கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்-12
மதிய வேலை நெருங்கிட அனைவருக்கும் பசி வயிற்ரை கிள்ளியது. ஊரில் சாப்பாட்டிற்கு எந்த கடையும் இருக்காது என்று முன்னவே பேராசிரியர் தெரிவித்து இருந்ததனால் அனைவரும் சாப்பாடு எடுத்து வந்து இருந்தார்கள். கார்த்திக் நெருக்கத்தில் தட்டு தடுமாறிய ஜூலி ருத்ரா உடனே அட்டை போல் ஒட்டிக் கொண்டாள். இத்தனை நேரம் தன்னுடன் சுற்றிக் கொண்டு இருந்தவளை தன்னிடம் விடாமல் அவளுடனே வைத்துக் கொண்டு இருக்கிறாளே என்று பொங்கினான் ஸ்ரீ. ருத்ராவும் ஜூலியும் அவர்கள் மட்டுமே அங்கு இருப்பது போல் கதை அளந்துக் கொண்டு பேசி சிரித்துக் கொண்டு இருந்தார்கள். அதில் கடுப்புற்ற ஸ்ரீ கார்த்திக் சட்டையை கொத்தாக பற்றி, “கைய கால வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா? எதுக்கு டா ஜூலி கைய பிடிச்ச.. உனக்கு அவளை புடிக்கும்ன்னு தெரியும்.. அதுக்காக இப்படியா பட்டுன்னு பண்ணுவ.. இப்போ பாரு அவ ருத்ரா கூடவே ஓட்டிட்டு இருக்கா..” என எரிச்சலுடன் கூறினான்.
கார்த்திக் லேசாய் சிரித்தவன், “டேய் சத்தியமா பெருசா எதுவுமே பண்ணலை டா.. அவ இதுக்கே இப்படி இருக்கா.. ரொம்ப பொங்கி தொலையாத.. சாப்ட்டா அவ சரி ஆகிடுவா… அப்பறம் நான் அவளை தள்ளிட்டு போறேன்” என கேலியாக கூற “எதே.. டேய் அவ என் பிரண்டு டா.. கொப்பன் மவனே” என ஸ்ரீ அதிர, “அப்போ ருத்ரா என் பிரண்டு.. நான் ருத்ரா கூடவே மிச்சம் இருக்குற வேலைய பண்றேன்” என வீம்பாக கூற அவனை முறைத்து தள்ளினான் ஸ்ரீ. கடு கடுவென முன்னே வேகமாய் நடந்தான். அங்கு இருக்கும் பள்ளி கூடத்தில் தான் அனைவரும் சாப்பிட இடம் பார்த்து இருந்தார்கள். ஸ்ரீ முன்னே அங்கு செல்ல ராஜேஷ் ஒரு மரத்தடியில் தவம் இருப்பது போல் அமர்ந்து தரையை வெறித்துக் கொண்டு இருந்தான்.
“இவன் ஏன் இப்படி உக்காந்து இருக்கான்?” என யோசித்த ஸ்ரீ நேராக ராஜேஷிடம் சென்று, “மச்சான் என்ன டா இப்படி உக்காந்துட்ட.. இவ்ளோ நேரம் எங்க இருந்த? உன்ன எங்க எல்லாம் தேடுறது” என்றிட அவனை பாயங்கரமாய் முறைத்து தள்ளினான் ராஜேஷ். அந்நேரம் கார்த்திக்கும் வந்து சேர இப்பொழுது இருவரையும் முறைத்தவன், “டேய் உருட்டுரதுக்கும் ஒரு அளவு இருக்கு டா.. என்ன தேடுன முகரகட்டையா இது? ரெண்டு மணி நேரமா கூட ஒருத்தன் வந்தானே அவன் என்ன ஆனான் எங்க போனான் என்னனு பாக்காம என்ன விட்டுட்டு சோறு திங்க வந்துட்டு இப்ப நடிக்குரியா? பரதேசி.. அடிச்சேன்னு வையேன் பசி உயிரை போகுது சாப்புட வந்தா ஆளையே காணோம்.. இவ்வளவு நேரமா டா உங்களுக்கு? எல்லாரும் சாப்ட்டு முடிச்சிட்டாங்க இப்ப வரிங்க” என பசியில் கடுப்பாக கத்தினான் ராஜேஷ். அதில் ஸ்ரீயும் கார்த்திக்கும் சமாளிக்க முயற்சித்தார்கள்.
கார்த்திக், “டேய் ஒரு கால் பண்ணி இருந்தா உடனே வந்து இருப்போம்.. போன் எதுக்கு டா வச்சி இருக்க” என்றிட அதில் சுற்றி முற்றி அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேடிய ராஜேஷ், “ஏன் டா பேச மாட்ட.. வாய்ல அசிங்கமா வருது.. போன என்ன இதுக்கு டா வச்சி இருக்கீங்க? நாலு பேருக்குமே மாத்தி மாத்தி கால் பண்ணேன் ஒருத்தன் கூட எடுக்கலை.” என்றிட இருவருமே ஒன்று போல் போனை தேடினார்கள். ஸ்ரீ போன் சைலன்ட்டில் இருக்க கார்த்திக் போன் இல்லாமல் இருக்க அப்பொழுது தான் அவனின் போன் ஜூலி பையில் இருப்பது அவனுக்கு நினைவு வந்தது. “சாரி டா என் போன் ஜூலி கிட்ட இருக்கு” என கூற அப்பொழுது தான் ஜூலியும் ருத்ராவும் அங்கு வந்து ராஜேஷ் அருகே அமர்ந்தார்கள்.
“அப்பா.. என்ன வெயிலு.. பசி உயிரை எடுக்குது.. உனக்கலாம் பசிக்காதா டா.. சாம்ப்ராணி மாதிரி உக்காந்து இருக்க.. மனுஷன் தானா நீ” என நிலைமை புரியாமல் ஜூலி ராஜேஷை கேட்க வெறி கொண்டு அவள் தலையிலே கொட்டினான். ஜூலி, “எருமை எருமை எதுக்கு கொட்டுன.. பண்ணி பயலே” என திட்ட ஸ்ரீயும் கார்த்திக்கும் கமுக்கமாய் சிரித்தார்கள்.
“பின்ன என்ன டி.. பசிக்குதுன்னு உங்களுக்கு எல்லாம் கால் பண்ணா எடுக்கவே இல்ல.. சரின்னு இங்க வந்து வெயிட் பண்ணலாம்ன்னு வந்தா ஆடி அசைஞ்சி வர.. சாப்புட வந்தியே என்ன கூப்ட்டியா… நல்லா வக்கனையா மட்டும் பேசு குந்தாணி” என எரிச்சலில் ராஜேஷ் திட்ட பக்கென்று ருத்ரா சிரித்தாள். அவளை முறைத்த ராஜேஷ், “இந்தாமா ஏய்.. நீ என்ன கெக்க பெக்கன்னு சிரிக்குற.. நீயும் தானே பிரண்டுன்னு சுத்திட்டு இருக்க.. நீ ஆச்சும் கூப்ட்டியா?” என வீம்பாக நின்றான்.
“நீ தான் ஜூலி கூப்ட்டதுக்கு எங்க கூட வராம வேற டீம்க்கு போனில.. தப்பு உன்னோடது தான்.. நாங்க வேணாம்னு தானே போன.. போ.. அதான் கூப்படலை” என்று அப்படியே திருப்பி போட்டாள் ருத்ரா. அதில் நால்வரும் வாயை பிளந்தார்கள். ஜூலி, “ஆமா.. ஒழுங்கு மரியாதையா என் கூட வந்து இருக்க வேண்டியது தானே.. பன்னாடை.. எல்லாம் உன்னால தான்” என கார்த்திக்கை முறைத்தபடியே ராஜேஷை திட்டினாள்.
“நல்லா இருக்கு உங்க நியாயம்.. நீங்க என்ன மறந்துட்டு லவ் moodல ஊற சுத்திட்டு இப்போ என் மேலையே பழிய போடுரிங்களா..” என ராஜேஷ் முறைக்க நான்கு பேரும் உடனே அமர்ந்து சாப்பாட்டை எடுத்து வைத்து அவன் கூறியதை கண்டுக்காமல் இருந்தார்கள். ராஜேஷ் தான் தன்னை நொந்துக் கொண்டு அமர்ந்தான். ஜூலி அவள் பையில் இருந்து கார்த்திக் போன் மற்றும் மூன்று சாப்பாடு டப்பாவை வரிசையாக எடுக்க, “என்ன டோரா பை மாதிரி எடுக்க எடுக்க வருது” என்றான் கார்த்திக்.
“இந்த எருமை மாடுங்க பை தூக்க சோம்பேறி பட்டுடு என் கிட்ட தள்ளிடுச்சுங்க.. ஆமா உன் சாப்பாடு எங்க? கொண்டு வரலையா?” என காத்திக் வெறும் கையாக அமர்ந்து இருப்பதை பார்த்து கேட்டாள் ஜூலி.
“எனக்காக ருத்ரா கொண்டு வந்து இருக்கா.. ஹாஸ்டல் சாப்பாடு சாப்ட்டு அலுத்து போச்சு அதான் கொண்டு வர சொன்னேன்.” என கார்த்திக் கூற ருத்ரா புன்னகை உடன் சாப்பாட்டு டப்பா ஒன்றை அவனிடம் குடுத்தாள். ஸ்ரீக்கு தான் புசு புசு என்று இருந்தது. ராஜேஷ், ஜூலி, ருத்ரா மூவரும் சாப்பாட்டை பகிர்ந்துக் கொண்டு இருக்க டப்பாவை திறக்க போன கார்த்திக் கையை பிடித்தான் ஸ்ரீ.
“என்ன டா இது.. இந்த வேலைய எந்த கேப்ல பாத்த? நீ என் சாப்பாட்டை எடுத்துக்க..” என பிடிவாதமாய் கூறிட பெரு மூச்சு விட்டான் கார்த்திக்.
“டேய் அல்ப மாதிரி பண்ணாத டா.. சாப்பாட்டுல என்ன?” என கார்த்திக் சலித்துக் கொள்ள, “அப்போ என்னோடதை நீ எடுத்துக்க அதை நான் சாப்புடறேன்” என டப்பாவை மாற்றினான் ஸ்ரீ. ஆசையாக அவன் டப்பாவை திறக்க உள்ளே தயிர் சாதம் இருந்தது. அதனை பார்த்து உதட்டுக்குள் சிரித்தான் கார்த்திக். “ஹஹஹா.. இதுக்கு தான் நீ இவ்ளோ பொங்குனியா? நீயே சாப்புடு.. நான் முட்ட சாதம் சாப்புடறேன்” என பலிப்பு காட்டி உன்ன ஆரம்பித்தான் கார்த்திக். “போ.. தயிர் சாதம் வெயிலுக்கு நல்லது” என விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல் ஸ்ரீ கூற துப்பினான் கார்த்திக்.
கேலியும் கிண்டலுமாய் அன்றைய பொழுதை அந்த கிராமத்திலே கழித்தவர்கள் அந்த ஊருக்கு வரும் கடைசி பேருந்து நான்கு மணிக்கு என்பதனால் அனைவரும் அந்த பேருந்தை பிடிக்க கிளம்பி சென்றார்கள். ஜூலியும் ருத்ராவும் பேருந்தில் முன்னே ஏறி நின்றுக் கொள்ள, ஸ்ரீ, கார்த்திக், ராஜேஷ் மூவரும் பின்னே ஏறி நின்றுக் கொண்டார்கள். அவ்வபோது ஸ்ரீ மற்றும் ருத்ரா நயனங்கள் சந்தித்துக் கொண்டு சம்பாசனைகளை பரிமாறிக் கொள்ள கார்த்திக் ஏக்கத்துடன் ஜூலியை பார்த்தான். அவளோ அவன் பக்கம் திரும்புவேனா என்று இருந்தாள்.
“டேய் டேய்.. பஸ் ஆச்சும் விட்டு வைங்க டா.. நான் ஒருத்தன் இருக்குரதையே மறக்குரிங்க” என ராஜேஷ் ஸ்ரீ முன்னே வர அவனை ஓரம் தள்ளிய ஸ்ரீ, “மச்சான் மறைக்குது டா.. ஓரமா போய் பேசு” என்று ருத்ராவை பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஒரு மணி நேரம் பயணம் கழித்து அனைவரும் கல்லூரியில் வந்து சேர்ந்து அவர்களின் ரிபோர்ட்டை ஒப்படைத்து விட்டு வெளியே கிளம்பினார்கள். ஸ்ரீயும் ருத்ராவும் ரிபோர்ட் பற்றி பேசுவது போல் ஒன்றாய் பேசிக் கொண்டே நடந்து வந்தார்கள். ஜூலி ராஜேஷுடன் நடந்து செல்ல அவளை நெருங்கிய கார்த்திக், “ஜூலி இது உனக்கு தான்” என்று கூறி அவள் கையில் அவளுக்காய் அவன் வாங்கிய பிரேஸ்லைட்டை திணித்தான். அதில் கண்களை அகல விரித்தாள். அடர் நீல நிற மணிகளாலும் வெள்ளி நிற வலையத்தினாலும் கோர்கப்பட்ட பிரெஸ்லைட்டை ஆச்சரியமாய் பார்த்தவள், “இதை எப்போ வாங்குன?” என கேட்டவளுக்கு அதனை மறுக்கும் எண்ணமே இல்லை. பின்னே நடந்த கார்த்திக், “உனக்கு பிடிச்சி இருக்கா? நீ அசையா ருத்ரா ஓடத்தை பார்த்த அதான் வாங்குனேன்.. பாய் எனக்கு ஹாஸ்டல்க்கு நேரம் ஆச்சு” என்று கண்களை சிமிட்டி அழகாய் கூறியவன் கையை அசைத்தான். அவன் கையிலும் அதே போல் ஒன்று இருக்க உதட்டை கடித்துக் கொண்டு அவனை பார்த்தாள் ஜூலி.
முன்னே ருத்ராவும் ஸ்ரீயும் ஒன்றாய் நடந்து செல்ல சட்டென்று அவள் முன்னே வந்து ஒரு பைக் நின்றது. அதனை வைத்தே அவன் தான் என அறிந்தவள் நிமிர்ந்து பார்க்க தலையில் தலைகவசத்துடன் நின்று இருந்தான். ஏறு என்பது போல் அவன் தலை அசைக்க ருத்ரா வேறு வழி இல்லாமல் அதில் ஏற முற்பட்டாள். ஆனால் ஸ்ரீ அவளின் கையை பிடித்தவன், “என்ன ஆச்சு ருத்ரா? யாரு இது?” என கேட்க பைக்கில் இருந்தவன் ஸ்ரீ பிடித்து இருக்கும் அவளின் கையை கண்டு அதில் இருக்கும் பிரேஸ்லைட்டையும் கவனித்தான். அவன் ஆக்சிலரேட்டரை கூட்டிட, ஸ்ரீயின் கைகளை பிரித்தவள், “என்னோட சொந்தக்காரவங்க.. பாய்” என்று கூறி பைக்கில் ஏறி அமர அடுத்த நொடியே வேகமாய் அங்கு இருந்து வண்டியை கிளப்பினான் அவன். ஸ்ரீக்கு மனம் லேசாய் கலங்க செல்லும் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றான்.
எவன் டா அந்த ஹெல்மெட் மண்டையேன் சீக்கிரம் காட்டேன் டா 🤧🤧super da ❤️❤️
Katuren darling 😍 varuvan sekiram.. thanks😍