Loading

இப்போது புகழிடம் இருந்து விடை பெற்று வீட்டிற்கு வந்தவளை, கண்ட சாரு “ஏய் நிக்கி” என்று அழைக்க, அதையெல்லாம் சிறிதும் காதில் வாங்காதவள் அவனின் நினைவுகளுடனே தன் அறைக்குள் நுழைந்து காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு மருத்துவமனைக்கு செல்ல தாயாராகி வெளியே வந்தவளை கண்ட சாரு தீயாய் முறைக்க,

 

அதற்கு நிக்கி “இப்போ என்னத்துக்கு, இப்படி முறைக்குற”

 

“ஏன் டி, நீ வீட்டுக்குள்ள வரும் போதே உன் பேர ஏலம்விட்டு கத்திகிட்டு இருக்கேன் நீ என்னடான்னா, அதெல்லாம் காதுல வாங்காம செவிடாட்டம் போற..

சரி, அது கூட பரவாயில்ல ஆனா, நைட் வர முடியலன்னா ஒரு கால் கூட பண்ணி சொல்லணுங்குற அறிவு கூடவா இல்ல உனக்கு.. சரி, நீ தான் கால் பண்ணல நான் பண்ணப்போ கூட உனக்கு அட்டென்ட் பண்ணி பேச வலிக்குதுல”

 

“ஏய் கத்தாதடி.. நைட் ஹாஸ்பிட்டல்ல கொஞ்சம் பிசியா இருந்ததால கால் பண்ண முடியல…அதோட ஃபோன் சைலண்ட்ல போட்டுருந்தேன் அதுனால, நீ கால் பண்ணினது கேக்கல, போதுமா” என்று கூறி முடிக்கவும், 

 

அவளின் மனசாட்சி “ஓ நைட்லாம் மேடம் ஹாஸ்பிட்டல்ல இருந்தீங்க, அதுவும் பிஸியா” என்று நக்கல் செய்ய, அதை கண்டுகொள்ளாதவள் “சரிடி, நான் ஹாஸ்பிட்டல் கிளம்புறேன்”

 

“இப்போ தானடி வந்த அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்லுற..சரி சாப்பிட்டாச்சும் போடி”

 

“இல்லடி, இப்போ பசிக்கல ஹாஸ்பிட்டல் போனதும் கேன்டீன்ல சாப்பிட்டுக்குறேன், பாய் டி” என்று கூறி வண்டியை எடுத்து கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றாள்.

இப்போது அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வந்த சாரு, தனது வண்டி இல்லாததை கண்டு “அய்யோ வண்டிய அவ எடுத்துட்டு போயிட்டாளே.. சரி ஆட்டோல தான் போயாகனும் வேற வழி இல்ல” என்று நொந்தவாறே ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடந்து கொண்டிருக்க, 

அப்போது, அவள் அருகில் வண்டியை நிறுத்திய ஆடவன் “எக்ஸ்கியூஸ் மீ கொஞ்சம், இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா” என்று ஒரு அட்டை நீட்டியவாறு கேட்டான்.

 

அதை கையில் வாங்கி நோட்டமிட்டவள் அவனுக்கு செல்லும் வழியை விவரமாக கூறி முடித்த மறுநொடி, அவள் கழுத்தில் இருந்த செயினை அறுத்து தள்ளிவிட்டு வண்டியில் ஜெட்டாக பறந்துவிட்டான்.

 

அவன் தள்ளியதும் கீழே விழ போகும் பெண்ணவளை இரு கரங்கள் தாங்கியது, இதை உணர்ந்தவள் யாரென்று தன் விழிகள் உயர்த்தி பார்த்தவளின் கண்கள் தன்னவன் என்றதும் அதிர்ச்சியில் விரிந்தது.

 

இப்போது, அவளை தன் கரங்களியிருந்து விடுவித்து நிறுத்தியவனிடம் “தேங்க்ஸ்ங்க”

 

“ம்.. கொஞ்சம் நேரம் முன்னாடி வந்திருந்தா, உங்க செயினையும் சேப் பண்ணிருக்கலாம்ல”

 

“அய்ய இதுக்கு அவ்வளவு சீன்லாம் இல்ல, அது ஜஸ்ட் கவரிங் தான்”

 

“எது கவரிங்கா”

 

“ஆமாங்க, பொதுவா சேப்டிக்காக வெளிய கவரிங் தான் போடுவேன்” 

 

“அறிவு தான்” 

 

“ம்.. அதுசரி, நீங்க என்ன இந்த பக்கம்”

 

“இந்த வழியா வொர்க்கா வந்தேன் கொஞ்சம் டென்ஷனா இருந்துச்சு, அதான் வண்டி நிறுத்தி டீ சாப்பிடலாம்ன்னு இறங்குறேன் அதுக்குள்ள, இப்படி ஒரு சம்பவம்” என்று அவன் கூறியதும் சுற்றி முற்று பார்த்துவள் மெலிதாக சிரித்தபடி 

 

“என்ன தம்மா” என்று கேட்டதும், அவனை வியந்து பார்த்தவாறு “எப்படிங்க” என்று கேட்க,

 

அதற்கு சாரு “ஏங்க, இந்த ஏரியால தான் நம்ம வீடு இருக்கு, சோ இங்க எங்க என்ன கிடைக்கும்ன்னு ஆல் டீடைல்ஸ் ஐ நோவ்.. இருந்தாலும் பொய் சொல்லுறதையும் பொருந்த சொல்லணும் சொல்லுவாங்க.. இனி டிரை பண்ணுங்க”என்று நக்கலாக கூற,

 

அதை கேட்டவன் தான் அசிங்கபட்டதை நினைத்து “ஈஈ..” என்று சிரித்தவாறே அசடு வழிந்தான்.

 

“சரி, அப்படியே எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ண முடியுமா”

 

“என்ன சொல்லுங்க” 

 

“அதுவந்து வழக்கமா ஆபீஸ்க்கு பைக்ல தான் போவேன், இன்னைக்கு என் பிரென்ட் வண்டிய எடுத்துட்டு போயிட்டா ஏற்கனவே ரொம்ப டைம் ஆயிடுச்சு, இனி ஆட்டோ ஸ்டண்ட் போய் ஆட்டோ பிடிச்சி போகனும்ன்னா லேட் ஆயிடும் அதுனால, இப் யூ டோன்ட் மைண்ட் என்ன ஆபீஸ்ல ட்ராப் பண்ண முடியுமா பிளீஸ்…”என்று கெஞ்சியதும், அவனால் மறுக்க முடியாவில்லை என்றதால், 

 

“ம், அதுக்கென்ன தாராளமா பண்றேன், வாங்க” என்று வண்டியில் ஏறி அமர, தன்னவனுடன் செல்ல போகும் குஷியில் பெண்ணவளும் பின்னே அமர வண்டியை எடுத்தவன்,

 

போகும் வழியில் சாலையில் கவனத்தை செலுத்தியவாறே அவளையும் கண்ணாடியின் மூலம் ஓர கண்ணால் கண்டு கொண்டே தான் வந்தான். அதை பெண்ணவளும் கவனிக்க தவறவில்லை.

 

சிறிது நேரத்தில், அவளின் அலுவலக வாசலில் வண்டியை நிறுத்தியவன் அவள் இறங்கியதும் “நீங்க ரிப்போர்ட்டரா” என்று கேட்க,

 

அதற்கு சாரு “எஸ்” என்று மென்மையாக சிரித்தபடி கூற, அவனோ

 

“ஓ ஆனா, நான் கூட உங்க ஆபீஸ்க்கு அடிக்கடி வந்துருக்கேன் பட் உங்கள பாத்ததே இல்லையே”

 

“அப்படியா, அப்போ இனி பாக்கலாம்.. சரி சரி எனக்கு டைம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன்” என்று கூறி சென்றவளை “என்னங்க அவ்வளவு தானா” 

 

அதை கேட்டு பின்நோக்கி வந்தவள்  “சொல்ல மறந்துட்டேன் ட்ராப் பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்க”

 

“அது இல்லங்க”

 

“பின்ன, வேற என்ன”

 

“போன் நம்பர் தரலயே”

 

“எதுக்கு” 

 

“அது அது.. ஹான் நெக்ஸ்ட் டைம் நான் வரும் போது கால் பண்ண தான்”

 

“தரேன், ஆனா ஒரு சின்ன கேம் விளையாடலாமா”

 

“என்ன கேம்”

 

“என்னோட நம்பர, நான் கொடுக்குற க்ளூ வச்சி தான் கண்டுபிடிக்கணும் முழுசா நம்பரா சொல்ல மாட்டேன், டன்னா”

 

“கேமுக்கு, நான் ரெடி”

 

“ஓகே ஃபர்ஸ்ட் க்ளூ ஃபர்ஸ்ட் டே, செகண்ட் க்ளூ நீங்க அதிகமா யூஸ் பண்றது, தர்ட் க்ளூ ஃபர்ஸ்ட் க்ளூலயும் செகண்ட் க்ளூலயும் இருக்கும் அது.. அப்புறம், இந்த க்ளூஸ் எல்லாமே நம்ம மீட் பண்ண டே அண்ட், அந்த டேல நம்ம இவ்வளவு க்ளோஸ் ஆனதுக்கு எதெல்லாம் காரணமோ, அதெல்லாம் பேஸ் பண்ணி தான் இருக்கும், ரொம்ப கஷ்டமாலாம் இருக்காது, நீங்க கெஸ் பண்ற மாதிரி க்ளூ கொடுத்துருக்கேன்”

 

“இன்டர்ஸ்டிங்.. ஒரு நம்பர்க்கே இப்படி விளையாட்டு காமிக்குறீங்க, மத்தெல்லாம் எப்படி”

 

“இன்டர்ஸ்டிங்கா இருக்கு தான, அப்போ என்ஜாய் பண்ணி சீக்கிரம் கண்டு பிடிங்க.. எனக்கு டைம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன் பாய்” என்று முன்னே சென்று கொண்டிருந்தவளை

 

“ஏங்க, ஈவ்னிங் பிக் அப் பண்ண வரலாமா” 

 

“டாஸ்க் முடிக்கிற வர நோ மீட்” என்று கூறி திரும்பியவள், தன் கட்டை விரலை உயர்த்தி “ஆல் தி பெஸ்ட் மிஸ்டர் வேலன்” என்று கூறி சிரித்தவாறே அலுவலகம் உள்ளே நுழைந்து தன் வேலையை செய்தாள்.

 

அவள் சென்றதும், அவளை நினைத்து தன் தலை முடியை கோதி வெட்கபட்டவன் வண்டியை எடுத்து அங்கிருந்து சென்றான்.

**************************

 

இப்போது மருத்துவமனையில் நோயாளிகளை பார்த்து வந்து, தன் அறையில் அமர்ந்தவளின் எண்ணம் புகழை நோக்கி இருக்க, அதை களைக்கும் விதம், அவள் திறன் பேசி அலற யாரென்று அறிந்து ஏற்றவள் “ஹலோ சொல்லுங்க அக்கா”

 

“நான் உன்னோட ஹாஸ்பிட்டல் வெளிய தான் நிக்கிறேன், கொஞ்சம் வெளிய வாயேன்” என்று கூறி அழைப்பை துண்டித்த மறுகணம் வெளியே வந்தவள் “சொல்லுங்க அக்கா”

 

“ஒன்னும் இல்லாம, எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்க இறந்துட்டாங்க கண்டிப்பா அங்க போயாகணும் ஆனா, ஷிவானிக்கு இதெல்லாம் கொஞ்சம் பயம், அதான் அவள கூட்டிட்டு போக வேண்டாம்ன்னு உன்கிட்ட அவள பாத்துக்க முடியுமான்னு கேட்கலாம்ன்னு வந்தேன்”

 

“போயிட்டு வாங்க அக்கா, நான் பாத்துக்குறேன்” 

 

“ரொம்ப நன்றிமா அப்புறம், சாருகிட்ட சொல்லிடு, நான் கால் பண்ண கால் போகல அதான் உன்ன பாக்க வந்தேன் உடனே கிளம்பனும் வர ரெண்டு மூணு நாளாகும்”

 

“சரி அக்கா, நான் சாருக்கிட்ட சொல்லிக்கிறேன், நீங்க போங்க” என்று கூறி அவளை அனுப்பிவிட்டவள் ஷிவானியுடன் தன் அறைக்கு வந்து அமர்ந்த, சிறிது நேரம் இருவரும் பேசி கொண்டிருக்க,

 

மறுபடியும் திறன் பேசி அலற யாரென்று எடுத்து பார்த்தவளின் முகம் மலர்ந்தவாறு “ஹலோ புகழ்” என்று கூற,

 

அதில் ஏதோ உணர்ந்தவன் “என்ன பார்ட்னர், என் காலுக்காக தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிருக்க போல”

 

“அதெல்லாம் இல்ல”

 

“பொய், இவ்வளவு நேரம் நீ என்ன பத்தி திங்க் பண்ணிருப்பேன்னு என்னால ஃபீல் பண்ண முடியுது பார்ட்னர்”

 

“இப்போ, உனக்கு என்ன வேணும்”

 

“பசிக்குது பார்ட்னர் வீட்டுக்கு வந்து சமச்சி தரீயா” 

 

“டேய், இவ்வளவு நேரமா சாப்பிடாமலா இருக்க, அப்போ டேப்லெட்டும் போட்ருக்க மாட்ட, அப்படி தான”

 

“ஆமா பார்ட்னர், பசிக்குது ஒன் ஹேன்ட் வச்சு சமைக்க முடியல அதான், அப்போ அப்போ ஒரு காபி போட்டு குடிச்சேன் பட் அப்படியும் பசி கன்ட்ரோல் ஆகல, பின்ன எப்படி டேப்லெட் போடுறது”

 

“அறிவில்ல சமைக்க முடியலன்னா என்ன, ஆர்டர் பண்ணி சாப்பிட வேண்டி தான” 

 

“இல்ல பார்ட்னர், எனக்கு இந்த மாதிரி வெளி சாப்பாடு ஒத்துக்காது, பிளீஸ் வந்து சமைச்சு கொடுத்துட்டு போயேன்”

 

“என்னாலலாம் வரமுடியாது, எனக்கு டூட்டி இருக்கு சோ ஒருநாள் ஆர்டர் பண்ணி சாப்பிட்டா உயிரு போயிறாது ஒழுங்கா ஆர்டர் பண்ணி சாப்பிட்டு டேப்லெட் போட்டுட்டு ரெஸ்ட் எடு, அதவிட்டுட்டு நொய் நொய்யின்னு எனக்கு கால் பண்ணி டார்ச்சர் பண்ணாத” என்று பொறிந்து தள்ளிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

 

தொடரும்..

                                  – ஆனந்த மீரா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
16
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்