பாகம் – 12
அவளிடம் பேசிவிட்டு அறைக்குள் வந்த நிக்கிக்கோ அழுகை நிற்கவில்லை, அப்படியே குளியல் அறைக்குள் சென்று ஷவரை திறந்துவிட்டு, சிறிது நேரம் தண்ணியில் நின்றவாறே அழுது தன் சோகத்தை கரைத்தாள்.
இதனால், மனம் சற்று அமைதி அடைவதை உணர்ந்தவள், குளியல் அறையிலிருந்து வெளியே வந்து உடையை மாற்றிவிட்டு படுக்கையில் படுக்க, அவளுக்கு தூக்கம் மட்டும் வரவில்லை படுக்கையில் மாறி மாறி உருண்டு பிரண்டு போராடியும் பார்த்தாள், அப்படியும் எந்த பிரோஜனமும் இல்லை என்பதால் முயற்சியிழந்தவள் நேராக விட்டத்தை பார்த்து படுத்தவாறு தன் வாழ்கையின் நிலையை நினைத்து வருந்தி கொண்டவளுக்கு எண்ணம் முழுவதும் தன்னவனே நிறைந்திருக்க
தன் திறன்பேசியை கையில் எடுத்தவள் பகிரினுள் இருக்கும் அவனின் புகைப்படத்தை பார்த்து சிரித்தவாறே “டேய் மலகுரங்கு…பேசி பேசியே என்ன கவுத்துட்டியேடா… அப்படி என்ன மந்திரத்த போட்டன்னு தெரியல… இப்போ என் நினைப்பு முழுக்க நீ மட்டும் தான்… நீ மட்டும் தான் இருக்க… இப்போலாம் நீ என்பக்கத்துல இல்லாத ஒவ்வொரு நேரமும் எனக்கு இருட்டுல இருக்கிற மாதிரியே இருக்கு,
உன் முகத்த பாக்க தவியா தவிக்கிறேன்… உனக்கு ஒன்னு தெரியுமா… சில நேரங்கள்ல உன்ன பாக்கும் போது இறுக்கி கட்டிபிடிச்சு ஐ லவ் யூடான்னு சொல்ல தோணும்.. ஆனா, முடியாதே… அதுனால என்ன இப்போ சொல்லுறேன்.. ஐ லவ் யூ புக..இல்ல இல்ல… ஐ லவ் யூடா பார்ட்னர்” என்று கூறி அவன் புகைபடத்தில் இதழ் ஒத்தி எடுத்தவள்,
அவள் பதிந்திருந்த மலகுரங்கு என்ற பெயரை அழித்துவிட்டு பார்ட்னர் என்று மாற்றி, அவன் பெயரினருகில் தன் இதயத்தை வைத்தவள்,திறன் பேசியை நெஞ்சியில் வைத்தவாறே உறங்கியும் போனாள்.
காலையில் அவனை பிடிக்காதது போல் நடித்து பேசியும், இரவில் அவன் புகைபடத்தை பார்த்து காதல் செய்தவாறே ஒரு வாரத்தை கழித்தாள்.
வழக்கம் போல் சாருவை அழைத்து செல்ல வந்த வேலன் இன்று தன் காதலை சொல்லிவிடலாம் என்று வண்டியை பூங்காவில் நிறுத்தி இறங்குமாறு சைகை காட்ட, வண்டியிலிருந்து இறங்கியவளோ “எதுக்கு…பார்க் வந்திருக்கோம்”
“முக்கியமான விஷயம் பேசணும்”
அதை கேட்டவளுக்கோ காதலை சொல்ல தான் அழைக்கிறான் என்று எண்ணியவாறே, அவனுடன் நடந்த கொண்டிருக்க, அவனோ “மதி..” என்று தான் அழைத்திருப்பான், அதற்குள் திறன்பேசி அலற, அழைப்பை ஏற்றவன் “இதோ பத்து நிமிஷத்துல வந்துருவேன்” என்று, அவளை பாவமாக பார்க்க
அதை உணர்ந்வளோ “விடுங்க… இன்னைக்கு விட்டா… என்னைக்கும் பேச முடியாத… என்ன… ஏதோ அவசரமா கூப்பிடுறாங்க… சோ,நீங்க போங்க… நான் ஆட்டோல போயிக்கிறேன்” என்று கூறி அனுப்பிவிட்டவளோ வீட்டிற்கு வந்து அனைத்தையும் நிக்கியிடம் பகிர்ந்து சந்தோஷமாக இருந்தாள், பாவம் பெண்ணவளுக்கு தான் கூறியது தான் நிஜமென்று தெரியவில்லை.
******************************
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்த வந்த நிக்கியோ “என்ன… காலையிலயே பஞ்சாயத் போல..”
அதற்கு சாருவோ “அத…. நீயே அவகிட்ட கேளு”
சிறுமியின் அருகில் அமர்ந்தவள் “என்ன மேட்டரு… டெல் மீ”
“அதுவா…. எங்க ஸ்கூல் ஆனுவல் டேய்க்கு என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேந்து டான்ஸ்க்கு நேம் கொடுத்து கோத்துவிட்டுட்டாங்க… அதான்… சாருக்கா கிட்ட ஹெல்ப் கேட்டுட்டு இருக்கேன்”
“டான்ஸ் சொல்லி குடுத்தா… ஆட வருமா”
“அதான்…. சாருக்கா நோ சொல்லிட்டாங்களே… அப்புறம் எப்படி”
“ஏன்டி… நான் சொல்லி கொடுத்தாலாம் ஆட மாட்டியா… அவளவிட எனக்கு நல்லாவே டான்ஸ் வரும்… உனக்கு போய் ஹெல்ப் பண்ணலாம்ன்னு நினைச்சேன்ல… என்ன சொல்லணும்… போடி” என்று கூறி முகத்தை வெட்டிக்கொண்டாள்.
அதை கேட்ட சாரு “ஏய்… அவ நிஜமாலே நல்ல டான்ஸ் ஆடுவா… பர்ஸ்ட் பிரைஸ்லாம் வின் பண்ணிருக்கானா பாத்துக்கோயேன்” என்று கூற, அதற்கு நிக்கியோ இல்லாத காலரை தூக்கி விட, அவளோ “நிக்கி அக்கா….” என்று உதடு பிதுக்க,
“சரி சரி… போலச்சு போ… டான்ஸ் தான கத்து தரேன்”
“லவ் யூக்கா” என்று கூறி, அவள் கன்னத்தில் இதழ் பதித்துவள் “ஒன் வீக்ல பங்ஷன், சோ சீக்கிரம் பிராக்டிஸ் பண்ணனும்…. நான்… இப்போவே என் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் வர சொல்றேன்”
“ப்ரெண்ட்ஸா…”
“ஆமாக்கா… என்கூட கம்பனிக்கு ஆடுறவங்க… என்னையும் சேத்து நாலு பேரு”
“சரி ஓகே… முதல சாங் டிசைட் பண்ணிட்டு… அப்புறம் பற்சச்சிங்லாம் பினிஷ் பண்ணிட்டு… பிராக்டிஸ் ஸ்டார்ட் பண்ணலாம்”
“ஓகே… அப்போ வாங்க” என்று அவளை கரம் பற்றி, அவள் அறைக்குள் அழைத்து சென்றாள்.
இரண்டு மணிநேரமாக மடிக்கணினியில் பாடலை அலசி ஆராய்ந்தவர்கள், ஒருவழியாக இறுதியில் நான்கு பாடல்களை கண்டுபிடிக்கவும் இருவருக்கும் ஒருசேர வயிற்றில் அழைப்பு மணி கேட்க, வயிற்றை தடவியபடியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே,
ஓட்டமாக சமையல் அறைக்குள் வந்து ஆளுக்கொரு தட்டை தூக்கிக்கொண்டு தோசை சுட்டுக்கொண்டிருந்த சாருவிடம் “தோச.. தோசை” என்று அவளை ஒருவழி பண்ணிக்கொண்டு தான் இருந்தார்கள்.
அதை கண்டவள் “அட… ச்சீ பிச்சகாரீங்களா… நிறுத்துங்கடி… சன்டே ஒருநாள் தான் நிம்மதியா இருக்கேன்… அன்னைக்கும் என்ன ஒருவழி பண்ணிடுறீங்க… உங்களோட இதே ரோதனையா போச்சு… இப்போ ஒழுங்கு மரியாதையா தட்டோட அப்படி போய் உக்காருறீங்க…. இல்லன்னா… நீங்களே சுட்டு சாப்பிட்டுக்கோங்க… எப்படி வசதி” என்று தோசை கரண்டியை ஆட்டியவாறு கேட்க,
அதை கண்டு ஒருவரை ஒருவர் பார்த்து முகத்தை வெட்டிக்கொண்டு தட்டுடன் கப்சிப் என்று அமர்ந்து கொண்டார்கள்.
சிறிது நேரத்தில் ஹாட் பாக்ஸில் தோசையை சுட்டு அடுக்கி எடுத்து வந்தவள், அவர்களுக்கு பரிமாறிவிட்டு அவளும் அமர்ந்து சாப்பிட்டவாறே “என்னங்கடி…. பாட்டுலாம் செலக்ட் பண்ணியாச்சா”
“ஆமா… ஆமா… ரீமிக்ஸ் தான்… அதுக்காக நாலு சாங் செலக்ட் பண்ணிருக்கோம்.. எந்த லைன்லாம் வேணும்ன்னு பாத்து எடிட் பண்ணனும்… ஷாப்பிங் வேற இருக்கு”
அதற்கு ஷிவானியோ “ஆமா… ஷாப்பிங் தான மெயின்னு…. இன்னைக்கு சன்டே தான..ரெண்டும் பேரு ஃப்ரீ…. சோ இன்னைக்கே ஷாப்பிங் போலாம்… அப்படியே லஞ்ச் கூட வெளியே சாப்பிட்டுக்களாம்”
அதை கேட்ட சாரு “எங்கவேணாலும் போங்க… என்ன விட்ருங்க”
“ஓவரா ஆக்டிங் பண்ணாம…. ஒழுங்கா ரெடியாகி வர”
“முடியாதுன்னா முடியாது தான்” என்று கூறியவளின் திறன்பேசி அலற, யாரென்று பார்த்தவளின் முகம் மலர, அதை கவனித்த நிக்கியோ “நடத்து மச்சி… நடத்து” என்று கிண்டல் செய்ய,
அசடு வழிந்து சிரித்தவாறே திறன்பேசியுடன் தனது அறைக்குள் வந்தவள், அழைப்பை ஏற்று “ஹலோ.. சொல்லுங்க மிஸ்டர் வேலன்”
“என்ன பண்றீங்க…மிஸ் மதி”
“இப்போ தான் பிரேக்ஃபாஸ்ட்டே முடிஞ்சி இருக்கு”
“வாட்…. ப்ரேக்பாஸ்ட்டே… இப்போ தான் ஓவரா… டைம் என்னாகுது தெரியுமா”
“என்ன பண்றது… சன்டேனாலே அந்த குட்டி பிசாசுங்க அட்ராசிட்டிலாம் சமாலிக்குறதுக்குள்ள… ஒரு வழி ஆயிடுவேன்”
“யாரது..”
“கண்டிப்பா ஒருநாள் எல்லாரையும்… உங்களுக்கு இன்றோ கொடுப்பேன்… அப்போ தெரிஞ்சிக்கலாம்”
“அந்த… ஒருநாளுக்காகலாம் வெயிட் பண்ண முடியாது… வேணும்ன்னா… இன்னைக்கே வீட்டுக்கு வாரேன்… அவங்கள இன்றோ கொடு”
“இன்னைக்காக…. வாய்ப்பில்ல… நாங்க ஷாப்பிங் போகலாம்ன்னு பிளான் பண்ணிருக்கோம்…. சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”
“ஷாப்பிங் எங்கன்னு மட்டும் சொல்லு…. நீங்க வருறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடியே… நான் வந்துருவேன்”
“எதே…. நீங்க வரீங்களா…. நான்… உங்கள கூப்பிடவே இல்லையே”
“அப்போ… கூப்பிட மாட்டியா” என்று பாவமாக கேட்பவனை நினைத்து உதடு மடித்து சிரித்தவள் “எதுக்கு… இவ்வளவு அவசரம்”
“உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்”
“டெய்லி மீட் பண்ண தான செய்றோம்… நேத்துக்கூட மீட் பண்ணினோமே”
“ஆனா…. இன்னைக்கு மீட் பண்ணலயே”
“அதுக்கு”
“சோ… பாக்கணும்ன்னு தோணுது”
“ஓ… ஏன் அப்படி”
“தெரியல… பாக்கணும்ன்னு தோணுது… உனக்கு தோணல”
“இல்ல… டெய்லி பாக்குறோம்… அது மட்டுமில்லாம ஃபோன்ல கூட பேசிக்கிறோம்… அதுனால எதுவும் தோணல”
அதை கேட்டவன் அமைதியாகிருக்க
அதை உணர்ந்தவளோ “என்னாச்சி… பிலிங்கா”
“பின்ன… நான் என்ன சொன்னாலும் எண்ட் கார்டு போடுற… இருக்க தான செய்யும்”
“சரி சரி…. இப்போ என்ன…மீட் பண்ணனும்… அவ்வளவு தான”
“அதான் மாட்டேன் சொல்லிட்டியே… அப்புறம் என்ன”
“சரி ஓகே… மீட் பண்ணலாம், ஆனா… இப்போதைக்கு,எங்க ஷாப்பிங்ன்னு பிளான் பண்ணல… சோ பிளான் பண்ணிட்டு லொகேஷன் அனுப்புறேன்… வந்திருங்க”
“மீட் பண்றதுக்கே… இவ்வளவு கெஞ்சு வைக்குறா… இதெல்லாம் தேவையாடா வேலா” என்று முனங்கி கொண்டவனை
“என்ன…. சொன்னீங்க”
“இல்ல… பாக்கலாம் சொன்னேன்”
“எனக்கு நல்லாவே கேட்டுச்சு… அய்யோ பாவம்ன்னு ஓகே சொன்னேன்ல… எனக்கு தேவை தான்… லொகேஷன்லாம் ஷேர் பண்ண முடியாது…. முடிஞ்சா நீங்களே கண்டு பிடிச்சிவாங்க… பாய்” என்று கூறி அழைப்பை அணைத்துவிட்டு, அதை நினைத்தவாறே சிரித்தவள்
“அய்யோ… ஓவரா வேற பேசிட்டு வந்துட்டோம்… எப்படி… இந்த குட்டி பிசாசுங்கள சமாளிக்குறது” என்று புலம்பியவாறே சாப்பிட்டுக்கொண்டிருக்கும் நிக்கியின் அருகே வந்த அமர்ந்தவள் “ஷிவானி… எங்க”
“நீ வரலன்னு சொன்னதும்… வீட்டுக்கு போயிட்டா”
அதை கேட்டு அசடு வழிந்து சிரித்தவளை கண்டவள் “இப்போ… எதுக்கு பல்ல பல்ல காட்டுற..”
“பாவம்ல… ஆசையா கேட்டா… அதான் நானும் ஷாப்பிங் வரலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்”
“இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட போடாத…. உண்மைய சொல்லு… இதான் சந்தர்ப்பம்ன்னு…. உன் ஆள வர சொல்லபோற… அதான”
அதை கேட்டு “ஈஈ….” என்று அனைத்து பற்கள் தெரிய சிரித்தவளை கண்டவள் “பாக்க சகிக்கல… மூடிட்டு போய் ரெடியாகுற வழிய பாரு” என்று கூறி அறைக்குள் சென்றாள்.
சிறிது நேரத்தில் வீட்டியிலிருந்து கடைக்கு வந்தவர்கள் ஷிவானிக்கான உடையை தேர்ந்தேடுத்து கொண்டிருக்க, அப்போது, சாருவின் திறன்பேசிக்கு குறுஞ்செய்தி வர,
அதை பார்த்து சிரித்தவாறே வெளியே வந்து கண்டவளுக்கு தலையில் இடி விழுந்துவிட, வேகமாக கடைக்கு உள்ளே வந்தவள் “ஏய் நிக்கி…. என்ன பாக்க ஆபீஸ்லிருந்து வந்திருக்காங்க… நான் போயாகனும்… நீ ஷாப்பிங் முடிச்சிட்டு ஷிவானிக்கூட பத்திரமா வந்திரு… நான் கிளம்புறேன்” என்று கூறியவள் ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றாள்.
இப்போது வாங்க வேண்டியது எல்லாம் வாங்கிவிட்டு வெளியே வந்த ஷிவானியோ “அக்கா… மாமா” என்று கைகாட்டி, சிறிது தூரம் தள்ளி நிற்கும் புகழை காண ஓடியவளோ, அவனின் ஜீபில் ஏறிக்கொள்ள, அதை கண்டவன் “ஏய்… ஷிவானி குட்டி… என்ன, இந்த பக்கம்… அக்கா வரலையா”
“அக்காக்கூட தான் ஷாப்பிங் வந்தேன்.. அதோ வாராங்க பாருங்க” என்று கூறி முடிக்கவும் அவனருகில் வந்தவள் முறைத்தவாறே “என்ன… பாலோ பன்றீயா”
“சத்தியமா… நீ வந்திருக்கன்னு எனக்கு தெரியவே தெரியாது…இதோ நிக்கிறான்ல… இவன் ஆள பாக்க தான் வந்தோம்” என்று தன்னருகிலியிருந்த நண்பனை கைக்காட்ட,
அதற்கு, அவனின் நண்பன் “அவன் சொல்லுறது உண்மைதான்….. நம்புங்க சிஸ்டர்”
“நீங்க சொல்லுறதால நம்புறேன்”
“தேங்க்ஸ் சிஸ்டர்… அப்புறம்.. நான், அவனோட ப்ரெண்ட் வேலன்”
“ம் பாத்துருக்கேன்…. மேரேஜ் பங்ஷன்ல அவன் என்ன அசிங்கமா திட்டினப்ப… பல்ல காமிச்சிக்கிட்டே நின்னது…. நீங்க தான”
“ஆப்கோர்ஸ்… நானே தான்”
அதை கேட்டு, அவனை ஒரு பார்வை பார்த்தவள் “ஓகே… நீங்க வந்த வேலைய பாருங்க… நாங்க கிளம்புறோம்” என்று விடை பெற்று, ஷிவானியுடன் வந்து சேர்ந்தவள், அவள் நண்பர்களை அழைக்க சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து, நேராக சாருவின் அறைக்கு செல்ல,முலையில் தலையில் கைவைத்து “அம்மா அம்மா..” என்று பயந்தவாறே அமர்ந்திருந்தவளை கண்டு பதறியவள்,
அவளை கூட்டிக்கொண்டு படுக்கையில் அமரவைத்து தன் மடியில் சாய்த்து “ஒன்னும் இல்ல…. ரிலக்ஸ் சாரு” என்று தலையை வருடிகொடுக்க, அதில் உறங்கும் பெண்ணவளை, பாவமாக பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
தொடரும்…
– ஆனந்த மீரா
சாருக்கு என்னாச்சு ஏன் அவ திடீர்னு பயந்து ஷாப்பிங் மால் இருந்து வந்தா? இப்போ ஏன் இப்படி பயந்து அழுதுகிட்டு இருக்கா ???
பாக்கலாம் சொல்லுறேன் ❤️❤️thanks ka
என்னாச்சு சாருக்கு?
அடுத்த epi la varum thank you ❤️❤️
Charu ku enna Achu🙄
Thanks darlu ❤️❤️