Loading

மயங்கி சரிந்த இருவரையும் இழுத்து வந்து நிக்கியின் எதிரே இரண்டு நாற்காலி போட்டு, அவர்களை அதில் அமர வைத்து இருவரையும் அசைய கூட முடியாதபடி கட்டி போட்டார்கள்.

 

தன்னேதிரே மயங்கி கிடப்பவர்களை கண்டு பதறிய நிக்கியோ “டேய் புகழ் எந்திரிடா.. அண்ணா எந்திரிங்க” என்று மாறி மாறி கத்தி கொண்டிருக்க,

 

அப்போது வெளியே சென்று வந்தவனோ “ஏய் கத்தாதடி.. அவனுங்க என்ன செத்தா போயிட்டானுங்க” என்று கூறி, இருவரின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, அதில் மயக்கம் களைந்து விழித்த இருவரும் தங்கள் எதிரே நிற்பவனை கண்டு அதிர்ந்து விழித்து “அவினாஷ்..” என்று ஒருசேர அழைத்தார்கள்.

 

அதை கேட்டவனோ “ஹலோ மச்சான்ஸ்.. இன்னும்.. என்ன ஞாபகம் வச்சிருக்கீங்கன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.. சரி.. வந்தது வந்துட்டீங்க நாளைக்கு என் கல்யாணத்த பாத்துட்டு போங்க.. பொண்ணுக்கூட உங்களுக்கு வேண்டபட்டவ தான்” என்று கூறி,

 

நிக்கியின் அருகே வந்தவன் கையில் கட்டியிருந்த கயிறு விட்டு விட்டு சுற்றி இருந்த கயிறை மட்டும் அவிழ்த்து விட்டு, அவளை இழுத்து தோல் மேல் கைபோட்டு நெருக்கமாக நின்றவனோ “இவ தான் நாளைக்கு எனக்கு பொண்டாட்டியாக போறவ.. எங்க ஜோதி பொருத்தம் எப்படி இருக்கு” என்று கேட்டுக்கொண்டிருக்க, பெண்ணவளுக்கோ, அவனின் நெருக்கம் எரிச்சலை உண்டு பண்ண, அவனை தன்னிடமிருந்து விலக்க முயற்சி செய்து கொண்டு தான் இருந்தாள், இருந்தாலும் அவனின் பிடியில் பெண்ணவளால் நகர கூட முடியவில்லை,

 

அப்போது எதற்சியாக திரும்பியவனின் கண்ணில் சாருபட, அவள் நிலை கண்டு பதறியவனோ “மதி.. கண்ணு முழிச்சு பாருடி.. எந்திரிடி.. அவள என்னடா பண்ணின”

 

“ஓ.. இது உன்னோட ஆளா.. பயப்படாத அவளுக்கு ஒன்னும் இல்ல.. நாளைக்கு அவளுக்கு வேலை அதிகமா இருக்கும்.. அதான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா”

 

அதை கேட்ட புகழோ “டேய்.. உனக்கு பகை எங்க மேல தான.. அவளுங்க என்னடா பண்ணினாங்க.. அவளுங்கள விடு”

 

“வலிக்குதோ.. இப்படி தான எனக்கும் வலிச்சிருக்கும் அஞ்சு வருஷம்.. நீங்க மட்டும் என்ன காட்டிக்கொடுக்காம இருந்திருந்தா.. இந்நேரம் நானும் உங்கள மாதிரி போலீஸா இருந்திருப்பேன்.. நீங்க பண்ணினது தான் இப்போ பகையா வளந்து.. உங்கள பண்ணுது”

 

“இதெல்லாம் நீ பண்ண தப்புக்கான தண்டனை.. அதுக்காக நீ எக்ஸம்ல என் கண்ணு முன்னாடி பிட் அடிப்ப.. அத தப்புன்னு தெரிஞ்சி பாத்த என்னால எப்படி உன்ன காட்டிக்கொடுக்கமா இருக்க முடியும்.. அப்படி மட்டும் நான் பண்ணிருந்தா.. அப்போவே.. நான் போலீஸ் ஆகுற தகுதியவே இழந்திருப்பேன்”

 

“சரி தான்.. ஆனா.. இப்போ இவள இழந்திரு”

 

“அவ தான்டா என்னோட உயிரு.. அவ இல்லாத வாழ்க்கைய என்னால வாழவே முடியாது”

 

“ஓ அப்போ செத்துரு.. ரொம்ப கஷ்டப்பட்டுலாம் வாழ வேண்டாம், நானே என்கையாலயே உன்ன கொன்றுவேன்.. அதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம் சொல்லவா.. என் டார்லிங்யோட தங்கச்சிய கிட்டனப் பண்ணினது அப்புறம் நடந்த எல்லாமே.. நானும் என் டார்லிங்கும் போட்ட பிளான் தான்.. என்ன டார்லிங் சொல்லிடவா” என்று கூறி அவளின் கன்னத்தை வருட, அதில் கடுப்பானவள் தப்பிக்க எதாவது வழி இருக்கிறதா என்று சுற்றி நோட்டமிட்டு கொண்டிருக்க,

 

அவனோ “புரியலயா.. விளக்கமாவே சொல்றேன்.. நீ என்ன காட்டி கொடுத்த.. அதுக்கு.. அப்புறம் அஞ்சு வருஷம் ஜெயில் வாழ்க்க முடிஞ்சி யாரும் இல்லாத அனாதையா நடு தெருவுல நின்னேன்.. அப்புறம் தான் இந்த பொண்ணுங்கள கடத்திற தொழிலுக்குள்ள ஒருத்தர் மூலமா போனேன்.. தொழில் தப்பு தான் இருந்தாலும் அப்போ என் அம்மாக்கு ரொம்ப மோசமான உடல்நிலை ஹாஸ்பிட்டல் செலவு எதுக்குமே காசு இல்ல..

 

அதான் வேற வழியில்லாம இந்த தொழில கைல எடுத்துட்டேன் லாபம் நிறையா வந்துச்சு அம்மாக்கு டிரிட்மெண்ட் கூட நல்ல தான் போயிட்டு இருந்துச்சு தீடீர்ன்னு இறந்துட்டாங்க… 

 

அடுத்து.. இந்த தொழில் மூலமா நல்ல வளந்துட்டுட்டே வந்தேன்.. அப்புறம் தான் உனக்கு பெங்களூர்ல போஸ்ட்ன்னு தெரிஞ்சிது அதான் நம்ம தொழிலவச்சி உன்கூட கேம் விலையாடலம்ன்னு வந்தேன்.. வந்த இடத்தில தான் என் டார்லிங் மேல கண்டதும் காதல் வந்துச்சு.. கொஞ்சம் நாள் என் ஆட்கள விட்டு அவள பாலோ பண்ண சொன்னேன்..

 

சரி, இவள கல்யாணம் பண்ணிகிட்டு இந்த தொழில விட்டுட்டு வேற ஏதாவது வேலைக்கு போய்… இவகூட சந்தோஷமா வாழனும்ன்னு நினைச்சேன் 

 

அப்போ தான் நீ என்னோட காதலுக்கு குறுக்க நிக்கிறேன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.. அப்புறம் தான் பிளான் பண்ணி டார்லிங்யோட தங்கச்சிய தூக்கிட்டு.. என் டார்லிங்க்கு ஒரு கால் பண்ணி, உன் தங்கச்சி உயிர் முக்கியம்ன்னா நான் சொல்லுறத பண்ணுன்னு சின்னதா பயம்காட்டி மீதி பிளான் என்னோட டார்லிங்கையே பண்ண வச்சேன்.. இப்போ புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்று கூறி முடிக்கவும்,

 

அவனை தள்ளிவிட்ட நிக்கியோ, சிறிது தூரம் கிடந்த சரக்கு பாட்டிலை தன் கட்டபட்ட கைகளால் எடுத்து, அதை சுவற்றியில் இடித்து பாதி உடைத்தவள் தன் கழுத்தில் வைத்தவாறு

 

“பக்கத்துல வந்த என் கழுத்த.. நானே அறுத்துப்பேன்” என்று கூறி, புகழின் அருகே வந்து அவனின் சுத்தி கட்டிருக்கும் கயிறை தன் கையில் இருக்கும் மதுபான பாட்டில் கொண்டு அறுத்து அவிழ்க்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

 

அவளின் மிரட்டலில் பயந்தவனோ, எங்கே அவளை அவளே காயபடுத்தி விடுவளோ என்று அவள் மேல் உள்ள காதலால் அவளின் அருகே செல்லாமல் தள்ளி நின்றவனோ, அவளை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தவனின் கண்ணில், அப்போது சாரு தென்பட,

 

இன்னொரு மது பாட்டிலை பாதியாக உடைத்து கொண்டு,  எடுத்து வந்து சாருவின் எதிரே நின்றவனோ “இங்க பாரு டார்லிங்.. நீ உன் கைல உள்ளத கீழ போட்டுட்டு என் பக்கத்துல வரலேன்னா.. உன் பிரெண்ட் கழுத்துலயே சொருக்கிடுவேன்”

 

அதை கண்ட வேலனோ “டேய் அவினாஷ்.. அவள எதுவும் பண்ணிடாதடா”

 

அவன் கூறியதை காதில் வாங்காதவனோ “டார்லிங்.. என் பொறுமைய ரொம்ப சோதிக்குற.. ஒழுங்கா இந்த பக்கம் வந்துரு.. சொன்ன கேட்க மாட்ட.. இதுக்கு மேல பேசி பிரோஜனம் இல்ல.. ஆக்சன் தான்” என்று கூறி, அவளை குத்த வர 

 

அதை கேட்டு புகழை சுற்றியிருந்த கயிறை பாதி அவிழ்த்து விட்டவளோ அவனின் செயலை கண்டு பதறி தோழியை காப்பாற்ற நினைத்து அவனை தடுக்க சென்றதில் பெண்ணவள் வயிற்றில், அந்த கண்ணாடியை சொருகிவிட்டான்.

 

அந்த பாதி கண்ணாடி மதுபான பாட்டிலை வயிற்றில் வாங்கியவளோ “புகழ்..” என்று கத்தியவாறே கீழே சரிந்தாள்.

 

அதற்குள் மீதி கயிற்றில் இருந்து வெளியே வந்தவனோ தன்னவனின் நிலை கண்டு “டேய்..” என்று கற்சித்து, தன் பின்புறம் சட்டையை தூக்கி பின்னே மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 

 

இரண்டு குண்டை அவினாஷின் நெஞ்சிலே இறக்கிவிட, அந்த வலியில் துடித்தவனின் உயிரோ அந்த நொடியே பிரிந்தது,

 

அதை கண்டு சுற்றியிருந்த ஆட்கள் அவனை தாக்க, இரண்டு மூன்று பேரை சுட்டுவிட்டு வேலனின் சுற்றி இருக்கும் கயிறை அவிழ்த்து விட, வேலனோ “மச்சான்.. நீ முத சிஸ்டர தூக்கிட்டு ஹாஸ்பிட்டல் போ மத்ததெல்லாம்.. நான் பாத்துக்கிறேன்”

 

அதை கேட்டு தன்னவளை கையில் ஏந்தி காரில் ஏறியவனோ மருத்தமனையை நோக்கி சென்றான்.

 

போகும் வழியில் அவளின் கன்னம் தட்டி “பார்ட்னர்.. என்ன பாருடி.. என்ன விட்டுட்டு போயிடாதடி.. உனக்கு ஒன்னும் இல்ல..” என்று பேசிக்கொண்டே மருத்துவமனைக்குள் வந்தவன், ஸ்ட்ரெச்சரில் தன்னவளை கிடத்தி தீவிர சிகிச்சை அறை வரை தள்ளிக்கொண்டு வந்தவன், அவளை உள்ளே அனுப்பிவிட்டு தலையில் கைவைத்து கதறி அழுது கொண்டிருக்க, பாரியோ “டேய் புகழ்.. தைரியமா இரு.. நிக்கிக்கு ஒன்னும் ஆகாது” என்று அவனுக்கு ஆறுதல் கூறி உள்ளே நுழைந்து அவளுக்கான சிகிச்சையை தொடங்கினான்.

****************************************

 

புகழ் சென்றதும் மயங்கி இருக்கும் தன்னவளின் அருகில் வந்து முகத்தில் தண்ணீர் தெளிக்க, அதில் மயக்கம் களைந்து எழுந்தவளோ எதிரே இருந்த தன்னவனை கட்டிக்கொண்டு அழுதாள்.

 

தன்னிடம் இருந்து அவளை பிரித்து அவள் கன்னம் ஏந்தி கண்ணீர் துடைத்தவனோ “மதி.. ஒன்னும் இல்லைடா ரிலக்ஸ்.. முத தண்ணி குடி” என்று கூறி தண்ணீரை குடிக்க கொடுத்தான்.

 

தண்ணீர் குடித்து முடித்தவளோ “வேலா.. நிக்கி எங்க.. நிக்கி ஓகே தான” 

 

அதை கேட்டு நடந்த அனைத்தையும் அவளிடம் கூற, அதை கேட்டு மேலும் அழுதவளோ “நம்ம உடனே ஹாஸ்லிட்டல் போகலாம் வேலா வாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அவளுக்கு எதுவும் ஆகாதுல வேலா”

 

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மதி.. நீ அழாத.. நம்ம ஒரு பத்து நிமிஷத்துல ஹாஸ்பிட்டல் கிளம்பிடலாம்” என்று கூறியவனோ,

 

தன்னைவிட பெரிய அதிகாரியான சாருவின் தந்தைக்கு அழைப்பு விடுத்து நடந்ததை கூறிவிட, அதை கேட்டவரோ இரண்டு காவலாளி அனுப்பிவிடுவதாகவும் மீதி செய்ய வேண்டியவற்றை தான் பார்த்து கொள்வதாகவும் கூறியாதால், அவர் அனுப்பிய காவலாளி வரும் வரை காத்திருந்தவன், வந்ததும் தன்னவளை அழைத்து கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.

***************************************

 

சிகிச்சை முடித்து வெளியே வந்த பாரியோ “டேய்.. புகழ் நிக்கி இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்.. என்ன கண்ணாடி பாட்டில் ஆழமா இறங்குனதுனால காயம் ஆழமா இருக்கு.. ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்க கூடாது.. கொஞ்சம் நாள் ஜூனியருக்கு கம்பீலிட் ரெஸ்ட் தேவை.. இன்னும் கொஞ்சம் நேரத்துல மயக்கம் தெளிஞ்சதும்.. நார்மல் வார்டுக்கு சேஞ்ச் பண்ணிடுவோம்.. அதுக்கு அப்புறம் நீ போய் பாக்கலாம்”

 

அதை கேட்டு சகோதரனை கட்டி அணைத்தவனோ “தேங்க்ஸ்டா பாரி.. அப்புறம்.. சரண் எங்க.. அவ ஓகே தான”

 

“அவ ஓகே தான்.. அவள ரஞ்சியோட வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டேன்.. ஜூனியர் பத்தி கேட்டா.. உன் விஷயமா புகழ் கூட வேலையா போயிருக்கான்னு சொல்லிருக்கேன்.. அப்புறம் மீதி பொண்ணுங்களும் நம்ம வீட்டுல தான் இருக்காங்க”

 

“சரிடா.. இப்போதைக்கு சொல்ல வேணாம்.. வீட்டுக்கு போனதும் பாத்துக்கலாம்.. வேலன் கிட்ட சொல்லி மித்த பொண்ணுங்க டிட்டைல்ஸ் கலெக்ட் பண்ண சொல்றேன்” என்று கூறிக்கொண்டிருக்க, அப்போது மருத்துவமனைக்கு வேலனோட வந்த சாருவோ “அண்ணா.. நிக்கிக்கு ஒன்னும் இல்ல தான”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. காயம் மட்டும் ஆழமா இருக்கிறதுனால ஒன் மந்த் கம்பீலிட் ரெஸ்ட் தேவை படும்.. அவ்வளவு தான்” என்று கூறிவிட்டு வேலனிடம் “டேய் மச்சான்.. சரணியோடு சேத்து… இருந்த நாலு பொண்ணுங்கள அவங்க அவங்க வீட்டுக்கு இன்பாம் பண்ணி அனுப்பிடு”

 

“ம்.. நான் பாத்துக்கிறேன் மச்சான்” என்று கூறி, அந்த பணியை காண தொடங்கினான்.

***************************************

 

சிறிது நேரம் கழித்து நிக்கி கண்விழிக்க அவளை சாதாரண அறைக்கு மாத்தியதும் முதலில் அவள் கண்டது தன்னவனை தான், உள்ளே வந்தவனோ அவள் அருகில் இருந்த நாற்காலியில் சோகமாக அவளின் கரம் பற்றி அமர்ந்திருக்க,

 

அதை கண்டவளோ “உன் காதல் உண்மை தான் போல.. அதான் போயிடும்ன்னு நினைச்ச என்னோட உயிர் திரும்ப வந்திடுச்சு போல.. ஆனா எனக்கு உன்மேல எந்த பீலும் வரல.. பட் உனக்காக ஒன் மந்த் டைம் தாரேன்.. அதுக்குள்ள என்னோட மனச மாத்திட்டேனா.. ஓகே.. இல்லன்னா நீ என்ன டிஸ்டர்ப் பண்ண கூடாது.. அதுக்குள்ள மாத்திவிடுவியா என்ன” என்று அவனை கண்ணடிக்க,

 

அதை கண்டு புன்னகைத்தவனோ “அதான் என்னோட காதல் உண்மைன்னு நீயே சொல்லிட்டியே.. அப்புறம் என்ன.. என்ன நடக்க போகுதுன்னு வெயிட் பண்ணி தெரிஞ்சிக்கலாம்”

 

“ஐ அம் வெயிட்டிங்” என்று கூறினாள்.

 

இப்படியே சிறிது நேரம் கதைத்து முடிக்க, அடுத்து ஒவ்வொருவராக, அவளை கண்டு நலம் விசாரித்து சென்றனர்.

 

மூன்று நாட்கள் மருத்துவமனையில் ரஞ்சி புகழ் சாரு என்று மூவரும் அவளை மாறி மாறி பார்த்து கொண்டனர்.

 

மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்ததும், இவளின் நிலை கண்டு பதறிய ஷிவானியையும் சரணியையும் ஒருவழியாக சமாதானம் படுத்திய புகழோ, தன்னவள் அருகில் இருந்து அவளுக்காக அனைத்தையும் செய்தான்.

 

உடை மாற்றவும் கழிப்பறை செல்லும் போது மட்டுமே தங்கை அல்லது தோழியை உதவிக்கு அழைப்பாள். மற்றபடி அவளுக்காக சமைப்பதில் இருந்து சாப்பாடு ஊட்டி மாத்திரை கொடுத்து இடையில் அவளுக்காக பழசாறு செய்து கொடுப்பது, அவளுக்கு நேரம் போகவில்லை என்றால் அவளிடம் கதைத்து சிரிக்க வைப்பது என்று அவளை பாத்து பாத்து கவனித்துக்கொண்டு ஒரு மாதத்தை ஓட்டி விட்டான்.

 

ஒரு மாதம் கழிந்திருக்க பெண்ணவளும் முழுவதுமாக குணமாகி வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டாள்.

 

வழக்கம் போல் வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தவளை கண்டவனோ “பார்ட்னர்.. இன்னைக்கு செமயா இருக்கடி” என்று கூறி,

 

அதை கண்டுகொள்ளாமல் செல்லும் பெண்ணவளின் கையை பற்றினான்.

 

“டேய்.. கைவிடு எனக்கு டூட்டிக்கு டைம் ஆயிடுச்சு”

 

“மாட்டேன்.. எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரியாம.. நீ இங்கிருந்து போக முடியாது” என்று கூறிகொண்டிருக்க,

 

அவளின் திறன் பேசி அலறியது, அதை எடுத்தவளுக்கு, அழைத்தது தன் மாமா என்று கண்டதும் பெண்ணவளின் முகம் வாட,

 

அதை கண்டவனோ, அவளிடமிருந்து திறன் பேசியை பிடுங்கி அழைப்பை ஏற்று “ஹலோ மாமா.. நான் புகழ் பேசுறேன்”

 

“எப்படி இருக்கீங்க தம்பி.. நிக்கி இப்போ எப்படி இருக்கா..”

 

“எல்லாரும் நல்ல இருக்கோம் மாமா.. என்ன விஷயம்”

 

அவர் விஷயத்தை கூறியதும், அதை கேட்டு முக வாடியவனோ திறன் பேசியை அவளிடம் நீட்டினான்.

தொடரும்…

                                    – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment