இப்படியே ரெண்டு நாட்கள் கழிய வழக்கம் போல் வேலை முடித்து வீட்டிற்கு வந்து சோஃபாவில் அமர்ந்தவளை கண்ட சாரு “என்ன டாக்டர் அம்மா, இன்னைக்கு இவ்வளவு லேட்டு வேல ரொம்ப அதிகமோ” என்று கேட்டவாறு, அவளுக்கு குடிக்க தேனீர் கொடுக்க,
அதை கையில் வாங்கியவள் “ம் ஆமா டி, சீனியர் டாக்டர் சென்னை வர போயிருக்காரு, அதான் கொஞ்சம் வொர்க் அதிகம்” என்று கூறிவிட்டு, அவள் கொடுத்த தேநீரை குடித்து கொண்டிருக்க,
சாருவோ “இவகிட்ட, இது வரைக்கும் எதையுமே மறைச்சதில்ல ஆனா, ஏன் இதபத்தி பேச மட்டும் தயக்கமா இருக்கு எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்” என்று யோசித்து கொண்டிருக்க,
அதை உணர்ந்தவள் “என்ன மேடம், ஏதோ என்கிட்ட சொல்ல தயங்குறீங்க போல அப்படி என்ன சதி பண்ணி வச்சிருக்க” என்று தேநீரை குடித்தவாறே கேட்க,
அதற்கு சாருவோ “ஏய் நிக்கி, நீ காதல பத்தி என்ன நினைக்கிற” என்று இழுத்தவாறே கேட்க,
அதை கேட்டவளுக்கு தான் அதிர்ச்சி தாங்காமல் புறை ஏற, அவள் தலையை தட்டிவிட்ட சாரு “ஏய் என்னாச்சி பாத்து குடிக்க மாட்டியா”
“பின்ன இவ்வளவு நாள், லவ் பண்ணவே மாட்டேன்னு சொன்னவ தீடிர்ன்னு லவ்வ பத்தி என்ன நினைக்கிறேன்னு கேட்டா பக்குன்னு இருக்குல்ல” என்று கூற அவளோ முகத்தை வெட்டியவாறு திரும்ப
“இப்போ எதுக்கு கோவபடுற, சரி சொல்லு எப்போல இருந்து, இந்த நோய் வந்துச்சு”
அதை கேட்ட சாரு ரயில் பயணத்தில் நடந்த அனைத்தையும் கூறி வெக்கபட்டு சிரித்தாள்.
அதற்கு நிக்கி “முத இந்த கருமத்த நிப்பாட்டிட்டு, முத அவன் பெங்களூர்ல எங்க இருக்கான் எங்க வொர்க் பண்றான் எதாவது தெரியுமா”
“ஏய் அதெல்லாம் ஒன்னும் தெரியாது ஹான் அவரு பேரு..” என்று ஆரம்பிக்க அதற்குள் நிக்கியின் திறன்பேசி அலற “ஒரு நிமிஷம் டி” என்று கூறி கொஞ்சம் தள்ளி சென்றவள் திறன்பேசியை காதில் வைத்து “ஹலோ சீனியர் சொல்லுங்க”
“நிக்கி, எனக்கு உங்களால ஹெல்ப் வேணும்”
“ம் சொல்லுங்க சீனியர்”
“புகழுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல நீங்க வீடு வர போய் அவனுக்கு இஞ்செக்சன் மட்டும் போடுறீங்களா, பிளீஸ்”
அதை கேட்டவளிடம், எந்த பதிலும் வராமல் போக மறுபடியும், அவனே தொடர்ந்தான்.
“நீங்க தயங்குறது எனக்கு புரியுது ஆனா, உங்களுக்கே தெரியும் நான் இப்போ சென்னைல இருக்கேன் என்னால உடனே வரவும் முடியாது நாளைக்கு மறுநாள் தான் வருவேன், அது மட்டும் இல்லாம அவன் ப்ரெண்டும் இப்போ அவன் கூட இல்ல, இல்லன்னா அவன விட்டு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக சொல்லிருப்பேன் பிளீஸ் நிக்கி கொஞ்சம் சிச்சுவேஷன புரிஞ்சிக்கோங்க.. ஜஸ்ட் இஞ்செக்சன் மட்டும் போட்டுட்டு வந்தா போதும்”
“ஓகே சீனியர், உங்க அட்ரஸ் செனட் பண்ணுங்க, நான் உடனே போறேன்”
“இதோ உடனே செனட் பண்றேன்…தங் யூ சோ மச் நிக்கி” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு, அவளின் பகிரிக்கு தன் விலாசத்தை அனுப்பி வைத்தான்.
அதை கண்டவள் “ஏய் சாரு, இப்போ நான் ஹாஸ்பிட்டல் வர போகனும்”
“இப்போ தானடி வீட்டுக்கே வந்த, இப்போ மறுபடியும் போகனும்ன்னு சொல்லுற”
“அதான் சொன்னேன்லடி சீனியர் சென்னை போயிருக்காரு, அவர் வருற வர, நான் தான் எல்லாம் பாத்துக்கணும் அப்புறம் எவ்வளவு நேரம் ஆகும்ன்னு தெரியாது சோ எனக்காக வெயிட் பண்ணமா நீ சாப்பிட்டு தூங்கு பை” என்று கூறி, அவளின் வண்டியில் அவனின் வீட்டை நோக்கி சென்றாள்.
இப்போது, அவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கதவின் அருகில் தயங்கி நின்றவள் உள்ளே போக மனமில்லாமல், கதவை தட்ட அவள் தட்டியதில் கதவு தானாக திறக்க பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவள் வேறு வழியின்றி உள்ளே சென்று, அவன் எங்கிருக்கிறான் என்று ஒவ்வொரு இடமாக தேடி, இறுதியில் அவன் அறையை கண்டுபிடித்து உள்ளே சென்றாள்.
அவனோ காய்ச்சல் தாங்காம முடியாமல் முனைங்கியபடி படுத்திருக்க, அதை உணர்ந்தவள் வெப்பமானியை அவன் வாயில் வைத்து அவனின் காய்ச்சல் அளவை கண்டறிந்தவள், அவனுக்கு போட வேண்டிய ஊசியை போட்டுவிட்டு “இவன் சாப்பிட்டு இருப்பானா என்னன்னு தெரியலயே டேப்லெட் வேற கொடுக்கணுமே” என்று யோசித்தவள் நேராக சமையல் அறைக்குள் சென்று அவனுக்கு குடிப்பதற்க்காக கஞ்சி செய்து ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்து வந்தவள் படுக்கையில் அமர்ந்து படுத்திருந்தவனை மெல்லமாக இழுத்து தன் ஒரு கையில் தாங்கியவள், மறு கையால் கஞ்சியை குடிக்க வைத்தாள்.
கஞ்சி கொடுத்து, அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரையும் கொடுத்தவள்.
அவனை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு தான் வந்த வேலை முடிந்துவிட்டது என்று கிளம்ப, மறுபடியும் அவன் முனங்கல் சத்தமே அவளை செல்ல விடாமல் தடுக்க, மறுபடியும் அவன் நெற்றியில் கைவைத்துவிட்டு
“இன்ஜெக்சனுக்கும் டேப்லெட்க்கும் இந்நேரம் கொஞ்சம் ஃபீவர் குறைஞ்சி இருக்கணுமே” என்று யோசித்தவாறே பார்த்தவள், அவன் கையில் இருந்த ஆழமான காயத்தை கண்டு,
“அய்யோ கையில இவ்வளவு ஆலமா அடிபட்டுருக்கே, இதுனால தான் காய்ச்சல் குறையல” என்று நினைத்தவாறு, அவன் காயத்திற்கு மருந்திட்டு கட்டு போட்டவள் இக்காயத்திற்கு ஒரு ஊசியும் போட்டுவிட்ட, இதையெல்லாம் தன்னவள் தான் செய்கிறாள் என்பதை உணர்ந்தவனுக்கு வலி சற்று குறைய அவனும் நிம்மதியாக உறங்கினான்.
அவனை, இந்நிலையில் தனியாக விட்டு செல்ல மனமில்லாமல் அப்படியே கீழே அமர்ந்தவாறு படுக்கையில் தலை சாய்த்தவள், அப்படியே உறங்கியும் விட்டாள்.
உறங்கினாலும் இடையில் மூன்று நான்கு முறை எழுந்து அவன் நெற்றியில் கைவைத்து காய்ச்சல் எப்படி இருக்கிறது என்றும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.
இப்போது பொழுது விடிய முதலில் எழுந்த புகழ் தன்னவளை பார்த்து சிரித்தவாறே, சமையல் அறைக்குள் நுழைந்து இருவருக்கும் தேனீர் போட்டு எடுத்து வந்தவன் படுக்கையில் தலை சாய்த்து படுத்திருந்தவளின் அருகில் அமர்ந்து தன் கைக்கொண்டு அவள் தோலினை உலுக்கி எழுப்பிவிட்டான்.
அவன் எழுப்பியதில் முகம் மலர “குட் மார்னிங் சாரு” என்று கூறியவாரு எழுந்து அமர,
அதை கேட்ட, அவனோ “குட் மார்னிங் பார்ட்னர்” என்று கூறி, ஒரு கோப்பையை அவளிடம் நீட்டினான்.
இப்போது கண்களை நன்கு கசக்கி விட்டு அவனை கண்டவள் “டேய் நீ எப்படிடா இங்க” என்று கத்த,
“பார்ட்னர் நல்லா சுத்தி பாரு அப்போ தான், நான் உன்ன தேடி வந்திருக்கேனா இல்ல, நீ என்ன தேடி வந்தியான்னு தெரியும்”
அவன் கூறியதை கேட்ட பின் தான் பாரி கூறியதிலிருந்து இரவு இவனுடன் இருந்தது வரை அனைத்தும் ஞாபகம் வர “அது ஃபீவர் ஹையா இருந்துச்சா டேப்லெட் கொடுத்துட்டு கொஞ்சம் நேரத்துல கிலம்பிடலாம்ன்னு நினைச்சேன் ஆனா..” என்று கூறி முடிப்பதற்குள்,
“புரியுது பார்ட்னர் உனக்கு, இந்த நிலமைல என்ன விட்டுட்டு போக மனசில்லாம தான் இங்கேயே ஸ்டே பண்ணிட்ட அதான” என்று கூறி நக்கலாக சிரிக்க,
“இப்போ எதுக்கு சிரிக்குற, நீ நினைக்கிற மாதிரிலாம் ஒன்னும் இல்ல ஜஸ்ட் டாக்டரா தான் செஞ்சேன்”
“நீ எப்படி செஞ்சா என்ன, எனக்காக செஞ்சேல அது போதும், முத காபி குடி” என்று கூறி கோப்பையை கொடுக்க,
அதை வாங்கி குடித்தவாரே, அவன் அறையை நோட்டமிட்டவள் தன் புகைபடம் கண்டு கண்களை விரித்தவாறு “டேய் இத எந்த கேப்புல டா எடுத்த”
“ஓங்கி விட்டேன்னு வையேன் அப்படியே கன்னம் வீங்கிடும் நல்லா பாருடி, அது போட்டோ மாதிரியா இருக்கு”
“பின்ன இல்லையா”
“நிஜமாலே, அது ஃபோட்டோ மாதிரி தான் இருக்கா, வேற எதுவும் தெரியலயா”
“தெரியலையே”
“ஏய், நான் பண்ண பெயின்டிங் டி”
அதை கேட்டு அதிர்ந்தவள் “எது பெயின்டிங்கா.. எப்படி டா ரீயலா ஃபோட்டோ எடுத்த மாதிரியே பெயிண்ட் பண்ணிருக்க”
“நிஜமாலே நல்லா இருக்கா.. உனக்கு பிடிச்சிருக்கா”
“எல்லாம் ஓகே தான் ஆனா, ஃபர்ஸ்ட் டைம் பாக்கும் போது ஃபோட்டோ எடுக்கலன்னு சொல்லுற, அப்புறம் எப்படி இது பாசிபில்”
அதை கேட்டு புன்னகைத்தவன் “அன்னைக்கு தான் முத முத உன்ன பாத்தேன், உன்ன பாத்த அந்த செகண்ட் உன் முகம் என் மனசுல ஆழமா பதிஞ்சுட்டு, டெய்லி அந்த முகம் பாக்கணும் ஆசைல தான் நானே, என் கையால பெயிண்ட் பண்ணி ஃப்ரம் போட்டு டெய்லி மார்னிங் உன்னோட ஃபேஸ் பாக்கணும்ன்னு ஆப்போஸிட்டல மாட்டுனேன்” என்று கூறி முடிக்க,
அன்று முதல் சந்திப்பில், அவள் கன்னத்தில் தடவிய சந்தன மட்டுமின்றி அவள் அணிந்த உடையில் இருந்து அனைத்தையும் சரியாக வரைந்திருந்தான்.
அதை கண்டவள் “என்மேல அவ்வளவு லவ்வா, அவனுக்கு” என்று தனக்கு தானே கேட்டவாறு அவனையே ஆழ்ந்து பார்த்தாள்.
அதை கண்டவன் “என்னாச்சி பார்ட்னர் ஏன், இப்படி பாக்குற”
“ஒன்னும் இல்ல உன் கை பரவாயில்லயா, எப்படி அடி பட்டுச்சு” என்று பேச்சை மாற்ற
அதை உணர்ந்தவன் “அது ஒரு அக்யூஸ்ட்ட பிடிக்கும் போது ஸ்லீப்பானதுல வந்த காயம், இப்போ பரவாயில்ல இத நினைச்சி நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத பார்ட்னர்”
அவளுக்கு, அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை என்றதால் “சரி, நான் கிளம்புறேன் நேரம் ஆயிடுச்சு ஹாஸ்பிட்டல் வேற போகனும், இப்போ
கிளம்புனா தான் சரியா இருக்கும், நீ நல்லா ரெஸ்ட் எடு, ஈவ்னிங் வந்து பாக்குறேன்” என்று கூறியவள் ஒருமுறை, அவன் வரைந்த தன்னை பார்த்தவிட்டு அவனையும் பார்த்து தலை அசைத்து விடை பெற்று வெளியே வந்தவள் வண்டியில் ஏறி சென்றாள்.
தொடரும்…
-ஆனந்த மீரா
சூப்பர் 👌👌
Nandri akka ❤️❤️
வேலன் தான் புகழோட friend ஆ🤔