932 views

சுடர் 3

அஷ்வினியின் குழு அமர்ந்திருந்த கலந்துரையாடல் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு திகைத்து தான் போனாள் அவள். அவன் உள்ளே நுழைந்து, எல்லாரையும் பார்த்து ஒரு ஃபார்மலான ஹாய்கூறிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் அமரும் வரை அவனைத் தான் கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அஷ்வினி.

அவளின் நிலையைக் கண்ட ஜெனி தான் அவளை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தாள்.

அடியேய், உனக்கு சைட்டடிக்கணும்னா வேற இடமா இல்ல? இப்படி பப்லிக்கா அவரை வச்ச கண்ணு எடுக்காம பார்த்துட்டு இருக்க. அவரு உன்னை கவனிச்சா என்ன நினைப்பாரு?” என்று அவளின் காதருகில் சென்று கூற, அவளின் உறைந்த நிலையிலிருந்து வெளிவந்த அஷ்வினி, “எதே, சைட்டடிக்கிறேனா!” என்று மேலும் அதிர்ச்சியுற்றாள்.

இவர்கள் இங்கு மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்கும் போதே நிரஞ்சன் அவனின் சுய அறிமுகத்தை ஆரம்பித்து விட்டான்.

அதன்பின்னர், அஷ்வினியும் ஜெனியும் பேசிக்கொள்ளவில்லை. அஷ்வினியின் கவனம் நிரஞ்சனின் பேச்சில் இருந்தாலும், அவளின் மனமோ அடிக்கடி அந்த வாகன தரிப்பிட சம்பவத்திற்கு சென்று வந்தது.

தட்ஸ் இட் கைஸ். இனிமே, நாம எல்லாரும் சேர்ந்து ஒர்க் பண்ண போறோம். லெட்ஸ் என்ஜாய் அவர் ஒர்க் டுகெதர்.” என்று பேசியவுடன், அனைவரும் அதை ஆமோதிப்பதை போல பதிலளித்தனர்.

சிலபல பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அவர்களுக்கான முதல் வேலையாக, திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கூறினான் நிரஞ்சன்.

அத்துடன் அந்த கலந்துரையாடல் முடிய, ஒவ்வொருவராக அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். அப்போதும், குழப்பத்துடனே அவனை பார்த்துக்கொண்டே அஷ்வினி நடந்து செல்ல, சட்டென்று அவளைப் பார்த்து புருவம் உயர்த்தி என்னவென்று வினவினான் நிரஞ்சன்.

அவன் அப்படி திடீரென்று பார்ப்பான் என்று எதிர்பார்க்காததால், என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அஷ்வினி, ‘ஒன்றுமில்லைஎன்பதைப் போல தலையசைத்துவிட்டு அங்கிருந்து வெளியே ஓடினாள்.

நிரஞ்சனோ அவளின் செய்கையைக் கண்டு மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தான்.

*****

கடிகாரத்தில் மணி பதினொன்றை தொட்டுவிடும் முன்பே சிற்றுண்டியகம் செல்ல தயாராக இருந்தனர் அஷ்வினியின் குழு!

காலையில் கூறியதைப் போலவே, ஜெனியின் செலவில் குளம்பியையும் சமோசாவையும் உள்ளே தள்ளினாள் அஷ்வினி.

அஷ்வினி, ஜெனி, அக்ஷய் மூவரும் பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க, பேச்சு, முதல் நாள் வந்த சம்பளத்திற்கு சென்றது.

ஹோய், அஷ்வினுக்கு தான் இந்த முறை போனஸ் அதிகமாமே?” என்று அஷ்வினிடயிடம் கூறியவன், “ஹ்ம்ம், அவனவன் சம்பளமே முழுசா வராம புலம்பிட்டு இருக்கான். இவனுக்கு மட்டும் மாசம் ஒரு போனஸ் வந்துதுடு!” என்று முணுமுணுத்தான்.

அது அவனருகே அமர்ந்திருந்த ஜெனிக்கு கேட்க, அவளோ, “அதுக்கு சார் கொஞ்சமாச்சும் வேலை பார்க்கணும். அப்போ தான் சம்பளமே முழுசா போடுவாங்க. க்ளயண்ட் கிட்ட நல்ல பேரு எடுத்தா, போனஸும் தானா கிடைக்கும்.” என்று அவனை வாரினாள்.

போடி குள்ளச்சி!” என்று அக்ஷய் அதற்கு மறுமொழி கொடுக்க, “யாரைப் பார்த்துடா குள்ளச்சின்னு சொல்ற? நீ தான் பனை மரம் மாதிரி அப்நார்மலா வளர்ந்துருக்க.” என்று ஜெனியும் அவனைத் திட்ட, இருவரும் மாறி மாறி சண்டை போடுவதை பார்த்த அஷ்வினி வெளிப்படையாகவே தலையிலடித்துக் கொண்டாள்.

அடச்சே நிறுத்துங்க ரெண்டு பேரும். நானே இந்த அஷ்வின் பையன் போனஸ் பத்தி எதுவுமே வாய் திறக்கலையேன்னு எரிச்சல்ல இருக்கேன். நீங்க வேற சண்டை போட்டு என்னை இன்னும் எரிச்சல் படுத்திட்டு இருக்கீங்க.” என்று கிட்டதட்ட கத்தினாள்.

உடனே அக்ஷய், “ஆமா பாரேன், உன்கிட்டயே போனஸ் வந்த விஷயத்தை சொல்லல. ஹ்ம்ம் தங்கச்சிடான்னு வெளிய சொல்றதுலாம் சும்மா தான் போல.” என்று ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தான்.

அஷ்வினியோ எதுவும் பேசாமல் யோசித்துக்கொண்டிருந்தாள். அவளின் யோசனைக்கு இடையில், மற்ற இருவரும் சைகையினாலே சண்டையை தொடர்ந்தனர்.

வெகு தீவிர யோசனைக்குப் பின்னர், “அக்ஷய், நீ போய் அவன்கிட்ட போனஸுக்கு ட்ரீட் கேளு.” என்று அஷ்வினி கூற, ‘ட்ரீட்டா?’ என்று அக்ஷயும் ஜெனியும் விழித்தனர்.

இப்போ எதுக்கு ரெண்டு பேரும் இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்துட்டு இருக்கீங்க? உங்க ரெண்டு பேருக்கும் ட்ரீட் வேண்டாமா?” என்று அஷ்வினி வினவ, “நீ இப்போ கோபாவேசமா பேசுனதை பார்த்து, பெரிய சண்டை இருக்கும்னு நான் ஈகரா எக்ஸ்பெக்ட் பண்ணேன். ஆனா, நீ ட்ரீட் கேட்க சொல்ற.” என்றான் அக்ஷய்.

சண்டை இருக்கு. வீட்டுக்கு போனதும் அதுக்கான வேலையை தான் முதல்ல ஆரம்பிக்கப் போறேன். ஆனா, இப்போ இவனை விட்டா, ட்ரீட் கிடைக்குறது கஷ்டம்.” என்று அதையும் தீவிரமாகவே அவள் கூற, ‘அட சோத்துக்கு பொறந்தவளே!’ என்பதைப் போல அவளைப் பார்த்தாள் ஜெனி.

அக்ஷய்க்கு இந்த திட்டத்தில் பிடிக்காத ஒன்று உண்டென்றால் அது அவனை அஷ்வினிடம் பேசக் கூறியது தான்.

நீயே அவன்கிட்ட கேட்க வேண்டியது தான. நீதான் அவனோட தங்கச்சி. உன்மேல பாசம் வேற ஓவர்ஃப்லோ ஆகும்.” என்று அக்ஷயும் பல சாக்குபோக்குகளை கூறிப்பார்க்க, அஷ்வினி பிடிவாதமாக அவன் தான் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டாள்.

எனக்கு ட்ரீட் கூட வேண்டாம்.” என்று கெஞ்சலில் இறங்க, “நானே, அவன் பிரெண்ட்ஸோட பழகணும்னு இவ்ளோ பாடுபட்டுட்டு இருக்கேன். நீ கொஞ்சமாச்சும் கோஆப்பரேட் பண்றியா?” என்று அஷ்வினி வினவினாள்.

உன் அண்ணன் சோசியலா பழக, என்னை எதுக்கு பணயம் வைக்குற?” என்று புலம்பிக்கொண்டே தான் அந்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டான்.

*****

இந்த லூசு பண்ண வேலையால நான் இவன்கிட்டலாம் பேச வேண்டியதா இருக்கே.” என்று புலம்பிக்கொண்டே அஷ்வினின் அறைக்கு சென்றான் அக்ஷய்.

அவன் வந்ததை சற்றும் கண்டுகொள்ளாமல், அஷ்வின் அவனின் வேலையில் மூழ்கியிருக்க, ‘அந்த லூசோட பிறந்தவன் மாதிரியா இருக்கான்!’ என்று அக்ஷய் சலித்துக்கொள்ள, அவனின் மனமோ, ‘அதையே அப்படியே மாத்தி, ‘அந்த லூசு மட்டும் அஷ்வின் மாதிரியா இருக்கான்னு கூட நினைக்கலாம்.’ என்று நேரம் காலம் தெரியாமல் காலை வாரியது.

க்கும்க்கும்…” என்ற அவனின் செருமலுக்கும் எவ்வித எதிர்வினையும் இல்லாததால், வேறு வழியில்லாமல், “மச்சான்…” என்று அவனின் தோளில். கை வைத்தான்.

அதற்கு, “ம்ம்ம்.” என்ற மறுமொழி மட்டுமே அஷ்வினிடமிருந்து வந்தது. இத்தனைக்கும் அக்ஷயை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

ஐயோ, இவன் நார்மலா இருந்தாலும் இப்படி தான் இருப்பான். டென்ஷனா இருந்தாலும் இப்படி தான இருப்பான். இன்னைக்கு இவன் கிட்ட வாங்கி கட்டிக்காம கிளம்பிடனும் சாமி!’ என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டே, தான் வந்ததற்கான காரணத்தை கூற ஆரம்பித்தான் அக்ஷய்.

அப்பறம் மச்சான், போனஸ் போட்டுருக்காங்க போல?” என்று அக்ஷய் வினவ, இப்போதும் கணினியை பார்த்தபடியே ம்ம்ம்.” என்று பதிலளித்தான் அஷ்வின்.

இந்த ஆஃபிஸ்லயே நீ தான் அதிகமா போனஸ் வாங்கியிருப்ப போலயே!” என்று எப்படியாவது அவன் வாயிலிருந்து வார்த்தைகளை வாங்கிவிட வேண்டும் என்று வேதாளத்துடன் போராடும் விக்ரமாதித்தனாய், அஷ்வினுடன் போராடினான் அக்ஷய்.

அக்ஷயையோ அவனின் கேள்வியையோ சிறிதும் மதிக்காமல், மீண்டும் கணினியினுள்ளேயே சென்று விட்டான் அஷ்வின்.

ச்சே இவ்ளோ பேசுறேன், கொஞ்சமாச்சும் ரெஸ்பாண்ட் பண்றானான்னு பாரு? கல்நெஞ்சக்காரனா இருக்கானே!’ என்று எப்போதும் போல மனதிற்குள் புலம்பிவிட்டு, “இதுக்கு ட்ரீட்லாம் கிடையாதா?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.

இதுக்கு தான் நீ வந்துருப்பன்னு எனக்கு முதல்லயே தெரியும்.’ என்பதைப் போல அக்ஷயை பார்த்தவன், “நான் இதுவரைக்கும் உனக்கு ஏழு தடவை ட்ரீட் வச்சுருக்கேன்.” என்றான்.

இதை எதுக்கு இப்போ சொல்றான்?’ என்று யோசித்துக்கொண்டே, “ஆமா, வச்சுருக்க.” என்றான் அக்ஷயும்.

இத்தனைக்கும் நீயும் நானும் ஒண்ணா தான் இங்கே வந்து சேர்ந்தோம்!” என்று அஷ்வின் கூற, அவன் எங்கு வருகிறான் என்பதை புரிந்து கொண்டான் அக்ஷய்.

அவன் எதுவோ பேச, அதைத் தடுத்த அக்ஷய், “ரைட்டு விடு, நீ எங்கே வரேன்னு எனக்கு புரிஞ்சுடுச்சு. உன்னை சொல்லி தப்பில்ல, உனக்கு தங்கச்சியா பிறந்து எங்களையெல்லாம் படுத்திட்டு இருக்காளே, அவளை சொல்லணும்.” என்றவன், “இந்த அவமானம் உனக்கு தேவையா?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

அப்போது அந்த அறையில் சட்டென்று நுழைந்த அஷ்வினி, “இன்னைக்கு மதியம் உன்னோட ட்ரீட் டாட். ஷார்ப்பா ஒரு மணிக்கு கிளம்பி இரு.” என்று அஷ்வினிடம் கூறியவள், கையோடு அக்ஷயை அழைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

இந்த கருமத்தை முன்னாடியே பண்ணி தொலைச்சுருக்கலாம்ல?” என்று அக்ஷய் பரிதாபமாக அஷ்வினியிடம் வினவ, “அப்படி பண்ணியிருந்தா, இப்போ கிடைச்ச என்டர்டெயின்மெண்ட் கிடைச்சுருக்காதே!” என்று தோளைக் குலுக்கி கொண்டு கூறினாள் அவள்.

அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் என்னை வச்சு செய்யுறதுன்னா அவ்ளோ இஷ்டம். ஹ்ம்ம், பார்ப்போம் எத்தனை நாளைக்குன்னு?” என்று சலித்துக்கொண்ட அக்ஷய், அவனின் இடத்தில் சென்று அமர்ந்தான்.

*****

சரியாக ஒரு மணிக்கு, அஷ்வினி, அக்ஷய் மற்றும் ஜெனி தயாராக இருக்க, ‘ட்ரீட்கொடுக்க வேண்டியவனோ இன்னும் வந்த பாடில்லை.

அவன் வருவான்னு நினைக்குற?” என்று அக்ஷய் அஷ்வினியிடம் வினவ, “கண்டிப்பா வர மாட்டான். வா போய் கூட்டிட்டு வரலாம்.” என்று அவனையும் இழுத்துச்சென்றாள்.

யூ கோ கேர்ள், வொய் மீ?!” என்று புலம்பிக்கொண்டே அவளுடன் சென்றான் அக்ஷய்.

அஷ்வினின் அறைக்குள் சென்று பார்த்தால், அவன் இப்போதும் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்க, அதைக் கண்ட மற்ற இருவருக்கும் தான் கடுப்பாக இருந்தது.

இவனை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?” என்று அக்ஷய் முணுமுணுக்க, “எனக்கும் அந்த டவுட் இருக்கு.” என்று தற்காலிகமாக அக்ஷயுடன் கூட்டு சேர்ந்து கொண்டாள் அவள்.

அவர்கள் வந்து இரண்டு நொடிகளானாலும், அஷ்வின் திரும்பிக்கூட பார்க்காததால், கோபமடைந்த அஷ்வினி, அவனின் கணினியை அணைத்து விட்டாள். அப்போது தான் அஷ்வின் இருவரையும் நோக்கி புருவம் சுருக்கினான்.

டேய் அண்ணா, உனக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது? கொஞ்சமாச்சும் பங்க்சுவேலிட்டி இருக்கா உனக்கு? ஆஃபிஸ் வரணும்னா மட்டும் அவ்ளோ சீக்கிரம் கிளம்ப தெரியுதுல!” என்று அஷ்வினி கத்த ஆரம்பிக்க, அஷ்வின் எதுவும் பேசாமல் எழுந்து நின்றான்.

நடக்கும் சம்பவங்களையே திறந்த வாய் மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அக்ஷய்.

ஒருவழியாக, அஷ்வினையும் இழுத்துக் கொண்டு அவர்களின் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள உணவு விடுதிக்கு வந்தனர்.

*****

வெகு நேரமாக அழைத்துக்கொண்டிருந்த அலைபேசியை உயிர்ப்பித்து காதில் வைத்தவனிற்கு மறுபுறத்திலிருந்து கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாட்? இவ்ளோ நடந்துருக்கு எனக்கு ஏன் உடனே இன்ஃபார்ம் பண்ணல? இதுக்கு தான் உங்களை அங்க பார்த்துக்க சொன்னேனா?” என்று கோபத்துடன் பேசினான் அவன்.

“…”

இனிமே அங்க நடக்குறது எல்லாம் உடனே என்னோட கவனத்துக்கு வரணும். அப்பறம் மத்தவங்க எங்க போனாங்கங்கிற டிடெயில்ஸ் எல்லாம் இன்னும் டூ ஹவர்ஸ்ல எனக்கு வேணும்.” என்றவாறு அந்த அழைப்பை துண்டித்தான்.

*****

அஷ்வினியின் திட்டப்படியே, அஷ்வினின் செலவில் அந்த ட்ரீட்வெகு உற்சாகமாக சென்று கொண்டிருந்தது. ‘ஸ்டார்டர்முதல் டெஸர்ட்வரை அனைவரும் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டிருக்க, அஷ்வினோ, ‘இதுங்க தேறாத கேஸ்.’ என்னும் விதமாக பார்த்துவிட்டு அவனின் உணவில் கவனம் செலுத்தினான்.

ஒருவழியாக அவர்கள் சாப்பிட்டு முடிக்க, அஷ்வின் அதற்கான தொகையை செலுத்த சென்றிருந்தான்.

அப்போது ஜெனி, “ச்சே, இப்போ சாகர் இங்க இருந்துருந்தா செமையா இருந்துருக்கும்ல. ஐ மிஸ் ஹிம்.” என்று எதார்த்தமாக சொல்ல, அத்தனை நேரம் இதழ்களில் மட்டுமாவது சிரிப்பை தேக்கி வைத்திருந்த அஷ்வினியின் முகத்தில், அந்த சிரிப்பும் கூட மறைந்து போனது.

இன்னும் என்னென்ன பேசியிருப்பாளோ, அக்ஷய் அஷ்வினியின் முகத்தை பார்த்து, கண்டனமாக ஜெனியை நோக்க, அவளும் கூட அப்போது தான் அவள் பேசியதை உணர்ந்திருந்தாள்.

அவள் மன்னிப்பு கோரும் பாவனையுடன் அக்ஷயை நோக்க, அவர்களின் மௌன சைகைகளை எல்லாம் கவனிக்காத அஷ்வினி, “சாரி கைஸ், நீங்க பேசி முடிச்சுட்டு வாங்க. நான் கிளம்புறேன்.” என்று அத்தனை நேரமிருந்த மகிழ்ச்சி சிறிதும் இல்லாமல் இறுக்கத்துடன் கூறியவள், அங்கிருந்து வெளியே சென்று விட்டாள்.

பணத்தை செலுத்திவிட்டு வரும் வழியில், அவள் செல்வதைக் கண்ட அஷ்வின், அவளின் நண்பர்களிடம் விசாரிக்க, அக்ஷய் நடந்ததைக் கூறினான்.

சாரி அஷ்வின், நான் இன்டென்ஷனலா சாகரை ஞாபகப்படுத்தல. ஏதோ பேசுறப்போ சட்டுன்னு வந்துடுச்சு.” என்று ஜெனி கூற, “நோ இஸ்யூஸ் ஜெனி. லீவ் ஹெர் அலோன் ஃபார் சம்டைம். அவளே சரியாகிடுவா.” என்றான்.

அவர்களை சமாதானப்படுத்த அப்படி சொன்னாலும், இன்னும் சாகரின் நினைவுகள் அஷ்வினியை பலவீனப்படுத்துகிறது என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மேலும், அவளை எப்படி அதிலிருந்து மீட்கலாம் என்றும் சிந்திக்க ஆரம்பித்தான்.

சாகரைப் பற்றி நினைக்கும்போதே, அஷ்வினின் எண்ணத்தில் மின்னி மறைந்தது அந்த முகம். இன்னும் கூட, அப்பாவையின் முகம் அவன் மனதில் ஆணியடித்தது போல பதிந்திருந்தது அவனிற்கே ஆச்சரியமாகத் தான் இருந்தது!

*****

அங்கிருந்து சென்ற அஷ்வினி அலுவலகத்திலுள்ள கழிவறைக்குள் சென்று மறைந்தாள்.

அந்த உணவு விடுதி, அவளிற்கும் சாகரை நினைவு படுத்தியிருந்தது. இல்லை இல்லை, மறந்து போனதாக நினைத்தவைகளை கிளறியிருந்தது.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவளை அலைபேசி கலைக்க, அதில் ஒளிர்ந்த அஷ்வினின் பெயரைக் கண்டே, அவன் எதற்காக அழைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள் அஷ்வினி.

அலைபேசியை உயிர்ப்பித்து மறுபுறத்தில் இருந்தவனிற்கு பேசுவதற்கு கூட வாய்ப்பளிக்காமல், “டூ மினிட்ஸ்ல வந்துடுவேன்.” என்று கூறிவிட்டு அதை துண்டித்து விட்டாள்.

பின்னர் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், “ஏன்டா என்னை விட்டுட்டு போன?” என்று அடிக்குரலில் முணுமுணுத்தாள்.

துடைத்த இடத்தை, புதிதாக சுரந்த கண்ணீர் மீண்டும் ஈரப்படுத்திவிட்டு கீழே சிந்தியது.

*****

கூறியதை விட மேலும் இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டே தன் இடத்திற்கு வந்தாள் அஷ்வினி.

கண்ணீர் தடயத்தை என்ன முயன்றும் அழிக்க முடியவில்லை அவளால். அக்ஷயும் ஜெனியும் அவளின் நிலை கண்டு வருந்தினர். ஜெனிக்கு கூடுதலாக குற்றவுணர்ச்சியும் ஏற்பட்டது. ஆனால், இப்போது அதைப் பற்றி பேசினால், இன்னமும் பலவீனமடைவாள் என்பதால் எதுவும் பேசவில்லை.

அஷ்வினியின் செயல்களை எல்லாம் ஒரு ஜோடி விழிகள் பார்த்துக் கொண்டு தான் இருந்தன. அவளின் வருத்தம் எதற்கு என்று தெரியவில்லை என்றாலும், அதை கலைவதற்கான தன்னாலான முயற்சியை எடுக்க அந்த விழிகளின் சொந்தக்காரனிற்கு, அவனின் மூளை கட்டளையிட, அதற்காகவே அவளை அவனின் அறைக்கு அழைத்தான்.

*****

ப்ச் இவன் எதுக்கு இப்போ கூப்பிடுறான்?” என்று முணுமுணுத்துவிட்டு நிரஞ்சனைக் காணச்சென்றாள் அஷ்வினி.

அவன் அறையின் வெளியே நின்று கதவைத் தட்ட, அவளை உள்ளே அழைக்கவே இரண்டு நிமிடங்களானது.

அதிலேயே கடுப்பானவளிற்கு அவளைக் கண்டுகொள்ளாமல், அவன் வேலை செய்து கொண்டிருந்தது மேலும் கோபத்தை ஏற்படுத்த, தன்னுடன் பிறந்தவனும் இதே இயல்பைக் கொண்டவன் தான் என்பதை அந்நொடி மறந்து, நிரஞ்சனை வஞ்சனை இல்லாமல் திட்டித்தீர்த்தாள் அஷ்வினி.

க்கும்சார்…” என்று வேண்டாவெறுப்பாக அழைத்தாள்.

டோன்ட் கால் மீ சார்.” என்று வேகமாக வந்தது பதில்.

இதுக்கு மட்டும் உடனே பதில் வருது, இங்க ஒருத்தி பத்து நிமிஷமா நின்னுட்டு இருக்கா, அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது!’ என்று நினைத்தாள்.

மிஸ். அஷ்வினி, இன்னைக்கு மீட்டிங்ல நீங்க ஆக்டிவ்வா தான இருந்தீங்க?” என்று சம்பந்தமில்லாமல் அவன் கேள்வி கேட்க, அவளோ எதற்கென்று தெரியாமல் குழம்பியவாறே, ‘ஆம்என்று தலையசைத்தாள்.

ஓஹ், ஜெனி அனுப்புன மீட்டிங் மினிட்ஸ் மெயில் கூட வந்துருக்குமே?” என்று வினவ, அதற்கும் முன்பு போலவே தலையசைத்தாள்.

குட், அப்போ மீட்டிங்ல டிஸ்கஸ் பண்ணதெல்லாம் உங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அப்படி தான?” என்று அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுக்க, ‘இதென்னடா வம்பா போச்சு, இவனுக்கு இப்போ என்ன தான் வேணுமாம்?’ என்று மனதிற்குள் சலித்துக்கொண்டு, வெளியில் மீண்டும் ஒரு தலையசைப்பை பதிலாகக் கொடுத்தாள்.

அப்போ, உங்க ப்ராஜெக்ட் சம்மரி வேணும்னு சொன்னது கூட நினைவு இருக்கு, அப்படி தான?” என்று நிரஞ்சன் கேட்டதும் தான், அதைப்பற்றிய நினைவே அஷ்வினிக்கு வந்தது.

அந்த கலந்துரையாடல் முடிந்து வந்ததும், என்றும் இல்லாத திருநாளாக, அஷ்வினிக்கு வாடிக்கையாளரிடமிருந்து கலந்துரையாடலுக்கான கோரிக்கை வந்திருக்க, அவள் அதில் மூழ்கிப்போனாள்.

வாடிக்கையாளர்கள் திருப்தியடையும்படி சமாளித்துவிட்டு வெற்றிகரமாக அந்த கலந்துரையாடலை முடித்துவிட்டு வந்தவளிடம் அக்ஷய், அஷ்வினின் ட்ரீட்குறித்து நினைவுபடுத்த, அதன்பிறகு திட்ட அறிக்கை விஷயம் மறந்து தான் போனது.

அச்சச்சோ! இப்போ ப்ராஜெக்ட் சம்மரிக்கு நான் எங்க போவேன்?’ என்று மனதின் ஒரு ஓரத்தில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் எப்படி நிரஞ்சனிடமிருந்து தப்பிப்பது என்ற எண்ணமும் வலம் வந்து கொண்டிருந்தது.

சார், மீட்டிங் முடிஞ்சதும் ஒரு க்ளையண்ட் மீட்டிங் அட்டெண்ட் பண்ண வேண்டியதிருந்தது.” என்று அவள் இழுக்க, “டோன்ட் மேக் மீ ரிப்பிட் இட் அகேயின், டோன்ட் கால் மீ சார். அண்ட், இவ்ளோ நேரமும் க்ளையண்ட் மீட்டிங்ல தான் இருந்தீங்களா?” என்று கிடுக்குப்பிடி பிடித்தான்.

ஐயோ! அவசரத்துக்கு ஒரு பொய் கூட வாயில வர மாட்டிங்குதே.’ என்று நொந்து கொண்டு, “அது வந்து, லன்ச் டைம்மாகிடுச்சு, சோ லன்ச் முடிச்சுட்டு வந்து, சம்மரி ஒர்க் பார்க்கலாம்னு நினைச்சேன்.” என்று திக்கித்திணறி கூறினாள் அஷ்வினி.

ஓஹ், நீங்களா இப்படி ஒரு முடிவை எடுத்தீங்கன்னா, அப்போ மேனேஜர்னு நான் எதுக்கு? சீ, உங்களை லன்ச் சாப்பிட வேண்டாம்னு நான் சொல்லல. பட், லன்ச் முடிச்சுட்டு சம்மரி ஒர்க் ஸ்டார்ட் பண்றேன்னு என் கிட்ட இன்ஃபார்ம் பண்ணியிருக்கணும்னு தான் சொல்றேன்.” என்று நிரஞ்சன் கூற, “இனிமே, இன்ஃபார்ம் பண்ணிடுறேன்.” என்று மெல்லிய குரலில் கூறினாள் அஷ்வினி.

குட், சீக்கிரமா சம்மரி சென்ட் பண்ணுங்க. இன்னும் நீங்க மட்டும் தான் அனுப்பல.” என்று கூற, அஷ்வினிக்கு அக்ஷயின் நினைவே முதலில் எழுந்தது.

அட துரோகியே! சம்மரி முடிச்சுட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னியாடா லூசு? இருடா வெளிய வந்ததும் இருக்கு உனக்கு!’ என்று மைண்ட் வாய்ஸில் அக்ஷயை திட்டிக்கொண்டிருந்ததில், அவள் நிற்கும் இடத்தை மறந்து விட்டாள்.

எனிதிங் எல்ஸ்?” என்று நிரஞ்சன் வினவும் போது தான், அவளின் நிலை உணர்ந்து, “நத்திங் நத்திங்.” என்று வேகமாக உரைத்து விட்டு, அதை விட வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்றதும், அவளின் செய்கைகளை நினைத்து மீண்டும் ரசித்து சிரித்தவன், “இப்போ நான் திட்டுனதுல, நீ உன்னை வருத்துற விஷயத்தை கொஞ்ச நேரமாச்சும் மறந்துட்டு இருப்பன்னு நினைக்குறேன்.” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான்.

ஆனால், அவனிற்கு தெரியவில்லை, அவளை வருத்தும் இறந்த காலத்தை அவள் ஒருபோதும் மறக்க முனைவதில்லை என்பதை.

இறந்த காலத்தை மனதில் ஏற்றி எதிர்காலத்தை கோட்டை விடுவாளா பெண்ணவள்? இல்லை, அவளின் எதிர்காலத்தை காப்பாற்ற, இறந்த காலத்தை பலி கொடுக்க முயல்வானா ஆணவன்?

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 “என் காதல் சுடர் நீயடா(டி)” கதையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு… கதையை படிச்சுட்டு உங்க கருத்துக்களை கமெண்ட்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ, ரியாக்ஷன்ஸ் மூலமாவோ பகிர்ந்துக்கோங்க…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
27
+1
3
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  12 Comments

  1. Archana

   ஏய்யா சாகர் அப்படி என்ன தான் ப்பா உனக்கு நடத்திச்சு😵😵😵 கலகலன்னு இருக்கிற எங்க சிங்கத்தையே சாய்க்குற அளவுக்கு🥺🥺 அடேய் நிரஞ்சா நீ நார்மலா சொன்னாளே அவளுக்கு புகையா தான் வரும் இதுலே கோபமா வேற சொல்லுறியா🤣🤣🤣🤣🤣.

   1. vaanavil rocket
    Author

    ஆமா, சாகருக்கு என்னாச்சுன்னு தெரியல…🙄🙄🙄 ஹாஹா அவளை சீண்டிட்டே இருக்கான்… ஒருநாள் பொங்கி எழப்போறா..😂😂😂

  2. Janu Croos

   யாருபா இந்த சாகர்…அவன பத்தி பேசினதும் அஷ்வினி ஏன் அழுறாள்….அவன பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குனா…அப்போ அவனும் இவங்க கூட தான் வேலை பாத்து இருக்கனும்…
   நிரஞ்சனுக்கு ஏன் அஷ்வினி மேல ஒரு கரிசனம்…ஒரு வேளை லவ் பண்றானோ….
   பத்தாததுக்கு இன்னொருத்தன் வேற ஃபோன்ல யார்கூடவோ பேசிட்டு இருக்கான்….எல்லாம் ஒரே குழப்பமாவே இருக்கே….

   1. vaanavil rocket
    Author

    நல்ல கெஸ்… 👌👌👌 நிரஞ்சன் லவ் பண்றானோ…🤔🤔🤔 யாரு அந்த இன்னொருத்தன்னு இனி வர எபில பார்க்கலாம்…😁😁😁 நோ குழப்பம்…

  3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  4. அக்ஷய் பாவம் பா 🤣🤣🤣🤣..அக்ஷய்,அஷ்வின் கிட்ட ட்ரீட் கேக்கப்போனப்பா நடந்த காட்சிகள்👌👌🤣🤣🤣🤣…தட் ஜெனி சொன்ன சோத்துக்கு பொறந்தவளே moment😂😂…

   சாகர் இவங்க எல்லாருக்கும் நண்பனா..ஒண்ணா வேலை பார்த்தாங்களா..அவன் என்ன ஆனான்.அஷ்வினி ரொம்ப பீல் பண்ணி அழறா..நிரஞ்சன் அவளோட கவலையை பார்த்துட்டு திசைதிருப்புனது அருமை

   1. vaanavil rocket
    Author

    ஹாஹா ஆமா அஷ்வினி கிட்ட மாட்டிகிட்ட எல்லாருமே பாவம் தான்😂😂😂 சாகர் யாருன்னு இனி வர எபில பார்க்கலாம்…😁😁😁 ஆமா, ஒருவேளை அஷ்வினிக்கு ரொம்ப க்ளோஸா இருப்பானோ…🤔🤔🤔 நன்றி சிஸ்😍😍😍

  5. Sangusakkara vedi

   First epi pathu antha flash back love ah martum irukathunu nambuen….but love thn pola….. Sahar ah love pannunala…. Yen vitutu ponannu teriyalaye…. Niranjan thn jodi nu terunjuruchu athanala knjm nimmathi…. Aana Ashwin oru ponna ninachane athu yaru…. Aven aala…. Oru vela hospital la irukuratha sonna ponnu ivala irupalo…. Ayyyoooo evlo knots…. Seekaram ellam reveal pannunga writer ji….

   1. vaanavil rocket
    Author

    Sagar ah love panala nu ini vara epi la therinjupom sis😜😜😜 Niranjan jodi na nimmathiya 🤔🤔🤔 Thirumba sagar vandha😜🤔😉 Nice guess… Seekirama reveal pannidalam sis😁😁😁

  6. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.