Loading

கோவமாக அறைக்குள் சென்றவனை சமாதானம் செய்வதற்காக, அவன் பின்னே வந்தவளோ “பிளீஸ் புகழ்.. புரிஞ்சுக்க எப்படியாவது சரணிய காப்பாத்தனும்.. அதுக்கு டைமும் இல்ல இதவிட்டா வேற ஆப்ஷனும் இல்ல”

 

“உனக்கு.. என்மேல நம்பிக்கை இல்லையாடி”

 

“உன்மேல இருக்கிற நம்பிக்கைல தான் நானே.. இதுல இறங்குறேன்னு சொல்றேன்”

 

“எனக்கு என்னமோ.. இது சரியா வரும்ன்னு தோணல”

 

“இங்க பாரு புகழ்.. இத பண்றவன் யாரு எப்படி இருப்பான் எங்க இருப்பான்னு.. எதுவுமே தெரியாது.. ஏன் அவன கண்டுபிடிக்கவும் நேரம் இல்ல.. நம்ம லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் சரணிக்கு தான் ரிஸ்க்.. நான் இதுல இறங்குறதுனால சரணி மட்டும் இல்லாம அவள மாதிரி எத்தன பொண்ணுங்க மாட்டி இருக்காங்களோ.. அவங்களையும் சேத்து சேப் பண்ணலாம்”

 

அதை கேட்டும், அவன் பேசாமல் அமைதியாக இருப்பவனை கண்ட பெண்ணவளோ அவன் கரத்தை இறுக பற்றி “புகழ்.. என்மேல உனக்கு இருக்குற காதல் உண்மைன்னா.. கண்டிப்பா எனக்கு எதுவும் ஆகாம உன்னால காப்பாத்த முடியும்”

 

அதை கேட்டு ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவனோ “ம்.. நாளைக்கு ஒருநாள் மட்டும் ஷிவானி அம்மா வர சொல்லி ஷிவானிய பாத்துக்க சொல்லலாம்”

 

அதை கேட்டு, அவனை அணைத்தவளோ “தேங்க்ஸ்டா புகழ்” என்று கூற,

 

அவனோ “ஐ லவ் யூ டி பார்ட்னர்” என்று கூறி, அவள் நெற்றியில் இதழ் பதிக்க, அதை கண் மூடி பெண்ணவளும் வாங்கிகொண்டாள்.

 

மறுநாள் காலையில் அனைவரிடமும் நிக்கியுடன் பேச வந்தவனோ “காய்ஸ்.. எனக்கு வேற வழி தெரியல.. அதுனால நிக்கி சொன்ன ஐடியாவே எஸ்க்கியூட் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்..” என்று தயங்கி தயங்கி கூறியவனை கண்ட வேலனோ 

 

“மச்சான்.. பேசி டைம் வேஸ்ட் பண்ணாம யார் யார் என்ன பண்ணனும்ன்னு மட்டும் சொல்லு”

 

அதை கேட்டவனோ, அவர்களிடம் தன் திட்டத்தையும் அதில் யார் யார் என்ன செய்ய வேண்டும் என்றும் கூறி முடித்தவன், வேலனை ஒரு வேலையாக வெளியே அனுப்பிவிட்டு நேராக மூவரையும் கட்டி வைத்திருந்த அறைக்கு வந்து ஒருவனின் மூக்கில் ஓங்கி குத்திவிட்டு திறன்பேசியை அவன் கையில் கொடுத்து

 

“டேய்.. இப்போ ஒழுங்கா உன் பாஸ்க்கு போன் போட்டு.. இதோ இவள தூக்கிட்டோம்ன்னு சொல்லி, அடுத்து என்ன பண்ணனும்ன்னு கேக்குற” என்று நிக்கியை கை காட்டி கூற,

 

அதை கேட்டு அழைப்பை விடுத்து ஒலிபெருக்கியை அழுத்தியவன் “பாஸ்.. அந்த டாக்டர் பொண்ண தூக்கிட்டோம்”

 

 

“ம் வழக்கம் போல் இறக்க வேண்டிய இடத்தில இறக்கிருங்க.. மத்த பொண்ணுங்கள விட.. அந்த பொண்ணு ரொம்ப ஸ்பெஷல் டா பாத்து ஜாக்கிரதையா கூட்டிட்டு வாங்க” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.

 

 

அதை கேட்டு நெற்றியை நீவியன் “டேய்.. இன்னும் அரைமணி நேரத்தில கிளம்புறோம்.. ரெடியா இருங்கடா” என்று கூறிவிட்டு, வெளியே வந்து சோஃபாவில் அமர்ந்தவனோ வேலனின் வருகைக்காக காத்து கொண்டிருந்தான்.

 

 

அவன் வந்ததும் அனைவருடனும் அந்த அறைக்கு வந்தவன் “என்னங்கடா ரெடியா.. கிளம்பலாமா”

 

தான் கூறியதை கேட்டு தலையாட்டியவர்களை கண்டவனோ “மச்சான்.. அத எடு”

 

“இதோ மச்சான்” என்று தான் வாங்கிக்கொண்டு வந்த, காலில் அடிப்பட்டிருப்பவனின் முக மூடியை புகழின் முகத்தில் பொருத்திவிட, தனக்கு சரியாக இருக்கிறதா என்பதை கண்ணாடியின் மூலம் உறுதிபடுத்தியவனோ

 

“என்னங்கடா பாக்குறீங்க அவனுக்கு தான் காலுல அடிபட்டிருக்குல.. அவனுக்கு எதுக்கு கஷ்டம்ன்னு அவனுக்கு பதிலா அவனாவே நான் வாரேன்.. அவன் இங்க இருப்பான்” என்று கூறி இருவரை மட்டும் அவிழ்த்து விட்டவனோ “டேய்.. முகத்த கழுவிட்டு.. இவன் கொடுக்குற சட்டைய மாத்திட்டு வெளிய வாங்கடா” என்று கூறி நிக்கியின் அருகே வந்தவனோ

 

“ரஞ்சி.. இஞ்ஜெக்சன் போடு” என்று கூறியதும் பெண்ணவளோ அவனின் கரத்தை இறுக பற்றி கொள்ள, 

 

 

அதை உணர்ந்தவனோ, அவள் கரத்தை தட்டிக்கொடுக்க, அதற்குள் ரஞ்சியோ ஊசியை அவள் உடம்பில் செலுத்த, அதில் பெண்ணவளும் மயக்க நிலைக்கு சென்றுவிட்டாள்.

 

அதே நேரம், அவனுடன் செல்லும் மீதி இருவரும் வந்துவிட இருவரையும் அவர்கள் காரில் முன்னே ஏற சொல்லியவன், அவளை கையில் ஏந்தி பெண்ணவளுடன் காரின் பின் புறம் ஏறி அனைவரிடமும் தன் தலையாட்டி விடைபெற காரும் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி புறப்பட்டது.

 

அவர்கள் சென்றதும் வேலன் சாரு ஒரு காரிலும், பாரி வேறொரு காரிலும் அவர்களை பின் தொடர, ரஞ்சி மருத்துவமனைக்கு சென்று அனைத்தையும் தயாராக வைத்து அவர்களுக்காக காத்து கொண்டிருந்தாள்.

 

 

மூன்று மணிநேரத்தில், அவர்கள் வர வேண்டிய இடத்திற்கு வந்துவிட காதில் உள்ள காது மொட்டு மூலம் “பாரி.. மச்சான்.. ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கோங்க இப்போ நாங்க உள்ள போயிடுவோம்.. என்ன நடக்குதுன்னு பாத்துட்டு இன்பார்ம் பண்ணுவேன்.. அப்புறம் நீங்க வந்தா போதும்.. கார இருக்கிற இடத்துக்கு கொஞ்சம் தள்ளியே ஸ்டாப் பண்ணுங்க.. அப்போ தான் யாருக்கும் டவுட் வராது” என்று கூறிக்கொண்டிருக்க,

 

வண்டியோ செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ளே சென்று நிற்க, அங்கு உள்ளவர்கள் வண்டியை பரிசோதித்துவிட்டு தான் உள்ளே அனுப்பினார்கள்.

 

உள்ளே வந்ததும் மூவரும் காரை விட்டு இறங்கி நிற்க, உள்ளே இருந்து வேறொரு இருவர் வந்து அவர்களை காத்திருக்கும் படி கூறிவிட்டு நிக்கியை தூக்கி கொண்டு ஒரு அறைக்குள் செல்ல, அவர்கள் உள்ளே செல்லும் வரை நோட்டமிட்டவனோ, மற்றொரு அறையில் இருந்து ஒருவன் சரணியை தூக்கி கொண்டு தன்னேதிரே வருவதை குழப்பமாக கண்டவன், 

 

பாரி மற்றும் வேலனை தயாராக இருக்கும் படி கூறிவிட்டு, அவர்கள் அருகில் வரும் வரை அவர்களையே கேள்வியாக பார்த்து கொண்டிருந்தான்.

 

அவளை தூக்கி வந்தவன் புகழின் முகத்திலிருந்த முக மூடியை கிழித்துவிட்டு சரணியை, அவன் கையில் கொடுக்க யோசனையாக புருவத்தை உயர்த்தி அவளை கையில் வாங்கியவனோ “வாங்க டா” என்று கூறிவிட்டு கையில் சரணியை தாங்கியவாறே தன் முக மூடியை கிழித்தவனை ஓங்கி மிதிக்க, அதில் அங்குள்ளவர்கள் அவனை சூழ்ந்து கொள்ள, அதற்குள் பாரி வேலனும் வந்துவிட, மூவரும் சேந்து அனைவரையும் அடித்து நொறுக்கினார்கள்.

 

****************************************

 

அந்த இடத்தை விட்டு சிறிது தூரம் தள்ளி காரினுள் இருந்த சாருவோ, அவளுக்கு சிறிது தூரம் முன்னே நிற்கும் காரை கண்டு சந்தேகித்தவளோ தானிருக்கும் காரில் இருந்து வெளியே வந்து மறைந்து நிற்க,

 

அங்கே ஒரு இடத்திலிருந்து இருவர் நிக்கியை தூக்கி கொண்டு வந்து காரில் ஏற்றியதை கண்டவள், அவர்கள் சென்று முன்னே ஏறுவதற்குள், சாருவோ வேகமாக சென்று காரின் டிக்கிக்குள் ஏறிக்கொள்ள காரும் நகர ஆரம்பித்தது, டிக்கியில் இருந்த சாருவோ மெல்லமாக டிக்கியை திறந்து திறன்பேசி மூலமும் தன்னுவனக்கும் புகழுக்கும் விஷயத்தை பகிரி மூலம் தெரிவித்தவளோ, மறுபடியும் டிக்கியை மூடிக்கொண்டாள்.

 

சிறிது நேரத்தில் கார் நின்றதை உணர்ந்த சாருவோ டிக்கியை மெல்ல திறந்து தான் இருக்கும் இடத்தை பார்த்தவளோ, தனக்கு எதிரே சிறிது தூரம் தள்ளி நாற்காலியில் மயங்கி அமைந்திருந்த தன் தோழியை கண்டு கொண்டிருக்க, அப்போது கார் அருகில் யாரோ வருவதை கண்டு மறுபடியும் டிக்கியை மூடி கொண்டாள்.

 

****************************************

 

ஒருவழியாக அனைவரையும் அடித்து நொறுக்கிவிட்டு சரணியை கையில் ஏந்தியவாறு நிக்கியை தூக்கி சென்ற அறையை எத்தி மிடித்து உள்ளே சென்றவனோ, அவள் இல்லை என்ற ஏமாற்றத்துடன் வெளியே வந்து சரணியை, பாரியின் கையில் ஒப்படைத்துவிட்டு

 

“டேய் பாரி.. சரணியோட சேத்து.. இங்க இருக்கிற மத்த நாலு பொண்ணுங்களையும் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிடு.. நான் நிக்கிய கூட்டிட்டு வாரேன்” 

 

அதை கேட்டு மறுப்பு தெரிவிக்காத பாரியோ, சரணியுடன் அங்கிருந்த மத்த பெண்களையும் தூக்கி காரில் ஏற்றி, அவர்களை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

 

பாரியை அனுப்பிவிட்டவனோ தலையில் கை வைத்து அமர்ந்திருக்க,

 

அதை கண்ட வேலனோ “டேய் மச்சான்.. என்னாச்சிடா.. நிக்கி எங்க”

 

“டேய்.. அவள இந்த ரூமுக்கு தான்டா கூட்டிட்டு போனாங்க.. ஆனா.. இப்போ போய் பாத்தா அவ அங்க இல்லடா.. எனக்கு பயமா இருக்கு.. அவள எங்கன்னு தேடுறதுன்னு கூட எனக்கு தெரியலடா.. இப்படி.. அவள தொலைசிட்டேனேடா” என்று வேலனை அணைத்து அழுதேவிட்டான்.

 

அழும் நண்பனை அணைத்தவனுக்கோ அவனை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்க,

 

அப்போது புகழின் திறன்பேசி அலறியது, புது எண் என்பதால் கேள்வியாகவே அழைப்பே ஏற்றவன் “ஹலோ” என்று கூற,

 

மறுமுனையில் இருந்து “ஹலோ மிஸ்டர் புகழ் வேந்தன்.. சாரி போலீஸ் புகழ் வேந்தன்.. எப்படி இருக்கீங்க.. வந்த வேலை எல்லாம் முடிஞ்சுதா”

 

வந்த வேலை எல்லாம் முடிஞ்சுதா என்று அவன் கேட்டதும் உணர்ந்துவிட்டான் நடந்த பிரச்சினைக்கு காரணம் இவன் தான் என்று அறிந்த புகழோ “டேய் யாருடா.. நீ.. ஆம்பளன்னா என்கிட்ட நேருக்கு நேரா மோதுடா பாப்போம்”

 

“டேய்.. போதும்டா பஞ்ச் டயலாக்க ஸ்டாப் பண்ணிட்டு.. உன் ஆள தேடுற வழிய பாருடா.. பெரிய இவனாட்டம் எல்லாரையும் காப்பத்துறேன்னு.. உன் ஆள கோட்ட விட்டுட்டு நிக்குறீயே வெக்கமா இல்ல.. உனக்கு இன்னைக்கு ஒன்டே டைம் அதுக்குள்ள கண்டு பிடி.. இல்லன்னா அவ உன்கிட்ட கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.. சீக்கிரம் கண்டு பிடிச்சி வா.. ஐ அம் வெயிட்டிங் பார் யூ” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டான்.

 

இப்போது வேலனோ “டேய் யாருடா பேசினா”

 

“எல்லாத்துக்கும் இவன் தான்டா காரணம்..  முடிஞ்சா இன்னைக்கே நிக்கிய கண்டு பிடின்னு சவால் விடுறான்னாடா” என்று கூறியவாறே திறன்பேசியை பார்த்தவனின் கண்ணில் சாருவின் செய்தி பட, அதை பார்த்தவனோ வேலனிடம்

 

“டேய் மச்சான்.. சாரு தான்டா மெசேஜ் பண்ணிருக்கா.. நிக்கிய இப்போ கூட்டிட்டு போற காரு டிக்கில யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு இருக்காலாம்.. லொகேஷன் கூட அனுப்பிருக்கா” 

 

வேலனோ “சீக்கிரம் வாடா.. நம்ம வெயிட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் ரெண்டு பேருக்கும் ஆபத்து தான்” 

 

இருவரும் காரில் ஏறி, அவள் அனுப்பிய வாழிக்காட்டி மூலம், அந்த இடத்தை நோக்கி சென்றார்கள்.

 

**************************************

 

சிறிது நேரம் கழித்து யாராவது காரின் அருகே நிக்கிறார்களா என்பதை உறுதி படுத்தி டிக்கியை மெல்லமாக திறந்தவளோ நிக்கி பக்கத்தில் யாரோ வருவதை கண்டு என்ன நடக்க போகிறது என்று பயந்தவாறே கவனித்தாள்.

 

மயக்க நிலையில் நாற்காலியில் கட்டி போடப்பட்டிருக்கும் நிக்கியை ரசித்து பார்த்தவாறே வந்தவனோ முதலில் தண்ணீர் தெளித்து அவள் மயக்கத்தை கலைக்க, அதில் கண் விழித்து தான் இருக்கும் இடைத்தை சுற்றி பார்த்தவளோ, தன் எதிரே தன்னை விழுங்கும் பார்வை பார்ப்பவனை பார்வையால் சுட்டெரித்தாள்.

 

அதை கண்டவனோ “டார்லிங்.. சாரிடா.. உன்ன ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்ல.. இருந்தாலும்.. உன்ன என்கிட்ட கூட்டிட்டு வர.. இதவிட்டா வேற வழி எனக்கு தெரியல.. அப்புறம் டார்லிங்.. நான் சொன்ன மாதிரியே உன் தங்கச்சிய நல்லபடியா திருப்பி கொடுத்துட்டேன்”

 

“டேய் யாருடா.. நீ.. உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்.. என்ன வச்சி என்னடா பண்ண போற”

 

“இது வரைக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. நாளைக்கே எனக்கு நீ சம்மந்தம் ஆயிடுவ.. உனக்கு புரியுற மாதிரி சொல்லணும்ன்னா நமக்கு கல்யாணம்”

 

அதை கேட்டு சத்தமாக சிரித்த பெண்ணவளை கண்டவனோ “என்னடி சிரிக்கிற”

 

“இல்ல.. கல்யாணம்ன்னு சொன்னீயா.. அதான் சிரிப்பு வந்துடுச்சு.. சாரி.. பட் கனவு காண்கிறதுக்கு ஒரு அளவு வேண்டாமா”

 

“என்னடி.. உன் ஆள் வந்துருவான்னு திமிருல பேசுறீயா.. அவனாலாம் வந்து ஒரு மயிரும் புடுங்க முடியாது”

 

“ஒரு டாக்டரா எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.. ஓவர் கன்பிடன்ஸ் உடம்புக்கு நல்லது இல்ல..”

 

“நல்லா தான்டி பேசுற.. இருந்தாலும் நமக்கு கல்யாணம் எப்படி நடக்கும்ன்னு உனக்கு ஒரு டெமோ காட்டுறேன்” என்று கூறியவன், சாரு இருக்கும் காரின் டிக்கியை திறந்தவனோ, அவள் முடியை கொத்தாக பிடித்து இழுத்து வந்து நிக்கி எதிரே வந்து நிற்க,

 

அவளோ “டேய்.. அவள விடுடா.. அவள எதுவும் பண்ணிடாத”

 

“அது எப்படி பண்ணுவேன் டார்லிங்.. இவ இருந்தா தான நாளைக்கு நமக்கு கல்யாணம் நடக்கும்” என்று கூறி சாருவின் கழுத்தில் ஊசியை இறக்கி அவள் மயங்கியதும் ஓரமாக அவளை அமர வைத்தவன் 

 

“இங்க பாரு டார்லிங்.. அவளுக்கு நாளைக்கு தான் வேலையே இருக்கு.. சோ இன்னைக்கு ரெஸ்ட் எடுக்கட்டும்ன்னு ஜஸ்ட் மயக்க ஊசி தான் போட்டிருக்கேன்.. நாளைக்கு நீ நடந்துக்குறதுல தான் இவ உயிரோட இருக்கணுமா வேண்டாம்ன்னு யோசிப்பேன்.. நீயும் ரெஸ்ட் எடு.. அதுக்குள்ள ஒரு வேலைய முடிச்சிட்டு வரட்டா டார்லிங்” என்று கூறிவிட்டு அங்கிருந்த அடியாட்களிடம் “டேய்.. அண்ணிய பத்திரமா பாத்துக்கோங்க டா” என்று கூறி சென்றான்.

 

****************************************

ஒருவழியாக சாரு கொடுத்த விலாசத்தை கண்டு பிடித்து, அவ்விடத்திற்கு வந்த இருவரையும் பின்னே நின்றவாறு அங்கிருந்த அடியாட்கள் அவர்களின் கழுத்தில் மயக்க ஊசியை சொருக இருவரும் நின்ன இடத்திலே மயங்கி சரிந்தார்கள்.

 

தொடரும்…

                                   – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Dei yar da nee aiyo charu unnaiyum Avan pudichitane.. ivanungalum sikkiranungala