Loading

அன்று இரவு அனைவருடனும் சாப்பிட்டு கொண்டிருந்தவள், தன் மாமா தன்னிடம் ஏதோ பேச முயற்சிக்கிறார் என்பதை உணர்ந்து “மாமா.. ரெண்டு வரன் பாத்து இருக்கிறதா தான சொன்னீங்க.. ஒரு வீட்டுல இருந்து வந்துட்டு போயிட்டாங்க… இன்னொரு வீட்டுல இருந்து.. எப்போ வராங்க”

 

அதை கேட்டு பெருமூச்சு ஒன்றை விட்டவர் “ஆமாமா.. நான் கூட அதபத்தி தான் பேச வந்தேன்.. கொஞ்சம் நேரம் முன்னாடி மாப்பிளையோட அப்பா வேதாச்சலம் கால் பண்ணி என்னோட பையனக்கும் எனக்கும் பொண்ண ரொம்ப பிடிச்சு இருக்கு.. நாளைக்கு வந்து பொண்ணு பாத்துட்டு மத்ததெல்லாம் பேசி முடிச்சிடலாம்ன்னு சொன்னாரு.. குடும்பம் கூட நமக்கு வேண்டப்பட்ட குடும்பம் தான்.. நேத்து மாதிரி எதுவும் நடக்காது.. கண்டிப்பா இந்த சம்மந்தம் ஒத்து போகும்”

 

“கவலபடாதீங்க மாமா.. எல்லாம் நல்லாதவே நடக்கும்.. சரி மாமா நான் தூங்க போறேன்.. சீக்கிரம் தூங்குனா தான் மாப்பிளை வீட்டுல இருந்து வரும் போது ஃப்ரெஷா இருப்பேன்.. நீங்களும் எத பத்தியும் யோசிக்காம நிம்மதியா தூங்குங்க” என்று கூறிவிட்டு அறைக்குள் செல்பவளையே இருவரும் வியந்து பார்த்தார்கள்.

 

இப்படியே அன்றைய இரவு கழிய மறுநாள் பெண்ணவளும் தயாராகி அவர்களின் வருகைக்காக காத்து கொண்டிருக்க, அதிகம் நேரம் காக்க வைக்காமல் அவர்களும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

 

அவளின் மாமாவோ வந்தவர்களை வரவேற்று பேசிக்கொண்டிருக்க, பெண்ணவளும் குனிந்த தலை நிமிராமல் அவர்களுக்காக தேனீர் எடுத்து வந்து கொடுத்துவிட்டு, அவளின் அத்தையின் அருகில் வந்து நின்று கொண்டாள்.

 

இப்போது பெண்ணை பார்த்தவர்களோ “நாங்க மாப்பிளையோட அத்தை மாமா.. நாங்க மட்டும் வந்திருக்கோம் நினைக்க வேண்டாம்.. அண்ணன்னும் வருறத தான் இருந்துச்சு.. தீடீர்ன்னு அவசரமா முடிக்க வேண்டிய வேலை அதான் வர முடியல.. எங்க வீட்டுல எல்லாருக்கும் பொண்ண ரொம்ப பிடிச்சு இருக்கு… உங்க வீட்டு பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்ன்னா மேற்கொண்டு பேசி முடிச்சிடலாம்.. அம்மாடி மாப்பிளை போட்டோ இருக்கு பாக்குறீயா” என்று பெண்ணை நோக்க,

 

அவளோ “நான் போட்டோ பாக்கணும் அவசியம் இல்ல.. என்னோட மாமாக்கு சம்மதம்ன்னா எனக்கு சம்மதம் தான்.. அவரவிட எனக்கு சரியான வாழ்கைய யாராலும் அமச்சி தர முடியாது.. எதா இருந்தாலும் என் மாமாகிட்ட கேட்டுக்கோங்க”

 

அதை கேட்டவர்கள் “அப்புறம் என்ன.. பொண்ணு அவ விருப்பத்த சொல்லிட்டா நீங்க என்ன சொல்லுறீங்க”

 

“எனக்கு முழு சம்மதம் தான்.. உங்க குடும்பத்துல பொண்ணு கொடுக்க எனக்கு ரொம்ப சந்தோஷம்”

 

“அப்போ.. ஒரு நல்ல நாள் பாத்து உங்க ரிலேடிவ் எங்க ரிலேடிவ் கூப்பிட்டு கோவில்ல சிம்பிளா நிச்சயதார்த்தம் மட்டும் வச்சிக்கலாம் கல்யாணம் கிராண்ட்டா பண்ணிடலாம்”

 

“அப்படியே பண்ணிடலாம்”

 

“அப்புறம் இன்னொரு விஷயம்.. என்னோட பொண்ணுக்கும் மாப்பிளையோட அன்ணக்கும் கூட பேசி முடிச்சிட்டோம் பசங்க ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு அண்ணனோட ஆசை நிச்சயதார்த்தம் கூட ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில வைக்குறதா இருந்ததாள தான்.. உங்ககிட்டயும் பேசிட்டு முடிவு பண்ணலாம்ன்னு இருந்தோம்”

 

“ரொம்ப சந்தோஷம்.. நீங்க தேதி முடிவு பண்ணிட்டு சொல்லுங்க.. எல்லாரும் சேந்து சிறப்பா பண்ணிடலாம்” என்று கூற, இருவீட்டாரும் சிறிது நேரம் பேச வேண்டியதை பேசி முடிக்க அடுத்ததாக பெண்வீட்டியில் இருந்து மாப்பிளை வீட்டாரை சாப்பிட வைத்து வழியனுப்பி வைத்தார்கள்.

 

இப்படியே நாட்கள் கழிய இரு ஜோடிகளின் நிச்சயதார்த்த நாளும் வந்தது, மூவீட்டாரும் ஒன்றிணைந்து எளிமையாக கோவிலியில் நடத்தியதால், சமமாகவே அனைத்து வேலையையும் செய்தார்கள்.

 

நல்ல நேரம் தொடங்க முதலில் வேதாசலத்தின் முதல் மகனுக்கு பார்த்த பெண்ணை அழைத்து வந்து மாப்பிளை வீட்டியிலிருந்து கொண்டு வந்த நிச்சயதார்த்த பட்டியிருக்கும் தாம்பூலத்தை கொடுத்து அனுப்பிவிட்டு, அடுத்ததாக இரண்டாம் மகனுக்கு பார்த்த பெண்ணான நம் கதாநாயகியை அழைத்து தாம்பூலம் கொடுக்க யாரையும் பார்க்காமல் பெண்ணவளும் வாங்கி கொண்டு தயாராக சென்றாள்.

 

இரு பெண்களும் தயாராகி வெளியே வந்து அவர்களின் துணையோடு ஜோடியாக நிற்க, நிக்கியோ யாரையும் பார்க்கும் மனநிலையில் இல்லாததால் பெண்ணவள் குனிந்த தலை நிமிராமல் நிற்க,

 

இப்போது அய்யோரோ முதல் ஜோடியின் முகூர்த்த பட்டோலையில் முதலில் வாசிக்க வேண்டியவற்றை வாசித்துவிட்டு “தெய்வதிரு வேலுசாமி ஆண்டாள் அவர்களின் மகன் வழி பேரனும், வேதாச்சலம் – தெய்வதிருமதி கௌரி அவர்களின் புதல்வனுமான பாரி வேந்தன்” என்ற பெயரை கேட்டதும் அதிர்ந்த நிக்கியோ,

 

அப்போது தான், தன் துணை யாரென்று நிமிர்ந்து பார்த்தவளோ அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.

 

அதை கண்டவனோ “ஹலோ பார்ட்னர்” என்று அவளை பார்த்து கண்ணடிக்க, அதற்குள் முதல் ஜோடி பட்டோலையிலிருந்த மீதியை வாசித்து முடித்து இருவீட்டாரும் தாம்பூலம் மாறிவிட்டார்கள்.

 

அடுத்ததாக புகழ் நிக்கியின் முகூர்த்த பட்டோலை வாசித்து முடித்து இருவீட்டாரும் தாம்பூலம் மாற்றிவிட்டதும் பாரியும் புகழும் தங்களின் துணைக்கு மாலை அணிவிக்க, அடுத்து பெண்கள் இருவரும் மாலை அணிவிக்க வேண்டும் ரஞ்சியோ தன்னவனின் கழுத்தில் மாலை அணிவித்தாள். 

 

ஆனால், நிக்கியோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை, அதை கண்ட அவளின் மாமாவோ “என்னமா பாக்குற மாப்பிளை கழுத்துல மாலைய போடு”

 

அதை கேட்டு நினைவிற்கு வந்தவளோ அவனின் கழுத்தில் மாலையை அணிவித்தாள்

 

அடுத்ததாக இரு ஜோடிகளும் மோதிரம் மாற்றி கொண்டனர்.

 

புகழ் தனக்கு அணிந்த பிஎன்(PN) என்று பொறிக்கபட்டிருந்த மோதிரத்தை கண்டவள் அதிர்ந்து தன் கழுத்தில் இருந்த மோதிரத்தை தேட,

 

அதை கண்டவனோ “பார்ட்னர்.. ரொம்ப தேடாத… கிடைக்காது.. சோ டைம் வேஸ்ட் பண்ணாம எனக்கு மோதிரம் போடுறீயா” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூற,

 

அனைவரும் பார்ப்பதால் பெண்ணவளும் அவனுக்கான (NP) என்று பொறிக்கபட்டிருந்த மோதிரத்தை அணிவித்தாள்.

 

இப்படியே நேரங்கள் கழிய மூவீட்டாரின் உறவினர்கள் இரு ஜோடிகளுடனும் புகைப்படங்கள் எடுத்து முடிக்க, நிக்கியோ மணப்பெண் அறைக்குள் சென்று படுக்கையில் யோசனையாக அமர்ந்திருந்தாள்

 

அவள் செல்வதை கண்டு பின்னே வந்து அவளருகில் அமர்ந்தவனோ “பார்ட்னர்.. நீ யோசிக்கிறது பாத்தா நிறைய கேள்வி இருக்கும் போல.. சரி என்ன கேக்கணுமோ சீக்கிரம் கேளு.. பயங்கரமா பசிக்குது”

 

“எனக்கு கேள்வி கேக்குற அளவு பொறுமை இல்ல.. ஒழுங்கா நீ பண்ண தில்லாலங்கடிய நீயே சொல்லிடு” என்று கூறி முடிக்கவும், 

 

“அவன் சொல்லுறத விட.. நான் சொன்னா தான் கரெக்ட்டா இருக்கும்” என்று கூறியவாறே, அவளின் அத்தையுடன் மாமாவும் வந்தார்.

 

தான் கூறியதை கேட்டு வியந்து பார்ப்பவளை கண்டவரோ “என்னமா அப்படி பாக்குற.. எனக்கு எல்லா விஷயமும் தெரியும்.. புகழ் எல்லா விஷயமும் சொல்லி தான் கல்யாணத்தக்கு சம்மதம் வாங்கினான்.. அன்னைக்கு பொண்ணு பாக்க வந்தப்போ நீயும் அவனும் பேசினத அவன் போன் மூலமா எங்கள கேக்க வச்சான்.. நீ பேசுனத கேட்டதும் இப்படி பட்ட பொண்ணு எங்களுக்கு பிறக்கலன்னு ரொம்பபே வருத்தபட்டோம்.. இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ.. நீ எனக்கு செஞ்சி கொடுத்த சத்தியத்துப்படி மாமா பாத்த புகழ தான் நீ கல்யாணம் பண்ணிக்க போற.. அவனவிட நல்ல பையன் கிடைக்கவே மாட்டான்.. இந்த மாமா எப்போவும் உனக்கு துணையா இருப்பேன்.. சந்தோஷமா இரு” என்று இருவரும் அவள் தலையை வருடி சென்றனர்.

 

அவர் சென்றதும் நிக்கியோ “டேய் புகழ்.. மாமா சொன்னதும் ஏதோ நல்லது நடந்திருக்குன்னு புரியுது.. பட் அதுக்கு நீ பண்ண சூழ்ச்சி புரியல”

 

“நீ ரெஸ்ட்ல இருந்த ஒன் மந்த்.. இடையில உன் தங்கச்சி சொன்ன உண்மைய வச்சி.. உன் மாமாகிட்ட பேசுனது என் அப்பா இல்ல நான் தான்.. என்று கூறி காலத்தை பின்நோக்கி அழைத்து சென்றான்.

 

அனைவரிடமும் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக போய் கூறி விட்டு நிக்கியின் மாமாவை காண வந்தான் 

 

வீட்டிற்கு வந்தவனை கண்ட நிக்கியின் “மாமா அட வாங்க தம்பி.. என்ன இவ்வளவு தூரம்”

 

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”

 

“சொல்லுங்க தம்பி”

 

“நான் நிக்கிய லவ் பண்றேன்.. அவள கல்யாணம் பண்ணி அவகூட சந்தோஷமா சேந்து வாழ ஆசை படுறேன்.. நிக்கிக்கூட என்ன லவ் பண்றா.. ஆனா, நீங்க அவகிட்ட வாங்கின சத்தியத்துக்காக என்மேல உள்ள காதல வெளிய சொல்லாம மனசுக்குள்ளயே வச்சி கஷ்டப்படுறா.. அதான் உங்க சம்மத்தோட அவள கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்.. இப்போ கூட அவகிட்ட வேல விஷயமா வெளிய போறதா சொல்லிட்டு தான் வந்துருக்கேன்..”

 

“இங்க பாருங்க தம்பி.. காதலுக்கு நாங்க ஒன்னும் எதிரி கிடையாது.. என்னோட மூத்த பொண்ணு படிச்சிட்டு இருக்கும் போது காதல் தான் முக்கியம் எவன் கூடையோ ஓடி போயிட்டா.. அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியல.. மறுபடியும் அப்படி ஒரு விஷயம் நடக்காது கூடாதுன்னு தான்.. நான் பாக்குற மாப்பிளை தான் நீ கட்டிக்கணும் சத்தியம் வாங்கின.. ஆனா என்னோட பொண்ண கம்பர் பண்ணும் போது நிக்கி நாங்க தான் முக்கியம்ன்னு நினைக்கிறதா நீங்க சொல்லுறத கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. உங்கள பத்தி நிக்கி நிறைய சொல்லிருக்கா.. 

 

அதோட சரணியையும் நிக்கியையும் எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்து இருக்கீங்கன்னு எல்லாம் எனக்கு தெரியும்.. நிக்கி காயம் சரியாகுறதுக்காக அவள எப்படிலாம்  பாத்துகிட்டீங்கன்னு கூட சரணி சொன்னா.. இப்படியொரு நல்ல பையன தொலைக்க நான் விரும்பல.. அதுனால நிக்கிய உங்களுக்கு கட்டி கொடுக்க எனக்கு முழு சம்மதம்”

 

“தேங்க்ஸ் மாமா..”

 

“என்னடா மாமாங்குற.. அவ எனக்கு மருமகன்னா நீ எனக்கு பையன் டா”

 

“அப்போ ஓகேப்பா.. இப்போதைக்கு நிக்கி கிட்ட இதபத்தி பேச வேண்டாம்.. அவள வச்சி சின்னதா கேம் விளையாடலாம்” என்று அவரிடம் தன் திட்டத்தை கூறி சம்மதம் வாங்கி அங்கிருந்து விடை பெற்று நிகழ் காலத்தை நோக்கி வந்தவனோ 

 

“அதுக்கு அப்புறம் உன்ன பொண்ணு பாக்க வந்தது.. உன் மாமாகிட்ட அப்பா பேச சொன்னதுன்னு நான் சொன்ன எல்லாம் உன் பார்ட்னர் விளையாடின கேம் தான்.. ஆனாலும் எனக்கு பெர்பார்ம் பண்ணவே வரல.. எதாவது ஒரு இடத்தில உனக்கு டவுட் வரும்ன்னு நினைச்சேன்.. ஆனா.. நீ மக்கு சாம்பிராணின்னு.. எனக்கு இப்போ தான் தெரியுது”

 

அதை கேட்டு கடுப்பானவள் “ஆமாம் டா உன்ன போய் நல்லவன் நம்பினேன்ல அப்போ மக்கு சாம்பிராணி தான்..”

 

அவளின் கோபம் கண்டவனோ அவளை இறுக்கி அணைத்தவாறு “ஞாயபடி பாத்தா.. நான் தான்டி கோவபடனும்.. என்ன எப்படிலாம் அலையவிட்ட”

 

“அதான் சேத்து பலி வாங்கிட்டியே”

 

“சாரிடி பார்ட்னர்.. என்னவிட நீ தான் ரொம்ப கஷ்டபட்டிருப்பல”

 

“அதெல்லாம் விடுடா.. எனக்கு ஒரு டவுட்டு.. இந்த சத்தியம் மேட்டரு சரணிக்கே தெரியாது.. சாருக்கு மட்டும் தான் தெரியும் பட் அவகிட்டயும் சத்தியம் வாங்கிட்டேன் ஆனா.. எப்படி உன்கிட்ட சொன்னான்னு யோசிக்கிறேன்” என்று கூறி கொண்டிருக்க,

 

“அண்ணாகிட்ட சொல்ல கூடாதுன்னு தான சத்தியம் வாங்கின சரணிகிட்ட சொல்ல கூடாதுன்னு வாங்கலயே” என்று கூறியவாறே வேலணுடன் சாரு உள்ளே வந்தாள்

 

“அப்போ.. இந்த நாரதர் வேலைய ஸ்டார்ட் பண்ணினதே.. நீ தான்ல”

 

“அப்கோர்ஸ்”

 

அதற்கு வேலனோ “அடேய் நிறுத்துங்கடா.. சுத்தி சுத்தி அதே விஷயத்தையே பேசிட்டு இருக்காம ரைட்டர் அம்மாவ முற்றும் போட விடுங்கடா” என்று கூற, அதை கேட்டு அனைவரும் சிரித்தார்கள்.

 

நிச்சயம் முடிந்த மறுமாதம் குறித்த தேதியில் இரட்டையர் இருவருக்கும் அவரவர் காதல் துணையுடன் திருமண முடிய, அதற்கு அடுத்து ரெண்டு மாதங்கள் கழித்து வேலன் சாருவின் திருமணம் நடந்து முடிந்து மூன்று ஜோடிகளும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

************************************

 

மூன்று வருடம் கழித்து 

தன் ரெண்டு வயது மகனை தூங்க வைத்த பாரியோ தன்னை அழகுபடுத்தி கொண்டிருந்த ரஞ்சியை பின் நின்று இறுக்கி அணைத்தவனோ “ஏன்டி.. நைட் டிராவலுக்கு இவ்வளவு மேக்அப் தேவையா..”

 

“ரொம்பவா இருக்கு” என்று உதடு பிடுக்கியவளை கண்டு சிரித்தவன் 

 

“கொஞ்சம் ஓவரா தான் இருக்கு.. நான் ஹெல்ப் பண்றேன்” என்று தன் இதழை, அவள் இதழோடு ஒற்றி எடுத்தவன் “லிப்ஸ்டிக் தான் அதிகமா இருந்த மாதிரி இருந்துச்சு.. இப்போ ஓகே ஆயிடுச்சு”

 

“போடா பொறுக்கி போ.. முத பையனுக்கு தேவையான திங்ஸ் எடுத்து வை” என்று கூற, அவனும் அந்த பணியை தொடங்கினான்.

 

***************************************

 

அழும் மூன்று மாத குழந்தையை சமாதானம் படுத்த முடியாமல் அங்கிங்கும் நடந்த கொண்டிருந்த சாருவை கண்டவனோ “குழந்தை கூட சமாதானம் பண்ண தெரியல”

 

“இப்போ தான் பால் கொடுத்தேன் மறுபடியும் அழுகுறா.. ஆனா எதுக்குன்னு தான் தெரியல”

 

“குழந்தைய கொடு”

 

அதை கேட்டு குழந்தையை அவனிடம் கொடுக்க,

 

குழந்தையோ தந்தையிடம் சென்றதும் அழுகையை நிறுத்தியதை கண்டவளோ “ஏன்டி, இப்போவே உன் அப்பா கூட கூட்டு சேந்து என்ன கழட்டி விடுறேல இரு கவனிச்சுக்குறேன்”

 

“சரி தான் போடி.. என் பொண்ணு எப்போவுமே டாட் லிட்டில் பிரின்ஸஸ் தான்” என்று கூறி மகளின் கன்னத்தில் முத்தம் பதிக்க, அதை கண்டு முறைத்தவளை கண்டவனோ, அவளை இழுத்து கன்னத்தில் முத்தமிட்டு “வேணும்ன்னா கேட்டு வாங்கிக்கோ.. இப்படி என் பொண்ணுக்கு கொடுக்குறத கண்ணு வைக்காத”

 

“ஆமா.. இவரு முத்தத்துக்கு நான் தான் அலையுறேன் பாரு.. வலுக்கட்டாயமா இழுத்து வச்சி நீ கொடுத்துட்டு என்ன குற வேற சொல்லுறீயா.. மரியாதையா போயிடு” என்று கூறி குளியல் அறைக்குள் புகுந்துகொள்ள, அதை கண்டு குழைந்தையை படுக்கையில் விளையாட போட்டவனோ அவளுடன் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

****************************************

 

தன் எட்டு மாத இரட்டைய குழந்தைகளை அறும்பாடுபட்டு குளிக்க வைத்து குளியல் அறைக்குள் இருந்து வெளியே நிக்கியோ குழந்தைகளை படுக்கையில் போட்டுவிட்டு, தன் புகைப்படத்தை ரசித்து கொண்டிருந்த கணவனை கண்டு அருகில் வந்தவளோ “டேய்.. நான் தான் பக்கத்துல இருக்கேன்ல அப்புறம் எதுக்கு என் போட்டோ பாத்து சைட் அடிக்கிற”

 

அதை கேட்டு தன்னவளை இழுத்து கட்டி அணைத்தவனோ “இதுல அவ்வளவு அழகா இருக்க தெரியுமா”

 

“அப்போ.. இப்போ அழகா இல்ல அதான”

 

“ஆமா.. முன்னால இருந்த மாதிரி இல்லையே லைட்டா வெயிட் வேற போட்டுட்ட”

 

“அதான் இப்போ நான் அழகா இல்லல.. அந்த போட்டோவேயே கட்டி அழு” என்று கூறி, அவனின் அணைப்பில் இருந்து விலக முயல்பவளை கண்டு தன் அணைப்பை இறுக்கியவன் “சும்மா தான்டி சொன்னேன்.. உடனே என்னவிட்டு போற”

 

“நானே போனாலும்.. நீ தான் போக விட மாட்டியே”

 

“எப்படி போறது.. அதான் காதல் மந்திரம் போட்டு மயக்கி வச்சிருக்கியே” என்று கூறி அவள் இதழை வருடியவனை கண்டவளோ “இப்படி பேசி மயக்கியே காரியத்த சாதிக்கலாம்ன்னு பாக்குற தான.. அது நடக்காது” என்று கூறி அவன் கையை தட்டிவிட

 

அவனோ “எப்படியோ ரெண்டு நாள் பட்டினி போட்ருவ.. அட்லீஸ்ட் இப்போ கிஸ் மட்டுமாச்சும் கொடுக்கலாம்ல.. நான் பாவம் இல்லையா”

 

அதை கேட்டு, அவன் தோலில் கையை மாலையாக கோர்த்தவளோ “ஐ லவ் யூடா பார்ட்னர்” என்று கூறி அவன் இதழை சிறை செய்தாள்.

 

இருவரின் நீண்டநேர முத்தத்தை நிறுத்தியது என்னவோ அவர்களின் அருமை புதல்வர்கள் தான் 

 

குழந்தை சத்தம் கேட்டு தங்கள் இதழை பிரித்தவர்களோ ஆளுக்கொரு குழந்தையை தாயார் செய்து தூக்கி கொண்டு வெளியே வர, அதற்குள் மற்ற ஜோடிகளும் வெளியே வந்தனர்

 

நிக்கி மாமா அத்தையின் 25தாவது திருமண நாள் விழாவை அனைவரும் சேர்ந்து கொண்டாட எண்ணி மூன்று ஜோடிகளும் அவரவரின் குழந்தையுடன் மறுநாள் காலையில் நிக்கியின் வீட்டையை அடைந்து அன்று முழுதும் பயண களைப்பில் ஓய்வு எடுத்தவர்கள்

 

மறுநாள் அவர்களின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்து, திருமண நாள் ஜோடிகளுடன் மூன்று ஜோடிகளும் தங்கள் குழந்தைகளுடனும் சரணியும் இணைந்து சிரித்த முகமாக குடும்ப புகைப்படம் எடுத்தார்கள்.

 

இவர்களின் வாழ்க்கையில் இனி எப்போதும் சந்தோசம் நிலைத்திருக்க வேண்டும் என்று கூறி கதையை முடிக்கிறேன்.

***************சுபம்******************

கருத்து:பெற்றவர்களும் முக்கியம் என்று நிக்கி போல் நினைக்கும் பெண்களின் உணர்வை புகழ் போல் அவர்களின் உணர்வை புரிந்து கொள்ளும்  கணவன் அல்லது காதலன் கிடைக்கும் பெண்களை கண்டிப்பாக அதிர்ஷ்டசாலி என்று கூறலாம்.

“பெண்களின் உணர்வை மதிக்கும் ஒவ்வொரு ஆணும் சிறந்த தலைவனே” என்று கூறி நிறைவு செய்கிறேன் 

 *********** நன்றி *****************

 

 

                                      – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. ஆஷா_விமர்சனம்
      #லவ்மந்திரம்_போட்டிக்கதை

      #கண்டதும்_காதலில்_விழுந்தேனடி

      புகழ் வேந்தன் ❤நிகி
      பாரிவேந்தன் ❤ரஞ்சி
      வேலன் ❤மதி

      மூனு ஜோடியோட காதல் அவங்க உணர்வுகளை கதையோட சேர்த்து நமக்கும் எடுத்து சொல்லி இருகாங்க எழுத்தாளர்😍

      கதையோட தலைப்புக்கு மாதிரியே நம்ம ஹீரோ புகழு அவள பார்த்ததும் காதல்ல தொபுக்கடீர்னு விழுந்துட்டாரு… அதாங்க லவ் எட் பர்ஸ்ட் சைட்..🙈🙈

      ஆனா நம்ம பொண்ணு ஏகத்துக்கும் அவன அலைய விடுது.. பாவம்யா புகழு🤧🤧🤧.. புகழு உன்மேல ரைட்டருக்கு பாசமே இல்ல டா.. 😏😏

      நிக்கி கல்யாண மண்டபத்துல பார்த்த தனக்கு காதல சொன்ன அதே ஆள மறுபடியும் அவ புதுசா வேலை செய்ற ஹாஸ்பிடல்ல பாக்குறா…

      கூடவே இன்னொரு பொண்ணு வேற உரிமையா பேசிது சரி சக்காலத்தி சண்டை வரும் னு ஆர்வமா காத்திருந்தா.. அதுல இன்னொரு ஸ்விஸ்ட வெச்சிட்டாங்க நம்ம எழுத்தாளர்…

      புகழ் காதல் அவன் பேசுற ஒவ்வொரு வார்த்தைலையும் தெரிஞ்சிது.. நிக்கியும் பாவம் தான் காதலை உள்ள வெச்சிட்டே சொல்ல முடியாத அவளோட தவிப்பு படிக்கும் போது பாவமா தான் இருந்திச்சு.. அவ அப்படி மறுக்குறதுக்கும் ஒரு ரீசன் இருக்கு.. அத கதைய படிச்சி தெரிஞ்சிக்கோங்க…

      அப்பறம் பாரி ரஞ்சி பெரிசா கதைல வரலைனாலும் அவங்க காதலும் ரசிக்கும்படியா இருந்திச்சு…

      அடுத்து எனக்கு பிடிச்ச ஜோடி 🙈🙈🙈 வேலன்❤சாருமதி… Athu என்னவோ தெரியல எந்த கதை எடுத்தாலும் 2nd ஹீரோவ தான் ரொம்ப பிடிக்குது.. 2nd ஹீரோ பேன்னாடா நானு மொமென்ட் தான்😁😁

      மதி அவன்கிட்ட இருந்து விலகி போக.. வேலன் அவன் காதளுக்காக போராடுற விதம் பிடிச்சிருந்தது… அவளுக்கு அவளோட தவறுதலான புரிதலை புரிய வெச்சது இன்னும் அழகு😍😍

      ஷிவானி, இவளுக்கு இப்படி நடந்திருக்க வேணா 🤧🤧🤧.. ஆனா புகழ் அவளை ஹேன்டில் பண்ண விதம் பிடிச்சிருந்தது…

      அப்பறம் கதைல கொஞ்சம் thriler இருக்கு.. நிக்கிய அவ தங்கச்சிய வில்லன் கடத்த.. கூடவே சாருவும் மாட்டிக்கிறா…

      அந்த வில்லன் யாரு??… மூணுபேரையும் ஹீரோஸ் எப்படி காப்பதுனாங்க என்கிறது மீதி கதை..

      கடைசியா ஒரு கருத்தோட கதைய நிறைவா முடிச்சிருக்காங்க😍😍

      போட்டியில் வெற்றி பெற எழுதாளருக்கு என் வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳

      1. Author

        சூப்பர் comment ❤️❤️ நன்றி granny ❤️❤️

    2. Ama ama ponnoda feelings ya understand pandravan than real King athula pugal, pari, velan moonu perume king than semma darling niraivana mudivu😍 ivanga loves super♥️

      1. Author

        Thanks darlu ❤️❤️ippovum un aalu mattum thaan pavam nnu solluviya avalum பாவம் தான ❤️❤️

    3. Nice story sis…. Avanoda love & avan antha baby and saran mela vacha pasamellam semma… Nikki mama and family kaga ava love ilaka thayaranathu semma.. But ava mama aththa avaloda love ah putinjikitu paninathu nalaruku… All good characters.. Lovely… 💖