Loading

“சஞ்சீவ் அண்ணா கல்யாணத்துக்கு மகியைக் கூட்டிட்டுப் போகணும்” மைதிலி
அமரிடம் மன்றாடினாள்.

குடும்பத்துடன் தேவஸ்மிதாவின் ஐந்தாம் மாத வளைகாப்பை தரமங்கலத்தில் நிகழ்த்தும் பொருட்டு கிளம்பிக் கொண்டிருந்தனர் அனைவரும்.

சரியாக அப்போது தான் சஞ்சீவின் திருமணம் இருக்க, ஒரே நாளில் அங்கு சென்று திருமணத்தை முடித்து விட்டு தரமங்கலத்திற்கு வருவதாக இருந்தார்கள் பிரஷாந்தும் மைதிலியும்.

ஆனால், குடும்பத்தினர் மகிழினியையம் தங்களுடன் அழைத்துச் செல்வதில் பிடிவாதமாக இருக்க, அவளும் “அங்க தாத்தா வீடு போரா இருக்கும்மா. நான் மாமா கூட போறேன்” என்றாள்.

ஆனால் சஞ்சீவ் எதிர்பார்ப்பானே என்ற எண்ணத்தில் அமரிடம் கேட்ட மைதிலியிடம், “நீங்களே மார்னிங் போயிட்டு கொஞ்ச நேரம் பங்க்ஷன் அட்டென்ட் பண்ணிட்டு மதியமே திரும்ப கிளம்ப போறீங்க. இதுக்கு எதுக்கு மகியையும் அலைய வைக்கிறீங்க” எனக் கண்டிக்க, பின் இருவரும் மனமற்று மகிழினியை விட்டுவிட்டு கல்கத்தாவிற்குப் பயணப்பட்டனர்.

“மைலி ரெடியா?” கல்கத்தாவில் அமைந்திருக்கும் நவீன பைவ் ஸ்டார் ஹோட்டலின் அறையில் அமர்ந்து ஷூவை அணிந்தபடி கேட்டான் பிரஷாந்த்.

“இதோ வந்துட்டேன் ரஷு…” மெரூன் நிறத்தில் தங்க பார்டர் தோய்த்த பட்டுப்புடவையை சரி செய்தபடி அவன் முன் வந்து நின்றாள் மைதிலி.

ஒரு முறை நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் ஷூ லேசில் கவனமான பிரஷாந்த், ஒரு கணம் வேலையை நிறுத்தி விட்டு சட்டென நிமிர்ந்து விழி அகல பார்த்தான்.

“போலாமா ரஷு?” புடவையின் மடிப்பை குனிந்து சரி செய்தபடியே கேட்டவளின் மீதிருந்த பார்வையை அவன் அகற்றவே இல்லை.

அவன் பதில் பேசாமல் இருந்ததில் தான் நிமிர்ந்தவள், அவனது பார்வையில் சிவந்து போனாள்.

“ரஷு… போலாம்” என மெல்லிய குரலில் கூற, புதிதாய் வரைந்திருந்த அவளது விழி மையின் மீது மயக்கம் கொண்டான்.

“இந்த மாதிரி தினமும் காஜல், மஸ்கரா, ஐ லைனர், டார்க் லிப்ஸ்டிக், லைட்டா பௌடர் யூஸ் பண்ணலாம்ல மைலி. லுக்கிங் காட்ஜியஸ்…” எனக் கிசுகிசுப்புடன் கூறியபடி அவளை நெருங்க, அவள் பின்னால் நகன்றாள்.

“காலேஜ் படிக்கும் போது ரெகுலரா யூஸ் பண்ணுவேன். அப்பறம் இன்டரஸ்ட் இல்ல. திரும்ப இன்னைக்கு இதெல்லாம் போட்டுக்க தோணுச்சு…” என இழுத்தபடி நிறுத்தி விட்டவளை ரசனையுடன் ஆராய்ந்தவன், “எப்பவும் பீலிங்க்ஸை காட்டாத கண்ணு, இப்போ அழகா எல்லா உணர்வையும் காட்டுது மைலி. இட்ஸ் சோ பியூட்டிபுல்” என்றபடி அவள் கண்களுக்கு முத்தம் வைத்தான்.

“ரஷு… டைம் ஆச்சு!” அம்முத்தத்தை கண்ணை மூடி ஏற்றவள் மனமின்றி மறுக்க, “ரொம்ப லைட்டா கண்ணுக்கே தெரியாத மாதிரி போடுற லிப் பாமை விட, இந்த டார்க் கலர் உனக்கு செம்மயா சூட் ஆகி இருக்கு மைலி. இது என்ன பிளேவர்?” என இன்னும் கிறக்கத்துடன் கேட்டான்.

“அது… பிளேவர் எல்லாம்…” என அவள் பேசும் முன்னே இதழினை சுவை பார்க்கும் வேலைக்குள் புகுந்து கொண்டான் ஆடவன்.

எப்போதும் விட அவனது நெருக்கம் அவளை அலைபாய செய்ய, அவனோ அவளிடம் பித்தாகிப் போனான்.

அவளை விட்டு துளியும் நகர மனமில்லை என்றாலும் அதற்கு மேல் அவளை எப்படி நெருங்குவது என்ற தயக்கமும் தடை போட்டது.

“மைலி… உனக்கு…” எனப் பேச வந்தும் கேட்க இயலாமல் அவன் தடுமாறினாலும், அவனது கரங்கள் அவளது இடையில் வீணை மீட்டி ஆணவனின் ஆசைதனை பளிச்செனப் புரிய வைத்தது.

அந்நேரம் சஞ்சீவ் போன் செய்தவன், “எங்கஜி இருக்கீங்க ரெண்டு பேரும். சீக்கிரம் வாங்க உங்களுக்காக தான் வெயிட்டிங்” என்று பரபரக்க, இருவரும் ஏக்கத்தை மறைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் விழிகளால் தழுவிக் கொண்டு கிளம்பினர்.

அங்கேயே மோனி ஜாயையும் ஷோமாவையும் பார்த்து விட்டார்கள். பிரஷாந்த் அவருக்கு நன்றியும் சொல்ல, அவனது தோளைத் தட்டிக் கொடுத்தவர், எதுவும் பேசவில்லை. அவரது மௌனமே புரிதலை உணர வைத்தது.

பின் திருமணத்தை முடித்துக்கொண்டு மண்டபத்தை விட்டுக் கிளம்பும் வரையிலும் பிரஷாந்த் மைதிலி மீது கொண்ட பார்வையை துளியும் நகர்த்தவில்லை.

எவ்வித ஒப்பனையுமின்றி, சாதாரண உடை அணியும் போதே அவளிடம் மையல் கொண்டவன்! இப்போதோ மிதமான அலங்காரத்தில், பூச்சூடி நெற்றி வகுட்டில் முதன் முறை குங்குமமிட்டு, அவன் அணிவித்த மஞ்சள் கயிறு வெளியில் தெரியும் படி பட்டுப்புடவை அணிந்து, அவனை பார்க்கும் போது மட்டும் விழிகளில் ஒரு வித நேசத்தை தெறிக்க விடுபவளைத் தள்ளி நிற்க வைத்திருப்பனா என்ன?

இதில் இந்த கல்யாணத்தை முடித்துக்கொண்டு தரமங்கலம் வேறு செல்ல வேண்டும்… என நொந்து போனவனுக்கு, அவளை எங்காவது கடத்தி விடலாமா என்றிருந்தது.

ஆனால், தேவாவின் ஐந்தாம் மாத வளைகாப்பிற்குச் செல்லாமல் இருக்க இயலாதே! எனத் தலையைச் சொறிந்து கொண்டிருக்கும் போதே, அமர மகரந்தன் போன் செய்தான்.

“என்னடா ஊருக்குப் போய்ட்டீங்களா, மகி என்ன செய்றா?” என எடுத்ததும் மகளைக் கேட்டதில், லேசாய் சிரித்துக் கொண்டவன், “அவளுக்கு என்ன… ட்ரிப்பை என்ஜாய் பண்றா. நீங்க எங்க இருக்கீங்க. மேரேஜ் முடிஞ்சுதா?” என மறுகேள்வி கேட்டான் அமர்.

“ம்ம் முடிஞ்சு. அப்படியே கிளம்ப வேண்டியது தான்…” என்றதும், “அதெல்லாம் ஒரு மண்ணும் தேவை இல்ல. மூடிக்கிட்டு அங்கேயே இருங்க” என்றதில் குழம்பினான்.

“இங்க இருக்கவா?”

“ம்ம்… இன்னும் அரை மணி நேரத்துல ஒரு கார் வரும். உங்களை முகுத்மணிப்பூர்க்கு கூட்டிட்டுப் போகும். அங்க ரெசார்ட் எல்லாம் புக் பண்ணியாச்சு. 2 நைட்ஸ் 3 டேஸ் ஸ்டே. இருந்துட்டு பொறுமையா வாங்க. இங்க வந்து வெட்டி முறிக்கிற வேலை எதுவும் இல்லை. உன் ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடு” என்று மடமடவென திட்டத்தைக் கூற, பிரஷாந்த் அதிர்ந்தான்.

“டேய் என்னடா திடீர்னு சொல்ற?” எனக் கத்த,

அமரிடம் இருந்து போனை வாங்கிய தயானந்தன், “வேணும்னா ஹனிமூன் போக ஒரு அறுபது வயசு வரை வெய்ட் பண்ணிட்டு பொறுமையா போறியா?” என்றதில் பிரஷாந்தின் முகத்தில் லேசான வெட்கம்.

“நீ மட்டும் போய் கிழிச்சுட்டியாக்கும்” வெட்கத்தை மறைக்க கேலி புரிந்தான்.

“போவோம் போவோம். தீக்ஷா கொஞ்சம் பெருசாகவும் போக தான் போறோம். உன்னை மாதிரி யோசிச்சுட்டே இருக்க மாட்டோம்…” என நொடித்துக் கொள்ள, மிருணாளினிக்கு வெட்கம் மலர்ந்தது.

பிரஷாந்த்தோ “ப்ச் அதில்ல டா. மைலி…” என இழுக்க, இப்போது போனை தேவஸ்மிதா வாங்கி இருந்தாள்.

“நான் அன்பே சிவம்னு இன்னும் ஒரு நாலு மாசத்தை ஓட்டலாம்னு இருக்கேன். என்னைக் கெட்ட வார்த்தைப் பேச வைக்காத”

“ஹே உன் வளைகாப்புக்கு வரணும்ல”

“அதான் ஏழாவது மாசம் க்ராண்டா வைப்போம்ல அதுல இருந்தா போதும். இப்போ சும்மா தான பண்றாங்க. நீ மைதிலிக்கு வளைகாப்பு போடுற வேலையைப் பாரு” என்றாள் கேலியாக.

அமர் தான் தலையில் அடித்துக்கொண்டு போனை வாங்கினான்.

பிரஷாந்த் தான், ‘நல்லவேளை இதை அவள் கேட்கல’ என நிம்மதி கொள்ள, அமரோ “உனக்கு எல்லா டீடெயிலும் மெயில் பண்ணிருக்கேன். அங்க இருந்து 5 டு 6 ஹவர்ஸ் ஆகும். டின்னருக்கு அங்க போய்டலாம். ரொம்ப காம் அண்ட் க்ரீனி பிளேஸ்டா. ஹனிமூனா இல்லைன்னாலும், ஜஸ்ட் ஹேவ் சம் ப்ரெஷ் ஏர்…” என்று கூறி விட்டு போனை வைக்கும் போதே தேவஸ்மிதாவின் குரல் கேட்டது.

“இங்க மட்டும் என்ன டூத் பிரஷ் ஏரா இருக்கும். ரொமான்ஸ் பண்ண அனுப்பிட்டு, ராங் அட்வைஸ் பண்ற அமர காவியம்” என்று எப்போதும் போல கேலி பேச, “வாயை மூடவே மாட்டியாடி நீ…” என அமர் அவளை சமாளிப்பதும் கேட்க, பிரஷாந்த் இங்கு தலையாட்டி சிரித்துக் கொண்டான்.

ஆனால் இதனை மைதிலி எப்படி எடுத்துக்கொள்வாள்? அது தான் அவனது சிந்தனையாக இருந்தது.

அந்நேரம் மைதிலியே அவனிடம் வந்தாள்.

கையைப் பிசைந்தபடி, “அமர் உனக்கு மெயில் எதுவும் பண்ணுனானா?” எனக் கேட்க, “உனக்கும் வந்துச்சா?” என்றான்.

மேலும் கீழுமாக தலையாட்டிவள், “என்ன பண்றது” எனத் தடுமாற்றத்துடன் பார்த்தாள்.

“உனக்கு ஆக்வார்டா இருக்கும்னா போக வேணாம் மைலி” அவளது மனநிலையை கருத்தில் கொண்டு அவன் கூற,

அவளோ “உனக்குப் பிடிக்கலையா போக…” எனக் கேட்டாள் மெல்லிய குரலில்.

அதில் திகைத்தவன், “பிடிக்கலையாவா? உனக்காக மட்டும் தான் யோசிக்கிறேன். உன்கூட தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு உள்ள கொள்ளை ஆசை மைலி… போலாமா இல்லையான்னு கன்பியூசன் வேணாம். நம்ம போறோம் டாட்!” என்று முடித்து விட, அவள் மௌனப்புன்னகையுடன் தலையாட்டினாள்.

பின் சிலமணி நேர பயணத்திற்குப் பின், வெளியிலேயே இரவு உணவையும் முடித்துக் கொண்டு ரெசார்ட்டிற்குச் சென்றார்கள். ஹைஃபையான அறையாகத் தான் இருந்தது.

ஒரு பக்கம் முழுதும் கண்ணாடியால் ஆன சுவர் தான். இருட்டி விட்டதனால், கண்ணாடிக்கு வெளிப்பக்கம் கும்மிருட்டாக இருக்க, ஸ்க்ரீனை இழுத்து விட்ட மைதிலி, “சரியான இருட்டா இருக்கு. பகல்ல தான் எப்படி இருக்கும்னு தெரியும் போல…” என்றதில், மெத்தையில் அமர்ந்திருந்தவன் “ம்ம்” என்று தலையாட்டியபடி அவளைப் பார்த்தான்.

அவளோ மெல்லிய பதற்றம் தாங்க, இன்னும் கண்ணாடி ஜன்னலை விட்டு நகரவில்லை.

எப்போதும் அவர்கள் பேசுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். பழையவை பற்றிய அழுத்தம், அல்லது நிகழ்கால பிரச்சனை, வழக்கு, மகிழினி பற்றிய பேச்சு என ஏதோ ஒன்றைப் பேசுவர்.

இந்த மாதிரியான தனிமை, அடுத்து செய்வதற்கு பெரிய வேலை என்று ஒன்றும் இல்லாத இந்த அமைதி. இருவருக்குமே புதிது.

என்ன பேசுவது என்று தெரியாமல் தடுமாறி பின் அந்த தனிமை கொடுத்த இதத்தில் அவனும் திண்டாடினான்.

மைதிலியே மீண்டும் ஆரம்பித்தாள்.

“நீ இந்த மாதிரி ஹோட்டல்க்கு வந்து தங்கி இருக்கியா டூரிஸ்ட் பிளேஸ்ல…” என சம்பந்தமே இன்றிப் பேச, அதனைப் புரிந்து நமுட்டு நகை புரிந்தவன், “ம்ம் வந்துருக்கேன். ஆனா பொண்ணோட வந்தது இல்ல. இதான் பர்ஸ்ட்” என்றான் நக்கலாக.

“டேய் தார்னி டெவில்!” என்று அவள் முறைக்க, அதற்கும் வெள்ளிப்பற்கள் மினுக்க சிரித்தான்.

“நான் வந்தது இல்ல… காலேஜ்லயும் டூருக்குப் போக ப்ரெண்ட்ஸ் கூப்பிடுவாங்க. ஆனா, எங்கயாவது போனா என் ஊர்க்காரங்க மோப்பம் பிடிச்சுட்டு வந்துடுவாங்களோன்னு பயத்துல எங்கயும் போனதே இல்ல. கல்யாணத்துக்கு அப்பறம் போலாம்னு நினைச்சேன்…” என்று பேசிக்கொண்டே வந்து சட்டென நிறுத்தி விட்டாள்.

நொடியில் பிரஷாந்தின் முகம் மாறிப்போனது.

“உனக்குப் போக ஆசை இருந்தா சொல்லிருக்கலாம்ல மைலி. இந்நேரம் பத்து டூருக்குப் போயிட்டு வந்துருக்கலாம்…”

“சொல்லிருக்கலாம். ஆனா அதெல்லாம் ஆசைப்பட்டேன்னு மறந்தே போச்சே. இப்ப இங்க வரவும் டக்குன்னு தோணுச்சு” என இயல்பாகப் பேச முயன்றாலும் அதில் கொப்பளித்த ஏக்கம் அவனைக் கூறு போட்டது.

சட்டென அவளருகில் வந்து நின்றவன், “இன்னும் என்னலாம் மறந்து போச்சோ அதெல்லாம் ஞாபகப்படுத்தி சொல்லு. ஐ நீட் டு நோ” என்றான் உத்தரவாக.

அவளோ திருதிருவென விழித்து, “திடீர்னு கேட்டா எப்படி சொல்ல?” எனப் பாவமாக பார்க்க,

“எப்போலாம் தோணுதோ அப்போலாம் சொல்லிடு மைலி…” என்று அவள் நெற்றியோடு முட்டினான்.

சில நிமிடங்கள் இருவரும் அப்படியே இருக்க, அவள் சூடிய வாடிய மல்லிகை மணம் அவனை ஈர்த்தது.

“நைஸ் ஃப்ராகிரன்ஸ்ல” என்று அவள் கூந்தலை முகர்ந்தவன், பாவையின் கழுத்தில் மென்முத்தம் வைக்க, அவள் கண்மூடி உறைந்தாள்.

“மைலி…”

“ம்ம்”

“மைலி… ஐ… ப்ச்…” பேச இயலாமல் திணறியவன் பின் கண்ணை இறுக மூடித்திறந்து “நீ வேணும் மைலி. மொத்தமா வேணும். எடுத்துக்கவா? வித் யுவர் பெர்மிஷன். வித் யுவர் லவ்!” என்று அவள் கன்னம் பிடித்து ஒப்புதல் கேட்டான்.

அதில் கண்ணைத் திறந்தவள், “ம்ம்” எனத் தலையாட்டி விட்டு, “ஆனா எனக்கு இது புதுசு இல்ல ரஷு. பரவாயில்லையா?” எனக் கேட்டு வைத்ததில், அவன் மெல்ல நகர்ந்து முறைத்தான்.

அவனது பார்வைச் சூட்டில், நயனங்களை நிமிர்த்தியவள் “கோபப்படாத ரஷு. உள்ளத தான சொன்னேன். எது… எதுவும் தெரியாத மாதிரி புதுசா வெட்கப்பட்டு நடிக்க முடியாதுல…” சொல்லும் போதே கண்ணீர் துளி ஒன்று பொத்தென்று தரையில் விழுந்தது.

“ம்ம்ஹும் விட்டா நீ இதுக்கு மேல பேசுவ… இனி உன்னைப் பேச விட்டா தான” என கோபம்போல அவளைக் கையில் அள்ளியவனை மிரண்டு பார்த்தாள்.

மென்மையாக பெண்ணவளைப் படுக்கையில் கிடத்தியவன், “பர்ஸ்ட் நைட்ல பொண்டாட்டி எதுவும் தெரியாம இருக்கணும்னு ஆசைப்படுற ஆள் நான் இல்ல. அது தப்பும் கூட. ஹஸ்பண்ட் அண்ட் வைப் ரிலேஷன்ஷிப் பத்தின சரியான புரிதல் இல்லாம, பொண்ணுங்க கல்யாணம் பண்றதுல எனக்கு பெருசா உடன்பாடு இல்லை மைலி. இது ஒரு யூனிக் பீல். இதுக்காக நீ எதுக்கு நடிக்கணும்? உன்னை நிஜமாவே வெட்கப்பட வைக்க நான் இருக்கும் போது…” எனத் தீவிரத்துடன் பேசிக்கொண்டே வந்தவன் இறுதியில் குறும்புடன் முடித்திருக்க, அவனது சிந்தனையின் வீரியம் அவளை வியக்கவும் அவன் மீதே அதிக அளவு நேசத்தைக் காட்டவும் வைத்தது.

“என் தார்னி டெவில்டா நீ…” எதையும் யோசியாமல் அவளே அவனை இழுத்து அணைத்துக் கொள்ள, அந்த அணைப்பில் மூழ்கியவன், பின் அவளுள் மூழ்கத் தொடங்கினான்.

இரு அளவற்ற நேச உயிர்களின் மோகப் பரிமாற்றம் அளப்பரியது. அதனை இருவரும் முழுதாய் அனுபவித்து, சுற்றம் மறக்க சுதந்திரமாய் சுவாசித்தார்கள்.

விடியலில் இத்தகைய இனிய விடியலை இருவரும் கண்டதில்லை.

ஒரே போர்வைக்குள் தேகம் தீண்ட, நிறைவான புன்னகை பரிமாற்றத்துடன் துயில் கலையும் வரம் அத்தனை பேருக்கும் வாய்ப்பதில்லை.

அவளை இன்னும் இறுக்கி படுத்துக் கொண்ட பிரஷாந்த், “யாரோ வெட்கப்பட மாட்டேன்னு சொன்னாங்களே” எனக் குறும்பாய் கிசுகிசுக்க, ஏற்கனவே சிவப்பில் தோய்ந்திருந்த மேனி மேலும் சிவந்தது.

அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிய மைதிலி, “ரியல் பாண்டஸி ஹீரோ எப்படி இருப்பாங்கன்னு தெரியாது ரஷு. பட் யூ ஆர் மை பேண்டஸி ஹீரோ” என்று அவன் நெஞ்சில் முத்தம் வைக்க, அதில் நெகிழ்ந்து கரைந்தவன், “நாட் ஒன்லி பேண்டஸி ஹீரோ. வில்லனும் நான் தான்…” என நம்பியார் ரேஞ்சில் கூறி விட்டு அவள் மீது படர, அங்கு அவளது சிணுங்கல் சத்தமே அதிகம் ஆர்ப்பரித்தது.

—–

இனிய கூடலுடன் மூன்று நாட்களைக் கடந்து விட்டார்கள்.

இப்போதெல்லாம் கண்ணாடி ஜன்னலின் வழியே தெரியும் இயற்கை அழகை, சோபாவில் அவன் மடியில் அமர்ந்து ரசிப்பதை வழக்கமாக்கி இருந்தாள் மைதிலி.

பிரஷாந்தின் கையில் தேநீர் குவளை இருக்க, அவன் ஒரு மிடறு குடித்து விட்டு அவளுக்கும் கொடுத்தான்.

அவளும் ஒரு மிடறு அருந்தி விட்டு, “ரஷு… நம்ம இன்னும் டூ டேஸ் இங்க இருக்கலாமா?” என ஆசையாகக் கேட்க,

“இருக்கலாமே… ஆனா மகி இருப்பாளா மைலி. அவளையும் கூட்டிட்டு வந்துருந்தா இன்னும் நாலு நாள் கூட இருக்கலாம்” என வருந்திக்கொண்டான்.

“மகிக்கிட்டே பேசுனேன். அவள் அங்க செட் ஆகிட்டா. அதுவும் இல்லாம உனக்கு ஒரு சர்ப்ரைஸ் பிளான் பண்றேன்னு சொன்னேனா அவள் அதையும் நம்பிட்டா” என்று வாயைப் பொத்தி நகைக்க, மனையாளின் குறும்புகளை ரசித்தவன், “அடிப்பாவி… ஏண்டி என் பேபியை ஏமாத்துற” என்றான் போலியாய் கோபம் கொண்டு.

அதில் ஒற்றைப் புருவம் உயர்த்தியவள், “அவள் பேபின்னா அப்போ நான் யாராம்?” என சிலுப்பிட,

“நீ என் பெரிய பேபிடி. அவள் என் குட்டி பேபி…” என்று அவள் தாடையைப் பிடித்துக் கொஞ்சினான்.

அவள் கேட்டது போன்றே மேலும் இரு நாட்கள் அங்கு இருந்து விட்டே கிளம்பினர்.

சென்னைக்கு திரும்பி விமான நிலையத்தில் இருந்து காரில் தயானந்தனின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

அப்போதே மணி பத்தைத் தொட்டு விட்டது. இவர்களின் வரவிற்காக மகிழினியும் வந்த தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

மகேஷ் தான், “மகிக்குட்டி தூங்குடா அம்மா, அப்பாவை நாளைக்கு பாத்துக்கலாம்ல” என சொல்லியும் அவள் பிடிவாதமாக இருக்க, பிரஷாந்தையும் மைதிலியையும் பார்த்துப் பேசி அளவளாவி விட்டு தான் கண்ணயர்ந்தாள்.

அங்கு போனதும் மகிழினியை அழைத்துக்கொண்டு கிளம்ப எண்ணிய பிரஷாந்தின் ஆசைக்குத் தீ வைக்கும் விதமாக, “சாப்பிட்டு போங்க அண்ணா… இவ்ளோ நேரம் ஆச்சுல்ல” என மிருணாளினி கூற, மைதிலியும் மறுக்காமல் உண்ண அமர்ந்தாள்.

அதன் பிறகு அமரும் தேவாவும் வந்து விட, “இவ்ளோ நேரம் ஆச்சு இன்னும் ஏன் முழிச்சு இருக்க. இட்ஸ் நாட் குட் பார் ஹெல்த்” என்று பிரஷாந்த் தேவாவைக் கண்டிக்க,

“அவள் ராக்கோழி மாதிரி நைட்டு முழுக்க முழிச்சு தான் இருக்கா பிரஷாந்த்” என்ற அமர், மைதிலியுடன் பேசிக்கொண்டிருக்க, அவளும் நகர்ந்தபாடில்லை.

பதினொன்றே ஆகி விட்டதில் பொறுமை இழந்த பிரஷாந்த், அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம், “மைலி வீட்டுக்குப் போகலாம்டி இப்போ கிளம்புனாலே 12 மணி ஆகிடும். அப்பறம் டயர்டா ஆகிடும். மனுஷனை சோதிக்காத…” என்றான் மோகம் பொங்க.

அதில் உதட்டைக் கடித்துச் சிரித்தவள், “போலாம் ரஷு. மகி தூங்கிட்டாளேன்னு பார்த்தேன்” என்றதும்,

“ஏன்டி முதல்ல எல்லாம் ஏதோ வேண்டா வெறுப்பா வந்த மாதிரி இங்க வந்தாலே கால்ல சுடுதண்ணி ஊத்தாத குறையா போறேன் போறேன்னு கிளம்புவ. என்னையும் அலையோ அலைன்னு அலைய வைப்ப. இப்ப ஏண்டி என் நிலைமை புரியாம சோதிக்கிற…” எனப் பாவம் போல கூறியதில், மேலும் எழுந்த சிரிப்பை அடக்கிவிட்டு, “சரி மகி இங்க இருக்கட்டும் காலைல கூப்பிட்டுக்கலாம். வா” என்று எழுந்தாள்.

“ஹே பேபி ஆல்ரெடி அஞ்சு நாளா நம்மளை பார்க்கல!” என்றதில், “வர்றதுன்னா வா. இல்லன்னா இரு எனக்கு என்ன” எனத் தோளைக்குலுக்கி விட்டு அவள் வெளியில் செல்ல, தயானந்தன் தான், “டேய் அவள் தான் கூப்புட்றாள்ல. போய் தோலை. உன் பொண்ண தண்ணி இல்லா காட்டுலையா விட்டுட்டுப் போற” என்று பொறிந்தான். அனைவருமே அவனை நக்கலாகப் பார்ப்பது போல ஒரு பிரம்மை தோன்ற அவனும் வெளியில் சென்றான்.

காரை அன்லாக் செய்தவனைப் பிடித்து இழுத்தவள், “இப்ப எதுக்கு கார்?” எனக் கேட்டாள் இடுப்பில் கை வைத்து.

“வீட்டுக்குப் போக மைலி…” என அவன் புருவம் சுருக்க, “வீட்டுக்குத் தான் நானும் கூப்பிடுறேன் வா” என்று தரதரவென அவனை இழுத்துச் சென்று அவனது வில்லாவில் விட்டாள்.

“மைலி?” இன்னும் அவன் கேள்வியுடன் பார்க்க,

“நான் சொன்னேன்ல… உனக்கானது எப்பவும் உன்னை விட்டுப் போகாதுன்னு… அப்படியே போக நினைச்சாலும் நான் போக விட மாட்டேன். நீ உழைச்சது திரும்ப உன்கிட்டயே வந்துடுச்சு ரஷு” எனப் புருவத்தை ஏற்றி இறக்கி ‘எப்படி?’ எனக் கேட்க, அவன் இன்னும் திகைப்பில் இருந்து மீளவில்லை.

எப்படியும் திரும்பக் கிடைக்காது என்றே எண்ணி இருந்தான். அப்படியே கிடைத்தாலும் அவன் தந்தையும் சகோதரனும் செய்த மோசடிக்காக இந்த சொத்துக்களை பறிமுதல் செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அதிகம் இருந்தது.

ஆனால், அவள் விடவில்லை. மற்றவர்களை ஏமாற்றியவர்களுக்கு பெற்ற பிள்ளையை ஏமாற்றுவதா கடினம். அவன் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தை எல்லாம் இவர்கள் சுருட்டி விட்டார்கள் என்று வழக்கு தொடுத்து, அவனது பேங்க் ஸ்டேட்மெண்ட், இன்னும் பிற ஆதாரங்களை திரட்டி அனைத்தையும் வைத்து இந்த வில்லாவை மீட்டு விட்டாள்.

அவன் பேச்சற்று வீட்டினுள் சென்றான். அங்கு ஏற்கனவே அழகாக வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்க அனைவருமே வந்து விட்டனர், “சர்ப்ரைஸ்” என்ற கத்தலுடன்.

“மகிக்கிட்ட சும்மா உனக்கு சர்ப்ரைஸ் பண்றேன்னு பொய் சொன்னேன்னு நினைச்சியா ரஷு. உண்மையாவே உனக்கு சர்ப்ரைஸ் பண்ண தான் இன்னும் ரெண்டு நாள் எக்ஸ்டெண்ட் பண்ணுனேன்” எனக் கண் சிமிட்டியவளை இறுக்கி அணைத்துக் கொண்டவனுக்கு ஒரு துளி கண்ணீர் சிதற, “ஐ லவ் யூ டி…” எனத் தேய்ந்தான்.

“டேய் டேய் எல்லாரும் இருக்கோம்டா” என தேவா எச்சரிக்க, “போங்கடா எல்லாரும்” என்று அணைப்பில் இருந்து மீளாமல் அவன் பதில் அளிக்க, “நேரம்டா நாயே” என்று தயாவும் சிலுப்பிக்கொண்டான்.

அவர்கள் நகர்வது போல இல்லை என்றதும் அனைவரும் தலையில் அடித்துக்கொண்டு கிளம்பி விட்டனர். ஆனாலும் அனைவரின் மனமும் நிறைந்திருந்தது. பிரஷாந்த் வில்லாவில் இல்லாதது அனைவரையும் வருத்த இப்போது தான் நிம்மதி பிறந்தது.

அதன்பிறகு அங்கு மகிழ்விற்குப் பஞ்சமில்லை. அவன் அவளை ராணியாக உணர வைத்தான் என்றால், அவள் அவனை ராஜாவாக வாழ வைத்தாள்.

—-

பிரஷாந்த் வில்லா ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். மைதிலிக்கு போன் செய்ய முயற்சி செய்து தோற்றுப்போக, அந்நேரம் மைதிலியே வந்து விட்டாள்.

“எங்க மைலி போன? ஏன் போன் எடுக்கல?” எனப் பிரஷாந்த் பதற்றமாக கேட்க, அவளோ அவனைப் பாராமல் விழிகளை தாழ்த்தினாள்.

“அது போன் ஸ்விட்ச் ஆப் ரஷு… வந்து…” என ஏதோ பேச வர, “அப்படியா நான் பயந்துட்டேன். தேவாவுக்கு லேபர் பெயின் வந்துடுச்சு மைலி எல்லாரும் ஹாஸ்பிடல் போய்ட்டாங்க. உனக்கு தகவல் சொல்லணுமேன்னு வெய்ட் பண்ணேன். வா போலாம்” என்று அரக்க பறக்க அவன் கிளம்ப அவளும் அவனுடன் சென்றாள்.

அங்கு தேவா மருத்துவமனையை இரண்டாக்கிக் கொண்டிருந்தாள். அப்போதென அமரும் வேலையாக சென்றிருக்க, அவளோ அவன் வராமல் லேபர் வார்டுக்குச் செல்ல மாட்டேனென ஒரே அடம்.

திவ்யஸ்ரீ தான் அவளைக் கேவலமாகப் பார்த்தாள்.

“ஏண்டி பர்ஸ்ட் பார்ட்ல என்னை எவ்ளோ கேவலப்படுத்துன… இப்ப உனக்கு மட்டும் வலிக்காம இனிக்குதா?” எனக் குத்த,

“மூடிட்டுப் போடி. நானே வலில இருக்கேன். ஐயோ அம்மா அமர் வேணும்” என்று உதட்டைப் பிதுக்க, தயா அவனுக்கு போன் செய்து கொண்டே இருந்தான்.

பிரஷாந்த்தோ “அவன் வந்ததும் உள்ள அனுப்புறோம் தேவா. இப்படி அடம்பிடிக்காத” என்றதையெல்லாம் அவள் காதில் வாங்கவே இல்லை.

சிறிது நேரத்தில் அமர் வந்ததும் தான் அவள் அமைதியானாள்.

“ஓங்கி ஒன்னு விட்டேன்னா தெரியும். நானா வந்து உன் வலியை வாங்கிக்கப் போறேன்” என்று அமர் கத்தி விட,

“ஆமா… நீ வாங்கிப்ப தான?” அவள் உர்ரெனக் கூறியதும் மொத்த கோபமும் வடிந்து போனது அவனுக்கு.

உண்மையில் லேபர் அறையில் அவளது மொத்த வலியையும் அவன் வாங்கியது போல தான் தவித்து நின்றிருந்தான்.

சில மணி நேர போராட்டத்திற்குப் பின், ஆண் குழந்தை பிறக்க பூக்குவியலை கையில் வாங்கும் போதே அவனுக்கு நடுங்கியது.

அவனே பெற்றெடுத்த ரீதியில் மூச்சு வாங்க நின்றிருந்தவன், மயக்கத்தில் இருந்தவளின் நெற்றியில் முத்தம் ஒன்றை பதித்து விட்டு, குழந்தையுடன் வெளியில் வந்தான். தயானந்தன் தான் தனது இரட்டை சகோதரியின் குழந்தையை முதலில் கையில் வாங்கினான் நடுக்கத்துடன்.

அடுத்த நாள் தான் மகிழினியைக் குழந்தையைப் பார்க்க அழைத்து வந்தார்கள். பிரஷாந்த் தேவாவின் மகனைக் கையில் வைத்திருக்க, அவனருகில் நின்றிருந்த மைதிலி, “அப்படியே அமர் மாதிரி இருக்கான்ல ரஷு” என அப்பிஞ்சின் விரல்களை பிடித்துக் கூற, “ம்ம்ஹும் தேவா மாதிரி தான் இருக்கான்” என்று மறுத்தான்.

இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க, மகிழினியோ “அம்மா அம்மா… தயா மாமா வீட்ல ரெண்டு பாப்பா இருக்கு. அமர் மாமா வீட்ல ஒரு பாப்பா இருக்கு. நம்ம வீட்ல எப்ப பாப்பா வரும்” என்று கேட்டு விட, “சபாஷ் சரியான கேள்வி” என்று தயானந்தன் பாராட்டினான்.

பிரஷாந்த் அவனை முறைத்து, “மகி பேபி” என ஏதோ பேச வரும் முன், மைதிலி மென்குரலில் “இன்னும் எட்டு மாசத்துல பாப்பா வந்துடும் மகி” என்றாள்.

அவள் முகமே பிரகாசமாக இருக்க, பிரஷாந்த் அவளை அதிர்ந்து பார்த்தான்.

“வாவ்!” அத்தனை நேரம் வலியில் இருந்த தேவஸ்மிதா கூட கத்தி விட, அமர் தயா மகேஷ் திவ்யஸ்ரீ அனைவரும் சந்தோஷத்தில் குதித்தனர்.

மைதிலி மகளின் முன் குனிந்து, “உனக்கு தங்கச்சி பாப்பா வேணுமா தம்பி பாப்பா வேணுமா?” எனக் கேட்க,

“எனக்கு ரெண்டு பாப்பாவும் பிடிக்குமே” என்றாள் பாவமாக.

“ஏதாச்சு ஒன்னு தான் சொல்லணும் மகி பேபி” என்று மகளைக் கொஞ்சிட, அவளோ “அப்போ தேவா அத்தைக்கு மாதிரி உங்க வயித்துக்குள்ளயும் பாப்பா இருக்கா. எப்ப பெருசா ஆகும். எப்ப என்கிட்ட வரும்” என்று அடுத்து அடுத்து கேள்வி கேட்க, அவள் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த கணவனை ஓரக்கண்ணில் உரசியபடி பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் பொறுக்க இயலாமல் பிரஷாந்த், “நான் கார்ல இருக்கேன் வா” என்று விறுவிறுவென வெளியில் செல்ல மைதிலியும் அவன் பின்னே சென்றாள்.

காரில் ஏறி அமர்ந்ததும் “என்மேல கோபமா ரஷு, உங்கிட்ட முதல்ல சொல்லலைன்னு. நேத்து தான் எனக்கே தெரியும். ஆபிஸ்ல இருந்து கிளம்பும் போது தலை சுத்துச்சு. அப்பறம் பக்கத்துல க்ளினிக்கு போயிட்டு வந்து தான் லேட் ஆச்சு. அதுக்குள்ள தேவா டெலிவரி வரவும் முடிச்சுட்டு சொல்லலாம்னு இருந்தேன். இப்போ மகி கேட்கவும் டக்குன்னு சொல்லிட்டேன்” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க, அது எதையும் கேட்காதவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

“ஒரு மாதிரி செம்ம ஹேப்பியா இருக்குடி. எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு தெரியல” என உணர்ச்சிவசத்தில் அவன் நெகிழ,

அதில் தலையாட்டி புன்னகைத்தவள், “மகியை விட நீ தான்டா பேபியா இருக்க…” என்று அவன் கன்னம் கிள்ளினாள்.

அவனோ தீவிர யோசனையுடன், “மைலி எனக்குப் பயமா இருக்கு. நீயும் மகியும் தான் எனக்கு பர்ஸ்ட். இதனால மகி எதுவும் பீல் பண்ண மாட்டாள்ல” என திடீர் கவலை எழ,

“லூசாடா நீ…” எனத் திட்டினாள்.

அவனது உயிரை விட, தங்களை அவனது உயிராய் நினைக்கும் அன்பு புரிந்தாலும், “இந்தக் குழந்தையையும் எங்களையும் வேற வேறயா பாக்குறியா. அப்படி பார்த்தா தான் உனக்கு இப்படி தோணும்” என்று சுள்ளென கூறியதில் அவன் பதறினான்.

“ஏய் சத்தியமா இல்லை மைலி…” என வருத்தத்துடன் கூறி, குற்றம் செய்தவன் போல பரிதவிக்க அவனை சில நொடிகள் முறைத்தவள், “வா” என கையை நீட்டி அழைத்தாள்.

அதில் பாய்ந்து அவளை கட்டிக்கொண்டவன், “லவ் யூ மைலி லவ் யூ சோ மச்… பேண்டஸி கதைல நிறைய பிரின்ஸ்ஸோட காதலை தான் அதிகபட்சமான காட்டுவாங்க. பட் யூ ஆர் மை பிரின்சஸ்டி. பாண்டஸி இல்ல ரியல் பிரின்சஸ்…” என்று அவள் முகம் முழுதும் முத்தமிட, அவனது கூற்றில் உறைந்தவள், பின் முத்தமிடும் பொறுப்பை அவள் ஏற்றுக்கொண்டாள்.

பிழையென்று
பிரிவை கொடுத்தேன்!!!
விலையாக
நேசம் கொடுத்தாய்!!!

களையென்று
கலைக்க முயன்றேன்!!!
கலையாத
காதல் கொடுத்தாய்!!!

உணர்வாக ஊடுருவிய பிறகே
உணர்ந்தேன்…
நின்னையே
உயிரென்று…

முற்றும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
98
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment