மாலை நேரம் அனைவரும் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பும் வேளையில் மிகவும் கடுப்பான விடையம் சிக்னலில் காத்திருப்பது தான். அவர் அவர்களின் அவசரத்திற்கு ஏற்ப ஹாரன் அடித்துக் கொண்டும், மற்றவர்களை கடுப்பில் கத்திக் கொண்டு இருந்தார்கள். அனுமான் வால் போல் நீண்டு இருக்கும் கூட்டத்தின் மையப் பகுதியில் ஒரு ஆட்டோவில் இருந்தவள் கண்களின் கண்ணீரோடு அமர்ந்து இருந்தாள். எப்போது சிக்னல் விழும் எப்போது வண்டி நகரும் என்ற படபடப்பு அவளுக்கு. தளிர் அவளின் விழிகள் அழுகையில் சிவந்து இருந்தது.
“அழாத பாப்பா.. நம்ம சீக்கிரம் போய்டலாம்” என ஆட்டோக்கார அண்ணா அவளின் நிலை என்ன என்று கூட அறியாமல் ஆறுதல் கூறினார். போனில் யாருக்கோ நீண்ட நேரமாய் அழைக்க முயற்சி செய்துக் கொண்டு இருந்தாள். ஆனால் எதிர் புறத்தில் அவளின் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை. சிக்னல் விழுந்தாலும் இன்னும் வண்டி நகராமல் இருந்தது.
“அண்ணா.. நான் இங்கயே இறங்கிக்குறேன்.. ஸ்டேஷன் கிட்ட தான் நான் நடந்து போய்க்கிறேன்” என்று கமரிய குரலில் கூறியவள் அவருக்கு காசை குடுத்து விட்டு இறங்கினால். அவளுக்கு என்ன கவலையோ என்று பாவமாக அந்த ஆட்டோக்காரர் பார்த்துக் கொண்டு இருந்தார். கீழே இறங்கியவள் கண்களை அழுந்த துடைத்தபடியே வேக எட்டுக்களுடன் அனைத்து வண்டியையும் கடந்து நடைமேடை பக்கம் சென்றாள். வேகமாய் அவள் நடந்துக் கொண்டு இருக்க அவளின் போன் அடித்தது. ஆசையாக அவள் எடுத்து பார்க்க அவளின் தோழி அழைத்து இருந்தாள்.
“என்ன ஆச்சு? பாத்தியா? இல்லையா?” என்று அமைதியான குரலில் கேட்டாள். அவளுக்கு பதில் தெரிந்தாலும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தாள்.
“இன்னும் இல்ல.. நீ இப்போ எங்க இருக்க?” என்று கேட்டாள் அவளின் தோழி.
“டிராபிக்ல மாட்டிக்கிட்டேன்.. இப்போ நடந்து வந்துட்டு இருக்கேன்” என்று கூறியவள் தேங்கிய கண்ணீரோடு அழைப்பை துண்டித்தாள். அவசரமாய் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் நோக்கி நடந்துக் கொண்டு இருக்க வருவோர் போவர் எல்லாம் அவளை ஒரு நொடி திரும்பி பார்த்தார்கள். ஸ்டேஷன் சென்றவள் நேராக அங்கு இருக்கும் அவளின் நண்பர்கள் பக்கம் ஓடினாள்.
“என்ன ஆச்சு? கண்டு பிடிச்சிங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டாள். அதற்கு மவுனம் சாதித்தார்கள், அவளின் நண்பர்கள்.
“உங்களை தான் டா கேக்குறேன்.. ப்ளீஸ் சொல்லுங்க டா” என்று அழுகை உடனே கெஞ்சினாள். அதற்கு மறுப்பாக தலை அசைத்தான் ஒருவன்.
“என்ன கண்டு பிடிக்க முடியலையா?” என்று கேட்டவள் கண்களை துடைத்துக் கொண்டு ஏதேனும் ரயிலில் இருக்கிறானா என்று தேட ஓடினாள்.
“அவன் போய்டான்” என்று கேட்டதும் உலகத்தின் ஓசைகள் அனைத்தும் அவளுக்கு நின்றது போன்ற ஒரு உணர்வு. அதே இடத்தில் ஸ்தம்பித்து நின்றாள். நிலைமையை புரிந்துக் கொள்ள நிமிடங்கள் பிடித்தது.
“போய்டான்ல?” என அவளின் நண்பர்களை பார்த்து வலி நிறைந்த விழிகளுடன் கேட்டாள் தாரா. அவளின் இந்த வலிக்கும் வேதனைக்கும் காரணமானவன் விழிகளும் கண்ணீரில் நிரம்பி இருந்தது.
யாரு எங்க போனா 🙄 வெயிட்டிங் ஃபார் அப்டேட்🥰🥰🥰
Thanks akka♥️
Poyittaana .. nee arambame pirichuta .. serthu vai ilena pottu thalliduven😡 nalla start… 🩷
😁😁 serthu vaikanumaa???😂🫣
Supruuu da❤️😍😍. Semma tea
Ama yaru ra avan enga pora ethuku poran 🤣🤣. Waiting for😂 ud da❤️.
Ana onnu oru scene kooda onna katala hero heroine ah athukulla sanda sambatha kamichita😂😂
Enga da ponan yevan ponan. Tho kathaiye arambikila pirichi vitachu seri thabn. Waiting for ud da ❤️😍. Super teaser
Thanks ka♥️
😭😭ena da arambame alukachiya iruku nambi padikalama
Nambikai athane ellam🏃🏻♀️🏃🏻♀️
Waiting💫
Thanks ka😍
Supruuu da❤️😍😍. Semma tea
Ama yaru ra avan enga pora ethuku poran 🤣🤣. Waiting for😂 ud da❤️.
Ana onnu oru scene kooda onna katala hero heroine ah athukulla sanda sambatha kamichita😂😂
படுபாவி உன்வேலையைக் காட்டிட்டியா… ஏன்டி பிரிச்சுவிட்ட… 😵💫
இருடி கதை வரட்டும்… அப்ப இருக்கு உனக்கு…
😁😁 na pirikkala🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️😂