855 views

சுடர் 6

இன்னைக்கு இந்த சாகர் பையன் ஆளையே காணோம். பிரேக் முடிஞ்சதுலயிருந்தே அவனைக் காணோம். நானும்இப்போ வந்துடுவான், அப்பறம் வந்துடுவான்னு வாசலையே பார்த்துட்டு இருந்தது தான் மிச்சம்! இதைப் பார்த்த அந்த ஃபிஸிக்ஸ் ப்ரொஃபெசர், ‘கிளாஸ் எடுக்குறப்போ கனவு கண்டுட்டு இருக்கியான்னு மொத்த கிளாஸுக்கு முன்னாடி என்னை அசிங்கப்படுத்திட்டாரு. அவரு திட்டுனதைக் கூட பெரிய விஷயமா எடுத்துக்கல. ஆனா, அந்த ரெண்டு பேரு முன்னாடி திட்டுனது தான், ப்ச் எனக்கு வருத்தம்பா!

அந்த ரெண்டு பேரு யாருன்னா, ஒன்னு என் கூட பிறந்த உடன்பிறப்பு, இன்னொன்னு நான் ரீசன்ட்டா என்னோட க்ரஷ் லிஸ்ட்ல சேர்த்த அபிநந்தன். ஹாஹா, இந்த அபியைப் பார்த்தா, சாகருக்கு பிடிக்கவே செய்யாது. அதனாலேயே இவன் கூட ஒரு செல்ஃபி எடுத்து சாகரை வெறுப்பேத்தனும்னு நினைச்சுருக்கேன். கூடிய சீக்கிரம் இதை நிறைவேத்துறேன்.

அந்த பீரியட் முடிஞ்சு, நானும் கேன்டீன் எல்லாம் தேடிப் பார்த்தேன். ஆனா, சாகர் அங்கயும் இல்ல. நான் ஒரு பக்கம், என் உடன்பிறப்பு ஒரு பக்கம்னு தேடுனா, புத்தர் போதி மரத்துக்கு கீழ உட்கார்ந்து ஞானம் பெற்ற மாதிரி, சார் அந்த குல்மொஹர் மரத்துக்கு கீழ உட்கார்ந்து போஸ் கொடுத்துட்டு இருந்தாரு.

விடுவேனா நானு! ஃபிஸிக்ஸ் சார் கிட்ட வாங்குன திட்டுக்கெல்லாம் அவனை பழிவாங்குனதுக்கு அப்பறம் தான் மனசுக்கு நிம்மதியா இருந்துச்சு.

ச்சே, இப்போ தான் ஞாபகம் வருது, அவன் என்னைத் தனியா விட்டுட்டு எங்க போனான்னு கேட்கவே இல்ல. அவன் மட்டும், ‘கேன்டீன்ல சாப்பிட போனேன்னு சொன்னானோ, இருக்கு அவனுக்கு!

உஃப், எழுதி எழுதி கை வலிக்குது! அதுவும் இந்த சாகரைப் பத்தி எழுதுனா, போயிட்டேல இருக்கு. அடுத்த வருஷத்துல இருந்து, வாய்ஸ் நோட்ல சேவ் பண்ணி வச்சுக்கணும் போல.

கருநிற மை கொண்டு, குண்டு குண்டு கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த அந்த டைரியின் பக்கத்தை தடவியபடி அதைப் படித்தவளிற்கு, அன்றைய நாளின் நினைவும் சேர்ந்தே வந்தது.

அது மட்டுமா, அதனுடன் தொடர்ச்சியாக சாகர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அவளின் நினைவை ஆக்கிரமித்துக்கொள்ள, எண்ணிக்கையில் அளவிட முடியாத முறையாகநீயேன்டா என்னை விட்டு போன?’ என்று கேட்டுக் கொண்டாள் மனதிற்குள்.

பின்னர், எப்போதும் போல அவர்களின் சிறுவயது நினைவுகளுடனே உறங்கிப்போனாள் அஷ்வினி.

*****

ஒன்றோடொன்று சம்பந்தம் இல்லாத நிகழ்வுகள் கனவாய் அவளைத் துரத்த, அழுந்த மூடிய விழிகளை கடினப்பட்டு திறந்தாள் மாயா.

அதே மருத்துவமனை கட்டிலில் இருப்பதை கண்டவளிற்கு, சட்டென்று கனவெது நிஜமெது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தன் இயலாமையை கண்ணீரின் மூலம் வெளிப்படுத்தியவளிற்கு தம்பி தங்கையின் நினைவு வர, மெல்ல கட்டிலிலிருந்து எழ முயற்சித்தாள்.

அப்போது தான் சற்று தள்ளியிருந்த நீள்சாய்விருக்கையில், ஓய்ந்து போன தோற்றத்துடன் அமர்ந்திருந்தவர்களை கண்டாள். மாயாவிடம் அசைவு தெரியவும், அவர்களும் அவளைத் தான் பார்த்தனர்.

உடனே, ஓடி வந்தவர்கள் அவளின் இரு கைகளையும் ஆளுக்கு ஒன்றாய் பற்ற, மாயாவும் அவர்களின் கைகளை அழுத்தி, மொழியில்லாத ஆறுதலை அவர்களுக்கு கடத்த எத்தனித்தாள்.

மாயாக்கா, உனக்கு இப்போ எப்படி இருக்கு? ரொம்ப வலிக்குதா? ரத்தமா வந்து நீ மயங்குனதை நான் பார்த்தேன்.” என்று உதட்டை பிதுக்கி கூறிய சின்னவளின் முகத்தைக் கண்டவள், அவள் எப்போது வேண்டுமானாலும் அழும் நிலையில் இருந்ததால், தன்னைத்தானே முதலில் சமன்படுத்திக் கொண்டு சின்னவளிடம் பேச ஆரம்பித்தாள்.

சம்மு குட்டி, எனக்கு ஒன்னுமில்லடா. ஒரு நைட் நல்லா தூங்குனவுடனே சரியாகிட்டேன் பார்த்தியா? சம்மு குட்டிக்கு எங்கயாச்சும் அடிப்பட்டிருக்கா?” என்று பேச்சை மாற்ற முற்பட, சின்னவளும் அதற்கு ஏதுவாக மாயாவை பற்றிய விசாரணையை விடுத்து, தன் காயங்களை காட்ட ஆரம்பித்தாள்.

இதோ இங்க பாரு மாயாக்கா, இதோ இங்கயும், இதெல்லாம் கொஞ்சம் தான் வலிக்குது. இங்க கால்ல தான் ரொம்ப வலிக்குது.” என்று கண்களில் தேங்கிய கண்ணீருடன், மழலை மொழியிலிருந்து முழுதாக மீளாதவாறு கூறினாள் சம்பூர்ணா.

அச்சோ, சம்மு குட்டிக்கு இந்த காயங்களை எல்லாம் கிளீன் பண்ணி பேண்ட்எய்ட் போட்டுருக்காங்கள, சோ சீக்கிரம் சரியா போயிடும். ஓகேயா?” என்று அவளிற்கு நிகராக பேசி ஆறுதல் கூறினாள்.

அப்போது தான் மற்றவனின் நினைவே மாயாவிற்கு வந்தது.

திரும்பி சம்பூர்ணாவின் அண்ணனான நவீனைக் காண, அவனோ தீவிர முகபாவத்துடன் இருந்தான். மிஞ்சிப் போனால், சம்பூர்ணாவை விட மூன்று வருடங்கள் பெரியவனாக இருப்பான். அவனிடம் இத்தகைய தீவிரத்தைக் கண்டவளிற்கு ஆச்சரியமாக தான் இருந்தது.

நவி…” என்று மாயா அழைத்ததும், அதை எதிர்ப்பார்க்காதவனாக, கனவிலிருந்து விழிப்பவனைப் போல விழித்தான் நவீன்.

என்னடா ஆச்சு? உனக்கு எங்க அடிப்பட்டிருக்கு?” என்று பொறுப்பான சகோதரியாக வினவினாள்.

எனக்கு பெருசா எல்லாம் அடிபடல மாயாக்கா, இப்போ நமக்கு சரியானதும் நம்ம வீட்டுக்கே போயிடுவோமா? வேண்டாம் மாயாக்கா, நம்ம வேற எங்கயாவது போயிடலாம். திரும்ப வீட்டுக்கு போனா, முன்னாடி மாதிரி இப்பவும் அந்த டார்க் ரூம்ல அடைச்சு வச்சுடுவாங்க.” என்று கூறினான் நவீன்.

அண்ணனின் கூற்றை ஆமோதிப்பது போல, “ஆமா மாயாக்கா, நமக்கு அந்த அப்பா அம்மா வேண்டாம். நம்ம தனியா போயிடலாம்.” என்று நின்ற அழுகையை மீண்டும் துவங்கினாள் சம்பூர்ணா.

இளையவர்களின் குரலிலிருந்தே பயத்தைக் கண்டவள், அந்த நிகழ்வு இவர்களை எத்தனை தூரம் பாதித்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.

பின்னே, சொந்த குழந்தைகள் என்று கூட பாராமல், ஏதோ ஒரு போலி ஆசாமி கூறியதைக் கேட்டு, அவர்களை பலி கொடுக்க சம்மதித்த பெற்றோர் இருந்தால், பயப்படாமல் என்ன செய்வார்கள்?

மாயாவிற்கு அவளின் குடும்பத்தாரை நினைக்கும்போதே வெறுப்பாக இருந்தது. உலகில் எவ்வளவோ பாசமான குடும்பங்கள் இருக்கும்போது, இத்தகைய நரகத்தில் வந்து மாட்டிக் கொண்டதற்கு, தங்களின் விதியை தான் நொந்து கொள்ள முடிந்தது அவளால்.

பிள்ளைகள் இருவரும் தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவள், “சரி டா, நம்ம இனிமே அங்க போக வேண்டாம். வேற எங்கயாச்சும் போயிக்கலாம்.” என்றாள்.

அவர்களை சமாளிக்க அதைக் கூறினாலும், அதை எப்படி செயல்படுத்துவது என்று யோசிக்கலானாள். பரந்த இவ்வுலகில், சிறியவர்களை வைத்துக் கொண்டு, தனியாக இருப்பது அவ்வளவு எளிதா என்ன?

*****

சார், போலீஸ் விசாரணைன்னு சொல்லிட்டு எங்களை எங்க கூட்டிட்டு போறீங்க?” என்று அந்த நடுத்தர வயதுடையவர் வினவ, “எல்லாத்துக்கும் எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்துட்டு இருக்க முடியாது. இதுவும் ஒருவகைல விசாரணை தான். முன்னாடி பார்த்து நடங்க.” என்று கறாராக வந்தது அந்த குரல்.

சார், எங்களை அக்யூஸ்ட் மாதிரி ட்ரீட் பண்றீங்க.” என்று அவர் கூற, “இதெல்லாம் அங்க வந்து சொல்லுங்க, இப்போ நடக்குறீங்களா?” என்று கூறினான் அவன்.

அதைக் கேட்ட அந்த மனிதருக்கு உள்ளுக்குள் திகிலாக இருந்தது உண்மை தான். ஏனெனில், அவர்களின் குழந்தைகளைப் பற்றி விசாரித்த போது, ‘அவர்களை காணவில்லைஎன்று அவர் கூறியதை நம்பி, அவர்களைப் பற்றிய விபரத்தை தருவதற்கு காவல் நிலையம் வருமாறு கூறி அழைத்து வந்து, இப்படி திக்கு தெரியாத இடத்திற்கு அழைத்து வந்தால், பயம் இருக்கத்தானே செய்யும்!

முக்கிய சாலையிலிருந்து உள்ளே வந்தால், வெட்டவெளியாக இருந்தது அந்த இடம். அதில் சற்று தொலைவில் ஒரே ஒரு கட்டிடம் கண்ணிற்கு புலப்பட, அதை நோக்கித் தான் இவர்களின் பயணம் என்பது அந்த ஐவர் குழுவிற்கு தெரிந்து போனது. மற்றபடி, அவர்கள் இருக்கும் இடமோ, அவர்களை அழைத்து வந்ததன் நோக்கமோ அவர்களுக்கு தெரியவில்லை.

அந்த கட்டிடத்திற்கு அருகே வந்ததும் தான், அது ஒரு பழைய பாழடைந்த கட்டிடம் என்பதைக் கண்டனர். அது, அவர்களின் பயத்தை மேலும் அதிகரிக்கவே செய்தது.

அவர்கள் உள்ளே சென்றதும், தன்னுடன் வந்த இருவரை உள்ளே அனுப்பியவன், ‘ஜாப் கம்ப்லீடட்என்ற செய்தியை அனுப்ப, மறுமுனையிலிருந்து, ‘வில் பி தேர்என்ற செய்தி கிடைத்தது.

*****

அந்த காலை வேளையில், அனைவரும் பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருந்தால், அவள் மட்டும் சாவாதனமாக, அன்னை சுட்டுக்கொடுக்கும் தோசையை, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே சாப்பிடும் வேலையில் மூழ்கியிருந்தாள்.

நாட்டின் தலைநகரில் நடந்த கோர சம்பவம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல். கடந்த ஆண்டு, ஒரே குடும்பத்தை சேர்ந்த பதினொரு பேர் தூக்கில் தொங்கிய நிலையில், கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். நாட்டையே அதிரச் செய்த இந்த சம்பவத்தின் பின்னணியை ஆராய காவலர்கள் பலகட்ட விசாரணையை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பல அமானுஷ்யங்களையும் குழப்பங்களையும் கொண்ட இவ்வழக்கை ஆராய்ந்த போலீசார், இது கொலை அல்ல தற்கொலை தான் என்பதை உறுதிப்படுத்தினர். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன, அந்த குடும்ப தலைவரின் ஆன்மா, அவரின் இளைய மகனிடம் பேசியதாகவும், அதன் காரணமாக சில பல அமானுஷ்ய வேலைகளில் அக்குடும்பம் இறங்கியதாகவும், அங்கிருந்து மீட்கப்பட்ட டைரியிலிருந்து கண்டுகொண்டனர் போலீசார். அதன் உச்சகட்டமாகவே இந்த தற்கொலை என்பதையும் தெரிந்து கொண்டனர்.

மேலும், அந்த இளைய மகனின் மனநிலை சமீப காலமாக நிலையற்றதாக இருந்ததாகவும், அதை அவர்களின் குடும்பம் கவனிக்காததாலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற விவாதமும் இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

அக்குடும்பத்தில் மெத்த படித்தவர்கள் பலர் இருந்தும், இத்தகைய மூடநம்பிக்கைகளை பின்பற்றிய விஷயம், அதை விசாரிக்கும் காவலர்களுக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வழக்கைப் பற்றிய முழுமையான செய்தியை தெரிந்து கொள்ள, இன்று இரவு எட்டு மணி நிகழ்ச்சியைக் காணத்தவறாதீர்கள்.

ஹ்ம்ம், என்னத்த படிச்சு என்ன செய்ய? இங்க நிறைய பேர் படிச்ச முட்டாளா தான் இருக்காங்க!” என்று சலித்துக்கொண்டவள், “ம்மா, அடுத்த தோசை எங்க?” என்று சமையலறை நோக்கி கத்தினாள்.

இதே போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும் பஞ்சமில்லை என்பதை போல மயிலக்குறிச்சி என்ற ஊரில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த தொகுப்பாளர் கூறிக்கொண்டிருக்கும்போதே, சித்ரா தொலைக்காட்சியை அணைத்து விட்டார்.

ம்மா…” என்று அஷ்வினி சிணுங்கும்போதே, “என்னடி அம்மா நொம்மான்னு? மணி என்னன்னு பார்த்தியா? அங்க என் பையன் சீக்கிரம் கிளம்பியும் உன்னால டைமாச்சேன்னு உட்கார்ந்துருக்கான். நீ என்னடான்னா ஜாலியா டிவி பார்த்துட்டு இருக்க!” என்று கடிய, அப்போது நேரத்தை பார்த்த அஷ்வினி, “ஐயோ, லேட்டா போனா, அதுக்கும் அந்த ரோபோ திட்டுவானே!” என்று சித்ராவிடமிருந்து தோசையை பறித்து, இரு நொடிகளில் அதை காலி செய்து பணிக்கு கிளம்பினாள்.

இவளையே மிரள வைத்த அந்தரோபோயாரென்ற சிந்தனைக்குள் சென்றார் சித்ரா.

*****

வழக்கம்போல அஷ்வினும் அஷ்வினியும் போட்டி போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கு வர, அங்கு எப்போதும் இல்லாத வழக்கமாக, ஜெனி அஷ்வினிக்காக காத்திருந்தாள்.

இருவரையும் நக்கலாக பார்த்த அஷ்வினின் பார்வையை அலட்சியப்படுத்திவிட்டு, ஜெனியை அழைத்துக்கொண்டு உள்ளே விரைந்தாள் அஷ்வினி.

தன்னை எப்போதும் போல வரவேற்க வந்த அக்ஷயைக் கூட கண்டுகொள்ளாமல், வேகமாக அவளின் கணினியை உயிர்ப்பித்தாள்.

ஹப்பாடா, ஒருவழியா அந்த ரோபோ வரதுக்குள்ள லாகின் பண்ணியாச்சு…” என்று அவள் ஆசுவாசப்பட, “அட லூசே, நான் சொல்லவரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்? இன்னைக்கு நம்ம அவரு லீவாம்.” என்று அக்ஷய் கூற, அஷ்வினியோ பேய் முழி முழித்தாள்.

எதே லீவா?! இதுக்கு தான் இவ்ளோ சீக்கிரமா சாப்பிட்டும் சாப்பிடாம கிளம்பி, இவளை வேற இழுத்துட்டு வந்தேனா.” என்று நொந்து கொண்டாள் அஷ்வினி.

அதன்பிறகு, அன்றைய நாள் நிரஞ்சனின் வரவிற்கு முன்னிருந்ததைப் போலவே சாதாரணமாக செல்ல, அஷ்வினி தான் அடிக்கடி, “இன்னைக்கும் செக் பண்ணல, இதுக்கு எதுக்கு நேத்தே முடிச்சு வைக்க சொல்லணும்?” என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.

ஹலோ, அவரு லீவுன்னு இன்னைக்கு காலைலேயே வாட்சப்ல மெசேஜ் அனுப்பியிருந்தேன். இவ தான் என்னை வாட்சப்ல பிளாக் பண்ணியிருக்கா.” என்று ஜெனியைக் காட்டி சொன்னவன், “உனக்கு என்ன? அதை பார்த்து மெதுவா கிளம்பியிருக்க வேண்டியது தான.” என்று அஷ்வினியிடம் வினவினான் அக்ஷய்.

அப்போது தான் முதல் நாளே தன் அலைபேசியை அணைத்து வைத்தது அஷ்வினிக்கு நினைவு வந்தது.

ஐயையோ, மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்!” என்று காலையில் அவசரமாக பைக்குள் திணித்த அலைபேசியை எடுத்துப்பார்க்க, அது அவள் அணைத்து வைத்தபடியே இருந்தது.

உங்களுக்கெல்லாம் எதுக்கு மொபைல்? அதுல ஒரு ஆப்!” என்று தலையிலடித்துக் கொண்டான் அக்ஷய்.

ப்ச், அதான் என் உடன்பிறப்பு இருக்கான்ல, அவனுக்கு அனுப்ப வேண்டியது தான?” என்று ரோஷம் வந்தவளாக அஷ்வினி பொங்க, “நீ இப்படி குண்டக்க மண்டக்க கேள்வி கேட்பன்னு தான், அவனுக்கும் அனுப்பி வச்சேன்அந்த தகவலை உன்கிட்ட சொல்லலையா உன் உடன்பிறப்பு..?” என்றான் அக்ஷய்.

அப்போது சரியாக அஷ்வினின் நக்கல் சிரிப்பு அஷ்வினிக்கு நினைவு வர, “அட துரோகியே!” என்று முணுமுணுத்தாள்.

அதன்பிறகு, அக்ஷய் அவன் வேலையைப் பார்க்க சென்று விட, ஜெனி அஷ்வினியை சந்தேகமாக பார்த்தாள்.

அவளின் பார்வையை உணர்ந்த அஷ்வினி, “இப்போ எதுக்கு குற்றவாளியைப் பார்க்குற மாதிரி பார்க்குற?” என்று வினவ, “ஓஹ், உனக்கு அப்படி தோணுச்சுனா அது தான் உண்மை போல!” என்றாள் ஜெனி.

ப்ச் ஜெனி, என்னன்னு நேரடியாவே கேளு. எதுக்கு இப்படி ஜாடைமாடையா பேசுற?” என்று இப்போது ஜெனியைப் பார்த்தபடியே வினவினாள் அஷ்வினி.

நான் எதுக்கு இப்படி பேசுறேன்னு உனக்கு புரியல அப்படி தான. சரி நேரடியாவே கேட்குறேன், யாரை அவாயிட் பண்றதுக்காக மொபைலை ஸ்விட்ச் ஆஃப் பண்ண? சீ, அக்ஷயை சமாளிக்கிற மாதிரி ஏதோ சொல்லி சமாளிக்கலாம்னு நினைக்காத.” என்று ஜெனி வினவ, நீண்ட பெருமூச்சை விட்டவள், “அதான் உனக்கே தெரியுதே, என் வாயிலயிருந்து அவங்க பேர் வரணும்னு நினைக்குறியா?” என்று எங்கோ பார்த்துக்கொண்டு கூறினாள் அஷ்வினி.

வினி, நடந்ததுக்கு அவ என்ன பண்ணுவா? தேவையில்லாம அவளை அவாயிட் பண்றியோன்னு தோணுது!” என்று ஜெனி கூற, “நீ என்ன சொன்னாலும் என் மனசு ஒத்துக்க போறதில்ல ஜெனி. இதனால நமக்குள்ள எந்த சண்டையும் வர வேண்டாம்னு நினைக்குறேன்.” என்று கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ஜெனியின் பேச்சிலிருந்த உண்மை அஷ்வினிக்கு புரிந்தாலும், ஜெனியிடம் கூறியதைப் போல அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவளின் இழப்பு அத்தகையது!

அவளின் சிற்றறையிலிருந்து நேராக ஓய்வறைக்கு வந்தவள், தலையைப் பிடித்துக்கொண்டு நிற்க, அவளின் நினைவில் முதல் நாள், அந்த நபரிடமிருந்து வந்த அழைப்புகளும், அவற்றை தவிர்த்ததும், சில நொடிகளிலேயே அலைபேசியை அணைத்ததும் காட்சிகளாக ஓடின.

அந்நினைவுகளின் பிடியிலிருந்து வெளிவர வேண்டி, குழாயிலிருந்து வடிந்த குளிர்நீரை முகத்தில் அடித்துக்கழுவினாள். கீழே செல்லும் நீரில், அவள் தேவையில்லை என்று கருதிய நினைவுகளும் சென்றுவிடும் என்று எண்ணினாளோ!

ஒருபுறம், அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று எண்ணினாலும், அவளின் ஆழ்மனதில் அந்நபருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணவும் தவறவில்லை.

அவளின் ஆழ்மன நினைவு உண்மையாகிப் போனால்?!

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 “என் காதல் சுடர் நீயடா(டி)” கதையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு… இதுவரைக்கும் கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி… கதையைப் படிச்சுட்டு உங்க கருத்துக்களை காயின்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ, ரியாக்க்ஷன்ஸ் மூலமாவோ பகிர்ந்துக்கோங்க…😁😁😁

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
20
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  8 Comments

  1. Janu Croos

   அடப்பாவிகளா….எவனோ ஒரு போலிச்சாமியார் சொன்னான்னு பொத்த புள்ளைங்களேயே பலி குடுக்க பிளான் பண்டி இருக்குதுங்களே….அதுக்காக இருட்டு அறைக்குள்ள வேற அடைச்சு வச்சிருக்குதுங்க….
   சாகர் அஷ்வின் அஷ்வினி எல்லாரும் ஒண்ணா படிச்சவங்களா? அப்போ மாயாவையும் அஷ்வினிக்கு தெரகஞ்ஞு இருக்கணுமே!!!
   நிரஞ்சன் சொல்லி கூட்டிட்டு போற அவங்க பேசுறத பாத்தா அது மாயாவோட அப்பா அம்மா மாதிரி தெரியுதே!!
   நியூஸ்ல வேற ஏதோ சொல்லிட்டு இருந்தாங்க அதுக்குள்ள சித்ரா அம்மா ஆஃப் பண்ணிட்டாங்க….
   அஷ்வகனிக்கு ஃபோன் பண்ணது யாரு? ஏன் அவங்க ஃபோன இவள் எடுக்க மாட்டேங்குறாள்….
   சாகராக்கு அப்படி என்னதான் ஆச்சு?

   1. vaanavil rocket
    Author

    ஆமா, பாவம் மாயாவும் அவளோட தம்பி தங்கச்சியும்… ஆமால மாயாவை அஷ்வினிக்கு தெரிஞ்சுருக்கணுமே…🤔🤔🤔 ஒருவேளை தெரியாம இருந்தா…😜😜😜
    வழக்கம் போல உங்க கேள்விக்கான பதிலை இனி வர அத்தியாயங்கள்ல தெரிஞ்சுப்போம்…😁😁😁

  2. Archana

   இந்த டெல்லி கேஸே நினைச்சாலே திக்குன்னு இருக்கு இதுலே மாயா பேமிலியே சேர்ந்தவங்களும் இப்படி பண்ணிருக்காங்கன்னு சொன்னா ப்பா கண்ண கட்டுது🥶🥶🥶🥶

   1. vaanavil rocket
    Author

    ஆமா, என்ன ஒரு கொடூரம்ல… பாவம் மாயா…😑😑😑

  3. Oosi Pattaasu

   ‘என் காதல் சுடர் நீயடா(டி)’ ஒரு ஜாலியான, அதேநேரம் யோசிச்சு குழம்ப வைக்கிற க்ரைம் ஸ்டோரி.
   இதோட பாசிட்டிவ்ஸ்,
   1.அஷ்வினி அண்ட் கேங்கோட டைம்லி காமெடி. இவங்க ஹியூமர் சென்ஸ் வேற லெவல்.
   2. ஸ்டோரிய இ[டி இருக்குமா, அப்டி இருக்குமான்னு யோசிக்க வைச்சு, ட்விஸ்டிங்கா கொண்டு போற ரைட்டிங் ஸ்டைல்.
   3. அஷ்வின் அம்மா, அப்பாவோட காம்போ செமையா இருக்கு.
   அப்புறம் நெகட்டிவ்ஸ் வந்து,
   1.ஒரு சில டைப்பிங் எரர்ஸ்.
   2. நிரஞ்சனோட கேரக்டர் ரொம்ப கன்ஃபியூஸிங்கா இருக்கு. அது அப்டி தான் இருக்கணும், அதான் ட்விஸ்ட்னு புரியுது. ஆனாலும், இவன் கேரக்டர் இப்டி தான்னு சொல்லவே முடியல.
   3. ஸ்டோரியோட மெயின் கான்செப்ட் என்னன்னுப் புரியுது. பட், அதோட சென்டர் எதுன்னு புரியல. பட், ஆறு எபில அத டச் பண்ண முடியாது தான். சோ, போகப் போகத் தெரிஞ்சுக்கலாம்.
   ஓவர் ஆலா, ஸ்டோரி செம எக்ஸைட்டிங்கா, அதே நேரம் த்ரில்லிங்கா இருக்கு. டைம் ஸ்பெண்ட் படிக்க, வர்த்தா இருக்கும்னு நெனைக்கிறேன்.

   1. vaanavil rocket
    Author

    Tq so much sis😍😍😍 Unga time spend panni positives and negatives kuduthadhuku special thanks…😁😁😁
    Ashwini gang oda galatta, Ashwin appa – amma combo ungaluku pidichadhil magizhchi…😁😍😊
    Spell check pannitu potalum sila idangal la miss aagidudhu… Kandippa ini koodudhala time spend panni check panniduren sis…😊😊😊
    Nenga sonna mathri Niranjan character ini vara epi la therinjudum sis… Adhuku nan guarantee…😁😁😁
    Adhe mathri dhan story oda main concept um inum sila epi la theliva therinjudum…😊😊😊
    Thanks again sis😍😍😍

  4. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதல் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.