காலையில் வழக்கம் போல் வேலைக்கு வந்த பாரி, அங்கு சுற்றி தங்கியிருக்கும் நோயாளிகளை ஒருமுறை பரிசோதித்துவிட்டு, தனது அறைக்கு வந்தவன் அவர்களுக்கு மாற்றி கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரையை அவர்களுக்கு என்று வைக்க பட்டிருக்கும் கோப்பினியில் எழுதி கொண்டிருக்க, அதே நேரம் வேகமாக கதவை திறந்து அவன் முன் கோவமாக வந்து நிற்ப்பவளை கண்டவன் “ஏய் என்னாச்சி டி, இப்போ எதுக்கு இவ்வளவு கோவமா வர”
“ஓ சாருக்கு, நான் ஏன் கோவம் இருக்கேன்னு தெரியலயா இல்ல தெரியாத மாதிரி நடிக்குறீங்களா”
“நிஜமாவே எனக்கு தெரியல, சொல்லணும்ன்னு இஷ்டம் இருந்தா சொல்லு, அதவிட்டுட்டு தேவை இல்லாம கத்தி என்ன டென்ஷன் பண்ணாத” என்று கூற, அவளோ அவனை தீயாய் முறைத்தாள்.
“இங்க பாரு, இன்னும் கொஞ்ச நேரத்தில நிக்கி வந்துருவா, அப்போவும் நீ இப்படி கத்திட்டு இருந்தா என்ன நினைப்பா அதுனால, அவ வருறதுக்குள்ள என்ன சொல்லணுமோ சொல்லிட்டு கிளம்பு, எனக்கு நிறைய வேல இருக்கு”
“அவ யாரு டா என்ன நினைக்குறதுக்கு.. நானும் பாத்துட்டே தான் இருக்கேன்,நீ அவள சைட் அடிக்குற அவ கீழ விழும் போது தாங்கி பிடிக்குற, அப்புறம் அவகிட்ட இளிச்சு கிட்டு பேசுற, இப்போ என்னடான்னா நேத்து வந்தவளுக்காக என்ன வெளிய போக சொல்லுற, அந்த அளவுக்கு அவ உனக்கு முக்கியமா போயிட்டாளா”
“நான் யாருகூட பேசுனா உனக்கு என்ன, அதான் நானே உன்கிட்ட ஸ்ட்ரெய்ட்டா வந்து உன்ன எனக்கு பிடிச்சுருக்கு என்ன கல்யாணம் பண்ணிக்குறீயான்னு கேட்டப்போ ஏதோ நான் கேட்க கூடாத தப்பான வார்த்தைய கேட்ட மாதிரி சிடு சிடுன்னு போனவ தான நீ, இப்போ வந்து உன் இஷ்டத்துக்கு கத்துற”
“பின்ன என்னோட பிறந்தநாள மறந்தவன் தான நீ, அப்படி இருக்கும் போது நீ லவ்வ சொன்னதும் உன்ன கட்டி பிடிச்சு லவ் யூ டூ சொல்ல சொல்றியா அதான், அதுக்கு பணிஷ்மெண்ட்டா கொஞ்சம் நாள் அலைய விட்டேன் ஆனா, நீ என்னடானா என்ன கழட்டிவிட பாக்குற”
“ஏய் ஏதோ நான் வேணும்ன்னே உன் பிர்த்டே மறந்த மாதிரி பேசுற அன்னைக்கு, எனக்கு இருந்த வொர்க் டென்ஷன் பத்தி தான் உனக்கே தெரியுமே, அப்புறம் என்ன”
“தெரியும் தான் இருந்தாலும், மறந்தது தப்புல அதான் இனி அப்படி பண்ண கூடாதுன்னு உன்ன அலைய விட்டேன்”
“நீ என்னடி என்ன அலைய விடுறது இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, இனி நீயே என்ன லவ் பண்ணினாலும் நான் லவ் பண்ண மாட்டேன், எனக்கு உன்ன பிடிக்கல போதுமா”
“இதோ பார்டா துறைக்கு என்ன பிடிக்கலையாமே” என்று கூறி அவனை நெருங்க, அவனோ “ஏய் தள்ளி போடி, இப்போ எதுக்கு கிட்ட வர” என்று கூறி பின்னே சென்று கொண்டிருந்தவனை, இழுத்து தன் இதழோடு இதழ் சேர்க்க பாவம் ஆடவன் தான் அவள் தீடிர் செயலில் உறைந்து நின்றான்.
அதே நேரம் கதவை திறந்து வந்த ஒருவன் அவர்கள் இருக்கும் நிலையை கண்டு விழி விரித்தவாரு “என்னங்கடா நடக்குது இங்க” என்று கேட்க, சுயநினைவிற்க்கு வந்தவளோ அவனிடமிருந்து விலகி எதுவும் நடக்காதது போல் நிற்க்க பாரியோ இன்னும், அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வராமல் சிலையாக நின்று கொண்டிருந்தான்.
அதை கண்டவன், அவனின் முதுகில் அடி போட்டவாரு “டேய் டேய் போதும் டா நடிக்காத” என்று கூற, நினைவிற்கு வந்தவன் அவளை முறைக்க,
இப்போது பெண்ணவளோ “டேய் எரும கதவ தட்டிட்டு வரணும்ங்குற சென்ஸ் கொஞ்சம் கூடவா இல்ல, இப்படி தான் திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையுற மாதிரி வருவீயா”
“அடியே கூருகெட்ட மாடு இவ்வளவு பேசுரீயே, இப்படி தான் ஹாஸ்பிட்டல வேலைக்கு வந்த இடத்தில தேன் உறிஞ்சிவியா, உனக்கு சென்ஸ் இல்ல”
“அது அது.. அது ஸ்லீப்பானதுல தெரியாம நடந்துடுச்சு” என்று கூற, அவளை கேவலமான பார்வை பார்த்தவன் “டேய் பாரி, உன் ஆளு ரொம்ப போஸ்ஸசிவ் ஆயிட்டா போல அதான் இப்படி இறங்கி செய்றா, நீ நல்லா என்ஜாய் பண்ணு மேன், என்ஜாய் பண்ணு”
“எல்லாம் தங்களால் குருஜி, இப்பெருமை உங்களையே சாரும்”
“எதே, அப்போ இதெல்லாம் இந்த கேனயன் கொடுத்த ஐடியா தானா”
அதற்கு பாரி “இல்ல ரெண்டு நாளா, இந்த ஹாஸ்பிட்டல இருந்ததே இந்த கேனயன் தான்”
“எது, இவனா இருந்தான்”
“எஸ் அப் கோர்ஸ்” என்று கூற, அவள் தான் புரியாமல் விழித்தாள்.
இப்போது அவன், அவளிடம் நடந்ததை கூற, அதை கேட்டவள் பாரியை நோக்க அவனோ அவளை பார்த்து கண்ணடிக்க அதே நேரம் மறுபடியும் கதவு திறக்கும் சத்தம் கேட்க அனைவரும் ஒரு சேர திரும்பி யாரென்று பார்க்க நிக்கி தான் அவர்களை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
பெண்ணவளின் திறன் பேசி ஒலிக்க அதில் நிகழ் உலகத்திற்கு வந்தவள் திறன் பேசியை காதியில் வைக்க மறுமுனையில் இருந்து “ஏய் நிக்கி, நான் வீட்டுக்கு வந்துட்டேன் டி”
அதற்கு நிக்கி “சரி டி நம்ம ஈவ்னிங் மீட் பண்ணலாம்” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தவளை கண்டவன் “ஹலோ பார்ட்னர், என்ன அங்கேயே நிக்குற எல்லாம் நம்மாளுங்க தான் உள்ள வா” என்று கூறி முடிக்க,
பாரியும் “உள்ள வாங்க நிக்கித்தா” என்று கூற,
அவளும் அவர்களை பார்த்தவாவாறே உள்ளே வந்தாள்.
இப்போது பாரி “மிஸ் நிக்கித்தா இது மை பிரதெர் புகழ் வேந்தன், இது ரஞ்சித்தா நம்ம ஹாஸ்பிட்டல தான் வொர்க் பண்றா சைக்காலாஜி டாக்டர்” என்று கூற நொடியும் தாமதிக்காமல் தன் கைகளை நீட்டி “ஹலோ ஐ அம் டாக்டர் ரஞ்சித்தா”
பதிலுக்கு தன் கை நீட்டி, அவள் கை குலுக்கியவாரு “ஐ அம் நிக்கித்தா” என்று கூற,
அதை கேட்ட புகழ் “டேய் பாரி பாத்தியா டா நம்மள மாதிரி இவங்க பேருலையும் எவ்வளவு ஒத்துமல நிக்கித்தா ரஞ்சித்தா”
“பின்ன சிஸ்டர்ஸ்குள்ள பொருத்தம் இல்லன்னா, எப்படி டா”
அதை கேட்ட நிக்கித்தா புரியாத பார்வை பார்க்க,
அதை கண்ட புகழ் “பார்ட்னர் ரொம்ப குழப்பிக்காத, நானே எக்ஸ்பிளைன் பண்றேன், அதாவது என்னோட பிரதர கல்யாணம் பண்ணிக்க போற இவ எனக்கு அண்ணி முற வந்தா, உனக்கு அக்கா முற தான வரும் அததான் அண்ணா சொல்றாப்படி”
அவன் கூற்றியில் கடுப்பானவள் பாரியிடம் “சீனியர் நான் ஒரு தடவ ரவுண்ட்ஸ் போயிட்டு வாரேன்” என்று கூறி அங்கிருந்து சென்றாள்.
அவள் சென்றதும் ரஞ்சி “நீ இப்படிலாம் கூட பேசுவீயா டா”
“என்ன பண்றது காதல் வந்தா, தானா எல்லாம் வந்துருது, சரி நான் போய் அவள பாக்குறேன்” என்று கூறி, அவள் பின்னே சென்றான்.
இப்போது ரஞ்சி “டேய் பிராடு ஏன்டா இப்படிலாம் பண்ண”
“பின்ன நானும் எத்தன நாள் தான் நீயா சொல்லுவேன்னு வெயிட் பண்றது அதான், அன்னைக்கு புகழ் இந்த ஐடியா சொல்லும் போது, இது உனக்கும் வொர்க்அவுட் ஆகும்ன்னு சொன்னான் நான் யோசிச்சு பார்த்தேன் எனக்கும் சரியா வரும்ன்னு தோணுச்சு ஆனா, இந்த அளவுக்கு வரும்ன்னு எனக்கு தெரியாது” என்று அவன் இதழை வருடியவாறு கூற, அதில் சற்று நேரம் முன் தான் செய்த நிகழ்வு நினைவு வர வெக்கபட்டவாறு “போடா பிராடு” என்று கூறி வெளியே சென்றாள்.
போகும், அவளை பார்த்து சிரித்தவன் தன் வேலையை செய்ய தொடங்கினான்.
இப்போது நிக்கி பின்னே சென்ற புகழ், அவள் கைபிடித்து இழுத்து கொண்டு ஓரமாக வந்து நிற்க்க, தன் மேல் இருக்கும் அவன் கையை உதறி விட்டவள் “டூட்டி டைம்ல, என்ன டிஸ்டர்ப் பண்ணாத”
“அப்போ மத்த டைம்ல டிஸ்டர்ப் பண்ணவா பார்ட்னர்”
“டேய் வேண்டாம் டா போயிடு, ஏற்கனவே உன் மேல செம காண்டுல இருக்கேன் அப்புறம் எதாவது அசிங்கமா பேசிட போறேன்”
“என்ன பார்ட்னர் நேத்து நைட் என்ன மிஸ் பண்ணி கால்லாம் பண்ண,இப்போ என்னடான்னா என்ன விரட்டுறதுலயே குறியா இருக்க, உன்ன என்னால புரிஞ்சிக்கவே முடியல பார்ட்னர்”
“அது.. அதுவந்து ஹான் எனக்கு ஒரு டவுட் அதான் நீ தான் டாக்டர்ன்னு நினைச்சி கேக்க கால் பண்ணேன் எனக்கு என்ன தெரியும், நீங்க ரெண்டு பேரும் ட்வின்ஸ்ன்னு ஆனா, நீ வேற அவர் வேறன்னு தெரியாம அவர பயங்கரமா திட்டிட்டேன்”
“இல்லையே கரெக்ட்டான ஆள தான் திட்டிருக்க”
“அப்போ அது..”
“ஆமா பார்ட்னர், ஒன்டே உன்ன பாக்காம உன்ன ரொம்ப மிஸ் பண்ணேனா அதான் உன்கூடவே இருக்கணும் தோணுச்சு எப்படியும், உனக்கு தெரிஞ்சா நீ விடமாட்ட அதான் ஆள் மாறாட்டம் பண்ணிக்கிட்டோம், பாரி தான் உனக்கு எப்படி டிரெயின் பண்ணனும் சொல்லி தந்தான் ஆனா, சும்மா சொல்ல கூடாது நான் உன்ன தெரியாத மாதிரி இருந்ததும் உனக்கு பயங்கரம் கோவம் வந்துச்சுல அத பாக்கும் போது அப்படி ஒரு ஃபீல் அதோட, இந்த ரெண்டு நாளா என் நினைப்பாவே தான் இருந்துருப்பல ஐ நோவ்”
“டேய், இது தான் லாஸ்ட் இதுக்குமேல என் பின்னாடி வந்த, அப்புறம் போலீஸ் கிட்டதான் போவேன், பீ கேர்புள்”
“தேவை இல்ல பார்ட்னர், நீ பேசிக்கிட்டு இருக்கிறதே ஒரு ஐபிஎஸ் ஆபீஸர் கிட்டதான்”
அதைகேட்டு அதிர்ந்தவள் “டேய் என்னடா சொல்லுற, ஒரு போலீஸ் ஆஃபீஸ்ரா இருந்துகிட்டே இந்த பிராடு தனலாம் பண்ற”
“பார்ட்னர் இதெல்லாம் காதல் பண்ற மகிம, காதலுக்கு போலீஸ் டாக்டர்ன்னு தெரியாது”
“அது என்ன கருமமாவும் இருந்துட்டு போகட்டும், என்ன ஆள விடு” என்று கூறி செல்லும், அவளையே ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தவன் தன் பணியை பார்க்க சென்றான்.
தொடரும்…
– ஆனந்த மீரா
🤣🤣🤣 ஒரே udla எத்தனை twist பாவம் நிக்கி
போக போக தெரியும் அவ பாவம் அவன் பாவம்ன்னு 😁😁thanks
Dei police ya irunthutu fraud Vela pakuriya da nee.. nane Manda kolambu poiten da.. 😂
அவன் அப்படி thaan da 😂😂thanks darlu ❤️❤️