118 views

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 27 ( ப்ரீ – ஃபைனல் )

அமுதன் கூறியதை கேட்டு அதிர்ந்த கௌரி , அவனிடம் அப்பேராசிரியரை பற்றியும் ஆராய்ச்சியை பற்றியும்  விசாரிக்க , அமுதனோ அதிரூபனை பார்த்து கண்ணசைக்க , அதிரூபனோ முதலில் ஆராய்ச்சியை பற்றி விளக்க துவங்கினான்.

” கௌரி நா சொல்றத கேட்டு பானிக் ஆகாதிங்க. பர்ஸ்ட் லெட் மீ எக்ஸ்பிளைன் எவரித்திங் கிலீயர்லி ” என்று  ஒரு பீடிகையுடன் துவங்கினான். 

” நம்ம நாட்ல உறுப்பு செயலிழப்பால எக்கசக்க பேர் உயிரிழந்துகிட்டு இருக்காங்க. அதுவும் இதயம் , நுரையீரல் , கணையம் , சிறுநீரகம்னு எத்தனையோ உறுப்பு கோளாறுகள் ஏற்பட்டு அத சரி செய்ய முடியாம , கடைசியில உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமா தான் அவுங்க உயிர் வாழ முடியும்ங்குற ஒரு நிலமை வருது. ஆனா சிக்கலே அங்க தான் ஆரம்பிக்குது. இந்த காலத்துல யாரு தான் அடுத்தவங்க கஷ்டத்தை புரிஞ்சுக்கிறாங்க ? அப்படியே சில பேர் புரிஞ்சுக்கிட்டு அவுங்களாவே முன்வந்து உறுப்பு தானம் செய்ய வந்தாலும் , அதுலயும் டிஸ்ஸு மேட்சிங் , பிளட் குரூப் மேட்சிங் , கிராப்ட் மேட்சிங்னு நிறையா இருக்கு , இதெல்லாம் மேட்ச்சாகி வரதுக்குள்ள பாதி பேர் இறந்தே போயிடுறாங்க. இது ஒருபக்கம்னா இன்னொரு பக்கம் வசதியிருக்கவங்க எல்லாம் காச வாரி இறைச்சி ஏழைங்கள பிரைன் வாஷ் பண்ணி அவுங்களுக்கு தேவையான உறுப்புகள வாங்கிக்கிறாங்க. இதெல்லாத்தையும் விட கொடும , இந்த மாதிரி உறுப்புகளுக்காக பொது மக்கள்ல கடத்தி , உறுப்பு திருடி விக்கவே ஒரு கும்பல் சுத்திக்கிட்டு இருக்கு. இதனால எத்தனை உயிர் பலியாகியிருக்கு தெரியுமா ? 

  இந்த எல்லா பிரச்சனைக்கும் என் ப்ரோபஸ்ஸர்  தீர்வு காண நினைச்சாரு. அதோட விளைவா தான் ஸ்டெம் செல் கல்ச்சர் மூலமா ஆர்கனோஜெனிசிஸ் பண்ண முடிவு பண்ணாரு. ஸ்டெம் செல்ஸ்க்கு  (குருத்தணு )  இயல்பிலேயே எந்த ஒரு உறுப்பாவும் மாறுற தன்மை இருக்கு. இந்த தன்மைய ப்ளூரிபொடென்சினு சொல்லுவாங்க. ஆனா இந்த ஸ்டெம் செல்ஸ் பொறுத்தவரைக்கும் இது கருவுருவாகுற சமயத்துல மட்டும் தான் இந்த தன்மைய கொண்டிருக்கும். அந்த கரு வளர்ந்து ஒரு குழந்தையா மாறுற நேரத்துலையே இந்த ஸ்டெம் செல்ஸ் அதோட தன்மைய இழந்து , அதுக்கு பதிலா அந்த செல்ஸ் எந்த உறுப்புல இருக்கோ , அந்த உறுப்புல ஏதாச்சும் டிஸ்ஸு டேமேஜ் நடக்கும் போது மட்டும் அந்த செல்ஸ் டிவாய்டாகி அந்த உறுப்பா மட்டும் மாரும். 

ஆனா சில ஆய்வுகள்ல வளர்ந்த மனிதர்களிடமிருக்க அடல்ட் ஸ்டெம் செல்ஸ்ல ஜீன் மானிபுலேஷன் (மரபணு கையாளுதல்)செஞ்சு அந்த செல்ஸ்ஸ இன்ட்யூஸ்ட் ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல்ஸ்ஸா (தூண்டப்பட்ட குருத்தணுக்களா ) மாத்தலாம்னு சொல்லியிருக்காங்க. எங்க ப்ரோபஸ்ஸரும் அதே யுக்திகள பயன்படுத்தி , இன்ஸ்டிடியூட்ல படிச்சுக்கிட்டு இருந்த ஒரு சில ஸ்டுடென்ட்ஸ்ஸோட  அடல்ட் ஸ்டெம் செல்ஸ்ல  , அதே மாதிரி ஜீன் மானிபுலேஷன் செஞ்சு பாத்துருக்காரு. அவர் நினைச்ச மாதிரியே அந்த செல்ஸ் ப்ளூரிபொடென்ட்டா மாறி இருக்கு.   

அவரோட ரீசர்ச் பாதி சக்ஸஸ் ஆகிடுச்சு. ஆனா அந்த செல்ஸ்ஸயெல்லாம் வெளியில எடுத்து , டெஸ்ட் ட்யூப்ல தூண்டப்பட்டு வளர்க்கப்படனும். இதுக்கு தான் எங்க அப்பா கிட்ட ஒரு தனி லேப் கேட்டுருக்காரு. ” என்று ஆராய்ச்சியை பற்றி விளக்கி கொண்டிருந்த  அதிரூபனை இடைமறைத்த கௌரி ” அப்போ அந்த பழைய லேப் என்னாச்சு ? ” என்று கேட்க , அமுதனோ நிலமையை சற்று சகஜமாக்கும் பொருட்டு ” நீ நின்ன இடத்துலையே ஒரு நாலு சுத்து சுத்து அந்த பாழடைஞ்ச பேய் பங்களா மாதிரியிருக்க லேப் வந்துரும் ” என்க , முதலில் அவன் கூறியதன் அர்த்தம் புரியாமல் , கௌரி நின்ற இடத்திலேயே ஒருமுறை சுத்த அப்போது தான் அவள் நின்றுகொண்டிருக்கும் மாளிகை தான் அந்த பழைய ஆய்வுக்கூடம் என்பதே உரைக்க துவங்கியது.

இதை உணர்ந்த மறுநொடி கௌரி அமுதனை போட்டு முதுகிலேயே மொத்த துவங்க , இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து அதிரூபன் கூட தன் சோகம் மறந்து சிரிக்க , இவர்களையெல்லாம் முதல் மாடியின் படிகளில் நின்று கவனித்துக்கொண்டிருந்த ஸ்ரீஜனின் கண்களோ அங்கே இறந்து கிடந்த நித்யாவின் மேலே பதிந்திருந்தது.

” ஏன்டி ஏன் இப்படி பண்ண ? சின்ன வயசுலயிருந்தே அம்மா பாசத்துக்கு ஏங்குனவன்டி நானு. உன்ன பார்த்த அடுத்த செகண்டே நா இழந்த எல்லா அன்பும் , பாசமும் , உன் கிட்ட கிடைக்க போறதா என் ஆழ்  மனசுக்குள்ள போய் ஏன்டி பதியவச்ச ? ஏன்டி உன் மேல பைத்தியமா திரிய வச்ச ? உன்ன பாலொவ் பண்ண ஒரு ஒரு தடவையும், என் நித்யா கண்டிப்பா தப்பு பண்ணியிருக்க மாட்டான்னு எனக்கு நானே தைரியம் சொல்லிக்கிட்டு தான்டி உன் பின்னாடி பைத்தியக்காரன் மாதிரி திரிஞ்சேன் … ஆனா கடைசியில என் கையாலயே உன்ன கொள்ள வச்சிட்டியேடி ராட்சசி … ” என்று நித்யாவின் நினைவில் கண்களில் கண்ணீர் நிற்காமல் கொட்டிக்கொண்டிருக்க , மனமோ ஊமையாய் கதறிக்கொண்டிருந்தது.

இது ஒருபுறமிருக்க , மறுபுறம் ஒரு அறையில் வல்லி பாட்டி , ஸ்ரீஜன் – வந்திதாவின் திட்டப்படி நித்யாவை திசைதிருப்பி அவளை அந்த இடத்திற்கு கூட்டி வர வேண்டும் என்பதையே குறிக்கோளாய் கொண்டு , நித்யா அமுதன் அலைபேசியில் வைத்த ஒட்டுக்கேட்கும் கருவியை  ( எலெக்ட்ரானிக் பக் )  சொடுக்கி விட்டு  , வல்லி பாட்டி வந்திதாவிடம் அமுதன் சி.பி.ஐ ஆஃபீஸர் என்ற உண்மையையும் , கௌரி ஒரு காப்பகம் வைத்து நடத்துவதையும் அவளிடம் மறைத்தது போல் கூற , பதிலுக்கு வந்திதாவும் அவர்கள் இருவர் மேலும் கோவித்துக்கொண்டது போல் நடிக்க , இறுதியில் கௌரியிடம் சண்டையிடுவதற்காய் அவர்கள் இருவரும் காப்பகம் கிளம்புவது போல் பேசிக்கொள்ள , இதை அக்கருவியின் மூலம் ஒட்டுக்கேட்டு கொண்டிருந்த நித்யா அவர்களை முந்திக்கொண்டு காப்பகம் விரைந்தாள்.

இதை தான் அவர்களும் எதிர்பார்த்தது போல் , வந்தியும் , வல்லி பாட்டியும் கௌரிக்கு அலைபேசியில் அழைத்து , அவளை “அத்வேய்த ராம சேஷாத்ரி”யின் பெயரையும் , அவரது நிறுவனத்தின் பெயரையும் சொல்லி , நித்யாவை தூண்டும் விதமாக நடிக்க சொன்னவர்கள் , முடிந்தால் அவள் முன் மயங்கி விழுவது போல் கூட நடி என்று அறிவுரை வழங்கி விட்டு , அவர்களும் காப்பகதிற்கு விரைந்தனர். கௌரியும் அவர்கள் கூறியதற்கு ஏன் , எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்காமல் , அவர்கள் கூறியதற்கு ஒரு படி மேலே சென்று நடித்தாள். அதே நேரம் வந்திதா , நித்யாவிற்கு அவர்கள் அங்கு வருவது எவ்வாறு தெரியும் என்று வினவ , அவர்களுக்கு பதில் கூற இயலாமல் நித்யா முழிக்க , ஆனால் வல்லி பாட்டியோ தான் தான் அவளுக்கு அழைப்பு விடுத்து வந்திதா கோவமாக வருவதை கூறியதாக பொய் சொல்ல  , முதல் முதலாய் நித்யாவிற்கு அவர்கள் மேல் சந்தேகம் எழ , அது பற்றி அவள் ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கும் போதே , அவளை திசை திருப்பும் பொருட்டு , கௌரி  வாயில் பழஜாமை தடவிக்கொண்டு வாயிலிருந்து ரத்தம் வருவது போல் மயங்கி விழ , உடனே அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எல்லாம் அவர்கள் திட்டபடி சென்று கொண்டிருக்க , இடையில் சம்பந்தமே இல்லாமல் பத்மா நுழைந்து திட்டத்தை தலைகீழாக மாற்றி , நித்யாவை மருத்துவமனைக்கு தனியே அனுப்பி வைத்துவிட்டார்.

அப்போது தான் வல்லி பாட்டி அவரது கைபேசியை ஆராய அதில் கைதவறி பத்மாவிற்கு அவர் அழைத்திருப்பதையும் , பத்மாவும் காப்பகத்தில் அவர்கள் நித்யா முன்பு நடித்ததை எல்லாம் நம்பி கௌரிக்கு என்னானதோ என்று பதறி மகிழுந்தை எடுத்துக்கொண்டு வந்ததையும் அறிந்தனர். திட்டம் சொதப்பியதை கண்டு பெண்கள் மூவரும் பதறி , விரைந்து ஸ்ரீஜனுக்கு குறுஞ்செய்தி மூலம் நடந்ததை விவரிக்க , அவனும் முதலில் பத்மாவுடன் சேர்த்து இவர்களை கடத்துவது போல் கடத்தி அம்மாளிகைக்கு கொண்டு வந்தவன் , வேண்டுமென்றே நித்யாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அதற்கு பின் நடந்ததையெல்லாம் நினைத்து பார்த்துக்கொண்டிருந்த வல்லி பாட்டி நித்யாவை நினைத்து அழத்துவங்கியவர் , ” ஏன் நித்யா இப்படி பண்ண ? உன்னையும் என் பேத்திங்க மாதிரி தான நடத்துனேன் … ஏன்டா எங்களுக்கு இப்படி ஒரு துரோகத்த பண்ண ? ” என்று புலம்பி தவித்துக்கொண்டிருந்தார்.      

கடத்தும் போது பயன்படுத்திய மயக்க மருந்தின் விளைவால் மயக்கத்திலிருந்த பத்மா , அப்போது தான் மயக்கம் களைந்து எழுந்து அமர்ந்தவர் , தான் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை நோட்டம் விட்டவர் , அங்கேயிருந்த பையோடெக்னாலஜியில் அதுவும் குறிப்பாக ஜீன் மானிபுலேஷனில் பயன் படுத்தப்படும் உபகரணங்களை கண்டு , குழம்பியவர் , தன் பக்கத்து அறையிலிருந்து ஏதோ சத்தம் வருவதை உணர்ந்து அங்கே செல்ல , அங்கோ நம் அதிரூபன் கௌரிக்கு அப்பேராசிரியரின் ஆராய்ச்சியை சற்று விரிவாக விளக்கி கொண்டிருந்தான்.

” அந்த பசங்களயெல்லாம் புதுசா கட்டுன லேபுக்கு கூட்டிட்டு போய் அங்க ஒருஒருத்தர் உடம்புலையும் மானிபுலெட் பண்ண ஸ்டெம் செல்ஸ்ஸ வெளியில எடுத்து அத டெஸ்ட் ட்யூப்ல கல்ச்சர் பண்ண ஆரம்பிச்சாரு. அதுவும் முதல்ல முழு உறுப்பா இல்லாம , வெறும் டிஸ்ஸு மட்டும் கல்ச்சர் பண்ணாரு. அவர் எதிர்பார்த்த மாதிரியே ரிசல்ட் வந்துச்சு. உடனே அந்த டிஸ்ஸுவ எடுத்து , அந்த பசங்களோட ஆர்கன்சோட இன்டக்ரேட் ( ஒருங்கிணைத்தல் ) பண்ண ட்ரை பண்ணாரு. ஆனா அங்க தான் பிரச்சனையே ஆரம்பிச்சுது. 

இந்த மாதிரி அவுங்களோட ஆர்கன்ஸோட டிஸ்ஸுவ இணைக்கும் போது , நிறையா பேருக்கு அல்லர்ஜி ( ஒவ்வாமை ) ஏற்பட்டுச்சு. அந்த அலர்ஜிக்கு காரணம் அந்த பசங்களுக்கு இந்த டிஸ்ஸுவ இன்டகிரேட் பண்ணுறதுக்கு முன்னாடி சரியான இம்யூனோசப்ரேசண்ட்ஸ் ( நோய் எதிர்ப்பு சக்தியை முறியடிக்கும் மருந்துகள் ) குடுக்காதது தான்.  இம்யூனோசப்ரேசண்ட்ஸ் குடுக்காததுனால அந்த பசங்களோட சொந்த நோய் எதிர்ப்பு அணுக்கள் , திடீர்னு புதுசா ஒரு டிஸ்ஸு உள்ளுக்குள்ள வரவும் , அத எதிரியா நினைச்சு காலி பண்ணிடுச்சு. அதோட விளைவா நிறையா பசங்க இறந்தும் போனாங்க.

இந்த விஷயம் எனக்கு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே நீங்க இந்த ரீசர்ச்ச நிறுத்தலைனா நா உங்கள பத்தின  உண்மையெல்லாம் வெளிய சொல்லிடுவேன்னு சண்ட போட்டேன், பட் அவர் என் பேச்ச கேக்கவே இல்ல. அதுக்கப்புறம் எங்க அப்பா கிட்ட சொல்லி என்னை வீட்ட விட்டு வெளியில வராத மாதிரி வீட்டுக்குள்ளையே பழையபடி பூட்டி வச்சிட்டாங்க. 

இப்படியே ஒரு ஒரு மாசம் போயிடுச்சு. அதுக்கு அப்புறம் திடீர்னு ஒருநாள் ராத்திரி யாருக்கும் தெரியாம நித்யா என்னை பார்க்க எங்க வீட்டுக்கு வந்தா. 

நித்யாவ பத்தி சொல்லணும்னா அவளுக்கு அவுங்க அப்பாவையும் சரி , என் அப்பாவையும் சரி சுத்தமா பிடிக்காது. ஸ்கூலிங் கூட முழுக்க முழுக்க ஹாஸ்டல்ல தான் பண்ணா. அவ ஹாஸ்டல்ல இருந்ததுனால என்னை பத்தின உண்ம அவளுக்கு தெரியாது. ஆனா சின்ன வயசுலயிருந்தே அவளுக்கு நான்னா ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி ஸ்கூல் முடிச்சிட்டு நீட் எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்க முடியலன்னு அழுதுகிட்டே நான்னு நினைச்சு அனந்தன் கிட்ட புலம்பியிருக்கா. அவனுக்கும் நித்யானா ரொம்ப பிடிக்கும். அதுனால அவளுக்கு ஆறுதல் சொல்லி , என்னோட உதவியோட அவளுக்கு கைட் பண்ணான். அவளும் அவன நான்னு நினைச்சு ரொம்ப பாசமா இருந்தா. அதே மாதிரி நா இறந்துட்டதா பொய் சொல்லி எனக்கு காரியம் பண்ணும் போது கூட அனந்தனும் எனக்கு அண்ணன் தான் அதிய பிடிக்குற மாதிரி எனக்கு அவனையும் புடிக்கும் ஆனா இப்படி அவன் பாதில போவான்னு நினைச்சு கூட பார்கலேன்னு சொல்லி  அவ்ளோ அழுதிருக்கா. 

ஆனா அன்னைக்கு திடீர்னு யாருக்கும் தெரியாம வீட்டுக்கு வந்தவ , அவளுக்கு எல்லா உண்மையும் தெரியும்ன்னு சொல்லி , என் கிட்ட நா கண்டுபிடிச்சு வச்சிருந்த ஒரு இம்யூனோசப்பிரேசன்ட்டோட பார்முலாவ கேட்டா , நா குடுக்க முடியாதுன்னு சொன்னதுக்கு என்னை ரொம்ப மிரட்டி , நா அவளுக்கு கோவாபரேட் பண்ணலேன்னா என் அடையாளத்துல இருக்க அனந்தன்ன கொன்னுடுவேன்னு மிரட்டுனா. நானும் அவளோட மிரட்டலுக்கு பயந்து அவ கேட்டத சொன்னேன். அவளும் அவ வேல முடிஞ்சதும் வந்த சுவடே தெரியாம வெளிய போயிட்டா. அதுக்கு அப்புறம் தான் ஸ்ரீஜன் சார் என்னை பார்த்து பேசுனாரு. நானும் அவரு கிட்ட எல்லா உண்மையும் சொன்னேன். ” என்று அதிரூபன் தனக்கு தெரிந்த விவரங்களை பகிர்ந்து முடிக்கவும் , ஸ்ரீஜனின் அலைபேசியில் அதிரூபன் தனது குடும்பத்தை பற்றியும் , அப்பேராசிரியர் பற்றியும் மேலும் அவர் செய்துக்கொண்டிருக்கும் ஆராய்ச்சியின் தீமைகளை பற்றி விவரித்த வாக்குமூலம் இன்றைய தலைப்பு செய்தியாய் ஓடிக்கொண்டிருந்தது. அதனூடே அனாதை பிள்ளைகளை சட்டத்திற்கு விரோதமாக சோதனை எலிகளாய் பயன்படுத்திய  பேராசிரியர் ஆதி கேசவனையும் , சொந்த மகனையே திருநங்கையாய் மாறியதற்காய் இறந்து விட்டான் என்று போலி சான்றிதழ் வாங்கி ஊரை ஏமாற்றியதற்கும் , இத்தனை வருடங்கள் வீட்டிலேயே அடைத்து வைத்து சித்திரவதை செய்ததற்கும் ஷூட் அட் சைட் ஆர்டர் பிறப்பிக்கபட்டது. அதுமட்டுமல்லாது இது போன்ற சட்ட விரோதிகளை உலகிற்கு வெளிப்படுத்தி அவர்களது முகத்திரையை கிழித்தெறிந்த துப்பறிவாளார் திரு அமுதவாணனுக்கும் , அவருடன் இணைந்து அவருக்கு உதவி புரிந்த சி.பி.ஐ ஆஃபீஸர் திரு . ஸ்ரீஜன் அவர்களுக்கும் அரசின் சார்பாக பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம் என்னும் செய்தியே இன்றைய தலைப்பு செய்தியாய் ஓடிக்கொண்டிருந்தது.

அதிர்ச்சியும் ஆச்சரியங்களும் தொடரும் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *

    1 Comment