Loading

கஞ்சனடா கவிஞ்சா நீ!!
அத்தியாயம் – 13 ( 13.2 )

ரைட்டர்’ஸ் கஃபே 

” வைட்டர்  எனக்கு ஒரு ஹாட் பில்ட்டர் காஃபி  , அப்புறம் இவனுக்கு ஒரு ஐஸ்ட் பில்ட்டர் காஃபி ” என்று சரணுக்கும் சேர்த்து ஆர்டர் செய்த அமுதனை, சரண் கொலைவெறியுடன் முறைத்து கொண்டிருந்தான்.

” இப்போ எதுக்கு எனக்கு ஐஸ்ட் காஃபி ஆர்டர் பண்ற ? நா கேட்டேனா ? உனக்கு மட்டும் ஆர்டர் பண்ணிட்டு விட வேண்டியது தான ? ” என்று எரிந்து விழுந்த சரணை நோக்கி ,

” ஸ்ஸ் பீ கூல் சரண்.  எதுக்கு இப்போ இவ்ளோ கோவம் ? ஜஸ்ட் ரிலாக்ஸ். ஏற்கனவே நீ ரொம்ப சூடா  இருக்க , இதுல ஹாட் காஃபி எல்லாம் குடிச்சா , அப்புறம் வாய் வெந்து போயிடும். சோ அதுக்கு தான் உனக்கு ஐஸ்ட் காஃபி ஆர்டர் பண்ணேன். ” என்று அமுதன் கூறி முடிக்கும் முன்பே ,

” ஆமா ஆமா , துரைக்கு என் மேல ரொம்ப தான் அக்கறை … ” என்று அளுத்துக்கொண்ட சரணை பார்த்து நக்கலாக சிரித்த அமுதன் , ” ச்ச ச்ச உன் மேல எல்லாம் எனக்கு ஒன்னும் அக்கறை இல்ல. எதோ என் மச்சினிச்சிய கல்யாணம் பண்ணிக்க போறவன்னு பார்த்து இரக்க படுறேன், அவ்ளோ தான் ” என்று தலையை சிலுப்பி கொண்டான்.

அவன் கூறிய தினுசில் கடுப்பான சரண் ” அப்படி ஒன்னும் நீ இரக்க பட்டு எனக்கு பிச்சை போட வேணாம். நா கிளம்புறேன். நீ போய் ஜாலியா உன் புது பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணி என்ஜாய் பண்ணு.” என்றவன் அவன் இருக்கையிலிருந்து எழ போக , அமுதன் அவனை பிடித்து மீண்டும் இருக்கையில் அமர வைத்தான்.

” பார்ரா ரோஷம் எல்லா ரொம்ப பலமா இருக்கு . நா யாருன்னு தெரிஞ்சும் , என் முன்னாடி இவ்ளோ தில்லா பேசுற ? ” என்ற அமுதன் குரலில் ஓர் கோவமிருக்க ,  அதை சட்டை செய்யாத சரண் , அமுதனை வெறுப்பேற்றவே அவன் முன் கால் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்தான்.

அதில் கோவம் கொண்ட அமுதன் ” ஆமா ஆமா , இந்த காலத்துல தப்பு பண்றவனுங்க தான் நல்லா திமிரா , தைரியமா சுத்தி கிட்டு திரியுறானுங்க. இப்போலாம் கதைல கூட ஹீரோ சாதுவா ,  பொய் சொல்லாம , பெண்கள மதிக்கிறவனா  ,  நேர்மையானவனா இருந்தா , மக்களுக்கு பிடிக்க மாட்டேங்குது. இதுவே அந்த ஹீரோ அவன் லவ் பண்ற பொண்ணு கன்னத்துல நாலு அப்பு அப்பி ” நானும் ஆன்டி ஹீரோ தான் ” ” நானும் ஆன்டி ஹீரோ தான்”னு பீத்திகிட்டா தான் மக்களுக்கு பிடிக்குது. 

ஹ்ம்ம் நல்லவனுக்கே காலம் இல்ல. பொய் சொல்லி பித்தலாட்டம் பண்றவனுக்கு தான் காலமா இருக்கு. அதுவும் கருப்பு கோட்ட மாட்டிகிட்டு ” கிரிமினல் லாயர்”னு பீத்திக்கிறவங்கல்லாம் , லாயரா இல்லாம கிரிமினலா மாறிடுறாங்க ” என்று அமுதன் முடிக்கும் முன்பே 

” ஹவ் டேர் யூ கேன் டாக் டூ மீ லைக் திஸ் ? நீ சி.பி.ஐ ஆஃபிஸரா இருந்தா , உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் பேசுவியா ? என்னை பார்த்து கிரிமினல்னு சொல்லுற , யூ ப்ளடி ஸ்கோன்றல் ” என்று கோவத்தில் சரணும் வார்த்தைய விட , 

” ஆமா டா , உன்ன தான் டா கிரிமினல்னு சொன்னேன். என்னமோ பெரிய உத்தம புத்திரன் மாதிரி சீன் போடுற ? நீ நிஜமாவே ” தேவஸ்வரூபி “ய கண்டுபிடிக்கணும்னு நெனச்சியிருந்தேனா , அன்னைக்கு டெல்லி சுப்ரீம் கோர்ட்ல ,  உன் குரு , தி கிரேட் கிரிமினல் லாயர் ” ப்ரதாப் பன்சால்”கிட்ட இந்த கேஸ்ல மனுதாரரா என் பெயர யூஸ் பண்ணாதீங்க , நித்யா பெயர மட்டும் யூஸ் பண்ணுங்க , அண்ட் அட் தி சேம் டைம் , தேவஸ்வரூபிய எங்க காப்பகத்துல வளர்ந்த பொண்ணுனு சொல்லாம , வெறும் அனாதைனும் , நித்யாவுக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு மட்டும் சொல்லுங்கனு சொன்ன ? ” என்று வினவிய அமுதன் , சரணை கோவத்தில் கண்கள் சிவக்க முறைத்தான்.

அமுதனின் இக்கேள்வியில் அதிர்ந்த சரண் ” இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் அமுதன் சார் ? ” 

” பிகாஸ் ஐம் அமுதவாணன் சி.பி.ஐ ஆஃபிஸர் . என் கண்பார்வையில இருந்து யாரும் தப்பிக்க முடியாது. இன்பாக்ட் இந்த கேஸ பொறுத்தவரைக்கும்  நீ தான் என்னோட பிரைம் சஸ்பெக்ட். 

சொல்லு அன்னைக்கு எதுக்கு , கேஸ்ல உன்ன இன்வால்வ் பண்ண கூடாதுன்னு சொன்ன ?  நித்யா கிட்ட கேஸ் பத்தி நா என்கியூரி பண்ணும் போது எதுக்கு அவ கிட்ட உன் பெயரையும் , கௌரி பெயரையும் யூஸ் பண்ண கூடாதுன்னு சொன்ன ? கௌரி கிட்டயும் , வல்லி பாட்டி கிட்டயும்  இந்த கேஸ் பத்தி எதுக்கு மறைச்ச ?இவ்ளோ வேலைய பார்த்துட்டு எதுக்கு அன்னைக்கி வல்லி பாட்டி கௌரி காப்பகம் வச்சு நடத்துறது பத்தி சொன்னப்போ , என் முன்னாடி எதுவுமே தெரியாத மாதிரி நடிச்ச ?  

இதெல்லாத்தையும் விட முக்கியமான கேள்வி  , நா டெல்லிலயிருந்து சென்னை வந்த நாள்ல இருந்து என்னை ஃபாலோ பண்ணி கிட்டு இருக்க , ஆனா அன்னைக்கு ஆதி மாமா , பத்மா அத்தை , வல்லி பாட்டி எல்லாரும் சேர்ந்து , என்னை வந்திதாவோட லவ்வர்னு இன்ட்ரோ குடுத்தப்ப எதுக்கு என்னை புதுசா பாக்குற மாதிரி நடிச்ச ? அது மட்டுமில்லாம , எங்க நா கௌரிகிட்ட தனியா பேசுனா , இந்த கேஸ் பத்தி அவ கிட்ட சொல்லிடுவேனோனு பயந்து , அவளும் நானும் தனியா பேசுற வாய்ப்பையெல்லாம் கெடுத்த ? 

அன்னைக்கு வல்லி பாட்டி முன்னாடி நீயும் , நித்யாவும்  சேர்ந்து தான் என்னை வர வச்சிங்கன்னு எதுக்கு அவுங்ககிட்ட பொய் சொன்ன ? கம் ஆன் ஆன்சர் மீ சரண் தேவ் ” என்று கேள்விகளை அடுக்கிய அமுதன் , சரணையே ” இன்று உன்னிடமிருந்து பதில் கிடைக்காமல் இங்கிருந்து இம்மியளவும் நகர மாட்டேன் ” என்பது போல் வெறித்து கொண்டிருந்தான்.

அமுதனின் கண்களில் இருந்த உறுதியிலேயே, இன்று அவன் கேள்விகளுக்கு பதில் கூறவில்லை என்றால் , நிச்சயம் தன் கதை முடிந்து விடும் , என்பதை புரிந்துக்கொண்ட சரண் , ஓர் பெரு மூச்சை நன்றாக இழுத்து விட்டு , 

” சார் நீங்க கேட்ட கேள்விகளுக்கு எல்லாமே ஒரே பதில் – ” பயம் “. “

” வாட் , பயமா ? உனக்கு யாரு மேல பயம் ?” 

 ” உங்கள மேல தான் சார் பயம் “

” என்ன சரண் , கையும் களவுமா சிக்கிட்டோமேனு பயத்துல உளற ஆரம்பிச்சிட்டியா ? “

” நா உளறுல சார் , உண்மைய தான் சொல்லுறேன்…. ” என்ற சரணின் நினைவுகள் இரண்டு ஆண்டுகள் பின்னோக்கி சென்றது.

————————————————————————————————————————————————————————-

தேவன் இல்லம் 

” அக்கா , இந்த கான்செப்ட் எனக்கு சுத்தமா புரியவே இல்லக்கா ” என்று கையிலிருந்த பேனாவால் தன் தலையை சொரிந்து கொண்டு , முகத்தை அழுவது போல் வைத்து கொண்டு , தன் முன் புத்தகத்தை நீட்டிய தேவஸ்வரூபியை காண்கையில், கௌரியின் மனம் தன்னையும் அறியாமல் ஆனந்த கூத்தாடியது.

” ரூபி செல்லம் , இப்போவே நடு ராத்திரி ஆயிடுச்சு டா. இதுக்கு மேல படிச்சா , நீ ரொம்ப டையர்ட் ஆகிடுவ.

சோ என் சமத்து புள்ளையில , இப்போ புக்க மூடி வச்சிட்டு , போய் தூங்குங்க. அக்கா நாளைக்கு சாயங்காலம் வந்து உங்க டவுட்ட கிளியர் பண்ணுறேன். ” 

பதிலுக்கு தேவஸ்வரூபி  தன் ரெட்டை ஜடை முகத்தில்  அடிக்கும்படி தன் தலையை இடது வலமாக ஆட்டியவள் ” இல்லக்கா , நான் இன்னும் கொஞ்ச நேரம் படிச்சிட்டு தூங்குறேன். இந்த கான்செப்ட் எனக்கு சுத்தமா புரியல , இத திரும்ப திரும்ப படிச்சாதான் என் மனசுல நல்லா பதியும். அப்போ தான் நா நீட் எக்ஸாம் நல்லா எழுதி , உங்கள மாதிரி பெரிய டாக்டராக முடியும். ” 

ரூபியின் பதிலில் மகிழ்ந்த கௌரி ” என் செல்ல பாப்பா , நீங்க கண்டிப்பா என்னை விடவே பெரிய டாக்டராவிங்க ” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தாள்.

———————————————————————————————————————————————————————

” ரூபி , ரூபி , ரூபி …. ” என்று தலை தெரிக்க ஓடி வந்த கௌரி , ரூபியை தன் தலைக்கு மேல் தூக்கி சுற்றினாள்.

திடீரென்று கௌரி தன்னை தூக்கியதில் அதிர்ந்த ரூபி , ” ஐயோ அக்கா , என்னை இரக்கி விடுங்க. எனக்கு தலையெல்லாம் சுத்துது ” என்று கத்த , கௌரியோ , அதை கண்டுகொள்ளாமல் அவள் பாட்டிற்கு சுற்றி கொண்டிருந்தாள்.

அப்போது தான் கோர்ட்டிலிருந்து வந்த சரண் , ரூபி கத்துவதையும் மீறி கௌரி அவளை தூக்கி சுத்துவதை கண்டு பதறியவன் , அவள் அருகில் வந்து 

” ஏய் கௌரி எரும , என்ன பண்ற ? முதல்ல ஸ்வரூப்ப  இறக்கி விடு , பாவம் குழந்தை பயத்துல கத்துறா பாரு” என்று கௌரியை தடுத்தான்.

சரண் தடுத்ததையும் மீறி , ஓர் இரண்டு சுற்று  சுற்றிய பின்பே , ரூபியை தரையில் இறக்கி விட்ட கௌரி , அவள் கன்னத்தில் முத்த மழை பொழிய துவங்கினாள். கௌரியின் உற்சாகம் ரூபிக்கும் தொற்றி கொள்ள , அவளும் கௌரியின் கன்னத்தில் மாறி மாறி தன் இதழ் பதித்தாள்.

இருவரும் மாறி மாறி முத்த மழை பொழிந்து கொண்டதில் கடுப்பான சரண் , ” ஹலோ லேடீஸ் என்னை மாதிரி ஒரு அக்மார்க் ஆஞ்சநேய பக்தன் முன்னாடி  இப்படியெல்லாம் நடந்து என் மனச கலைக்க பாக்குறீங்கலா ?.” என்று இடுப்பில் கை வைத்து முறைக்க , அவன் கேள்வியில் கௌரி ஒருபுறம் “பே ” வென விழிக்க , ரூபியோ 

” சங்கு மாம்ஸ்  , கொஞ்ச நாளைக்கு முன்னாடி , இனிமே நீ என்ன அண்ணானு கூப்பிடாத , மாமானு கூப்பிடுன்னு சொன்ன அந்த துர்கா பக்தர் , எப்போயிருந்து ஆஞ்சநேய பக்தரா மாறுனாரு ? ” 

அவள் கேள்வி புரியாத கௌரியோ ” அது என்ன ரூபி செல்லம் , துர்கா பக்தர் ? ” என்று வினவ , 

தன் தலையில் அடித்து கொண்ட ரூபி ” ஐயோ டியூப் லைட் அக்கா , உன் பூல் நேம் கௌரி துர்கா தான ? அப்புறம் நா உன்ன அக்கானு கூப்பிட்டா , சங்கு மாம்ஸ மாமானு தான கூப்பிடனும் ” என்று கண்ணடித்தாள்.

முதலில் அவள் கூறியது புரியாமல் விழித்த கௌரி , அவளின் இறுதி வரியில் அதிர்ந்தவள், சரணை பார்க்க , சரணோ பறக்கும் முத்ததால் அவளுக்கு காதல் தூதனுப்பினான்.

சரணின் இச்செய்கையில் கௌரியின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட , அதை மறைக்கும் பொருட்டு பட்டென்று தலை குனிந்து கொண்டாள்.

அவளது செய்கையை கண்டு , ரூபி அவளை கேலி செய்ய , சரணோ , ரூபியை நெருங்கி , அவள் தலையை வருடியவன் ” தேங்க்ஸ் டா ஸ்வரூப் , நானே உன் டியூப் லைட் அக்கா கிட்ட எப்படி ப்ரொபோஸ் பண்றதுனு தெரியாம தவிச்சி கிட்டு இருந்தேன். என் வேலைய ரொம்ப ஈஸியாக்கிட்ட ” என்க , 

பதிலுக்கு ரூபியோ , ” உங்க தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேணாம். அதுக்கு பதிலா உங்களுக்கு பிறக்குற குழந்தைக்கு என் பெயரையே வச்சிருங்க” என்றவள் கௌரியையும் , சரணையும் பார்த்து கண்ணடித்தாள்.

” எனக்கு டபுள் ஓகே ஸ்வரூப் பேபி. ஆனா உன் பெயரையே பாப்பாக்கும்  வச்சா , பெயர் சொல்லி கூப்பிடும் போது , உன்ன கூப்பிடுறோமா ? இல்ல பாப்பாவ கூப்பிடுறோமானு , உனக்கு  கன்பியூஸ் ஆகாதா ? ” என்ற சரணை நோக்கி , 

” அப்படியெல்லாம் கன்பியூஷன் எதுவும் வராது மாம்ஸ். ஏன்னா நா தான் உங்க எல்லாரையும் விட்டு ரொம்ப தூரமா போக போறேனே. ” என்று தேவஸ்வரூபி , தன் மீன் விழிகளை விரித்து ஏக்க இரக்கத்துடன் கூற , அவள் கூறியதை கேட்டு அதிர்ந்த கௌரியும் ,சரணும் , ஒன்றாக ” ஏய் ரூபி என்ன பேசுற  ? ” என்று அதிர்ந்தனர்.

” ஆமா உங்களுக்கு பாப்பா வரும் போது , நா லண்டன்ல எம்.எஸ். கார்டியாலஜி படிச்சு கிட்டு இருப்பேன்ல. அத தான் சொன்னேன். அதுக்கு ஏன் ரெண்டு பேரும் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க ? ” என்று பால் மனம் மாற , பதினேழு வயது தேவஸ்வரூபி விளையாட்டாய் கூற , பாவம் அவள் அறியவில்லை , அவள் விளையாட்டாய் கூறியது வினையாக போகிறதென்று. 

தொடரும் …

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கும் நான் உங்கள் பென்சிலு …

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Dei penjil antha pullaya pottu thalitiya da🤧🤧🤧 athu enna da penjil stry ah seekarama mudika poren manasu serlanu😏😏😏 un pencil moolaye konjam sharpener vechu seevina tha unaku peelings kammiya aagum🤣🤣🤣