165 views

கஞ்சனடா கவிஞ்சா நீ

அத்தியாயம் – 4 ( 4.1 )

இரண்டு வருடங்கள் கழித்து தன் காதலியை கண்ட அமுதன் அவளுடனான தன் கடந்த கால நிகழ்வுகளின் நினைவுகளில் மூழ்கியிருக்க , அவன் காதலி வந்திதாவும் அதே நிலையில் தான் இருந்தாள். 

 

காதல் கிளிகள் தங்கள் சுற்றுப்புறம் மறந்து தங்கள் நினைவுகளில் துலைந்திருக்க , அக்கிளிகளின் மோன நிலையை கலைத்தது ஒரு காகத்தின் குரல். ( வேற யாரு எல்லாம் நம்ம வல்லி பாட்டி தான் )

 

” ஏடி செம்பா உனக்கு விஷயம் தெரியுமா ? நம்ம அமுதன் இருக்கான்ல , அவன் இத்தனை நாளா ஏன் சவரம் பண்ணாம காட்டு பைய மாதிரி மொச மொசன்னு அவ்ளோ பெரிய தாடி வச்சிருந்தானு இப்பதான் டி எனக்கு தெரிஞ்சுது. 

 

 ஆமாடி , அவன் ஏதோ ஒரு புள்ளைய விரும்பியிருக்கான்  , அந்த புள்ளையும் இவன விரும்பியிருக்கும் போல. ஆனா ஏன்னு தெரியல ரெண்டு பேரும் திடீர்னு  பிரிஞ்சிட்டாங்க . அந்த புள்ளைய நினைச்சிதான் இவன் இப்படி தாடி வச்சி சுத்திகிட்டு இருந்தான் போல. இது தெரியாம நா வேற ஏதோ அந்த கே.ஜி.எப் ராக்கி பாய் ஸ்டைல்னு நினைச்சுட்டேன். அதான இந்த கஞ்ச பைய அதெல்லாம் எங்க பண்ண போறான் ? ” என தன் வாய்க்கு வந்ததையெல்லாம் எதிர் வீட்டு செண்பாவிடம் கைபேசியில் கதை அளந்து கொண்டிருந்தார் நம் வல்லி பாட்டி.

 

“ச்ச இந்த கிழவி என்ன நம்ம மானத்த இந்த வாங்கு வாங்குது. ஆனாலும் கிழவி பலே ஆளு தான், நா காசு மிச்சம் பண்றதுக்கு தான் தாடிய ஒழுங்கா ஷேவ் பண்றதில்லனு கரெக்ட்டா கண்டு பிடிச்சிருச்சு.” என மைண்ட் வாய்ஸ் என்றெண்ணி வாய் விட்டு வெளியில் உலறிவிட்டான் இந்த அமுதன்.

 

அதை கேட்ட வந்திதாவோ , அவன் தலையில் தட்டி , ” ஆமா இது பெரிய உலக அதிசய கண்டுபிடுப்பு. போ டா லூசு, நீ எவ்ளோ பெரிய கஞ்ச கருமீனு இந்த ஊர் உலகத்துக்கு நல்லாவே தெரியும் ” என்றவள் அவன் தாடியை பிடித்து செல்லமாக இழுத்து விளையாடினாள்.

 

” என்ன வாய் ரொம்ப நீளுது? நா ஒன்னும் கஞ்சம்லாம் கிடையாது. இந்த உலகத்துலயே தலை சிறந்த சிக்கனவாதி டி நானு , என்னை  போயி கஞ்சன்னு சொல்ற ” என்று அமுதன் முடிக்கும் முன்பே , 

 

” எதே நீ கஞ்சன் கிடையாதா ? அடேய் எவ்ளோ பெரிய ஸ்கூல்ல மெண்டரா வேல பாத்துகிட்டு மாசம் கிட்டத்தட்ட  ஒரு லட்சம் ரூபாய்க்கு  சம்பளம் வாங்கி கிட்டு , வெறும் நூத்தியிருவது ரூபாக்காக இப்படி இந்த கிழவி யோட ஜோடி போட்டுக்கிட்டு ப்ளாக்ல கோமியம் விக்கிற உன்னை கஞ்சன்னு சொல்லாம வேறென்ன சொல்றதாம். “ என்று பேசிக்கொண்டே சென்ற வந்திதாவின் வாயை பொத்திய அமுதன் 

 

” அடியே கொஞ்ச நேரம் உன் திரு வாய வச்சிக்கிட்டு சும்மா இரு டி. நானே எனக்கு மாச சம்பளம் வெறும் அஞ்சாயிரம்னு சொல்லி தான் இந்த கிழவியையும் ஊரையும் சமாளிச்சிகிட்டு இருக்கேன். இப்போ மட்டும் என் உண்மையான சம்பளம் மட்டும் தெரிஞ்சுது அப்புறம் கிழவி என்கிட்டயிருக்க எல்லாத்தையும் பிடுங்கிட்டு என்னை நடு தெருல்ல அன்ட்ராயரோட ஓட விட்டு என் போட்டிய உருவி குழம்பு வச்சு குடிச்சிடும் ”  என்றவன் பாவம் போல் தன் முகத்தை வைத்துக்கொண்டான்.

 

அமுதன் கூறியதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த வந்திதா அவனின் இறுதி வாக்கியத்தில் தன் சிரிப்பை அடக்க இயலாமல் தன் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க துவங்கினாள்.

 

” ஐயோ மேடம் போதும் போதும் ஓவரா சிரிக்காதிங்க பார்த்து பல்லெல்லாம் கொட்டிட போகுது.” என்று  அமுதன் வந்திதாவை சீண்டினாலும்  , நீண்ட நாட்களுக்கு பின் தன்னை மறந்து குழந்தை போல் சிரித்து மகிழும் தன்னவளை கண் எடுக்காமல் ரசித்து கொண்டு தான் இருந்தான் .

 

அமுதன் தன்னை ரசிப்பதை ஒர கண்ணால் கவனித்தும் கவனியாதது போல் வந்திதா எதையோ நினைத்து  சிரித்துக்கொண்டே இருந்தாள் . 

 

” ஏய் வந்தி ,  சிரிச்சது போதும். இப்போ மட்டும் நீ சிரிக்கிறத நிறுத்தல அப்புறம் நடக்கறது எதுக்கும் நா பொறுப்பு கிடையாது ” என்று அமுதன் எச்சரித்ததையும் மீறி வந்திதா சிரித்துக்கொண்டே இருக்க , அமுதன் இதுதான் சரியான நேரம் என்று வந்திதாவை நெருங்கியவன் நொடி பொழுதில் அவள் இதழில் தன் இதழ் தூரிகை கொண்டு கவி பாடிவிட்டான்.

 

”  எதிலும் கஞ்சம் காட்டும் கவிஞ்சன் 

 உன் ஆதரங்களிடம் மட்டும் வள்ளலாய் ….”

 

வந்திதாவும் தன்னவனின் இதழ் தீண்டலில் மெய் மறந்து அவனுக்கு இசைந்து கொடுக்க, நொடிகள் நிமிடங்களாய் மாறியதை கூட உணராமல் காதல் கிளிகள் தங்கள் காதல் வானில் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன.

 

” ஐயயோ , ஐயயோ நான் பாத்துட்டேன் , நான் பாத்துட்டேன் . ஐயயோ நான் பாத்துட்டனே !!! ” என்ற வல்லி பாட்டியின் அலறலில் தான் இந்த காதல் கிளிகள் சுற்றம் உணர , பட்டென்று இருவரும் பிரிந்து நின்றனர்.

 

இதில் வெட்கம் கொள்ள வேண்டிய இளம் காதல் ஜோடி அமைதியாய் நிற்க , நம் முதிர் மனோஹரியோ ( அதான் பா எல்லாம் நம்ம வல்லி பாட்டி தான் ) தீடீரென்று பூத்த நாணத்தின் விளைவால் , தரையை தன் பெருவிரல் கொண்டு பதம் பார்த்துக்கொண்டிருக்க , அவர் நினைவுகளோ இரண்டு வருடங்கள் முன்பு கைலாசம் சென்ற கணவனிடமும் , நேற்று டிவியில் பார்த்த பாஹுபலி படத்தின் மனோஹரி பாட்டிலும் மாறி மாறி அலைபாய்ந்து கொண்டிருந்தது. 

 

வந்திதா பாட்டியின் கவனம் தங்களிடம் இல்லை என்பதை அவர் முகத்தை கண்டே புரிந்துகொண்டவள் , அமுதனை கண்களாலே தன் புறம் அழைத்து , வல்லி பாட்டியின் நடவடிக்கையை கவனிக்க சொன்னாள்.

 

அப்போது தான் அமுதனும் பாட்டியை ஊற்று நோக்கியவன் , அவர் செய்கையில் ஏதோ புரிந்துக்கொண்டவன்  ,

 

 ” என்ன கிழவி ? தரை பேர்ந்திருக்குனு டையில்ஸ் பதிக்க ஆள் பாத்துருக்கேன்னு சொன்ன , இப்போ என்னடானா நீயே அந்த வேலைய பாக்குரியா ? சரி சரி நமக்கும் காசு மிச்சம் . ஆனா இப்படி ஒத்த விரல வச்சு சொரண்டுனா எப்படி வேல நடக்கும் ? நீ என்ன பண்ற ,  பின்னங்கால் பதியிற மாதிரி நல்லா ஜம்ப் பண்ணு , மிச்சம் இருக்குற தரையும் பேர்ந்து வந்துரும் . அதுக்கு அப்புறம் நாம டையில்ஸ் வாங்கி ஒட்டிகலாம் . ” என்றவன் , 

 

வந்திதாவிடம் திரும்பி ” எப்படி நம்ம ராஜதந்திரம் ? ஐயா ஐடியா குடுக்குறதுல கில்லி மா ” என்று கண்ணடிக்க , வந்திதாவும் , வல்லி பாட்டியும் ஒரு சேர காரி உமிழ்ந்தனர்.

 

தொடரும் …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  2 Comments

  1. Sangusakkara vedi

   Ennathu oru latcham sambalama… Dei nee kanjan na irukurathu pirachana ila… First epi nee padura kastam nu oru lecture kuduthiye athada knjm attack varuthu…. Innum enna enna akkapor panranu pakuren….

   1. colour pencils
    Author

    Paiyan nejamaave kedi dhaan, aana avan kanja thanthuku pinnadi oru valid reason irukku sis, adhu poga poga ungaluke theriya varum ❤️❤️❤️