Loading

பாகம் – 11

இப்போது மருத்துவமனையில் காரை நிறுத்தியதும், அவன் முகம் பாராமல் இறங்கி நடந்து செல்பவளையே ஏக்கமாக பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான்

 

அவனின் ஏக்கத்தை பெண்ணவள் உணர்ந்தாளோ என்னவோ, போனவள் திரும்பி அவனை நோக்கி வந்து “எனக்கு.. நீங்க ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா” என்று கேட்டாள்.

 

இத்தனை நாள், அவளின் வாடா போடா என்று உரிமையான அழைப்பு காணாமல் போக, அவள் தன்னை ஒதுக்குவதை புரிந்து கொண்ட ஆடவனுக்குள் சொல்ல முடியாத வலி ஏற்பட அதையும், அவளிடம் காட்டிக்கொள்ள விரும்பாதவன் “என்ன ஹெல்ப்”

 

“ஈவினிங் இந்த அட்ரஸ்க்கு… என்னோட ஸ்கூட்டிய கொண்டு வந்து தர முடியுமா” என்று, தன்னுடைய வருகை அட்டையை, அவனிடம் நீட்ட 

 

அதை கையில் வாங்கியவன் “ம்.. இப்போ ஈவினிங்… நான் உன்ன பிக் அப் பண்ண வர வேண்டாம்ன்னு இன்டைரக்ட்டா சொல்லுற… ரைட்” 

 

“அப்படியில்ல… ஏற்கனவே டையடா இருக்கு… இதுல மாறி மாறி அலஞ்சா இன்னும் டையடாகும்.. அதான்…”

 

“ஓகே… அப்போ ஷிவானி குட்டி”

 

“அவள… என் பிரெண்ட் விட்டு பிக் அப் பண்ண சொல்லிக்கிறேன்” 

 

“ஓகே…. ஈவ்னிங் உன் வண்டி வந்துரும்” என்று கூறியவன், அதற்குமேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.

 

அவன் சென்றதும் மருத்துவமனைக்குள் சென்றவள்,முதலில் சாருவிற்கு அழைத்து மாலை ஷிவானியை அழைத்து வர சொல்லிவிட்டு, தன்னுடைய எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வேலையில் கவனத்தை செலுத்தினாள்.

 

தான் பேசியது தன்னவனை காயப்படுத்துகிறது என்பதை அறிந்தாலும் அவளால் வேறு என்ன செய்திட முடியும் தன் நிலை தெரிந்தும் அவனை காதலித்ததே, அவள் செய்த பாவம், அவளுக்கு காலம் காட்டும் வழி என்ன என்பதை நாமும் பொறுத்திருந்து காணலாம்.

 

இப்படியே அனைத்தையும் மறந்து வேலையை முடித்துவிட்டு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தவள் சாருவை கண்டு அங்கிருக்கும் சோஃபாவில் அமர, அவளின் களைப்பை போக்குவதற்காக தேனீரை குடிக்க கொடுத்துவிட்டு அவள் எதிரே அமர்ந்தவள் “நேத்து ஹாஸ்பிட்டல்ல ஸ்டே பண்ணல… ரைட்”

 

“அய்யோ…. ஒருவேள ஷிவானி குட்டி எல்லாம் சொல்லிட்டாளோ” என்று நினைத்தவாறே தேனீரை குடித்து கொண்டிருப்பவளை கண்டவள் “உன்கிட்ட தான கேக்குறேன்… பதிலே வரல… அப்போ… எனக்கு தெரியாம… ஏதோ தில்லு முல்லு பண்ற போல”

 

“ஏய்… உனக்கு தெரியாம, நான் என்ன பண்ண போறேன்”

 

“அப்படியா… அப்போ சொல்லு… நேத்து நைட் ஹாஸ்பிட்டல்ல இல்லாம… எங்க இருந்த”

 

“சீனியரோட பிரதருக்கு உடம்பு சரியில்ல… அதான்… டிரீட்மெண்ட் பண்ண அவரு வீட்டுக்கு போயிருந்தேன்… அங்க வச்சி தான்…உன்னோட வாய்ஸ் கேட்டேன்… அதகேட்டுட்டு அவரும் பரவாயில்ல இங்கேயே ஸ்டே பண்ணுங்கன்னு சொன்னாரு… ஷிவானி குட்டி வேற இருந்ததால… சரின்னு அங்கேயே ஸ்டே பண்ணிட்டேன்”

 

“கரெக்ட் தான்…பட்… இததாண்டி நீ வேற ஏதோ… என்கிட்ட மறைக்குற மாதிரி தோணுது”

 

“நான்… என்னடி உன்கிட்ட மறைக்க போறேன்”

 

“ஓ… அப்போ.. நான் இதபத்தி உன்கிட்ட கேட்காம இருந்திருந்தாலும் சொல்லிருப்ப… ரைட்”

 

“கண்டிப்பாடி”

 

“ம்… அப்போ… நேத்து முந்தன நாள் நைட்க்கூட ஹாஸ்பிட்டல்ல ஸ்டே பண்ணலன்னு.. ஏன் சொல்லல”

 

“அன்னைக்கும்.. அவருக்கு டிரீட்மெண்ட் கொடுக்க போனதுல தான்… அப்படியே ஸ்டே பண்ணிட்டேன்.. செம டையடா… எல்லாத்தையும் ப்ரஷ் அயிட்டு வந்து சொல்லலாம்ன்னு… இருந்தேன்… அதுக்குள்ள… நான் கொல்ல குத்தம் பண்ணன மாதிரி இன்வெஸ்டிகேஷன் பண்ற”

 

“சரி போ… ப்ரஷ் ஆயிட்டு வா”

 

“ம்… ஷிவானி குட்டி… என்ன பண்றா.. ஆளையே காணோம்”

 

“அவங்க… அம்மா கால் பண்ணிருக்காங்க போல… ரூம்ல தான் பேசிட்டு இருக்கா”

 

அதை கேட்டவாறே அறைக்குள் சென்றவள் குளியறையில் புகுந்து தன்னை சுத்தபடுத்தி கொண்டு வேறு ஆடையில் வெளியே வந்தவள் சமையல் அறைக்குள் சென்று சாருவிற்கு சமைக்க உதவி செய்து கொண்டிருந்தவள் “சாரு…” என்று இழுக்க

 

“என்னடி இழுவ…”

 

“உனக்கு ஞாபகம் இருக்கா… நம்ம பிரெண்ட் மேரேஜ்ல ஒருத்தன் என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணான்னு சொன்னேன்ல” 

 

“ம்… ஞாபகம் இருக்கு, இப்போ என்ன மறுபடியும் அவன பாத்தியா”

 

“ஆமா… அவன் வேற யாரும் இல்ல… என்னோட சீனியரோட பிரதர் தான்…”

 

“என்னடி சொல்லுற… இப்போ மறுபடியும் உன்கிட்ட பிரச்சனை… எதுவும் பண்றானா” 

 

“இல்ல… லவ் பண்றான்” என்று கூறி முடிக்காமல் தோழியின் திருமணத்திலியிருந்து நேற்று, அவன் அம்மாவை பற்றி கூறியது வரை அனைத்தையும் கூறிமுடித்தவள் அடுத்ததாக நடந்த நிகழ்வையும் நினைத்து வெக்கபட்டு சிவந்து கொண்டிருந்தாள், அதை கவனித்து கொண்டிருந்த சாரு “ஏன்டி…. இவ்வளவு நடந்துருக்கு…. எப்போ வந்து சொல்லுற”

 

“அது…. எப்படியும் மேரேஜ் பங்ஷன்… அப்புறம்… இனி அவன பாக்க வாய்ப்பு இருக்காதுன்னு… அப்படியே சொல்லாம விட்டுட்டேன்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே தன்னவன் வந்ததை உணர்ந்தவள் சமையல் அறைக்குள் இருந்த ஜன்னல் மூலம், அவன் வந்ததை உறுதி படுத்தியவளின் கால்களோ அதற்குமேல நிற்பேனா என்றவாறு, அவனை காண துள்ளி குதித்து ஓடியவளை, கண்ட சாருவோ தலையில் அடித்து கொண்டு “ஏய்… ஏய் பாத்து போடி” என்று கூற 

 

அவள் கூறியது நிக்கியின் காதில் விழுந்ததா என்பதே ஐயம் தான், ஒருவழியாக அவனருகில் வந்தவள், அவன் முகத்தை காண துடித்து கொண்டிருந்தாள் ஆனால், அவனோ அவளை துடிக்கவிட்டவனாக வண்டியில் அமர்ந்தவாறே தலைக்கவசத்தை கூட கழட்டாமல், தன் காதிலுள்ள காது மொட்டுக்கள் மூலம் யாரிடமோ தீவிரமாக பேசி கொண்டிருந்தான்.

 

அப்போது தான், அவன் காக்கி உடையில் வந்திருப்பதையே கண்ட பெண்ணவள் “முத முத… இன்னைக்கு தான் போலீஸ் யூனிஃபார்ம்ல பாக்குறேன் இவன…. இருந்தும் என்ன பிரோஜனம்… மூஞ்ச காட்டுறானா பாரு மல குரங்கு… சும்மா சொல்ல கூடாது…. பாடிய நல்லாவே மெயின்டெய்ன் பண்றான்…. அப்படியே ஆம்ஸ்லாம் வச்சி மாஸா தான் இருக்கான்” என்று நினைத்தவாறே இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரத்தில் அழைப்பை பேசி முடித்தவன் தன் தலை கவசத்தை கழட்ட  அவனை மேலிருந்து கீழ் பார்வையிட்டவளோ, அவனின் அழகை கண்டு கிறங்கி உறைந்து நின்றாள்.

 

இப்போது அவள் முகத்திற்கு நேர் சொடக்கிட்டவனோ “ஹலோ…. போதும் சைட் அடிச்சது”

 

“நான் ஒன்னும் சைட்லாம் அடிக்கல… வண்டி சாவிய கொடுத்துட்டு கிளம்புங்க” 

 

“கிளம்புறதா… முத முத வீட்டுக்கு வந்துருக்கேன்… உள்ள கூட்டிட்டு போய்… காபி டீ கொடுக்கணும்ன்னு தோணலயா”

 

“சரி… உள்ள வாங்க” என்று கூறி, அவனை உள்ளே அழைத்து வந்தாள்.

 

வீட்டை சுற்றி முற்றி பார்த்தவன் “நீ… மட்டும் தான் இருக்கியா…. என்ன”

 

“இல்ல… என் பிரென்ட் சாரு வீடு… அவளோட தான் தங்கிருக்கேன்”

 

“எங்க தங்கச்சிய காணும்”

 

“ஏதே தங்கச்சியா…”

 

“ஆமா…. லவ்வரோட ப்ரெண்ட் தங்கச்சி தான” என்று கூறிக்கொண்டிருக்க,

 

அதற்கு சாருவோ “இதோ வந்துட்டேன்… அண்ணா” என்று கூறியவாறே, அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

 

“எப்படி இருக்க… வொர்க்லாம் எப்படி போகுது”

 

“எல்லாம் ஓகே தான்…. என்ன… ரொம்ப நாள் கழிச்சு… இந்த பக்கம் காத்து வீசுது”

 

“உன் அண்ணிய பாக்க தான் வந்தேன்” 

 

“அப்போ… என்ன பாக்க வரல… போடா” 

 

இவர்கள் பேசுவதை அனைத்தையும் கேட்டு குழம்பிய நிக்கியோ “இங்க… என்ன நடக்குது…. அப்போ…. உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தர் நல்லாவே தெரியுமா”

 

“நல்லாவே தெரியுமே” என்று இருவரும் ஒரு நேரத்தில் கூறி சிரிக்க,

 

அதை கேட்டவள் சாருவை தீயாய் முறைத்தவாறே சமையல் அறைக்குள் சென்றாள்.

 

அதை கண்டவன் “எதுக்கு… இப்படி முறைக்குறா”

 

“அது..ஒன்னுமில்ல…. கொஞ்சம் நேரம் முன்னாடி உன்னபத்தி தான் பேசிட்டு இருந்தா… நான் கூட தெரியாத மாதிரியே கேட்டுட்டு இருந்தேனா… அந்த காண்டுல தான் போறா போல”

 

“என்ன பத்தியா”

 

“ஆமா…நீ… அவள பண்ணின டார்ச்சர் பத்தி தான் சொல்லிட்டு இருந்தா”

 

“ஓ… எனக்கு.. அவ, உன் பிரெண்ட்டுன்னு தெரிஞ்ச அப்புறம் தான் நிம்மதியா இருக்கு”

 

“ஏன்…. அப்படி”

 

“எப்படியும்… நீ அண்ணன பத்தி பேசி பேசி… அவ மனச மாத்திருவன்னு நம்பிக்க தான்” 

 

“என்ன அண்ணா கேப்புல… என்ன மாமா வேலை பாருன்னு சொல்லாம சொல்லுற”

 

“அண்ணன்… பாவம் இல்லையா” என்று கூறி கொண்டிருக்க “மாமா” என்று கூறியவாறே ஷிவானியோ ஓடி வந்து அவளை கட்டிக்கொள்ள, மூவரும் சேர்ந்து சிரித்து அரட்டை அடித்து கொண்டிருக்க

 

அதே சமயம் சமையல் அறையிலிருந்து வெளியே வந்தவள், அவனுக்காக கொண்டு வந்த தேனீரை கொடுத்துவிட்டு அவன் எதிரேயிருக்கும் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

 

அவர்கள் இருவருடன் அரட்டை அடித்தவாறே தேனீர் குடித்து முடித்தவன் “சரி ஓகே… நான் கிளம்புறேன்” என்று கூறியவன், சாருவிடம் “அண்ணனுக்காக பாத்து பண்ணுமா” என்ற ரீதியில் பாவமாக, அவளுக்கு மட்டும் புரியும்படி கண்ஜாடையில் கூற, அதை கேட்டு சிரித்தவள் “சரி” என்று தலையாட்ட, அவளை கண்டு புன்னகைத்துவிட்டு வெளியே வர, பின்னயே அவனை வழியனுப்ப வந்த நிக்கியோ “எப்படி போவீங்க”

 

“பக்கத்துல தான் பிரெண்ட்…. எனக்காக வெயிட் பண்றான்… அவன்கூட போயிடுவேன்” என்று வண்டி சாவியை கையில் கொடுத்தவாறே

 

“உன் மனசுல என்ன இருக்கோ… அத ஓபனா சொல்லு… அதவிட்டுட்டு… அடுத்தாள கூப்பிடுற மாதிரி வாங்க போங்கன்னு சொல்லி ஹார்ட் பண்ணாத…. உன்னால ஒரு பிரெண்ட்டா கூட ஏத்துக்க முடியலல” என்று கூறிவிட்டு செல்பவனின் பேசியில் இருந்த வலிகளை உணர்ந்தவளோ “டேய் புகழ்” என்று அழைக்க,

 

அதை கேட்டு திரும்பியவனோ “என்ன” என்று வினவ,அவளோ “போலீஸ் யூனிஃபார்ம்ல செம மாஸா…இருக்கடா”

 

அதை கேட்டு சிரித்தவனோ “தேங்க்ஸ்டி பார்ட்னர்” என்று கூறி சென்றான்.

 

அவன் சென்றதும் வீட்டுக்க்குள் வந்தவளோ சோஃபாவில் கண் மூடி சாய்ந்து அமர்ந்திருக்க, தோலில் கைவைத்து அவளருகில் அமர்ந்த சாருவோ “ஏய் நிக்கி…. என்னாச்சி.. ஆர் யூ ஓகே”

 

“ஓகே தான்டி”

 

“இல்ல… நீ ஏதோ கன்பியூஷன்ல இருக்க… என்னன்னு சொல்லுடி”

 

அவளோ, சாருவை கட்டிக்கொண்டு அழ தொடங்கிவிட்டாள்.

 

அதை கண்டு பதறியவள் “ஏய் நிக்கி… அழாம… என்னன்னு சொல்லுடி”

 

அதற்கு மேல் உண்மைய மறைக்க வேண்டாம் என்று எண்ணியவள் அவளிடம், அனைத்தையும் கூறிவிட்டு மறுபடியும் அவளை இறுக்கி அணைத்து அழுதாள்.

 

“நிக்கி… அப்போ உனக்கு அண்ணாவ பிடிச்சுருக்கா…. நீ அவர லவ் பன்றீயா”

 

“ஆமாடி… எனக்கு தெரியாம… நான் புகழ லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்… அத.. இப்போ தான் என்னால உணர முடியுது..”

 

“வேணும்ன்னா… இதபத்தி புகழ் அண்ணாக்கிட்ட பேசி பாருடி… அதவிட்டுட்டு மனசுக்குள்ளயே வச்சிக்கிட்டு அழுதா… எப்படிடி சொலியூஷன் கிடைக்கும்”

 

“எனக்கு நம்பிக்கயில்லடி…. இந்த விஷயத்த….. இதோட விட்ருரலாம்… அவன்கிட்ட,கடைசிவரைக்கும் என் காதல சொல்லமாட்டேன்… இந்த விஷயத்த அவன்கிட்ட சொல்லி… நான் யாரையும் கஷ்டபடுத்த விரும்பல”

 

“பைத்தியம் மாதிரி பேசாதடி… நான் வேணா… அண்ணன்கிட்ட பேசி பாக்குறேன்டி”

 

“எக்காரணத்துக்கு கொண்டும்… இந்த விஷயம்… அவனுக்கு தெரியவே கூடாது… இது என் மேல சத்தியம்” என்று கூறி அவள் கரம் பற்றி, தன் தலையில் வைத்து கூறிவிட்டு சென்றாள்.

 

தன்னாலும், அவள் வாழ்க்கைக்கு உதவி செய்ய முடியவில்லையே என்றவாறே போகும், அவளையே ஏக்கமாக பார்த்தாள்.

 

பாவம்,தோழியை நினைத்து வருத்தபடும் பெண்ணவளுக்கு தெரியவில்லை, கடவுள் தன்னையும் விட்டுவிக்க வில்லையென்று,

 

வீதி சாருவின் வாழ்க்கையிலும் என்ன செய்ய காத்திருக்கு என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடரும்…..

                                       – ஆனந்த மீரா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. இந்த நிக்கி வெளியில சொல்லாம காதல மனசுக்குள்ளே வச்சு அழுதுட்டு இருந்தா எப்படி அவ காதல் நிறைவேறும் அவளும் கஷ்டப்பட்டு புகழையும் கஷ்டப்படுத்திகிட்டு இருக்கா.

      அங்கங்க எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணுங்க

      1. Author

        ரொம்ப இருக்கோ, எத்தன தடவ read panninalum தட்டு பட மாட்டிக்குது