இப்படியே நேரங்கள் கடக்க சிறிது வேலையை முடித்துவிட்டு, அவளின் அறைக்கு வந்தவள் கீழே கிடந்த தன் பையை எடுத்து மேலே வைக்கும் போது கண்ணாடி பக்கத்தில் இருந்த மேசையில் ரோஜாவுடன் சாக்லேட் இருப்பதை கண்டு,
அதை எடுக்க, அதற்கு கீழ் “ஐ லவ் யூ டி பார்ட்னர்” என்று எழுதிருப்பதை கண்டவள்,
“கொய்யால, இந்த மாதிரி வேலைய எவன் பாத்தான்னு தெரியல, அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும் அப்புறம் சட்னி தான்” என்று மனதிற்குள் நினைத்துவிட்டு திரும்பியவள் அதிர்ந்தவாறு “நீயா” என்று கேட்க, அதற்கு, அவன் “ஹே ரிலாக்ஸ் எதுக்கு இப்போ ஷாக் ஆகுற”
“நீ எதுக்கு என்னோட ரூமுக்கு வந்த”
“அதுவா, நீ என்ன தேடுன மாதிரி என் மனசுக்குள்ள தோணுச்சு, அதான் என் பார்ட்னர பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்”
“எத பார்ட்னரா” என்று கேட்டவாறு மேசையில் எழுதிருந்ததை ஒரு பார்வை பார்த்துவிட்டு “அப்போ, இது சாரோட வேல தானா”
“அட பரவாயில்லயே இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டியே”
“ஏன் டா, இப்போ தான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னால, நான் தான் மயக்க பாக்குறேன், அது இதுன்னு உன் இஷ்டத்துக்கு பேசுன, இப்போ என்னடானா கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம புரோப்போஸ் பண்ற”
“இப்போவும், அததான் சொல்லுறேன் பார்ட்னர், நீ தான் என்ன மயக்குன சத்தியமா உன்ன பாத்த, அந்த நிமிஷத்துலயே நீ தான் என் பொண்டாட்டின்னு முடிவு பண்ணிட்டேன், உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு லைப் லாங் உன்கூட இருக்க ஆசைப்படுறேன், ஐ லவ் யூ பார்ட்னர், அப்புறம் பார்ட்னர் நீ அவசரபட்டுலாம் உன் முடிவ சொல்ல வேண்டாம், மெதுவா யோசிச்சு ஓகே சொன்னா போதும் அதுவர ஒரு லவ்வரா உன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டியது என்னோட கடம”
“என்னது ஓகே சொல்லணுமா அதுக்குலாம் வாய்ப்பே இல்ல, இப்போ சொல்றேன் கேட்டுக்கோ எனக்கு உன்மேல எந்த விருப்பமும் இல்ல இனியும் வராது தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்ணாம இங்கிருந்து கிளம்பு” என்று கூறி, சாக்லேட்டையும் ரோஜாவையும் தூக்கி எறிய,
அதில் கோபமடைந்தவன், அவள் கையை இறுக்கமாக பிடித்து தன் அருகே இழுத்தான், அவனின் பிடியிலிருந்து கை எடுக்க முயற்சி செய்தும், அவளால் முடியவில்லை அவன் பிடி உடும்பு பிடியாக இருந்தது, இப்போது அவன்
மேலும், அவளை தன்னருகில் இழுத்து “ஏய் உன் கழுத்துல தாலின்னு ஏறுனா, அது என்கையால மட்டும் தான் ஏறும், உன்ன அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் ஞாபகம் வச்சிக்க” என்று கடுமையான குரலில் கூறிவிட்டு அறையைவிட்டு வெளியே சென்றான்.
“என்ன பைத்தியம் மாதிரி பேசுறான் முதல, என்ன பத்தி என்ன தெரியும்ன்னு லவ் பண்றான் இன்னும் ரெண்டு நாளோ மூணு நாள்லோ அதுவர தான் என்ன அவன் பாத்துக்க முடியும், அது அவனுக்கு புரியுதா இல்லையா” என்று, எது எதையோ கூறி புலம்பியவாறு வெளியே சென்றாள்
இப்படியே நேரங்கள் கழிய, இரவு கல்யாணம் பெண்ணுக்கு மருதாணி வைப்பு நடந்தது மணமகன் மணமகளுக்கு மருதாணி வைத்துவிட அவர்களை சுற்றி இருவரின் நண்பர்கள் அவர்களை கிண்டலடித்து பேசியவாறு இருந்தார்கள்.
ஆனால், அனைவரும் சிரித்து பேசி கொண்டிருக்க அவன் மட்டும் நிக்கித்தாவையே பார்த்தவாறு திறன்பேசியை காதில் வைத்து தள்ளி சென்றான்.
இப்போது நிக்கித்தாவின் திறன்பேசி அலற புது எண் என்பதால் யோசனையுடனே அழைப்பை ஏற்று “ஹலோ” என்றாள், மறுமுனையில் இருந்து “ஹலோ பார்ட்னர், இது தான் என்னோட நம்பர் சேவ் பண்ணிக்க”
“டேய், என் நம்பர் எப்படி டா, உன்கிட்ட” என்று கத்த “சொல்றேன் அதுக்கு முன்னால உன் ரூமுக்கு வா, அங்க தான் இருக்கேன், நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்றேன்”
“நீ கூப்பிட்டதும்லாம் என்னால வர முடியாது, இந்த நேரத்துல என் ரூமுக்கு ஏன் போன”
“அதுவா உனக்கு தேவையான ஒன்னு என்கிட்ட இருக்கு, அத கொடுத்துட்டு போலாம்ன்னு தான், உன் ரூம்ல வெயிட் பண்றேன் சீக்கிரம் வந்துரு” என்று கூறி அழைப்பை அணைத்தான்.
“என்னால வர முடியாது, நீ முடிஞ்சத பாத்துக்க டா” என்று திறன்பேசியை தன் முகத்திற்கு நேராக வைத்து கூறிவிட்டு மறுபடியும் நண்பர்களுடன் இணைந்தாலும் “உனக்கு தேவையான ஒன்னு என்கிட்ட இருக்கு” என்று அவன் கூறியது மட்டும் மாறி மாறி ஒலிக்க
“என்னாவா இருக்கும், ஒருவேள நான் அவன பாக்க வரணும்ன்னு பொய் சொல்லுறானா, நிக்கி எதுக்கு இப்படி குழப்பிக்குற ரூமுக்கே போயிட்டு வந்துருறலாம்” என்று நினைத்தவள் யாரும் அறியாதவண்ணம் அங்கிருந்து எழுந்து, அவள் அறை நோக்கி சென்றாள்.
அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டவன் உள்ளே வந்ததும் “நீ என்ன பாக்க வருவேன்னு, எனக்கு தெரியும் பார்ட்னர்”
“நான் ஒன்னும் உன்ன பாக்க வரல என்னோட பேக்ல ஒரு திங்ஸ் எடுக்க வந்தேன்” என்று கூறி சமாளித்தவாறு அவளின் பையில் ஏதோ தேடி எடுப்பது போன்று எடுக்க,
அப்போது தான், தன் பையில் வைத்திருந்த கோப்பு இல்லை என்பதை அறிந்தவள் சற்று பயத்துடன் அந்த கோப்பினை பையிலும் அந்த அறை முழுவதும் சுற்றி தேடியவள், அது இல்லையென்ற சோகத்தில் படுக்கையில் அமர்ந்தாள்.
அதை கண்டவன் “ஏய் என்னாச்சி பார்ட்னர், ஒரு மாதிரி டல்லா இருக்க”
“என்னோட முக்கியமான பைல் ஒன்னு காணும், எங்க போச்சுன்னு தெரியல”
“எப்படி தெரியும் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பேக்க வீசிட்டு போனா, காணாம போகாம என்ன பண்ணும்”
“என்ன சொல்ற”
“ஆமா, நீ தேடுற பைல் என்கிட்ட தான் இருக்கு, நான் ரூமுக்கு வரும் போது அந்த பைல் கீழ கடந்தது அதான் சேபா இருக்கட்டும்ன்னு நான் எடுத்து வச்சிருக்கேன்”
பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவள் “எப்பா இப்போ தான் எனக்கு உயிரே வந்துச்சு, அப்போ இததான் எனக்கு தேவையான ஒன்னு உன்கிட்ட இருக்குன்னு சொன்னீயா”
“ஆமா” என்று தலையை ஆட்டினான்.
“சரி பைல் கொடுத்துட்டு ரூமவிட்டு கிளம்பு, அப்புறம் யாராவது பாத்தா தப்பா ஆயிடும்”
“பைல் தான தாரேன் ஆனா, அதுக்கு முன்னாடி என்னோட கண்டிஷன்ஸ்க்கு நீ ஒகே சொல்லணும்”
“என்ன கண்டிஷன்ஸ்”
“அதுவா வெளிய மாப்பிள்ள பொண்ணுக்கு மெஹெந்தி வைக்கிறது பாக்கும் போது, எனக்கும் ஆசையா இருக்கு அதான் நான் உனக்கும் மெஹந்தி போட்டுவிடலாம்ன்னு வந்தேன்”
“ம்ம் அதுக்குலாம் வாய்ப்பே இல்ல”
“அப்போ, நான் பைல் தருறதுக்கும் வாய்ப்பே இல்ல”
“அய்யோ திமிருபிடிச்சவன் படுத்துறானே, போயும் போயும் இவன்கிட்டயா வந்து மாட்டனும்” என்று நினைத்தவள் “சரி ஒகே ஆனா, என்னோட அந்த பைல் உன்கிட்ட தான் இருக்குங்குறத, நான் எப்படி நம்புறது”
அதை கேட்டவன் தன் திறன்பேசியில் அவளின் கோப்பினுள் இருந்த முதல் பக்க புகைபடத்தை அவளிடம் காண்பித்தான்.
வேறு வழியின்றி தன் இரு கைகளையும் நீட்ட அவனும் தன்னவளுக்கு ஆசையாக மருதாணி போட்டுவிட்டான்.
இப்போது அவளுக்கு மருதாணி போட்டு கொண்டிருந்தவனிடம் “அது என்னடா பிஎன்”
“அதுவா உன்னோட நேம் என்னோட நேமோட பஸ்ட் லெட்டர்” என்று வெக்கபட்டு கூறினான்.
அவளுக்கு தன் கோப்பு கிடைத்தால் போதுமென்ற எண்ணத்தில் அவன் பெயரை கூட கேட்க, தோணாதவளாய் உள்ளுக்குள் அவனை அர்ச்சித்து கொண்டிருந்தாள்.
ஒருவழியாக, அவளுக்கு மருதாணி போட்டு முடித்தான்.
இப்போது அவள் “ஏய் நீ சொன்ன மாதிரி மருதாணி போட்டாச்சுல என் பைல கொண்டா”
“என்ன பார்ட்னர் அதுக்குள்ள அவசரபட்டா.. எப்படி , இந்தா இத முத புடி” என்று கூறி, அவள் மடியில் பார்ஸலை வைத்தான்.
இப்போது நிக்கி “இது என்னடா” என்று கேட்க,
“அட பிரிச்சி பாருடி பார்ட்னர்” என்று கூறிவிட்டு, அவள் கையில் மருதாணி இருப்பதால் அவனே அதை பிரித்து காட்ட, அதில் ஒரு அழகான புடவை இருக்க, அதை கண்டவள் “எதுக்கு இதெல்லாம்”
“புடவ எதுக்கு தருவாங்க கட்டத்தான்”
“அது எனக்கு தெரியாத, நீங்க எனக்கு எதுக்கு புடவ வாங்கிதரீங்க”
“இது என்னடி கேள்வி, என்னோட பார்ட்னருக்கு நான் வாங்கி தராம யாரு வாங்கி தருவா..நீ என்ன பண்ற நாளைக்கு கல்யாணத்துக்கு இந்த புடவை தான் கட்டிட்டு வரணும் அப்படி இல்லன்னா உன்னோட பைல மறந்துற வேண்டியதுதான் வரட்டா பார்ட்னர்” என்று அவள் கன்னம் தட்டி கூறிவிட்டு அறையை விட்டு சென்றான்.
அவன் சென்றதும் “சீக்கிரம், இந்த கல்யாணம் முடிஞ்சதும் பைல வாங்கிட்டு அவன் கண்ணுல படமா கிளம்பிடனும்” என்று கூறி, அவன் கொடுத்த புடவையை ஒரு பார்வை பார்த்தவள்.
அதை ஓரமாக வைத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலையில் எழுந்தவள், காலை கடன்களை முடித்து குளித்து வேறு ஆடையில் வெளியே வந்தவள் மனமின்றி படுக்கையில் இருந்த, அவன் தனக்கு தந்த புடவையை எடுத்து கட்டிக் கொண்டு வந்தவள் கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்தவாறு “பரவாயில்ல எனக்கு ஏத்த மாதிரி தான் எடுத்து இருக்கான்” என்று கூறி கொண்டிருக்க,
அப்போது, அவள் அறைக்கு வந்த சாரு “ஏய் நிக்கி இப்படியே எவ்வளவு நேரம் பைத்தியம் மாதிரி தனியா பேசிட்டு இருப்ப சீக்கிரம் வந்து தொலையேன்”
“சரி சரி கோவப்படாத, நான் ரெடி தான் போலாமா”
“ஏய் எனக்கு தெரியாம எப்போ டி புது புடவ எடுத்த , என்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லல”
அதற்கு நிக்கி “எனக்கே தெரியாது” என்று உளறிவிட ,
அதற்கு சாரு “என்ன டி சொல்லுற”
“ஆமா டி, இது அத்தையோட புடவ அவங்க பேக்ல வச்சது எனக்கே தெரியாது அததான் சொன்னேன்”
“சரி டி இந்த புடவ உனக்கு ரொம்ப அழகா இருக்கு” என்று கூறி தன் தோழிக்கு திருஷ்டி முறித்தவள், அவளை கூட்டி கொண்டு மணப்பெண்ணின் அறைக்கு சென்றாள்.
மணமேடையில் இருந்த அய்யர் மணப்பெண்ணை அழைக்க தாமதிக்காமல் திரும்பிய ஆடவனோ தன்னவள் எப்போது வருவாள் என்று விழி மேல் விழி வைத்து காத்திருந்தான்.
தொடரும்..
– ஆனந்த மீரா
Super super 👍
Enna ivan avakooda varushakanakka irukka pola pesittu irukkan.
Appadi antha file la enna irukkum 🤔🤔🤔
Wait panni pakkalam granny ❤️❤️thank you
அடேய் நீ ரொம்ப தான் அவளுக்கு ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்க இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிக்க போற. அப்படி என்ன இருக்கு அந்த பெயரில் ஏன் அவன் சொல்றதுக்கு எல்லாம் இவ சரின்னு சொல்லி செய்துட்டு இருக்கா?
Pakkalam akka, thank you ❤️❤️
Dei dei.. nee over speed la poitu iruka da… Konjam nithanama po😂 oru file ya eduthu vachitu nee imbutu aluchatiyam pandra da.. ama kadasi Vara Avan peraiye solalala😂🤔 ennavaa irukkum… Super darling 😍 sekiram adutha episode podu😍
Name thana kudiya seekiram sollidalaam daarlu ❤️❤️thank you ma ❤️❤️
Dei Avan vachrukrathu ore oru file . Un hero atha vachutu romba panran da…
File kidaichathu heroine avana kilika pora paaru…
Ivan roooomba fast ah poran… Dei pora speed la vizhunthu vaaratha da … Aprm mooku vaai la penthuda pohuthu… Then feel aah poidum…
Kathai super ah pohuthu da… Keep it up 😍
Thanks di thangachi ❤️❤️
Ada paithiyakara hero saar. Avala follow panriya da bodysoda. Yarune theriyatha un kita ava ipdi thana da react panna midiyum. Ithuku kovappata kaal ana ku projanam ila da thambi 😂. Evalavu vegam. Ipa thana patha athukula pudavaiya la eduthu vechirka 😲. Superu dr ❤️. Intha loosu payaluku konja heroine bavusu kaatividu😂😂. Adutha ud ku waiting dr❤️
Kaatidalaam chellam, thank you ❤️❤️