798 views
எபிலாக் :
அனைவரும் ஒன்றாக வாழ நினைத்தார்கள் அல்லவா? கோவர்த்தனன் & இளந்தளிர் தம்பதியினர், ஹரீஷ் மற்றும் பரதன் இவர்களது பணத்தில் வீட்டை வாங்கியும் விட்டார்கள்.
ஒரே வீட்டில், மூன்று குடும்பங்களும் விமரிசையாக, நிம்மதியாக, கொண்டாட்டமாக வாழப் போகிறார்கள்.
ஹரீஷ் குடும்பத்தினருக்கு ஒரு அறை, கோவர்த்தனன் மற்றும் இளந்தளிருக்கு ஒரு அறை, சிவசங்கரி மற்றும் சுமதியும் ஒரு அறையில் தங்கிக் கொள்ள, சுபாஷினியும், மைதிலியும் இணைபிரியா இரட்டைச் சகோதரிகள் போல, உலா வந்ததால், அவர்களுக்கென்று ஒரு அறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டு விட்டது.
தனிமையில் அறைக் கட்டிலில், மனைவியின் கழுத்தில் தொடர்ந்து இதழ் பதித்துக் கொண்டு இருந்த கணவன் கோவர்த்தனனோ,
“மை ஸ்வீட் பெப்பர்” என்று அவ்வப்போது கூறுவதை இன்றும் மனைவியின் அருகாமையிலும், முத்தத்தின் இடையிலும் தாபமாகக் கூறிக் கொண்டு இருந்தான்.
அத்தாபத்தை உணர்ந்து கொண்ட இளந்தளிரோ,
“கோவர்த்தனா! நீ எனக்கு எதுக்கு ஐஸ் வைக்குற?” என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்டாள்.
“ஐஸ் வைக்குறேனா? அதெல்லாம் இல்லைம்மா. நான் பாட்டுக்கு என் வொய்ஃப்க்கு முத்தம் கொடுத்துட்டு இருக்கேன்” என்று பாவமாகக் கூறினான் கோவர்த்தனன்.
அந்தப் பாவனையில் சிரித்து விட்டவள்,
“நானும் என் ஹஸ்பண்ட்டுக்கு முத்தம் கொடுக்கிறேன்” என்று அவனது முகத்தில் தன் இதழ்களை இடைவிடாமல் ஒற்றி எடுத்துக் கொண்டே இருந்தாள் இளந்தளிர்.
முத்தங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளப் போகிறார்களா என்ன? அன்பையும், காதலையும் சேர்த்தல்லவா பகிரப் போகிறார்கள்!
- சுபம்