Loading

பாகம் – 14

ஒருபக்கம் சரணியோ இரு ஆடவர்களுடனும் சிறுவர்களுடனும் கதைத்து கொண்டிருக்க, வேலனோ தன்னவள் தன்னை காண மாட்டாளா என்ற ஏக்கத்துடனும் அமர்ந்திருக்க, இன்னொரு பக்கம் மூன்று பெண்கள் சமையல் அறைக்குள் அரட்டை அடித்து கொண்டிருந்தார்கள்.

 

இதான் சமயமென்று ரஞ்சியோ “ஏன்டி நிக்கி… இன்னும் எத்தன நாளைக்கு அவன அலைய விட போற… பாவம் தான அவன சீக்கிரம் எதாவது பாத்து பண்ணுடி”

 

“என்னத்த பண்ண சொல்லுறீங்க”

 

“லவ் தான்”

 

“பைத்தியமாக்கா… லவ் பண்ணு பண்ணுன்னா எங்கிருந்து பண்றது… எனக்கு தான் அவன் மேல லவ்வே இல்லையே”

 

“ஏய் என்னடி சொல்லுற… அவன் உன்ன தானடி லவ் பண்றான்”

 

“நானா பண்ண சொன்னேன்”

 

“அப்போ…நிஜமாலே உனக்கு அவன்மேல லவ் இல்லையா… ஆனா…எனக்கு நீ அவன லவ் பண்ணிட்டு வேணும்ன்னே சுத்தல்ல விடுற மாதிரியே தான் தோணுது”

 

“அதான் சொன்னேன்ல எனக்கு அவன்மேல லவ் இல்ல…இனியும் வராது..சோ ஒரு நல்லா அண்ணியா.. நீங்களே… அவனுக்கு சூப்பரான ஒரு பொண்ண பாத்து கட்டிச்வச்சிருங்க” என்று கூறி சமைத்த சாப்பாடை எடுத்து வைத்து கொண்டிருக்க, 

 

அதை கேட்டவளோ சாருவிடம் “என்னடி…இப்படி சொல்லிட்டு போறா”

 

“அதான் லவ் வரலங்குறாள.. அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்…மிரட்டியா வர வைக்க முடியும்… அதுவா வரணும்.. விடுங்க அண்ணி கொஞ்சம் வெயிட் பண்ணி பாக்கலாம்” என்று கூறி அவளை அழைத்து கொண்டு அனைவருடனும் சாப்பிட அமர, அதே சமயம் நிக்கியின் மாமாவை வழியனுப்பிவிட்டு வந்தவனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

 

சாப்பிட்டு முடித்துவிட்டு சிறுவர்கள் அனைவரும் நிக்கியின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு வீட்டிற்கு செல்ல, அதை கண்டு உதடு பிதுக்கியவனின் எண்ணம் புரிந்தாலும் புரியாதது போல் தன் புருவம் உயர்த்தி என்ன என்று வினவ, 

 

அவனோ, நானும் என்ற ரீதியில் தன்விரலால் அவள் கன்னத்தை காட்ட, அதை கண்டு உள்ளுக்குள் ரசித்த பெண்ணவளோ வெளியே தீயாய் முறைத்து கொண்டிருக்க, இருவரிடம் கூறிவிட்டு வந்தவர்கள் பெண்ணவளிடமும் கூறி விடை பெற, வேலனோ தன்னவளையே திரும்பி திரும்பி பார்த்தவாறே செல்ல, மறுபக்கம் நிக்கியோ போகும் தன்னவனையே ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தாள்.

 

அவர்கள் சென்றதும் தங்கையை தனி அறையில் படுக்க வைத்துவிட்டு சாருவுடன் வந்து படுத்து கொண்டாள்.

 

தூங்கிக்கொண்டிருந்த சாருவிற்கு ஏதோ ஏதோ எண்ணங்கள் தோன்ற எழுந்தவள் பயந்து நடுங்கியவாறே “அம்மா அம்மா..” என்று கத்த ஆரம்பித்துவிட, அதில் தூக்கம் கலைந்தவளோ, அவளை சமாதானம் செய்து வருடியவாறே மறுபடியும் தூங்க வைத்துவிட்டு, அவளை அணைத்தபடியே உறங்கி போனாள்.

 

மறுநாள் காலையில் எழுந்து அவரவர் பணிக்கு தயாராகி கொண்டிருக்க, சரணியோ பதற்றமாகவே மடிக்கணினியின் முன் தன்னுடைய மதிப்பெண் வெளியிட்டிற்காக காத்து கொண்டிருந்தாள்.

 

அப்போது அழைப்பு சத்தம் கேட்டு கதவை திறக்க, புகழோ “ஹாய் சரண்”

 

“ஹலோ மாம்ஸ்…நீங்க…எங்க, இங்க… டூட்டி போகல”

 

“போகனும்டா…உனக்கு ரிசல்ட்ல அதான் உன்ன பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்” 

 

“ம்..ரிசல்ட்க்கு இன்னும் டென் மினிட்ஸ் இருக்கு…நீங்க உள்ள வாங்க மாம்ஸ்”

 

அதற்கு சாரு “என்னடி மாம்ஸ்ங்குறா.. ஒருவேள கண்டுபிடிச்சிட்டாளோ”

 

“என்கிட்ட கேட்டா…”

 

“அப்போ… அவகிட்ட கேளுங்குறியா… இதோ கேக்குறேன்..ஏன்டி சரணி…உரிமையா மாம்ஸ்ங்குற… அவன் என்ன உன் அக்கா புருஷனா…”

 

“ஆசை தான்…ஆனா… என் அக்கா சம்மதம் சொன்னா… நிறைவேத்திக்கலாம்.. மாம்ஸ்.. உங்களுக்கு ஓகே தான” என்று அவனை பார்த்து கண்ணடிக்க,

 

அதை கண்டவனோ இதழ் கடித்து சிரித்துவிட்டு “எனக்கு டபிள் ஓகே”

 

அதற்கு சாருவோ “ஏய்… நிக்கி.. அவ முடிவே பண்ணிட்டா போல” என்று காதுபட கேட்க,

 

“ஏன்டி சும்மா இருந்த பிள்ளைய ஏத்திவிட்டு… நல்லவ மாதிரி டிராமா போடுறீயா… மூடிட்டு கிளம்புற வேலை பாரு”

 

“ஏதோ… உனக்கு எண்ணமே இல்லாத மாதிரி பேசுற”

 

அதை கேட்டு தீயாய் முறைத்தவள் சரணியிடம் “ஏய் வெட்டியா பேசிட்டு இருக்காம…ரிசல்ட் பாக்குற வழிய பாரு” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றவளை பார்த்தவாறே சாருவின் பக்கம் வந்தவளோ

 

“அக்கா…மாம்ஸ், என் அக்காவ லவ் பண்ற மேட்டர என்கிட்ட சொல்லிட்டாரு…அதான்… என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்… நீயே உள்ள பூந்து கெடுத்து விட்டுறாத அக்கா”

 

“டேய் அண்ணா… இந்த புள்ள நேத்து தான வந்துச்சு… அதுக்குள்ள எப்படிடா இவள கரெக்ட் பண்ண”

 

“நான் எதுவும் பண்ணல… அவளே கண்டு பிடிச்சிட்டா”

 

“என்னமோ பண்ணி தொலைங்க… என்மண்டய… இதுல உருல விட்றாதீங்க டா” என்று கூறிகொண்டிருக்க,

 

அறையிலிருந்து வெளியே வந்தவளோ “ஏய் சரணி…இன்னும் என்னடி பேச்சு… டைம் ஆயிடுச்சு…ரிசல்ட் பாரு”

 

அதை கேட்டு அமர்ந்தவள் மடிகணினியியை மடியில் வைத்து தன்னுடைய பதிவு எண்ணை தட்டியவள் தன் மதிபெண்ணை கண்டு விழிவிரித்து நிற்க்க,

 

அவள் கையிலிருந்த மடிக்கணினியை வாங்கி பார்த்த நிக்கியோ “ஏய் சரணி…சூப்பர் 584 மார்க்ஸ் வாங்கிட்ட…கை கொடு” என்று கூறி கையை பிடித்து குலுக்க, அதில் சுயநினைவுக்கு வந்தவளை இரு பெண்கள் கட்டியணைத்து வாழ்த்து கூற புகழோ “சூப்பர் சரண்…இந்தா இது மாமாவோட சின்ன கிஃப்ட்” என்று கூறி ஒரு பார்சலை கையில் கொடுத்தவனை, 

 

“தன் தங்கைக்கு கொடுக்கிறான்..தனக்கு எதுவும் இல்லையா” என்று ஏக்கமாக பார்த்து கொண்டே, “சரிடி ரிசல்ட் வந்துடுச்சு…நல்ல மார்க் எடுத்திருக்க.. நெக்ஸ்ட் என்ன பிளான்”

 

“ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் எடுக்கலாம்ன்னு இருக்கேன்” 

 

“சூப்பர் சரண்…அப்போ இன்னைக்கே அட்மிஷன் போட்ருலாம் வா”

 

அதற்கு நிக்கி “இல்ல…வேண்டாம் நீ வொர்க் பாரு.. உனக்கு எதுக்கு சிரமம்… நான் பாத்துக்கிறேன்”

 

“ஒரு சிரமும் இல்ல… நீ ஹாஸ்பிட்டல் கிளம்பு பார்ட்னர்…இன்னைக்கு…எனக்கு எந்த கேசும் இல்ல… சரண், நீ போய் ரெடியாகு” என்று கூற, இரு பெண்களும் வேலைக்கு கிளம்ப, சரணியோ தயாராக அறைக்கு சென்றாள்.

 

இதான் சமயம் என்று நிக்கியின் அறைக்குள் சென்றவன் ஒரு பார்சலுடன் கடித்ததையும் வைத்துவிட்டு சாதரணமாக சோஃபாவில் வந்து அமர்ந்து கொள்ள, சரணி வந்ததும் அவளை கல்லூரியில் சேர்த்து விட அழைத்து சென்றான்.

 

இப்படியே நேரங்கள் கடக்க, வழக்கம் போல் அவளுக்காக வேலன் காத்திருக்க, வேலை முடித்து வெளியே வந்தவள் அவன் நிற்பதை கண்டு காணாமல் செல்ல, அவள் கரம் பற்றியவனோ “மதி… உனக்காக தான வெயிட் பண்றேன், கண்டுக்காம போற”

 

“பச்… முத கையை விடுங்க..”

 

அவள் கையை விடுவித்தவனோ “என்னாச்சி… உனக்கு, நேத்துல இருந்து என்ன அவாய்ட் பண்ணிக்கிட்டே இருக்க”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல…”

 

“என்ன ஒன்னும் இல்ல… நேத்து மீட் பண்ணலாம்ன்னு வர சொல்லி… என்ன வந்து பாக்கவே வரல.. நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா.. அப்புறம் உன் வீட்டுக்கு வந்தேன் அங்கையும் என்ன அவாய்ட் பண்ணிட்டே இருந்த… சரி எல்லார் முன்னாலயும் பேச தயங்கிரியோன்னு.. நானும் விட்டுட்டேன்..

 

வீட்டுக்கு போனதும் எத்தன தடவ கால் பண்ணேன்… அதையும் எடுக்கல… மெசேஜ்க்கு கூட ரிப்ளை பண்ணல… என்னாச்சி உணக்கு.. என்ன எதுக்கு அவாய்ட் பண்ற”

 

“அதான் அவாய்ட் பண்றேன்னு.. உங்களுக்கே தெரியுதுல பின்ன எதுக்கு.. என்னோட பின்னாடி வந்து டார்ச்சர் பண்றீங்க… பிளீஸ், இனி கால் மெசேஜ் மீட்ன்னு.. என்ன எந்த விதத்துலயும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. குட் பாய்” என்று கூறிவிட்டு ஆட்டோ பிடித்து அங்கிருந்து சென்றாள்.

 

************************************

இன்று தாமதமாக வீட்டிற்கு வந்த நிக்கியோ சோர்வாக சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருக்க,

 

காபி என்று கூறி நீட்டியவனை நோக்கி, அதை கையில் வாங்கியவள் “நீயா.. சாரு எங்க”

 

“என்னன்னு தெரியல… ஆபீஸ்ல இருந்து வந்ததும் தல வலிக்குது.. நான் ரெஸ்ட் எடுக்கணும் யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டா”

 

“அது சரி.. நீ.. இங்க பண்ற”

 

“காலேஜ்ல அட்மிஷன் போட்டுட்டு சரண ட்ராப் பண்ண வந்தேன்… அவள தனியா விட்டுட்டு போக தோணல… கொஞ்சம் டையடாவும் இருந்துச்சு சோ.. ஒரு தூக்கத்த போட்டுட்டு இங்கேயே இருந்துட்டேன்” என்று கூறி முடிக்கவும்

அவள் அருகில் அமர்ந்த சரணியிடம் “என்னடி… காலேஜ்லாம் பிடிச்சிருக்கா”

 

“ம் அக்கா… சூப்பர் காலேஜ்.. பார்ம் பில் பண்ணி அட்வான்ஸ் பீஸ் பே பண்ணியாச்சு…”

 

“உன்ன யாரு பீஸ்லாம் பே பண்ண சொன்னா”

 

“இப்போ எதுக்கு டென்ஷன்.. நீ அந்த பணத்த எனக்கு திருப்பி கொடுத்துரு… பிராப்ளம் சால்வ்”

 

அதில் அமைதியானவள் சரணியிடம் “மாமாகிட்ட இன்பர்ம் பண்ணிட்டியா”

 

“இதோ.. இப்போ தான் பேசிட்டு வந்தேன்”

 

“சரி ஓகே.. பசங்க வருறதுக்குள்ள ப்ரஷ் ஆயிட்டு வாரேன்” என்று கூறி அறைக்குள் சென்றவள் தன்னை சுத்தபடுத்திவிட்டு ஆடை மாற்றி மாடிக்கு செல்ல, அங்கு சிறுவர்கள் கூடவே சரணியும் புகழும், அவளின் வருகைக்காக தான் காத்து கொண்டிருந்தார்கள்.

 

இப்போது தூங்கி எழுந்த சாருவோ முகங்களை கழுவிக்கொண்டு அவளுக்கென்று வைத்திருந்த தேனீரை சூடுபடுத்தி எடுத்து வந்து சோஃபாவில் அமர்ந்து குடித்து கொண்டிருக்க 

 

அவளை காண வந்த வேலனோ அவள் எதிரே வந்து நிற்க, அவனை காண விருப்பமில்லாதவளோ எழுந்து அறைக்குள் சென்றாள்.

 

அப்போது மேலே சென்றவள் அவர்களுக்கான நடனத்தை சொல்லி கொடுத்துவிட்டு கீழே வர, பின்னயே புகழும் வர, வந்தவர்கள் இவர்கள் பேசுவதை கண்டு மறைந்தவாறே பார்த்தார்கள்.

 

போகும், அவளின் கரம் பற்றிய வேலனோ “நான் உன்கிட்ட பேசணும்”

 

“அதான்.. டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு உங்களுக்கு புரியுற மாதிரி தெளிவா தான சொல்லிட்டு வந்தேன்… பின்ன எதுக்கு மறுபடியும் வந்து டார்ச்சர் பண்றீங்க”

 

“நான்.. உன்கிட்ட பேசணும்ன்னு சொன்னேன்”

 

“சரி… என்னன்னு சொல்லிட்டு போங்க”

 

“நான்.. உன்ன லவ் பண்றேன்… உனக்கும் என்ன பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும் பட் ஏதோ காரணத்துக்காக என்ன அவாய்ட் பண்ற”

 

“நீங்களா எதையாவது கற்பன பண்ணிட்டு பேசாதீங்க… எனக்கு.. உங்கள சுத்தமா பிடிக்கல.. இனியும் எனக்கு உங்கமேல லவ் வரும்ன்னு கனவுல கூட நினைச்சிடாதீங்க” என்று கூறி அறைக்குள் சென்றாள்.

 

சாரு சென்றதும், அவர்கள் இருவரும் கீழே வந்து அவனிடம் என்னவென்று விசாரிக்க 

 

அவனோ தங்களின் முதல் சந்திப்பிலிருந்து அனைத்தையும் அவர்களிடம் கூறி வருத்தபட்டவனோ “சிஸ்டர்.. உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்.. சோ.. நாளைக்கு மார்னிங் பார்க் வருவீங்களா.. பிளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க” என்று கெஞ்சுபவனிடம் முடியாதென்று சொல்ல முடியாத பெண்ணவளோ “கண்டிப்பா வாரேன்” என்று கூறினாள்.

 

அவர்கள் சென்றதும் சாருவின் அறைக்குள் சென்றவளோ “என்கிட்ட ஏன்டி.. உண்மைய மறைச்ச” என்று கேட்கவும், “நிக்கி..” என்று அழுதவாறே ஓடி சென்று அவளை அணைத்து கொண்டாள்.

தொடரும்..

                                      – ஆனந்த மீரா 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. புகழ் நிக்கி ரூம்ல என்ன பார்சல் வச்சுட்டு வந்தான்??
      சாரு என் வேலை இப்படி கஷ்டப்படுத்திட்டு இருக்கா??

      1. Author

        Oruvela thangachikku gift koduththa ava ekkama பாத்தது தெரிஞ்சி irukkumo ennavo athaan அவளுக்காக எதாவது vaangi vachiruppan போல 😂😂 சாருக்கு next epila enna problem nnu therinchidum, nandri akka ❤️❤️