுது.. பட் கொஞ்ச நாளா நீயும் எல்லாம் மறந்துட்டு பழைய படி இருக்கன்னு உன் அம்மா சொன்னாங்க.. எனக்கு சந்தோசம் தான்.. ஆனா திரும்ப நீயும் கஸ்ட்டபடுற மாதிரி உன்ன சேர்ந்தவங்களும் கஷ்ட்டபடுற மாதிரி பண்ணாத” என அவள் முகத்தை பார்க்க தவிர்த்தபடியே கூறினான். அவனால் அதனை பற்றி அவளிடம் நேரடியாக பேச முடியவில்லை. ருத்ரா அவன் கூற வருவதை புரிந்துக் கொண்டவள், “என்ன பாரு.. இன்னிக்கு என் கூட ஒரு பையன் வந்தான்ல அவனை எனக்கு புடிச்சி இருக்கு.. கண்டிப்பா என் அப்பா அம்மாவை கஷ்ட்டபடுத்துற மாதிரி நான் பண்ண மாட்டேன்.. என் அப்பா என்ன புரிஞ்சிப்பாறு.. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ கவலைபடாத.. ஏற்கனவே நான் உனக்கு ரொம்ப தொல்லை குடுத்துட்டேன்.. இந்த லவ் விசயத்துல உன்ன நான் இழுக்கவே மாட்டேன்” என லேசான சிரிப்புடன் கூறியவள் அவளை அறியாமலே அவனின் இதயத்தை சில்லு சில்லாய் நொறுக்கிக் கொண்டு இருந்தாள்.
வலி என்று சொல்வானா இல்லை வேதனை என்று சொல்வானா? ஆசைபட்ட ஒன்றிற்கு அதனை அடைய முயற்சி செய்யாமலே கை விட்டத்தின் உணர்வு இன்னும் ஒரு வலியை குடுக்கும். அப்படி தான் நின்றுக் கொண்டு இருந்தான். ஆழமாய் மூச்சை இழுத்துக் வெளி விட்டவன் விம்மி வரும் அழுகையை உடைந்த இதையத்தின் உள்ளே அடக்கிட பார்த்தான். அவள் அருகே இருந்தாள் எங்கே அவனை கட்டுப்படுத்த முடியாதோ என்று நினைத்தவன், “ருத்ரா லேசா தான் தூறுது நம்ம போலாம் வா” என்று கூறியவன் அவனின் தலை கவசத்தை அவளுக்கு போட்டு விட்டு அவளை கிளப்பினான். ருத்ராவும் மறுப்பு தெரிவிக்காமல் அவனுடன் சென்றாள். பத்தே நிமிடத்தில் வீட்டு வாசலில் இறக்கி விட, ருத்ரா, “அப்பா கிட்ட நீ முதல்ல சொல்லாதை.. நானே நேரம் வரும்போது சொல்றேன்” என்று கூறியவள் தலைகவசத்தை அவனிடம் குடுக்க சுரத்தையே இல்லாமல் தலை அசைத்து அதனை வாங்கிக் கொண்டு எங்கோ சென்றான். ருத்ரா அவனையே அமைதியாய் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
பல வருடங்களாய் அவனை பற்றி அவளுக்கு தெரியுமே.. ஒன்று அவன் முகத்தில் குறும்பு இருக்கும் இல்லை என்றால் தீவிரம் இருக்கும். அதை விட்டாள் கோவம். ஆனால் இன்று என்றுமே இல்லாத சோகம் குடி இருந்தது. எதனால் என்ன ஆனது என்று நினைத்தபடியே வீட்டிற்குள் வந்தவள் அவள் அறைக்கு சென்றாள். அவன் கூறிய வார்த்தைகளும் அவனின் முகமும் அவனை பற்றியே யோசிக்க வைத்தது. அங்கு வண்டியில் சென்றுக் கொண்டு இருந்தவன் இதே மழையில் தானே முதல் முதலாய் ருத்ராவை கண்ட நினைவு வர அவனை அறியாமல் வேகத்தை கூட்டினான். பருவ வயதில் இருக்கும் ருத்ராவை மழையில் கண்ட நாளில் இருந்து அவனுக்கு மழை என்றால் அவ்வளவு பிடிக்கும்.. மீண்டும் அந்த நாள் போல் ருத்ரா இருக்க அவள் அருகே தாம் இருக்க மாட்டோமா என ஏங்கிடுவான். ஆனால் இன்று அதே மழை, அவளாலே பெரும் வலியை அவனுக்கு கொடுத்தது. இருவரும் அவர்கள் சந்தித்த நாட்களை பற்றி நினைத்தார்கள்.
ருத்ரா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் தான் அவனை முதல் முறை சந்தித்தாள். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் மழை பொழிய துவங்க நனைந்தபடியே ஆசுவாசமாய் நடந்து வந்தாள் ருத்ரா. அவளுக்கு மழையில் நனைவது என்றால் கொள்ளை பிரியம். ஆனால் வீட்டிற்கு தெரிந்தாள் திட்டி விடுவார்களே என்று மழையில் ஆட்டம் போட்டிட மாட்டாள். இன்று தாம் தான் முழுதாய் நனைந்து விட்டோமே என்ற மிதப்பில் நடந்தவள் ஒரு கடையை பார்த்து வேகமாய் அங்கு சென்று குல்பி ஒன்றை வாங்கினாள். கொட்டும் மழையில் ஐஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு. அதனை இன்று அவள் நிறைவேற்றிக் கொண்டாள். தொப்பலாய் நனைந்து குல்பி ஐஸை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளை இன்னொரு விழிகள் ரசனையாக பார்த்தது. மழைக்கு ஒதுங்குவதற்காக நின்று இருந்த ஒருவன் இதழில் ஒட்டிய புன்னகை உடன் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான். ருத்ரா எவற்றை பற்றியும் கவலை கொள்ளாமல் ருசித்தபடியே வீட்டிற்கு நடந்தாள். வாசலிலே கமுக்கமாய் வாயை துடைத்துக் கொண்டு வேகமாய் ஓடி வந்து வீட்டிற்குள் நுழைவது போல் நுழைந்தவள், “ச்சே.. இந்த மழை இப்படி என்ன நனைச்சிடுச்சே.. நான் வீட்டுக்கு வந்ததும் பெய்ய கூடாத..” என சலித்துக் கொள்ள அவள் அம்மா அவளை ஏற இறங்க பார்த்தார். “என்ன இந்த அம்மா நம்மளை இன்னும் திட்டாம இருக்காங்க.. இந்நேரம் பக்கத்து தெரு வரைக்கும் கேக்குற அளவுக்கு திட்டி இருக்கணுமே.. ஏதோ சரி இல்லை..” என்று நினைத்தவள் அவளின் தந்தையை தேடிட அவரோ சோபாவில் அமர்ந்து சிறு சிரிப்புடன் பார்க்க அவருக்கு அருகில் இன்னொருவர் அமர்ந்து இருந்தார். “ஆத்தி வீட்டுக்கு விருந்தாளி யாரோ வந்து இருக்காரு.. அதனால தான் அம்மா அமைதியின் மறு ரூபமா இருக்காங்களா… இதையே சாக்கா வச்சி தப்பிச்சிடு..” என்று நினைத்தவள் அச் என தும்ம ஆரம்பித்தாள். “லக்ஷ்மி புள்ள தலைய துவட்டி விடு.. அப்பறம் உடம்புக்கு முடியாம போக போது” என்று அவள் தந்தை கூற அவளின் அம்மா ருத்ராவை அழுத்தமாய் பார்த்தபடியே துண்டால் அவள் தலையை துவட்டி விட்டார். அதனோடு விட்டாரா.. அவள் முதுகிலே ஒரு அடி போட்டவர், “கழுதை மழை பெய்யுதுன்னு தெரியுதுல்ல நின்னு வர வேண்டியது தானே.. அப்படி என்ன உனக்கு அவசரம்?” என திட்ட, “அம்மா வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க மா.. அவங்க முன்னாடியா அடிப்ப” என்று முகத்தை சுருக்கினாள் ருத்ரா.
“நான் கெஸ்ட் எல்லாம் இல்லமா.. ராமமூர்த்தி.. உன் ராமு அங்கிள்..” என லேசான சிரிப்புடன் அவள் தந்தைக்கு அருகே அமர்ந்து இருந்தவர் கூற ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தாள். ராமமூர்த்தி ருத்ரா தந்தை சதாசிவம் நெருங்கிய நண்பர். பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாய் இருக்கிறார்கள். ருத்ரா சிறு வயதில் அவரை ஓரிரு முறை பார்த்து இருக்கிறாள். அதனால் தான் இப்பொழுது அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் ராமு அங்கிள் என்று கூறினாள் அவளுக்கு நன்றாய் நினைவு தெரியும்.. அடிக்கடி போனில் கதைத்து இருக்கிறாள். அவரும் அவரின் மகளை போல் பார்ப்பதனால் ஒவ்வொரு பிறந்தநாளுக்கு அவளுக்கு பரிசை தவறாமல் அனுப்பி விடுவார். “ராமு அங்கிள் நீங்களா? வரேன்னு சொல்லவே இல்ல.. எப்படி இருக்கீங்க? எப்ப துபாய்ல இருந்து வந்திங்க? இருங்க நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று சந்தோசத்தில் அரக்க பறக்க கூறியவள் சிட்டாய் அவளின் அறை உள்ளே நுழைந்துக் கொண்டாள். அந்த நேரம் வீட்டின் உள்ளே இருபது வயதுடைய ஆடவன் ஒருவன் நுழைந்தான்.
“டேய் சதா.. என் பையன் வந்துட்டான் டா.. ஏன் டா இவ்வளவு நேரம்?” என மகனை பார்த்து அவர் கேட்க, “மழைல நனைய கூடாதுன்னு வெயிட் பண்ணி வந்தேன்” என்றான் அவன். “எங்க வீட்டு கழுதையும் தான் இருக்கே.. அடங்கவே அடங்காது.. நனையாதன்னு சொன்னா தான் ஆடிட்டு வருவா” என்று நொடித்துக் கொண்டார் லக்ஷ்மி. அதில் சிரித்த ராமமூர்த்தி, “பரவால்ல விடு மா.. தாரா குட்டி துரு துருன்னு இருக்குறது தான் அவளுக்கு அழகு.” என்று வக்காலத்து வாங்க அந்த ஆடவன் யாரை கூறுகிறார்கள் என்று ஆர்வமாய் பார்த்தான்.
“ஆமா ஏற்கனவே அவரு செல்லம் குடுத்து கெடுத்து வச்சி இருக்காரு.. நீங்களுமா?” என லக்ஷ்மி நொந்துக் கொள்ள, “உனக்கு பொறாமை மம்மி..” என கூறியபடியே கூந்தலை துவட்டிக் கொண்டு வெளியே வந்த ருத்ரா சோபாவில் அமர்ந்து இருப்பவனை பார்த்து அப்படியே நின்றாள். அவனோ உறைந்து விட்டான்.
“இவன் என் பையன் யுகவேந்திரன்.” என ராமமூர்த்தி அறிமுகப்படுத்தி வைக்க ருத்ரா லேசான சிரிப்புடன் தலை அசைத்தாள். யுகனுக்கு தான் தாம் காண்பது கனவா என்று இருந்தது. கடையில் நின்றுக் கொண்டு இருந்தவன் ருத்ராவையே ரசித்துக் கொண்டு இருந்தான். மழையின் காரணத்தினால் அவனால் அவள் பின்னே செல்ல முடியவில்லை. அவளை தவற விட்டோமோ என்று நினைத்தவன் அவளை இங்கு காண்போம் என எதிர் பார்க்கவில்லை. தன் தந்தை இத்தனை நாளாய் சொல்லிக் கொண்டு இருந்த பெண் இவள் தானா என்று நினைக்கவே அவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அவள் பெயர், அவள் இருக்கும் இடம் தெரிந்து விட்டது. அதையும் தாண்டி இரு குடும்பமும் நல்ல பழக்கத்தில் இருப்பதனை நினைத்து மகிழ்ந்தவனுக்கு ருத்ரா மீது இருந்த பிடித்தம் இன்னும் அழுத்தம் பெற்றது. பின்னணியில் இசை ஒலிக்க மனதிலே அவளுடன் டூயட் பாடும் அளவிற்கு சென்றான் யுகன்.
என்னடா அங்க அங்க லவ் காட்டுற😂😂
Athu apdithan da😂😍 thanks ♥️
நிலவன் யாரு அவனுக்கு என்ன ஆச்சு??
இங்கே என்னடா இந்த யுகவேந்திரன் தனியா ஒரு ட்ராக் ஓட்டிட்டு இருக்கான் போல?
Sekiram solren ka nandri😍