Loading

பாகம் – 15

சிறிதும் நேரம், அவளை அப்படியே அழவிட்டவளோ “நீ லவ் பண்ணினது… வேலன் அண்ணனா… சொல்லுடி”

 

“ஆமா, நான் லவ் பண்ணினது வேலன தான்… ஆனா, போலீஸ் வேலன் இல்ல” என்றவளின் குரலிலோ தாங்க முடியா வலி,

 

அவளின் நிலமையை அறிந்த தோழியோ “அப்போ.. போலீஸ்ன்னு தெரியாம தான் லவ் பண்ணிருக்க”

 

“நேத்து ஷாப்பிங் போற வர.. அவன் போலீஸ்ன்னு சத்தியமா.. எனக்கு தெரியாதுடி..”

 

இப்போது தான் புரிந்தது, அவனை கண்டு தான் அங்கிருந்து பாதிலையே வந்து விட்டாள் எனவும் இதனால் தான் இவள் ரெண்டு நாட்கள் சரியில்லை எனவும், அவள் நிலமை அறிந்தவளோ 

 

“சரிடி ரிலக்ஸ், எதா இருந்தாலும் மார்னிங் பேசிக்கலாம்.. நீ தூங்கு” என்று விடாமல் அழும் தன் தோழியை தூங்க வைத்துவிட்டு, தன் அறைக்குள் வந்து தோழியை பற்றி சிந்தித்து கொண்டிருந்தவளின் கண்ணியில் பட்டது என்னவோ,

 

தன்னவனின் கடிதத்துடன் இருந்த பார்சலும் தான், முதலில் கடிதத்தை வாசிக்க, அதில் “திஸ் கிஃப்ட் இஸ் பார் யூ பார்ட்னர்… எனக்கு இந்த லவ் கிஃப்ட் பத்திலாம் அனுபவம் இல்ல.. எனக்கு தெரிஞ்சத வச்சி சிம்பிளா தான் வாங்கிருக்கேன்.. போக போக தெரிஞ்சிகிட்டு.. உன்ன இம்ப்ரஸ் பண்ற மாதிரி கிஃப்ட் பண்ணுவேன்.. அப்புறம் என்ன பலி வாங்குறேன்னு அந்த கிஃப்ட்ட பிரிக்காம தூக்கி குப்பைல போட்டுறாத.. ஆச ஆசையா தேடி தேடி வாங்கினது.. சோ, பிளீஸ் ஓபன் இட்” என்று படித்து இதழில் குறுநகையுடன் அந்த பார்சலை பிரித்தவளோ,              

அதிலிருந்து எடுத்த பரிசு காதலன் காதலிக்கு மோதிரம் அணிவது போலும், அவர்களை சுற்றி மின்சராத்தாலான அழகான ஒளிகள், அதற்கு கீழ் “ஐ லவ் பார்ட்னர்” என்று பொறிக்கபட்டிருந்தது அதை கண்டு புன்னகைத்தாவளோ அடுத்து கண்டது, இந்த பரிசுடனே இருந்த ஒரு சிறிய பெட்டி. அதை திறந்து பார்த்தவளின் கண்களோ தன் காதலை அவனிடம் சொல்ல முடியவில்லையே என்று எண்ணி கலங்க, தன் கலங்கிய விழிகளுடனே பிஎன் (PN) என்று பொறிக்கபட்டிருந்த மோதிரத்தை எடுத்து தன் கைகளால் வருடியவளோ, தன் கையில் அணிந்தால் அவனுக்கு தெரிந்துவிடுமென்று தன் கழுத்திலிருந்த செயினுடன் இணைத்து போட்டுக்கொண்டு, அதை தன் கரங்களால் பற்றியவாறே உறங்கிவிட்டாள்.

 

மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தவளை காண, அவள் அறைக்கு வந்த சாருவோ “நிக்கி… சீக்கிரம் ரெடியாகி வா.. நானே ஹாஸ்பிட்டல்ல ட்ராப் பண்ணிட்டு போறேன்”

 

அதை கேட்டு பதறியவள் “இல்ல… நீ போ.. நான் ஆட்டோல போயிக்குறேன்”

 

“இல்லடி.. எனக்கு இன்னைக்கு ஒரு கிளைண்ட் மீட் பண்ணனும்.. அவர் ஆபீஸ் உன்னோட ஹாஸ்பிட்டல் தாண்டி தான் போகணும்.. அதான் போற வழி தான உன்னையும் ட்ராப் பண்ணிட்டு போறேன்” 

 

“அது.. வந்து..”

 

“ஏய்.. வந்து போய்ன்னு இழுத்துட்டு இருக்காம சீக்கிரம் வா.. வெளிய வெயிட் பண்றேன்” என்று கூறி வெளியே சென்றவளின் பின்னே வந்தவள், தன் தங்கையிடம் “சரணி.. பாத்து பதிரமா இரு.. குழந்தைங்க வருவாங்க.. அவங்களுக்கு பிராக்டிஸ் கொடு.. கதவ லாக் பண்ணிக்க.. வெளியே எங்கையும் போகாத.. எது வேணும்னாலும் எனக்கு கால் பண்ணி கேளு..” 

 

“சரி.. சரி கிளம்பு, நான் பாத்துக்கிறேன்”

 

அதை கேட்டு வெளியே வந்தவள், தன் தோழியின் பின்னே அமர, சிறிது நேரத்தில் மருத்துவமனை வாசலில் தன் தோழியை இறக்கிவிட்டு அவளிடமிருந்து விடை பெற்று சென்றாள்.

 

வண்டி மருத்துவமனையை கடக்கும் வரை பார்த்து கொண்டிருந்தவளோ,

 

அவள் கடந்ததும் திரும்பியவளின் கண்ணியில் பட்டது என்னவோ கூடி நின்று டீ குடிக்கும் மூன்று பேரு தான், அவர்களையே புருவம் உயர்த்தி நோக்கி கொண்டிருந்தவளின் எண்ணத்தில் நேற்று வேலன் தன்னை சந்திக்க வேண்டுமென்று சொல்லியது ஞாபகம் வர, உடனே திறன்பேசியை எடுத்து, தன் பார்ட்னருக்கு அழைப்பு விடுத்தாள்.

 

ஒரே அழைப்பில் ஏற்றவனோ “ஹலோ பார்ட்னர்.. இதோ கிளம்பிட்டோம்.. பத்து நிமிஷத்துல பார்க்ல இருப்போம்.. நீ எங்க இருக்க”

 

“ஹாஸ்பிட்டல்ல..”

 

“அங்க ஏன்டி போன..”

 

“நான் எங்க போனேன்.. நான் சொல்ல சொல்ல கேட்காம.. உன் தங்கச்சி தான் கொண்டு வந்து ட்ராப் பண்ணினா.. அவகிட்ட போய் வேலன் அண்ணா கூப்பிட்டாருன்னா சொல்ல முடியும்.. அதான் மூடிட்டு அவகூடவே வந்துட்டேன்”

 

“சரி.. நீ அங்கிருந்து ஆட்டோ பிடிச்சு பார்க் வந்திரு..”

 

“இல்ல, அதெல்லாம் முடியாது.. நம்ம வேணா ஈவ்னிங் மீட் பண்ணலாம்”

 

“பாவம்டி அவன்.. நைட்டெல்லாம் அவள நினைச்சு புலம்பிட்டே இருந்தான்டி.. என்ன விஷயம் தெரிஞ்சா தான எதாவது பண்ண முடியும்”

 

“எனக்கு புரியுது.. எனக்காக இங்க பேஷண்ட்ஸ் வெயிட் பண்றாங்க… இப்போ வந்தாலும் என்னால நிதானமா எல்லாத்தையும் பேச முடியாது.. ஈவ்னிங்ன்னா கொஞ்சம் ஃப்ரீயா பேசலாம்.. ஷார்ப்பா 4 ஒ கிளாக், அங்க இருப்பேன்.. பிளீஸ் டா.. எப்படியாவது அண்ணாகிட்ட பேசி கன்வெய்ன்ஸ் பண்ணி ஈவ்னிங் பார்க்கு கூட்டிட்டு வந்திடு”

 

“சரி ஓகே.. நான் அவன்கிட்ட பேசிக்குறேன் பட் ஈவ்னிங் சொதப்பிட மாட்டியே… கரெக்ட்டா வந்துரு”

 

“தேங்க்ஸ் டா.. கண்டிப்பா கரெக்ட்டா வந்திருவேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தவள் தன் வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

 

ஒரு வழியாக தன் நண்பனை பேசி சமாதானம் செய்து மாலை சந்திப்பிற்கு சமதிக்க வைத்தவன், அவனது பணியில் மூழ்கினான்.

 

இப்படியே நேரங்கள் கடந்து கொண்டிருக்க அனைத்து நோயாளிகளையும் பரிசோதித்துவிட்டு  கடிகாரத்தை பார்த்தவளுக்கு மாலை அவர்களை சந்திக்க வர சொல்லியது ஞாபகம் வர, வேகமாக தன் பையை கையில் போட்டுக்கொண்டு மருத்துவமனை வெளியில் வந்தவள் ஆட்டோவில் ஏறி பூங்காவிற்கு வந்து சேர்ந்தாள்.

 

இவள் வருவதற்கு முன்பே பூங்காவிற்கு வந்து அவள் வருகைக்காக காத்து கொண்டு இருந்தார்கள்.

 

பூங்காவினுள் நுழைந்தவள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை தேடி அறிந்து, அவர்கள் அருகில் அமர்ந்தவளோ “சாரி அண்ணா.. ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டேனா”

 

“அதெல்லாம் இல்லைங்க சிஸ்டர்.. வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது”

 

“மார்னிங் நேரா உங்கள மீட் பண்ணதான் ரெடியா இருந்தேன்… சாரு தான் ட்ராப் பண்றேன்னு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிட்டா.. அதுனால தான் மார்னிங் வர முடியல.. தப்பா நினைச்சிக்காதீங்க”

 

“புரியுது… புகழ் எல்லாம் சொன்னான்.. அதவிட்டுட்டு.. நம்ம மீட் பண்ண வந்த விஷயத்த பத்தி பேசலாமா”

 

“ம் சொல்லுங்க”

 

“அவ என்ன லவ் பண்றா சிஸ்டர்… அது என்னால உறுதியா சொல்ல முடியும்… இப்போ ஏதோ ஒரு காரணத்துக்காக என்ன மொத்தமா அவாய்ட் பண்றா.. அதுக்கான காரணம் கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. பிளீஸ் சொல்லுங்க சிஸ்டர்”

 

“தான் லைஃப் பார்ட்னர் போலீஸா இருக்கிறது அவ விரும்பல.. அதான் உங்க காதல அவளால ஏத்துக்க முடியல”

 

“அவ என்ன அவாய்ட் பண்றதுக்கு, நான் போலீஸா இருக்கிறது தான் காரணம்.. அதோட நான் போலீஸ்ங்குற விஷயம் தெரியாம தான் என்கிட்ட பேசி பழகிருக்கா.. ரைட்”

 

“ஆமா அண்ணா.. அவளுக்கு நீங்க போலீஸ்ங்குற விஷயம் சன்டே ஷாப்பிங் வந்தப்போ.. உங்கள போலீஸ் யூனிஃபார்ம்ல பாத்தது அப்புறம் தான் தெரியும்”

 

“ஓகே… பட் போலீஸ வெறுக்குறான்னா கண்டிப்பா காரணம் இருக்கணுமே.. அது என்ன..”

 

அதை கேட்டு தயங்குபவளை கண்டவனோ “பிளீஸ் மறைக்கமா சொல்லுங்க”

 

வேறு வழியின்றி, அவளும் உண்மையை மறைக்க முடியாமல் சொல்ல தொடங்கிவிட்டாள்.

 

“சாருக்கு சொந்த ஊரு நாகர்கோவில், அம்மான்னா அவளுக்கு உயிரு.. அப்பா போலீஸ் ஆபீஸர்.. பேமிலிய விட தான் வேலை தான் முக்கியம்ன்னு நினைக்கிறவரு.. அம்மா அப்பா ரெண்டு பேருக்கும் அரெஞ் மேரேஜ் தான்.. கல்யாணமாகி கொஞ்சம் நாள் நல்லா தான் லைஃப் போயிட்டு இருந்துச்சு.. அதுக்கு அப்புறம் எப்போவாது தான் வீட்டுக்கே வருவாரு.. சில டைம் நைட் எல்லாம் தூங்குற டைம்ல வந்துட்டு மார்னிங் மார்னிங் விடிஞ்சிதும் சொல்ல கொள்ளாம போயிடுவாரு.. எல்லா கல்யாணமான பொண்ணுங்களுக்கும் பொதுவா இருக்கிற ஆசை அவ அம்மாவுக்கும் இருந்துச்சு.. அப்புறம் ஒன் இயர்ல சாருவும் பிறந்தா.. பிரக்னன்ஸி டைம்ல கூட சந்தோஷமா இருந்திருக்க மாட்டாங்க..

 

அப்புறம்.. எந்த சந்தோஷமான நாளையும் அவ அப்பாக்கூட சேந்து கொண்டாடினதே இல்ல.. ஒவ்வொரு தடவையும் ஆசையா வெயிட் பண்ணி ஏமாந்து ஏமாந்து அவர் மேல அவளுக்கு வெறுப்பு வந்தது தான் மிச்சம்… இப்படியே போயிட்டுருக்க ஒரு கட்டத்துல இதெல்லாம் நினைச்சி அவங்க அம்மா மெண்டலி அப்செட் ஆகுற அளவுக்கு கொண்டு வந்திருச்சு.. டாக்டர் பாத்து டிரீட்மெண்ட்லாம் எடுத்துருக்காங்க.. 

 

அப்பவும் அவங்களால மெண்டலி இம்ப்ரூவ் ஆக முடியாம.. ஸ்ட்ரெஸ் அதிகமாகி ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாங்க.. அந்த வலியோட கூட அவ அப்பாக்கு நிறைய தடவ கால் டிரை பண்ணிருக்காங்க ஆனா அவரு அட்டென்ட் பண்ணல.. ஒரு கால் அட்டென்ட் பண்ணிருந்தாலும் என் அம்மா உயிரோட இருந்துருப்பாங்கங்குறத இப்ப வர சொல்லி அழுவா..

 

அவ அம்மா இறந்ததும் ஸ்கூலுக்கு கூட போகல அப்புறம் ஸ்கூல் டீச்சர் அவ இங்க இருந்தா சரி வராதுன்னு திருநெல்வேலியில அவங்க டிரான்ஸ்பர்ன்னு அவளையும் கூட்டிட்டு வந்து அவங்களே பாத்துக்கிட்டாங்க.. நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல் அப்படியே ப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்.. அவ அம்மா எழுதி வச்ச டைரி மூலாமாவும் அவளுக்கு தெரிந்ததும் வச்சியும் அவ அப்பா பத்தி என்கிட்ட சொல்லி அழுவா.. 

 

சில நேரம் அவ அம்மாவ நினைச்சி மெண்டலி அப்செட் ஆகிருவா.. நான் தான் அவள சாமதனம் பண்ணி தூங்க வைப்பேன்.. நீங்க போலீஸ்ன்னு தெரிஞ்ச அப்போக்கூட அத ஏத்துக்க முடியாம ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டா.. அவ அப்பாவாள போலீஸ் இப்படி தான் இருப்பாங்க அப்படின்னு ஒரு எண்ணத்துலயே தனக்கு கிடைக்குற லைஃப் பார்ட்னர் போலீஸா இருக்க கூடாதுன்னு நினைக்கிறா அதுனால  உங்கள ஏத்துக்க முடியாம வெறுக்குறா”

 

“சிஸ்டர்… மதிய கால் பண்ணி வர சொல்லுங்க.. நான் அவகிட்ட பேசணும்”

 

“வேண்டாம் அண்ணா.. அவ ஏற்கனவே ரொம்ப ஸ்ட்ரெஸ் புல்லா இருக்கா.. திரும்ப திரும்ப அதையே பேசி கஷ்டபடுத்த வேண்டாம்”

 

அதை கேட்ட புகழ் “மச்சான்.. தங்கச்சிய நான் வர சொல்றேன்.. நீ ஒரு தடவ பேசி பாரு” என்று கூறி

 

சாருவிற்கு அழைப்பு விடுத்து பூங்கவிற்கு வர சொல்லியவன் நிக்கியின் கரம் பற்றி தள்ளி அழைத்து வந்து சாருவின் வருகைக்காக காத்து கொண்டு இருந்தான்.

 

தொடரும்…

                                     -ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. சாருவோட இழப்பும் பாதிப்பும் அவள அப்படி நினைக்க வைக்கிறது ஆனா சாரு எல்லாரும் உன் அப்பா மாதிரியே இருக்க மாட்டாங்க

      1. Author

        இருந்தாலும் marubadyum தனக்கு அப்படி nadanthrumonnu பயம் தான்.. hero தான் puriya vaikkanum pakkalam velan enna பன்றான்னு, thanks ka ❤️❤️