அறைக்குள் வந்து அமர்ந்தவளின் மனசாட்சியோ “தப்பே பண்ணிருந்தாலும் மனுசன் திருந்தி வந்து மன்னிப்பு கேட்குறாரு.. அவர ஏன் நீ மணிக்க கூடாது.. சொல்லு”
“வேலன் சொன்ன மாதிரி உன்ன கட்டிக்கிறவன், நீ பாக்கிற வேல எனக்கு பிடிக்கலன்னு சொன்னா உனக்கு பிடிச்ச வேலை அவனுக்காக விட்ருவியா.. ஏன்.. அவன் மறுபடி மறுபடியும் அதே விஷயத்த டெய்லி சொன்னா.. உன்னால தான் அவன் கூட நிம்மதியா குடும்பம் நடத்த தான் முடியுமா.. ஒரு கட்டத்துக்கு மேல நீயே வெறுத்து அவன் வேண்டாம்ன்னு டிவோர்ஸ் பண்ணிட்டு வந்துருவ.. ஆனா.. உன் அப்பா இதெல்லாம் பொறுத்துகிட்டாரு தான.. டிவோர்ஸ் பண்ணலயே.. சொல்லு”
“தப்பு ரெண்டு பேரு பக்கமும் தான் இருக்கு.. அதுக்காக உன் அம்மா பக்கம் உள்ள நியாயத்த பார்த்து.. உன் அப்பா நீ வெறுக்கிறது நியாயமா.. சொல்லு” என்று மாறி மாறி கேள்விகள் எழுப்ப அதை கேட்டு பெருமூச்சு ஒன்றை விட்டு கதவை திறந்தவள் “அப்பா..” என்று ஓடி சென்று கட்டிக்கொண்டு அழுதவள் “அப்பா.. என்ன மன்னிசிடுங்க.. இதுவரைக்கும் அம்மா பக்கமா யோசிச்சு பாத்த நான் உங்க பக்கம் இருக்கிற நியாயத்த யோசிக்காம.. உங்கள வெறுத்து இத்தன நாளா கஷ்டபடுத்தி தப்பு பண்ணிட்டேன்ப்பா.. ஐ அம் சாரிப்பா”
அதை கேட்டு, அவள் கன்னம் ஏந்தியவரோ “நீ எந்த தப்பும் பண்ணலடா.. இதெல்லாம் நடக்கணும்ன்னு வீதி இருந்திருக்கு அதான் நடந்துட்டு.. அதுக்கு நீ என்னடா பண்ணுவ.. விட்டுடுடா இனி பழச நினைச்சி.. உன்ன நீயே கஷ்டபடுத்திக்காத” என்று மாறி மாறி ஆறுதல் கூறி பாசம் போராட்டம் நடந்து கொண்டிருக்க, அவருக்கு தனிமை கொடுக்க, அழைத்து வந்த இருவரையும் வேலன் நன்றி கூறி வழியனுப்ப வெளியே சென்றான்.
அவர்கள் சென்றதும் புகழோ தன்னவளை தூக்கி கொண்டு, அவள் அறைக்குள் சென்று படுக்கையில் அமர வைத்து அவளருகில் அமர்ந்தவனோ “எதுக்கு இப்படி.. பாக்குற”
“நீ பாட்டுக்கு.. உன் இஷ்டத்துக்கு தூக்கிட்டு வாரீயே.. அவங்க என்ன தப்பா நினைக்க மாட்டாங்களா”
“லவ் பண்ற பொண்ணு, கஷ்டபடுறத பாத்துட்டு தூக்கிட்டு போறான்னு நினைப்பாங்க.. அவ்வளவு தான்”
அதை கேட்டு தீயாய் முறைப்பவளை கண்டவன் “சாரி.. போதுமா” என்று உதடு பிதுக்க,
அவனை கண்டு உதடு கடித்து சிரிப்பை அடக்கியவளோ “இனி.. இப்படி பண்ணாத”
“சரி.. உன் காலுல எப்படி காயமாச்சு”
நேற்று, அவன் தங்கை செய்த செயாலால் வந்த காயமென்று நடந்ததை அவனிடம் கூறிவிட்டாள்.
அதை கேட்டு, அவள் காலை தன் மீது வைத்து தடவியவாறு “ரொம்ப வலிக்குதாடி பார்ட்னர்”
“ஏய் அதெல்லாம் ஒன்னும் இல்ல.. கால விடு”
தன் வாயில் விரல் வைத்து “ஷு..” என்று கூறியவன், அவள் கால் கட்டை அவிழ்த்து காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு புது கட்டு போட்டு விட,
அடவனின் செயலை சிறிது நேரம் ரசித்த பெண்ணவளோ “தேங்க்ஸ் டா..”
“எதுக்கு.. மருந்து போட்டு கட்டு போட்டதுக்கா”
“எல்லாத்துக்கும்.. இப்போ தான் நிம்மதியா இருக்கு.. இனி சாரு வேலன் அண்ணாக்கூட சேந்து சந்தோஷமா இருப்பான்னு நம்பிக்க வந்துருச்சு.. அதுக்கு.. நீயும் ஒரு வகைல காரணம்”
“ம்.. அவங்க லவ் சேந்துரும்ன்னு நினைச்சி சந்தோஷபடுற நீ.. நம்ம லவ் எப்போ சேரும்ன்னு நினைச்சி பாத்தியா”
“நம்ம லவ்வா.. நான் எங்கடா உன்ன லவ் பண்ணேன்”
“எம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன்.. விடு” என்று கைகூப்பி கூற அவன் செயலை கண்டு சிரிப்பை அடக்க முடியாத பெண்ணவளோ சத்தமாக சிரித்துவிட்டாள்.
இப்படியே நேரங்கள் கடக்க இரவு பெண்களுக்கு விடுப்பு கொடுத்துவிட்டு இரு ஆண்களும் சேர்ந்து சமைத்து கொண்டிருக்க, சமையல் அறைக்குள் நுழைந்த நிக்கியோ அங்கிருந்த திண்டியில் அமர்ந்து “சமச்சி கொடுத்து.. மயக்கலாம்ன்னு பாக்குறீங்களோ”
அதை கேட்ட புகழோ “அப்படியே மயக்கிட்டாலும்” என்று முனு முனுக்க
“என்ன சொன்ன”
“அது.. இதுக்குலாம் மயங்குற ஆள நீங்க.. அப்படின்னு சொன்னேன்”
“உண்மை தான்.. ஆனா.. இதுக்குலாம் உனக்கு அறிவு பத்தாது”
தான் கூறியதை கேட்டு முறைப்பவனை கண்டவள் “சரி சரி.. கோவபடாம.. சீக்கிரம் வேலைய முடி.. ரொம்ப பசிக்குது”
அதற்கு வேலனோ “எல்லாம் ரெடி சிஸ்டர்.. வாங்க சாப்பிடலாம்”
“இங்க வேண்டாம் அண்ணா.. மொட்டை மாடிக்கு போகலாம்.. நீங்க எல்லாரையும் கூட்டிட்டு மாடிக்கு போங்க.. நான் அதுக்குள்ள போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வாரேன்” என்று கூறி அறைக்குள் சென்றாள்.
அவள் கூறியது போல் அனைவரும் அவளுக்காக காத்து கொண்டிருக்க, அதிகம் நேரம் காக்க வைக்காமல் வந்த பெண்ணவளும் அவர்களுடன் இணைந்து சாப்பிட தொடங்கிவிட்டாள்.
சாப்பிட்டு முடித்து அனைவரும் அரட்டை அடித்து கொண்டிருக்க, சாருவோ தன்னவனை ஏக்கமாக பார்த்தவாறே “தன்னவனை எப்படியெல்லாம் காய படுத்திவிட்டேன்.. இனி அவன் என்னை ஏற்பானா?.. என் காதலை புரிந்து கொள்வானா?.. எப்படி ஏற்பான் அவனை என் மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டேன் அல்லவா கூறினேன்.. ஒருவேளை என்னை வெறுத்து விடுவானோ?..” என்று மாறி மாறி கேள்வி எழுப்பி தன் நிலையை நினைத்து வருந்தினாள்.
இப்படியே அன்றைய இரவு கழிய மறுநாள் புகழுடன் காரில் வந்திறங்கிய பெண்ணவளோ அருகிலிருந்த டீ கடையை பார்த்தவள் “அவனுங்க சாதரணமா தான் வந்திருக்கானுங்க போல.. எனக்கு தான் அவனுங்க என்ன பாலோ பண்ற மாதிரியே தோனிருக்கு போல” என்று எண்ணி கொண்டிருந்தவளை எண்ணத்தை களைத்தவனோ “ஏய்.. என்னாச்சி”
“ஒன்னும் இல்ல… பாய்” என்று கூறி மருத்துவமனைக்குள் சென்றவளோ தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.
காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து எரிச்சலுற்றவனை கண்ட வேலனோ “மச்சான்.. ஏன் இப்படி டென்ஷன் ஆகுற.. ரிலாக்ஸ் டா மச்சான்”
“இந்த கேஸ் ரொம்ப டென்ஷன் பண்ணுதுடா.. இன்னும் வர ஒரு தடயமும் கிடைக்கல” என்று கூறி கோப்பினை மேசையில் வீசியவன் “டேய்.. நான் போய் பார்ட்னர பாத்துட்டு வாரேன்.. நீ கண்டினு பண்ணு” என்று கூறி நிக்கியின் வீட்டை அடைந்தான்.
உள்ளே வந்தவன் சோர்வாக சோஃபாவில் அமர்ந்திருப்பதை கண்டவள், அவனுக்காக தேனீர் எடுத்து வந்து நீட்ட
அதை கையில் வாங்கியவன் “தேங்க்ஸ்டி” என்று கூற,
அவளோ “ஏன் இவ்வளவு டல்லா இருக்க.. எப்போவும் இப்படி இருக்க மாட்டியே.. உடம்பு எதுவும் சரியில்லயா”
“அதெல்லாம் இல்ல.. கேஸ் டென்ஷன்.. அதான் கொஞ்சம் ரிலக்ஸ்க்கு.. உன்ன பாக்கலாம்ன்னு வந்தேன்” என்று கூறி தேனீரை குடிக்க தொடங்கினான்.
அவள் குடித்து முடிக்கும் வரை ரசித்தவளோ “இப்போ.. எப்படி இருக்கு”
“ம்.. பீல் பெட்டர்.. சரி.. நான் கிளம்புறேன்” என்று கூறி, இரண்டு அடி முன்னே சென்றவன் பின்னே வந்து சுற்றி முற்றி பார்க்க, அவன் என்ன தேடுகிறான் என்று அவளும் சுற்றி பார்த்த கணம் பெண்ணவளின் கன்னத்தில் தன் இதழை பதித்தான்.
அதில் அதிர்ந்தவளோ பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு “உன்கூட பிரெண்ட்லியா பழகுறங்கிறதுக்காக இப்படி தான் அட்வாண்டேஜ் எடுத்துப்பியா.. லவ் பண்ற பொண்ணா இருந்தாலுமே அவ அனுமதி இல்லாம கிஸ் பண்றது தப்புங்குற சென்ஸ் கூடவா இல்ல.. ச்ச.. இனி இப்படிலாம் நடந்துகிட்ட அப்புறம் வேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்ன்னு என்னோட ஊருக்கே போயிடுவேன்..”
அவள் பேசியில் கோவம் கொண்டவன் போகும் போது கதவை ஓங்கி குத்திவிட்டு சென்றான்.
போகும், அவளை பார்த்தவள் “சாரிடா.. உனக்கு எவ்வளவு வலிக்கும் எனக்கு தெரியும்.. இருந்தாலும் எனக்கு வேற வழி தெரியல” என்று கூறி அழுதவாறே சோஃபாவில் அமர்ந்து கொண்டிருக்க,
அப்போது அழுதவாறு உள்ளே வந்த ஷிவானி அம்மாவை கண்டவள் “அக்கா.. என்னாச்சி ஏன் அழுறீங்க”
அவரோ “ஷிவானி.. ஷிவானி” என்று இழுக்க, முதலில் தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்தவளோ “இப்போ சொல்லுங்க அக்கா.. ஷிவானிக்கு என்ன”
“ஷிவானிய காணும்மா”
“என்ன அக்கா சொல்லுறீங்க.. ஷிவானி காணுமா.. பக்கத்துல ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போயிருப்பா தேடி பாருங்க”
“இல்லமா, ஈவ்னிங் நான் தான் பக்கத்துல கடைக்கு அனுப்பி பால் வாங்கிட்டு வர சொன்னேன் அப்போ போனவ இன்னும் காணும்.. நானும் எல்லா பக்கமும் தேடி பாத்துட்டேன்.. என்ன பண்றதுன்னு தெரியாம தான் உன்ன தேடி வந்தேன்”
“சரி சரி அழாதீங்க அக்கா.. அவ எங்கேயும் போயிருக்க மாட்டா.. நான் புகழ்கிட்ட பேசுறன் நீங்க வீட்டுக்கு போங்க” என்று கூறி அனுப்பி வைத்தவள் நொடியும் தாமதிக்காமல் தன்னவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
அவள்மேல் இருந்த கோவத்தில் அவள் அழைப்பை ஏற்காதவனை கண்ட வேலனோ “மச்சான்.. சிஸ்டர் தான கால் பண்றாங்க.. என்னன்னு கேளு டா”
“இப்போ.. நான் அவகிட்ட பேசுற மாதிரி இல்ல” என்று கூற அவளோ விடாமல் அழைத்து கொண்டிருக்க அதில் கடுப்புடன் அழைப்பை ஏற்றவன் “என்ன தான்டி வேணும்… போனவன் உயிரோட தான் இருக்கானான்னு தெரிஞ்சிக்க தான கால் பன்ற.. உயிரோட தான் இருக்கேன்.. போன வை”
அதையெல்லாம் சிறிதும் காதில் வாங்காமல் “ஷிவானி காணும்” என்று கூற,
அதை கேட்டு அதிர்ந்தவன் “வாட்..”
“ஈவ்னிங் கடைக்கு போனவ இன்னும் வரலன்னு அவ அம்மா சொல்லி அழுதுட்டு போறாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு”
“சரி.. நான் உடனே வாரேன்.. தேடி பாக்கலாம்” என்று கூறி அழைப்பை அணைத்தவன் வேலனோடு அங்கிருந்து நிக்கி வீட்டிற்கு வந்தவன் சாருவை தன் நண்பனோடு அனுப்பி ஒரு பக்கம் தேட கூறி, தன்னவளுடன் அவனும் தேடியவாறே பாரி ரஞ்சிக்கும் தகவல் கூறி அவர்களையும் தேட சொன்னான்.
**********************************
ஆள் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து வண்டியை நிறுத்திய ஒருவன் கீழே இறங்கி யாருக்கோ அழைப்பு விடுத்து “பாஸ்… நம்ம பசங்க பிள்ளைய மாத்தி தூக்கிட்டங்க பாஸ்.. இப்போ என்ன பண்ணலாம்”
“ஒரு பொண்ணக்கூட ஒழுங்கா தூக்க தெரியாம.. என்ன மயித்துக்குடா இருக்கீங்க.. சரி.. முத நம்மமேல சந்தேகம் வந்துருற கூடாது.. அதுனால பிள்ளைய உயிரோட கொழுத்திடுங்க.. சாம்பல் கூட எவன் கைலையும் கிடைக்க கூடாது.. ஜாக்கிரதை” என்று கூறி அழைப்பு துண்டிக்க, காரிலிருந்த இறங்கிய மீதி இருவரிடமும் அதை கூறினான்.
அதை கேட்ட ஒருவன் “சரிடா.. அப்போ இன்னும் இருட்டட்டும்.. அதுக்குள்ள நம்ம ஒரு கட்டிங்க போடுவோம்” என்று கூறி மூவரும் மது அருந்த தொடங்கினார்கள்.
அதில் ஒருவன் மது அருந்தியவாறே “ஏன்டா… எப்படியும் அந்த பிள்ளைய மொத்தமா கொழுத்த தான போறோம்.. அதுக்கு முன்ன நமக்கு சைட் டிஷ்க்காவது யூஸ் ஆயிட்டு போட்டுமே”
அதை கேட்ட மற்றொருவன் “சரியா தான் சொல்லுற.. நமக்கே இப்போதான் வாய்ப்பு கிடைக்கு.. என் கெடுப்பான என்ஜாய் பண்ணலாம்.. போ அந்த பிள்ளைய தூக்கிட்டு வா” என்று கூற அதை கேட்டு ஒருவன் காரில் இருந்த பிள்ளையை தூக்கிக்கொண்டு வந்து மறைவான இடத்தில் படுக்க வைக்க, அதில் மயக்கம் தெளிந்த சிறுமியோ “பிளீஸ்.. என்ன விட்ருங்க” என்று கதற, சிறு பிள்ளை என்று பாராமல் வாயை அழுத்தி பிடித்து அச்சிறுமியை சீரழிக்க தொடங்கினான்.
தொடரும்…
– ஆனந்த மீரா
Ada pavi avana arainjathum illama feel pandra shivu kutty ya evan da kadathunathu🙄