Loading

பவள நிலவு பவனி வந்து தன் நிலவொளியை அவ்வறையில் வீசிக் கொண்டிருந்தது! தன் காலின் நுனி விரல்களில் எம்பி நின்று கொண்டு தன்னவனது இதழை முற்றுகையிட்டிருந்த கன்னியவளது கனியிதழின் சுவை, ஆடவனை பித்தேற்றிக் கொண்டிருந்தது!

 

கண்களில் கரைபுரண்டு ஓடும் கண்ணீருடன் அவனை இறுக பற்றிக் கொண்டு இதழ் சுற்றி நின்ற அஞ்சிலையின் துவக்கச் செயலை, ருத்ரன் மெல்ல தனதாக்கியிருந்தான். ‘அடிகேடி.. எவ்வளவு நேரம் உன் நுனிவிரல்கள் நோகும்?’ என்றெண்ணிய வண்ணம் அவளை குழந்தை போல் தன் கரங்களில் ஏந்தியவன், தங்கள் அந்தரங்கத்தினை காதலெனும் மை கொண்டு தீட்டிக்கொள்ளப்போகும், புத்தகமான பஞ்ஞனை மீது கிடத்தினான்.

 

மெய் கொண்டு உயிர் தேடல் துவங்க இருந்த பொழுததில் அவள் கண் பார்த்து கலந்துருக ஆசை கொண்ட கேள்வன், அவள் விழிகளில் முத்தமிட, நாணப்பூ மலர்ந்து இமைப்பூக்கள் மேலும் இறுக பூட்டிக் கொண்டது. அதில் சிரித்துக் கொண்டவன், “இளாமா..” என்று காதலும் வேட்கையும் கலந்த குரலில் அழைக்க, இந்த புதுவகை அழைப்பில் உறுகிதான் போனாள் பாவை.

 

“ம்..ம்ம்” என்று விழி மூடியபடி அவள் குரல் கொடுக்க, “என்னை பாரேன்” என்றான். தன் இதழ் கடித்து புன்னகைத்த வண்ணம் விழி திறந்தவள் கண்களும் தனது காதல் கசிந்த விழிகளின் பார்வையை பரிசாகத் தந்தவன், “யூ பிலீவ் மீ?” என்று வினவ, அவனை கண்களில் கண்ணீர் மின்ன பார்த்தவள், சூறாவளியாய் அவனை அணைத்துக் கொண்டு மீண்டும் அவனிதழை சிறை செய்தாள்.

 

வார்த்தைகளற்று அவள் கொடுத்த சம்மதத்தில், தனது இருபத்தி எட்டு வருட பிரம்மச்சரியத்தினை அவளிடத்தில் சரணடையச் செய்தவன், மெல்லிடையாளின் மென்மைகளில், தன் காதலின் திண்மைகளைப் பதித்தான்.

 

புதிதாக துவங்க இருக்கும் காதல் வாழ்வின் மீதான அச்சத்தை, தன் முத்தங்களால் கலைந்தவன், காதலால் நாணமுறச் செய்து, கூடலால் வெட்கமுறச் செய்தான். அந்த அழகியதோர் அந்தரங்கப் பொழுதில் தங்கள் வாழ்வை துவங்கிய இருவரும் திருப்தியான புன்னகையுடன் ஓய்ந்திட, அவன் மார்பை தன் மஞ்சமாக்கி படுத்திருந்தவள், விழிகளில் நில்லாமல் நீர் வடிந்தது.

 

அவள் தலையை பரிவாக கோதிவிட்டவன், “இந்த கண்ணீரின் காரணம் அறியலாமா?” என்று வினவ, அவனை இறுக அணைத்துக் கொண்டு “சந்தோஷத்தின் வெளிப்பாடு” என்று கூறினாள். அவள் நெற்றியில் முத்தமிட்டவன், “தூங்குடா.. நேரமாச்சு” என்று கூற, “ஹப்பா.. இரக்கம் வந்துடுச்சே” என்று கூறி வெட்கத்தில் தன் நாக்கை கடித்துக் கொண்டாள். 

 

அதில் சிரித்துக் கொண்டவன், “ம்ம்.. இரக்கம் வந்துடுச்சு. அது மீண்டும் மலை ஏறுறதுகுள்ள தூங்கிடு” என்று அவன் கூற சிரித்துக் கொண்டு கண்மூடியவளுக்கு சில நிமிடங்கள் முன் நடந்த சம்பவம் படமாக ஓடியாது.

 

இரவு உணவை முடித்துக் கொண்டு இருவரும் தங்கள் அறைக்குள் நுழைய, உடைமாற்றி வந்தவள், குளிக்க சென்ற கணவனின் வருகைக்காக காத்திருந்தபடி அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். அதில் அவளது சம்பளம் வந்துவிட்டதற்கான குறுஞ்செய்தி வரவே, “ஐ.. வந்துடுச்சு” என்று குதூகலித்தவள், “அவர் கிட்டயே கேட்போம். அவருக்கு எங்க போனா ரொம்ப புடிக்குமோ அங்க போகலாம்” என்று கூறிக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள்.

 

குளித்து முடித்து வந்தவன், “என்னடா தூங்கலையா?” என்க, அவனிடம் வந்தவள், “ஏங்க.. உங்களுக்கு எங்க போக ரொம்ப புடிக்கும்? என்ன வாங்க ஆசை?” என்று வினவினாள். அவளை புரியாது பார்த்தவன், “என்னமா கேட்குற? உடம்பு எல்லாம் ஓகே ஆகி ரெண்டு நாள் ஆயிடுச்சே. இன்னும் உனக்கு தெளியலையா என்ன?” என்று கேலியாக வினவ, “ஏங்க.. கலாய்க்காம சொல்லுங்க” என்றாள்.

 

“நீ கேட்குறதே புரியலை. என்னதுனு சொல்லுடா” என்று அவன் கூற, “எனக்கு சம்பளம் கிரெடிட் ஆயிடுச்சு. நான் என்ன பண்ணட்டும்?” என்று வினவினாள். சற்றே யோசித்தவன், “எப்பவும் என்ன பண்ணுவ?” என்று அவன் கேட்க “ம்ம்.. எனக்கு வேண்டிய பணத்தை எடுத்துகிட்டு அம்மாகிட்ட கொடுத்துடுவேன். எதாவது விசேஷம்னா யாருக்காவது எதும் வாங்கித் தருவேன்” என்றாள்.

 

சற்றம் யோசியாது, “உனக்கு தேவைனு நீ நினைக்குமளவு எடுத்துகிட்டு மீதத்தை எப்போதும்போல அம்மாக்கு அனுப்பிடு” என்று அவன் கூற, முதலில் அவளால் அதை கிரகிக்க இயலவில்லை. ‘இவர் கூறியது நிஜமா? என் காதுகள் கேட்டவை சரியா?’ என்ற திக்பிரம்மையில் இருந்தவள், “எ..என்னது? ஏன்?” என்று வினவ, “ரூபி அடிக்கடி சொல்லுவாடா. நீ தானே அண்ணா என்னை கஷ்டபட்டு படிக்க வைக்குற சம்பாதிச்சு அதை உன்கிட்ட கொடுக்கனும். ஆனா அம்மா போற வீட்டுல ஏத்துப்பாங்களானு சொல்வாங்க. அதைபத்தி அடிக்கடி சொல்லுவா. எல்லா பொண்ணுங்களுக்குமே அந்த எண்ணம் இருக்கும் தானே?”

 

“உனக்குமே கல்யாணம் ஆனா அம்மா அப்பாக்கு எப்பவும் போல பினான்ஷியலா சப்போர்ட் பண்ண முடியாதேனு வருத்தம் இருக்கும் தானே? அப்படியொரு வருத்தத்தை என் மனைவி அனுபவிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. என்னோட சம்பாத்தியம் போதும்டா. அதுலயே நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்குறேன்‌. நீ எப்பவும்போல உங்க அம்மா அப்பாக்கு கொடு. அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்” என்றான்.

 

அவன் கூறியவற்றை கேட்டவள் கண்கள் கலங்கி போக, என்றோ ஒரு நாள் தனது அன்னை, பாட்டி அவரை படிக்க வைக்க பட்ட கஷ்டங்களையும் இன்று தன் சம்பாதியத்தை அவருக்கு கொடுக்க முடியாமல் சொந்த குடும்பத்திற்காக மட்டுமே செலவிடுவதையும் கூறி வருத்தப்பட்டது நினைவு வந்தது.

 

அவனையே அசைவற்று பார்த்திருந்தவள் கண்களில் கண்ணீர் மழை பொழிய, அதை மெல்ல துடைத்து விட்டவன், “என்னடா?” என்றது தான் தாமதம் தன் நுனிவிரல்களில் எம்பி நின்று அவன் இதழை சிறை செய்திருந்தாள். அது தங்களது கூடலுக்கு வழிவகை செய்திருக்க, இன்பமாக துவங்கிய நாளோடு இனிமையாக உறங்கினான்.

 

மறுநாள் காலை தந்த கதகதப்போடு தன்னவனின் அணைப்பும் சேர்ந்திட, இதமான உறக்கம் கலைந்த போதும் எழ மனமின்றி படுத்திருந்தாள். நிமிர்ந்து அவன் குழந்தை முகம் பார்த்தவள், ‘பாப்பா மாதிரி முகத்தை வச்சுகிட்டு..’ என்று எண்ணி சிரித்துக் கொள்ள, சில நிமிடங்களில் ஆடவன் தானும் முழித்துக் கொண்டான்.

 

ஒருவர் முகம் மற்றவர் பார்த்துக்கொள்ளவே சிரிது நேரம் பிடித்திருக்க, “குட் மார்னிங்” என்று தானே முன் வந்தான். “குட் மார்னிங்” என்றவள் நகர்ந்து படுக்க, சிரித்துக் கொண்டவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு சென்றான். இருவரும் தங்கள் காலை பணிகளை முடித்து தயாராகி வர, முதல் கூடல் கொடுத்த உரிமையை வென்ற நாணம் அன்று அவனிடமிருந்து அவளை சற்று விலகி தான் இருக்க வைத்தது. தானும் அதை புரிந்துகொண்டு அவளுக்கு இடைவெளி கொடுத்தவன், காலை உணவை முடிக்க, சாய் வந்ததும் எப்போதும் போல் அவனுக்கு கண்ணசைவில் கூறிவிட்டு புறப்பட்டாள்.

 

தோழியின் பிரகாசிக்கும் முகம் கண்டு காரணம் அறியாத போதும் மனம்நிறைந்த மகிழ்ச்சியை உணர்ந்த சாய், அவளுடன் சிரித்து பேசிய வண்ணம் அந்த நாளை கடத்தினாள். வேலை முடித்து வீடு திரும்புகையில், சாயையும் கூட்டிக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றவள், “அம்மா..” என்றபடி உள்ளே செல்ல, “ஏ அஞ்சு வா.. மதியமிருந்து ஃபோன் போடுறேன் எடுக்கவே இல்லை” என்றபடி காயு வந்தார்.

 

“நீங்க எதுக்கு அம்மா இந்த நாய்க்கு ஃபோன் அடிச்சீங்க?” என்றபடி சாய் அமர, “சம்பள பணத்தை எப்போதும் போல என் அக்கவுன்டுக்கு அனுப்பிட்டாடா. கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆச்சு இன்னும் கல்யாணம் ஆன நினைப்பே இந்த பொண்ணுக்கு இல்லை போல” என்றார். அதில் சிரித்துக் கொண்ட அஞ்சு, “அம்மா அம்மா.. மறக்கலாம் இல்லை. தெரிஞ்சு தான் அனுப்பினேன்” என்று கூற, “என்ன அஞ்சுமா சொல்ற? உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. உனக்குனு ஒரு குடும்பம் இருக்கு. இப்ப எனக்கு எதுக்கு பணம் அனுப்புற? மாப்பிள்ளை வீட்டுல எதாவது நினைச்சுக்க போறாங்க” என்று காயு கூறினார்.

 

“அம்மா.. அவர் தாம்மா அனுப்ப சொன்னார்” என்று புன்னகையுடன் அவள் கூற காயுவும் சாயும் புரியாது விழித்தனர். “நான் மாச சம்பளம் வந்ததும் அவர்கிட்ட சொன்னேன். எதாவது வாங்கி தரலாம்னு கேட்டேன். எப்பவும் என்ன செய்வனு கேட்டார். எனக்கு வேண்டியதை எடுத்துகிட்டு அம்மாகிட்ட தந்திடுவேன், அதுக்கு மேல வேணும்னா அவங்ககிட்ட கேட்டு வாங்கிப்பேன்னு சொன்னேன். இப்பவும் அதையே பண்ணுனு சொன்னாங்க. ரூபி அடிக்கடி அவ சம்பாதிக்குற பணத்தை கல்யாணமாகி போனபிறகும் அவருக்கு கொடுக்க ஆசைப்படுறதா சொல்லுவாளாம். அதேபோல தானே நீயும் ஆசை பட்டிருப்ப உங்க அம்மாக்கே கொடுனு சொல்லிட்டார்” என்று முகம் கொள்ளா புன்னகையுடன் பெருமையாக அவள் கூற காயுவிற்கு மருமகனையும் மகள் வாழ்வையும் நினைத்து அத்தனை ஆனந்தமாக இருந்தது.

 

இருப்பினும், “இப்ப இந்த பணம் இங்க வர்றதுக்கு என்னமா தேவை இருக்கு? நீ வாழுற குடும்பத்துக்கு உன் பங்கு வேண்டாமா?” என்று காயு வினவ, “என் புருஷன் அவரோட சம்பாதியத்துலயே என்னை ராணி மாதிரி பார்த்துக்குறேன்னு சொல்லிட்டார். அதையும் மீறி கொடுத்தா நான் அவரை அவமதிக்குற போல இருக்காதா? அதுமட்டுமில்லை. நான் என் தேவைக்குனு கொஞ்சம் பணம் எடுத்துகிட்டேன்‌. அதுவே போதும் தான்” என்று அஞ்சு கூறினாள்.

 

அவள் கன்னம் வழித்து திருஷ்டி எடுத்தவர், “எம்பொண்ணும் பெரிய மனிஷிபோல பேச ஆரம்பிச்சுட்டா” என்க, வாய்விட்டு சிரித்த சாய், “நானும் அதேதான் அம்மா யோசிச்சேன்” என்றாள். பின் இருவருக்கும் உண்ண ஏதேனும் எடுத்து வர காயு செல்ல, தோழியின் கன்னம் கிள்ளிய சாய், “மேடம் ரெம்ப ஹேப்பி போல?” என்று வினவியதற்கு அவளை அணைத்துக் கொண்டு “ரொம்ம்ம்ம்ப” என்றாள்.

 

அதில் சாய் சிரித்துக் கொள்ள, அவளை அணைத்தபடியே, “உண்மைதான் போல சாய். எல்லாரும் ஒரேமாதிரி கிடையாது. சில ஸ்பெஷல் ஹஸ்பென்ட் மெடீரியல்ஸும் இருக்காங்க தான். இவரைப் போல” என்று கூறினாள்.

 

‘ஹப்பாடா.. புரிஞ்சிடுச்சு போலயே’ என்று தன் தோழியை முதன்முறையாக தவறாக புரிந்துக் கொண்ட சாய், அத்தனை ஆனந்தத்துடன் “இந்த வார்த்தைய உன்கிட்ட இருந்து கேட்க அவ்வளவு சந்தோஷமா இருக்குடி” என்று கூற மேலும் சிரித்துக் கொண்டாள். ‘இப்படியும் கணவர் அமையும் என்று தான் நம்பினாலே தவிர, வருடங்கள் கடந்த பின்பும் இது நிலைக்கும்’ என்று அவளது நம்பிக்கை இன்னும் இல்லாமலே இருந்தது.

 

அதை அறிந்து, சாய் இன்றே தோழியின் மனது பூசல்களை கலைந்திருக்க வேண்டுமோ? விதி யாரை தான் விட்டது? காயு மூவருக்கும் பலகாரங்களும் குளம்பியும் கொண்டு வந்து கொடுக்க, உண்டு முடித்து ஆனந்தத்துடன் புறப்பட்டாள்.

-வரைவோம் 💞

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்