Loading

ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு உள்ளே வந்தவள் வரவேற்பு அறையில் இருந்த பெண்ணிடம் “ஹலோ எக்ஸ்கியூஸ் மீ, டாக்டர் பாரிவேந்தன் சார பாக்கணும்” என்று கூறி தன் கோப்பினிலிருந்த நியமன கடிதத்தை கொடுக்க, அதை வாங்கி ஆராய்ந்தவளோ “ஓகே மேம் கொஞ்சம் அப்படி உக்காருங்க, நான் சார் கிட்ட பேசிட்டு சொல்றேன்” நிக்கியோ அங்கு போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.

 

சிறிது நேரம் கழித்து அந்த பெண் “மிஸ் நிக்கித்தா நேரா போய் லெஃப்ட் எடுத்தா டாக்டர் ரூம், போய் பாருங்க”

 

“ஓகே தேங் யூ” என்று கூறிவிட்டு வேகமாக, அவள் சொன்ன வழியே வந்தவள், பாரி வேந்தன் என்று பெயர் பலகை பொறிக்கபட்டிருந்ததை கண்டுபிடித்து, அந்த அறை கதவை திறந்தவாறு”மே ஐ கம் இன் சார்”என்று கேட்க,

 

அதை கேட்டவனோ தான் அமர்ந்திருந்த உருளும் நாற்காலியில் சுற்றி திரும்பியவாறு “எஸ் கம் இன்” என்று கூற,

 

அவனை கண்டவளோ விழிகள் பிதுங்கி சிலையாக நின்றாள்.

 

இன்னும், அவள் உள்ளே வராமல் வெளியே நிற்பதை கண்டவன் “ஹலோ மிஸ் நிக்கித்தா, இன்னும் ஏன் அங்கையே நிக்குறீங்க உள்ள வாங்க”

 

அதை கேட்டு நினைவு உலகத்திற்கு வந்தவள் அவனை பார்த்தவாரே எதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள்.

 

அவனோ “ஃபைல் பிளீஸ்” என்று தன் கையை நீட்ட,

 

அவளோ, அதையெல்லாம் காதியில் வாங்காமல் அவன் தானா என்று நம்பாதை பார்வை பார்த்து

கொண்டிருந்தாள்.

 

இப்போது, அவனோ அவளின் முகத்திற்கு நேராக சொடுக்கிட்டு “ஹலோ உங்ககிட்ட தான் ஃபைல் கேட்டேன்”

 

அதை கேட்டவள் பதற்றத்துடனே கோப்புவை கொடுத்துவிட்டு “வாட்டர் பிளீஸ்”

 

“எஸ் டேக் இட்” என்று அவளிடம் தண்ணீர் குடுவையை நீட்டினான்.

 

அதை கையில் வாங்கியவள் மடக் மடக்கென்று என்று மொத்த தண்ணீரையும் குடித்துவிட்டு “சாரி தீர்ந்துருச்சு” என்று தண்ணீர் குடுவையை காட்டியவாறே உதடு பிதுக்கி கூறியவளை

 

கண்டு, அவன் இதழ் சற்று விரிய அதை கட்டுபடுத்தி கொண்டவன் “இட்ஸ் ஓகே நோ பிராப்ளம்” என்று கூறி, அவள் கொடுத்த கோப்பினை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 

அவனையே வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த நிக்கியோ “இவன் டாக்டர்ன்னு தெரியாம கொஞ்சம் ஓவரா வேற பேசிட்டேன்.. பயபுள்ள இப்போ சைலண்ட் இருக்குறத பாத்தா பின்னால ஆப்பு கன்பார்ம் போலயே.. என்ன பண்ண காத்திருக்கானோ.. கடவுளே உன் பிள்ளைக்கு ஏதாச்சும் பாத்து பண்ணு பா” என்று தனக்கு தானே புலம்பியவாறு அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

 

இப்போது கோப்பினை ஆராய்ந்து முடித்தவன் அவளிடம் “எல்லாம் ஓகே இன்னைக்கு, நீங்க ரொம்ப டென்ஷனா ஆகுறதுனால ஒரு ரவுண்ட்ஸ் கூட்டிட்டு போயிட்டு எல்லாரையும் இன்றோ கொடுக்கிறேன் நாளையிலிருந்து டிரெய்னிங் ஸ்டார்ட் பண்ணலாம்..ஓகே தான மிஸ் நிக்கித்தா”

 

“இல்ல இல்ல ஐ அம் ஆல்ரைட், நீங்க இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணலாம்”

 

“சரி, அப்போ உங்க இஷ்டம் வாங்க ரவுண்ட்ஸ் போகலாம்” என்று கூறிவிட்டு அறையை விட்டு செல்ல, இவளும் அவன் பின்னயே சென்றாள்.

 

இப்போது நோயாளிகள் அனுமதிக்கபட்ட பிரிவிற்கு, அவளை அழைத்து சென்று நோயாளிகளின் நிலவரங்களையும் அவர்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டிய முறையையும் அவளுக்கு புரியும் படி விரிவாக கூறிவிட்டு “மிஸ் நிக்கித்தா, இந்த மாதிரி ஒரு நாளைக்கு டூ டூ த்ரீ டைம்ஸ் ரவுண்ட்ஸ் வந்து பேஷண்ட்ட பாக்கணும், அது போக இதெல்லாம் அவங்க ரிப்போர்ட் அண்ட் பைல்ஸ் டைம் கிடைக்கும் போது இதெல்லாம் நல்லா பாருங்க,வேற என்ன ஹெல்ப்னாலும் என்ன கேக்கலாம்” என்று கூறி கோப்பினை கையில் கொடுத்தவன் தன் புருவம் உயர்த்தி “எனி டவுட்” என்று கேட்க,

 

ஏதோ கேட்க நினைத்தவள் கேட்க முடியாமல் “சார், என்னோட ரூம் எங்க” என்று கூற்றையே மாற்றிவிட்டாள்.

 

“இப்போதைக்கு, என்னோட ரூம்ல தான் உங்களுக்கு சின்னதா பிளேஸ் அரேஞ்ச்மென்ட் பண்ணி வச்சிருக்கேன் டூ வீக்ஸ்க்கு அப்புறம் செபரட் ரூம் எடுத்துக்கோங்க” என்று கூறிவிட்டு,அருகில் இருக்கும் செவிலியரிடம் பேசி கொண்டிருந்தவனை பார்த்தவாறு “எப்பா நடிப்புல அப்படியே தளபதி விஜயவே மிஞ்சிடுவான்.. இதுவரைக்கும் இவன் என்ன பண்ண டார்ச்சர் பத்தாதுன்னு இப்போ என்ன தெரியாதவன் மாதிரி நடிச்சு டார்ச்சர் பண்றான், எதுக்கு இப்படிலாம் நடிச்சி சீன் போடுறான்” என்று யோசித்தவாறே ரெண்டு அடி முன்னே சென்றவள், அங்கிருந்த ஸ்ட்டெட்செரில் கால் பட்டு நிலை தடு மாறியவளை, பாரி தன் கையில் தாங்கினான்.

 

இப்போது அவளை நிறுத்தியவன் “ஆர் யூ ஓகே, வந்ததுல இருந்து நீங்க ரொம்ப அப்நார்மலாவே இருக்கீங்க உடம்பு சரியில்லயா”

 

“சாரி, அவங்க ஸ்டர்ட்செர் திருப்புனத நான் கவனிக்கல” 

 

“ஓகே நோ பிராப்ளம், ரிலக்ஸா இருங்க ஃபர்ஸ்ட் டேனால கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கும், அப்புறம் பழகிடும் எனி வே ஆல் த பெஸ்ட் மிஸ் நிக்கித்தா” என்று கூறி, தன் கரங்களை நீட்ட பதிலுக்கு அவளும் கரங்களை நீட்டி “தேங்க்ஸ் டாக்டர்” என்று குலுக்கினாள்.

 

இதை அனைத்தையும் கண்ட, ஒரு கண்கள் அவர்களை தீயாய் முறைத்து சென்றது.

 

அவனை நினைத்தே குழம்பியவாறே அன்றைய பணியை முடித்து வீட்டிற்கு வந்தவள், தன்னை சுத்தபடுத்தி கொண்டு சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்து கண் மூடியவள் படுக்கையில் மாறி மாறி திரும்பி படுத்து உறங்க முயற்சி செய்ய எண்ணம் முழுதும் அவனை பற்றி சிந்தித்தவாறே இருக்க அவளால் தூங்க முடியவில்லை

 

இப்போது படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவள் “சை இவன் எதுக்கு இப்படி என்ன தெரியாத மாதிரி இருக்கான்னு நினைச்சு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு, ஒருவேள இப்படிலாம் பண்ணா நான் அவன பத்தி நினைக்க நினைக்க எனக்கு அவன் மேல காதல் வந்துரும்ன்னு நினைச்சி இப்படிலாம் பன்றானோ..இத பத்தி பல ஆங்கிள யோசிச்சு யோசிச்சு படுத்தா கூட, அவன் மூஞ்சு தான் டிஸ்டர்ப் பண்ணுது, டேய் மல குரங்கு என்ன தான்டா உன் பிளான்னு உன்னால இப்போ என் தூக்கமும் போச்சு, ஏன் டா இப்படி என்ன டார்ச்சர் பண்ற” என்று புலம்பி கொண்டு இருந்தவள் திறன் பேசியை எடுத்து, அவனுக்கு அழைப்பை விடுத்து திட்டினாளாவது தூங்கி விடலாம் என்று எண்ணியவள் அழைப்பை விடுக்க என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அவன் எடுப்பதற்குள் துண்டித்துவிட்டாள்.

 

இப்போது வானொலியில் பாடல் கேட்டவாறு தூங்கி விடலாம் என்று நினைத்தவள் இரவு ரெண்டு மணிக்கு மேல் தான் கண் அயர்ந்தாள்.

இதே குழப்பத்துடன் மறுநாள் பணியையும் கழித்தாள்.

 

******

 

சாருவோ மாலையில் நாகர்கோவியிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவள், சுற்றும் முற்றும் பார்க்க தான் ஏறிய கம்பாட்மெண்டியில் ஆட்கள் யாரும் இல்லை என்றதும் பெண்ணவளுக்கு சற்று பயம் தான் அவளின் பயத்தை போக்கவே இரயில் கிளம்பும் இறுதி நேரத்தில்  ஓடி வந்து ஏறிய ஆடவன் அவளின் எதிரே இருக்கும் இருக்கையில் அமர, அவனை கண்டவளோ பேரு மூச்சு ஒன்றை விட்டு அவனை காணாமல் ஜன்னல் வழியே தன் பார்வையை திருப்பினாள்.

 

சிறிது நேரங்கள் கழித்து பயண சீட்டு பரிசோதிப்பவர் வருவதை கண்டவள் வேகமாக தன் கைப்பையில் தான் வைத்த இடத்தில் இருந்த பயண சீட்டை தேட, அது இல்லையென்றதும் பெண்ணவளின் முகம் வாட, அதை எதிரே இருந்த ஆடவனும் கவனிக்க தவறவில்லை 

 

இப்படியே ஒரு முறைக்கு இரு முறை மாறி மாறி தன் கைப்பையில் தேடி கொண்டிருக்க பயண சிட்டு சோதிப்பவர் 

 

அருகில் வருவதை கண்ட ஆடவனோ, தன் இருக்கைலியிருந்து எழுந்தவன்  பதற்றத்துடன் இருந்த பெண்ணவளின் கை இடுக்கில் தன்னுடைய பயண சீட்டை வைத்தவன் எதுவும் நடக்காதது போல் சென்று படிக்கட்டில் நின்றான்.

 

இவளை பரிசோதித்துவிட்டு அவனை நோக்கி செல்ல, அவளும் என்ன நடக்குமென்ற பதற்றத்துடன் அவர்களை நோக்க அவனோ, அவரிடம் ஏதோ கூறிவிட்டு பணத்தை கொடுக்க அதை வாங்கிவிட்டு, அவர் செல்வதை கண்டவளுக்கு இங்கிருந்து காணும் போது, அவன் பணம் கொடுத்தது தான் தெரிந்தது அவன் என்ன கூறினான் என்று கேட்கவில்லை பயண சீட்டு பரிசோதிப்பர் சென்றதும், அவன் அருகில் சென்றவள் “ரொம்ப தேங்க்ஸ்ங்க” 

 

“இட்ஸ் ஓகே இனியாச்சும் டிக்கெட் மிஸ் பண்ணாம கேர்ஃபுல்லா கைல வச்சிக்கோங்க”

 

அதற்கு தன் சிரிப்பை பதிலாக கொடுத்துவிட்டு “எனி வே நைஸ் மீட்டிங் யூ.. ஐ அம் சாருமதி” என்று தன் கரங்களை நீட்ட, அவனும் பதிலுக்கு தன் கரங்களை நீட்டி “ஐ அம் வேலன்”

 

அடுத்த என்ன பேச என்று தெரியாதவள்  “நீங்க பெங்களூரா”

 

“சொந்த ஊர் நாகர்கோவில்,வொர்க் பண்றது பெங்களூர்”

 

“ஓ சூப்பர்ங்க நானும் அப்படி தான்..நீங்க என்ன வொர்க் பண்றீங்க” என்று கேட்க

 

அதற்குள் அவனின் திறன் பேசி ஒலித்தது, “ஒன் மினிட்” என்று கூறி பேசி முடிக்க பெண்ணளோ “வாங்களேன் அப்படி உக்காந்து பேசலாம்” என்று கூறி செல்ல போனவள் வழுக்கி ரயிலின் வெளியே விழ போக வேலனோ தன் கரம் கொண்டு, அவள் இடுப்பை வளைத்து பிடித்தான்.

 

இருவரும் ஒருவரின் ஒருவர் பார்வையில் தங்களை துளைத்து நின்றார்கள்.

 

இப்போது, அவர்களை நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தது ஆடவனின் திறன் பேசியில் வந்த அழைப்பே, இப்போது இருவரும் களைய பெண்ணவளோ வேகமாக தன் இடத்திற்கு வந்து அமர்ந்து சற்று முன் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து முகங்களை மூடி வெக்கப்பட்டு கொண்டிருக்க அவனும், அவள் எதிரே வந்து அமர்ந்தான்.

 

இருவரும் பேசிக்கொண்டே, சிறிது நேரத்தை கழிக்க உறங்கும் நேர வர பெண்ணவளும் “குட் நைட் வேலன் மார்னிங் பாக்கலாம்” என்று கூறி படுத்தவள் உறங்கி விட, அவனோ, அவளையும் தன் திறன் பேசியையும் மாறி மாறி பார்த்து கொண்டிருக்க ஜன்னல் வெளியே வரும் காற்று பெண்ணவளை குளிர செய்வதை அறிந்தவன், அனைத்து ஜன்னலையும் அடைத்துவிட்டு தன் பையிலிருந்த போர்வை எடுத்து  போத்தி விட, அவளும் அதை இழுத்து பிடித்து கொண்டு தூங்குவதை கண்டவனின் முகம் மலர, அவளை பார்த்தவாறே அவனும் படுத்து உறங்கினான்.

 

மறுநாள் காலை எழுந்தவள், தன் மீதிருந்த போர்வையை பார்க்க, அதை கண்டவனோ சூழ்நிலையை கூற நன்றி கூறியவள், அதை அவனிடம் திருப்பி கொடுத்துவிட்டு தன்னை சுத்தபடுத்தி கொண்டு வெளியே வர பெங்களூர் வந்ததால் இருவரும் தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு ரயிலில் இருந்து இறங்கி இருவரும் ஒருவரின் ஒருவர் நினைவுகளோடு விடை பெற்று சென்றார்கள்.

 

இருவருக்குள்ளும் ஏதோ சொல்ல முடியாத உணர்வு, அதை காதல் என்று இருவரும் அறிந்தாலும் உடனே சொல்வதில் இருவருக்கும் உடன்பாடில்லை இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

******

 

காலையில் வேலைக்கு சென்ற நிக்கியோ பாரியின் அறைக்குள் செல்ல எதையோ கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

தொடரும்…

                                   – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. பாரிய பார்த்து நிக்கிதா தான் அதிர்ச்சி ஆகுற ஆனா அவன் அமைதியா இருக்கான் எப்படி?
      நிகிதா பார்த்தவனும் பாரியும் ஒரே ஆளா இல்ல ட்வின்ஸா இவதான் கன்பியூஸ் ஆகி அதிர்ச்சி ஆகிட்டு இருக்காளா?

      1. Author

        Good guessing akka poruththu irunthu pakkalam akka ❤️❤️thanks for the comment ❤️❤️

    2. என்ன நிக்கி அதிர்ச்சிக்கு பொறந்தவளா?… ஒவ்வொரு udlayum அதிர்ச்சி ஆகுறா 🤭🤭🤭
      ஒருவேள பாரி twins aa🤔🤔🤔

      பாரி வேந்தன் also my hero 😍😍😍

      1. Author

        எல்லாம் ஹீரோ பண்ற வேலை avala அதிர்ச்சியிலயே வைக்க நினைக்கான் போல😁😁thank you granny ❤️❤️