
அத்தியாயம் – 19
அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீடு திரும்பிய விக்ராந்த், “பேபி கிளம்பு, நாம வெளியே போயிட்டு வரலாம்” என்றான்.
”எங்கே போறோம்?” என நித்திலா குழப்பமாகக் கேட்க, “சும்மா ஒரு லாங் ட்ரைவ், நாம ஒன்னா வெளியே போய் ரொம்ப நாளாச்சுல, இன்னைக்கு எனக்கு ஒர்க்கும் கம்மியா இருந்துச்சு அதான் ஏர்லியா வந்துட்டேன்” என்றவன்,…”நான் ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடறேன்” என்றுவிட்டு பாத்ரூமிற்குள் சென்றான்,…
ஃபிரஷ்அப் ஆகிவிட்டு வெளியே வந்தவன், அலுவலக உடையிலிருந்து வேறு உடைக்கு மாறிக்கொண்டே, அலமாறியின் முன் நின்ற நித்திலாவிடம்,…”என்ன பேபி பண்ணிக்கிட்டு இருக்க” என்றான்,…
“ம்ம்ம்…. நாம வெளியே போறோம்ல, அதான் என்ன ஷாரீ கட்டலாம்னு பார்த்துகிட்டு இருக்கேன்” என்றாள்……
“நீ கட்டிருக்க ஷாரீலேயே நல்லா தான் இருக்க வா போலாம்” என அவளை இழுத்துக்கொண்டு புறப்பட்டான்… இருவரும் காரில் சென்று கொண்டிருக்க,….”எங்க போக போறோம் அத்து” என்றாள் ஆர்வமாய்..
“எங்கேயும் இல்ல, இப்படியே தான் போயிட்டு இருக்க போறோம், இன்னைக்கு க்ளைமேட் நல்லா இருந்தது, அதான் உன்கூட வெளியே வரணும்னு தோணுச்சு வந்துட்டேன்” என்றான் தோள்களை குலுக்கி,…
அவளும் அப்போது தான் அதனை கவனித்தாள்,…. கொஞ்சமும் வெயில் இல்லாமல், வெளியே வானம் மப்பும் மந்தாரமுமாக, மழை வருவதற்கு முந்தைய அந்த இதமான சூழலில் இருந்தது, ஏசியை அணைத்துவிட்டு விக்ராந்த் ஜன்னல்களை வேறு திறந்து வைத்திருக்க, ஜில்லென்ற காற்று நித்திலாவின் மேனியில் பட்டு அவளைப் பரவசப்படுத்தியது. சாலையின் இருபுறமும் அடர்ந்த மரங்கள்.. ஏதோ ஒரு மலைப்பிரதேசத்தில் பயணிப்பது போன்ற உணர்வு அவளுக்குள்…
”என்ன பேபி, பிடிச்சிருக்கா?” – அவளது ரசிப்பைக் கண்டு விக்ராந்த் கேட்க, “ம்ம்ம்… ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்றாள் முகம் கொள்ளா புன்னகையுடன்…..
“ஏன் பேபி தள்ளி உட்கார்ந்திருக்க, என் பக்கத்துல வா” அவன் சொல்ல, அடுத்த நொடி அவனை நெருங்கி அமர்ந்து அவனது புஜத்தை பற்றிக் கொண்டு, அவன் தோளில் தலை சாய்த்து கொண்டாள் நித்திலா,…..
சில நிமிடம் அவள் எதுவுமே பேசாமல் வர,…”என்ன பேபி தூங்கிட்டியா” என்றான் அவன்…
“பச்… இல்ல,… யோசிச்சிட்டு இருந்தேன்” என்றாள் அவனது தோளில் சாய்ந்த நிலையிலேயே….
“யாரை பத்தி” அவன் கேட்க,… “உங்களை பத்தி தான்” என்றாள்…
“ஓ…. என்ன பேபி, என்னை பத்தி என்ன யோசிச்ச” அவன் கேட்க,…”நமக்கு மேரேஜ் ஆகி இன்னையோட மூணு மாசம் முடிஞ்சு போச்சு, ஆனா நீங்க எப்படி பட்டவருன்னு இப்போ வரைக்கும் என்னால புரிஞ்சிக்க முடியல” என்றாள்
“என்னை பத்தி நீ ஏன் பேபி புரிஞ்சிக்கணும், நான் உன்னை புரிஞ்சிக்கிட்டா மட்டும் போதும், ஏன்னா நான் உன்னோட நிரந்த வாழ்க்கை இல்லையே,” அவன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தையில் நித்திலாவின் உலகம் ஒரு நிமிடம் சுக்குநூறாக உடைந்தது. சட்டென்று அவன் தோளிலிருந்து விலகி, தள்ளி அமர்ந்து கொண்டாள். கோபத்தில் அவள் முகம் சிவந்து காணப்பட்டது,..
“ஏன் பேபி தள்ளி போயிட்ட, பக்கத்துல வா” அவன் சொல்லில் அவளுக்கு கோவம் பல மடங்காக பெருக,… கண்களை மூடி அமர்ந்து கொண்டாள்,….
‘இவன் இப்படி தான், இவனை கடவுளால கூட திருத்த முடியாது, வீணா கோபப் படுறதை நிறுத்திட்டு, இனி அவனை எப்படி கோபப்படுத்தலாம்னு தான் நான் யோசிக்கனும், அவன் என்னை வெறுப்பேத்துற மாதிரி நானும் அவனை வெறுப்பேத்தனும், என்னோட கஷ்டம் அவனுக்கும் புரியனும், அழுகை கோபத்தை விட்டு அவனை என்ன பண்ணலாம்னு யோசி நித்தி’
எனத் தனக்குள் வஞ்சினம் பூண்டாள்.
“என்ன பேபி…. கண்ணை மூடிக்கிட்டு அப்படி என்ன திங்க்கிங்” என்றவனிடம் கண்களை திறந்து முறைப்பான பார்வையை மட்டும் கொடுத்தாள் நித்திலா,….
“கோவமா இருக்கியா பேபி,… நீ சந்தோஷ படுற மாதிரி நான் கொஞ்ச நேரம் பேசட்டா” அவன் கேட்க,….’அப்படி அவன் என்ன பேச போகிறான்’ என உள்ளே எண்ணியவள்… வெளியே “என்ன” என்றாள் வேண்டா வெறுப்பாக,….
”உனக்கு என் லவ்வரைப் பத்தி எதுவும் தெரியாதே? அதான் இப்போ சொல்லலாம்னு இருக்கேன்!” அவன் நிதானமாகச் சொல்ல, நித்திலாவிற்குள் ஆத்திரம் எரிமலையாய் வெடித்தது.
ஆனாலும், அவன் தன்னை வெறுப்பேற்றவே இப்படிப் பேசுகிறான், அவன் எவளுடன் போனாலும் எனக்கு எந்த பிரட்சனை இல்லைனு அவனுக்கு புரிய வைக்கணும் என நினைத்தவள்,.. “ம்ம்ம்… சொல்லுங்க, தெரிஞ்சுக்கிறேன்!” என இதழில் ஒரு பொய்யான புன்னகையை வரவழைத்தாள்.
அவள் சிரிப்பிற்குப் பின்னால் இருக்கும் எரிமலையை விக்ராந்த் உணர்ந்தாலும், அதனை கண்டுகொள்ளாதவன் போல் அவளை பற்றி சொல்ல ஆரம்பித்தான்,..
”அவளோட பேரு லாவண்யா… அவ உன்ன மாதிரி கிடையாது பேபி. ஒரு மாடல் பொண்ணு! அவ இங்கிலீஷ் பேசுற அழகே தனி. உன்ன மாதிரி இந்தச் சல்வார், புடவைன்னு பட்டிக்காட்டுத் தனமா டிரஸ் பண்ண மாட்டா. ஃபாரின்ல தான் அவளை எனக்குப் பழக்கம். அவதான் முதல்ல என்கிட்ட புரப்போஸ் பண்ணா, எனக்கும் பிடிச்சிருந்தது. ஸோ நானும் ஓகே சொல்லிட்டேன், டு இயர்ஸ் ரெண்டு பேரும் ஒன்னா தான் சுத்தினோம், என்னோட படிப்பு முடிஞ்சு நான் ஊருக்கு வந்துட்டேன், பிஸ்னஸ்ல கால் பதிச்சிட்டதால என்னால மறுபடியும் அவளை போய் பார்க்க முடியல, பட் போன்ல டச்ல தான் இருந்தோம், வருஷங்கள் கடந்தது, அப்பா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஃபோர்ஸ் பண்ண ஆரம்பிச்சாரு, நானும் சொல்லி சொல்லி பார்த்தேன் அவர் கேட்கல, லாவண்யா கிட்ட சொன்னேன், அவ ஃபாரிங்ல பிஸ்னஸ் பண்ணிக்கிட்டு இருக்கா, ‘இப்போ வர முடியாது, எனக்கு சிக்ஸ் மந்த் டைம் கொடு, நான் இந்தியா வரேன்’னு சொன்னா,
சின்ன வயசுலருந்தே அம்மாவை விட அப்பா மேல மரியாதையும் பாசமும் ஜாஸ்தி, என்னால அவர்கிட்ட இதை பத்தி சொல்ல முடியல, இதுக்கு முதல் காரணம் லாவண்யா இந்தியால பிறந்திருந்தாலும் அவ வளர்ந்தது எல்லாம் ஃபாரிங்ல, அவளோட ஆட்டிடியுட் எல்லாம் வெளிநாட்டு ஸ்டைல்ல தான் இருக்கும், பாட்டி, அப்பாலாம் இதுக்கு ஒத்துப்பாங்களான்னு எனக்கு சந்தேகமா இருந்தது, ஸோ லாவண்யா வந்த பிறகு அவள பார்த்து எல்லாரும் தெரிஞ்சிக்கட்டும்னு நானும் பொறுமையா வெயிட் பண்ணேன், அப்றம் அப்பா என் கிட்ட சொல்லாமலேயே உன்னை பொண்ணு பார்க்குற வரைக்கும் போய் நிறுத்திட்டாரு, அப்றம் நடந்தது எல்லாம் தான் உனக்கே தெரியுமே” என ஒரு பெருமூச்சோடு அவன் முடிக்க, நித்திலாவுக்கு உலகமே சுழல்வது போல இருந்தது.
ஒவ்வொரு வார்த்தையும் நித்திலாவின் நெஞ்சில் ஈட்டியாய்ப் பாய்ந்தது… ’அப்படியென்றால் அவன் ஒரு பெண்ணைக் காதலித்தது உண்மை தானா?’ அவளது இதயம் படபடவெனத் துடித்தது. வெளியே வரத் துடித்த கண்ணீரை, ஒரு நீண்ட மூச்சால் உள்ளுக்குள் அடக்கிக் கொண்டாள்.
அதற்கு பிறகு அவள் அவனிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை….
சில நிமிடங்கள் அமைதியே நிலவியது, அதனை முதலில் கலைத்தது விக்ராந்த் தான்….
என்ன பேபி சைலண்ட் ஆகிட்ட?” என விக்ராந்த் கேட்க, “என்ன பேசணும்னு நினைக்கிறீங்க?” என மரத்துப் போன குரலில் கேட்டாள் நித்திலா.
”நான் என் கதையைச் சொல்லிட்டேன். உனக்கு இப்படி ஏதாச்சும் பாஸ்ட் இருக்கா?” என அவன் மிகச் சாதாரணமாகக் கேட்க, நித்திலா வெடித்தாள். “நான் யாரையாவது லவ் பண்ணியிருந்தா உங்களை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்? என் மனசுக்கு பிடிச்சவனோட நிம்மதியா வாழ்ந்திருப்பேனே!”
அதற்கு விக்ராந்த் சொன்ன பதில் தான் அவளது பொறுமையைச் சோதித்தது.
“ஓஹ்.. இப்போ ஒன்னும் கெட்டு போகல பேபி, உனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா சொல்லு, இன்னும் த்ரீ மந்த் தானே, அதுக்கு அப்புறம் நானே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றவனை அருவருப்பான பார்வை பார்த்தாள் நித்திலா, அவளது கண்ணீர் அவள் கட்டுப்பாட்டையும் மீறி வெளியேறியது,….
“உங்க முகத்தை பார்க்கவே அசிங்கமா இருக்கு” என கோபத்தோடு சொன்னவள்…. கார் கதவை திறக்க போக, அது திறப்பேனா என பிடிவாதம் செய்தது,…
“என்ன பண்ணுற பேபி, இது ஆட்டோ லாக், வண்டியிலருந்து கீயை எடுத்தா மட்டும் தான் டோர் ஓபன் ஆகும்” அவன் சொல்ல, அவளது பார்வை இப்போது அந்த சாவியின் மீது படிந்தது,…. அவள் பாய்ந்து வந்து அதனை கையில் எடுக்க போன நேரம், காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அவள் செய்கையை தடுத்தான் விக்ராந்த்,….
அவளது மணிக்கட்டை அவன் அழுத்தமாக பிடித்திருக்க, அவளுக்கு வலி ஏற்பட்டது,… “என் கையை விடுங்க” அவள் காட்டமாக சொல்ல, தன் பிடியை இன்னும் இறுக்கினான் அவன்,….
வலியில் அவளது கண்கள் கலங்க, அவளை உதறிவிட்டு தன் கையை எடுத்தான் அவன், அந்த வேகத்தில் நித்திலாவின் நெற்றி காரின் ஓரத்தில் மோதி, லேசாக ரத்தம் கசிந்தது.
அவள் நெற்றியில் ரத்தத்தைக் கண்டதும், விக்ராந்தின் கண்கள் பதறின. சட்டென்று தன் கைக்குட்டையை எடுத்து, ரத்தம் வரும் இடத்தில் மென்மையாக அழுத்தினான்.
இவன் எதற்காக இவ்வளவு கோபப்பட்டான்? இப்போது ஏன் இத்தனை அக்கறை காட்டுகிறான்? ஒன்றும் புரியாமல் நித்திலா அவனை மிரட்சியுடன் பார்த்தாள்.
”ஸாரி பேபி… வலிக்குதா?” – விக்ராந்தின் குரல் இப்போது இளகியிருந்தது. ‘ஆமாம்… வலிக்குது! ஆனா நெத்தில இல்ல, இங்க வலிக்குது!’ எனத் தன் இதயத்தைத் தொட்டுக் காட்ட வேண்டும் போல இருந்தது அவளுக்கு..
”என்ன பேபி, இன்னமும் சூடா தான் இருக்கியா? நீ ஜில்லுன்னு ஆகுற மாதிரி ஒன்னு தரவா?” என அவன் குறும்புடன் அவள் இதழ்களை நெருங்க, நித்திலா தன் மொத்த பலத்தையும் திரட்டி அவன் மார்பில் கை வைத்துத் தள்ளிவிட்டாள்.
”இனி என் பக்கத்துல வந்தீங்க… அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்!” என நித்திலா விரல் நீட்டி எச்சரிக்க, அவளது கண்களில் தெரிந்த அக்னி விக்ராந்தையே ஒரு கணம் திகைக்க வைத்தது.
இருப்பினும் அவன் தன் குழைவான குரலில், “என்ன பேபி, இப்போதெல்லாம் ரொம்ப கோபப்படுற?” என்றான் எதையும் சட்டையை செய்யாதது போல.
”தயவுசெஞ்சு காரை வீட்டுக்கு விடுங்க!” அவள் எரிச்சலின் உச்சத்தில் சொல்ல, விக்ராந்த் அவளைச் சீண்டும் விதமாகப் புருவத்தை உயர்த்தி, “முடியாதுன்னா என்ன பண்ணுவ பேபி?” என்றான்.
“என்ன பண்ண முடியும்? என்னால உங்களை மீறி என்ன பண்ண முடியும்? எதுவும் பண்ண முடியாது… இதுதான் என் விதியில எழுதி வச்சிருக்கு போல!” எனத் தன் முகத்தைப் கரங்களில் புதைத்துக் கொண்டு குலுங்கி அழுதாள். அவளது அந்தத் தீராத அழுகை அன்று விக்ராந்தின் மனதை என்னவோ செய்தது. அவளுக்குள் இருக்கும் வலியின் ஆழம் அன்று அவனுக்குப் புரிந்ததோ என்னவோ, அதற்கு மேல் அவளிடம் வாதம் செய்யாமல் வண்டியை வீட்டை நோக்கித் திருப்பினான்.
அவர்கள் வீடு வந்து சேர்ந்தபோது இருட்டிவிட்டிருந்தது. வரவேற்பறையில் அமர்ந்திருந்த லட்சுமணன், இருவரையும் கண்டதும் “எங்கே போயிருந்தீங்க ரெண்டு பேரும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
தன் முகம் சிவந்திருப்பதையும், அழுத தழும்புகள் இருப்பதையும் மாமனார் பார்த்தால் பதறிவிடுவார், வீணாக அவருக்கு வேதனை தர வேண்டாம் என்று நினைத்த நித்திலா, எதற்கும் பதில் சொல்லாமல் விறுவிறுவெனத் தன் அறை நோக்கி நடந்தாள்.
நித்திலாவின் இந்த விசித்திரமான செயல் லட்சுமணனுக்கு ஏதோ நெருடலைத் தந்தது. “என்னடா ஆச்சு? உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா என்ன?” எனத் தன் மகனைச் சரியாகவே யூகித்துக் கேட்டார்..
விக்ராந்த் எதையும் மறைக்க முயலவில்லை. “ஹ்ம்ம்… பிரச்சனையாகவே இருக்கட்டுமே! அது எங்களுக்கு இடையில உள்ளது. அதை நினைச்சு வீணா நீங்க கவலைப்பட வேணாம். என் பொண்டாட்டியை எப்படிச் சமாதானப்படுத்தணும்னு எனக்குத் தெரியும்,” என்று மிக வெளிப்படையாகக் கூறிவிட்டு அவனும் அறை நோக்கி நடந்தான்.
விக்ராந்தின் அந்தப் பேச்சில் தெரிந்த அதிகாரமும், உரிமையும் லட்சுமணனுக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்தது. ‘தன் மகன் தன் வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்வான்’ என்ற எண்ணத்தில், அவர்களுக்குள் நடக்கும் அந்தப் போராட்டம் புரியாமல், ஒரு நிம்மதியான மனநிலையோடு அங்கிருந்து நகர்ந்தார் லட்சுமணன்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எல்லாம் விக்ராந்த் அப்பா னால வந்தது தான் … ஏன் இவன் இப்படிலாம் பண்றான் …
“நீ ஏன் என்ன புரிஞ்சுக்கணும், நான் உன்னை புரிஞ்சுகிட்டா போதும்” அடேய்! இத விட யாராலும் யாரையும் குழப்ப முடியாது டா ராசா.
அவளுக்கு நிரந்தரம் இல்லனா? உனக்கு மட்டும் நிரந்தரமா?
“நம்பலும் வெறுப்பேத்துவோம் அவனால பாதிப்படையாத மாதிரி காட்டிபோம்” அப்படின்னு என்ன என்னமோ சொன்னியே நித்தி இப்படி ஒரு FB kku கண்ணுல தண்ணி வெச்சுக்கிட்ட.
ஏது பொண்டாட்டியா? ஆறு மாச பொண்டாட்டினு சேர்த்து சொல்லுப்பா.