601 views

சுடர் 9

 

வழக்கம்போல நிரஞ்சன் வீட்டிற்குள் நுழையும் நேரம் அவனின் அலைபேசி ஒலித்தது. அன்று காலையிலிருந்த பதற்றம் அஷ்வினியின் தயவில் பெரிதும் குறைந்திருக்க, இப்போது அவனிற்கு வந்த அழைப்பில் முற்றிலுமாக குறைந்திருந்தது.

அதனுடன், முதல் நாள் கண்ட சிறுமியின் புகைப்படமும் நினைவிற்கு வர நமுட்டுச்சிரிப்புடனே அழைப்பை ஏற்றான்.

நிரஞ்சா…” என்று அழைத்த குரலுக்கு மறுமொழியாக, “நேத்து நீங்க அனுப்புன ஃபோட்டோ பார்த்தேன் சித்தி. எனக்கு ஓகே. அவங்களுக்கு ஓகேவான்னு கேட்டு, ஆக வேண்டியதை பாருங்க.” என்று கூற, மறுமுனையிலிருந்த கலைவாணி தான், தலையும் புரியாத வாலும் புரியாத நிலையில் இருந்தார்.

சில நொடிகளில் தன்னிலை அடைந்தவர், “என்ன டா சொல்ற? என்ன ஃபோட்டோ?” என்று கேட்டுக்கொண்டிருந்தவருக்கு அப்போது தான் நிரஞ்சன் கூறும் புகைப்படம் நினைவிற்கு வந்தது.

முதலில் மறுத்து பேசலாம் என்று நினைத்தவர், பின்னர் என்ன தோன்றியதோ அவனுடன் விளையாடும் எண்ணத்தில், “பரவாலையே, நான் கூட ஃபோட்டோ பார்க்க மாட்டேன்னு நினைச்சேன்!” என்று வியப்பாக கூறுவது போல் பேசினார்.

அவரின் பாசாங்கை புரிந்து கொண்டவனாக நிரஞ்சனும் அவருக்கு ஈடு கொடுத்து பேசினான்.

எல்லாம் உங்க மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு தான். அப்பறம் ஃபோட்டோ பார்த்ததும் பொண்ணு ரொம்ப பிடிச்சு போச்சு. அதான் நீங்க கேட்குறதுக்கு முன்னாடி நானே என் விருப்பத்தை சொல்லிட்டேன்.” என்று கூற, மறுமுனையில், “மத்த பொண்ணுங்க ஃபோட்டோ காட்டினா, பேருக்கு கூட அதைப் பார்க்காம பிடிக்கலைன்னு சொல்றது. இப்போ இந்த குட்டி பொண்ணு ஃபோட்டோவை பார்த்ததும் பிடிச்சுடுச்சா?” என்று கலைவாணி முணுமுணுத்தது நிரஞ்சனிற்கும் கேட்டது.

ஏதாவது சொன்னீங்களா சித்தி?” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு வினவ, “ச்சேச்சே அதெல்லாம் ஒன்னும் சொல்லல, நீயே பிடிச்சிருக்கு சொல்லிட்ட. அதான் எந்த முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணலாம்னு யோசிக்குறேன்?” என்று அவனிற்கு சற்றும் சளைக்காமல் பேசினார்.

சித்தி, எல்லாத்துலயும் ஜெட் வேகம் தான் போல! முதல்ல அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்கான்னு கேளுங்க.” என்று கூறும்போதே லேசாக சிரித்துவிட, அதைக் கண்டுகொண்டாலும், “அதெல்லாம் சின்ன பொண்ணு நம்ம சொல்றதை கேட்டுக்குவா. உன்னை மாதிரி தடிமாடுங்க தான், சொல்ற பேச்சைக் கேட்குறதே இல்ல.” என்று சந்தடி சாக்கில் அவனை குட்டவும் மறக்கவில்லை.

ஆஹான்…” என்று நிரஞ்சன் இழுக்க, அதற்குள் கலைவாணியின் கற்பனை எங்கெங்கோ சுற்றிவிட, அதற்குமேல் சிரிப்பைக்கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தே விட்டார்.

ஹப்பாடா, ஒருவழியா சிரிச்சாச்சா?” என்று வினவியபடி நிரஞ்சனும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டான்.

இன்னைக்கு என்ன சார் ரொம்ப நல்ல மூட்ல இருக்கீங்க போல?” என்று கலைவாணி சிரித்துக்கொண்டே வினவ, உடனே அஷ்வினியின் முகமே நினைவிற்கு வர அசட்டு சிரிப்பை உதிர்த்தன அவனின் இதழ்கள்.

கலைவாணி மட்டும் நிரஞ்சனின் முன்னே நின்றிருந்தால், அஷ்வினியை பார்க்க கூட செய்யாமல், அடுத்த முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்திருப்பாரோ என்னவோ

டேய் நிரஞ்சா, லைன்ல தான் இருக்கியா?” என்ற குரல் கேட்கவும் தான் சுயத்தை அடைந்தவன், “தண்ணி குடிச்சுட்டு இருந்தேன் சித்தி.” என்று ஏதோ கூறி சமாளித்தான்.

பின்பு, சிறிது நேரம் ஊர்க்கதைகளை பேசியவர், “இரு டா தாத்தா கிட்ட கொடுக்குறேன்.” என்று கூறியவர், மீண்டும் அலைபேசி வழியாக, “அப்பறம், எப்போ லீவு போடுறன்னு சொல்லிடுடா, பொண்ணு பார்க்க போகணும்ல.” என்று கூற, “சித்தி…” என்று முறைப்பாக கூற ஆரம்பித்து, பின்னர் சிரித்துவிட்டான்.

அடுத்து அலைபேசி தாத்தாவின் கைகளுக்கு இடம்மாறியது. சம்பிரதாய பேச்சு வழக்குகள் முடிந்த பின்னர், “ரொம்ப நாளைக்கு அப்பறம், இன்னைக்கு தான் உன் சித்தி முகத்துல சந்தோஷத்தை திரும்ப பார்க்குறேன் நிரஞ்சா. ஒருத்தனை இழந்து சோர்ந்து போயிருந்தவளுக்கு உன்னோட கல்யாண விஷயம் அவ்ளோ சந்தோஷம் கொடுத்திருக்கு!” என்றார் நிரஞ்சனின் தாத்தா.

நிரஞ்சனும் அதையே தான் சிந்தித்துக்கொண்டிருந்தான். இத்தனை நாட்கள் வெளியே சிரித்தாலும், உள்ளார்ந்த மகிழ்ச்சி இல்லாமல் இருந்தவர், சற்று நேரத்திற்கு முன்னர், நிரஞ்சனின் திருமண பேச்சின் போது எத்தனை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பேசினார் என்பதை நிரஞ்சனும் கவனித்துக்கொண்டு தானே இருந்தான்.

என்னோட கல்யாணம், சித்திக்கு இவ்ளோ நிம்மதி தருதுன்னா, இனிமே ரொம்ப நாள் தள்ளிப்போடக் கூடாது.’ என்ற உடனடி முடிவையும் எடுத்தான்.

நீங்க பேசுனதை நானும் கேட்டுட்டு தான் இருந்தேன் நிரஞ்சா, என்ன தான் விளையாட்டு பேச்சுனாலும், உனக்கு பொண்ணு பார்த்து முடிச்ச மாதிரியே பரபரப்பா இருக்கா! அவளை இனியும் ஏமாத்தாம, சீக்கிரம் நல்ல முடிவா சொல்லு நிரஞ்சா.” என்றார் அவர்.

ஒரு பெருமூச்சுடன், “அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே தாத்தா.” என்று முணுமுணுத்தான் நிரஞ்சன்.

ஆனால், நிரஞ்சனின் முணுமுணுப்பு தாத்தாவின் செவிகளை எட்டவே இல்லை. அதனால், அவனின் நல்லமுடிவு என்னவென்றும் தெரியாமல் போனது!

*****

அஷ்வின் தன்னிடம் ஏதோ தனியே பேச நினைக்கிறான் என்பதை உணர்ந்த அஷ்வினியோ அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொலைக்காட்சியே கதியென்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்கள் மட்டும் தான் தொலைக்காட்சியை வெறித்திருந்தன. கவனமோ அஷ்வின் கூறப்போகும் செய்தி என்னவென்ற யோசனையில் இருந்தது. இல்லையென்றால், எப்போதும் மாற்றிவிடும் செய்தி சேனலை, தன்னை மறந்து வெறித்துக்கொண்டிருப்பாளா என்ன!

அவர்களின் பெற்றோர் அறைக்கு செல்லும் வரை காத்திருந்த அஷ்வின் அவளிடம் தான் நினைத்ததை பகிரும் சமயம், அதிரும் பின்னணி இசையுடன், அந்த செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

நாட்டின் தலைநகரைப் போலவே மயிலக்குறிச்சியில் நிகழவிருந்த சம்பவம்! இறுதி நொடியில் தப்பித்த மூவர்! நரபலி, புனர்ஜென்மம் போன்றவற்றின் மீது ஏற்படும் அதீதநம்பிக்கையால், இவைப் போன்ற குற்றங்கள் இப்போது பெருகிவிட்டனவா! – அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்இன்று இரவு பத்து மணிக்குகாணத்தவறாதீர்கள்!

மீண்டும் அதிரும் பின்னணி இசையுடன் முடிந்தது அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரம். அதை கண்ட இருவரின் கண்களும் அதிர்ச்சியில் உறைந்திருந்தன. நொடியினில் இருவருமே உறைநிலையிலிருந்து வெளிவந்ததும், முதலில் கடிகாரத்தை தான் நோக்கினர்.

பத்து மணியாவதற்கு சில நிமிடங்களே இருக்க, இருவரும் ஒருவித பதற்றத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்திருந்தனர். அதில் கூடுதல் பதற்றம் அஷ்வினிக்கு தான்.

மயிலக்குறிச்சிஎன்ற ஊர் பெயரே அவர்களின் பதற்றத்திற்கு காரணம் என்று கூறினால் அது மிகையில்லை.

மயிலக்குறிச்சி’ – சமீபத்தில் அஷ்வினி கேட்க விரும்பாத பெயர். இப்போதும் கூட, அது அவள் இழந்ததை மீண்டும் மீண்டும் அவளின் நினைவிற்கு எடுத்துச்சென்று அவளைப் படுத்தி எடுக்கிறது தான். இருப்பினும், இப்போது அதைப் பற்றி தெரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தன் மனஉணர்வுகளை வெகுவாக கட்டுப்படுத்திக்கொண்டு அங்கு அமர்ந்திருந்தாள்.

தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு சில நொடிப்பொழுதுகள் மீதம் இருக்க, அந்த இடைவெளியிலும், ‘நேத்து அந்த கால் அட்டெண்ட் பண்ணியிருக்கணுமோ?’ என்று நினைக்க ஆரம்பித்து விட்டாள் அஷ்வினி. முதலில் லேசாக தோன்றிய குற்றவுணர்வு இப்போது பூதாகரமாக வளர்ந்து நின்றது.

அந்த ஊர்ல அவங்க குடும்பம் மட்டும் தான் இருக்கா?’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

ஆனால், அந்த சமாதானம் எல்லாம் சில நிமிடங்கள் வரை தான். சரியாக பத்து மணிக்கு அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பிக்க, சில நொடிகளிலேயே அந்த செய்தி, முதல் நாள் அவளின் எண்ணிற்கு ஓயாது அழைப்பு விடுத்த மாயா சம்பந்தப்பட்டது தான் என்பதை அறிந்து கொண்டாள் அஷ்வினி.

தெரிந்த விஷயம் சிறிதும் உவப்பானதில்லை என்பது அவளின் கசங்கிய முகத்திலேயே நன்கு வெளிப்பட்டது.

அதன் பின்னர், தொலைக்காட்சியில் பேசப்பட்ட எதுவும் அவளின் மூளைக்குள் பதியவே இல்லை.

ஒரு இக்கட்டான சூழ்நிலைல என்னை கூப்பிட்டிருக்கா, அதைக்கூட புரிஞ்சுக்காம, இப்படி வந்த கால்ஸை கட் பண்ணி விட்டுருக்கேன்! ச்சே, நானா இப்படி? அவ இத்தனை முறை கூப்பிடும் போதே, ஏதோ முக்கியமான விஷயம்னு தெரிய வேண்டாம். எல்லாம் என்னால தான்.’ என்று அதை எண்ணி எண்ணியே மறுகிக்கொண்டிருந்தாள் அஷ்வினி.

அந்த செய்தியைக் கண்ட அஷ்வினிற்கும் அதே அளவிலான அதிர்ச்சியே! அந்த அதிர்ச்சியில் உறைந்ததனால் தான், அஷ்வினியின் திகைத்த தோற்றம் அவன் கவனத்தில் படவில்லை.

இன்னும் அந்த தொலைக்காட்சியிலேயே கண்களைப் பதித்திருந்தவனிற்கு, “எல்லாம் என்னால தான்!” என்று மெல்லிய புலம்பல் ஒலி கேட்க, அப்போது தான் அருகிலிருந்தவளைக் கண்டான்.

கைகளில் தலையை வைத்து, கீழே குனிந்தவாறு அமர்ந்திருந்தவளின் புலம்பல் மட்டும் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.

ஷிட், இவளைக் கவனிக்க மறந்துட்டேனே!” என்று தலையில் அடித்துக் கொண்டவன், “அஷு, இங்க பாரு, நிமிர்ந்து என்னைப் பாரு. அஷு, நான் பேசுறது கேட்குதா?” என்று பல முறை குரல் கொடுத்தும், அவள் நிமிர்ந்த பாடில்லை.

அவன் குரலிற்கு எதிர்வினையாக அவளின் குரலும் உயர்ந்து ஒலித்தது. அஷ்வினோ என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினான்.

மீண்டும் மீண்டும் அவள், “என்னால தான்!” என்று கூறிக்கொண்டே இருக்க, “இல்ல டா, இதுக்கு நீ எப்படி காரணமாவ?” என்று அஷ்வின் பல முறை பல விதமாக கூறினாலும், அவளிடம் எவ்வித மாற்றமும் காணப்படவில்லை.

இதற்கு மேல் சத்தமாக பேசினால், எங்கு உறங்கச் சென்ற பெற்றோருக்கு கேட்டுவிடுமோ என்று வேறு பயமாக இருந்தது. ஏற்கனவே, கவலையில் இருப்பவர்களை மேலும் வருத்தமடைய செய்ய வேண்டாம் என்று நினைத்தான்.

அதனால், தன்னால் முடிந்தவரை அஷ்வினியின் கவனத்தை திசை திருப்ப முயன்றான்.

ஆனால், அதில் அவனால் ஒரு சதவிகிதம் கூட வெற்றிபெற முடியவில்லை என்பதே உண்மை. மாறாக, அவளின் புலம்பல் குரல், அவர்களின் தந்தை தாயை எட்டியிருக்க, அவர்களின் அறையிலிருந்தே, என்னவென்று விசாரித்தனர்.

இதற்குமேல் இங்கிருந்தால் வெளியே வந்துவிடுவார்களோ என்று எண்ணிய அஷ்வின், “ஒன்னுமில்ல ப்பா, இவ தூக்கத்துல உளறிட்டு இருக்கா. நான் மேல கூட்டிட்டு போறேன். நீங்க படுங்க.” என்று இருந்த இடத்திலிருந்தே கூறியவன், அஷ்வினியை கைகளில் ஏந்திக்கொண்டான்.

இப்போது கூட அவளின் வாய் அதே ஜெபத்தை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருக்க, அவளின் கண்களோ இறுக்க மூடப்பட்டிருந்தன. அவளின் நிலையைக் கண்டு ஒரு பெருமூச்சுடன், அவளின் அறை நோக்கி நடந்தான்.

அஷ்வினி, தன்னை மறந்த நிலையில் தூங்கும் வரை அவளின் கட்டிலிலேயே அமர்ந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனின் நினைவோ, முதலில் இது போல அவள் நடந்து கொண்ட தினத்திற்கு சென்றது.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், அஷ்வினியின் கண்முன்னே நிகழ்ந்த அந்த சம்பவத்தினால், அவளின் மனம் மிகுந்த பாதிப்படைய, அப்போதிருந்து தான் அவளிற்கு இந்த பிரச்சனை ஆரம்பமானது.

மிகுதியான அதிர்ச்சி ஏற்படும் போது, அவள் தன் கட்டுப்பாட்டை இழந்து, இப்படி பித்து பிடித்ததை போல நடந்து கொள்வாள்.

முன்னர், அடிக்கடி நிகழும் இவைப் போன்ற நிகழ்வுகள், மருத்துவர்களின் ஆலோசனைகளாலும் மருந்துகளாலும் குறைந்து வந்தன. சமீபத்தில், இது போன்று அவள் நடந்து கொள்ளவில்லை என்றும் அதிலிருந்து மீண்டுவிட்டாள் என்றும் சில நாட்களுக்கு முன்னர் தான் தந்தையிடம் கூறியிருந்தான் அஷ்வின்.

ஆனால், இன்று இப்படி ஒரு சம்பவத்தை அவனே எதிர்பார்க்கவில்லையே!

அவன் பேச வந்தது என்ன, நடந்து கொண்டிருப்பது என்ன?

சிறிது நேரம் உடன்பிறந்தவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் உறங்கியது தெரிந்ததும், அதே அறையில் கீழே போர்வையை விரித்து படுத்துக் கொண்டான்.

படுத்தும் தூக்கம் வராமல் மனதிற்குள்ளே, அடுத்த நாள் அஷ்வினியிடம் எப்படி பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக்கொண்டான்.

ஆம், ஒத்திகையே.. அஷ்வினி இப்போது இருக்கும் நிலைமையில், சிறிது பிசகினாலும் அதன் விளைவு என்னவென்று கணிக்க முடியாததாகி விடும் என்று அஞ்சினான்.

ஒருபுறம் உடன்பிறந்தவள், மறுபுறம் அவள்இடையில் மாட்டிக்கொண்டு செய்வதறியாது விழித்தான் அவன்!

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 நேத்தே போட வேண்டிய எபி, கொஞ்சம் தாமதமாகிடுச்சு…😁😁😁 யாருக்கு யார் ஜோடின்னு ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா..? சாகர் – யாருப்பா இவன்னு தேடிட்டே இருக்கீங்களா..? இதோ இந்த எபில கூட சில க்ளூஸ் இருக்கு… படிச்சுட்டு உங்க கெஸ்ஸை கமெண்ட்ல சொல்லுங்க…😍😍😍

உங்க கமெண்ட்ஸை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்க வானவில் ராக்கெட்🌈🔥

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  12 Comments

  1. Archana

   மாயாக்கு-அஷ்வின், நிரஞ்சனுக்கு வினி, அக்ஷைக்கு ஜெனி இதான் டா எனக்கு தோன்றியே பேர் ஆர்டரு😆😆😆 90% சதவீதம் இதுவா இருந்தாலும் 10% தெரிலே😝😝.

  2. Sangusakkara vedi

   Achooo pavam sagar sethutana…. Antha car ethi thn konnangala…. Pavam maya …. Maya va ninachu thn ashwin feel pannunan pola…. One side love ah … Athn aven room ku yarayum vidurathu ilaya….. Ipdi kutty epi kuduthu emathitingale pa….

   1. vaanavil rocket
    Author

    Aama pavam sagar😑😑😑 One side love ah irukumo🤔🤔🤔 Next time periya epi ah potudalam sis😊😊😊

  3. Maya dha sahar ah niranjan um andha narabali la padhikkapattu irukuradha sonnane maya dha ashwini ku call pannadha. Niranjan ku ashwini ashwin ku maya va ila jeni ah pair waiting for nxt ud sis

   1. vaanavil rocket
    Author

    Unga questions ku ellam next epi la konjam clarification kedaikum nu nenaikiren sis😊😊😊 Next epi potuten padichutu vanga me waiting😍😍😍

  4. Janu Croos

   அப்போ அஷ்வினிக்கு ஃபோன் பண்ணது மாயா தானா!! மாயா மேல அஷ்வினிக்கு என்ன கோவம்….ஏன் அவள் ஃபோன் பண்ணும் போது அத அவள் எடுக்கல….
   நிரஞ்சனோட சித்தியோட பையன் தான் சாகரா…ஈவன் மாயாவ லவ் பண்ணி இருக்கான்….அதனால மாயாவோட வீட்டாளுங்க அவன ஏதோ பண்ணிட்டாங்க…அந்த கோபத்தால தான் நிரஞ்சன் அவங்கள பழிவாங்க அவங்கள கடத்தி வச்சிருக்கான்…. அப்போ மாயாவும் அவளோட தம்பி தங்கச்சியும் இப்போ யாரோட பாதுகாப்புல இருக்காங்க?
   சாகருக்கு நடந்தத அஷ்வினி பாத்திருக்காளா? அதனால தான் அவளுக்கு இப்படி உடம்புக்கு முடியாம ஆச்சா?
   அஷ்வின் எத பத்தி அஷ்வினி கிட்ட பேச வந்தான்….
   அவன் யோசிக்குற மத்த பொண்ணு மாயா தானா? எல்லாம் மர்மமாவே இருக்கே….

   1. vaanavil rocket
    Author

    Ashwini ku phone parandhu maya ve dhan😊😊😊 Ashwini ku maya mela ena kobam nu ini vara epi la therinjupom😁😁😁
    Sagar niranjan oda brother ah irukumo🤔🤔🤔
    Nice guess es unga ella questions kum ini vara epi la answers irukum…😁😁😁

  5. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.