Loading

கோயம்புத்தூர் மாவட்டத்தின் போஷ் பகுதிகளில் ஒன்றான ஆர்.எஸ்.புறத்தில் அமைந்துள்ளது சமி இல்லம். பெயர் தான் இல்லம் ஆனால் அது 4000 சதுர அடியில் அமைந்துள்ள அரண்மனை. 3000 சதுர அடியில் இல்லமும் 1000 சதுர அடியில் தோட்டமுமாகப் பார்க்கப் பிரமாண்டமாகவும் அழகாகவும் இருந்தது அந்த வீடு.

“யாம்ஸ் யாம்ஸ்” என ஒரு குரல் அந்த வீடே அதிரும்படி கேட்க அங்கு வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் ஒரு நிமிடம் திடுக்கிட அந்த பெயரின் சொந்தக்காரி யாமினி வேகமாகப் படிகளில் ஏறி குரல் வந்த அறைக்குச் சென்றார். அவரை பார்த்ததும் அறையிலிருந்த இருவரில் ஒருவர் நமட்டுச்சிரிப்பு சிரித்தார்.

“எதுக்குடி இப்பிடி இளிக்கிற?”

“என்ன மினிமா இப்படி என்ன ஏமாற்றி விட்டியே.” நாடக பாணியில் கேட்டார் மினியின் அன்பு கணவர் வாசுதேவன். யாமினி அவரை முறைத்துப் பார்த்து,”இங்க பார் வாசு நானே நேரமாச்சுனு இருக்கிறேன். உனக்கும் உன் பொன்னுக்கும் விளையாட்டு கேக்குதா? நீங்க என்னவோ பன்னுங்க முதலில் என்னை எதுக்குடி கூப்பிட்ட?”

“இல்ல யாம்ஸ் நான் உன்ன கூப்பிட்டா நீ வருவனு சொன்னேன். ஆனால் பாப்ஸ் நீ வரமாட்டனு சொன்னார். அதான் எங்களுக்குள்ள ஒரு பந்தயம் அதுல நான் ஜெய்ச்சிட்டேனே” தன் இரு கைகளையும் காற்றில் ஆட்டியபடியே கூறினால் சம்யுக்தா. இருவரையும் முறைத்து விட்டு, “வாசு அவ தான் சின்னப் பொண்ணுனா நீயும் இவ கூட சேர்ந்து விளையாடிட்டு இருக்கியா? எல்லாம் நீ குடுக்குற செல்லம் தான். இதற்கு இன்னையோட ஒரு முடிவு கட்டுகிறேன்.” என்று கூறிவிட்டுச் சென்றார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டனர்.

சில நிமிடங்களில் திரும்பி வந்த யாமினி அவர்களிடம் ஒரு காகிதத்தைத் தந்தார். அதைப் பார்த்த இருவரும் கோவத்துடன் யாமினியைப் பார்த்தனர்.

“அம்மா இப்ப எதுக்கு சென்னையில் எனக்கு அட்மிஷன் போட்டுருக்கீங்க? என்னால் பாப்ஸ பிரிந்து இருக்க முடியாது. நான் போக மாட்டேன்.”

“ஆமா என் பாப்புகுட்டி எங்கயும் போக மாட்டா. இங்க இல்லாத கல்லூரியா மினிமா?”

“உங்கள் இரண்டு பேருக்கும் சொல்லிக்கிறேன் கேட்டுக்கோங்க. சமி சென்னை போறா அவ்ளோதான்.”

“மினிமா இப்ப எதுக்கு பாப்பு சென்னை போகவேண்டும்? அதுக்கு முதலில் பதில் சொல்லு.”

“வாசு 18 வயசாயிற்று இன்னும் இவ பொறுப்பில்லாமல் இருக்கா. இங்க இருந்தால் இவ இப்படியே தான் இருப்பா. இப்படி இருந்தால் எப்படி நாளைக்கு நம்ம தொழில இவ பாத்துக்குவா??”

“மினிமா அதுலாம் அந்த வயசு வரும் போது தானா பழகிடும். பாப்பு இங்கயே இருக்கட்டும். என்னால் பாப்புகுட்டிய பிரிந்து இருக்க முடியாது.”

“இங்க பார் வாசு எனக்கு மட்டும் என்ன ஆசையா சமிய பிரிந்து இருக்கனும்னு!! அவளுக்கு இன்னும் உலகம் புரியல வாசு. நம்மை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்தால் புரிஞ்சுக்குவா வாசு. அதுனால சமி கண்டிப்பா சென்னை போறா”

“அம்மா ஏன்மா இப்படி பண்ற? உன்ன காலையில் டென்ஷன் பண்ணது தப்பு தான் அதுக்காக இப்படி ஒரு தண்டனை எனக்கு வேண்டாம்.”

“என்னடா தண்டனை அது இதுன்னு பெரிய வார்த்தலாம் சொல்ற? அம்மா உன் நல்லதுக்குத் தான் பண்றேன் ஏன் அப்பாவும் பொண்ணும் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க?”

“சரி மினிமா நீ சொன்ன மாதிரியே பாப்பு சென்னை போகட்டும்.”

“பாப்ஸ் என்ன சொல்கிறீர்கள்?”

“இருடாமா நான் முழுசா சொல்லிடுறேன். பாப்பு சென்னை போகட்டும். ஆனால் ஒரு கண்டிஷன்.”

“என்ன கண்டிஷன் வாசு?”

“ஆறு மாசம், அதிகபட்சமா ஒரு வருஷம் மட்டும் தான் பாப்பு தனியா இருப்பா. அதுக்கப்புறம் நம்ம அங்க போய் அவ படிச்சு முடிக்கிற வரை நம்ம அங்க இருக்கலாம். இதுக்கு நீ ஒத்துக்கிட்டனா பாப்பு சென்னை போக எனக்குச் சம்மதம்.”

சில நிமிட யோசனைக்குப் பிறகு யாமினி ஒத்துக்கொண்டார். பிறகு அவர் கல்லூரிக்கு நேரமாவதை உணர்ந்து அங்கிருந்து சென்றார்.
சமி தன் தந்தையிடம் வந்து,”தேவ் ஏன் இப்படி பண்ணீங்க?”

“பாப்புகுட்டி அம்மா உன் நல்லதுக்கு தான சொல்றாங்க. ஆறே மாசம் தான் இந்த பாப்ஸ் உன்கிட்ட ஓடி வந்துடுவேன். மினிமாகிட்ட சும்மா ஒரு வருஷமென்று சொன்னேன். ஆனால் என்னால் அவ்வளவு நாள் உன்னைப் பிரிந்து இருக்க முடியாது. அதுவுமில்லாமல் லீவு நாளில், சனி ஞாயிற்றுக் கிழமையில் நீ இங்க வந்துரலாம் மினிமா ஒன்றும் சொல்லமாட்டா சரியா. இந்த பாப்ஸ்காகடா?”

“சரி என் பாப்ஸ்கா நான் சென்னை போறேன்.”

“என் சமத்துக்குட்டி.” சமியை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டார் வாசுதேவன்.

வாசு, சமி மற்றும் யாமினி டைனிங் டேபிளில் அமர்ந்து தங்கள் காலை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“மினிமா உன் அண்ணா ராம் எப்போ வரான்?”

“அண்ணாவும் அண்ணியும் நாளைக்கு வந்துருவாங்க. ப்ரீத்தி மட்டும் அங்கயே இருக்கா. அவ ஒரு வாரம் கழித்து வராளாம்.”

“அய்யா மாம்ஸும் லக்ஸும் நாளைக்கு வந்துருவாங்களா ஸூப்பர்.”

“ஆமாடா. உனக்கு இனி பொழுது போய்டும்.” வாசு சொல்ல யாமினி,”சமி எத்தன வாட்டி சொல்லிறிக்கேன் பேர் சொல்லி கூப்பிடாதனு!! ஏன் கேட்க மாட்டேங்கிற?”

“அய்யோ அம்மா இன்னைக்கு உனக்கு என்ன திட்டிக்கிட்டே இருக்கனும்னு முடிவு பன்னிட்டியா?? எதாவது சொல்லிட்டே இருக்காத மா. நிம்மதியா சாப்பிடக் கூட விடமாட்ட சய்.” சொல்லி விட்டு வேகமாக எழுந்து தன் அறைக்குச் சென்றாள்.

வாசு, யாமினியை முறைத்துப் பார்த்து,”என்ன மினிமா பார் அவ சாப்பிடாம போய்டா.”

“அய்யோ வாசு உன் பொண்ணுன்னு வந்துடா எதையும் யோசிக்கமாட்டாயா? அவ நமக்கு முன்னாடியே சாப்பிட்டா இப்ப மேடம் இரண்டாவது சுற்று சாப்பிட்டு போறாங்க. நீ வேற.”

“சரி இருந்துட்டு போட்டும் அதனால்?” வாசு பேசும் முன் குறுக்கிட்ட யாமினி,”ஒழுங்கா சாப்பிட்டு ஆபிஸ்கு போ. சும்மா சும்மா அவளுக்கு சப்போர்ட் பன்னிக்கிட்டு வராத.”

“ஏய் மினிமா உனக்குப் பொறாமை.”

“வாசு என்கிட்ட அடி வாங்காத.” பொய்யாக மிரட்ட, வாசு சிரித்துக்கொண்டே,”சரி கூல் கூல்.”

“அப்புறம் வாசு ஏன் அண்ணா உன்கிட்ட பேசலையா?”

“இல்லையே பேசினானே. ஏன் கேக்குற?”

“அப்புறம் எதுக்கு என்ட அண்ணா எப்ப வருவாருனு கேட்ட?”

“சும்மா மினிமா.” வாசு சொல்லிவிட்டு யாமினியைப் பார்த்துக் கண்ணடித்தார். அவரும் சிரித்துக்கொண்டே கை கழுவ எழுந்தார். பின் இருவரும் சமியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினர்.

அவர்கள் வேலை பார்க்கட்டும், நாம் அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

வாசுதேவன் தன் 5 வயதிலே தாயை இழந்தவர். அவரின் அப்பாவும் மனைவி இறந்த சோகத்திலே வாசுவைக் கவனிக்கவில்லை. அதே போல் ஏனோ தானோவென சம்பாதித்தார். வாசுக்கு ஓரே ஆறுதல் அவரின் நண்பன் ராம்குமாரும் அவரின் குடும்பமும் தான். வாசுவின் 18 ஆவது வயதில் அவரின் தந்தையும் இறந்து விட்டார். அவரால் அவரின் கல்லூரி படிப்பைப் படிக்க முடியவில்லை. அப்பொழுது ராமின் தந்தை தான் வாசுவுக்கு உதவி செய்தார். அவரின் உதவியுடன் தான் இளங்கலை பட்டம் பெற்றார். அதே சமயம் ராமின் தங்கை யாமினி வாசுவின் மேல் காதல் வயப்பட்டார். வாசுவிற்கும் யாமினியைப் பிடிக்கும். தன் பொருளாதார நிலையை நினைத்து அவர் அமைதியாய் இருந்தார். ஆனால் யாமினி தன் தந்தையிடம் இதைக் கூறிவிட்டார். உடனே வாசுவை அழைத்துக் கேட்டார்,” என்ன வாசு என் பெண்ணை விரும்புகிறாயா?” வாசுவினால் அவரிடம் பொய் கூற மனசு வரவில்லை அதனால் ஒத்துக்கொண்டார்.

“சரி, யாமினி படிப்பு முடிய இன்னும் மூன்று வருஷம் இருக்கு அதுக்குள்ள உன்னுடைய தகுதியை உயர்த்திட்டு வா யாமினி உனக்குத் தான்” என்றார். வாசு மலர்ச்சியுடன்,”கண்டிப்பாக நான் என்னோட தகுதியை உயர்த்திட்டு தான் இந்த ஊருக்கு வருவேன்.” என்று கூறிவிட்டுச் சென்றார். அதே போல அவர் தன் தகுதியை உயர்த்திக் கொண்டு யாமினியை கரம் பற்றினார். இப்பொழுது தமிழகத்தில் YV கட்டுமான நிறுவனம் முதன்மையாக உள்ளது. அதே போல் தன் மனைவிக்கு ஒரு மருத்துவமனையும் மருத்துவக் கல்லூரியும் கட்டிக் கொடுத்திருக்கிறார். கோயம்புத்தூரில் முதன்மையான மருத்துவக் கல்லூரி YV மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்