Loading

அத்தனை உறவிருந்தும்

அநாதரவா உணர்ந்திருந்தேன்!

 

வெளிய சொன்னா உலகம் வேதாந்தம் பேசுமுன்னு

வேதனையில வாடியிருந்தேன்!

 

தடமில்லா பூமியில

தனிச்சு நின்னுருந்தேன்!

 

வெறிச்சோடிப் போன வீதியாட்டம்

வெறுமைய சுமந்திருந்தேன்!

 

மின்மினியா வந்த நீ

மின்னலாட்டம் மனபாரம் பறிச்சுப்புட்ட!

துளி மழையா வந்த நீ

தொயரத்தக் கரைச்சுப்புட்ட!

 

வெறிச்சுனு கிடந்த என் வானத்துல

வானவில்ல நீ வரைஞ்ச!

 

வறண்ட கிணத்துல எப்போ

வத்தாத ஊத்தா ஊறிப்போன?!

 

வாடிக்கிடந்த மனசுக்குள்ள

வாடுனாலும் வாசமாறா மரிக்கொழுந்தா எப்போ மாறிப்போன?!

ரணப்பட்டு நின்னவள 

ரதத்துல ஏத்தி வச்ச மகராசா…

 

காத்துல என் உசுரு கலக்கும் வேளையில

என் நினைப்புல நீ தான் நிறைஞ்சுருப்ப!

என் உசுருக்குள்ள உறைஞ்சுப்போன என் மகராசா!

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அழகான, கருத்து நிறைந்த வரிகள். ஒவ்வொரு வரியிலும் காதல் ரசம் சொட்டுகிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.