அத்தியாயம் 27 :
“மாமா.”
தான் முன் வந்தும் தன்னை கண்டுகொள்ளாது கடந்து செல்லும் கணவனை காதல் கசிய இதயம் உருகும் குரலில் அழைத்தாள்.
“பேசாதடி நீ.”
நிரலியின் விளிப்பில் நின்றவன் அவள் புறம் திரும்பாது சொல்லியிருந்தான். ஆதியிடத்தில் அவ்வளவு கோபம் அவள் மீது.
ஆதியின் சிறு அதட்டலுக்கே அரண்டு போனாள் பேதை.
“எதுக்கு மாமா இவ்வளவு கோபம்?”
“ஏன் உனக்குத் தெரியாதா?”
“என்னால என் சோகத்தை மத்தவங்ககிட்ட மறைக்கிற மாதிரி உங்கக்கிட்ட மறைக்க முடியல மாமா… உங்கக்கிட்ட என் எல்லாம் திடமும் காணாமல் போயிடுது. என்னால பொய்யா உங்கக்கிட்ட இருக்க முடியல மாமா. அதான் நான் வருத்தப்படுறேன் தெரிந்தால் நீங்களும் வருத்தப்படுவீங்களேன்னு உங்களை பார்ப்பதை தவிர்த்தேன். மன்னிச்சிடுங்க மாமா” என்ற நிரலி அவனின் முதுகை கட்டிக்கொண்டாள்.
முதுகில் மனைவியின் கண்ணீரின் ஈரம் உணர்ந்தவன், அவளை தன் முன் இழுத்து…
“உன்னோட சோகத்தில் கூட எனக்கு பங்கு இருக்கு பேபி. எதுவாயிருந்தாலும் சேர்ந்தே கடப்போம்” என்றவன் அவளின் கண்ணீரை துடித்துக்கொண்டே…
“நான் ஒருமுறை உன்னை பார்க்காததைப் போல் சென்றது உனக்கு வலியை கொடுத்தைப் போல் தானே பேபி… உன் பார்வையற்ற விலகல் எனக்கும் வலியை கொடுத்திருக்கும்” எனக் கேட்டான்.
தன் வருத்தம் அவனையும் வருத்தும் என்று நினைத்தளுக்கு, தன் பாராமுகமும் வருத்தத்தை அளிக்கும் என்பதை மறந்து போனாள்.
“சாரி மாமா” என்றவள் மேலும் அவனை ஒண்டினாள்.
அவள் எதை நினைத்து பயப்படுகிறாளென்று அவனுக்காத் தெரியாது.
“பேபி… இங்க பாரு என்னை” என்று தன்னிலிருந்து விலக்கி தன்முன் நிறுத்தியவன், அவளின் இருபுறமும் தோளில் அழுத்தம் கொடுத்து…
“நானிருக்கின்றேன்” எனும் விதமாக அழுத்தமாக கண் மூடி திறந்தான்.
“லவ் யூ மாமா” என்றவள் மீண்டும் அவனை இடையோடு கட்டிக்கொண்டாள்.
சில கணம் அந்நிலை நீடிக்க,
“நீ என்னிடம் எதாவது சொல்லணுமா பேபி” என்று ஆதியே கேட்டிருந்தான்.
ஆதிக்கு அச்செய்தியை அவள் வாயால் கேட்க வேண்டுமென்று கொள்ளை எதிர்பார்ப்பு.
அவ்விடயம் தானறிந்ததில் இருந்து, தன்னிடம் அவள் எப்படி சொல்வாளென்று பலமுறை பலவிதமாக நினைத்து பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
இரவிலிருந்து நிரலி அவளாகவே இல்லை. மனம் முழுக்க ஆதி சொல்லிய விடயங்களும், இன்று நடக்கவிருப்பதுமே உழன்று கொண்டிருப்பதில்… தன்னிடம் ஏற்பட்ட மாற்றம், ஆதியிடம் பகிர்ந்துகொள்ள சென்றது என அவ்விடயத்தையே மறந்திருந்தாள்.
இப்போது ஆதி நேரடியாகக் கேட்டும்… அவளுக்கு நினைவில்லாது போக எதுவுமில்லை எனும் விதமாக தலையசைத்தாள்.
“என்னோடவே இருங்க மாமா” என்றவள் இன்னும் இறுகினாள் அவனுடன்.
ஆதிக்கும் அவள் சாதாரண நிலையில் இல்லை என்பது தெரிந்துதான் இருந்தது. ஆதலால் அவளாக சொல்லட்டுமென்று நினைத்தான்.
தற்போதைய அவளின் கலக்கம் புரிந்தவன்,
“எதுக்கு பேபி பயம்… தேவாவோட நிரலிக்கு பயம் இருக்கக் கூடாதே!” என்றவன், “பயத்தை போக்குவதற்கு என்னிடம் ஒரு மருந்து இருக்கு தரவா பேபி” என்றான்.
நிரலி புரியாது விழிக்க…
“இப்படியெல்லாம் பார்க்காத பேபி அப்புறம் என்னை கன்ட்ரோல் பண்ணுவது ரொம்ப கடினம்” எனக் கூறிக்கொண்டே அவள் இதழை தன் வசமாக்கியிருந்தான்.
முத்தம் முற்று பெற விலகியவன்,
“இப்போ பயம், கலக்கம், வருத்தம் எல்லாம் போச்சா பேபி” என்று விஷமத்துடன் கேட்க… அவனின் புஜத்தினிலே இரண்டு குத்து குத்தினாள்.
எந்நிலையிலும் உனக்கு உடனிருப்பேன் என தாங்கிப்பிடிக்கும் உறவு கிடைப்பது வரம். அத்தகைய வரம் வாய்க்கப்பெற்ற நிரலி என்ன நடந்தாலும் கலிங்கிடக் கூடாதென தன் கணவனுக்காக முடிவெடுத்தாள்.
ஒருவர் மற்றொருவரின் மனதை ஆராய்ந்தபடி எவ்வளவு நேரம் தங்களது அணைப்பினிலேயே நின்றிருந்தனரோ கோர்ட்டுக்கு செல்ல நேரமாகிவிட்டதென்று சூர்யா அழைத்த பிறகே இருவரும் விலகி அறையை விட்டு வெளியில் வந்தனர்.
****
நீதிமன்ற வளாகம்…
ஆதியின் குடும்பம் அனைவரும் வருகை தந்திருந்தனர். அவர்கள் எல்லோரும் ஒரு காரில் வந்திறங்க, ஆதியும் நிரலியும் மற்றொரு காரில் உள் உழைந்தனர்.
ஏற்கனவே வந்து சுற்றிய இடம் தான்… ஆனால் இன்று ஏனோ முதல் நாளில்லாத ஒரு மிரட்சி நிரலியிடம்.
“சில் பேபி” என்ற ஆதி அவளின் உள்ளங்கையோடு தன் கை கோர்த்தான்.
“யூ ஆர் சோ சாஃப்ட் பேபி” என்றவன் பிடித்திருந்த அவளின் கையை திருப்பி இதழ் பதித்தான்.
ஆதியை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளை ஒரு கணம் கூர்மையாக பார்த்தவன்… பின்பு அழுந்த மூடித் திறந்தான்.
அதில் பலம் பெற்றவள் நிமிர்ந்து அமர்ந்தாள்.
“தட்ஸ் மை பேபி” என்றவன், வழக்கம்போல் கை பொத்தானை போட்டுவிட்டு முகத்தில் விறைப்பை கொண்டு வந்து… ஸ்டைலாக கூலர்ஸை மாட்டியபடி காரிலிருந்து இறங்கினான்.
“என்னை சைட் அடுத்தது போதும் பேபி…” என்றவாறு அவள் இறங்க கதவினை திறந்துவிட்ட அவனின் வார்த்தைகளிலும் முக பாவனைகளிலும் அசடு வழிந்தவாறே கீழிறங்கினாள் நிரலி.
“ராகவ் எங்கப்பா?”
வேலு ராகவை கேட்டவாறு ஆதியின் அருகில் வந்தார்.
“ராகவை விச்சு கடத்தி வச்சிருக்காரு மாமா.”
“அச்சோ திரும்பவுமா?” செல்வி பதறிவிட்டார்.
“நோ இஷு அக்கா… அவனுக்கு ஒன்றும் ஆகாது” என்ற ஆதி அங்கு நுழைந்த காரை கண்டதும்,
“பேபி எல்லோரையும் ஆபிஸ் ரூம் கூப்பிட்டு போ” என்று நிரலியிடம் கூறியவனாக அந்தக் காரை நோக்கிச் சென்றான்.
அந்தக் காரிலிருந்தவர் ஆர்.கே.
அவருக்கு காலை வணக்கத்தை தெரிவித்தவன், அவர் இறங்கி சக்கர நாற்காலியில் அமர உதவி புரிந்தான். அந்த நாற்காலி அவரே இயக்கும் வகையில் நவீன வசதிகளுடன் இருந்தபோதிலும் ஆதியை அதனை தள்ளியபடி அவரை அழைத்து வந்தான்.
“இப்போவாவது என் பொண்ணை கண்ணில் காட்டக்கூடாதா ஆதி!” ஆதங்கமாக ஆர்.கே கேட்டார்.
அதற்கு ஆதி கொடுத்த பார்வையை வைத்தே…
“சாரி மிஸ்டர்.ஏ.டி இன்னும் கொஞ்ச நேரம் என்னால் காத்திருக்க முடியும்” என்று விறைப்பாக சொல்லிவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார்.
அவரிடமிருந்து தள்ளிச் சென்ற ஆதி, ஸ்வேதாவிற்கு அழைத்து… அவள் கிளம்பிவிட்டாளா என்பதை அறிந்துகொண்டு மீண்டும் ஆர்.கே’வின் அருகில் வந்தான்.
ஆதி வந்த போது அவர் அந்த வளாகத்தை பார்வையால் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நொடி, அவ்விடத்தில் தான் கம்பீரமாக வலம் வந்ததை நினைத்து பார்த்தவர் கண்களை மூடிக்கொண்டு அந்நேரங்களை அசைபோட்டார்.
அவரின் மனநிலையை அவதானித்த ஆதி…
“இப்பவும் நீங்க நினைத்தால் இங்கு வரலாம். உங்கள் இடம் அப்படியேத்தான் இருக்கு. ராஜாவாக எத்தனை பேர் வேண்டுமானாலும் நினைக்கலாம். ஆனால் ஒரு காட்டுக்கு ஒரு சிங்கம் தான், ராஜா சார்” என்றவன் அங்கு தனது ஜூனியர்களின் புடை சூழ நடந்து வந்து கொண்டிருந்த விஸ்வநாதனை கண்டு… “கூட்டத்திற்கு தலைமை வகுத்தவனெல்லாம் சிங்கமாகிட முடியாது” என்றான்.
விஸ்வநாதனின் மீதான மொத்த வெறியையும் இன்று இறக்கி வைத்திட நினைத்தான் ஆதி. அவனின் முகமும் அதையே பிரதிபலிக்க நொடியில் உணர்வுகளற்ற தன்மைக்கு மாற்றிக் கொண்டான்.
“எனக்கு என் குடும்பம் கிடைத்தால் போதும் ஆதி” என்றவர் “என் மனைவி?” என்க, ஆதி தூரத்தில் கை காண்பித்தான்.
ஆதி கை காண்பித்த இடத்தில், ஐம்பது வாயதை நெருங்கிய ஒரு பெண்மணியும் ஸ்வேதாவும் நடந்து வந்தனர்.
“தெய்வா.” ஆர்.கே’வின் வாய் தானாக முணுமுணுத்தது.
“ஸ்வேதா? ராகவ் பிரண்ட்…” உடனே அருகில் வந்த ஸ்வேதாவை கேள்வியாய் வினவினார்.
“ஸ்வேவும் உங்களுக்கு மகள் மாதிரி தான் சார்” என்ற ஆதி ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு மூத்தவர்கள் இருவருக்கும் தனிமை அளித்து சற்று தள்ளிச் சென்றனர்.
கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு ஆர்.கே’வே பேச்சினைத் துவங்கினார்.
“எப்படியிருக்க தெய்வா?” அவரின் குரல் கரகரத்தது.
அவர் கேட்டதற்கு பதிலளிக்காது…
“என்னை மன்னிச்சிடுங்க” என்றவர் தரையில் மண்டியிட்டு கணவனின் மடியில் முகம் புதைத்து அழுதார்.
“நடந்ததை பேசி ஒன்னும் ஆகப்போவதில்லை தெய்வா. இனி நடக்கப்போவதை சரியாக அமைத்துக் கொள்வோம்” என்றவர் தன் மனைவியின் தலையை தடவினார்.
“நம்ம பொண்ணு…?” தெய்வநாயகி ஆர்வத்தோடு ஆர்.கே’விடம் வினவ…
“நானும் உன்னோடு சேர்ந்துதான் பார்க்க வேண்டும்” என்றவர் ஆதியை பார்க்க… ஆதியுடன் ஸ்வேதாவும் அவர்கள் அருகில் வந்தனர்.
“போகலாம் சார்… கேஸ் நெம்பர் சொல்லிட்டாங்க” என்ற ஆதி மூவரையும் விசாரணை அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தன்னுடைய அலுவலக அறைக்குள் வந்தவன் அனைவரையும் அங்கு அழைத்துச் சென்றான்.
உள்ளே செல்வதற்கு முன்… ஆதியை தடுத்த சூர்யா,
“எனக்கு என் அம்மு வேணும் மாமா” என்று கண்கள் கலங்கிவிட்டான்.
சூர்யாவை தோளோடு அணைத்து பிடித்தவன்… “அவள் எப்பவும் உன் தங்கை தான்டா” எனக்கூறி ஆறுதல் படுத்தினான்.
முந்தைய வழக்கு முடித்து சிறு இடைவெளி எடுத்துக்கொண்ட நீதிபதி இன்னும் வரவில்லை என்பதால் அனைவரும் சற்று ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர்.
ஆதிக்கு முன்பே உள்ளே வந்து தன்னிருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வநாதன்… உள்ளே இணைந்து வந்த ஆர்.கே மற்றும் தெய்வநாயகியை கண்டு சிறிது அதிர்ந்தார். ஆனால் அதனை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
அவர்களை அடுத்து உள்ளே வந்த யாரையும் விஸ்வநாதனுக்கு தெரிந்திருக்கவில்லை. அதனால் அவர்களையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
வேலு நிரலியை தன்னருகினிலேயே வைத்துக்கொண்டார். அவளை தன் கைக்குள்ளே பிடித்தபடி இருந்தார். அவருக்கு இருக்கும் அதே கலக்கம் தானே அவளுக்கும்… அவருடன் இருப்பதையே அவளும் விரும்பினால். வேலுவை விட்டுக்கொடுக்க அவள் தயாராக இல்லை.
இறுதியாக உள்ளே வந்த ஆதியை விச்சு தீப்பார்வை பார்த்திருக்க…
ஆதியுடன் சூர்யாவை கண்டதோடு சூர்யாவை ஏதோ தேற்றும் விதமாக ஆதி பேசுவதை கவனித்த விஸ்வநாதன்,
“ஒருவேளை ஆர்.கே’வின் வாரிசு இவனாக இருப்பானோ! அதனால் தான் ராகவை கடத்திய பின்னரும் இந்த ஏ.டி தைரியமாக இங்கு வந்து நிற்கின்றானோ?” என்று எண்ணுகையில் “ஒருவேளை இவனை காப்பாற்ற அந்த ராகவ் ஏன் பொய் சொல்லியிருக்கக் கூடாது” என்று மனம் அலச அப்போதே விஸ்வநாதனுக்கு வியர்க்கத் தொடங்கியது.
“இந்த ஏ.டி’யை குறைவாக மதிப்பிட்டு விட்டேனோ” என்று ஆதியிடமிருந்து பார்வையை அகற்றாது விச்சு மனதில் நினைக்க, அவரை பார்த்த ஆதி கண்ணடித்து தனது வழக்கமான புன்னகையை சிந்தினான்.
அதில் கடுப்பாகிய விஸ்வநாதன் அவனை தகிக்கும் பார்வை பார்த்தார்.
‘உன் பார்வை என்னை ஒன்றும் செய்யாது’ என்ற மிதப்போடு உள்ளே வந்த ஆதி, விஸ்வநாதனுக்கு நேரெதிர் இருக்கையில் தோரணையாக அமர்ந்து அலைபேசியை எடுத்து காதில் வைத்தவன்,
“இப்போ நீ போகலாம் ராஜீவ்” என்றவன் “ராகவுடன் அந்த நான்கு தடியர்களையும் அழைத்து வா” என, விஸ்வநாதனுக்கு கேட்குமாறு சத்தமாக பேசியவன் அலைபேசியை முற்றிலும் அணைத்து வைத்தான்.
ராஜீவ் காவல்துறை அதிகாரி. அன்று மருத்துவமனையில் தான் பிடித்த தடியர்களை ராஜீவின் கீழ் தான் பாதுகாப்பாக வைத்திருக்கின்றான்.
இங்கு அமர்ந்துகொண்டு ஆதி ஆடும் ஆட்டத்தின் ஆரம்பத்தையே விஸ்வநாதனால் ஏற்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியாது வெகுவாக குழம்பியிருந்தார்.
அவர் கொண்டிருந்த பதட்டம் அவரை யோசிக்க விடவில்லை.
ஆனால் அவருக்கு எதிர், ஆதி மிக நிதானமாக இருந்தான்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் நீதிபதி வருகை தர… அவ்விடமே நொடியில் அமைதியை தத்தெடுத்தது.
தன்னுடைய இருக்கையில் அமர்ந்திருந்த தயாளன்,
“என்ன விஸ்வநாதன் சார் இந்த கேஸ் பல வருஷமா இழுக்குது…” என்று அவரும் இழுத்தார்.
“அது வந்து சார்…”
“சரி சரி விடுங்க” என்ற நீதிபதி ஆதியிடம் திரும்பி, “என்ன மிஸ்டர் ஏ.டி இன்னைக்கு தீர்ப்பை சொல்லிடலாமா?” எனக் கேட்டார்.
அவர் கேட்டதற்கு ஆதி விஸ்வநாதனை பார்த்துக்கொண்டே,
“நிச்சயம் இன்னைக்கு இந்த கேஸுக்கு நீங்க ஜட்ஜ்மண்ட் எழுதிடலாம் சார்” என்றான்.
விஸ்வநாதனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“சரியான சாட்சிகள் இல்லாமல் ரொம்ப வருடங்களாகக் கிடப்பில் கிடந்த வழக்கு… இதுக்கு முன்னால் உங்களுக்கு பதில் வேறொரு வக்கீல் இருந்தார்… இப்போ நீங்க கையிலெடுத்து இருக்கீங்க… எதிர் தரப்பும் தங்களுடைய கருத்துக்களில் மாற்றம் பெற்றிருக்கலாம் அதனால் வழக்கைப் பற்றி கொஞ்சம் தெளிவாக ஒருமுறை சொல்லிடுங்க ஏ.டி” என்றார் தயாளன்.
வழக்கின் சாராம்சம் இதுதான்.
ஆர்.கே’வும் விஸ்வநாதனும் சகோதரர்கள். அவர்களின் தந்தை வேதாச்சலம் மிகப்பெரிய கோடீஸ்வரர். அவர் கால் பதிக்காத தொழிலே இல்லை. அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. அதற்கு தனது மூத்த மகனின் வரவு தான் காரணமென்று கொண்டாடினார். அவருக்கு இரு மகன்களிலும் வேற்றுமை இல்லை. ஆனால் அவருக்கு மூத்த மகன் தான் உயர்வென்ற எண்ணம் விஸ்வநாதனுக்கு சிறுவயது முதலே இருந்து வந்தது.
அந்த எண்ணம் அவருடனே வளர… உள்ளுக்குள் ஆர்.கே’வை தன் எதிரியாகவே நினைத்தார்.
எவ்வளவோ சொத்துக்கள் தொழில்கள் இருந்தும் ஆர்.கே தனக்கென்று தனித்தன்மை வேண்டும் சொந்தக்காலில் நிற்க வேண்டுமென்று விருப்பத்துடன் சட்டம் பயின்று அதில் வளர்ச்சியும் அடைய, வேதச்சலத்திற்கு பெருமை தாங்கவில்லை.
தன் மகன் ஊரே மெச்சும் பெரிய வக்கீலென்று அனைவரிடமும் சொல்லி சொல்லி மாய்ந்து போவார்.
“இவ்வளவு சொத்துக்கள் இருந்தும் அவன் சொந்தக்காலில் இவ்வளவு பெயரை சம்பாதித்திருக்கின்றான்” என்று பெரிய மகனின் மீது அவருக்கு அவ்வளவு மதிப்பு.
எப்போதும் ஆர்.கே’வை போட்டியாக பொறாமையோடு பார்க்கும் விஸ்வநாதன் இத்தகைய மதிப்பும் பெயரும் புகழும் தனக்கும் வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக சட்டம் பயின்றார். விருப்பமில்லாமல் கற்க நினைத்ததாலோ என்னவோ விஸ்வநாதனுக்கு சரியாக கல்வி வரவில்லை.
கடைசி தேர்வில் ஆர்.கே மிகவும் சிரமப்பட்டு விஸ்வநாதனுக்கு அனைத்தும் சொல்லிக் கொடுத்து அவர் வைத்திருந்த மொத்த அரியரையும் கிளியர் செய்ய வைத்தார். அத்தோடு இல்லாமல் தன்னோடு தன் ஜூனியராகவே வைத்துக் கொண்டார்.
விஸ்வநாதன் தனியாக தனித்து செயல்பட வேண்டுமென்பது தான் ஆர்.கே’வின் எண்ணம். ஆனால் விஸ்வநாதனுக்கு ஆர்.கே கொடுத்த வழக்குகள் அனைத்திலும் வாதாடத் தெரியாது தோல்வியையே சந்தித்தார் விச்சு.
இவற்றையெல்லாம் அறிந்த வேதாச்சலம்… “அவனை கொஞ்சநாள் உனக்கும் கீழ் வைத்து அனைத்தும் சொல்லிக்கொடு” என்று மூத்த மகனிடம் சொல்ல ஆர்.கே’வும் அதையே செய்தார்.
ஒருநாள் நண்பரின் கொண்டாட்ட விழாவிற்கு விஸ்வநாதன் சென்றிருக்க… அங்கு வேதச்சலமும் சென்றிருந்தார்.
விச்சு அதிகமாகக் குடித்துவிட்டு முழு போதையில் உலறிய அனைத்தையும் கேட்ட வேதாச்சலம் மனம் ஓடிந்துபோனார்.
“எனக்கிருக்கும் சொத்துக்கு நானெப்படியெல்லாம் இருக்க வேண்டிய ஆளு… போயும் போயும் அவன்கிட்ட என்னை வேலை பார்க்க வச்சிட்டாரு எங்கப்பா.
என்னுடைய மறைமுக உல்லாச வாழ்க்கை எங்கப்பாவுக்கு தெரியாமல் மெயின்டெயின் பண்ணவே எவ்வளவு செலவாகுது தெரியுமா?
ஏதோ சொத்து நிறைய இருப்பதால் நானெடுப்பது தெரியவில்லை.
சொத்துக்கு உரிமைப்பட்டவனாக இருந்து கொண்டு, திருட்டுத்தனமாக எடுத்துட்டு இருக்கேன். இதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தால் அவ்வளவு தான்.
மொத்த சொத்தும் எனக்கே வரணும். அதுக்குத்தான் இந்த நல்லவன் வேடம். எப்படியாவது என் அண்ணனை அழிக்க வேண்டும். எங்கப்பாவிற்கு நான் மட்டுமே மகனாக இருக்க வேண்டும்.
சின்ன வயசிலிருந்தே என் அண்ணனையே கொண்டாடிட்டு இருக்க எங்கப்பா சீக்கிரம் மண்டையை போடணும் இல்லை அவரை நான் போட்டுத்தள்ளிட்டு சொத்தெல்லாம் அனுபவிக்கணும்.”
விஸ்வநாதன் இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பாரோ அதற்குள் அரைகுறை ஆடையில் ஒரு பெண் வந்து விச்சுவின் மடியில் அமர முகம் சுளித்தவராக வேதாச்சலம் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
வீட்டிற்கு வந்தவருக்கு மனதே சரியில்லை.
‘தன் வளர்ப்பு எங்கே தவறாக போனது’ என்று நினைத்து நினைத்தே வருந்தினார்.
‘சொந்த அண்ணனையே எதிரியாக பார்கின்றானென்றால் அவனின் மனதில் எவ்வளவு வஞ்சம் இருக்க வேண்டும்.’ வேதச்சலத்திற்கு மனமே ஒப்பவில்லை.
மகனின் பொறாமை குணத்தைக்கூட ஏற்றுக்கொண்டவரால், பெண்கள் சகவாசத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
‘முதலில் ஒரு திருமணத்தை முடித்து வைப்போம். அவனுக்கென்று ஒரு பெண் வந்துவிட்டால் மற்ற குணங்களிலிருந்தும் மாற்றிவிடலாம்.’
காலம் கடந்து மகனை நல்வழிப்படுத்த எண்ணினார்.
“இந்த சொத்திற்காகவும் பேருக்காகவும் தானே இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான். அந்த சொத்தை வைத்தே அவனை மடக்கி நல்வழிப்படுத்துகிறேன்” என திட்டம் போட்டார்.
மனிதன் போடும் கணக்கெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் எதற்கு. கடவுளின் கணக்கே வேறு அல்லவா!
அத்தியாயம் 28 :
“என்னால் முடியவே முடியாது.”
வேதாச்சலம் தனது மக்கள் இருவருக்கும் ஒரே மேடையில் ஒரே முகூர்த்தத்தில் மணம் முடிக்கவிருப்பதாகத் தெரிவிக்க… திருமணம் தன்னுடைய மறை வாழ்க்கைக்கு தடையாக அமைந்துவிடுமென்று விஸ்வநாதன் முடியவே முடியாதென்று கூறினார்.
வேதாச்சலம் அசைந்து கொடுப்பதாக இல்லை.
மகனை திருத்த இதைவிட நல்ல வழி கிடைக்காதென்று கருதினார்.
“ஏன் விஸ்வா கல்யாணம் வேண்டாம் சொல்லுகிறாய்? வேறு யாரையாவது விரும்புகிறாயா?” ஆர்.கே தன் தம்பியிடம் தன்மையாகக் கேட்டார்.
‘ஒருத்தின்னா அவளையே கட்டி வைக்கலாமே! பல பேரல்லாவா இருக்கிறார்கள்.’ நினைத்த மாத்திரம் வேதாச்சலத்தின் மனம் சுணங்கியது.
“அதெல்லாம் இல்லை… முதலில் உனக்கு நடக்கட்டும். பிறகு என் கல்யாணத்தை பார்த்துக்கொள்ளலாம். நான் இன்னும் தொழிலில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்ற விஸ்வநாதன் வேறெதுவும் பேசாது இதுதான் தன் முடிவென்று சென்றுவிட்டார்.
‘நீ எதை சாதிக்க நினைக்கிறாய் எனக்குத் தெரியும்’ என தனக்குள் கூறிக்கொண்ட வேதாச்சலம், பெரிய மகனின் முன் உண்மைகள் எதையும் பேசிட முடியாது அமைதியாக இருந்தார்.
வழக்கம்போல் விச்சு இரவு தன்னுடைய தேவைகள் தீர்த்து வீட்டிற்கு ஒரு மணி போல் வர, அவருக்காக வேதாச்சலம் நடு வீட்டில் காத்திருந்தார்.
தந்தையை கண்டு விஸ்வநாதனை அதிர்ந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
வேதாச்சலமும் எதுவும் பேசாது விச்சுவின் முன்பு சில பத்திரங்களை எடுத்துப்போட்டார்.
“என்னதிது.”
“வக்கீல் தானே நீ! எடுத்து படித்துப்பார்!”
கையிலெடுத்து பத்திரத்தில் பார்வையை ஓட்டிய விஸ்வநாதன் அடுத்த ஐந்தாவது நிமிடம் வெறிபிடித்தவராக கையிலிருந்தவற்றை தூள் தூளாகக் கிழித்து எறிந்தார்.
“அது நகல் தான் அசல் என்னிடம் இருக்கிறது” என்ற வேதாச்சலம், “நீ யாரு உன் மனதில் என்னயிருக்கிறது எல்லாம் எனக்கு தெரிந்து சில நாட்கள் ஆகிறது, ஒழுங்கா நான் சொல்லுவதை கேட்பதாக இருந்தால் இங்க இரு இல்லையென்றால் இப்போதே வெளியில் செல்லலாம்” என்றவரின் பேச்சினை விச்சுவால் மீற முடியாது போனது.
அதற்கு காரணம் தன் கையில் ஒன்றும் இல்லாததே. என்னதான் பெரிய கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசாக இருந்தாலும்… இப்போது அவர் கையில் வக்கீல் என்பதை தவிர வேறெதுவும் இல்லை. அந்த வக்கீல் என்கிற அடையாளம் கூட ஆர்.கே’வால் நீடிக்கப்பட்டிருக்கிறது.
வேதாச்சலம் சொன்னதைப்போல் கேட்காது வெளியில் சென்றால் தற்போதைய நிலைக்கு விச்சு பிச்சைதான் எடுக்க வேண்டும்.
அதை மனதில் வைத்து, விஸ்வநாதன் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு சம்மதித்தார்.
அடுத்த நாள் காலை விஸ்வநாதன் தன்னுடைய சம்மதத்தை சொல்ல,
“மேசையில் பொண்ணு போட்டோ இருக்கு பாரு” என்ற வேதாச்சலம் போன் வரவும் அதில் கவனமானார்.
கவரிலிருந்த புகைப்படத்தை பிரித்து பார்த்த விஸ்வநாதன், ஒரு நொடி பெண்ணின் அழகில் உலகம் மறைந்து மொத்தத்தில் தன்னையே மறந்து நின்றிருந்தார்.
‘இந்த பெண் மனைவியாக வந்தால் கண்ட பெண்களை தேடி செல்ல வேண்டியதில்லையே.’ அப்பவும் தன் ஆசையை மட்டுமே பார்த்தார் விஸ்வநாதன்.
திடீரென அவர் கையிலிருந்து புகைப்படம் பறிக்கப்பட, யாரென்று விச்சு திரும்ப…
“இது உன் அண்ணனுக்கு பார்த்திருக்கும் பெண்… இந்த கவரில் இருப்பதுதான் உனக்கு வரப்போகும் மனைவி” என்ற வேதாச்சலம் மேசையிலிருந்த மற்றொரு கவரை எடுத்து இளைய மகனின் கையில் கொடுத்துச் சென்றார்.
அந்தப்பெண்ணும் அழகாகத்தான் இருந்தாள். ஆனால் விஸ்வநாதனுக்கு தன் அண்ணனின் மேலிருக்கும் வெறுப்பு அவ்விடயத்திலும் வெளிப்பட்டது.
“நல்லதெல்லாம் அவனுக்கு மட்டுமே!” அப்போதே தன் அண்ணனின் வாழ்வு சிறக்க விடக் கூடாதென்று முடிவு செய்துகொண்டார் விஸ்வநாதன்.
அடுத்த முகூர்த்தத்தில் இருவருக்கும் சிறப்பாக மணம் முடித்து வைத்தார் வேதாச்சலம்.
அதன் பிறகு மிகவும் நல்லவன் வேடத்தை சரியாக போட்டார் விஸ்வநாதன். குடிப்பதில்லை, அனாவிஷயமாக எங்கும் செல்வதில்லை. ஆர்.கே’வுடனே சுற்றிக் கொண்டிருந்தார்.
இரவு நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமே தவிர்த்தவராக தன் நடிப்பை சரியாக வெளிப்படுத்தினார். வேதாச்சலமே மகன் திருந்திவிட்டதாக எண்ணிய போதும் பத்திரத்தை மாற்றி எழுத அவர் மனம் இடம் தரவில்லை.
எவ்வளவு நாள் தான் பொய்யாக இருக்க முடியும். விஸ்வநாதனும் வகையாக மாட்டும் நாள் வந்தது.
ஒரு நாள் இரவு இரண்டை கடந்த வேளையில் விஸ்வநாதனின் அறையிலிருந்து மெல்லிய சத்தம் கேட்டது.
தன்னுடைய அறையிலிருந்து வந்து பார்த்த வேதாச்சலம், கணவன் மனைவி சச்சரவென வெளியவே அமைதியாக நிற்க, சற்று நேரத்திற்கெல்லாம் அறைக்குள்ளிருந்து பொருட்கள் உடையும் சத்தமும் விஸ்வநாதனின் மனைவி அலரலும் அதிகமாகக் கேட்க தாமதிக்காது உள் நுழைந்த வேதாச்சலத்திற்கு அதிர்ச்சியே கிடைத்தது.
உடலில் ஆங்காங்கே கன்றிப்போய் இருக்க, சிராய்ப்புகளும் ரத்தமுமாகக் காணப்பட்டார் விச்சுவின் மனைவி. பெல்ட்டினால் அடித்திருப்பார் போலும். அவ்வளவு அடிகளை அவரின் உடல் ஏற்றிருக்கிறது. உயிர் மட்டுமே எஞ்சியிருக்க, தரையில் நாராக கிடந்தார்.
“என்னடா விஸ்வா… உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? எதுக்கு இந்தப்பெண்ணை இப்படி சித்திரவதை செய்கிறாய்?” வேதச்சலத்தால் பொறுக்க முடியவில்லை.
விஸ்வநாதன் வாய் திறக்காது, கப்போர்ட் ஒன்றை திறந்து உயர்ரக மது மாட்டிலை கையிலெடுத்து திறந்து அப்படியே தன் தொண்டைக்குள் சரித்தார்.
‘இவன் திருந்தவில்லையா?’ மனதளவில் வேதாச்சலம் துவண்டு போனார்.
முழு பாட்டிலையும் காலி செய்த விஸ்வநாதன், தன் தந்தை இருப்பதையும் பொருட்படுத்தாது…
மீண்டும் பெல்டினை கையிலெடுத்து பாதி உயிராகக் கிடந்த அந்தப் பெண்ணை அடிக்கத் துவங்கினார்.
“ஒரு மாசம் ஆகிடுச்சுடி… உனக்கு ஏன் குழந்தை தங்கவில்லை… நீ அப்போ மலடியா? உன்னால் பிள்ளை பெத்துக்க முடியாதா?” எனக் கேட்டு கேட்டு அவ்வளவு அடிகளைக் கொடுத்தார் விஸ்வநாதன். பாவம் அந்த பெண்ணிற்கு குரல் வெளிவரக் கூட வலுவில்லாமல் போயிருந்தது.
தந்தை முன்னால் கேட்கும் வார்த்தைகளா இவை வேதாச்சலம் மனதளவில் மிகவும் நொந்துபோனார். மருமகளை காப்பற்றா குறுக்கே சென்றும் பலனில்லை. விஸ்வநாதன் மிருகமாக மாறியிருந்தார்.
“நான் முதலில் அப்பாவானால் தான் இந்த சொத்தையெல்லாம் ஆள முடியும்” என்று வெறிபிடித்து கத்திய விஸ்வநாதன், தன் மனைவிக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்த வேதாச்சலத்தை அவர் உணரும் முன் இழுத்து அறைக்கு வெளியில் தள்ளி கதவடைத்த விஸ்வநாதன் மனைவியின் விருப்பமின்றி அவளின் நிலையையும் சற்றும் கருத்தில் கொள்ளாது… தான் அப்பவாகிட வேண்டும்… என்கிற வெறியோடு மூர்க்கமாக மனைவியிடம் கூடல் நடத்த… அது மிருகம் ஒரு பூவை கசக்கும் நிகழ்வாகவே இருந்தது. ஏற்கனவே பாதி உயிராக இருந்த பெண்ணவள், மனம் விட்டு இதயம் இருவியிருக்க… மீண்டும் மீண்டும் மிருகத்திடம் உடலால் சிக்கியதால் தாக்கு பிடிக்க முடியாது தனது மூச்சை நிறுத்தியிருந்தாள்.
மனைவி இறந்த நிலை அறிந்தும் விஸ்வநாதன் விடுவதாக இல்லை. அவர் மூளை முழுக்க தான் அப்பாவாக வேண்டுமென்ற வெறி ஊறியிருந்தது. மனதில் மூர்க்கம் குடி கொண்டிருந்தது.
“செத்துபோயிட்டியா?” சாதரணமாகக் கேட்ட விஸ்வநாதன்,
“எனக்கொரு பிள்ளையை கொடுத்துட்டு செத்திருக்கலாம்” என்றாரே தவிர, தனக்கு மனைவியாக ஒரு மாத காலம்… தன்னுடன் வாழ்ந்த பெண்ணவள் என்கிற எண்ணம் சிறிதுமின்றி மது கோப்பையை கையிலெடுத்த விஸ்வநாதன் குடித்துக் கொண்டே அறைக்கதவை திறக்க மிகுந்த பதட்டத்துடன் முகத்தில் கலவரம் தாண்டவமாட கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்த வேதாச்சலத்தை கண்டு நக்கலாக சிரித்தவாறே…
“எனக்கு வேறொரு பொண்ணு பாருங்க… நான் அப்பாவாகணும்” என்றான்.
வேதாச்சலம் தான் கேட்ட வார்த்தையில் கூசிப்போனார்.
“என்னடா சொல்லுற…?”
“நீங்க பார்த்து கட்டிவச்சவ என்னோட வேகத்துக்கு ஒத்துவரல… என்னோடு ஈடுகொடுக்க முடியாது செத்துப்போயிட்டாள்.” சர்வ சாதாரணமாக சொல்லிய விஸ்வநாதன் அங்கிருந்த கதிரையில் அமர்ந்து மீண்டும் வாயில் கோப்பையை சரித்தார்.
அறைக்குள் சென்ற வேதாச்சலம், தன் மருமகள் இருந்த கோலம் காண முடியாது… தன்னுடைய மகளாக நினைத்து, கண்களை மூடியவாறே போர்வையை எடுத்து பெண்ணவளின் தேகத்தை மூடியவர் வாய்விட்டு கதறினார்.
“அவன் இந்தளவுக்கு கொடூரமானவன் என்று தெரியாமல் போனதே. இவனுக்கு கட்டி வைத்து நானே உன்னைக் கொன்றுவிட்டேனே!” என்று அழுதவர் அப்படியே அமர்ந்திருக்க அடுத்து என்னவென்று அவருக்கு விளங்கவில்லை.
பொழுது புலரும் வேளையில் உணர்வு பெற்ற வேதாச்சலம்… அவ்வறை கிடந்த கோலத்தைக் கண்டு இதயம் வெடித்தார்.
‘இவ்விடயம் வெளியில் தெரிந்தால்?’ அப்போதுதான் சிந்தித்தார்.
கேடு கெட்ட தன் மகனால் தன்னுடைய குடும்ப கௌரவம் உருகுலைவதா என்று எண்ணியவர், வேலையாட்கள் இன்னும் வேலைக்கு வராததை உறுதி செய்துகொண்டு, மருமகளின் உடலை மெல்லத் தூக்கிச் சென்று சமையலறையில் கிடத்தியவர்… கேஸ்சினை திறந்து விட்டு கிச்சனை மட்டும் லாக் செய்தவர் தீக்குச்சியை உரசி சன்னல் வழியாக உள்ளே போட அடுத்த நொடி பட்டென்று வெடித்து சிதறியது.
வேதாச்சலம் செய்வதை பார்த்துக்கொண்டிருந்த விச்சு தன்னுயிர் முக்கியமென்று எப்போதோ வெளியேறியிருந்தார்.
‘அய்யோக்கியன் என்று தெரிந்தும் தன் மகனுக்கு மணம் முடித்து ஒரு பெண்ணையே பலியாக்கி விட்டோமே’ என்று எண்ணிய வேதாச்சலம் தான் உருவாக்கிய தீ விபத்தில் தன்னுடைய உயிரையும் மாய்த்துக் கொண்டார்.
வேதாச்சலம் கிச்சனிற்குள் நுழையும் போதுதான் போதை தெளிந்து எழுந்தமர்ந்த விஸ்வநாதனுக்கு இரவு நடந்தது நினைவில் வர, தன் செயலுக்கோ அல்லது மனைவி இறந்ததற்கோ அவர் சிறிதும் கவலை கொள்ளவில்லை… தன்னைக் காப்பற்றிக் கொள்ளவே நினைத்து தன் தந்தையை பற்றியும் நினைக்காது வீட்டை விட்டு வெளியில் சென்று வெளியூர் சென்றிருப்பதாக அனைவரையும் நம்ப வைத்திருந்தார்.
ஆர்.கே தன் மனைவி தெய்வநாயகியுடன் ஹனிமூன் சென்றிருந்ததால் தம்பியின் அரக்க குணமும்… தந்தையின் வேதனையும்… இந்நிகழ்வும் அவர்களுக்கு தெரியாமலே போனதும். இது ஒரு விபத்து என்றே ஆர்.கே’வும் நினைத்தார்.
ஆர்.கே’வின் முன் அதீத கவலையில் இருப்பதைப்போல் விச்சு காண்பித்துக்கொள்ள அனைத்தையும் ஆர்.கே’வே பார்த்துக் கொண்டார்.
தீ விபத்து என்பதால் விசாரணை வழக்கென்று அலைந்து திரிந்து நடந்தது விபத்தென்று முடிவாகி அதிலிருந்து மீளவே ஆர்.கே’விற்கு சில மாதங்கள் ஆனது.
அதற்குள் தன் தந்தையின் வக்கீலை பிடித்த ஆர்.கே உயில் பற்றி அனைத்தும் தெரிந்து கொதித்துவிட்டார்.
“நடுவில் இந்த கிழவன் மாற்றி எழுதியிருப்பான் நினைத்தேனே!” விச்சுவிற்கு ஏமாற்றாமே!
‘எப்படியும் தனக்கு வாரிசு வர வேண்டும். அப்போதுதான் சொத்துக்கள் அனைத்தும் என் கைக்கு வரும்.’ எண்ணிய விச்சு மற்றொரு திருமணம் முடித்து வர, ஆர்.கே’விற்கு அதிர்ச்சிதான்.
“என்னை மன்னிச்சிடுண்ணா… இவள் நான் காதலித்த பெண் அப்பாக்காகத்தான் அவர் காட்டிய பெண்ணை மணம் செய்தேன். ஆனால் இவள் இன்னும் என் நினைவாகவே வாழ்கிறாள். நான் முடியாதென்று மறுத்தும் இவள் கேட்கவில்லை. வாழ்ந்தால் என்னோடுதான் வாழ்வேன் என்கிறாள் அதான் தாலி கட்டிவிட்டேன்” என்று சோகமே உருவாகக் கூற, ஆர்.கே தன் தம்பி நன்றாக இருந்தால் போதுமென்று ஏற்றுக்கொண்டார்.
நான்கு மாதங்களுக்குப் பின்னர் ஆர்.கே தன் மனைவி கருவுற்றிருப்பதாகத் தெரிவிக்க விச்சு ஆடிப்போய்விட்டார்.
“தன் மனைவி மட்டும் ஏன் இன்னும் கருத்தரிக்கவில்லை” என்று சிந்தித்தவர் தன்னுடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று அனைத்து பரிசோதனையும் செய்ய… முடிவில் விச்சுவிடமே குறை என்று தெரியவர மனதில் பேயறைந்ததைப்போல் அடிவாங்கினார்.
அப்போதும் அவர் தன் குறை நினைத்து வருந்தவில்லை. தனக்கு சொத்து கிடைக்காதோ என்றுதான் வருந்தினார்.
ஆர்.கே’வின் குழந்தையை அழித்தால் போதும். ஆனால் அதற்கடுத்தும் ஆர்.கே’விற்கு குழந்தை பிறந்தால் என்ன செய்வதென்று யோசித்த விச்சு…
ஆர்.கே’வின் மனைவியை அவருக்குத் தெரியாமல் சந்தித்து… நிறைமாத அவரின் வயிற்றில் கத்தியை வைத்துக்கொண்டு…
“நீ என் அண்ணனுடன் இருந்தால் அவரையும் கொன்று உன் குழந்தையையும் கொன்று விடுவேன்” என்று மிரட்டி தெய்வாவை ஆர்.கே’வின் வாழ்விலிருந்து அகற்றினார்.
தன் கணவன் மற்றும் பிள்ளையை காப்பாற்ற தெய்வாவும் தனக்கென்று தாங்க பிறந்த வீடும் இல்லாத நிலையில், ஒரு ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தார்.
“என்னைத்தேட வேண்டாம்…” தெய்வநாயகி எழுதி விட்டுச்சென்ற இரண்டு வார்த்தைகள் கொண்ட கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு காரணம் தெரியாது பித்து பிடித்திருந்த ஆர்.கே தன்னைத்தானே தேற்றிக்கொண்டு தொழிலில் மூழ்கிப்போனார். இருப்பினும் தன் மனைவியை அவர் தேடாத இடமில்லை. பலன் தானில்லை.
மனைவியை தேடுவதில் ஆர்.கே காட்டிய தீவிரத்தை கண்ட விச்சு, ‘என்னதான் தெய்வநாயகி ஆர்.கே’வை விட்டு சென்றுவிட்டாலும், அவர்களின் குழந்தை நாளை தனக்கு எதிராக வரும்’ என்று நினைத்து தெய்வாவை தன் ஆட்களை வைத்து கண்காணித்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் இரவு தெய்வாவிற்கு பிரசவவலி ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்ததும் என்ன குழந்தையென்றும் தெரிந்துகொள்ளாது அதனை கொல்ல சொல்லிய ஆர்.கே அன்றொடு தெய்வாவையும் அக்குழந்தையையும் மறந்து போனார்.
உயில் விடயம் ஆர்.கே’விற்கு தெரியாது பார்த்துக் கொண்டார்.
ஆர்.கே’விற்கு பணத்தின் மீது நாட்டம் இருந்ததில்லை. அதனால் தங்களது சொத்துக்கள் பற்றி அறிய அவர் முற்படவில்லை. அது விச்சுவிற்கு சாதகமாக அமைந்தது. சொத்துக்கள் அனைத்தும் விச்சுவே தன் வசம் செய்துகொண்டார். வேதாச்சலத்தின் உயில் பற்றி தெரிந்திருந்த வக்கீலை பணம் கொடுத்து சரி கட்டியிருந்தார் விஸ்வநாதன்.
வருடங்கள் பல சென்றது.
என்ன தான் சொத்துக்கள் அனைத்தும் விச்சுவிடம் இருந்தாலும், பெயரும் புகழும் ஆர்.கே’விற்கு மட்டுமே உரித்தானாதாக இருந்தது.
அந்நிலையில் தான் விஸ்வநாதனுக்கு கொடூர யோசனைத் தோன்றியது, ஆர்.கே’வே இல்லையென்றால் சொத்துக்கள் அனைத்தும் தனக்குத்தானே என்று சிந்தித்த விஸ்வநாதன் ஆர்.கே’வின் காரை விபத்திற்குள்ளாக்க அதில் எப்படியோ உயிர் பிழைத்து விட்டார் ஆர்.கே.
தன் விபத்திற்கு பின்னால் தன்னுடைய தம்பி தான் இருக்கின்றான் என்பதை அறிந்த ஆர்.கே ஏன் என்ற கேள்வி உதிக்க பதில் கிடைக்க ஆராய்ந்த போதுதான் அனைத்தும் அவருக்கு விளங்கியது.
வேதாச்சலம் தன் உயிலில்…
திருமணம் முடித்து முதலில் தன்னை தாத்தாவாக்கும் பேரக் குழந்தைக்கே என்னுடைய சொத்துக்கள் முழுவதும் சொந்தமென்று எழுதியிருந்தார். அப்படி இருவருக்குமே குழந்தைகள் இல்லாத பட்சத்தில் என் பெயரில் இயங்கும் ட்ரெஸ்டிற்கு சொத்துக்கள் அனைத்தும் சேரும் என்றிருந்தது.
இதுதான் காரணமென்று தெரிந்த ஆர்.கே தம்பியின் செயல்கள் அறிந்து அதிர்ந்து போனார்.
“சொத்திற்காகவா?” நேரடியாக விச்சுவிடம் கேட்க…
“ஆமாம் சொத்துக்காகவும், உனக்கிருக்கும் பெயர் புகழுக்காகவும் தான்” என்ற விச்சு… ஒரு முக்கியமான வழக்கிற்காக ஆர்.கே சேகரித்து வைத்த அனைத்து ஆதாரங்களையும் அவருக்கு தெரியாது ஏற்கனவே கைப்பற்றியிருக்க அதனை ஆர்.கே முன்பே எரித்து சாம்பலாக்கிவிட்டு,
“இன்று இந்த வழக்கில் உனக்கு எதிராக வாதிடப்போவது நான் தானென்று கூற” ஆர்.கே’விடம் ஒரு உணர்வற்ற சிரிப்பு. அவ்வழக்கில் தன் தம்பியே வெற்றி பெறட்டுமென்று விட்டுக்கொடுத்திட்டு தன் அனைத்து வழக்குகளையும் தனது ஜூனியரான ஆதியிடம் ஒப்படைத்தவர் அன்றோடு கருப்பி அங்கி அணிவதையும் நிறுத்தியிருந்தார்.
அதன் பிறகு ஆர்.கே விஸ்வநாதனிடம், “நியாயப்படி தன் அப்பாவின் விருப்பப்படி இப்போது சொத்துக்கள் அனைத்தும் ட்ரெஸ்டிற்கு சொந்தமாகியிருக்க வேண்டும்” என்று சொல்ல “ட்ரெஸ்ட்டே நான் தான்” என அலட்சியமாக விஸ்வநாதன் பதில் கொடுத்தார்.
ஆனால் இன்றுவரை தன் தந்தை ஆரம்பித்து வைத்த ட்ரெஸ்டினை பார்த்துக்கொள்வது ஆர்.கே தான். அவர்களின் சொத்திலிருந்து சிறு தொகைக்கூட அவர்களது ட்ரெஸ்டிற்கு இதுவரை வந்ததில்லை என்பதை வைத்து ஆர்.கே விஸ்வநாதனின் மீது வழக்குத் தொடுக்க…
“ஆர்.கே பார்த்துவரும் வேதாச்சலம் ட்ரெஸ்ட் அவர் ஆரம்பித்தது. என் தந்தையால் துவங்கப்பட்டது எனது அன்னையின் பெயர் கொண்ட வேதவல்லி ட்ரெஸ்ட். எங்கள் சொத்துக்கள் அனைத்தும் அதில் தான் அடங்கியுள்ளது” என்று எல்லா பித்தலாட்டமும் செய்து சொத்துக்களை தக்க வைத்துக்கொள்ள விஸ்வநாதன் ஆர்.கே’வை எதிர்த்தார்.
அப்போதுதான் தன்னுடன் பிறந்தவன் எப்படிப்பட்ட கிருமனல் என்று அறிந்த ஆர்.கே… “சொத்துக்கள் அனைத்தும் தனக்கு வர வேண்டும் அல்லது தனது அப்பாவின் உண்மையான ட்ரெஸ்ட்டான வேதாச்சலம் ட்ரெஸ்டிற்கு அனைத்தும் சேர வேண்டும்” என்று நினைத்தார்.
ஆர்.கே எவ்வளவோ முயற்சித்தும், வேதவல்லி ட்ரெஸ்ட் தான் தன் அப்பாவால் துவங்கப்பட்டதென்று விஸ்வநாதன் சாதித்துவிட்டார்.
‘தன்னுடைய தம்பி தானே அனுபவித்துவிட்டுப் போகிறான்’ என்று ஆர்.கே’வும் அமைதியாக இறந்துவிட்டார்.
அச்சமயத்தில் தான் வேதாச்சலம் தன் கைப்பட எழுதிய கடிதமொன்று ஆர்.கே’விற்கு கிடைத்தது.
“அன்புள்ள ராஜாவுக்கு, உன் உனக்கு மட்டுமே அப்பாவாக நான் எழுதுவது” என்று துவங்கியிருந்தார்.
“இது நான் சாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் எழுவது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆம், வேதாச்சலம் சிலிண்டரை வெடிக்கச் செய்வதற்கு முன், தன்னுடைய மூத்த மகனுக்கு அனைத்தும் தெரிய வேண்டுமென்று நினைத்து விஸ்வநாதனைப்பற்றி எல்லாம் எழுதி ஒரு சிறு பெட்டியில் வைத்து ஆர்.கே’வின் அறையில் வைத்துவிட்டார்.
“சொத்துக்கள் உனக்கு இல்லாமல் போனாலும் நல்லவற்றிற்க்கு பயன்பட வேண்டுமே தவிர ஒரு போதும் விஸ்வா போன்ற கொடூரக்காரன் அனுபவிக்கக் கூடாது. இவை யாவும் நான் கஷ்டப்பட்டு சேர்த்தது. எனக்கு நீ மட்டுமே வாரிசு… என் சொத்துக்களை நீ அனுபவி இல்லையென்றால் ட்ரெஸ்டின் மூலம் நல்லதுக்கு பயன்படட்டும்” என்று எழுதியிருந்தார்.
எல்லாம் தெரிந்த ஆர்.கே தன் உடன்பிறப்பின் சுயம் தெரிந்து நொந்து போனார்.
தன் தந்தையின் கடைசி வேண்டுகோளை நிறைவேற்ற எண்ணி அனைத்தையும் ஆதியிடம் சொல்ல…
“உங்களுக்கு பிறந்த மகனோ/மகளோ வந்தால் தான் உங்க சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும்” என்று தீர்வு கூறினான் ஆதி. ஆர்.கே’வுக்கும் அது தெரிந்துதான் இருந்தது.
“அப்படியே என் வாரிசு வந்தாலும், வேதவல்லி ட்ரெஸ்ட் தான் என் அப்பாவால் ஆரம்பிக்கப்பட்டதென்று பொய்யான ஆதாரங்கள் ஜோடித்து நம்ப வைத்ததைப்போல்… எனக்கு வாரிசே இல்லையென்று நம்ப வைத்துவிட்டால் என்ன செய்வது?” ஆர்.கே கலக்கமாக வினவினார்.
“வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு சார்” என்ற ஆதி தீவிரமாக ஆர்.கே’வின் மனைவியையும் அவருக்கு பிறந்த குழந்தையையும் தேடி கண்டுபிடித்து இப்போது நீதிமன்றத்திற்கும் அழைத்து வந்துவிட்டான்.
ஆர்.கே’வின் வாரிசு வந்துவிட்டால்… நிரூபிக்கப்பட்டு விட்டால், சொத்துக்கள் யாவும் ஆர்.கே’விற்கே உரித்தாகிவிடும்.
அப்படி நிரூபிக்க முடியாத பட்சத்தில் ட்ரெஸ்டிற்கு சேரும்.
இதுவே வழக்கு.
வழக்கைப் பற்றி சொல்லப்பட வேண்டியவற்றை மட்டும் சொல்லிய ஏ.டி ஆர்.கே’வை பார்த்து அர்த்தமாகப் புன்னகைத்தான்.
Epi 29 and 30
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
32
+1
1
+1
விச்சு 😈😈😈😈