Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 5 ( 5.2 )

 

வந்திதாவின் டீலிற்கு ஓகே சொன்ன வல்லி பாட்டி , அமுதனையும் வந்திதாவையும் அழைத்துக்கொண்டு அவள் கூறிய ” அவங்களை ” காண சென்றார்.

வந்திதாவின் வீடு … 

ஒரு இளம்பெண் தேங்காயை வீட்டு வாசலில் ஓங்கி உடைக்க ,  தேங்காய் இரண்டாக பிளந்து , ஒன்று அப்பெண்ணின் காலில் விழ  மற்றொன்றோ உருண்டு சென்று அமுதனுடன் பேசிக்கொண்டு மெல்ல நடந்து வந்துக்கொண்டிருந்த வல்லி பாட்டியின் காலருகே சென்று விழுந்தது.  

” யப்பா யாருப்பா அது ஆள் வரது கண்ணுக்கு தெரியலையா ? தேங்காய இப்படியா உடைக்கிறது ? ” என்று கேட்டுக்கொண்டே வல்லி பாட்டி தரையில் கிடந்த தேங்காய் மூடியை குனிந்து கையில் எடுத்துக்கொண்டு நிமிர , அவருக்கு எதிரில் நின்றுக்கொண்டிருந்த அப்பெண்ணை  கண்டு ஆச்சரியமடைந்தார்.

” ஏன் மா , நீங்க அந்த கவர்மெண்ட் ஆஸ்பத்திரில வேல பாக்குற டாக்டர்  கௌரி தான ? நல்லா இருக்கீங்களா ? ” என்று அவள் கையை பிடித்துக்கொண்டு வல்லி பாட்டி பேச , அத்தனை நேரம் அமுதனையும் , வந்திதாவையும் பார்வையாலே சுட்டுக்கொண்டிருந்தவள் , வல்லி பாட்டி நோக்கி ஒரு புன் முறுவல் பூத்தவள் 

” ஆமா வல்லி பாட்டி நா டாக்டர் கௌரி தான். நான் நல்லாயிருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க ? இப்போ முட்டி வலியெல்லாம் பரவால்லையா ? நா குடுத்த மாத்திரையெல்லாம் சரியா சாப்பிடுறீங்களா ? ” என்று டாக்டருக்கே உரித்தான அக்கறை குரலில் வல்லி பாட்டியிடம் நலம் விசாரித்தாள்.

இத்தனை நேரம் அவள் பேசுவதையே ஓர் வித ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டிருந்த வல்லி பாட்டி 

” மூட்டு வலியெல்லாம் இப்போ நல்லாவே குறஞ்சிடுச்சு. நீங்க குடுத்த மாத்திரையெல்லாம் சரியா வேலா வேலைக்கு சாப்பிடுறேன் மா. ” என்றவர் , மெல்ல அவளை நெருங்கி அவளுக்கு திரிஷ்டி கழித்தவர் 

” அது எப்படி தாயி , என்னை நீங்க ஒரே ஒரு தடவ தான் பாத்துருப்பீங்க , அதுவும் கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு முன்னாடி. ஆனா எப்படி இப்படி கரெக்ட்டா என் பேர்லயிருந்து என் நோய் முதக்கொண்டு நியாபகம் வச்சிருக்கீங்க ?  ” என்று ஆச்சரியமாக வினவினார்.

வல்லி பாட்டிக்கு பதில் கூற கௌரி வாயை திறப்பதற்கு  முன்பே , இடையில் புகுந்த வந்திதா ” அது என்ன பாட்டி நம்ம கௌரிய பார்த்து இப்படி ஒரு கேள்விய கேக்குறீங்க ? அவ எவ்ளோ பெரிய டாக்டர் தெரியுமா ? அவ பேஷியன்ட்ஸ்க்கு முன்னாடி அவளுக்கு யாருமே முக்கியமில்ல. தனக்கு ஒரு கஷ்டம் , அத இந்த டாக்டர் தீர்த்து வைப்பாங்கன்னு நம்பி வர மக்கள அவ என்னைக்குமே கைவிட்டதில்ல. அப்புறம் என்ன கேட்டிங்க ? ஆன் எப்படி நியாபகம் வச்சிருக்கானு தான ? பேசிக்கலி எங்க பேமிலில எல்லாருக்குமே மெமரி பவர் கொஞ்சம் அதிகம். ஆனா என்னையும் , எங்க அப்பா , அம்மாவையும் கம்பேர் பண்ணும் போது எங்க எல்லாரையும் விட என் தங்கச்சி கௌரிக்கு கொஞ்சம் மெமரி கம்மி தான் . என்ன கௌரி நான் கரெக்ட்டா தான சொல்லுறேன் ? ” என்றவள் தன் தங்கை கௌரியை கண்ணில் பெருமை பொங்க பார்த்தாள்.

அத்தனை நேரம் வந்திதா  பேசுவதை உற்று கவனித்து கொண்டிருந்த வல்லி பாட்டி , இறுதியில் வந்திதா கௌரி தன் தங்கை என்று கூறியதை கேட்டு ஆனந்தம் கொள்ள , பாவம் அவர் அறியவில்லை கௌரியால் அமுதன் வந்திதா வாழ்விலும் தன் வாழ்விலும் எத்தனை எத்தனை திருப்பு முனைகள் வரவிருக்கின்றன என்று.

” எது நம்ம கௌரி  டாக்டர் உன் தங்கச்சியா ? ஏன் வந்தி நீ முன்னாடியே இத என் கிட்ட சொல்லல ? சரி விடு இப்போவாச்சும் தெரிஞ்சுசே” என்ற வல்லி பாட்டி கௌரியின் கையை பற்றிக்கொண்டு 

” அம்மாடி உனக்கு தெரியாதது ஒண்ணுமில்ல , நம்ம வந்திதாவும் , அமுதனும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறாங்க , ஆனா உங்க வீட்டுல யாரோ ஒருத்தருக்கு அது புடிக்கலையாம் . அநேகமா என் கணக்கு படி அது உங்க அப்பாவா தான் இருக்கும்னு நினைக்குறேன். அதுனால நீ என்ன பண்ற , உங்க அப்பா கிட்ட பேசி எப்படியாச்சும் இவுங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிற வேலைய பாரு. உனக்கு தனியா பேச பயமா இருந்துச்சுனா நானும் கூட வரேன் , வா ரெண்டு பேரும் ஒண்ணா போய் உங்க அப்பா கிட்ட பேசுவோம் ” என்றவர் , வந்திதாவிடம்  திரும்பி ” ஏன் வந்தி இதுக்கா போய் இப்படி பயந்த ? பாரு நம்ம கௌரி பாப்பா நம்ம வேலைய எவ்ளோ ஈஸியாக்க போகுது. என்ன கௌரி பாப்பா உன் மாமாவுக்கு மச்சினிச்சியா இந்த உதவி கூட பண்ண மாட்டியா ?  ” என்று சிரிக்க , வந்திதாவோ தன் தலையில் அடித்துக்கொள்ள , அமுதன் அடுத்து நடக்கயிருக்கும் விபரீதத்திற்கு தயாராக இருந்தான்.

கௌரி ” என்ன வல்லி பாட்டி இப்படி கேட்டுடீங்க ? என் மாமாவுக்கும் நா சப்போர்ட் பண்ண மாட்டேனா ? ” 

” அப்படி சொல்லு டா என் செல்ல குட்டி. சரி வா எவ்ளோ நேரம் தான் வீட்டுக்கு வெளியிலேயே நின்னு பேசுறது , வீட்டுக்குள்ள போய் ஆற அமர உட்கார்ந்து பேசுவோம் ” என்ற வல்லி பாட்டி கௌரியின் கையை பிடித்து இழுக்க ,

கௌரியோ ” அட இருங்க பாட்டி , இப்போ தான வந்தீங்க அதுக்குள்ள என்ன அவசரம் ? அதுவுமில்லாம என் மாமா வேற இரண்டாவது  முறையா எங்க வீட்டுக்கு ஓசி சோறு சாப்பிட வந்துருக்காரு . அவர மச்சினிச்சியா நா சிறப்பா கவனிக்க வேண்டாமா ? ” என்று குரலை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு சொல்ல , 

வந்திதா கௌரியை கண்களாலேயே கெஞ்ச , இதை தான் முன்பே எதிர் பார்த்தேன் என்பது போல் அமுதன் அலட்டிக்கொள்ளாமல் நிற்க , வல்லி பாட்டிக்கு தான் அவளின் பேச்சு சற்று விசித்திரமாக தெரிந்தது.

”  கங்கிராஜுலேஷன்ஸ் மாம்ஸ் , எப்டியோ பெரிய வீட்டு பொண்ணா பார்த்து லவ் பண்ணி , நல்லா ஜம்முனு செட்டிலாக போறீங்க. அது எப்படி மாம்ஸ் , உங்கள மாதிரி ஒண்ணுத்துக்கும் வக்கில்லாத பசங்களையே எங்கக்கா மாதிரி பணக்கார பொண்ணுங்க லவ் பண்றாங்க ? அப்படி என்னத்த சொல்லி மயக்குறீங்க ? கொஞ்சம் டிப்ஸ் குடுத்தா உங்கள மாதிரியே தருதலையா திரியுற ஆளுங்களுக்கு ரொம்ப  ஹெல்ப்பா இருக்கும்ல. ச்ச உங்கள மாதிரி அனாதைங்களுக்கு வாழக்கைல முன்னேற இத விட்டா வேற வழியே தெரியாதா ?

 

” என்று கௌரி தன் வார்த்தைகளின் வீரியம் புரியாமல் அமுதனை ஏச , அதை கேட்டுக்கொண்டிருந்த வந்திதாவிற்கு சுருக்கென்று உள்ளே குத்த , தன்னால் தான் தன்னவனுக்கு இந்த அவுமானம் என்றெண்ணி தன்னை தானே நொந்துகொண்டாள்.

 ” கௌரி வார்த்தைய பார்த்து பேசு , அமுதன பத்தி உனக்கு என்ன தெரியும்? நீ பெரிய டாக்டர்னா அதுக்குன்னு உன் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவியா ? ” என்று வல்லி பாட்டி அமுதனுக்காய் கௌரியிடம் வரிந்து கட்டிக்கொண்டு செல்ல , பதிலுக்கு கௌரியும் 

” அத தான் பாட்டி நானும் கேக்குறேன் , இந்த அமுதன பத்தி யாருக்குமே எதுவும் தெரியாது. இவன் எவ்ளோ பெரிய ஷீட்னு எனக்கு மட்டும் தான் தெரியும். உருப்படியா ஒரு வேல கிடையாது, இதுல லவ்வு ஒன்னு தான் குறைச்சல். சரி அது கூட பரவால்ல , ஆனா ஊரு முழுக்க அனாதை அனாதைனு சீன் கிரியேட் பண்ணி , தன்னோட கையாலாகாத தனத்துக்கு கஞ்சத்தனம்னு ஒரு பேர் வச்சிக்கிட்டு சுத்திகிட்டு இருக்கான். இவன நம்பி நாங்க எப்படி எங்க வீட்டு பொண்ண குடுப்போம் ? ” 

அப்போது தான் வல்லி பாட்டிக்கு வந்திதா கூறிய ” அவுங்க ” கௌரி என்று விளங்கியது போல் வந்திதாவை பார்க்க , அவளும் அவர் எண்ணம் அறிந்தவள் போல் ” ஆம் ” என்று தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

 

தொடரும் ….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்