கண்ணாலே அனுப்பினாய் அஞ்சல்- 10
படம் முடிய அனைவரும் மகிழ்வுடனே வெளியே வந்தார்கள். ராஜேஷ், கார்த்திக், ஜூலி மூவரும் முன்னே நடக்க அவர்கள் பின்னே ருத்ராவும் ஸ்ரீயும் நடந்தார்கள். இருவருகும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. சிறிது தயக்கத்துடனே நடந்தார்கள். ருத்ராவிற்கு ஏதேனும் அவனுடம் பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும் எப்படி என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவளின் தயக்கத்தை புரிந்துக் கொண்ட ஸ்ரீ மெல்ல அவளிடம் பேச்சு குடுக்க அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லியபடியே நடந்தாள். அவர்கள் செல்வதையே மேலே இருந்த ஒருவன் பார்த்துக் கொண்டு இருந்தான். ருத்ரா அந்த இடத்தை விட்டு செல்வதை பார்த்தவன் நேராக அவனின் பைக் நோக்கி சென்றான். சூழலை அறியாத ருத்ரா ஸ்ரீ உடன் பேசியபடியே அவள் உலகில் மூழ்கி இருந்தாள். “டேய் இவங்களுக்குள்ள பிக் அப் ஆச்சு போலையே.. ட்ரில் மாஸ்டர் பேச அவ சிரிக்க.. வாழ்றான் டா..” என அவர்களை பார்த்தவாறே கூறிய ஜூலி ராஜேஷ் தோளை இடித்தாள். அவனோ சலிப்படைந்தான், “நீ என்ன வேலை பண்ணி இருக்கன்னு தெரியுதா?” கேலியாக கேட்க அவனை முறைத்து தள்ளினாள் ஜூலி. “எனக்கு என்னமோ ருத்ராவுக்கும் ஸ்ரீயை புடிக்கும் போல..” என கார்த்திக் கூற இருவரும் அதிர்ச்சியாய் அவனை பார்த்தார்கள்.
“எப்படி சொல்ற?” என சந்தேகமாய் ஜூலி கேட்டாள். ஒரு பக்கம் அவளுக்கு, ருத்ரா உடன் தாம் தான் அதிகமாய் இருக்கிறோம் அப்படி இருக்கையில் நமக்கே தெரியவில்லையே என்ற பொசசிவ் அவளுக்கு.
“என் கிட்ட அவ பேசுறதுக்கும் அவன் கிட்ட பேசுறதுக்கும் வித்தியாசம் இருக்கு. இதை உன் பிரன்ட் புரிஞ்சிகிட்டா சரி.. உன்ன மாதிரி தற்குறியா அவன் இருக்க மாட்டான்னு நினைக்குறேன்” என கடைசி வாக்கியத்தை மட்டும் முணுமுணுத்தான் கார்த்திக். ஜூலி அதனை கவனிக்கவில்லை, ஆனால் ராஜேஷ்க்கு கேட்டு விட்டது. என்ன டா நடக்குது இங்க என்பது போல் கார்த்திகை பார்க்க ஜூலி தீவிரமாய் யோசனை உடன் ருத்ராவை பார்த்துக் கொண்டு இருந்தாள். ருத்ரா சிரிப்பு அவள் கண் வரை எட்டி இருந்தது. மற்ற நேரங்களில் இருக்கும் ஒரு உணர்வு இப்பொழுது அவள் கண்ணில் கொஞ்சமும் இல்லை. அவள் கண்ணில் ஸ்ரீ மட்டுமே நிறைந்து இருந்தான். ஜூலிக்கு மகிழ்வாய் இருந்தது. அவளின் சிரிப்பில் லேசாய் சிரித்துக் கொண்டான் கார்த்திக். “டேய்.. ஆளாளுக்கு ஒரு முடிவோட தான் டா இருக்கீங்க.. நான் தான் லூசு பய மாதிரி இருந்து இருக்கேன்.. நீங்க நடத்துங்க டா..” என கூறிய ராஜேஷ் முன்னே நடக்க ஜூலி குழப்பமாக அவனை பார்த்தாள். அவன் ஏன் அப்படி கூறுகிறான் என்று அவளுக்கு சுத்தமாய் விளங்கவில்லை. “ஆமா உனக்கு இது மாதிரி எதுவும் ஆசை இருக்கா?” என கார்த்திக் கேட்க, வேகமாய் தலை அசைத்த ஜூலி “இருக்கே.. லவ் பண்ணா கொரியன் பையனை தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்.. ச்ச.. என்னமா கேர் பண்ணி பாத்துப்பாங்க.. போனும் கொரியா போய் செட்டில் ஆகணும்.. ஹைட்டா.. அழகா.. அவங்க எல்லாம் அப்படியே கையில தாங்குவாங்க” என சிலாகித்து கூறினாள் ஜூலி.
“சுத்தம்.. பைத்தியம் போல..” என மனதில் நினைத்த கார்த்திக் ஜூலியிடம் பேச வாயெடுக்க திரையரங்கம் வாசலில் கூட்டம் கூடும் சத்தம் கேட்டு மூவரும் ஒன்றாய் அங்கு விரைந்தார்கள். கூட்டத்தை விளக்கிக் கொண்டு பார்க்க ஸ்ரீ ஒருவன் சட்டையை கொத்தாக பற்றி இருக்க அவனின் சட்டையை இன்னொருவன் பற்றி இருந்தான். ஸ்ரீக்கு எதிரில் இருந்தவனை பார்த்து ராஜேஷும் ஜூலியும் அதிர்ந்து வேக வேகமாய் அவர்களிடம் சென்றார்கள். ஜூலியும் ருத்ராவும் ஸ்ரீ பக்கம் நின்று அவனை பிரிக்க பார்க்க ராஜேஷ் இருவருக்கும் இடையே இருந்து விளக்கி விட பாத்தான்.
ஜூலி, “ஸ்ரீ அவனை விடு டா.. நம்ம இப்போ வெளிய இருக்கோம்.” என அமைதியான குரலில் பிரிக்க முயல, “இவன் ஒருத்தனால தான் எனக்கு இவ்ளோ பெரிய பிரச்சனை.. இவன சும்மா விடக் கூடாது” என்று துள்ளிக் கொண்டு சென்றான் ஸ்ரீ. “உன் மண்டைய உடைச்சதோட விட்டு இருக்க கூடாது.. அன்னிக்கே உன்ன எழுந்து நடக்க முடியாதபடி பண்ணி இருக்கணும்..” என எதிரில் இருப்பவனும் துள்ளிக் கொண்டு வந்தான். இம்முறை கார்த்திக்கும் ஸ்ரீ பக்கம் வந்து அவனை பிடித்துக் கொண்டான். “பொருக்கி நாயே.. உன்ன இன்னிக்கு விட மாட்டேன் டா..” என ஸ்ரீ கோவத்துடன் அவனை அடிக்க துள்ளிட ருத்ரா அவனின் கையை கெட்டியாக பற்றிக் கொண்டாள். “ஸ்ரீ ப்ளீஸ்.. பப்ளிக்ல பிரச்சனை வேணாம்.. விடு” என கெஞ்சலுடன் கேட்க அதற்கு எல்லாம் மசியும் எண்ணத்தில் ஸ்ரீ இல்லை. “மாட்டேன்.. இன்னிக்கு இவன சும்மா விட மாட்டேன்.. இவனால தான் என் ncc வாழ்க்கையே நாசமா போச்சு..” என்று கோவத்துடன் கூறியவன் எதிரில் இருப்பவனை அடிக்க ஓங்கினான். அவனை வேகமாய் அவள் பக்கம் இழுத்த ருத்ரா, “நீ இப்போ அவன அடிச்சா மட்டும் உன் ncc கரியர் பழையபடி மாறுமா? புத்திகெட்டு முட்டாள் தனமா பண்ணாத..” என சூடாக கூற ஸ்ரீ அமைதியாய் நின்றான். ராஜேஷ் எதிரில் இருப்பவனை பார்த்து சரி கட்டி அனுப்ப பார்க்க அவனோ ஸ்ரீயை அடித்தே ஆவேன் என்று துள்ளிக் கொண்டு இருந்தான். “டேய்.. ஒழுங்கு மரியாதையா போய்டு.. தேவை இல்லாம பிரச்சனை பண்ணாத” என கூறிய கார்த்திக் அவனின் சட்டையை கொத்தாக பற்றினான்.
“என்னங்கடா ஆளாளுக்கு சீன போடுறிங்க.. பிலிம் காட்டுறியா.. மவனே எல்லார் மூச்சியையும் அடிச்சி நாசத்தி பண்ணிருவேன்” என அவன் மிரட்ட திரையரங்கில் இருக்கும் பவுன்சர்ஸ் அங்கு வந்து இவர்களை பிரித்து விட்டார்கள். அதன் பின் தான் அவன் அங்கு இருந்து சென்றான்.
ஜூலி, “ஏன் டா இப்படி பண்ற? ஏற்கனவே நீ அனுபவிக்குறது பத்தாதா? அவன பாத்த உடனே கோவப்பட்டு அடிக்க போற? போலீஸ் கேஸ்ன்னு ஆனா என்ன பண்ணுவ? அப்போ உன் மிலிடரி கனவ மறந்துட்டு கிடைச்ச வேலைக்கு போ” என திட்டிட இறுக்கத்துடனே நடந்தான் ஸ்ரீ.
“நான் அட்வைஸ் பண்றேன்னு நினைக்காத ஸ்ரீ.. நம்ம சில நேரம் கோவப்பட்டு அவசரத்துல எடுக்குற முடிவுனால நமக்கு மட்டும் இல்லாம நம்மள சுத்தி இருக்குறவங்களுக்கு அது பிரச்சனை உண்டு பண்ணும்.. என்னைக்குமே நம்மளை சார்ந்து இருக்குறவங்க கஸ்ட்ட படாத மாதிரி நம்ம நடந்துக்கணும்.. உன் ட்ரீம் மிலிடரில சேரனும்ன்னு சொல்ற… அதுக்கு பொறுமை எவ்ளோ முக்கியம்ன்னு நான் சொல்லி தான் தெரியணும்ன்னு இல்ல.. உனக்கும் அவனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியாது ஆனா இப்போ நீ அவனை அடிச்சி இருந்தா இங்க இருக்குறவங்க கண்டிப்பா போலீஸ்க்கு கால் பண்ணி இருப்பாங்க.. அப்பறம் ஜூலி சொன்ன மாதிரி உன் கனவை விட்டுட்டு நீ வேற வேலைக்கு போக வேண்டியது தான். நம்ம ஆசைப்பட்ட விசயத்துக்காக நம்ம எதை வேணாலும் செய்யலாம் எதை வேணாலும் பொறுத்துக்கலாம்.. நிதானமா இரு” என அமைதியான குரலில் கூறினாள் ருத்ரா.
ஸ்ரீக்கு மட்டும் இல்லை மற்ற மூவருக்கும் அவளின் பேச்சில் ஆச்சரியமாய் இருந்தது. இது தான் முதல் முறையாக அவள் இவ்வளவு நீளமாய் பேசி இருக்கிறாள். இப்படி எல்லாம் அவளுக்கு பேச தெரியுமா என்ற ஆச்சரியம். இன்று ருத்ரா கூறிய வார்த்தைகளே நாளை அவளை வதைக்க போகும் என அறியாமல் அறிவுரையை வழங்கிக் கொண்டு இருந்தாள். ஸ்ரீக்கும் அப்பொழுது தான் நிதர்சனம் புரிந்தது. ருத்ரா கூறியது போல் அவனை அடித்தாள் ஒன்றும் ஆகாது. மற்றும் ஜூலி கூறியது போல் அவன் கனவை இத்துடன் மறந்து இருக்க வேண்டியது தான். மனதிலே அமைதியாய் அனைத்தையும் யோசித்துக் கொண்டே நடந்து வந்தான்.
ருத்ரா, “ஆமா உனக்கு ஏன் அவன் மேல இவ்ளோ கோவம் என்ன பிரச்சனை? இதுக்கும் உன் NCC கரியர்க்கும் என்ன பிரச்சனை?” என தெரிந்துக் கொள்ளும் எண்ணத்துடன் கேட்டவள் அவனை பார்த்தாள். அவனோ அமைதியாய் தரையை பார்த்து நடந்துக் கொண்டு இருந்தான். பதில் வராது என்ற எண்ணத்தில் அவளும் மற்றவர்களுடன் நடந்தாள். அவனை வற்புறத்தி கேட்கும் எண்ணம் அவளுக்கு இல்லை. ஆனால் அவன் சண்டையை போடும் பொழுது அவளுள் அவளின் கடந்த காலம் நினைவிற்கு வந்து பழைய நினைவுகளை கிளறி விட்டது. அதே நினைவில் ஸ்ரீ கையை பிடித்து இருந்தவள் கையை இறுக்கினாள். அவன் சண்டையிட போகும் பொழுது கையை பிடித்து இருந்தவள் இன்னும் விடாமல் அப்படியே பிடித்து இருந்தாள். “நான் யுஜி பைனல் இயர் படிக்குறப்போ ஒரு பிரச்சனை.. அப்போ இன்டர் காலேஜ் காம்படிஷன் நடந்துச்சு… நாங்க எல்லாம் போய் இருந்தோம்.. அப்போ என் கூட சண்டை போட்டான்ல அவனும் வந்து இருந்தான். பாய்ஸ் ரூம்ல உக்காந்து போதை மருந்து யூஸ் பண்ணான்.. அத காலேஜ் உள்ள யூஸ் பண்றான்னு நான் கண்டிச்சேன்.. அவன் போதையில ரொம்ப பேசிட்டான்.. அதான் அடிச்சி கைய உடைச்சேன்.. சண்டை பெருசாகி அவன் பாட்டில்லால என் மண்டைய உடைச்சான்.. நாங்க ரெண்டு பேரும் அடிச்சிக்குரத்தை பார்த்து அந்த காலேஜ்ல இருந்து ஆளுங்க வந்து பிரிச்சி விட்டு அப்பறம் எங்க மேனேஜ்மன்ட்க்கு தகவல் சொல்லி பெரிய பிரச்சனை ஆச்சு..” என கூறி ஸ்ரீ நிறுத்த, ஜூலி தொடர்ந்தாள்.
“அப்பறம் என்ன வெளி காலேஜ்க்கு போய் காலேஜ் மானத்தையே வாங்கிட்டான்னு இவனை டிஸ்மிஸ் பண்ற அளவுக்கு போனாங்க.. பைனல் செமஸ்டர்ன்னு விட்டு வச்சாங்க.. ஸ்ரீ மேல தப்பு இல்ல அவன் தான் ட்ரக் யூஸ் பண்ணானு சொன்னாலும் இவன் சண்டை போட்டு இருக்க கூடாது கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கனும்ன்னு இவனையே திட்டுனாங்க.. அதுனால தான் பாதர் இவனுக்கு ncc சர்டிபிகேட் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.. பிஜியே இங்க இவனை சேர்த்துக்கலை.. Ncc சார் சொன்னதுனால தான் சேர்த்துக்கிட்டாங்க..”
ஸ்ரீ, “பாதர் மட்டும் ncc செர்டிபிகேட் குடுத்து இருந்தா இந்நேரம் நான் அக்கடமிக்கு போய் இருப்பேன்.. இந்த ரெண்டு வருஷம் நான் ஒழுங்கா இருந்தா குடுக்குறேன்னு சொல்லி இருக்காரு.. முடிச்சிட்டு ஆர்மி அக்கடமிக்கு போனும்” என்றவாறே ஸ்ரீ நடக்க ருத்ராவின் பிடி தளர்ந்தது. போதை மருந்து என்று கேட்டதுமே அதிர்ச்சியில் உறைந்தவளுக்கு மற்ற விடையங்கள் எதுவும் பெரிதாய் அவள் காதில் ஏறவில்லை. அதிர்வுடனே இயந்திரமாய் நடந்தாள்.
இவளுக்கு இருக்கிற பிரச்சினைக்கும் ithukkum etho sammantham irukkum pola 🤔🤔
Irukum irukum 😂 thanks darling ♥️
போதை மருந்துன்னு சொன்ன உடனே ருத்ரம் ஏன் ஷாக் ஆகுறா??ருத்ராவோட பிரச்சினைக்கும் ஸ்ரீக்கு நடந்த பிரச்சனைக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போல.
Nandri akka 🥰