Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 8 ( 8.1 )
மாட்டு பொங்கல் ஸ்பெஷல் அத்தியாயம்

ஜோசியரை சந்தித்த பின் தேவன் தேவகி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றிருக்க , ஆடு தானாக வந்து கசாப்பு கடைக்காரனிடம் தன்னை வெட்டிக்கொள் என்று கூறுவது போல் , பத்மா தானாகவே வந்து அவர்களின் சதி வலையில் மாட்டிக்கொண்டார்.

 தன் தோழி ஒருவரது மகனின் முதல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பத்மாவிற்கு அவரது தோழிகள் அனைவரும் சேர்ந்து, என்ன தான் இருந்தாலும் பெண் பிள்ளை மனம் முடித்து பாதியில் நம்மை விட்டு சென்று விடுவாள் , இதே  ஆண் பிள்ளையென்றால் இறுதி வரை நம்முடன் இருப்பான் , அதனால் நீயும் ஒரு ஆண் பிள்ளை பெற்றுக்கொள் என்று உசுப்பேற்றி விட , பத்மாவும் எங்கே தன் மகள் மனம் முடித்து சென்றுவிட்டால் , தான் மீண்டும் தனிமையை உணர நேரிடுமோ என்று பயந்தவர் ,  நிச்சயம் தான் ஓர் ஆண் பிள்ளையை பெற்றுக்கொள்ள வேண்டும்  என்று உறுதி எடுத்துக்கொண்டார்.

அதன் விளைவாக தினம் தினம் இரண்டாவது பிள்ளை , அதுவும் ஆண் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆதி கேசவனை பத்மா நச்சரிக்க துவங்கினார். ஆதி கேசவன் பத்மாவிடம் உண்மையை கூற முடியாமல் தவித்து கொண்டிருந்தார். 

இரண்டாவது பிள்ளை பெற்று கொள்ளும் பேச்சை எடுத்தாலே ஏதோ ஒரு காரணம் சொல்லி தவிர்த்து வரும் கணவனை காண்கையில் பத்மாவிற்கு அவர் மீது வெறுப்பு அதிகரிக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த பத்மா தன் மனக்குமுறலை தன் மாமியார் தேவகியிடம் கொட்டி விட்டார்.

தேவகியும் அதற்காகவே காத்திருந்தவர் போல் , எப்படியாவது தன் மருமகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் , ஜோசியர் கூறியது போல் அவள் இறந்து விட கூடாது என்பதை மட்டுமே கருத்தில் கொண்ட தேவகி , பத்மாவிற்கு சில பல குறுக்கு வழிகளை போதித்து ஆதி கேசவனை அவர் வழிக்கு கொண்டு வர போதிக்க , முதலில் பத்மா அதற்கு மறுத்தாலும் , பின் ஆண் பிள்ளை மேல் அவர் கொண்ட மோகம் தவறென்று தெரிந்தும் , தேவகியின் பேச்சிற்கு செவி சாய்க்க வைத்தது.

ஆசை பேராசையாய் மாரும் போது எத்தனை உயர்ந்த மனிதனும் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு, அப்பேராசையின்  பின்பு ஓட துவங்கி விடுகிறான். இதில் நம் பத்மா மட்டும் விதி விளக்கா என்ன ?

ஆண் பிள்ளை மேல் கொண்ட பேராசையால் , பத்மா அறம் தவறி விட்டார். அந்நேரம் பார்த்து ஆதி கேசவனுக்கும் அவர் வேலை பார்க்கும் கல்லூரியில்  வேலை பளு அதிகமாக இருந்ததால் , அவரும் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டார். அதன் விளைவாக பத்மா இரண்டாம் முறையாக கரு தரித்து விட்டார்.

பத்மாவின் இச்செயலை அறிந்த ஆதி கேசவன் அவர் மேல் கோவம் கொள்ள , பாவம் பத்மா அறியவில்லை அவர் செய்த இம்முட்டால் தனத்தினால் அவர் மட்டுமல்லாது இவ்வுலகத்தையே காணாத அவரின் சிசுவும் கூட எமனின் பாச கயிருக்கு இரையாக போகின்றனர் என்று.

ஆதி கேசவன் பத்மாவிடம் உண்மையை  சொல்லவும் முடியாமல் அதே நேரம் அவர் செய்த காரியத்திற்கு அவர் மேல் கோவம் கொள்ளவும்  முடியாமல்  தவித்தார்.

அதே நேரம் தேவனும் தேவகியும் மனதை கல்லாக்கி கொண்டு பத்மாவிற்கு பிறக்கவிருக்கும் குழந்தையை பலி கொடுப்பதாக முடிவு செய்தனர். அதற்கு முதலில் அவர்கள் ஆதி கேசவனை பகடைகாயாக மாற்றினர்.

எங்கே தான் பத்மாவிடம் உண்மையை மறைத்தது அவருக்கு தெரியவந்தால் எங்கே  அவர்  அதை பெரிதாக எடுத்துக்கொண்டு தன்னை வெறுத்து விடுவாரோ என்று  பயந்த ஆதி கேசவன் வேறு வழியின்றி தன் தாய் தந்தையர் சொன்னதற்கெல்லாம் ஆமாம் சாமி போட துவங்கினார். இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் , தேவகி ஆதியிடம்,  இரண்டாவது பிள்ளை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் வீட்டில் நிச்சயம் ஓர் துர் மரணம் நேரும் அதுவும்  அதிகபட்சம் பார்த்தால் பத்மா தான் அதில் பலியாவார் என்று  ஜோசியர் கூறியதாக ஓர் குண்டை தூக்கி போட்டவர் மறந்தும் கூட குழந்தையை பலி குடுக்க போவதை பற்றி  அவரிடம் கூறவில்லை.

ஏற்கனவே குற்ற உணர்ச்சி , கோவம் , பயம் என்று உணர்ச்சிகளின் பிடியில் ஆட்கொண்டிருந்த ஆதி, தேவகி கூறியதை கேட்டு மேலும் குழப்பம் அடைந்தவர் , இறைவன் மேல் பாரத்தை போட்டு கொண்டு தேவகி சொன்னதற்கெல்லாம் தலையாட்ட துவங்கினார்.

அதே நேரம் எங்கே மருத்துவரிடம் சென்றால் பத்மாவிற்கு உண்மை தெரிந்து விடுமோ  என்று  பயந்த தேவகி பத்மாவை அழைத்து தனக்கு தெரிந்த ஓர் மருத்துவச்சி இருக்கிறார் என்றும் அவர் பிரசவம் பார்த்தால் நிச்சயம் ஆண் பிள்ளை தான் பிறக்குமென்று ஆசை வார்த்தை பேசி, பத்மாவின் ஆண் பிள்ளை மேலிருந்த மோகத்தை தனக்கு சாதாகமாக  பயன் படுத்தி கொண்டார். 

தனக்கு பின் இத்தனை சதி வலைகள் பிண்ண படுவதை உணராத பத்மாவும் எப்படியேனும் ஓர் ஆண் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்னும் வேகத்தில் தேவகி சொன்னதற்கெல்லாம் பூம்பூ மாடு போல் மண்டையை ஆட்டினார்.

வயதில் மூற்றவர்கள் தன் சந்ததியை நல்வழி படுத்தி அவர்களை சரியான பாதையில் அழைத்து செல்ல வேண்டும். ஆனால் இங்கோ தேவன் , தேவகி , ஆதி கேசவன் , பத்மா என்று ஆளாளுக்கு சுயநலவாதியாக மாறி தத்தம் தேவைகளை தவறென்று தெரிந்தும் அவ்வழியில் சென்று பூர்த்தி செய்துக்கொள்ள விழைய , பாவம் இதை ஏதும் அறியாத மூன்று வயதே நிரம்பிய வந்திதா , மேடிட்டிருந்த தன் அன்னையின் வயிற்றை மணிக்கு ஒரு முறை வருடி , அதில் ஆசை முத்தம் பதித்து தன்னுடன் புதிதாக இணையவிருக்கும் தன் தங்கையை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்க துவங்கினாள். 

எட்டு மாதங்களுக்கு பின் ….

” வந்தி பாப்பா , உனக்கு சீக்கிரமா தம்பி பாப்பா வர போறான்டா செல்லம் ” என்று தன் மகளிடம் அத்தனை மகிழ்ச்சியாக கூறி கொண்டிருந்த பத்மாவை இடைமறைத்த வந்திதா ,  ” ஐய் ஜாலி .. என் கூட விளையாட  குட்டி பாப்பா வர போது . ஐய் ஜாலி … ” என்று தன் பால் பற்கள் தெரிய சிரித்தவள் , பின் என்ன நினைத்தாளோ தெரியவில்லை “ மம்மி  எனக்கு தம்பி பாப்பா வேண்டாம் , தங்கச்சி பாப்பா தான் வேணும்  ” என தன் மழலை குரலில் அடம்பிடிக்க துவங்கி விட்டாள்.

அதை கேட்டு கோபமடைந்த பத்மா ” வந்தி நா தான் சொல்லுறேன்ல , உனக்கு தம்பி பாப்பா தான் வர போகுது. ஒழுங்கா நா சொல்ற பேச்ச கேளு ” என்று வந்திதாவை அதட்டினார். ஆனால்  வந்திதாவோ ” நோ மம்மி எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும் ”  என அடம்பிடித்தாள்.

அதை கேட்டு கோபமடைந்த பத்மா ” வந்தி நா தான் சொல்லுறேன்ல , உனக்கு தம்பி பாப்பா தான் வர போகுது. ஒழுங்கா நா சொல்ற பேச்ச கேளு ” என்று வந்திதாவை அதட்டினார். 

ஆனால் பத்மாவின் தவிப்பு புரியாத  சிறு குழந்தை வந்திதாவோ ” நோ மம்மி எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும் ”  என்று ஓவென கத்தி ஒப்பாரி வைக்க துவங்க , அதில் தன்னிலை மறந்த பத்மா ” அம்மா சொன்னா கேட்க மாட்ட உனக்கு தம்பி பாப்பா தான் பொறக்கும், உனக்கு தம்பி பாப்பா தான் பொறக்கும் ” என்று உச்சஸ்தானியில் கத்த , அவர் கத்திய வேகத்தில் வந்தி பாப்பா பயத்தில் அரண்டு போய்  

” ஹேங்… ஹேங் … மம்மி எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும் , அப்போ தான் நா அதுக்கு அழகா பிராக் போட்டுவிட்டு ,  ஜடை பின்னி விட்டு , மேக் ஆப் பண்ணி விளையாட முடியும் …. ஹேங் …எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும் … ஹேங்… ஹேங் …  எனக்கு தங்கச்சி பாப்பா வேணும் சீக்கிரம் தங்கச்சி பாப்பாவ கூட்டிட்டு வா …. “என்று பெருங்குரலெடுத்து அழ துவங்கினாள்.

 

அதே நேரம் பத்மா கத்திய வேகத்தில் பனிக்குடம் உடைந்துவிட , ” ஐயோ அம்மா ” என்று வலி தாங்க முடியாமல் பத்மா மயங்கி சரிந்தார். அவர் மயங்கி சரிவதை பார்த்து பயந்த வந்திதா , ” பாட்டி பாட்டி ” என்று கத்திக்கொண்டே தேவகியை நோக்கி ஓடினாள்.

அப்போது தான் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய தேவகி தன் பேத்தி அழுதுக்கொண்டே தன்னை நோக்கி ஓடி வருவதை பார்த்து பதறியவர் அவளை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு ” என்ன டா தங்கம் ? ஏன் இப்படி ஓடி வரீங்க ? என் வைரத்துக்கு என்னாச்சு ? ” என்று வினவ ,  குழந்தையோ ” பாட்டி அம்மா ஆ அம்மா ஆ … ” என்று தேம்பி தேம்பி அழத்துவங்கினாள்.

குழந்தை  ” அம்மா அம்மா ” என்று அழுவதிலேயே , மருமகளுக்கு ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்டவர் , பத்மாவை தேடிக்கொண்டு அவர் அறைக்கு ஓடினார்.

அங்கே தன் மருமகள் மயங்கி கிடந்ததை கண்டவர் பதறி போய் மருத்துவச்சியை அழைத்து வந்தவர் , விரைந்து அவருக்கு பிரசவம் பார்க்க வைத்தார்.

அந்நேரம் பார்த்து ஏதோ ஓர் புத்தகத்தை வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்ற ஆதி கேசவன் அப்புத்தகத்தை எடுக்க வீட்டிற்கு வந்தவர் , அங்கே தன் மனைவியின் நிலையை கண்டு அதிர்ந்தார்.

” அம்மா என்னமா ஆச்சு பத்மாக்கு ? ” என்று தேவகியை பிடித்து உலுக்க , ஆனால் அவரிடம் எந்த பதிலும் கிட்டாமல் போக , தன் மனைவிக்கு என்னானதோ என்ற பயத்தில் , அருகில் நின்றிருந்த மருத்துவச்சியின் முன்பு தன் இருகைகளை கூப்பி , ” பாட்டி மா நீங்களாச்சும் சொல்லுங்களேன், பத்மாக்கு என்னாச்சு ? ” என்று அம்மருத்துவச்சியை கேட்க , அவரும் அமைதியையே கடைபிடிக்க , அதில் வெறியானவர் பத்மாவை காண அறைக்குள் செல்ல எத்தனிக்க , வந்திதாவின் குரல் அவர் கவனத்தை ஈர்த்தது.

” ஐய் பேபி … பாப்பு நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க தெரியுமா ? அப்படியே ரோஸ் கலர்ல … ” என்று கையில் குழந்தையை வைத்துக்கொண்டு , அதனுடன் தனக்கு தானே பேசிக்கொண்டிருந்த வந்தி ,  அறையின் வாசல் புறம் திரும்பியவள் , அங்கே தன் தந்தை நிற்பதை கண்டு ” டாடி இங்க பாரு,  பாப்பு எவ்ளோ புசு புசுனு இருக்கு , அப்டியே ரோஸ் மில்க் மாதிரி இருக்கு டாடி. என் செல்ல பாப்பு எவ்ளோ கிஸ் பண்ணாலும் அழவே மாட்டேங்குது , குடு பாப்பா , சமத்து பாப்பா அழுகவே இல்ல , என் செல்ல பாப்பா . ஆனா பாப்பா சிரிக்கவும் இல்ல , அழுகவும் இல்ல , ஓஹ் பாப்பா தூங்குதோ ? லோலோ லாயி…. லோலோ லாயி… லொழுக்கு மொழுக்கு … லோலோ லாயி… மொழு புழு லாயி  ”  என்று தனக்கு தெரிந்த மழலை மொழியில் தாலாட்டு பாடிக்கொண்டிருந்த மூன்று வயதேயான  வந்திதா அறியவில்லை அக்குழந்தை நிரந்தரமாக தூங்கிவிட்டதென்று…. 

தொடரும் …

பின் குறிப்பு – யார் மனதையும் புண் படுத்தும் நோக்கமல்ல ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. பொறந்த உடனே கொன்னுட்டாங்களா😒😒😒😒 அடுத்த எபிலே பாட்டிக்கு ஒரு பாயசம் கன்ஃபார்ம்😌😌😌😌