முதலும் நீ முடிவும் நீயென
துவங்கிய என் காதலுக்கு
முகவரியே இல்லாமல்
மாற்றியது ஏனோ!
இதயம் எனும் சிறையில் உன்னை
பூட்ட நினைத்த எனக்கு
இதயத்தையே நொருக்கி
விலகிச் சென்றது ஏனோ!
கண்ணில் புதைத்து
பாதுகாத்த என் கண்களுக்கு
கண்ணீரை பரிசாய்
விட்டுச் சென்றது ஏனோ!
காரணமே இல்லாமல் அழும்
என் மனதிற்கு
மரணத்தை இறுதியாய்
கொடுத்துச் சென்றது ஏனோ!
மரணிக்கச் சென்ற என் உடலிற்க்கு
மறு வாழ்வு கொடுக்க எண்ணிய கடவுள்
மணவறையை கொடுக்க
எனக்கு மட்டும் அது பிணவறையாய்
காட்சியளிப்பதும் ஏனோ!!….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
2
+1
+1