Loading

ஜிஷ்ணு தர்மன் வெட்ஸ் வசுந்தரா & குமரன் வெட்ஸ் அர்ச்சனா என்ற பெயர்ப்பலகை மண்டபத்தின் வாசலில் மலர் அலங்காரத்தில் மிளிர்ந்தது.

அமைச்சரின் திருமண விழா என்பதால், மண்டபத்தை சுற்றி காவலர்கள் உடை தென்பட, பரத் மணப்பெண் அறைக்கும் மணமகன் அறைக்கும் மாறி மாறி நடந்து கொண்டிருந்தான்.

அனைத்தும் வசுந்தராவால் தான். “ஜிஷு கிளம்பிட்டானா? இப்ப என்ன பண்றாண்ணு பாத்துட்டு வா…” என விடாமல் வேவு அனுப்ப,

“அதை நீயே போன் செஞ்சு கேட்க வேண்டியது தான” என கடுப்பானான்.

ஆனாலும், அந்நிலையிலும் ஸ்பை வேலை பார்த்தவனின் மீது வந்து இடித்தாள் ஒரு பெண்.

அவளை எங்கோ பார்த்தது போல இருக்க! அவளோ, “சாரிங்க…” என்றாள் பதற்றமாக.

“உங்கள எங்கயோ பார்த்து இருக்கேனே?” அவன் யோசனையாக கேட்க, லேசாக முறைத்தவள், பின், “அன்னைக்கு தர்மா அண்ணாவுக்கு அடிபட்டப்போ எங்க வீட்டுக்கு வந்து தான கூட்டிட்டு போனீங்க” என்றாள் அப்பெண் திலகா.

அப்போது தான் நினைவு வந்தவனாக, “ஓ… அந்த அவசர நர்ஸ் நீ தானா?” என்றதில், “என்னது?” என்றாள் புரியாமல்.

“அதான், அன்னைக்கு அவசரத்துக்கு நீ தான ட்ரீட்மென்ட் பண்ணுன… அதான் சொன்னேன்” என இளித்து வைத்திட,

திலகாவின் உதடுகள் மென்னகை புரிந்தது. பதில் கூறாமல் அவள் வசுந்தராவின் அறைக்கு சென்று விட, அவளைக் காணும் ஆர்வத்திலேயே அடிக்கடி மணப்பெண் அறைக்கு படையெடுத்தான் பரத்.

‘எவ்ளோ நேரம் தான் மந்திரம் சொல்றது… இவளோ பார்மாலிட்டி தேவையா? இதுக்கு தான் அப்பவே சொன்னேன். மலைல ஏறி பிள்ளையார் கோவில்ல சிம்பிள் – ஆ கல்யாணத்தை முடிக்கலாம்ன்னு… என் மாமனார் தான் லூசுத்தனமா இவளோ பெரிய சீன் போட்டு வச்சு இருக்காரு. இதுல தாலி கட்டிட்டு ரிசப்ஷன் வேறயாம். நைட்டு வரை தனியாவும் விட மாட்டானுங்களாம்…” வாய்க்கு வந்த படி தன் மாமனாரையும் குடும்பத்தாரையும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.

அரசியல்வாதியாகவே, கம்பீரம் குறையாமல் இருப்பவனின் முகம் இன்று கல்யாண களையில் மேலும் கம்பீரம் பூண்டது.

பக்கத்து மேடையில் வெகு தீவிரமாக மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த குமரன் மீது ஒரு பூவை எரிந்தவன், “டேய்… பொண்ணை கூப்பிட சொல்லுடா” என்றான் காட்டமாக.

நானாடா கூப்ட வேணாம்னு சொல்றேன். என் கண்ணுலயும் தான் என் ஆளை காட்ட மாட்டுறாங்க.” என்று அவன் நொந்து போகும் போதே இரு பெண்களும் மண மேடை நோக்கி வர, குமரன் திறந்த வாயை மூடவே இல்லை.

ஜிஷ்ணு தான், வசுந்தராவின் முகத்தை ஆர்வமாக பார்த்து விட்டு, பின் முகம் சுருங்கினான்.

அவன் மாற்றத்தைக் கண்டவள், சிரிப்பை அடக்கிக் கொண்டு அடக்கத்துடன் அவனருகில் அமர்ந்தாள்.

“என்ன அடியாளு? கல்யாணம் வேணாமா? மூஞ்சிய கடுகடுன்னு வச்சு இருக்க…” முணுமுணுப்பாக கேட்டாள்.

“ம்ம் ஆமா, கல்யாணம் வேணாம். நேரா ஃபர்ஸ்ட் நைட்டே  வச்சுக்கலாம்ன்னு இருக்கேன்…” என்று பல்லைக்கடிக்க, “எனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன் இல்ல…” என்றாள் குறுநகையுடன்.

அதற்குள், ஐயர் அவனிடம் மாங்கல்யத்தை நீட்ட, அவள் கூற்றில் தன்னை மீறி வெளிவந்த முறுவலுடன், அவளை மனையாள் ஆக்கிக் கொண்டான்.

குமரன் அர்ச்சனா திருமணமும் இனிதே நிறைவுற, பரத் தான் அன்று முழுதும் திலகாவின் பின் சுற்றிக் கொண்டிருந்தாள்.

நேராக, மணமக்கள் கன்னிமனூருக்கே சென்று விட, அங்கு ஜிஷ்ணுவின் பழைய வீட்டில் தான் அன்றைய இரவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.

குமரனையும் அர்ச்சனாவையும் அவன் வீட்டில் விட்டு விட்டு, ஜிஷ்ணுவின் வீட்டில் வேலையை இழுத்துப் போட்டு செய்து கொண்டிருந்த பரத்தின் அருகில் வந்த ஜிஷ்ணுவைக் கண்டு முதலில் திருதிருவென விழித்தான்.

“என்னடா ஏதோ கொலை பண்ணுன ரேஞ்சுக்கு முழிக்கிற?” ஜிஷ்ணு நக்கலாக கேட்க,

‘கொலையா? நானா? ம்ம்க்கும்…’ என மனதினுள் குழம்பிக் கொண்டவனை நோக்கி ஒரு கவரை நீட்டினான்.

பரத் புரியாமல் அதனை என்னவென்று பார்த்தவன், சில நிமிடங்களில் வியப்பில் விழி விரித்தான்.

அது அவன் பெயரில் ஜிஷ்ணுவும் வசுந்தராவும் தொடங்கி இருக்கும் டிடெக்டிவ் ஏஜென்சி தான்.

“இ… இ… இது?” பரத் லேசாகத் தடுமாற, வசுந்தரா மென் புன்னகையுடன்,

“இனிமே நீ மினிஸ்டரை வேவு பார்க்க வேண்டியது இல்லடா. அதுக்கு தான் நான் வந்துட்டேனே?” என ஜிஷ்ணுவைக் கண்டு கண் சிமிட்டியவள், பரத்தின் புறம் திரும்பி,

“இதை உனக்கு குடுத்ததுக்கு முக்கிய காரணம் ஒண்ணு இருக்கு பரத். கன்னிமனூர், வெள்ளைப்பாளையம் மாதிரி சின்ன சின்ன ஊர்ல நடக்குற ஜாதி பிரச்சனை, கௌரவக் கொலை இதெல்லாம் அவ்ளோ  சீக்கிரம் வெளிய தெரியறது இல்லை. அப்படியே வெளிய தெரிஞ்சா கூட, அதை ரெண்டு நாள் பேசிட்டு மறந்துடுறாங்க. இனிமே உன்னோட முக்கிய வேலையே, இந்த மாதிரி எந்த எந்த ஊர்ல நடக்குதோ,அந்த ஊரை பத்தின தகவல்களை எங்க கிட்ட நீ குடுக்கணும். உனக்கு ஹெல்ப் பண்ண, உனக்கு கீழ சில ஆளுங்களையும் ஜிஷு அப்பாய்ண்ட் பண்ணிடுவான்.” எனக் கூறி முடித்ததில் அவன் திகைத்தான்.

தயக்கத்துடன், “ஆனா தாரா… இவ்ளோ பெரிய விஷயத்தை என்னை நம்பி…” எனக் கேட்டவனுக்கு தலைகால் புரியவில்லை.

ஜிஷ்ணு தான், “நம்பி குடுத்து இருக்கோம்ன்னு தெரியுதுல, ஒழுங்கா வேலைய பாரு. எனக்கு அப்போ அப்போ அப்டேட் குடுக்கணும் புரிஞ்சுதா.” என்றவன் கண்டிப்புடனே கூற, “தேங்க்ஸ்…” என்றான் மெதுவாக.

அதில் பட்டென அவன் கன்னத்தில் தட்டியவன், “போடா… போய் வேலைய பாரு.” என சிறு சிரிப்புடன் அதட்டி விட்டு நகர, பரத்திற்கும் சிறு முறுவல் பூத்தது.

இரவிற்காக ஏற்பாடு முடிந்து, ஜிஷ்ணுவின் வீட்டினர் அனைவரும் சென்னைக்கு கிளம்பி விட, அவர்கள் இருவர் மட்டுமே அவ்வீட்டில் தனித்து விடப்பட்டிருந்தனர்.

மலர் அலங்காரங்களை பார்வையிட்ட ஜிஷ்ணுவிற்கு நேரம் செல்ல செல்ல பொறுமை இழந்து கொண்டே போக, மேலும் சோதியாமல் வசுந்தரா அவனறைக்குள் வந்தாள்.

“ஏண்டி… அதான் அப்பவே ரெடி ஆகிட்டீல. இவ்ளோ நேரம் என்னடி செஞ்சுட்டு இருந்த…” முரட்டுத் தனமாக அவளை பற்றி இழுத்தவன், தன் மீது போட்டுக்கொள்ள,

“ஸ்ஸ்… டேய்… ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு கொஞ்சம் வெட்கப்பட விடுறியா?” என்றாள் முறைப்பாக.

“விட்டா மட்டும் நீ வெட்கப்பட்டுடுவ பாரு” அவன் சிரிப்புடன் வாரி விட்டு, அவளின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதிக்க, அப்போது தான், அவன் பரிசளித்திருந்த வெள்ளிக்கல் பதித்த மூக்குத்தியை அவள் அணிந்திருந்ததையே பார்த்தான்.

அத்தனை அழகாக கச்சிதமாக அவளின் பூ முகத்திற்கு ஏற்ப அது மின்ன, ஒரு நிமிடம் முழுதாக அதனை ரசித்தவன், “இப்ப தான் இதை போடணும்ன்னு தோணுச்சா வக்கீலு?” என்றான் சிலுப்பலுடன்.

“இன்னைக்கு கல்யாணத்து அப்பவே போடுவன்னு ஆசையா உன்ன பார்த்தா என்னை ஏமாத்திட்ட?” சற்றே கோபம் கொண்டவன், முகத்தை தூக்கி வைத்து கொள்ள, குறும்பாக சிரித்தவள், அவன் கன்னம் பற்றி திருப்பினாள்.

கணவனின் அதரங்களில் இதழொற்றி எடுத்தவள், “நீ வாங்கி கொடுத்ததை உனக்கு மட்டும் ஸ்பெஷலா பாக்குற மாதிரி தனியா போட்டு காட்டணும்ன்னு நினைச்சேன். அதான் ஜிஷு காலைல போடல…” சிணுங்கலுடன் அவள் கூறியதில் மொத்தமாக தன்னிலை இழந்து போனான்.

“என் கியூட் பேப்டி நீ.” கன்னத்தை கிள்ளி கொஞ்சியவன், “சத்தியமா என்னால பொறுமையா இருக்க முடியலடி. சோ…” என இழுத்திட, அவன் கரங்கள் அதற்கு முன்னதாகவே பாவையின் மேனி மீது படர்ந்திருந்தது.

“நான் பொறுமையா இருக்க சொல்லவே இல்லையே அடியாளு!” என்றாள் வெட்க நகையுடன்.

அத்துடன், வார்த்தைகள் அங்கு தேய்ந்து போக, இத்தனை வருட பிரிவிற்கான தேடலையும் அவளுள் தொடங்கி இருந்தான் ஜிஷ்ணு தர்மன்.   

வெட்கங்களும் கூச்சங்களும் அங்கு விடை பெற்று செல்ல, காதலுக்கான மோகம் இருவருக்குள்ளும் புது உறவை மலரச் செய்ய, பெண்ணவளை தன் மென் தீண்டலில் மொத்தமாக ஆக்கிரமித்தான்.

கூடலிலும் காதலே புதைந்திருக்க, அவளை பிரிந்த மறுநொடி, “ஐ லவ் யூ பேப்…” என்றவாறு மீண்டும் அவளை தனக்குள் சுருட்டிக்கொண்டான். அவளும், ஒவ்வொரு தீண்டலிலும் தன்னவனை ரசித்து சுகித்து, இன்பத்தில் கரைந்தாள்.

மறுநாள் துயில் கலைந்து கண் விழித்தவனுக்கு, உடலை அசைக்கவே இயலவில்லை. எங்கே அசைவது, அவனவள் தான், வாகாக அவன் மீது ஏறி படுத்து இருந்தாளே. அதில் புன்னகைத்தவன், அவளை தலையணையில் படுக்க வைக்க, வசுந்தரா மீண்டும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

கூடவே, “மூடிக்கிட்டு படுடா.” என்ற அதட்டல் வேறு.

அதில் நன்றாக சிரித்து விட்டவன், “முதல் நாள் காலைலயே புருஷனுக்கு நல்ல மரியாதைடி.” என கேலி புரிய, அவளும் சிரிப்புடன், அவனுடன் ஒன்றினாள்.

இங்கு குமரன் தான், இரவின் களைப்பில் அயர்ந்து உறங்கி கொண்டிருக்க, திடீரென கேட்ட அலாரத்தின் சத்தத்தில் அடித்து விழுந்து எழுந்தான்.

அருகில் அர்ச்சனாவும் இல்லாது போக, கண்ணை கசக்கியபடி அலாரத்தை அணைத்தவனின் எதிரில் தலையை துவட்டியபடி வந்தாள் அர்ச்சனா.

கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருக்க, அவனை பார்க்க இயலாமல், “இப்ப தான் எந்திரிச்சீங்களா?” எனக் கேட்டாள்.

அவள் குளித்து முடித்து வந்த கோலம், அவனை வேறு பாதைக்கு இழுத்து செல்ல, இருந்தும் “அலாரத்த யாருடி வச்சது? உன்ன யாரு இவ்ளோ சீக்கிரம் எந்திரிக்க சொன்னது” என்றான் முறைப்பாக.

“என் போன்ல எப்பவுமே காலைல அஞ்சு மணிக்குலாம் அலாரம் இருக்கும்ங்க. எங்க அப்பா ஆர்மில இருந்தனால, காலைல சீக்கிரமே எழுப்பி விட்டு பழக்கிட்டாரு.” என்று இளித்தாள்.

‘ஆர்மி ஆபிசர் பொண்ணை கல்யாணம் பண்ணதுல இப்படி ஒரு ட்விஸ்ட் – ஆ’ என்று நொந்தவன்,

“இனிமே நீ எப்படி அஞ்சு மணிக்கு எந்திரிக்கிறன்னு நானும் பாக்குறேன்” என சபதம் விடுத்தவன், அவளை தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க, முதலில் பலவீனமாக மறுத்தவள், பின் விரும்பியே அவனிடம் சரணடைந்தாள்.

அதன்பிறகு இரண்டு ஜோடிகளும் சென்னைக்கு வந்து விட, எப்போதும் போல வசுந்தராவும் அர்ச்சனாவும் தங்களது வழக்குகளில் மூழ்கினர். அதில் இப்போது குமரனும் சேர்ந்து கொள்ள, நாட்கள் இன்பத்தை அள்ளித் தந்தே நகர்ந்தது.

சில மாதங்கள் கழிய, அன்று அமைச்சர் ஜிஷ்ணு தர்மனின் வாகனம் சில பாதுகாவலருடன் வசுந்தராவின் அலுவலகம் முன்பு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஜிஷ்ணு தர்மன் கதவை பட்டென மூடிய விதமே, அவன் கடுங்கோபத்தில் இருப்பது புரிய, விறுவிறுவென உள்ளே சென்றான்.

அவனைக் கண்டதும் அர்ச்சனா வெளியில் ஓடிவிட, அப்படி ஒருவன் வந்தது போன்றே காட்டிக்கொள்ளாத வசுந்தரா, எப்போதும் போல திமிராக அமர்ந்திருந்தாள்.

“ஏய் வக்கீலு?” ஜிஷ்ணு கோபத்துடன் உறும, நிதானமாகவே நிமிர்ந்தவள்,

“ஹெலோ மிஸ்டர். அடியாளு. இது உங்க கட்சி ஆபிஸ் இல்ல. இங்க வந்து உங்க பதவி திமிரை காட்ட நினைச்சீங்க  பொய் கேஸை போட்டு உள்ள தூக்கி போட்டுடுவேன்… எப்படி வசதி” என்றாள் புருவம் உயர்த்தி.

“ஓ… உள்ள போடுங்க வக்கீலே. ஆனா, கூடவே உன்னையும் தூக்கிட்டு போய்டுவேன். ஏன்னா, குட்டி ரூம்ல எனக்கு போர் அடிக்கும்ல.” சில்மிஷத்துடன் அவன் கூற, அவனை முறைத்து வைத்தாள் வசுந்தரா.

பட்டென எழுந்தவள், “முதல்ல வெளிய போக போறியா இல்லையா?” என்று கத்த, மறுநொடி அவளருகில் வந்தவன், “ஏண்டி கத்துற. என் பேபி பயந்துட போகுது…” என்றபடி, அவளின் ஆறு மாத மேடிட்ட வயிற்றை தடவிக் கொடுக்க, அவள் வெடுக்கென தட்டி விட்டாள்.

“உன் பேபி இருக்குறது இப்ப தான் தெரியுதாக்கும். ஒரு வாரமா கோமால இருந்தியா?” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வசுந்தரா சினத்தை கக்கினாள்.

ஒரு வாரமாக டெல்லி சென்றிருந்தவனால், அங்கு இருந்த வேலையில் அவளுக்கு போன் செய்து கூட பேச இயலவில்லை. அதுவே வசுந்தராவை அவன் மீது ஊடல் கொள்ள வைத்தது.

“ப்ச்… டெல்லில மீட்டிங் பேப். டைமே இல்ல. உங்கிட்ட சொல்லிட்டு தான போனேன்.” என மென்மையாக கூறியவன், உடனே கடுப்புடன், “அதுக்கு இப்படி ஒரு நோட்டீஸ் அனுப்புவியாடி?” என்றான் அனலை கக்கியபடி.

மீட்டிங்கில் இருந்தவனுக்கு, வசுந்தரா தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தாள்.

அதனைக் கண்டு பேந்த பேந்த விழித்தவன், அடுத்த விமானத்தில் சென்னை வந்து சேர்ந்திருந்தான்.

அதில் இருந்த சாரம்சம் இது தான். இன்னும் 24 மணி நேரத்தில், தன்னையும் குழந்தையையும் காண வரவில்லை என்றால், அடுத்ததாக விவாகரத்து நோட்டீஸ் வரும் என்ற மிரட்டலே அது.

“எவ்ளோ தைரியம் இருந்தா டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவேன்னு சொல்லுவ…?” அவள் இதழ்களை பிடித்து இறுக்கினான்.

அவளுக்கு சிரிப்பு முட்டினாலும், அவனை தட்டி விட்டவள், “இன்னும் கொஞ்சம் லேட்டா வந்துருந்தா அதையும் அனுப்பி இருப்பேன் அடியாளு…” என்றவள், அவள் மேனி முழுதும் அவன் மீது படுமாறு ஒட்டி நிற்க, அதில் மயங்கியவன்,

“என்ன மிஸ் பண்ணுனியாடி?” என உருகலாக கேட்டான்.

“சே சே… நான் ஒன்னும் மிஸ் பண்ணல. உன் பேபி தான் உன்ன கேட்டு என்னை உதைச்சுகிட்டே இருந்தான்.” என்றாள் கெத்தை விடாமல்.

ஆனால், அவளின் விரல் மட்டும் ஜிஷ்ணுவின் சட்டை பட்டனை திருகிக் கொண்டிருக்க,

“நானும் உன்ன பார்க்க வரலடி. என் பேபியை பார்க்க தான் வந்தேன்.” என்றவன், அவள் வயிற்றில் அழுந்த முத்தமிட, அவளோ காளியாக அவதாரம் எடுத்திருந்தாள்.

தன்னவளின் கோபத்தில் பக்கென சிரித்தவன், அவளிதழிலும் அழுந்த இதழ் பதித்து, “உன்ன அதை விட ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுனேன் பேப்” என்றான் கிறக்கமாக.

அதில் கோபம் மொத்தமும் வடிந்திட, “நானும் ஜிஷு… மலை ஏறுவோமா?” அவன் காதில் மெல்ல கிசுகிசுத்தாள்.

“இந்த நிலமைலயாடி?” ஜிஷ்ணு தாடையை தடவி யோசிக்க, “எப்படியும் நீ தூக்கிட்டு தான போக போற” என்றாள் கண் சிமிட்டி.

பாவையின் ஒவ்வொரு பாவனையையும் ரசித்து தொலைந்தவன், அவளை அங்கேயே கையில் அள்ளிக் கொண்டு, கன்னிமனூர் மலை நோக்கி படையெடுத்தான்.

முற்றும்… 🤩
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
103
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments