பாகம் – 13
இப்போது தூங்கி எழுந்த சாருவோ எதுவுமே நடக்காத மாதிரி சாதாரணமாக சமையல் அறைக்குள் சமைக்க செல்ல,
அதை கண்ட நிக்கியோ “சமைக்கலாம் வேண்டாம்… புட் ஆர்டர் பண்ணிட்டேன்.. டென் மினிட்ஸ்ல வந்துரும்”
அதை கேட்டவள், சமைக்காமல் வீட்டியில் உள்ள மத்த வேலைக்களை பார்க்க தொடங்கிவிட்டாள்.
இப்போது சோஃபாவில் அமர்ந்து தொலைகாட்சியில் பாட்டை கேட்டவாறே தன்னவனுடன் டூயட்டாட கனவு உலகத்திற்கு சென்றவளை, “அக்கா..” என்ற சத்தம் கேட்டு திடுகிட்டு வெக்கபட்டவள் “கனவா..” என்று தலையில் அடித்து திரும்பி ஷிவானியுடன் வந்த, அவள் நண்பர்களை கண்டு “ஹாய் காய்ஸ்… நீங்க தான் ஷிவானிக்கூட சேந்து குரூப் டான்ஸ் ஆட போறவங்களா”
அதை கேட்டு அனைவரும் “ஆம்” என்பது போல் தலையாட்ட,
“ஓகேடா செல்லங்களா… முதல எல்லாரும் லஞ்ச் பின்னிஷ் பண்ணிட்டீங்களா”
அதை கேட்ட சிறுவர்கள் “இல்லை” என்று தலையாட்ட
“ஓ… அப்போ எல்லாரும் ஒன்னாவே லஞ்ச் பின்னிஷ் பண்ணிட்டு… அப்புறம் மாடிக்கு போய் பிராக்டிஸ் பண்ணலாம்… போங்க போங்க ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு ஆளுக்கொரு இடம் பிடிச்சு உக்காருங்க… அக்கா.. இதோ வந்துடுறேன்” என்று கூறி கீழே சென்று தங்களுக்கென்று வரவழைக்கப்பட்ட சாப்பாடை வாங்கிட்டு வந்து அனைவருக்கும் பரிமாறிவிட்டு அமர்ந்து சாப்பிட்டாள்.
இருவரிடமும் ஓயாமல் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்த சிறுவர்களை அழைத்து கொண்டு மாடிக்கு வந்தார்கள்.
இப்போது நிக்கியோ “ஓகே காய்ஸ்… நீங்க இங்க வரபோற ஒன் வீக்ல ஜாலியா என்ஜாய் பண்ணலாம்… அதோடு என்ன வேணும்ன்னாலும் என்கிட்ட இல்லன்னா சாருக்கா கிட்டயும் தயங்காம கேக்கலாம்.. டான்ஸ் பிராக்டிஸ்யோட சேத்து ஸ்நாக்ஸ் ஜூஸ், கேம்ஸ்ன்னு நல்லா என்ஜாய் பண்ணலாம்… நாளைலிருந்து அக்காக்கள் ரெண்டு பேருக்குமே வொர்க் இருக்கும்.. சோ நான் இன்னைக்கு கொடுக்குற பிராக்டிஸ்… நாளைக்கு ஷிவானி வீட்டுல அவகூட சேந்து நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு… நான் வொர்க் முடிஞ்சி வந்ததும்… எனக்கு ஸ்டெப்ஸ் போட்டு காட்டணும்…. ஓகே வா காய்ஸ்”
அதை கேட்ட சிறுவர்கள் “ஓகேக்கா” என்று சத்தமாக கூற,
அதற்கு நிக்கியோ “சூப்பர் காய்ஸ்… ஃபர்ஸ்ட்… நான் ஆடுறேன்… எல்லாரும் ஸ்டெப்ஸ்லாம் நல்ல லிச்சென் பண்ணுங்க” என்று கூறி, தன் மடிக்கணினியை எடுத்து பாட்டை ஆராய்ந்து கொண்டிருக்க,
அப்போது அழைப்பு மணி சத்தம் கேட்ட சாருவோ “நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க… நான் யாருன்னு பாத்துட்டு வாரேன்” என்று, கூறி அங்கிருந்து கீழே சென்று கதவை திறந்தவள் “புகழ் அண்ணா… இப்போலாம் அடிக்கடி இந்த பக்கம் தான் காத்து வீசுது…ம்… கவனிச்சிக்குறேன்” என்று கூறி திரும்பியவள் “அட பாரி அண்ணா… அண்ணி… நீங்க வந்தது சர்ப்ரைஸ் தான்…. உங்கள பத்தி புகழ் அண்ணா நிறைய சொல்லிருக்கான்.. பட் இன்னைக்கு தான் பாக்குறேன்”
அதற்கு புகழோ “போதும் போதும்… உள்ள கூப்பிடுற ஐடியா இருக்கா… இல்ல வாசலயே பேசி அனுப்பிவிட்ருவீயா”
“சரி சரி… எல்லாரும் உள்ள வாங்க” என்று கூறிவிட்டு வாசலை பார்த்து நின்றிருக்கும் புகழை கண்டு “டேய் அண்ணா… யார தேடிட்டு இருக்க… உள்ள வா முதல”
“இருடி… என் பிரெண்டு கார பார்க் பண்ணிட்டு வாரேன்ன்னு சொன்னான் இன்னும் ஆள காணும்… அதான் பாத்துட்டு இருக்கேன்… இதோ வந்துட்டான்” என்று கூறி முடிக்கவும் அவனருகில் வந்த வேலனோ அவளை கண்டு “அட நம்ம ஆளு வீடா… இது” என்று நினைத்தவாறே அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.
அவனை கண்டு முகம் வாடியவளோ முகம் பாராமல் “உள்ள வாங்க” என்று கூறிவிட்டு பாரி மற்றும் ரஞ்சியின் இடையில் அமர்ந்தவள் “அப்புறம் பாரி அண்ணா… எப்போ கல்யாணம்”
“உன் பிரெண்டு மனசு வச்சா… சீக்கிரமே பண்ணிக்கலாம்”
“கண்டிப்பா வாய்ப்பு இல்லன்னு தான் நினைக்கிறேன்”
“அப்போ கல்யாணமே நடக்காதுங்குற”
அதை கேட்டு சிரித்தவள் புகழை கண்டு “டேய் அண்ணா… இப்போ யாரடா தேடுற”
அதற்கு ரஞ்சியோ “வேற யார பொண்ண தான்”
“என்ன அண்ணி… அண்ணனுக்கு பொண்ணு பாக்க வந்த மாதிரியே பேசுறீங்க… ஆல்ரெடி பாத்த பொண்ணு தான”
“அவன் எல்லாரையும் கூட்டிட்டு வந்ததே.. அதுக்கு தான” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே மறுபடியும் அழைப்பு சத்தம் கேட்க, கதவை திறந்தவள் கண்கள் விரித்து “ஊருக்கு வாரேன்னு சொல்லாம திடுதிப்புன்னு வந்து நிக்குறீங்க”
“எல்லாம் அக்காக்கு… சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு தான்”
“அது சரி.. உள்ள வா சரணி… மாமா உள்ள வாங்க” என்று அழைத்து வந்து அனைவரிடமும் அறிமுக படுத்திக்கொண்டிருக்க
சரணியோ “அக்கா.. எங்க”
“மேல இருக்கா” என்று கூற ஒரே ஓட்டமாக அவளை காண செல்ல, அவள் பின்னையே புகழும் சென்றான்.
இங்கு, அவளோ பாட்டை ஒலிக்கவிட்டு மடிக்கணினியை ஓரமாக வைத்துவிட்டு சிறிது நேரம் ஆடிக்கொண்டிருந்த,
அவர்கள் தேர்ந்தெடுத்த பாடல் மழையில் ஆடும் பாடல் என்பதால் மழை சத்தம் கேட்ட ஷிவானி “அக்கா பாட்டுக்கு கரெக்ட்டா மழை பெய்யுதே”
“அட… ஆமால… அப்போ மழைலயே ஆடிடுவோம்”
“சூப்பர்க்கா”
“எத சூப்பரா… இந்த ரூம்மவிட்டு யாரும் வெளிய கால் வைக்க கூடாது… இங்கிருந்தே அக்கா ஆடுற ஸ்டெப்ஸ்ஸ… லிசென் பண்ணுங்க… அதையும் மீறி நீங்க மழைல நனைஞ்சா அக்கா அப்புறம் பிராக்டிஸ் கொடுக்க மாட்டேன்… ஜாக்கிரத” என்று கூறி மறுபடியும் பாட்டை ஒலிக்கவிட்டு மழையில் ஆட தொடங்கிவிட்டாள்.
அவள் ஆடிக்கொண்டு இருக்க “அக்கா..” என்று ஓடி வந்தவள், அவள் கை பிடித்து சுற்ற, அவளோ தங்கையுடன் சுற்றியவாறே “ஏய் எப்போடி வந்த… ஒரு வார்த்த சொல்லவேயில்ல”
“இப்போ… தான்டி வந்தேன்… உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு சொல்ல… அதவிடு… நம்ம ரெண்டு பேரும் மழைல சேந்து ஆடி எவ்வளவு நாளாச்சுல”
“அதுக்கென்ன… இப்போ வந்துட்டேல… எல்லாத்துக்கும் சேத்து ஆட்டத்த போட்ருவோம்”
“போட்ருவோம்” என்று கூறி துப்பட்டாவை இடுப்பில் கட்டி முடிச்சி போட்டவள், தன் தங்கையுடன் சேர்ந்து ஆட தொடங்கிவிட்டாள்.
சரணியுடனே வந்த புகழோ, அவர்கள் ஆடுவதை பின்னே நின்று மழையில் நனைந்தவாறே கண்டு ரசித்தான்.
பின்னே தன்னவன் நிற்பது கூட தெரியாமல் தன் தங்கையுடன் இடம் மாறி மாறி ஆடிக்கொண்டிருந்த, பெண்ணவளோ தண்ணியில் கால் வழுகி நிலை தடுமாறி கீழே விழுவதற்குள் தன் கரம் கொண்டு பெண்ணவளின் இடுப்பை வளைத்து பிடித்தவனை, தன் கரத்தால் அவன் கழுத்தை பற்றியவள், அவனை விழிக்கமால் பார்த்து கொண்டிருந்தாள்.
மழை துளியை கையில் பிடித்து, அவள் முகத்தில் தெளித்து, அவளை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தவனோ, அவள் தங்கையை இருப்பதை கண்களால் காட்டி நினைவு படுத்த,
அதில் சுதாகரித்தவளோ “தேங்க்ஸ்” என்று கூறி அவனிடமிருந்து விலகியவள், இதையெல்லாம் கண்டு காணாதது போல் ஆடும் தங்கையை “சரணி… போதும் கீழ போலாம்… செல்லங்களா… நீங்களும் வாங்க” என்று அனைவரையும் அழைத்து கொண்டு போனவள், திரும்பி தன்னவனையை ஒரு பார்வை பார்க்க,
அவள் பார்ப்பதை கண்ட, ஆடவனோ கண்ணடித்து சிரிக்க, பெண்ணவளோ முறைப்பை பதிலாக கொடுத்துவிட்டு சென்றாள்.
இப்போது கீழே வந்த பெண்ணவளோ “மாமா… எப்படி இருக்கீங்க”
“நல்லா இருக்கேன்டா… நீ என்ன இன்னும் சின்ன பிள்ள மாதிரி மழைல ஆடிட்டு இருக்க… போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வா… சரணி நீயும் போய் மாத்திட்டு வா”
அதை கேட்ட இருவரும் உடை மாற்றிவிட்டு வந்தமர, அவள் தலை ஈரமாக இருப்பதை கண்டவர் அவளுக்கு தலையை துவத்திவிட
அதை கண்ட வேலனோ “என்ன சிஸ்டர்… நாங்களாம் உங்க கண்ணுக்கு தெரியலயா… எங்களையும் கொஞ்சம் கவனிக்கிறது”
அதற்கு சரணி “அது ஒன்னுமில்ல, முதல மழையில நனஞ்சிட்டு வந்தவ… இப்போ மாமா பாசமழைல நனஞ்சிட்டு இருக்காள… அதான் உங்க யாரையும் அவ கண்ணுக்கு தெரியல”
“ஏய் வாய மூடுடி…” என்று கூறி ரஞ்சியின் அருகில் அமர்ந்தவள் “என்ன எல்லாரும்… சடன் விசிஸ்ட்டு”
அதற்கு பாரியோ “ஏன் ஜூனியர்… நாங்களாம்… உங்க வீட்டுக்கு வர கூடாதா”
“அதுக்கென்ன சீனியர்… தாராளமா வரலாம்.. தீடீர்ன்னு சொல்லகொள்ளாம வந்திருக்கீங்களே… அதான் என்னன்னு கேட்டேன்”
“சும்மா தான் ஜூனியர்… இன்னைக்கு சன்டே வேறையா… இவ போர் அடிக்குதுன்னு சொன்னாளா… உடனே புகழ் ஐடியா கொடுத்தான்… நாங்களும் சரின்னு கிளம்பி வந்துட்டோம்” என்று கூறி முடிக்கவும் மேலிருந்து இறங்கி வருபவனை தீயாய் முறைத்தவள்
“சரி சரி… வந்ததுல இருந்து பேசிட்டு இருக்கீங்களா… இல்ல டீ காபிலாம் குடிச்சீங்களா”
அதற்கு வேலனோ “எங்க சிஸ்டர்… உங்க பிரெண்ட் இதெல்லாம் தந்தா தான குடிக்குறதுக்கு… உங்களுக்காவது கேக்க தோணுச்சே” என்று கூறி தன்னவளை சீண்ட, அதையெல்லாம் சிறிதும் கவனிக்காத பெண்ணவளோ
“உனக்காக தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்றாங்க… நீ தான் கொடுக்கணுமாம்… அது தான் முறையாமாம்”
அதன் அர்த்தம் புரிந்து தன்னவனை முறைத்தவள் சமையல் அறைக்குள் சென்றாள்.
இப்போது பாரியோ “டேய் புகழ்.. இப்படி மாடு மாதிரி நிக்காம போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டுவா போ”
அதை கேட்டு பெருமூச்சு ஒன்றைய விட்டவன், கீழே நிற்கும் காரில் ஆடையை மாற்றிவிட்டு வந்து அமரவும், நிக்கி அனைவருக்கும் தேனீர் கொடுத்துவிட்டு தங்கையின் அருகில் அமர்ந்தவள் “எக்ஸம்லாம் எப்படிடி எழுதிருக்க”
“நல்லா எழுதிருக்கேன்டி… நாளைக்கு தான் ரிசல்ட்… ரிசல்ட் தெரிஞ்சதும் இங்கேயே… எதாவது காலேஜ்ல ஜாயின் பண்ணிட்டு உன்கூடவே இருக்குற ஐடியால வந்திருக்கேன்”
“ஆமாமா, அவ உன்கூடவே இருக்க… ஆசை படுறா… அதான் உடனே கிளம்பி வந்துட்டோம்… இனி அவள நல்ல காலேஜ்ல சேத்து பாத்துக்கிறது… உன்னோட பொறுப்பு… நான் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்.. இன்னைக்கு போனா தான் நாளைக்கு வீடு போய் சேர முடியும்… அத்த வேற தனியா இருப்பா”
அதற்கு புகழோ “நீங்க கவல படமா போயிட்டு வாங்க… அவ மாமா நான் எதுக்கு இருக்கேன்… நான் பாத்துக்கிறேன்”
அதற்கு நிக்கியோ “டேய் மலகுரங்கு.. உனக்கு பெர்பார்ம் பண்ண இதான் நேரமா..” என்று தனக்குள் அர்ச்சித்து கொண்டிருக்க,
சரண்யாவோ “மாமாவா…”
“அய்யோ.. ஒரு பிலோல அவளுக்கு மாமான்னு சொல்லிட்டேன்… பார்ட்னர் வேற முறைக்குறாளே..” என்று எண்ணியவாறே
“நீங்க ஏன் மாமா கவலபடுறீங்க… நான் எதுக்கு இருக்கேன்… நான் பாத்துக்கிறேன்… அப்படின்னு சொல்லுறதுக்கு… டங்க் ஸ்லீப்பாகி மாத்தி சொல்லிட்டேன்… சாரி” என்று கூறி “எப்படியோ சமாளிச்சிட்டேன்” என்ற ரீதியில் அவளை பார்த்தான்.
இப்படியே சிறிது நேரம் பேசிகொண்டிருக்க, ரயிலுக்கு நேரமானதால் நிக்கியின் மாமா அங்கிருந்து விடைபெற, அவரை ரயில் நிலையத்திற்கு புகழே வழியனுப்ப சென்றான்.
தொடரும்…. –
-ஆனந்த மீரா
நிக்கி அவளுக்கே தெரியாம பொண்ணு பாக்க தான் எல்லாரும் வந்து இருக்காங்களோ நினைச்சேன் அது இல்லையா??
சாருக்கு என்ன பிரச்சனை ஏன் வேலன பார்த்து முகத்தை திருப்புறா??
Erkanave பாத்த ponna பாத்தா என்ன pakkalena என்ன 😂😂athaan ellarukkum avale தெரியுமே😂😂ithu ranjikku appadi thonirukku athaan appadi solitta 😂😂 சாருக்கு என்ன problemnnu adutha epila solliduven nnu ninaikkiren wait pannunga ❤️❤️nandri ka ❤️ponnu பாக்க varuvaanga இப்போ illa pinnadi குடும்பமா varuvaanga 😍😍
Dei pugal nalla samalikura po ama charu ku ennavam avana kandukave illa
Avan அப்படி thaan, thanks darlu ❤️❤️