Loading

மணமேடையில் இருந்த அய்யர் மணப்பெண்ணை அழைக்க தாமதிக்காமல் திரும்பிய ஆடவனோ தன்னவள், எப்போது வருவாள் என்று விழி மேல் விழி வைத்து காத்திருக்க, அவனின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மணப்பெண்ணின் பின்னால் தோழிகளுடன் சிரித்து அரட்டை அடித்தவாறு வந்து கொண்டிருந்தவளை மேடை  ஏறும் வரை அவளையே தன் விழி இமைக்காமல் பார்த்தான். 

 

அவன் தன்னை பார்ப்பதை பெண்ணவள் அறிந்தாலும், அவனை கண்டுகொள்ளமலே இருந்தாள். 

 

இப்போது, அவளை தன் கண் செய்கையால் அழைக்க, அதை அவள் கண்டும் காணாது போல் இருப்பதை கண்டவன் “என்ன பாத்துட்டு பாக்காதவ மாதிரி நடிக்கியா, இப்போ நீயே என்ன தேடி வருவ” என்று கூறி, தன் திறன்பேசியில் இருந்த அவளுடைய கோப்பு புகைப்படத்தை, அவளின் திறன்பேசிக்கு தட்டிவிட்டு அவள் கண்ணில் படமால் மறைந்தான்.    

இப்போது தன் திறன்பேசியில், அவன் அனுப்பிய புகைபடம் வர, அதை கண்டவளின் முகம் அவனை தேடியவாறு இருக்க,

 

இப்போது சாரு “என்னாச்சுடி ரொம்ப டென்ஷனா இருக்க” என்று அவள் காதுபட கேட்க, அதை கேட்டவள் “ஒன்னும் இல்லடி ரூம் வர போயிட்டு வாரேன்” என்று கூறிவிட்டு, அவன் தன் அறையில் இருப்பான் என்று நினைத்து அறைக்கு வந்தவள், அவன் இல்லை என்ற ஏமாற்றத்துடன் மத்த இடங்களில் தேடியவாறு நடந்து வந்து கொண்டிருந்தவளை இழுத்து கொண்டு மின்னல் வேகத்தில் ஒரு அறைக்குள் புகுந்தவன், 

 

அந்த அறை கதவை பூட்டிவிட்டு, அவளின் அருகே வர, அதை கண்டு பயந்தவள் “ஏய் இப்போ எதுக்கு டோர கிளோஸ் பண்ண” என்று கேட்டவாறு, பின்னே சென்றவள், அதற்கு மேல் போக வழி இல்லாததால் சுவற்றோடு ஓட்டிக்கொண்டு நின்றாள். 

 

அதை கண்டவன், அவள் தலை தன் கைக்கு நடுவில் இருக்கும் படி தன் இருகைகளையும் சுவற்றில் வைத்து “நீ ரொம்ப தான்டி பண்ற, அது எப்படி என்ன பாத்தும் பாக்காதவ மாதிரி இருக்கியோ, இப்போ பாத்தியா உன்னைய என்ன தேடி வர வச்சேனா” என்று கூறி தன் காலரை தூக்கிவிட்டவனை 

 

“தோடா பிளாக்மெயில் பண்ணி வர வச்சிட்டு பெரும வேற பீத்துறியா”  

 

“எப்படி வர வச்சா என்ன எப்படியோ என்ன தேடி வர வச்சேன்ல” 

 

“சரி எப்படியோ வச்சிக்கோ முதல பைல கொடு, நான் கிளம்புறேன்”   

 

“பார்ட்னர், நீ இந்த புடவைல ரொம்ப அழகா இருக்க தெரியுமா, நாள் முழுக்க உன்ன இப்படியே பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு, நீ என்னடானா கிளம்புறதுலயே இருக்க” 

 

“பின்ன என் பிரெண்ட்ஸ் எல்லாரும் என்ன தேடு வாங்கள..பிளீஸ் சீக்கிரம் பைல கொடு நான் போறேன்” என்று முகம் சுருக்கி கூறுவளை கண்டவனின் இதழ் விரிந்தது. 

 

இப்போது, அவன் “சரி ஒகே விடுறேன் ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு செல்பி எடுத்துக்கலாமா” 

 

“எதே செல்பியா வாய்ப்பே இல்ல.. அதெல்லாம் முடியவே முடியாது” 

 

“ஏய் நீ பயப்படுற மாதிரிலாம், உன் போட்டோ வெளிய யாருக்கும் போகாது நான் பிரைவசியா தான் வச்சிருப்பேன் டிரஸ்ட் மீ.. அப்புறம் உன்ன இனி எப்போ பாப்பேன்னு கூட எனக்கு தெரியாது, அதான் ஒரு மெமரிஸா இருக்கட்டும்ன்னு கேட்டேன்” என்று முகத்தை சோகமாக வைத்து கொண்டு கூற, 

 

அதை கண்டவள் “இந்த நடிப்புலாம் என்கிட்டே செல்லாது, முடியாதுன்னா முடியாது தான்”  

 

“ஏன் டி என்னமோ, நீ போட்டோ எடுக்கலன்னா வேற போட்டோ இல்லாத மாதிரியே பேசுற, அதான் உன் வாட்ஸாப் டிபில உன் போட்டோ தான வச்சிருக்க, ஏன் அத வச்சி எதுவும் பண்ண மாட்டனா, ரொம்ப தான் பண்ற இப்போ ஒழுங்கு மரியாதையா என்கூட செல்பி எடுத்துட்டு உன் பைல வாங்கிட்டு கிளம்புற, அப்படி ஒருவேள போட்டோ எடுக்க வர மாட்டேன்னு அடம்பிடிச்சேன்னு வை அப்புறம் உன் பைல நான் தருவேங்குறத மறந்துட்டு, இங்க இருந்து போகலாம் நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்” என்று கூறி, அவளை காணாமல் திரும்பி நின்று கொண்டான்.  

 

“இங்க பாரு என்னலாம் உன்ன நம்பி போட்டோ எடுக்க முடியாது, ஒழுங்கு மரியாதையா என் ஃபைல் கொடுக்குற”

 

“இப்போ என்னங்குற நீ செல்ஃபி எடுக்க வரமாட்ட , அப்போ நான் ஃபைல் கிழிச்சு போட்டாலும் உனக்கு பரவாயில்ல அப்படி தான” என்று கூறி, அந்த கோப்பினிலிருந்த தாள்களை கிழிக்க போணவனை,

 

“டேய் வேண்டாம் டா, என்னோட வாழ்கையே அதுல தான் இருக்கு, இத்தன வருஷம் நான் கஷ்ட பட்டு படிச்சு டாக்டரானதுக்கான அடையாளம், அப்புறம் சீனியர் டாக்டர்கிட்ட ஜூனியரா வொர்க் பண்ண கன்ஃபர்மேசன் லெட்டர் எல்லாம் அதுல தான் இருக்கு பிளீஸ் அத ஒன்னும் பண்ணிடாத.. இப்போ என்ன உனக்கு நான் உன்கூட செல்ஃபி எடுக்கணும்…சரி சீக்கிரம் எடுத்து தொல” 

 

“ஏய், இப்படி வேண்டா வெறுப்பாளாம்  கஷ்ட பட்டு எடுக்க வேண்டாம் சிரிச்சிகிட்டே சொல்லு எடுக்கலாம்” 

 

“டேய் மலகுரங்கு” என்று மனதிற்குள் அவனை அர்ச்சித்தவள் வெளியே பற்களைக் கடித்து சிரித்தவாறு “ஈஈஈ.. சீக்கிரம் எடுடா செல்பிய” என்று கூறிய மறுநொடி தன் திறன்பேசியில் அவளுடன் இணைந்தவாறு சுயபடம் எடுத்து முடித்தவன், தான் எடுத்த சுயபடத்தை பார்த்தாறு 

 

அவளிடம் “வாவ் சூப்பர், ரெண்டு பேரோட ஜோடி பொருத்தமும் வேற லெவல், அப்படியே என் கண்ணே பட்டுதும் போல இருக்கு” என்று கூறி அவளை பார்க்க, அவளோ அனலாய் முறைத்தாள். 

 

“சரி சரி முறைக்காத, நீ வந்த வேல முடிஞ்சிட்டு இந்தா உன்னோட பைல்” என்று கூறியவாறு அவளின் கோப்பினை நீட்ட,  

 

அவளோ வெடுக்கென்று பிடுங்கிவிட்டு அதை ஒருமுறை திருப்பி பார்த்து கொண்டிருக்க, அப்போது அவன் “எனிவே ஆல் தி பெஸ்ட்” என்று கூறி, தன் கைகளை நீட்ட, அவளோ இருக்கைலையும் சேர்த்து வைத்து சிரித்தவாறு “நன்றி” என்று கூறிவிட்டு சென்றாள். 

 

போகும், அவளை “பார்ட்னர் ஒரு நிமிஷம்” என்று கூற, அவளோ திரும்பி தன் கண்களாலே என்ன என்று வினவினாள். 

 

“லவ் யூ டி பார்ட்னர்” என்று கூறி பறக்கும் முத்தத்தை கொடுக்க, அதை கேட்டவள், அறை கதவை தப் என்று சாத்தி சென்றாள்.

 

இப்படியே அன்றைய நாள், தன் தோழியின் திருமணம் முடிய அவ்வாறே கழிந்தது,

 

மறுநாள் காலையில் அனைவரிடமும் கூறிவிட்டு பெங்களூர் செல்வதற்காக தன் தோழியுடன் இரயில் நிலையம் வந்தவள், அவளிடம் “ஏய் சாரு, நீ எப்போ வர பெங்களூருக்கு” 

 

“நான் வீட்டுக்கு போயிட்டு, நாளைக்கு மறுநாள் வந்துடுவேன், அப்புறம் உன்னோட திங்ஸ் பைல்ஸ் ரூம் கீ எல்லாம் எடுத்துக்கிட்டல.. எது வேணும்னாலும், எனக்கு கால் பண்ணு”

 

“சரி டி பாய்” என்று கூறி முடிக்கவும் ரயில் கிளம்ப, அவளிடம் கை காட்டி விடை பெற்றாள்.

 

இப்போது தன் இருக்கையில் வந்து அமர்ந்தவள்.

 

தன் மாமாவிற்கு அழைப்பை விடுத்து தான் பெங்களூர் கிளம்புவதை கூறிவிட்டு, சிறிது நேரம் ஜன்னலை பார்த்து ரசித்தபடியே வந்து கொண்டிருந்தவளை இடையூறு செய்யவதற்கென்றே, அவளின் திறன் பேசியில் தொய்ங் என்று சத்தம் கொடுக்க,

 

அதை எடுத்து யாரென்று பார்த்தவளின் கண்கள் விரிந்தது.

 

“ஐ வில் பீ மீட் சூன்.. மிஸ் யூ அண்ட் லவ் யூ டி பார்ட்னர்” என்று இருவரும் சேர்ந்து எடுத்த சுயபடத்துடன் தனக்கு அனுப்பிய செய்தியை கண்டவள். 

 

“டேய் மல குரங்கு, இப்போ தான் இனி உன் தொல்ல இருக்காதுன்னு நிம்மதி வந்துச்சு, அது எப்படி தான் அவனுக்கு தெரிஞ்சிதோ தெரியல, என் நிம்மதிய கெடுக்கணும்னே இப்படி மெசேஜ் அனுப்பி இருக்கான்” என்று அவனை சிறிது நேரம் அர்ச்சித்தவள். 

 

சாப்பிட தூங்க பாடல் கேட்க என்று அன்றைய பயணத்தை முடித்தவள். 

 

ஒருவழியாக இரவு பெங்களூர் வந்து சேர்ந்தாள்.

 

இப்போது, ஒரு ஆட்டோ பிடித்து தனது தோழியின் வீட்டிற்கு வந்தவள், தன் உடமைகளை ஓரமாக வைத்துவிட்டு குளியல் அறைக்குள் புகுந்து தன்னை சுத்தபடுத்தி விட்டு இலகுவான ஆடையில் வந்தவள், படுக்கையில் படுத்து எதையோ ஆழ்ந்து யோசித்தவாறு உறங்கியும் போனாள்.

 

மறுநாள் பொழுது விடிய சூரிய ஒளி தன்மீது பட்டதும் தனக்கான இன்றைய நாளை நினைத்து முகம் மலர எழுந்தவள். 

 

காலை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, ஒரு முறை கோப்பினில் அனைத்தும் இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டிருந்தவளை, ஒரு சிறு பெண் ஓடி வந்து “சாரு அக்கா” என்று கூறி, பின் நின்றவாறு அவளை கட்டி அணைத்தாள்.

 

இப்போது நிக்கியோ, தன் பின்னே கட்டி கொண்டு நிற்கும் அந்த பெண்ணை தன் முன் இழுத்து நிறுத்தியவள் “ஹலோ செல்லம், சாரு அக்கா நாளைக்கு தான் வராங்க, நான் அவ ப்ரெண்ட் நிக்கித்தா நீங்க” 

 

“ஹலோ அக்கா, நான் ஷிவானி சிக்ஸ் ஸ்டாண்டர்ட் படிக்குறேன், இதோ இந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டுல தான் இருக்கேன், அப்புறம் சாரு அக்கா வொர்க் முடிஞ்சு வந்ததும் எனக்கு ஹோம்வொர்க் பண்ண ஹெல்ப் பண்ணுவாங்க, அதோட நாங்க நல்லா விளையாடுவோம் ஆனா அவங்க இல்லாம போர் அடிக்குது” 

 

“ஓ அப்போ ஷிவானி குட்டி, சாரு அக்காவோட தான் விளையாடுவீங்களா ஏன், இந்த நிக்கி அக்கா கூட விளையாட வர மாட்டீங்களா” 

 

“அதுக்கென்ன தாராளமா விளையாடலாம் ஆமா, இனிமே நீங்க இங்க தான் இருப்பீங்களா” 

 

“ஆமா டா அக்காக்கு, இந்த ஊருல தான் வொர்க் கிடைச்சிருக்கு சோ, இனிமே இங்க தான் இருப்பேன், நீங்க எப்போ வேணாலும் நிக்கி அக்காவ தேடி வரலாம்”

 

“சூப்பர் அக்கா சரி, எனக்கு ஸ்கூல்லுக்கு டைம் ஆயிடுச்சு அப்போ போயிட்டு ஈவ்னிங் ஆர் நைட் வாரேன், அதுக்குள்ள நீங்களும் உங்க வொர்க் முடிச்சிட்டு வாங்க ரெண்டு பேரும் விளையாடலாம்..  பாய் நிக்கி அக்கா” என்று கைகாட்டி விடை பெற்றாள்.

 

அவள் சென்றதும் வேகமாக எடுக்க வேண்டியதெல்லாம்

 

எடுத்து கொண்டு வீட்டை நன்கு பூட்டியவள், ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு வந்து உள்ளே சென்று சிறிது நேரம் காத்து கொண்டு இருந்தவள், ஒரு அறைக்கு உள்ளே சென்று அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

 

தொடரும்…

                           – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
24
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    11 Comments

    1. அட பக்கி பயலே ஒரு செல்ஃபீ க்கு இவ்ளோ அக்கப்போறா 🤧🤧

      1. Author

        Enna panrathu illanna ava edukka mattale ❤️❤️thanks akka ❤️❤️

    2. Dei un lollu thanga mudiyala da😂 intha Amma doctor ya😳 sollave illa.. Nikki nee ivanuku oru vesa oosi potturu.. athoda mudinjirum😂 ana dei un akkaporu thangala da.. Ava file ya thirudi vachitu imsai pandra ne.. super episode darling 😍♥️

      1. Author

        Ava doctor nnu first epilaye solliten daarlu ❤️❤️appadilaam osi pottu avana seyya mudiyathe ❤️❤️ thanks daarlu ❤️❤️

    3. பார்த்தும் அவ மேல காதல்ல விழுந்துட்டு இவன் பண்ற அக்கப்போரு ரொம்ப அதிகமா இருக்கு.
      இவனுக்கு தேவை பண்ற டார்ச்சர் பாக்கும்போது இவன் மேல கோவம் தான் வருது. புடிக்கலன்னு சொல்றவகிட்ட இருந்த பொருளை எடுத்துக்கிட்டு இப்படி மிரட்டி எல்லாத்தையும் செய்ய வச்சா எப்படி???

      1. Author

        இதுக்கே கோவப்பட்டா எப்படி இன்னும் நிறையா இருக்கே ❤️❤️thanks அக்கா ❤️

    4. அடப்பாவி செல்பி எடுக்க இவ்ளோ அக்கப்போர் பன்னிட்டு திருரியுற எருமை மாடே. இது பெருமை ஒரு கேடு இவருக்கு 😏. Ne panra velaiku ava vera epdi react pannanum mala korangu sir😏. nikki ponnu doctor என்ன டாக்டர் uh ava. semma semma 😍❤️. Super ud dr ❤️.

      1. Author

        Oru selfie ke ivvalavu aka pora irukku innun ennalam irukku ava thaan co operate pannanum illana ippadi thaan pannuvom ❤️❤️thank you chellam ❤️❤️

    5. மலக்குரஙகு சூப்பர் பெயர்.. இவன் தொல்லை அதிகமா இருக்கு… ரொம்ப தப்பு டா டேய்…

      அப்படி ஏன் ஷாக்காகுறா… மலக்குரங்கு அங்கயும் வந்துட்டா

    6. திறன்பேசி னு புது word படிச்சிருக்கேன் இன்னைக்கு 😍😍

      ஒரு செலஃபீக்கு இவ்வளவு அக்கப்போறா??

      அந்த பைல்ல இருந்தது டாக்டர் செட்டிபிகேட்டா?.. நான் வேற ஏதோ சொத்து டாக்குமெண்ட்னு நினைச்சேன்…

      அப்படி எத பார்த்து இந்த அதிர்ச்சி🤔

      1. Author

        Ava சொத்து வச்சி அவன் enna பண்ணுவான் 😁😁 thanks granny ❤️❤️