873 views

சுடர் 4

டேய் எரும மாடு.” என்று கோபமாக அஷ்வினி கத்த, அப்பெயருக்கு உரியவனோ, “யாரை இவ்ளோ பாசமா கூப்பிடுறா?” என்றவாறே திரும்பிப் பார்த்தான்.

அங்கு பலமாக மூச்சுக்காற்றை வெளியிட்டபடி அக்ஷயைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் அஷ்வினி.

இவ எதுக்கு டிரெயினுக்கு கரி அள்ளி போட்ட மாதிரி வந்து நிக்கிறா? நியாயமா இந்த சீன்ல சோகமா தான இருக்கணும். இடையில நமக்கு தெரியாம வேற சீன் ஏதாவது ஓடியிருக்கா என்ன?’ என்று நினைத்து குழம்பினான்.

மிஸ்டர். அக்ஷய், உங்க ப்ராஜெக்ட் சம்மரி எங்க?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அஷ்வினி வினவ, ‘எதே, மிஸ்டரா? இவ சாதாரணமா இப்படியெல்லாம் கூப்பிடுற ஆளில்லையே. ஏதோ இருக்கு. ஆழம் தெரியாம காலை விட்டுடாதடா அக்ஷய்.’ என்று தனக்குத்தானே கூறிக்கொண்டவன், ‘மிஸ்டரில்கவனத்தை பதித்திருந்ததால், அவள் அதன் பின் அழுத்திக் கேட்ட, ‘ப்ராஜெக்ட் சம்மரியில் கோட்டை விட்டுவிட்டான்.

அது மார்னிங்கே பி.எம்முக்கு சென்ட் பண்ணிட்டேனே.” என்று கூறினான் அக்ஷய்.

அப்போ சென்ட் பண்ணிட்டு தான் ட்ரீட்டுக்கு வந்துருக்க.” என்று அஷ்வினி வினவ, “அஃப் கோர்ஸ், நானெல்லாம் டாஸ்க் முடிச்சுட்டு தான் மத்த வேலையை பார்ப்பேன். யூ நோ, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி இந்த அக்ஷய்.” என்று அவன் அருமை பெருமைகளை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தான், அஷ்வினியின் கேள்விக்கான காரணம் புரியாமல்.

ஓஹ், அப்போ பிளான் பண்ணி தான் எல்லாமே பண்ணியிருக்க?” என்று அஷ்வினி வினவ, “யாஹ், எனக்கு எல்லாமே பிளான் பண்ணி தான் பழக்கம்.” என்று அக்ஷயும் கூறிக்கொண்டிருந்தான்.

இவர்களின் உரையாடலைக் கவனித்துக்கொண்டிருந்த ஜெனி, “எனக்கென்னமோ, இவன் சொல்றதெல்லாம் நான்சிங்க்கா போயிட்டு இருக்க மாதிரி ஃபீலாகுதே.” என்று அவளருகே நின்று கொண்டிருந்த ஜுனியரிடம் கூறிக்கொண்டிருக்க, அவனும், “எனக்கும் அப்படி தான் தோணுது. இன்னைக்கு இந்த அண்ணா புண்ணியத்துல ஒரு என்டர்டெயின்மெண்ட் இருக்கும்னு என் மனசு சொல்லுது!” என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

அவர்கள் இருவரும் நடக்கப்போவதை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவை பார்ப்பதைப் போல மிகுந்த ஆர்வத்துடன் பார்க்க ஆயத்தமானார்கள்.

அப்போ நீ வேணும்னே தான் என்கிட்ட ப்ராஜெக்ட் சம்மரி பத்தி மறைச்சு, என்னை ட்ரீட்டுக்கு கூட்டிட்டு போய், நல்லா சாப்பிட வச்சு, இப்போ அந்த ரோபோ கிட்ட திட்டு வாங்க வச்சிருக்க?” என்று இம்முறை தெளிவாகக் கூற, அத்தனை நேரம் பெருமிதமாக அமர்ந்திருந்தவனின் முகத்தில் இப்போது குழப்ப ரேகை முகாமிட்டிருந்தது.

என்னாது? மறைச்சு கூட்டிட்டு போய், திட்டு வாங்க வச்சேனா! ஹே என்ன புதுசு புதுசா சொல்ற? நான் அப்படியெல்லாம் எதுவும் பிளான் பண்ணல பா. முதல்ல, இன்னைக்கு உன் உடன்பிறப்பு ட்ரீட் கூட்டிட்டு போனதே எனக்கு இன்னமும் அதிர்ச்சியா தான் இருக்கு. இதுல பிளான் போட்டு உன்னை ஏமாத்தனும்னு எல்லாம் எனக்கு தோணியே இருக்காது. ஆனா, இப்போ யோசிச்சு பார்த்தா, இது கூட நல்ல ஐடியாவா இருக்குன்னு தோணுது.” என்றவன், ‘ஹாஹாஎன்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

அடப்பரதேசி, நானே அவன்கிட்ட திட்டு வாங்கிட்டு வந்துருக்கேன்னு ஃபீலிங்ல இருக்கேன், நீ கெக்கப்பிக்கன்னு சிரிச்சுட்டு இருக்கியா?” என்று அருகிலிருந்த பேனாவை அவன் மீது வீசினாள்.

இல்ல வினி, உன்னை அவரு திட்டுறதும், நீ பவ்யமா நிக்குறதும் நினைச்சு பார்த்தேனா, லேசா சிப்பு வந்துடுச்சு சிப்பு. ஹாஹா.” என்று மேலும் சிரிக்க கடுப்பாகி விட்டாள் அஷ்வினி.

அவளுக்கு வாகாக அவனின் தலை இருக்க, அவன் முடியை இரு கைகளாலும் பிடித்து ஆட்ட, “ஐயோ அம்மா!” என்று அவன் கத்த, இருவரையும் பிரித்து விடும் பணியை ஜெனி செய்ய என்று அந்த கேபினே கலட்டாவாக இருந்தது.

சத்தம் கேட்டு வெளியே வந்த நிரஞ்சன் நொடிப்பொழுதில் அஷ்வினியை ஆராய்ந்து, அவள் இயல்பு நிலை திரும்பி விட்டாள் என்பதை அறிந்து கொண்டான்.

ஆயினும், வகிக்கும் பதவிக்கு நியாயம் செய்ய வேண்டுமென்பதால், “ஹே கைஸ், வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்? இதென்ன ஆஃபிஸ்ஸா பிளே கிரவுண்ட்டா?” என்று பொதுவாக கேட்டவன், “மிஸ். அஷ்வினி, உங்களை ப்ராஜெக்ட் சம்மரி தான ப்ரிப்பேர் பண்ண சொன்னேன். அதை செய்யாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று கேட்க, “இதோ சார், பண்ணிட்டு இருக்கேன்.” என்று சமாளித்தாள்.

அவள் நின்றிருந்த விதத்தை பார்வையால் அளந்தவன், “நல்லா தெரியுது.” என்று கிண்டலாக கூறினான். அவனின் பார்வையை தாங்க முடியாமல், பாவை தான் கீழே குனிந்து கொண்டாள்.

லுக், இன்னும் டென் மினிட்ஸ்ல உங்க சம்மரி எனக்கு வந்துருக்கணும். அண்ட் இன்னைக்கான டாஸ்க்கை இப்போ மெயில் பண்றேன். இன்னைக்கு அதை முடிச்சுட்டு கிளம்பிக்கோங்க.” என்றான்.

என்னது டாஸ்க்கா? இப்போவே மதியம் மூணு மணி ஆகிடுச்சு! இனிமே எப்படி?” என்று அவள் அதிர்ச்சியாக வினவ, “நீங்க தான் ரொம்ப ஃப்ரீயா இருக்கீங்க போலயே, விளையாட எல்லாம் நேரம் இருக்கு. சோ இதே ஸ்பிரிட்டோட டாஸ்க்கையும் முடிச்சுடுங்க.” என்று சர்வசாதாரணமாக கூறிவிட்டு உள்ளே செல்ல, அவனின் முதுகை தான் முறைத்துக்கொண்டிருந்தாள் அஷ்வினி.

டேய், குறிச்சு வச்சுக்கோ…” என்று அஷ்வினி ஏதோ கூற வரும்போது, “நோட்டு பென்னெல்லாம் உங்க அண்ணனா கொடுப்பான்?” என்றான் அக்ஷய்.

ஏன்டா ஏன்?! நானே ஒரு ஃப்லோல திட்டிட்டு இருக்கேன். அதையும் நடுவுல புகுந்து கெடுத்து விடுற. நீயெல்லாம் நண்பனாடா, துரோகி!” என்று மீண்டும் ஒரு சண்டை ஆரம்பமாக, “அடச்சே ரெண்டு பேரும் நிறுத்துங்க. இப்போ தான, அந்த மனுஷன் திட்டிட்டு போயிருக்காரு. திரும்பவும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க.” என்றாள் ஜெனி.

எல்லாம் அவனால தான். நீயாவது குறிச்சு வச்சுக்கோ ஜெனி, இந்த ஆஃபிஸ்ல எனக்கு முதல் எதிரி நம்ம உம்மணாமூஞ்சி நிரஞ்சன் தான்!” என்று அஷ்வினி கூற, “அப்போ ரெண்டாவது எதிரி?’ என்று அப்போதும் அடங்காமல் கேள்வி எழுப்பினான் அக்ஷய்.

அது நீதான்டா.” என்று அஷ்வினி ஏதோ கூற வருவதற்குள், அவளை தடுத்து, அவளின் கவனத்தை வேலையின் புறம் திருப்பிய பெருமை ஜெனியையே சாரும்.

*****

இங்கு நடக்கும் கூத்துக்களை எல்லாம் சிசிடிவி கேமராவின் வழியே தன் கணினியில் பார்த்துக்கொண்டு தான் இருந்தான் நிரஞ்சன். அவளைக் காணும் போது தான் அந்த கண்களில் எத்தனை பரிவு!

எவ்ளோ திட்டுனாலும் இவங்க அடங்கவே மாட்டாங்க போல.” என்று லேசாக புன்னகை புரிந்தான்.

அப்போது அவனின் அலைபேசி ஒலியெழுப்ப, அத்தனை நேரமிருந்த இலகு முகம் மாறி சற்று அழுத்தத்துடன் இருந்தான்.

அலைபேசியை உயிர்ப்பித்தவன் மறுபுறமிருந்து வரும் செய்திக்காக காத்திருந்தான்.

“…”

ஹ்ம்ம், அந்த பொண்ணு கண்டிஷன் இப்பவும் க்ரிட்டிகல் தானா? டாக்டர் கிட்ட பேச சொன்னேனே?” என்று நிரஞ்சன் வினவ, அதற்கு அந்த நபர் ஏதோ கூறியிருக்க, “அவங்க குடும்பத்தை பத்தி விசாரிக்க சொன்னேனே, அது என்னாச்சு?” என்றான்.

“….”

ஓஹ், சரி அவங்க குடும்பத்தை தேடுற வேலையை முடுக்கிவிட சொல்லு. அந்த குடும்பத்துக்கு எவ்ளோ பட்டாலும் புத்தியே இருக்காது போல! என் கையால நல்லா வாங்கி கட்டிக்கணும்னு இருந்தா யாரால மாத்த முடியும்?” என்று கோபமாக பேசினான்.

“….”

ஹ்ம்ம் இல்ல கண்ட்ரோல்ல தான் இருக்கேன். இன்னைக்கு வர முடியுமான்னு தெரியல, பட் வர முயற்சிக்கிறேன். தாத்தா, சித்தி வேற கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க, சோ அங்கேயும் எட்டிப்பார்க்கணும். ‘அந்த குடும்பம் கிடைச்சுட்டாங்கங்கிற நியூஸ் மட்டும் கொடு, அடுத்த நிமிஷமே கிளம்பியிருப்பேன்.” என்று கூறியவனின் குரலில் தான் எத்தனை வன்மம்!

“…”

ஓகே ஐம் கூல். சீக்கிரம் கிடைச்சுட்டாங்கங்கிற நியூஸோட கால் பண்ணு.” என்று கூறியபடி அழைப்பை துண்டித்தான்.

சற்று முன்னர், அஷ்வினியை கண்டபோது அவன் கண்களில் தெரிந்த பரிவு பொய்யோ என்னும் வகையில் பழியுணர்வு நிறைந்திருந்தது அவனின் விழிகளில்..! அந்த தீராபகையில் மு()டிவது யாரோ..?

*****

உஃப், வேலையா சொல்லி கொல்லுறானே!” என்று புலம்பியபடியே, நிரஞ்சன் இட்ட பணிகளை செய்து கொண்டிருந்தாள் அஷ்வினி. அவளிற்கு துணையாக அக்ஷயும் ஜெனியும் அவளின் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

நான் மட்டும் மூச்சு முட்ட வேலை பார்த்துட்டு லேட்டா வீட்டுக்கு போவேன், என்கூட சேர்ந்து மதியம் கொட்டிக்கிட்ட நீங்க ரெண்டு பேரு மட்டும் சீக்கிரமா வீட்டுக்கு போவீங்களோ? ஒழுங்கா எனக்கு கம்பெனி கொடுக்கல, ‘இன்னைக்கு சாப்பிட்ட சாப்பாடு மூணு நாளைக்கு செரிக்காதுன்னு சாபம் கொடுத்துடுவேன்!” என்று பயமுறுத்தி அல்லவா அமர வைத்திருந்தாள்.

இடையில், “நல்லவங்க கொடுக்குற சாபம் தான் பலிக்கும்னு எங்க அம்மா சொல்லுவாங்க. நீ எப்படியும் நல்லவ இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ நான் கிளம்புறேன்பா.” என்று கிளம்பிய அக்ஷயையும், “ஓஹ் கிளம்புறியா? சரி போ, நாளைக்கு வேற உன் பிரெண்ட்ஸ் பார்ட்டிக்கு கூப்பிட்டாங்கன்னு சொன்னேல, சரி சரி உனக்கே அக்கறை இல்லாதப்போ எனக்கு எதுக்கு அக்கறை?” என்று அஷ்வினி பேசி வைக்க, “அடிப்பாவி, சூனியக்காரி மாதிரியே பேசுறாளே!” என்று புலம்பியபடி மீண்டும் அவனின் நாற்காலியிலேயே அமர்ந்தான்.

என்னடா கிளம்பல?’ என்று அவனை வெறுப்பேற்ற வேறு செய்தாள் அஷ்வினி.

அப்போது, அஷ்வினும் அங்கு வந்து பார்க்க, அவனின் உடன்பிறந்தவள் மும்முரமாக வேலை செய்வதை கண்டு, தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக்கொண்டான்.

அவனின் செய்கையில் உதட்டை சுழித்தவள், “ஏன் நீ மட்டும் தான் மாங்கு மாங்குன்னு வேலை செய்வியா? எங்களுக்கும் வேலை இருக்கு, நாங்களும் செய்வோம்!” என்றுகீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாததை போல பேசி சமாளித்தாள்.

ஆஹான், ஆனா, எனக்கு வந்த நியூஸ் படி, உன் மேனேஜர் உன் மேல கோபப்பட்டு, உனக்கு எக்ஸ்ட்ரா டாஸ்க் கொடுத்ததா சொன்னாங்களே!” என்று நமுட்டுச் சிரிப்புடன் அஷ்வின் கூற, உடனே அக்ஷயை பார்த்து முறைத்தாள் பெண்ணவள்.

ஹலோ, என்ன இங்க பார்வை? நடந்ததை நடந்தபடியே சொல்றது தான் என்னோட ப்ரின்சிபிள்.” என்று அக்ஷய் கூற, “பெரிய ப்ரின்சிபிள்!’ என்று முணுமுணுத்து திரும்பிக்கொண்டாள்.

சரி சரி சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வீட்டுக்கு வர வழியைப் பாரு.” என்று அவளைக் கலாய்த்துவிட்டே கிளம்பினான் அஷ்வின்.

பிள்ளைப்பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்?” என்று புலம்பிக் கொண்டே வேலையை தொடர்ந்தாள்.

அவள் முடிக்கும் சமயம், அங்கு வந்த நிரஞ்சன், “என்ன மிஸ். அஷ்வினி, இன்னும் முடிக்கலையா?” என்று கேட்க, ‘வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதுபோல இருந்தது அஷ்வினிக்கு.

க்கும்இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல முடிச்சுடுவேன்.” என்று அவள் கூற, “ஓஹ், இவங்க எதுக்கு, உங்களுக்கு பாடிகார்ட்ஸ்ஸா?” என்று கேட்க, அக்ஷயும் ஜெனியும் அஷ்வினியை தான் முறைத்தனர்.

ஓகே, சீக்கிரம் முடிச்சுட்டு எனக்கு மெயில் சென்ட் பண்ணிட்டு கிளம்புங்க. நாளைக்கு வந்து செக் பண்றேன்.” என்று கூறிவிட்டு நிரஞ்சன் வெளியேற, “அடப்பாவி, இன்னைக்கு செக் பண்ணலைன்னா எதுக்கு டா இப்போவே முடிக்க சொன்ன?” என்று மெல்லிய குரலில் புலம்பினாள் அஷ்வினி.

ஒருவழியாக, அவளின் வேலைகளை முடித்து அவளின்பாடிகார்ட்ஸ்படையுடன் வெளியே வர, அங்கு தன் இருசக்கர வாகனத்தில் காத்திருந்தான் அஷ்வின்.

பார்ரா உங்க அண்ணனுக்கு இருக்க பாசத்தை!” என்று அக்ஷய் கடுப்புடன் கூற, அஷ்வினியோ அவனைக் கண்டு புருவம் உயர்த்தினாள்.

உன்னை விட்டுட்டு போனேன்னா, அம்மாவை சமாளிக்க முடியாது. அதுக்கு உன்னை கூட்டிட்டு போறதே பெட்டர். சீக்கிரம் வரியா?” என்று அஷ்வின் கூறினாலும், அவன் மனதில் இருக்கும் அக்கறை அஷ்வினிக்கு தெரிந்தே இருந்தது.

அவளும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஹ்ம்ம், வரேன் வரேன்.” என்றவாறே அவளின் இருசக்கர வாகனத்தை நோக்கிச் சென்றாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அக்ஷய் தான், ‘அம் ஐ ஜோக் டூ யூ?!’ என்பதைப் போல விழித்துக்கொண்டிருந்தான்.

தன் இருசக்கர வாகனத்துடன் அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்தவள், “சரிடா ஐயாசாமி, நாளைக்கு பார்க்கலாம் பை.” என்று அக்ஷயை வம்பிழுக்க, “ஓடிப்போயிடு தகரடப்பா.” என்று கத்தினான்.

அப்போது இவர்களின் மீது, மகிழுந்தின் முன்விளக்கு வெளிச்சம் படர, அதை நோக்கியவர்களுக்கு காட்சியளித்தவன் நிரஞ்சனே.

அவனைக் கண்டதும் குறைந்திருந்த கோபம் மீண்டும் அதிகரிக்க, அவனின் மகிழுந்து அவர்களை நெருங்கும் முன்னரே, அவனை பற்றி புலம்ப ஆரம்பித்திருந்தாள்.

உன்னையே இவ்ளோ புலம்ப வச்சுருக்காருன்னா, அந்த மனுஷன் கிட்ட நான் பேசியே ஆகணுமே.” என்று அஷ்வின் சிரிப்புடன் கூற, “டேய் வேண்டாம் அண்ணா, நீ மட்டும் அந்த ஆளுகிட்ட பேசுனா, நமக்குள்ள இருக்க வாய் தகராறு வாய்க்கா தகராறு ஆகிடும் பார்த்துக்கோ.” என்று மிரட்ட, அதற்குள் அவர்களை நெருங்கியிருந்த மகிழுந்தின் கண்ணாடி ஜன்னலை இறக்கிவிட்டு அவர்களிடம் பேச ஆரம்பித்தான் நிரஞ்சன்.

என்ன மிஸ். அஷ்வினி, டாஸ்க் முடிச்சாச்சா?” என்று வினவ, “ஹ்ம்ம் முடிச்சாச்சு முடிச்சாச்சு.” என்று சலித்துக்கொண்டாள் அவள்.

அவளின் மிரட்டலையும் மீறி, “ஹலோ நிரஞ்சன். ம் அஷ்வின் ஃப்ரம் ***** டீம்.” என்று கைகுலுக்குவதற்காக தன் கைகளை நீட்ட, நிரஞ்சனும், “ஹாய் அஷ்வின், நைஸ் மீட்டிங் யூ. உங்க டீம்ல பெஸ்ட் பெர்ஃபார்மர்னு கேள்விப்பட்டேன், குட் ஜாப் மேன்!” என்று பேச ஆரம்பித்தான்.

அங்கு ஒருத்திக்கு காதிலிருந்து மட்டும் தான் புகை வரவில்லை. மற்றபடி பொறாமை உணர்வு தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது.

அதைக் கண்டுகொள்ளாத இருவரும், ஏதோ நாட்கணக்கில் தெரிந்தவர்கள் போல பேச, அஷ்வினியும் செருமினாள் இறுமினாள். ஹும், அவர்கள் அவள் புறம் திரும்பினால் தானே!

அவளின் முக பாவங்களையெல்லாம் சிரித்து விடாமல் ஓரக்கண்ணில் பார்ப்பதே பெரிய வேலையாக இருக்க, சில நிமிடங்களிலேயே அவனால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், அங்கிருந்து விடைபெறும் சாக்கில் மகிழுந்தை கிளப்பி சென்று விட்டான் நிரஞ்சன்.

நல்ல மனுஷன்ல?” என்று அஷ்வினும் அவன் பங்கிற்கு ஏற்றிவிட, “இப்போ வீட்டுக்கு போறோமா, இல்ல இங்கயே அவன் நல்லவனா கெட்டவனான்னு பட்டிமன்றம் நடத்தப்போறோமா?” என்று பல்லைக் கடித்துக்கொண்டு அஷ்வினி கேட்க, அதற்கு மேல் சீண்டினால் அவள் பொங்கிவிடும் அபாயம் இருப்பதால், நல்ல பிள்ளையாக அவளுக்குபாடிகார்ட்வேலையைப் பார்க்க ஆரம்பித்தான் அஷ்வின்.

*****

உனக்கு என் வீட்டு பொண்ணு கேட்குதா? சாவுடா நாயே.” என்று உடல் முழுவதும் காயங்களையும் மனதில் அவளின் இனியவளையும் சுமந்து கொண்டிருந்தவனை அந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளி விட, அதை கண்டவளின் உயிரும் உடலும் நடுங்கித்தான் போனது.

சற்று நேரத்திற்கு பேசுவதைக் கூட மறந்து போனவள், திடீரென்று ஞாபகம் வரப்பெற்றவளாக, அவனின் பெயரை கத்தி அழைக்க, “என்னாச்சு மா? கண்ணு முழிச்சு பாரு.” என்று அவளருகே குரல் கேட்க, அப்போது தான் தூ(மய)க்கத்திலிருந்து விழித்தாள் அவள்.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 “என் காதல் சுடர் நீயடா(டி)” கதையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு… கதையைப் படிச்சுட்டு உங்க கருத்துக்களை காயின்ஸ் மூலமாவோ, ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ பகிர்ந்துக்கோங்க நட்பூஸ்…😁😁😁

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
23
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  19 Comments

  1. Archana

   இந்த நிரஜ்சன் உண்மையாக்குமே யாரு 🤔🤔 அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னா எதுக்கு அஸ்வினியே சீண்டனும் ஒன்னுமே புரியலையே

   1. vaanavil rocket
    Author

    உங்க எல்லா கேள்விக்கும் பதில் இனி வர எபில தெரிஞ்சுக்கலாம்…😁😁😁

   2. Nice episode ka.. akshai ashwini combo super .. niranjan ku munnadiyae ashwini ya theriyumo yena avalukaga neraya yosichu panraa maari irukku.. ellarkitayum ashwin nalla per eduthudraanae

  2. அக்ஷய் வர்ற இடமெல்லாம் செம சிற(ரி)ப்பு 🥰…மிஸ்டர்ல கவனத்தை செலுத்தி மத்ததை கோட்டை விட்டுட்டியே அக்ஷய்🤣🤣🤣…இந்த நிரஞ்சன் யாருகிட்ட போன் பேசுனான்..எந்த குடும்பத்தை தேடுறான்??..மலைல இருந்து யாரை தள்ளிவிட்டாங்க..அந்தப் பொண்ணு யாரு..எவ்ளோ கேள்விகள் இருக்கு🧐🧐🧐..நைஸ் மூவ்..கீப் ராக்கிங்

   1. vaanavil rocket
    Author

    நன்றி சிஸ்😍😍😍 அக்ஷய்😂😂😂 உங்க கேள்விக்கான பதிலை இனி வர எபில தெரிஞ்சுக்கலாம்…😁😁😁

  3. Janu Croos

   மெய்யாலுமே நிரஞ்சன் நல்லவனா கெட்டவனா….அவன் பேசுறத பாத்தா யாரோ ஒருத்தங்களால அவன் ரொம்ப பாதிக்க பட்டிருக்கான்…இப்போ அவங்கள பழிவாங்க தேடிட்டு இருக்கான்…..அதபத்தி யாருக்கிட்ட ஃபோன்ல பேசினான்…ஃபோன்ல பேசினவங்க கண்டிப்பா நிரஞ்சன் மேல அக்கறை உள்ளவங்களா தான் இருக கனும்…..
   மலையில இருந்து யாரை தள்ளி விட்டாங்க? அந்த பொண்ணு யாரு?
   நிரஞ்சனுக்குள்ள ஒரு ரகசியம் இருக்கு …அஷ்வினிக்குள்ளவும் ஒரு ரகசியம் இருக்கு….பத்தாக்குறைக்கு இப்போ ஒரு பொண்ணு அவளும் இருக்காள்….இவங்த எல்லாருக்குள்ளவும் சம்மந்தம் இருக்கா…இல்லைனா எல்லாரோட பிரச்சினையும் வேற வேறயா?

   1. vaanavil rocket
    Author

    Nice guess 👍👍👍 ஆமா எல்லாருக்குள்ளேயும் ரகசியம் இருக்கு… எல்லாம் ஒன்னோட ஒன்னு தொடர்புடையதா இல்ல தனித்தனியானதான்னு இனி வர எபில தெரிஞ்சுக்கலாம்…😁😁😁

  4. Sangusakkara vedi

   Epadiuo ennamo secret ah vachirukinganu piriyuthu athu ennanu thn guess panna mudiyala…. Niranjan nallavana kettavana…. Aven police ah…. Yar setha…. Sagar ah irukumo… Antha ponnu yar…. Avan yara tediran…. Achooo mudiyala…. Sekaram sollirunga sis …

   1. vaanavil rocket
    Author

    Eee seekiram reveal pannidalam sis😁😁😁 Niranjan yaru nu avantaye kevin vanga😉😉😉

  5. Sangusakkara vedi

   Ayyo evlo questions ooduthu en kutty mandakulla… Niranjan nallavana kettavana…. Aven Sagar ah thn konnana…. Ashwin family ah thn tedurana…. Inga ethuku vanthan…. Police….. Antha ponnu yaar….. Achooo mudiyala sekaram sollirunga sis….. Epi super…..

   1. vaanavil rocket
    Author

    Acho nan kooda ivlo yosikalaye😁😁😁 Seekiram epiyoda vandhuduren sis😊😊😊

  6. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல்

  7. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.