Loading

முகம் வாடியவனை கண்டவாறு திறன் பேசியை அவனிடமிருந்து வாங்கியவளோ “சொல்லுங்க மாமா”

 

“எப்படி இருக்க.. உடம்பெல்லாம் ஓகே தான”

 

“நான் நல்ல இருக்கேன் மாமா.. என்ன விஷயம் சொல்லுங்க”

 

“அது ஒன்னும் இல்லடா.. சரணிக்கு இப்போ செமஸ்டர் லீவ்ன்னு சொன்னா.. அதான் அவகூட ஊருக்கு வந்தேன்னா.. இங்க மாமா உனக்காக ரெண்டு வரன் பாத்து வச்சிருக்கேன்.. அதில எந்த மாப்பிளை ஓகேன்னு நீ வந்து பாத்து சொல்லிட்டேன்னா கல்யாணம் வேலை ஆரம்பிச்சிடலாம்”

 

“இப்போ.. என்ன மாமா கல்யாணத்துக்கு அவசரம்”

 

“நல்ல இடம்டா.. ரெண்டு மாப்பிள்ளையும் பெங்களூர் தான் உனக்கு வசதியா இருக்கும்ல வேலைக்கு.. ரொம்ப நல்ல மாப்பிளைங்க.. அதான் விட மனசு வரல.. மாப்பிளைங்க ரெண்டு பேரு ஜாதகமும் கூட உன் ஜாதகத்தோட நல்லா பொருந்திருச்சு.. நீ எப்போ வருவன்னு சொன்னேனா பொண்ணு பாக்க வர சொல்லிடுவேன்”

 

அதை கேட்டவளோ தன்னவனை பார்த்தவாறே “சரி மாமா.. உங்களுக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்.. நான் இன்னும் ரெண்டு நாளுல சரணியோட ஊருக்கு வரேன்”

 

அதுவரை அவளின் கையை பிடித்து இருந்தவனோ அவளின் பதில் கேட்டு விடுவித்துவிட்டான், அதை பெண்ணவளும் கவனிக்க தவறவில்லை

 

“ரொம்ப சந்தோஷம்.. பாத்து வாமா.. மத்தத ஊருக்கு வந்ததும் பேசிக்கலாம்.. நான் வைக்கிறேன்டா” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

 

தன்னவனின் முகம் வாட்டத்தை கண்டவளோ “புகழ்.. நான் ரெண்டு நாளுல ஊருக்கு போகனும்.. டிக்கெட் போடுறீயா எனக்கும் சரணிக்கும்”

 

“ம் அதுக்கென்ன தாராளமா போடுறேன்.. போகும் போது மட்டும் போட்டா போதுமா.. இல்ல ரிட்டர்னனுக்கு கூட மூணு டிக்கெட்டா போட்டுறவா”

 

“புகழ்.. உனக்கு தான் ஒரு மாசம் சான்ஸ் கொடுத்தேன்.. ஆனா எனக்கு தான் உன்மேல எந்த பீலும் வரலயே.. அப்புறம் நீ என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிருக்கேன் தான.. பின்ன ஏன் இப்படி ஒரு மாதிரி பேசி கஷ்ட படுத்துற”

 

“நான் என்ன கேட்டேன்.. போக மட்டும் போதுமா.. இல்ல ரிட்டனுக்கும் டிக்கெட் போடணுமான்னு தான கேட்டேன் இதுல கஷ்ட படுத்த என்ன இருக்கு”

 

“ரிட்டர்ன் எப்போன்னு தெரியல.. போக மட்டும் டிக்கெட் போட்டா போதும்” என்று கூறி வெளியே சென்றவளின் கரம் பற்றியவனோ 

 

“என்ன விட்டு மொத்தமாவே போயிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா பார்ட்னர்.. என்னால உன்ன தவிர வேற எந்த பொண்ணையும் லைஃப் பார்ட்னரா நினைச்சி கூட பாக்க முடியல.. உண்மைய சொல்லு நிஜமாலே உனக்கு என்மேல எந்த பீலும் வரலையா”

 

“இதுக்கு மேல உனக்கு புரிய வைக்க எனக்கு டைம் இல்ல.. நான் ஹாஸ்பிட்டல் கிளம்புறேன்.. பாய்” என்று கூறி அவன் கரத்தை தனியிடமிருந்து விலக்கி வெளியே சென்றாள்.

 

இப்படியே ரெண்டு நாட்கள் கழிந்திருக்க, மாலை அனைவரிடமும் கூறி விடை பெற்றவள் தங்கையை அழைத்து கொண்டு புகழுடனே இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்து ரயிலுக்காக காத்து கொண்டிருந்தவளின் பார்வையோ தன்னவனை நோக்கி இருக்க, 

 

அதற்குள் ரயில் வந்துவிட்டதால் தங்கையுடன் ஏறி ஜன்னல் இருக்கையில் அமர்ந்தவள், அவனையே ஏக்க பார்வை பார்த்து கொண்டிருக்க, அவள் பார்வையை கவனிக்காமல் அவளின் தங்கையிடம் பேசிக்கொண்டிருக்க, அப்போது ரயில் நகர்வதை உணர்ந்தவனோ கைகாட்டி இருவரையும் அனுப்பி வைத்தான்.

 

பெண்ணவளோ தன்னவுடன் இருந்த மகிழ்வான நாட்கள் அவனின் பேச்சு அவனின் புகைபடம் என்று அனைத்தையும் ரசித்தவாறே பயணத்தை முடித்து தங்கையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

 

அவர்கள் வந்ததும், அவளின் மாமாவும் அத்தையும் இருவரையும் வாரி அணைத்து நலம் விசாரிக்க சில கேள்விகளுக்கு விடை அளித்த நிக்கியோ பயணத்தில் வந்ததால் களைப்பாக இருக்கிறது என்று கூறி தன் அறைக்குள் வந்து படுக்கையில் குப்புறை படுத்தவளோ, இவ்வளவு நேரம் அடக்கி வைத்த அழுகையெல்லாம் தன்னவனை நினைத்து அழுது கொட்டியவள் அப்படியே உறங்கியும் போனாள்.

 

சிறிது நேரத்தில் விழிப்பு வந்தவளுக்கோ வெளியே செல்லவே விருப்பமில்லை இருப்பிணும், எவ்வளவு நேரம் தான் அறையிலே அடைந்து கிடப்பது, 

 

இதனால் வீட்டில் உள்ளவருக்கு சந்தேகம் வந்து விடுமே என்று நினைத்தவள் வேறு வழியின்றி குளியல் அறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்தி ஆடை மாற்றிவிட்டு தன் சோகத்தை உள்ளுக்குள் மறைத்துவிட்டு வெளியே வந்தவளோ, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட அமர்ந்தாள்.

 

அவள் அமர்ந்ததும், அவளுக்கு சாப்பாடு பாரிமாறிய அத்தையோ, அவளின் மாமாவான தன் கணவருக்கு கண் ஜாடை காட்டி எதையோ பேச சொல்ல, அதை உணர்ந்த அவரும் கண்களை மூடி திறந்து பேசுறேன் என்று தலையாட்டியவரோ குரலை செருமிக்கொண்டு “நிக்கிமா” என்று அழைக்க

 

“சொல்லுங்க மாமா”

 

“ஒன்னும் இல்லடா.. ஏற்கனவே சொன்னேன்ல உன்ன பொண்ணு பாக்க மாப்பிளை வீட்டுல இருந்து வருறதா சொல்லி இருந்தாங்கன்னு… நாளைக்கு நல்ல நாளா இருக்கு நாளைக்கே வந்து பாக்குறோம்ன்னு சொல்லிட்டாங்கடா”

 

“எப்போ வராங்க மார்னிங்கா ஈவ்னிங்கா”

 

“காலைல தான் வருவாங்க”

 

“அப்போ சரி.. அத்தை நாளைக்கு.. நான் என்ன புடவ கட்டணும்ன்னு பாத்து செலக்ட் பண்ணி நைட் என் ரூம்ல வச்சிருங்க” என்று கூறி சாப்பிட்டு முடித்தவளோ தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

 

 

அவள் பதிலை கேட்டு திருப்தி அடைந்த இருவரும், மறுநாள் மாப்பிளை வீட்டை வரவேற்பதற்காக செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தொடங்கினர்.

 

இப்படியே அன்றைய பொழுது கழிய மறுநாள் காலையில் கண் விழித்தவளுகோ, இன்று தன்னை பொண்ணு பார்க்க மாப்பிளை வருவதாக அவள் மாமா கூறியது நினைவிற்கு வர சங்கடத்துடன் எழுந்து காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு வேறு உடையில் வெளியே வந்தவளின் கண்ணில், அவள் அத்தை அவளுக்காக எடுத்த வைத்த புடவையோ 

 

 

தன்னவன் தனக்காக தோழியின் திருமணத்தில் வாங்கி கொடுத்த, அதே புடவை என்றதும் அந்த புடவையை கையில் எடுத்து பார்த்தவளுக்கு அன்று அவன் செய்த குறும்புகள் நினைவிற்கு வர, அதை நினைத்து கொண்டு இருந்தவளை நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தது என்னவோ,

 

அவள் அறை கதவு தட்டும் சத்தம் தான், அதை கேட்டு கதவை திறக்க வெளியே நின்ற, அவள் அத்தையோ “என்னமா இன்னும் ரெடியாகம இருக்க.. இன்னும் கொஞ்சம் நேரத்துல மாப்பிளை வீட்டுல இருந்து வந்திருவாங்க.. சீக்கிரம் ரெடியாகு” என்று கூறி சென்றுவிட்டார்.

 

அவள் சென்றதும் கதவை தாழிட்டுவிட்டு உள்ளே வந்து வேறுவழியின்றி புடவை கட்டி தன்னை சிறிய ஒப்பணையில் அலங்கரித்து தயாராகியவளோ அவர்களின் வருகைக்காக காத்து கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரத்தில் மாப்பிளை வீட்டியிலிருந்து வந்தவர்களை மரியாதையுடன் வீட்டினுள் வரவேற்ற அவளின் மாமாவோ அவருடன் அமர்ந்து பேசி கொண்டிருக்க, அதற்குள் பெண்ணியின் கைகளில் வந்தவர்களுக்கான தேனீரை கொடுத்து அவளின் அத்தை அழைத்து வர, மெல்லமாக நடந்த வந்த பெண்ணவளோ அங்கு உள்ளவர்களை கண்டு உறைந்து நிற்க, அவளின் தோலில் கைவைத்த அத்தையோ “என்னமா பாத்துட்டு நிக்குற.. முத எல்லாருக்கும் காபி கொடு”

 

அதை கேட்டு, அனைவருக்கும் தேனீரை கொடுத்துவிட்டு சிறிதும் தயங்காதவளோ “நான் மாப்பிளை கிட்ட தனியா பேசணும்” என்று கூறி அவள் அறைக்குள் சென்றாள்.

 

அதை கேட்ட மாப்பிளையோ, அனைவரின் சம்மததுடனும் பெண்ணவளை காண அவளின் அறைக்குள் வந்து பெண்ணின் எதிரே குறுநகையுடன் மார்பின் குறுக்கே கைகட்டி நின்றவனோ

 

“ஏதோ பேசணும்ன்னு வர சொல்லிட்டு அமைதியாவே இருக்க”

 

“முத.. இங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா”

 

“இது என்ன கேள்வி.. எங்க வீட்டுல இருந்து எல்லாரும் உன்ன பாக்க உங்கவீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்காங்க”

 

“பிளீஸ் புகழ்.. என்ன இரிட்டேட் பண்ணாம உண்மைய சொல்லு.. என் மாமாகிட்ட என்ன சொல்லி என்ன பொண்ணு பாக்க வந்த”

 

“நான் எதுவும் சொல்லலையே..”

 

“பொய் சொல்லாத.. நீ எதுவும் பண்ணாம தான் இதெல்லாம் நடக்குதா”

 

“எதுவும் சொல்லன்னு தான் சொன்னேன்.. பண்ணலன்னு சொல்லலேயே” என்று கிண்டல் தோணியில் கூறும், அவனை தீயாய் முறைத்தாள்.

 

அதை கண்டவனோ “சரி சரி முறைக்காத சொல்றேன்.. நீயும் என்ன லவ் பண்றேன்னு தெரிஞ்சது அப்புறம் என்னால உன்ன விட்டு கொடுக்க முடியல அதான் என் அப்பாவிட்டு உன் மாமாகிட்ட பேச வச்சேன்”

 

“உங்க அப்பாவ பேச வச்சியா”

 

“ஆமா.. நீ ரெஸ்ட்ல இருந்த ஒன் மந்த் இடையில ஒருநாள் சரணி வந்து என்கிட்ட எல்லா உண்மையையும் சொன்னா”

 

“என்ன உண்மை”

 

“உன்னோட மாமாவோட பொண்ணு காலேஜ் படிக்கும் போது யாரையோ லவ் பண்ணி ஓடி போனதால.. நீயும் அப்படி போயிடுவீயோங்கிற பயத்துல நான் பாக்குற பையன் தான், நீ கட்டிக்கணும்ன்னு உன் மாமா, உன்கிட்ட நீ காலேஜ் போகிற முன்னாடி சத்தியம் வாங்கினதா சொன்னா.. அப்புறம் நானும் புரிஞ்சிகிட்டேன்.. நீ என்ன வெறுத்ததுக்கு இதான் காரணம்ன்னு.. அடுத்து என் அப்பா வந்து உன் மாமாகிட்ட 

 

நான் புகழோட அப்பா.. இப்படி என் பையன பாக்க போன இடத்தில உங்க வீட்டு பொண்ண பாத்தேன் என்னோட மகனுக்கு பொருத்தமா இருப்பான்னு தோணுச்சு.. அதான் என் மகன்கிட்ட அட்ரஸ் கேட்டு உங்க வீட்டுக்கே பேசலாம் நேரா வந்துட்டேன்..

 

இன்னும் என் மகன்கிட்ட கூட இதபத்தி சொல்லல உங்ககிட்ட கேட்டுட்டு சொல்லாம்ன்னு சொல்லல.. நீங்க கூட என் பையன் பாத்துருப்பீங்க.. அதுக்கு மாமாவும் ஹான் தெரியுமே பாத்துருக்கேன்.. இருந்தாலும் சமந்தபட்டவங்க கிட்ட கேட்டு தான முடிவு பண்ண முடியும்.. அதுனால ஒரு நாள் பாத்து எங்கவீட்டுக்கு மாப்பிளைய கூட்டிட்டு பொண்ணு பாக்க வாங்கன்னு சொல்லிட்டாரு..

 

இப்போ.. நான் உன் மாமா பாத்தா மாப்பிளை தான் இப்போ உனக்கு பிராப்ளம் இருக்காது.. தட்ஸ் சால்வ்”

 

“நான் உன்ன லவ் பண்ணினது உண்மை தான் பட் அதுக்காக என் மாமாவ.. இப்படி ஏமாத்தி தான் நம்ம கல்யாணம் நடக்கணும் எந்த அவசியமும் இல்ல” 

 

“அதுக்காக.. நானும் நீயும் லவ் பண்றோம்ன்னு உண்மைய சொல்லி அவங்கள கஷ்டப்படுத்த சொல்லுறீயா”

 

“அதுக்கு தான் உண்மைய மட்டும் இல்ல பொய்யும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்றேன்.. நீயே யோசிச்சி பாரேன்.. என்னோட மாமா நினைச்சிருந்தா… என்னையும் என் தங்கச்சியையும் அனாத ஆசிரமத்துல சேத்து விட்டிருக்கலாம்.. ஏன் நடு தெருவுல கூட கண்டுக்காம விட்டிருக்கலாம்.. ஆனா நாங்க இப்போ இப்படி நிக்குறோம்ன்னா..

 

அதுக்கு.. என்னோட அத்தையும் மாமாவும் மட்டும் தான் காரணம்.. அப்படிபட்டவங்கள ஏமாத்தி தான் கல்யாணம் நடக்கணும்ன்னா கண்டிப்பா… இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க மாட்டேன்”

 

“அப்போ.. இதான் உன்னோட முடிவா”

 

“இது மட்டும் தான்.. என்னோட முடிவு” என்று கூறி வெளியே வர, அவளின் பின்னே வந்தவன் தன் தந்தையின் அருகே அமர்ந்து கொண்டான்.

 

இப்போது புகழின் தந்தையோ “என்னமா.. என் பையன் கிட்ட நல்லா பேசுனீயா.. பிடிச்சி இருக்கா” என்று கேட்க,

 

அவள் கூறுவதற்குள் புகழே “இல்ல அப்பா.. எனக்கும் இந்த பொண்ணுக்கும் செட்டாகது.. இதுக்கு மேல பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்.. வாங்க போகலாம்” என்று எழுந்தவன் நிக்கியின் மாமாவிடம் “சாரி மாமா.. அப்பா வற்புறுத்தி கூப்பிட்டதால தான் வந்தேன் மத்தபடி நிக்கியும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் தான்.. உங்கள கஷ்டப்படுத்திருந்தா மன்னிச்சிருங்க” என்று கூறி தன் தந்தை அழைத்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்.

 

அவன் சென்றதும் அறைக்குள் சென்றவள் தன் நிலையை கண்டு கதறி அழுதாள்.

 

தொடரும்….

 

                                   – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

      1. Author

        Dei உன் ஆளுக்காக romva urukkatha da nyame illa da 😜😜