Loading

 

பாகம் – 18

நிக்கியுடன் எல்லாம் இடமும் ஷிவானியை தேடி சுற்றி திரிந்தவனின் வண்டி வயல் நிறைந்த இடத்தின் அருகே பஞ்சராகி நிற்க,

 

அதில் கடுப்புடன் “ஷிட்” என்று வண்டியை காலால் உதைத்து கொண்டிருந்தவன் செவியில் “விட்ருங்க பிளீஸ்” என்று கதறும் சத்தம் கேட்க, அதை கூர்ந்து கவனித்தவன் நிக்கிக்கும் சைகை காட்டி கேட்க சொல்லிய 

 

அதே நேரம், அவர்கள் இருந்த இடத்திற்கு சாருவுடன் வந்த வேலனோ “என்னாச்சி.. ஏன்.. இங்க நிக்குறீங்க” 

 

அதை கேட்டவன் வாயில் விரல் வைத்து “ஷு” என்று துப்பாக்கி எடுத்து கொண்டு மெதுவாக பின்னே வரும்படி கைகளால் சைகை காட்டி முன்னே நடக்க, அவனின் பின்னே துப்பாக்கியுடன் சென்ற வேலனை தொடர்ந்து பெண்கள் இருவரும் சென்றனர்.

 

வயலை கடந்தவர்கள், சிறிது தள்ளி இருக்கும் காலி இடத்திலிருந்த வெளிச்சம் கண்டு நால்வரும் அவ்விடத்தை நோக்கி செல்ல,

 

 

அவ்விடத்தில் ஒருவன் சிறுமியை சீரழிப்பதை கண்ட புகழுக்கு கண்கள் சிவந்து கை முறுக்கேர ஓங்கி, அந்த அரக்கனை எத்தி மிதித்தான்.

 

வலியில் அந்த அரக்கன் கொடுத்த சத்தத்தில் மீதி இருவரும் சுதாகரித்து ஓட முற்படுவதை கண்ட வேலனோ ஓடி சென்று ஒருவனின் முடியை கொத்தாக பிடித்து இழுத்தவன், தன்னிடம் பிடிபடாமல் ஒடும் மற்றொருவனின் காலை துப்பாக்கியால் பதம் பார்க்க, வலியில், அதற்கு மேல் ஓட தெம்பில்லாதவனோ கீழே சரிந்து விழுந்தான்.

 

இப்போது பேச்சு மூச்சில்லாத சிறுமியை காக்க எண்ணி அருகில் வந்த இரு பெண்களுக்கும் தூக்கிவாரி போட, இடிந்து விழுந்த சாருவோ அச்சிறுமியை கண்டு கதறி அழ, மறுபக்கம் அதிர்ச்சி தாங்காத நிக்கியோ “புகழ்..” என்று கத்திவிட்டாள்.

 

அதை கேட்டு மூனு பேரையும் அவர்கள் காரிலே கட்டி போட வேலனிடம் சொல்லிவிட்டு வந்து அச்சிறுமியை கண்டு அதிர்ந்தவனுக்கு ஷிவானி என்றதும் கை கால்கள் ஆட்டம் கொடுக்க, என்ன செய்வது என்று செய்வதறியாமல் நின்றவன் முதலில் ஷிவானிக்கு இதய துடிப்பு இருக்கிறதா என்பதை அறிந்து, உயிர் இருக்கிறது என்று தெரிந்ததும் அவளை கையில் ஏந்தி மூவரையும் கட்டி வைத்த காரின் அருகே ஓடியவன் வேலனிடம் “டேய் கார எடு” என்று ஏறியவன் நிக்கி மற்றும் சாருவையும் அழைக்க, அவர்களும் ஏறி கொண்டனர்.

 

போகும் வழியில் பாரிக்கும் ரஞ்சிக்கும் தகவல் கூறி மருத்துவமனையில் தயாராக காத்திருக்கும்படி கூற,

 

இருவரும் அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு அவர்களுக்காக காத்து கொண்டிருந்தனர்.

 

மருத்துவமனையை வந்த அடைந்ததும் ஷிவானியை கையில் ஏந்தி ஸ்ட்ரெச்சரில் கிடத்தி தீவிர சிகிச்சை அறை வரை தள்ளி கொண்டு வந்தவனை கண்டு, வெளியேவே நிற்க சொல்லிய பாரியோ “ஜூனியர்.. உள்ள வாங்க” என்று உள்ளே நுழைந்துவிட்டான்.

 

ஆனால், அவள் இருந்த அதிர்ச்சியில் அவன் கூறியது செவியில் விழுந்ததா என்பதே ஐயம் தான், தன்னை அக்கா அக்கா என்று தன்மேல் பாசமாக சுற்றி திரிந்த சிறுமியல்லவா, அவளுக்கு இப்படி ஒரு நிலை என்பதை நிக்கியால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உறைந்திருந்தாள்.

 

அவள் நிலை உணர்ந்து அவளருகில் வந்து அமர்ந்தவனோ தன் கரத்தால் அவள் கரத்தை அழுத்தி பிடித்து “பார்ட்னர்.. பாரி கூப்பிடுறான்.. உள்ள போ”

 

அதில் சுயநினைவுக்கு வந்தவளோ “நா.. நான் போ.. போ மாட்டேன்”

 

“எனக்கு.. உன் நிலமை புரியுது பட் பாரியால எப்படி தனியா ஹேன்டில் பண்ண முடியும்.. நீயும் அவனுக்கு சப்போட்டா இருக்கணும்ல.. பேஸ் வாஷ் பண்ணிட்டு போ.. ச் சொல்லுறேன்ல போ”

 

அதை கேட்டு கண்களை மூடி ஆழ்ந்த மூச்சொன்றை விட்டு கண்களை திறந்து எழுந்தவள் முகத்தை கழுவி கொண்டு பாரி ரஞ்சியுடன் இணைந்து ஷிவானிக்கான சிகிச்சையை கொடுக்க தொடங்கினாள்.

 

மருத்துவமனையில் அனைவரும் இறக்கி விட்ட வேலனோ, அதில் கட்டி போட்டிருந்த மூவரில் காலில் குண்டு அடிபட்டவனை உள்ளே அழைத்து வந்து அவனுக்கான சிகிச்சை முடித்து மறுபடியும் காரில் ஏற்றியவன் மூவருடன் புகழின் வீட்டை நோக்கி சென்றான். 

 

சில கைதிகள் ஸ்டேஷனில் வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று புகழுக்கு தோணும் பட்சத்தில், அவர்களை அழைத்து கொண்டு வந்து வீட்டியில் வைத்து விசாரிப்பதற்காகவே ஒரு தனி அறை வைத்திருப்பான். 

 

அந்த அறைக்குள் இவனையும் வேலனையும் தவிர யாரும் செல்ல மாட்டார்கள்.

 

இப்போது புகழ் வீட்டிற்கு வந்த வேலனோ அவர்கள் மூவரையும் இழுத்து கொண்டு அவ்வறையில் கட்டிவைத்துவிட்டு தப்பி செல்லமால் இருக்க, மயக்க ஊசியை அவர்களுக்கு போட்டுவிட்டவனோ கதவை நன்றாக அடைத்துவிட்டு மறுபடியும் மருத்துவமனைக்கு வந்து புகழிடம் போன வேலை முடிந்தது என்று தலையாட்டிவிட்டு அழுது கொண்டிருக்கும் சாருவை பார்த்தவாறே ஓரமாக நின்றான்.

 

இப்போது சிகிச்சை முடித்து வெளிய வந்த ரஞ்சியோ “ஷிவானி உயிருக்கு எந்த பிராப்ளமும் இல்ல பட் ப்ஷிகலாவும் மெண்டலாவும் கியூராக டைம் எடுக்கும்.. அது இவ்வளவு நாள் தான் ஆகும்ன்னு கன்பார்மா சொல்ல முடியாது.. பட் எல்லாரும் சேந்து முயற்சி பண்ணினா கண்டிப்பா அவள வெளிய கொண்டு வந்திரலாம்.. இப்போதைக்கு அன்கான்சியஸ்ல தான் இருக்கா.. உடனே கான்சியஸ் வரும்ன்னு சொல்ல முடியாது மே பீ டூ டேஸ் ஆகும்.. அதுக்கு முன்ன கூட வர வாய்பிருக்கு” என்று கூறி முடிக்கவும் தீவிர சிகிச்சை அறையிலிருந்து ஷிவானியின் நிலையை நினைத்தவாறே வெளிய வந்த நிக்கியோ மயங்கி விழ போக, அதற்குள் ஆடவன் அவளை தாங்கி அமர வைத்து தண்ணீரை முகத்தில் தெளித்து நினைவிற்கு கொண்டு வந்தவன் வேலனிடம்

 

“டேய் மச்சான்.. நிக்கிய வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.. நீ சாருவோட இங்க இருந்து பாத்துக்க.. அப்புறம் ஷிவானிகுட்டி வீட்டுக்கும் தகவல் சொல்லிடு.. தென் கான்சியஸ் வந்தா எனக்கு இன்பார்ம்” என்று கூறிவிட்டு, அவளுடன் வீட்டிற்கு சென்றான்.

 

அவள் சென்றதும் ஷிவானியின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்து தெரிவித்துவிட்டு சாருவின் அருகில் அமர்ந்தவனோ “மதி பிளீஸ்.. முத அழுறத ஸ்டாப் பண்ணு.. நீங்களே இப்படி உடஞ்சி போயிட்டீங்கன்னா பாப்பா எப்படி இதுல இருந்து வெளிய கொண்டு வர முடியும்”

 

அதை கேட்டு அவன் தோளில் தலை சாய்த்தவளோ “நீங்க சொல்லுறது சரி தான் வேலா.. பட் என்னால முடியல.. இருந்தாலும் டிரை பண்றேன்” என்று கூறினாள்.

 

**************************************

 

இப்போது நிக்கியுடன் வீட்டிற்கு அழைத்து வந்தவனோ, அவளை தன் அறையில் அமர வைத்துவிட்டு அவளுக்காக பழசாறு எடுத்துவந்து நீட்ட 

 

“இல்ல.. எனக்கும் எதுவும் வேண்டாம் புகழ்”

 

“பிளீஸ்.. கொஞ்சம் குடிடி” என்று வாயில் வைத்து, அவளை குடிக்க வைத்தவன் குடித்து முடித்ததும் டம்பளரை வாங்கி ஓரம் வைத்து அவள் கையை இறுக பற்றியவனோ “பார்ட்னர்… இனி ஷிவானி குட்டிய இதுலயிருந்து எப்படி வெளிய கொண்டு வரணும்ன்னு மட்டும் தான் யோசிக்கணும்.. அதவிட்டுட்டு நடந்தத நினைச்சி நீயே இப்படி இடிஞ்சி உக்காந்து இருந்தா அவள எப்படி வெளிய கொண்டு வர முடியும்”

 

“கான்சியஸ் வந்தப்புறம் அவ எப்படி பிகேவ் பண்ணுவா.. அத நம்ம எப்படி சமாளிக்க போறோம்ன்னு நினைச்சாலே பயம் இருக்குடா”

 

“பயபடாத பார்ட்னர்.. கண்டிப்பா அவள இதுல இருந்து வெளிய கூட்டிட்டு வந்திரலாம்.. ஆனா.. அதுக்கு முன்னால நீ நடந்தத மறந்து நார்மல் ஆகனும்.. உன்ன இப்படி பாக்க எனக்கு என்னமோ மாதிரி இருக்கு பிளீஸ் அழனும்ன்னா கூட அழுதுறுடி..”

 

இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகையை தன்னவனை இறுக்கி அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்து கொட்டி தீர்த்து அப்படியே சிறிது நேரத்தில் பாரம் குறைய உறங்கியும் போனாள்.

 

அவள் உறங்கியதை கண்ட ஆடவனோ மெல்லமாக தன்னிடமிருந்து அவளை பிரித்து மெத்தையில் கிடத்தியவனோ அவள் நெற்றியில் இதழ் பதித்து சோஃபாவில் சென்று படுத்து உறங்கினான்.

 

காலையில் விழிப்பு வந்து எழுந்தவளோ “புகழ்..” என்று கத்த 

 

அதை கேட்டு பதறி சோஃபாவிலிருந்து எழுந்து அவளருகில் வந்தவன் “ஏய் பார்ட்னர்.. என்னாச்சி” 

 

“புகழ்.. புகழ் அவனு..ங்க அவனுங்க.. எங்க”

 

“யாருடி”

 

“அதான் ஷிவானி.. இந்த நிலமைக்கு காரணமானவங்க”

 

“என்னோட கஸ்டடில தான் வச்சிருக்கேன்” 

 

“எங்க வச்சிருக்க… நான் உடனே அவனுங்கள பாக்கணும்.. அவனுங்க கிட்ட ஒருசில கேள்வி கேக்கணும்”

 

“நான் தான் பாத்துக்குறேன் சொல்றேன்ல.. நீ எதுக்கு டென்ஷனாகுற.. ரிலக்ஸ்”

 

“புகழ் புரிஞ்சுக்க.. ஷிவானிக்கு இப்படி நடக்குறது முன்னாடி அவனுங்க டார்கெட்.. நான் தான்”

 

“வாட்.. நீ அவனுங்க டார்கெட்டா..”

 

“ஆமா புகழ்.. கடந்த மூணு நாளா.. அவனுங்க என்ன தான் பாலோ பண்ணினாங்க.. ஆனா நேத்து அவனுங்க என்னோட பின்னாடி வரலன்னதும்.. எனக்கு தான் பாலோ பண்ணின மாதிரி தோணிருக்குன்னு நினைச்சி அப்படியே விட்டுட்டேன்.. ஆனா.. இதுனால பின்னால பிராப்ளம் வருமோன்னு தோணுது.. சீக்கிரம் அவனுங்க இருக்கிற இடத்துக்கு என்ன கூட்டிட்டு போ”

 

சிறிது யோசித்தவன் அவளை, அவர்கள் இருக்கும் அறைக்கு அழைத்து சென்று மயக்கத்தில் இருப்பவர்களை தண்ணீர் தெளித்து விழிக்க வைத்தவன் அவர்களுக்கு நேரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்து

 

“இங்க பாருங்கடா.. ஒழுங்கா நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டா.. நல்லது.. இல்லையா யோசிக்காம இப்போவே உங்க கதைய முடிச்சிட்டு போயிட்டே இருப்பேன்”

 

“இல்ல.. உண்மைய சொல்லிடுறோம்”

 

“சொல்லுங்க.. அந்த பிள்ளைய சிரழிக்குற அளவு அவமேல என்னடா பகை.. உங்களுக்கு”

 

“குழந்தைய மாத்தி தூக்கிட்டோம்.. அதான் பாஸ்.. அந்த பிள்ளைய கொழுத்திடு சாம்பல் கூட மிஞ்ச கூடாதுன்னு சொன்னாரு.. எப்படியும் சாக போறவ தானன்னு யூஸ் பண்ணிக்கிட்டோம்”

 

அதை கேட்டு கைமுறுக்கி கோவத்தை அடக்கியவன் மூன்றில் ஒரு திறன்பேசியை ஆராய்ந்தவாறு “அது சரி.. இவள எதுக்குடா பாலோ பண்ணீங்க” என்று நிக்கியை காட்டி கேட்க,

 

அவளை கண்டவர்கள் “இல்ல நாங்க.. இவங்கள பாலோ பண்ணல.. இவங்க யாருன்னு எங்களுக்கு தெரியாது”

 

அதில் கோவம் கொண்டு துப்பாக்கியை ஒருவனின் வாயில் வைத்து அழுத்தியவன் “நிஜமாலே.. நீங்க இவள பாலோ பண்ணலயா”

 

“அந்த பிள்ளைய கடத்துற முன்னாடி இவங்கள கடத்துறது தான் எங்க டார்கெட்”

 

இப்போது தன் கையிலிருந்த திறன்பேசியில் பாஸ் என்று பதிந்திருந்த எண்ணை அழுத்தியவனின் திறன்பேசி அலற அழைப்பு ஏற்று மறுபக்கம் பாரியோ “டேய் ஷிவானிக்கு கான்சிசியஸ் வந்து பயந்து கதறி அழுதா.. நாங்களும் சமாதானம் பண்ண டிரை பண்ணினோம் பட் முடியல அப்புறம் மயங்கிட்டா.. இப்போ நார்மல் வார்டுக்கு மாத்திட்டோம்.. மறுபடியும் மயக்கம் தெளியிறதுக்குள்ள வந்துருடா” என்று அழைப்பை துண்டித்ததும் 

 

நிக்கியிடம் நடந்ததை கூறியவன் கையில் உள்ள திறன்பேசியை மேஜையில் வைத்து கதவை அடைத்துவிட்டு அவளுடன் மருத்துவமனைக்கு விரைந்தான்.

 

தொடரும்..

                                       – ஆனந்த மீரா

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. யாரு அவங்க நிக்கிய ஏன் கடத்த முயற்சி பண்றாங்க??
      பாவம் ஷிவானிக்கு இப்படி ஆகி இருக்க வேணாம் ரொம்ப கஷ்டமா இருக்கு