Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!

அத்தியாயம் – 14 ( 14.2 )

கௌரி யாரிடமோ கடுமையாக பேசி கொண்டிருப்பதை தூரத்திலிருந்தே கவனித்த ரூபி , அவளை நெருங்கி 

” அக்கா , என்னாச்சு ? ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற ? ” என்று வினவ , 

பதிலுக்கு கௌரியோ ” ரூபி நா கேக்குற கேள்விக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லு. உன்ன நித்யா நீட் எக்ஸாம்க்கு முன்னாடி ஏதாச்சு கோச்சிங் இன்ஸ்டிடியூட்கு கூட்டிட்டு போய் ஏதாச்சும் ஸ்காலர்ஷிப் டெஸ்ட் எழுதவச்சாளா ? ” 

அவள் கேள்விக்கு முதலில் பேந்த பேந்த விழித்த ரூபியும் , பின் ஏதோ நியாபகம் வந்தவள் போல் 

” ஆமா அக்கா.  நீட் எக்ஸாம்கு முன்னாடி ஒரு நாள் நித்தி அக்கா கிட்ட மோக் டெஸ்ட் எழுதணும் அதுவும் ரியல் எக்ஸாம் அட்மாஸ்பியர்ல எழுதணும்னு சொன்னேன். அக்கா தான் சரி வா நா உன்ன ஒரு நாலு கோச்சிங் இன்ஸ்டிடியூட்க்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. நானும் எதாச்சும் மோக் டெஸ்ட் தான் எழுத போறோம்னு நினச்சேன், ஆனா நித்தி அக்கா தான் இல்ல டா , நானும் உன்ன மாதிரி டாக்டராகனும்னு அவ்ளோ கஷ்ட பட்டு படிச்சேன் , ஆனா பர்ஸ்ட் அட்டெம்ப்ட்ல எனக்கு சீட் கிடைக்கல , சோ உனக்கும் அந்த மாதிரி எதாச்சும் ஆச்சுனா , நம்ம கையில சேஃப்டிக்கு நெஸ்ட் இயர் ரீப்பிட் பண்ண மெடீரியல்ஸ் வேணும்.இந்த டெஸ்ட்ல நல்ல மார்க் வாங்குனா , அவுங்க கைடன்ஸ்  கிடைக்கும். அதுவுமில்லாம உனக்கும் ரியல் எக்ஸாம் எழுதுறதுக்கு முன்னாடி இப்படி டெஸ்ட் எழுதுனா ஒரு நல்ல எஸ்பிரியன்ஸ் கிடைக்கும்னு சொன்னாங்க. “

” மொத்தம் எத்தன இன்ஸ்டிடியூட்ல இந்த மாதிரி டெஸ்ட் எழுதுன ? “

” ஒரு ஆறு இன்ஸ்டிடியூட்ல எழுதியிருப்பேன். மாக்ஸிமம் கவெர்மெண்ட் ரன் பண்ற இன்ஸ்டிடியூட்ஸ் தான் அக்கா. எல்லாரும் என்னை நல்லா ட்ரீட் பண்ணாங்க. ஆனா ஒரே ஒரு பிரைவேட் இன்ஸ்டிடியூட் , அங்க டெஸ்டும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அத விட அங்க இருந்த ஸ்டாப் எல்லாம் என்னையும் நித்யா அக்காவையும் ஒரு மாதிரி ட்ரீட் பண்ணாங்க. ” என்று ரூபி அந்நாளை நினைவு கூறுகையிலேயே முகம் சுழிக்க துவங்கினாள்.

ரூபியின் செய்கையிலேயே அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்த கௌரிக்கு முகமறியாத ரூபனின் மேல் கோவம் பொங்கியது. அதே நேரம் நித்யாவின் மேலும் எதற்கு இந்த வேண்டாத வேலை என்று கோவம் வந்தது.

கௌரி நித்யாவிற்கு மனதில் பூஜை போட்டு கொண்டிருக்கவும் , விடுமுறைக்கு சென்றவள் மீண்டும் தேவன் இல்லம் திரும்பவும் சரியாக இருந்தது.

இல்லத்திற்குள் நுழைந்த மறுநொடியே நித்யா தன் பைகளையெல்லாம் தூர எறிந்தவள் , நேராக சென்று ரூபியை கட்டிக்கொண்டாள்.

” ஏய் தேவ் டார்லிங் கன்கிராஜூலேஷன்ஸ் உனக்கு எவ்ளோ பெரிய இன்ஸ்டிடியூட்ல ஸ்சோலர்ஷிப் கிடைச்சிருக்கு தெரியுமா ? இந்த ஒன் இயர் மட்டும் நீ கொஞ்சம் கஷ்ட பட்டு அவுங்க கய்டன்ஸ்ல படிச்சேன்னு வையேன் , அப்புறம் நீ ஆசபட்ட மாதிரி எய்ம்ஸ் டெல்லிலயே எம்.பி.பி.எஸ் சீட் கிடைச்சிரும். “

நித்யாவின் உற்சாகம் தேவஸ்வரூபிக்கும்  தொற்றி கொள்ள , இரண்டு நாட்களாய் இருந்த மனநிலை மாறி மீண்டும் பழைய துருதுருப்புடன் இல்லத்திலிருக்கும் மற்ற சிரார்களுடன் சேர்ந்து ஆட்டம் போட துவங்கினாள்.

நித்யாவின் பேச்சிலேயே அந்த இன்ஸ்டிடியூட் நிச்சயமாக ரூபன் இன்ஸ்டிடியூட்டாக தான் இருக்க வேண்டும் என்பதை யூகித்த கௌரி , நித்யாவை தனியே அழைத்து சென்று அவள் காதில் ரத்தம் வரும் அளவு கேள்வி கேட்டே குடைந்துவிட்டாள்.

” ஐயோ கௌரி ,கொஞ்சம் கேப்பு விட்டு கேள்வி கேளுடி , நீ பாட்டுக்கு இப்படி ஓயாம கேள்வி கேட்டா , என்னால அடிஷனல் ஷீட் எல்லாம் வாங்கி உனக்கு அன்சார் பண்ண முடியாது.நாலாம் வைவா எக்ஸாம்ல கேக்குற கேள்விக்கே உளறி கொட்டி திட்டுவாங்குறவ. ஐம் யுவர் பெஸ்ட் பிரெண்ட் , ப்ளீஸ் ஹெல்ப் மீ… “

நிலைமையின் தீவிரம் புரியாமல் கிண்டல் செய்யும் நித்யாவை காண்கையில் கௌரிக்கு வயிற்றிலிருந்து பற்றி கொண்டு வந்தது.

” ஏய் நித்யா மேட்டரோட சீரியஸ்னெஸ் தெரியாம விளையாடாத. அந்த ரூபன் இன்ஸ்டிடியூட் … ” என்று தொடங்கியவளை இடைமறைத்த நித்யா ,

” கௌரி ஜஸ்ட் லிஸன். நம்ம ரூபி டாக்டராகனும்னு சின்ன வயசுலயிருந்தே எவ்ளோ கனவு கண்டிருக்கான்னு என்னை விட உனக்கு நல்லா தெரியும். நாமளும்  எல்லா விதத்துலையும் அவள சப்போர்ட் பண்ணோம். ஆனா அவளுக்கு தேவையான எஜுகேஷன்ன அப்போர்ட் பண்றதுக்கு நம்ம கிட்ட பணமில்ல.அவளும் நம்ம நிலைமைய புரிஞ்சு கிட்டு அவளுக்கு கிடைச்ச சோர்சஸ் வச்சி அவளோட மாக்ஸிமம் கபாஸிட்டிக்கு மேலயே போய் ஹார்ட் ஒர்க் பண்ணி இவ்ளோ மார்க்ஸ் வாங்கிட்டா. ஆனா இந்த தடவ நிறையா பசங்க கோச்சிங் போய் படிச்சதுனால நிறையா மார்க்ஸ் வாங்கிட்டாங்க. அதுனால கட் ஆப் அதிகமாயிடுச்சு. 

இவ்ளோ மார்க்ஸ் எடுத்தும் ஜஸ்ட் ஒரு பத்து மார்க்ஸ் வித்தியாசத்துல எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்காம டாக்டர் கனவு அழிஞ்சு போனா நம்ம ரூபி மனசு எவ்ளோ கஷ்ட படும். உடனே இவ்ளோ நேரம் அவ சந்தோஷமா தான இருக்கானு கேள்வி கேக்காத , அவ சந்தோஷமா இல்ல , சோகத்த தனக்குள்ளையே விழுங்கி கிட்டு எங்க அவ பீல் பண்றத பார்த்தா நாமளும் கஷ்ட படுவோம்னு , அவ நமக்கு முன்னாடி சந்தோஷமா இருக்க மாதிரி நடிச்சிகிட்டு இருக்கா ” 

நித்யா கூறியதை கேட்டு , அவளை நம்பாத பார்வை பார்த்த கௌரி ” அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. அவ டூ டேஸா நல்லா தான் இருக்கா. இன்பாக்ட் அவ 

எல்லாத்தையும் மறந்துட்டு எப்பவும் போல நார்மலா தான் இருக்கா. நீ தான் வந்ததும் வராததுமா ஏதேதோ சொல்லி அவ மனச கெடுக்க பாக்குற ” 

கௌரியின் பேச்சில் கடுப்பான நித்யா , அவள் கையை பிடித்து இல்லத்திலிருக்கும் தோட்டத்திற்கு  தர தரவென இழுத்து சென்றவள் , அங்கே ஓர் ரோஜா செடியின் அருகில் அமர்ந்து மௌனமாக அழுது கொண்டிருக்கும் தேவஸ்வரூபியை காண்பித்தாள்.

ரூபியின் நிலையை கண்டு பதறிய கௌரி, அவளை சமாதானம் செய்ய அவளருகில் செல்ல விழைய , கௌரியை தடுத்து நிறுத்திய நித்யா ” இப்போ என்ன , அவ அழுவறத பார்த்து அவள சமாதானம் செய்யுறேன்னு போய் , நீயும் அவ கூட உட்கார்ந்து ஒப்பாரி வைக்க போற , அதான ? “

” நித்யா ஏன் டி இப்படி எல்லாம் பேசுற ? என்னால ரூபி அழுதா தாங்கிக்க முடியாது. அவ அழுகுறத பார்த்தா எனக்கும் அழுக வருது ” என்று தேம்பிக்கொண்டே ரூபியின் நிலையை கண்டு புலம்பிய கௌரி , நித்யாவின் தோளில் சாய்ந்து அழ துவங்கினாள்.

” ம்ச் என்ன கௌரி இது ? அவ தான் குழந்தை அழுகுறான்னா , நீயும் அவளுக்கு மேல இருக்க ? ஐயோ கடவுளே இந்த ரெண்டு பேபிஸையும் நா எப்படி ஒத்த ஆளா சமாளிக்க போறேன் ? ” என்று நித்யா தலையில் அடித்து கொள்ள , அவர்கள் முன் தன் கருப்பு கோட்டுடன் குதித்தான் நம் சரண் தேவ்.

”  ஐ நித்தி டார்லிங் வந்துட்டியா ? , நீ இல்லாம டூ டேஸா இந்த ரெண்டு கிரை பேபிஸ் கிட்ட மாட்டிகிட்டு நா பட்ட பாடு இருக்கே …. ஐயோ எம்மா …. என்னால முடியல டா சாமி …. இன்னைக்கு மட்டும் நீ வராம இருந்திருந்தியினா , அப்புறம் நானும் இந்த பேபிஸ் கூட சேர்ந்து சீரியஸ் பார்ட்டி ஆகியிருப்பேன், தாங்க் காட் … கரெக்ட் டைம்க்கு வந்து நீ என்னை காப்பாத்திட்ட …. ஸ்யபா ரெண்டு நாள் கூட சீரியஸா இருக்க முடியல , சில பேரெல்லாம் பிறந்ததுல இருந்து எப்படி தான் முகத்த விறைப்பா வச்சி கிட்டு திரியுறாங்களோ தெரியல …. ” என்று கௌரி அழுவதை காண இயலாமல் அவளை திசைதிருப்புவதற்கு அவளை வெறுப்பேற்றினான்.

சரண் பேச்சின் உள்ளர்த்தம் புரிந்து கொண்ட கௌரி , அவனுக்கு போட்டியாய் ஏதோ கூற போக , அவளை தடுத்து நிறுத்திய நித்யா , ” கைஸ் போதும் ப்ளீஸ். நாம எவ்ளோ தான் ஒருத்தருக்கு ஒருத்தர் ஹாப்பியா இருக்க மாதிரி நடிச்சிக்கிட்டாலும் , ரூபிய நினைச்சி நாம எல்லாருமே ஒடஞ்சு போயிருக்கோம். உள் மனசுல அவ பியூச்சர நினைச்சு கவல பட்டு கிட்டு தான் இருக்கோம். நாம வருத்த படுவோம்னு அவ கஷ்டத்தையெல்லாம் மனசுக்குள்ளையே வச்சு அழுது கிட்டு இருக்க ரூபிய பார்க்க பார்க்க , நாம அவளுக்கு செய்ய வேண்டிய கடமையெல்லாம் ஒழுங்கா செய்யலயோனு எனக்கு தோணுது .. ” 

” நீ சொல்றதும் ஒரு விதத்துல கரெக்ட்டு தான் நித்யா. பாவம் என் ரூபி என் மேல வச்ச நம்பிக்கைய என்னால காப்பாத்த முடியல. கௌரி அக்கா சொல்லி குடுத்தா கண்டிப்பா நா புள் மார்க்ஸ் வாங்கிடுவேன்னு என்னை முழுசா நம்புனவளுக்கு நா துரோகம் பண்ணிட்டேன் …. ” என்று மீண்டும் புலம்பிய கௌரி , கண்ணில் வழியும் கண்ணீரை கூட துடைக்க மறந்து தூரத்தில் எதையோ பறி குடுத்தவள் போல் அமர்ந்திருந்த ரூபியையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

கௌரியின் தோளை ஆறுதலாக பற்றிய சரண் ” ப்ளீஸ் கௌரி , நடந்தத பத்தியே நினைச்சு கவலை படுறதுனால ஒரு ப்ரயோஜனமும் இல்ல , இனிமே நடக்க போறத பத்தி மட்டும் பேசுவோம். … “

” நித்யா , ரூபி அவ கனவுல இவ்ளோ ஸ்டராங்கா இருக்குறத பார்த்தா , எனக்கென்னமோ அவ நீட் எக்ஸாம் இன்னொரு தடவ ரீப்பீட் பண்ணலாம்னு நா நினைக்குறேன் . வாட் இஸ் யுவர் ஒபினியன் ? “

” எக்ஸாக்ட்லி நானும் இத தான் சொல்ல வரேன் ” என்ற நித்யா , அவனிடம் ரூபன் இன்ஸ்டிடியூட்டில் ரூபிக்கு  ஸ்காலர்ஷிப் கிடைத்திருப்பதை பற்றியும் , நாளையே சென்று அவளுக்கு அட்மிஷன் போட வேண்டும் என்றும் அவள் மட்டும் ரூபன் இன்ஸ்டிடியூட் போன்ற ஓர் பெரிய இன்ஸ்டிடியூட்டில் படித்தால் நிச்சயம் , இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவ கல்லூரியான டெல்லி எய்ம்சிலேயே மருத்துவ சீட் வாங்கி விடுவாள் என்று நம்பிக்கை ஊட்டினாள்.

அவள் பேசுவதை அத்தனை நேரம் அமைதியாக கேட்டு கொண்டிருந்த கௌரி , ” ஓ எனக்கு கால் வந்த மாதிரியே உனக்கும் அந்த இன்ஸ்டிடியூட்ல இருந்து கால் வந்துச்சா ?” என்று வினவ , நித்யாவும் , அதற்கு ஆம் என்று தலையாட்டினாள்.

கௌரியும் , நித்யாவும் பேசிக்கொள்வது புரியாமல் , அவர்கள் இருவரையும் சரண் கேள்வியாய் நோக்க , கௌரி தனக்கு வந்த அழைப்பை பற்றி கூறினாள். அதே நேரம் நித்யாவும் தனக்கு வந்த அழைப்பை பற்றி கூறினாள்.

கௌரி ,” எனக்கு என்னமோ இதெல்லாம்  சரியா படல  நித்யா. அந்த இன்ஸ்டிடியூட்லயிருந்து பேசுன லேடி எனக்கு எதையோ இன்டெரக்ட்டா வார்ன் பண்ற மாதிரியே இருந்துச்சு. அட் தி சேம் டைம் அவுங்க ஸ்பீக்கர்ல போட்டு பேசுன மாதிரி ஒரே சௌண்டா இருந்துச்சு. சம்திங் இஸ் பிஷி… அதுவும் அவுங்க அந்த எம்.டி நேம்  சொல்லும் போது அவுங்களையே அறியாம , அவுங்க வாய்ஸ்ல ஒரு பயமும் , பதட்டமும் இருந்துச்சு …. “

கௌரி தன் மனதில் பட்டதை நித்யாவிடமும் , சரணிடமும்  பகிர்ந்து கொண்டிருக்க , அதே நேரம் , ரூபன் இன்ஸ்டிடூட்டின் எம்.டி அதி ரூபன் , தன் கையிலிருந்த தேவஸ்வரூபியின் புகைப்படத்தையே தீவிரமாக வெறித்துக்கொண்டிருந்தான். 

வினோதமான வில்லன்
வினைக்கு அஞ்சமறுக்கிறான்
வினையின் விளைவிற்கு மட்டும் அஞ்சுகிறான்
வினாவாய் இவனிருக்க
விடையாய் அவளை தேடுகிறான்
வினாயின்றி விடையேது
வினாவும் விடையும்
விநோதமாய் சந்தித்துக்கொள்ள
வினைக்குள் ஓர் பிரளயம்
விடைக்குள் ஓர் ஆர்வம்
பிரளயம் ஆறுதலாய்
ஆர்வத்திடம் தஞ்சமடைய
ஆர்வமோ ஆர்வமேயின்றி
பிரளயத்தை கரம்பிடிக்க
வினாவும் விடையும்
ஒரே நேர்கோட்டில் சங்கமித்து கொண்டது
சங்கமம் சங்கடமாக மாறுமோ
அல்ல சங்கமம் கஞ்சனையும் கவிஞ்சனையும்
கண்டெடுக்குமா ???

தொடரும் ….

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Archana

      Dei penjil I think ivanum nallavan thano nee ezhudhirka kavithai indirect ah indha pellow nallavan kalantha kettavenu solludhu🙃🙃🙃🙃🙃🙃