உ
பாகம் – 1
திருநெல்வேலி மாவட்டம் பேருந்து நிலையத்தில் உள்ள நாகர்கோவில் செல்லும் பேருந்தியில் ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தவள், ஜன்னல் வழியே எட்டிபார்க்க அவளின் மாமா தண்ணீர் குடுவையை ஜன்னல் வழியே கொடுத்துவிட்டு “இப்போ போய் இறங்கினதும் மறக்காம கால் பண்ணு, அப்புறம் பெங்களூர் எப்போ கிளம்புற”
“மூணு நாலு நாளுல கிளம்பிருவேன் மாமா, அங்க போய் இறங்கினதும் கண்டிப்பா கால் பண்றேன்”
“சரிமா போற இடத்துல பாத்து சூதனமா இருந்துக்கோ, அப்புறம் மாமா சொன்னதெல்லாம் மனசுல வச்சிக்க”
“எல்லாம் ஞாபகம் இருக்கு மாமா, நீங்க என்ன நினைச்சி கவலபடாம உங்க உடம்பையும் சரணியையும் நல்லா பாத்துக்கோங்க” என்று கூறிமுடிக்கவும் பேருந்து கிளம்ப தன் கையை ஆட்டியவாறு அவரிடம் இருந்து விடைபெற்றாள்.
இப்போது, அந்த அழகான பேருந்து பயணத்தை கழிக்க ஜன்னல் வழியே அனைத்தையும் பார்த்து ரசித்தவாறே காதில் தலை ஒலிப்பான்களை மாட்டியவாறு, அதில் பாடல்கள் ஒலிக்கவிட்டு கேட்டு கொண்டே ஒன்றரை மணி நேரத்தில் நாகர்கோவில் வந்து சேர்ந்தாள்.
அவள் வருவதை அறிந்த, அவளின் தோழி அவளுக்காக பேருந்து நிலையத்தில் வண்டியுடன் காத்துக்கொண்டிருக்க,
அவள் வந்து வண்டியில் அமர்ந்ததும் வண்டியை எடுத்தவள் நேராக ராமராஜ் திருமண மண்டபத்தில் வந்து நிறுத்த வண்டியில் இருந்து இறங்கியவள் கல்யாண மண்டபத்திற்குள் சென்று கல்யாண பெண்ணான தன் தோழி மற்றும் அவளின் பெற்றோரை பார்த்துவிட்டு தன்னைக்கென்று ஒதுக்கபட்ட அறையில் வந்து ஓய்வு எடுத்தாள்.
சிறிது நேரம் கழித்து எழுந்தவள் தோழிகளிடம் அரட்டை அடித்துவிட்டு சாப்பிட்டு விட்டு உறங்கினாள்.
மறுநாள் காலையில் எழுந்தவள், காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு புடவை கட்டி தன்னை அலங்கரித்து கொண்டு இருக்க அவளின் தோழி “என்ன டாக்டர் அம்மா ரெடியா”
“இதோ அஞ்சு நிமிஷம் டி” என்று தன்னை அலங்கரித்து முடித்தவள் இறுதியாக தலையில் மல்லி பூவை வைத்து விட்டு “ஏய் சாரு எப்படி இருக்கேன்” என்று ஆடியவாறு கேட்க,
“ம் ஒகே தான் ஆனா, கொஞ்சம் ஓவரா தான் இருக்கு”
“ஏன் டி ஓவர்ங்குற” என்று கேட்டுவிட்டு தன் எதிரே இருக்கும் கண்ணாடியில் தன்னை சரி பார்த்து கொண்டு இருக்க,
சாரு “பின்ன நீ இருக்குற அழகுல மாப்பிள மெர்சலாயி உன் கழுத்துல தாலி கட்டிட்டாருன்னா நம்ம பிரெண்ட்டோட நிலைமைய நினைச்சி பாரு,அதுனால..” என்று கூறி இழுத்தவாறு, கண்ணாடிக்கு அருகில் இருந்த மேசையில் வைக்கபட்டிருந்த சந்தன குப்பியில் தண்ணீர்விட்டு கலக்கி வைத்த சந்தனத்தை,
அவள் தெரியாத வண்ணம் தன் கையில் எடுத்து கையை பின்னே வைத்தவாறு அவளின் அருகில் வந்து கன்னத்தில் தடவி விட்டு “இப்போ சூப்பரா இருக்க டி” என்று கூறி, ஓடி விட
“அடியே சாரு, நீ ஓடிட்டா உன்ன விட்ருவேன்னு நினைச்சியா, உன்ன என்ன பண்றேன்னு பாரு” என்று கூறி, அவளும் தன் இரண்டு கை நிரம்ப சந்தனத்தை கையில் எடுத்தவாறு, அவளை பின் தொடர்ந்து ஓடினாள்.
அவளை தொடர்ந்து தன் கையில் சந்தனத்துடன் ஓடியவளை,அந்த மண்டபத்தை சுற்றி விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் இடித்து தள்ளிவிட, அதில் சுற்றியவள் நிலை தடுமாறி ஒரு ஆடவன் மீது மோதி,அவனோடு சேர்ந்து கீழே விழ, விழுந்ததில் தன் கையில் இருந்த சந்தனம் மொத்தமும்,
அவன் கன்னத்தில் பதிந்ததை கண்டவள் “சாரி சாரி” என்று கூற, அதை சிறிதும் கேட்காதவனாக, அவளை முழுங்கும் பார்வை பார்க்க,
அதை கண்டவள், அவனிடம் இருந்து விலகி எழுந்து தன் கரம் கொடுத்து, அவன் எழும்ப உதவ, அவனும் கரம் பிடித்து எழுந்து தன் கண்களால், அவளை அளவு எடுத்தான்.
அப்போது, அவள் “சாரிங்க, என் பிரென்ட்ட பிடிக்க போனேன் தெரியாம உங்கமேல ஸ்லிப் ஆயிட்டேன், வெரி சாரி” என்று கூறி செல்ல போனவளை கை பிடித்து தடுக்க,
அதில் வேகமாக திரும்பியவள், தன் புருவம் உயர்த்தி என்ன என்பது போல் கேட்க,
“ஏய், இத உங்க அப்பனா துடைப்பான்” என்று தன் கன்னத்தில், அவள் தடவிய சந்தனத்தை காட்டியவாறு கேட்க,
அவன் கூற்றியில் கடுப்பானவள் “ஹலோ மிஸ்டர் பாத்து மரியாதையா பேசுங்க”
“அது எப்படி, ஒரு அழகா பெர்சனாலிட்டியான பையன் உங்க கண்ணுல பட்டுற கூடாத, உடனே அவன மயக்க அசிங்கமே இல்லாம மேல விழுற, இப்படி பட்ட உனக்குலாம் எதுக்கு டி மரியாத”
“ஹலோ என்மேல தப்பு இருக்குன்னு பொறுமையா போனா, நீ உன் இஷ்டத்துக்கு பேசுற, அது எப்படி நா உன்ன மயக்க பாக்குறேனா, முதல என் அழகுக்கு நீயெல்லாம் ஒர்த்தான ஆளே இல்ல”
“இப்போ, நீ வந்து ஒழுங்கா என் கன்னத்துல உள்ள சந்தனத்த துடைக்கலன்னு வையேன், அப்புறம் நடக்கபோறத நினைச்சி ரொம்ப வருத்தபடுவ, பாத்துக்கே”
அதை கேட்டவள், தன்னால் தன் தோழியின் திருமணத்தில் பிரச்சனை வந்துவிட கூடாது, என்று எண்ணி தன் இடுப்பில் இருந்த கைக்குட்டையை எடுத்து, அவன் கன்னத்தை துடைக்க, அவள் துடைத்து முடிக்கும் வரை வச்ச கண்ணு வாங்காமல் பார்த்தான்.
அதை கண்டவள், அவன் கன்னத்தை துடைத்து முடித்த கைக்குட்டையை கீழே வீசியவாறு, அவனை தீயாய் முறைத்துவிட்டு சென்றாள்.
போகும் அவளை பார்த்தவாறு கீழே இருந்த, அவளின் கைக்குட்டையை எடுத்து பேன்ட் பாக்கெட்டில் வைத்தவன்,தன் முடியை கோதியவாறு சிரிக்க, அதை கண்ட
அவன் நண்பன் “பார்த்த ஒரு லூக்குல விழுந்துட்டான்டா மாப்பிள்ள” என்று பாடி நக்கல் செய்ய, தன் கையை அவன் கழுத்தோடு கட்டி இழுத்து சென்றான்.
இப்போது அவனை நினைத்து கோவமாக அறைக்கு சென்றவள், அங்கு இருக்கும் படுக்கையில் இருந்த தன் உடைமை பையை தூக்கி எறிந்துவிட்டு அமர்ந்திருக்க தன்னை பின் தொடர்ந்து ஓடி வந்தவளை காணும் என்று தேடி அவளின் அறைக்கு வந்த சாரு
அங்கு அவள் கோவமாக அமர்ந்திருப்பதை கண்டு”ஏய் என்னாச்சி டி என்ன துரத்தி வந்தவ, இப்போ ஏன் கோவமா ரூம்ல வந்து உக்காந்து இருக்க”
“சரியான திமிரு பிடிச்சவன் ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பிஹவ் பண்ணனும்ன்னு கூட தெரியாத இன்டீசென்ட் பெல்லோவா இருக்கான்” என்று இவள் கூறிய கூற்றியில் குழம்பியவள்,
“எவன் எப்படி பிஹவ் பன்னினான் யாரு அவன், கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுறீயா” என்று கேட்க, அவள் நடந்த அனைத்தையும் கூற அதற்கு சாரு “சரி விடு வந்த இடத்துல எதுவும் பிரச்சன பண்ண வேண்டாம்”
“நானும் அதுனால தான் பொறுமையா வந்துட்டேன் இல்லன்னு வை, அவன கைமா பண்ணிருப்பேன்”
“சரி சரி கோவப்படாம வா, பிரியா கல்யாணத்துக்கு எதாவது ஹெல்ப் பண்ணலாம்” என்று கூற அவளும் அதுவே சரியென்று நினைத்து தன் கன்னத்தில், அவள் தடவிய சந்தனத்தை துடைத்துவிட்டு சென்றாள்.
இப்போது ஒருவழியாக, அவள் அறையை தேடி கண்டு பிடித்து உள்ளே வந்தவன் அவள் அறையில் இல்லை என்பதை கண்டு சற்று வாடியவனின் கண்கள் அவள் அறையை நோட்டமிட,
அங்கே கண்ணாடிக்கு அருகே மேசையில் இருந்த சந்தன குப்பியில் இருந்த காய்ந்த சந்தனத்தை கண்டவனின் மூளைக்கு ஒரு யோசனை எட்ட ,
அந்த காய்ந்த சந்தனத்தில் தண்ணீர் ஊற்றி குழப்பிவன் தன் விரல் கொண்டு அதை எடுத்து, அந்த மேசையில் “ஐ லவ் யூ டி மை பார்ட்னர்” என்று எழுதிவிட்டு தன் கையில் வைத்திருந்த ரோஜாவுடன் சாக்லேட்டும் அதன் அருகில் வைத்துவிட்டு கண்ணாடியை பார்க்க அவள் அவன்மேல் சந்தனம் தடவும்போது நிகழ்ந்த காட்சி தெரிய
அதை நினைத்து வெக்கத்துடன் திரும்ப, சிறிது நேரம் முன்னாடி அவள் கோபத்தில் வீசிய பையில் இருந்து கீழே வீழுந்த கோப்பு அவன் காலில் பட , அதை எடுத்து நோட்டமிட்டவனின் இதழ் விரிந்தது, அந்த கோப்புடனே அறையை விட்டு வெளியே வந்தான்.
அவனை கண்ட அவன் நண்பன் “என்ன மச்சான், இங்க வந்தும் பைலும் கையுமா அலையுற இத மட்டும் கல்யாண மாப்பிள பாத்தான் வையு அப்புறம் டின்னு கட்டிடுவான், உன்ன”
“டேய் டேய் மச்சான், இது நீ நினைக்கிற பைல் இல்ல”
“பின்ன இது என்ன பைல், யாரு கொடுத்தா”
“கொடுக்கல டா, நானா எடுத்துகிட்டேன் நீயே பாரேன்” என்று அவன் கையில் அந்த கோப்பினை கொடுத்தான்.
அதை தன் கையில் வாங்கி ஆராய்ந்தவன் “டேய் மச்சான் நிக்கித்தா யாரு, எதுக்கு அந்த பொண்ணு பைல நீ எடுத்து வச்சிருக்க” என்று கேட்க,
“நிக்கித்தா எனக்கு சொந்தமாக போறவ டா”
“என்னடா சொல்லுற” என்று குழம்பியவாறு கேட்டான்.
“டேய், இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி, என் கன்னத்துல சந்தனம் தடவினால அவ தான் டா நிக்கித்தா”
“ஓ இதுக்கு பேரு தான் லவ் அட் பஸ்ட் சைட்டு போல சரி அதவிடு, இந்த பைல எடுத்துட்டு வந்ததா பார்த்தா ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டன்னு தோணுது, அது என்னன்னு சொல்லு டா”
“பிளான் பண்ணிட்டேன் தான் ஆனா, இப்போ சொல்ல மாட்டேன் வெயிட் அண்ட் வாட்ச்” என்று கூறிவிட்டு அவளின் கோப்புடன் சென்றான்.
- போகும் அவனை பார்த்தவாறு “பயபுள்ள சஸ்பென்ஸ்ல என்ன மண்ட காயவச்சிட்டு போறத பாரு” என்று புலம்பியவாறு அவன் பின்னே சென்றான்.
நிக்கித்தா தான் இந்த கதையோட நாயகி ஊர் – திருநெல்வேலி, சிறு வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த காரணத்தினால் அவளை அவளின் தாயமாமன் தான் வளர்த்து டாக்டர் ஆக்கினார். இவளின் தங்கை பெயர் – சரண்யா, பதிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்.
தொடரும்….
– ஆனந்த மீரா
அருமையான ஆரம்பம்.. அட பாவி திருட்டு பயலே😂😂 அந்த புள்ளையோடதை எடுத்துட்டு வந்துட்டு… ஏற்கனவே கொலை வெறியில இருக்கா.. 😂😂 சூப்பர் டார்லிங் 😍 சீக்கிரம் அடுத்த episode போடு
Thank you darlu ❤️❤️
சூப்பர் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
Nandri 🙏🙏
Super writer ji.. ஆரம்பமே காதல்ல விழுந்துட்டாரா நம்ம ஹீரோ🙈🙈… இருந்தாலும் எப்போவும் போல் ஹீரோக்கு பிரன்டா வாக்கப்பட்டு ஊமைகுத்து வாங்குற ஜீவன் போல இங்கயும் ஒரு அப்பரசண்டி🤣🤣… பேஸ் பேஸ் ரொம்ப நன்னாயிருக்கு👌👌… பாப்போம் அந்த பைல் ல அப்படி என்னதான் இருக்குனு… 🤔🤔
Thanks granny ❤️
கதை சூப்பரா தொடங்கி இருக்க க்காவ்… ரைட்டரே.
ஒரு திருட்டுப்பையன ஹீரோ ஆக்கி இருக்கமா நீனு 🫣… அந்த பொண்ண படுபாவி பாடா படுத்துவானோ… ஒரு சந்தனத்த வச்சு எவ்வளவு தூரம் இழுத்துட்டான்…
கதை நல்லா இருக்கு டா 😍
Thank you so much ❤️❤️
அட திருட்டு கொட்டா டா நீயி ஹீரோ னு சொன்னாங்க பெரிய திருடா இருக்க😂😂
ப்ப்பா என்ன நடிப்பு ஒரு செகண்ட் எனக்கே கடுப்பாகிருச்சு என்ன பேச்சு மேன் அது. இவரு பெரிய அழகன் இவர் மேல மோதுறாங்க. போடா போட்டாட்டோ இப்பிடி திட்டிருப்பேன் அது உண்மையா இருந்தா. 😏
இவ்ளோ கடுப்பாகிட்டியே அவளை நாளைக்கு எப்படி பேசுவீங்க சார்ர்ர்.
சூப்பரு யூடி டியர் ❤️😍😍
Thanks chellam ❤️
கண்டதும் காதலில் விழுந்துவிட்டார் ஹீரோ. அவளோட ஃபைல் எடுத்துட்டு போய் என்னடா பண்ண போற??
அருமையான ஆரம்பம் சூப்பர்👌👌
Wait panni pakkalam enna parannu, நன்றி அக்கா ❤️❤️