623 views

சுடர் 8

முகத்தில் தெளித்த நீர் அவளிற்கு சிறிது தெளிவை கொடுத்தது போலும், அதே தெளிவுடன் ஓய்வறையிலிருந்து தன் சிற்றறைக்கு வந்தாள் அஷ்வினி.

அங்கு ஜெனி அவளின் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க, அவளருகே சென்று நின்றாள் அஷ்வினி. ஆனால், அவளை சிறிதும் கண்டுகொள்ளவில்லை ஜெனி.

இவர்களின் நாடகத்தை கண்ட அக்ஷய், “எதுக்கு இப்படி எரேசர் திருடுன எல்.கே.ஜி பாப்பாஸ் மாதிரி முறைச்சிட்டு நிக்கிறீங்க?” என்று வினவினான்.

எதுக்கு இப்போ தேவையில்லாம நீ ஆஜராகுற? எங்க பிரச்சனை இருக்குன்னு தேடிப்பிடிச்சு உன்னை சால்வ் பண்ண சொன்னாங்களா?” என்று கடிக்காத குறையாக ஜெனி அவனைக் கடிய, ‘ஆத்தி ராங் டைம்ல என்ட்ரி கொடுத்துட்டோம் போலவே!’ என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து ஜகா வாங்கினான் அக்ஷய்.

ப்ச் ஜெனி டார்லு, எதுக்கு இவ்ளோ கோபமா இருக்க?” என்று இதுவரையில் நடந்ததிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போல அஷ்வினி பேச, “ஆஹான், நான் எதுக்கு கோபமா இருக்கேன்னு உனக்கு தெரியாது, அப்படி தான?” என்று பதில் கேள்வி கேட்க, தலையை நாலாபக்கமும் உருட்டினாள் அஷ்வினி.

அதில் லேசாக சிரிப்பு வந்தாலும், அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு முறைத்த ஜெனியின் இதழோரங்களை இழுத்துப் பிடித்து, “சிரிப்பு வந்தா சிரிச்சுடனும் ஜெனி டார்லு.” என்றாள் அஷ்வினி.

அது என்னடி இப்போ மட்டும் டார்லு?” என்று ஜெனி வினவ, “பின்ன, சும்மா சும்மா கூப்பிட நீ என்ன என் பாய் பிரெண்டா? வெறும் பிரெண்டு தான.” என்று கண்ணடிக்க, “அடிப்பாவி!” என்ற முணுமுணுப்புடன் ஜெனி திரும்ப, அங்கு சிற்றறை தடுப்பில் சாய்ந்தவாறு நின்றிருந்தான் நிரஞ்சன்.

அவனைக் கண்டதும் ஜெனி மாட்டிக்கொண்ட முகபாவனையுடன் எழுந்து நிற்க, அதுவரையிலும் தன் பின்னே யார் இருக்கிறார்கள் என்று கண்டுகொள்ளாத அஷ்வினி மேசையிலிருந்த தண்ணீர் போத்தலை வாயில் சரித்தபடி, “மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும் ஜெனி.” என்று வாயாடினாள்.

அப்போது அங்கு வந்த அக்ஷய், “என்ன பாஸ் லீவுன்னு மெயில் பண்ணிட்டு இப்போ வந்துட்டீங்க?” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றான்.

பாஸ் லீவு வந்துட்டீங்களா?’ என்று மின்னல் வேகத்தில் செயல்பட்ட அஷ்வினியின் மூளை, தகவலை மற்ற பாகங்களுக்கு பரப்ப, அதன் தாக்கமாக வாயில் சரித்த நீரை எதிரில் வந்து நின்ற அக்ஷையின் மேல் துப்பியபடி எழுந்து நின்றாள்.

உன் பக்கத்துல வந்து நின்னது ஒரு குத்தமா?’ என்று மனதிற்குள் புலம்புவது அக்ஷய் தவிர யாராக இருக்க முடியும்..!

ஹ்ம்ம், ரொம்ப போர் அடிச்சது, அதான் உங்க பிரெண்டுக்கு ரொம்ப டைம் இருக்குமே, இன்னும் கொஞ்சம் வேலையை கொடுக்கலாம்னு வந்தேன்.” என்று கூறினான் நிரஞ்சன். பதில் அக்ஷையின் கேள்விக்கான இருப்பினும், பார்வை அஷ்வினியிடத்திலிருந்து சிறிதும் விலகவில்லை.

அப்பறம் மிஸ். அஷ்வினி, பாய் பிரெண்ட் பத்தி சீரியஸான டிஸ்கஷன் போயிட்டு இருந்துச்சு போல?” என்று நக்கலாக நிரஞ்சன் வினவ, ஏற்கனவே முதல் நாள் தான் செய்து முடித்த வேலைகளை பார்வையிடாமல் சென்றதால் அவன் மீதுள்ள கோபத்தில், “சீரியஸா டிஸ்கஸ் பண்ணலையே, சும்மா கேசுவலா தான் டிஸ்கஸ் பண்ணோம்.” என்றாள் அஷ்வினி.

அவளின் பதிலில் புருவம் உயர்த்தியவன், “நேத்து பண்ண டிஸ்கஷன்ல இருக்க எல்லாமே முடிச்சுட்டீங்க போல, புதுசா வேற டிஸ்கஷன் ஆரம்பிச்சுருக்கீங்க.” என்று வேண்டுமென்றே நிரஞ்சன் வினவ, ‘இவன் ஒருத்தன், ஒரே ஒரு மீட்டிங்கை நடத்திட்டு ஓராயிரம் வேலை சொல்லுவான்!’ என்று நினைத்தாள்.

உன் மைண்ட்வாய்சை நான் கேட்ச் பண்ணிட்டேன்.” என்று அருகிலிருந்த அக்ஷய் முணுமுணுக்க, “சும்மா இரேன் டா.” என்று சலித்துக்கொண்டே கூறினாள் அஷ்வினி.

ஹலோ, நான் இங்க கேள்வி கேட்டுட்டு இருக்கேன்.” என்று அக்ஷய் அஷ்வினி இருவரின் உரையாடலை நிரஞ்சன் கலைக்க, “உங்களுக்கும் அதே பதில் தான்.” என்று ஒரு ஃப்லோவில் கூறியிருந்தாள் அஷ்வினி.

வாட்?” என்று அதிர்ச்சியாக நிரஞ்சன் வினவ, “அது, முன்னாடி சொன்ன மாதிரி அதே பதில் தான், சும்மா கேசுவலா அந்த வேலையை முடிச்சுட்டேன்னு சொன்னேன்.” என்று சமாளித்து வைத்தாள்.

அவளிடம் நம்பாத பார்வை ஒன்றை செலுத்திவிட்டு, “இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல என் கேபினுக்கு வாங்க. அதை ரிவியூ பண்ணிடலாம்.” என்று கூறிவிட்டு தன்னறைக்கு சென்றான் நிரஞ்சன்.

அவன் அங்கிருந்து நகர்ந்ததும் ஆசுவாசமாக அந்த சுழல்நாற்காலியில் அமர்ந்தவள், “இவருக்கு என்னைப் பார்த்தா எப்படி தெரியுதாம்?” என்று கூறியபடி கண்களை மூடிக்கொண்டாள்.

ம்ம்ம் பலியாடு மாதிரி தெரிஞ்சுருக்கும்!” என்று அக்ஷய் கூற, ஜெனி அவனுடன் ஹைஃபைஅடித்துக்கொண்டாள்.

உள்ள போயிட்டு வந்து உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்குறேன்.” என்றபடி மீண்டும் அவனை சந்திக்க சென்றாள்.

*****

அவளை வர சொல்லிவிட்டு உள்ளே சென்றவனோ சிரித்துக்கொண்டிருந்தான். அவன் அலுவலகம் வந்தபோது இருந்த மனநிலைக்கும் இப்போதுள்ள மனநிலைக்கும் எத்தனை வித்தியாசம் என்று அவனே ஆச்சரியத்துடன் எண்ணிப்பார்த்தான்.

உன்னை கூட கூட்டிட்டு சுத்துனா டென்ஷனே இருக்காது போல.” என்று அவன் முணுமுணுக்க, ‘அதான் அவளை டென்ஷன் படுத்தி, அதை ரசிச்சுட்டு இருக்கியே! மவனே, ஒருநாள் மொத்தமா சேர்த்து கும்ம போறா பார்த்துக்கோ.’ என்று அவனின் மனசாட்சி பதில் கூறியது.

அதான் இன்னைக்கே மேடம் வாய் வரைக்கும் வந்துடுச்சே.” என்று நினைத்துப்பார்த்து மீண்டும் சிரித்தான்.

சரியாக அதே நேரம், கதவை சம்பிரதாயமாக தட்டிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்த அஷ்வினிக்கு காண கிடைத்தது நிரஞ்சனின் சிரித்த முகமே.

பார்றா, ரோபோ சிரிக்கவெல்லாம் செய்யுது! ஹ்ம்ம், சிரிச்சா நல்லா தான இருக்கு. ஆனா, சரியான உம்மணாமூஞ்சி, முகத்துல டன் கணக்கா கடுப்பை வழியவிட்டுட்டு தான் எந்நேரமும் இருக்குறது.’ என்று மனதிற்குள் அவனை வசைப்பாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது சற்று சுதாரித்த நிரஞ்சன், தன் அறை வாசலில் நிழலாடுவதை உணர்ந்து திரும்பிப் பார்க்க, சட்டென்று அவன் திரும்புவான் என்று எதிர்பாராததால், முகத்தில் எவ்வித பாவனையைக் கொண்டு வருவது என்று தெரியாது முழித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் அந்த முழிப்பையும் ரசித்தவாறு, “என்ன மிஸ். அஷ்வினி, வெளியவே நின்னு கனவு காணப்போறதா உத்தேசமா?” என்று வினவ, “வரேன் வரேன்.” என்று வாய்க்குள் முனகிக் கொண்டே உள்ளே நுழைந்தாள்.

அதன்பின்பு அவர்களின் நேரம் வேலையில் கழிந்தது. மற்ற நேரம் பேசும் நக்கல் பேச்சில்லாமல், அஷ்வினி செய்த வேலைகளின் நிறை குறைகளை சுட்டிக்காட்டி நிரஞ்சன் பேச, அஷ்வினிக்கும் நேரம் நன்றாகவே சென்றது.

*****

நிரஞ்சனின் அறைக்குள்ளிருந்து சாதாரணமாக வெளியே வந்த அஷ்வினியை கண்ட அக்ஷய், “என்ன இவ முகத்துல கோபத்துக்கான எந்த தடயமும் காணோம்?” என்று ஜெனியிடம் கூற, “ஏன் டா உனக்கு இப்படி ஒரு கவலை? அவளே எப்போயாச்சும் தான் அமைதியா இருக்கா, அது உனக்கு பொறுக்கலையா?” என்றாள் ஜெனி.

ஹா, அப்போ தான் கொஞ்சம் என்டர்டெயின்மெண்ட்டா இருக்கும்!” என்று சிரித்தான் அக்ஷய்.

ஹே என்ன என்னைப் பத்தி தான் பேசுறீங்களா?” என்றவாறே வந்தாள் அஷ்வினி.

ஆமா ஆமா, உன்னைப் பத்தி தான் பேசுறோம். இங்க ஒருத்தருக்கு உன்னை கோபமா பார்க்க தான் பிடிச்சுருக்காம். அப்போ தான் என்டர்டெயினிங்கா இருக்குமாம்.” என்று அக்ஷயை போட்டுக்கொடுக்க, மீண்டும் ஒரு சண்டை அங்கு ஆரம்பமானது.

அதன்பின்னர், ஜெனியுடன் தனியே பேச நேரம் கிடைக்கும்போது, “யோசிச்சு பார்த்தா, எனக்கே நேத்து கால் கட் பண்ணது டூ மச்சோன்னு தோணுது.” என்றாள் அஷ்வினி.

விடு வினி, முடிஞ்சதை நினைச்சு ஃபீல் பண்ணாம, இனிமேலாவது அவகிட்ட நல்லபடியா பேசுஇதுக்கெல்லாம் காரணம் அவ இல்லஇன்ஃபேக்ட் அவளும் இங்க விக்டிம் தான்…” என்று அறிவுறுத்தினாள் ஜெனி.

ஜெனி கூறியதை ஏற்பதை போல் தலையசைத்தவளிற்கு தெரியவில்லை, அவள் பேச வேண்டிய காலம் கடந்துவிட்டது என்பது.

*****

முதல் நாள் தாமதமாக சென்றதையடுத்து, அன்று சற்று சீக்கிரமாக கிளம்பியது அஷ்வினியின் குழு.

செல்லும்முன் அஷ்வினின் அறைக்கு வந்தவள், “டேய் அண்ணா, வழக்கம் போல ஆப்போசிட்ல இருக்க காஃபி ஷாப்ல இருக்கோம்போறப்போ பிக்கப் பண்ணிட்டு போயிடு.” என்று கூறினாள்.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், “என்ன இன்னைக்கு எந்த வேலையும் கொடுக்கலையா உன் பி.எம்?” என்று அஷ்வின் வினவ, “உனக்கென்ன அதுல அவ்ளோ வருத்தம்! ஹ்ம்ம், நேத்து நான் செஞ்ச வேலைல இம்ப்ரெஸ்ஸாகிட்டாரு போல.” என்று அவள் உடையில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.

அப்படி இருக்காது மை டியர் குட்டிச்சாத்தான், ஏற்கனவே நேத்து நீ பண்ண குளறுபடியையே எப்படி சரி பண்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருப்பாரா இருக்கும். இதுல புதுசா ஒன்னு கொடுத்து, அதையும் சொதப்பி வச்சுட்டேனா? அதான் எந்த வேலையும் கொடுக்காம இருப்பாரா இருக்கும்.” என்று உண்மை அது தான் என்று தெரியாமலேயே அஷ்வின் கூற, “டேய் அண்ணா, நீ எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்.” என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள்.

சரி சரி கிளம்பு நான் வேலையை முடிக்கணும்.” என்று அஷ்வின் கூற, அவனிற்கு அளவம் காட்டிவிட்டு அவ்வறையை விட்டு வெளியே வந்தாள்.

*****

அடுத்து அஷ்வினியின் குழு சென்ற இடம், அவர்களின் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கடைக்கு தான்.

ஷப்பா, ஒருநாள் இங்க வரலைன்னாலும் ரொம்ப நாளான மாதிரி இல்ல.” என்றவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் அக்ஷய். அவனைத் தொடர்ந்து பெண்களும் அமர, அவர்களை கடந்து சென்ற அக்கடையின் பணியாளர், “வந்துட்டாங்க, ஒரு காஃபி கூட வாங்காம, சும்மா உட்கார்ந்து அரட்டை அடிக்கன்னே வருவாங்க.” என்றார்.

அது அக்ஷயின் காதில் விழ, “ஹலோ வெயிட்டர், இங்க வாங்க.” என்று அவரை அழைத்தான்.

இவன் எதுக்கு கூப்பிடுறான்..?’ என்று அந்த பணியாளர் மட்டுமல்ல, இரு பெண்களும் கூட யோசிக்க, அவனோ அவரிடம், “ஒன் கிளாஸ் வாட்டர் பிளீஸ்.” என்றான்.

அவரோ, ‘இன்னைக்காவது நீ ஏதாவது வாங்கிடுவியோன்னு நினைச்சேன்!’ என்ற பார்வையை வீசியபடி செல்ல, அக்ஷயோ ஏதோ விருது வாங்கியதைப் போல முகத்தை வைத்துக்கொண்டிருந்தான்.

ச்சை, எக்ஸ்ப்ரேஷனை முதல்ல மாத்துடா, பார்க்க முடியல.” என்ற ஜெனி, “அவரே பாவம். ஒவ்வொரு நாளும், ஏதாவது ஆர்டர் பண்ணிடுவோமான்னு பார்த்துட்டு இருக்காரு, அவருக்கிட்ட வம்பிழுத்துட்டு இருக்க!” என்றாள்.

சரியான ரூல்ஸ் ரெங்கம்மாவா இருக்காளே, எங்க இருந்துடா பிடிச்ச?” என்று அஷ்வினி வினவ, அவளை அடித்த ஜெனி, “இப்போ என்ன அவரை விட்டு என்னை கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களா?” என்று சலித்துக்கொண்டாள்.

இரு பெண்களும் பேசிக்கொண்டிருக்க, அக்ஷயை கண்டுகொள்ள தான் யாருமில்லை. அப்படியே கண்டிருந்தாலும், அவன் அவர்களை கவனித்திருக்க மாட்டான். அவன் கவனம் தான் வேறெங்கோ சென்றுவிட்டதே!

சரியாக அதே சமயம் அங்கு வந்த அந்த கடையின் பணியாளர், அக்ஷயின் முன் டம்மென்று தண்ணீர் குவளையை வைக்க, கனவிலிருந்து நினைவிற்கு திரும்புபவன் போல விழித்தான் அக்ஷய்.

அவனைத் தான் மற்ற இரு பெண்களும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதுங்க முழியே சரியில்லையே!” என்று முணுமுணுத்தவன், அவர்களின் பார்வையிலிருந்த கேள்வியிலிருந்து தப்பிக்க வேண்டி என்ன செய்வதென்று சுற்றிலும் நோட்டம் விட, ‘தேல் பத்திரி சிங்என்று பி.ஜி.எம் அவன் மனதிற்குள் ஒலிக்க, அதற்கு காரணமானவராக மீண்டும் அவன் பார்வை படுமிடத்தில் நடமாடிக்கொண்டிருந்தார் அந்த பணியாளர்.

அவரைக் கண்டதும் அக்ஷயால் சிரிப்பைக் கட்டுபடுத்த முடியவில்லை. ‘நானே போதும்னு நினைச்சாலும், நீங்களா வாலண்டியரா கண்ணு முன்னாடி வந்துடுறீங்களே மிஸ்டர். வெயிட்டர்!’ என்று நினைத்தவன் அவரை அழைத்தான்.

இப்போ என்னத்துக்கு கூப்பிடுறான்?’ – அவர் வெளியில் கூறவில்லை என்றாலும், இதை தான் நினைத்திருக்க வேண்டும் என்று அங்கிருந்த மூவருக்குமே தெரிந்திருந்தது.

நடக்கப்போகும் உரையாடலுக்காக சுவாரசியத்துடன் பெண்கள் காத்திருக்க, அக்ஷயோ தோரணையாக, “க்கும், மெனு கார்ட் பிளீஸ்.” என்று கேட்டான்.

ஆர்டர் பண்ணாதவனுக்கு மெனு கார்ட் ஒன்னு தான் குறைச்சல்!” என்று இப்போது அவர் முணுமுணுத்தவாறே, அவன் கேட்டதை எடுத்து தர, அக்ஷயோ சாவகாசமாக அதை வாங்கி விசிறிக்கொண்டான்.

கூடவே, “உஃப், ஒரு ஏ.சி மாட்டுனா நல்லா இருந்துருக்கும்ல?” என்று ஏற்கனவே கடுப்பாக இருந்தவரை மேலும் வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

ஏன், உன் பெட்டி, படுக்கை எடுத்துட்டு வந்து இங்கயே செட்டில் ஆகிடவா?” என்று அக்ஷய்க்கு கவுண்டர்கொடுத்தவாறே உள்ளே நுழைந்தான் அஷ்வின்.

அவர்கள் அமர்ந்திருந்த மேசையிலிருந்த காலியான நாற்காலியில் அமர்ந்தவன், அங்கிருந்த பணியாளரிடம், “நாலு காஃபி.” என்றவன், பின்னர் மீண்டும், “மூணு காஃபி, ஒரு ஜிஞ்சர் டீ.” என்று கூறிவிட்டு ஜெனியை பார்க்க, அவளும் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

ஹலோ அது என்ன அவளுக்கு மட்டும் ஸ்பெஷல்? நாங்களும் அந்த ஜிஞ்சர் டீயை குடிப்போம், எங்களுக்கும் வாங்கி கொடுக்கலாம்.” என்று அஷ்வினி வினவ, இம்முறை அக்ஷய் அவளுடன் சேர்ந்து கொண்டான்.

அவளுக்கு ஸ்பெசிஃபிக்கா அது பிடிக்குங்கிறதால அதையே ஆர்டர் பண்ணேன். உங்க ரெண்டு பேருக்கும் எதுன்னாலும் ஓகே தான?” என்று கிண்டல் செய்ய, “இந்த அவமானம் நமக்கு தேவையா?” என்ற ரீதியில் மற்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

இந்த கலாட்டா, அவர்கள் பானத்தை பருகி முடித்து, அதற்கான தொகையை செலுத்தும் வரை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

அந்த பணியாளர் வேண்டுமென்றே ரசீதை அக்ஷயிடம் கொடுக்க, அதை வாங்கி அஷ்வினிடம் கொடுத்து, “இங்க காசு ஸ்பெண்ட் பண்ண கூடாதுன்னு கோட்பாட்டோட இருக்கேன்.” என்று கூற, அந்த பணியாளருடன் சேர்த்து நான்கு பேரும் அவனை முறைத்தனர்.

இங்க சாப்பிட மாட்டேன்னு எல்லாம் கோட்பாடு வச்சுக்க மாட்டீங்களோ?” என்று பணத்தை செலுத்திக்கொண்டே அஷ்வின் வினவ, “நான் சாப்பிட மாட்டேன்னு சொன்னா, நீங்க வருத்தப்படுவீங்கள!” என்று நல்லவனை போல அக்ஷய் பதிலளிக்க, “தயவுசெஞ்சு எக்ஸ்ப்ரேஷனை மாத்து!” என்று இம்முறை பெண்கள் இருவருமே கூறினர்.

ஒருவழியாக அவர்களிடமிருந்து விடைபெற்று வீடு திரும்பினர் அஷ்வின் மற்றும் அஷ்வினி.

*****

வீட்டிற்கு வந்ததும் வழக்கம்போல, அஷ்வின் அவனறைக்கு சென்று விட, நிரஞ்சனின் விடுமுறையிலிருந்து ஆரம்பித்து, தேநீர்க்கடையில் நடந்த கலாட்டா வரை அபிநயங்களுடன் தந்தை மற்றும் தாயிடம் கூறி முடித்தாள் அஷ்வினி. இடையில், அவள் தவிர்த்த அந்த அழைப்பை பற்றி மட்டும் கூறவில்லை.

உன்னை எப்படி தான் அந்த தம்பி சமாளிக்குதோ?” என்று இன்ஸ்டன்ட்தம்பியாகிப் போன நிரஞ்சனிற்கு ஆதரவாக சித்ரா பேச, அவருக்கு ஒரு முறைப்பை பரிசாக தந்துவிட்டு, தான் சொல்வதிற்கெல்லாம் தலையாட்டும் தந்தையிடம் பேச ஆரம்பித்துவிட்டாள் அஷ்வினி.

அஷ்வின் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு கீழே வந்தபோது கூட, இவர்களின் கூட்டணியை கலையவில்லை.

அஞ்சு நிமிஷத்துல ட்ரெஸ் மாத்திட்டு வந்தா தான் நைட் சோறு.” என்று சித்ரா திட்டிய பின்னர் தான், மனதேயில்லாமல் அஷ்வினி அவ்விடத்தை விட்டு எழுந்தாள்.

மூன்றே நிமிடங்களில் மீண்டும் கீழே வந்தவள், “இப்பவும் தோசையா?” என்றபடி வந்து அமர, “வகைவகையா வேணும்னா, அவங்கவங்களே சமைச்சுக்கோங்க!” என்ற சித்ராவின் குரலில், ‘கப்சிப்பென்று அடங்கிப்போக, அஷ்வின் அவளைப் பார்த்து சிரித்தான்.

ம்மா, இப்போ சொன்னது பொண்ணுங்களுக்கு மட்டுமா, இல்ல பசங்களுக்குமா?” என்று அஷ்வினை பார்த்துக்கொண்டே சமையலறையில் இருக்கும் சித்ராவிடம் கேட்க, “இதுல என்ன பசங்க பொண்ணுங்க? உங்க அப்பாவுக்குமே இது தான் கண்டிஷன்!” என்றுவிட, இப்போது இளையவர்கள் இருவரும் தந்தையை நோக்கி சிரித்துக்கொண்டிருந்தனர்.

உங்க சண்டைக்கு நான் ஊறுகாயா?” என்று பாவமாக விழித்தார் சரவணன்.

இரவுணவிற்கு பின்னர், சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பெரியவர்கள் இருவரும் படுக்கச்செல்ல, அதிசயமாக நடுகூடத்தில் அமர்ந்திருந்த அஷ்வினை ஆச்சரியமாக நோக்கினாலும், எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை அஷ்வினி. தொலையியக்கியின் மூலம் சேனல்களை மாற்றிக்கொண்டு தொலைக்காட்சியில் கவனத்தை வைத்திருந்தாள் அவள்.

அஷ்வினும் அவளிடம் தனியே பேசுவதற்கான சூழலை தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

சரவணனும் சித்ராவும் அவர்களின் அறைக்கு சென்ற நேரம், அஷ்வினியிடம் பேச ஆரம்பிக்கும் வேளையில், அந்த செய்தி ஒளிபரப்பாக இருவரின் கண்களும் அந்த தொலைக்காட்சியில் நிலைத்து நின்றன.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 இதோ அஷ்வினி கேங் வந்துட்டாங்க…😁😁😁 படிச்சு, சிரிச்சு அப்படியே உங்க கமெண்ட்ஸ் மூலமா என்னையும் சிரிக்க வச்சுட்டு போங்க…😉😉😉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  10 Comments

  1. Janu Croos

   யாரு ஃபோன் பண்ணாங்க அஷ்வினிக்கு…ஏன் அவள் அவங்க ஃபோன அவாய்ட் பண்ணனும்….அவங்க ஜெனிக்கும் தெரியுமா? அவங்கள பத்தி தெரிஞ்ச மாதிரியே ஜெனியும் பேசினாளே….அஷ்வின் அஷ்வினி கிட்ட என்ன பேச போறான்….நியூஸ்ல என்ன இருக்கு… எல்லாமே மர்மமாவே இருக்கே….

   1. vaanavil rocket
    Author

    😁😁😁 padhivar comment poda late ah vandhadhala ashwini ku yar phone panna nu neengale padichurupinga😜😜😜 (Note : Suppose inum padikalaina indha answer eduthukonga…😜😜😜 Yar call pannanga nu next epi la parpom😉😉😉)
    News kum mela iruka adhe answer dhan😅😅😅

  2. Archana

   என்ன நியூஸ் அது 👀👀👀👀👀 வழக்கம் போல இன்னிக்கு எபியும் சூப்பர் அடுத்தடுத்த எபி சீக்கிரம் போடுங்க🥰🥰🥰🥰🥰

  3. Sangusakkara vedi

   Hi sagi…. So far story rmba rmba nalla poghuthu…. Ella character um super… Ella jodiyum kandu pidikala…

   Niranjan ashwini
   Sagar – Maya

   Ithu confirm

   Akshay – Jeni nu ninachen

   Ipo intha ashwin bhaiyan ava fav sonnathula chinna confuse but maximum Akshay Jeni thn ninakiren….

   Ashwin kuda yarayo love panran avunga innum entry agala …. Waiting…

   Aprm seekaram next ud podunga me waiting to read … Pls tag pannuringa….

   1. vaanavil rocket
    Author

    Nanri sagi😍😍😍 Adhukkulla jodi confirm pannathinga next epi la inum konjam confusions irukalam…😜😜😜 next epi potutuen sagi… Padichitu vanga meeyum waiting…😁😁😁

  4. Wow sis interesting ud aswini semmmma akshay chanceless person super ud sis

  5. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்