1,924 views

சுடர் 27

சாகரை பார்த்துவிட்டு வரும்போது அமைதியாக வந்த நிரஞ்சனை கண்ட அஷ்வினி, “என்ன ஆஃபிஸர் அமைதியா இருக்கீங்க. எப்பவும் என்னை ஓட்டிட்டு ஜாலியா இருப்பீங்களே, என்னாச்சு இப்போ?” என்றாள்.

நிரஞ்சனோ சிரித்தபடி, “எத்தனை டென்ஷன் இருந்தாலும் நீ பேசுனா குறைஞ்சுதுடுது. என்ன தான் மேஜிக் பண்ணுவியோ?” என்று அவன் முணுமுணுக்க, அது அவளிற்கு கேட்டாலும், கேட்காததை போல, “ஏதாவது சொன்னீங்களா?” என்று வினவினாள்.

அதற்குள் சுதாரித்திருந்தவன், “இனி வர காலத்துல உன்னை எப்படி சமாளிக்குறதுன்னு தீவிரமா யோசிச்சுட்டு இருந்தேன்.” என்றான்.

“இதை யோசிக்கிறதுக்கு எப்படி ப்ரோபோஸ் பண்ணலாம்னு யோசிக்கலாம்…” என்று அவளும் முணுமுணுக்க, “ஏதாவது சொன்னியா?” என்று கேட்பது அவனின் முறையாயிற்று.

“ஒன்னும் சொல்லலையே.” என்று ஜன்னல் புறம் திரும்பிக் கொண்டவள், “குழந்தை பிறந்ததுக்கு அப்பறம் கூட ப்ரோபோஸ் பண்ண மாட்டாரு.” என்று முணுமுணுக்க, இதழ் விரிந்த புன்னகை ஒன்று வெளிப்பட்டது நிரஞ்சனிடம்.

சொன்னால்தான் சொன்னால்தான் காதலா
சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா

என்ற பாடல் ஒலிக்க, திரும்பியவளின் கண்களில் பட்டது அவன் சிரிப்பை அடக்கிய முகமே.

‘ஃப்ராடு எல்லாம் கேட்டும் இன்னும் வாய்விட்டு சொல்லாம இருக்கான்…’ என்று மனதிற்குள் அர்ச்சித்தவள், “அப்போ சொல்லவே மாட்டீங்களோ?” என்று வினவினாள்.

“அதான் சொல்லாமயே புரிஞ்சுருச்சே, இனிமே எதுக்கு சொல்லணும்?” என்று நமுட்டுச்சிரிப்புடன் அவன் வினவ, “எனக்கு எதுவும் புரியவே இல்லையே!” என்று தோளை குலுக்கினாள் அவள்.

“அப்போ உனக்கு எதுவும் புரியாது, நீ தத்தின்னு சொல்ல வரியா?” என்று வேண்டுமென்றே அவன் வினவ, ‘அடப்பாவி, என் வாயாலேயே தத்தின்னு சொல்ல வச்சுடுவான்!’ என்று பொருமிக்கொண்டு திரும்பி அமர்ந்து கொண்டாள்.

சில நிமிடங்களில், “சரி சொல்லு எப்படி ப்ரோபோஸ் பண்ணனும்னு நினைக்குற?” என்று அவனே கேட்க, அவளும் ஆர்வமாக அவன்புறம் திரும்பி, “படத்துல, கதையில வர மாதிரி…” என்று ஆரம்பிக்க, “ஆமா ஆமா, குழந்தை பிறக்கப்போற நேரத்துல கைபிடிச்சு, ‘நீ தான் எனக்கு எல்லாமே, நீயும் குழந்தையும் பத்திரமா திரும்பி வந்துடனும். ஐ லவ் யூ!’ன்னு சொல்வாங்கல, அப்படி தான?” என்றான் அவன்.

‘எதே குழந்தை பிறக்குறப்போவா!’ என்று மலைத்தவள், அவனை நோக்கி கோபப்பார்வையை வீசியபடி மீண்டும் பழையபடி அமர்ந்து கொண்டாள்.

“ஹே என்னாச்சு₹ நீதான கதையில வரமாதிரி ப்ரோபோஸ் பண்ணனும்னு சொன்ன.” என்று சிரிப்பை அடக்கியபடி அவன் வினவ, “எப்பா சாமி ஆளை விடுங்க! இனி ‘ப்ரோபோஸ்’ங்கிற வார்த்தையே என் வாயிலயிருந்து வராது.” என்றாள்.

அதன்பின்னர் சில நிமிடங்களில் அவளின் வீடு வந்திருக்க, அவள் இறங்கப்போகும் சமயம் அவளின் கரத்தை பற்றியவன், அவளை இழுத்து தன்னுடன் அணைத்துக்கொண்டு, “எனக்கு ஹார்ட் மெல்ட் பண்ற மாதிரியெல்லாம் பேசி ப்ரோபோஸ் பண்ண தெரியாது. உன்னோட இருந்தா, என் லைஃப்ல எதை வேணாலும் ஃபேஸ் பண்ணலாம்னு நம்புறேன். திடீர்னு இருண்டு போன என் லைஃப்ல வெளிச்சமா வந்தவ நீதான். நீ அப்படி ஃபீல் பண்றியான்னு எனக்கு தெரியாது. பட் உன்மேலயும் நம்பிக்கை வச்சு கேட்குறேன். என்னோட லைஃப் லாங் வர உனக்கு ஓகேவா?” என்று மென்குரலில் பேசினான்.

அஷ்வினிக்கோ நடப்பது அனைத்தும் கனவு போல இருந்தது. திடீரென்று அவன் அணைப்பான், இப்படி பேசுவான் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லையே.

‘இதுக்கே என் ஹார்ட் மெல்ட்டாகிடுச்சாம்!’ என்று மனதிற்குள் செல்லமாக கொஞ்சியவளிற்கு வெளியில் தான் பேச்சே வரவில்லை.

“ம்ம்ம்.” என்று சொல்வதற்கே தவித்து தான் போனாள்.

“அஷி என்னாச்சு? ஏன் எதுவும் பேச மாட்டிங்குற?” என்று அவளை விலக்க, குங்கும பூ நிறத்தில் ஜொலித்த அவளின் முகத்தை கண்டுகொண்டவன், தன் கைகளில் அவளின் முகத்தை தாங்கியபடி குனிய, சட்டென்று சுதாரித்தவள், பின்புறமிருந்த கதவை திறந்து வெளியேறி விட்டாள்.

“ப்ரோபோஸ் பண்ணதும் எல்லாம் நடக்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாது ஆஃபிஸர்!” என்று சிரித்தபடி அவள் வீட்டிற்குள் செல்ல, தன் செய்கையை நினைத்து வெட்கப்பட்டவனாக தலையை கோதிக்கொண்டு அவனும் வாகனத்தை கிளப்பினான்.

*****

மாதங்கள் சில கடந்தன. அனைவரின் வாழ்வும் சிலபல ஏற்றயிறக்கங்களை சந்தித்தாலும் எங்கும் தேங்காமல் சென்று கொண்டேயிருந்தது.

நவீன் மற்றும் சம்பூர்ணா அந்த வீட்டின் இன்றியமையாதவர்களாகி போயினர். சரவணன் மற்றும் சித்ரா, இரட்டையர்களையே சமாளித்தவர்களாயிற்றே! இவர்களை சமாளிப்பதா கடினம்.

அஷ்வினியின் அலுவலகத்தில், தற்போதைய ‘சுடச்சுட’ செய்தியாக மாறியது அக்ஷய் மற்றும் ஜெனியின் காதல் தான். முதலில் முறுக்கிக்கொண்டு சென்ற ஜெனியிடம் பலவாறு கெஞ்சி, கொஞ்சி சம்மதிக்க வைத்த பெருமை அக்ஷயையே சேரும். ஆனால், எப்போது அடித்துக்கொள்வார்கள், எப்போது சேர்ந்து கொள்வார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்!

நிரஞ்சன் – அஷ்வினி பற்றிய செய்தியும் கிசுகிசுவாக பகிரப்பட்டாலும், அதை நிரூபிக்குமாறு எந்த ஆதாரமும் கிடைக்காததால், அந்த கிசுகிசு நமத்துப்போனது.

ஏனெனில், இப்போதும் அலுவலகத்தில் அஷ்வினியிடம் கண்டிப்புடன் தான் நடந்து கொள்கிறான் நிரஞ்சன். அஷ்வினியே இதைப்பற்றி வினவியபோது, ‘ஒர்க் லைஃப் இஸ் டிஃப்ரெண்ட் ஃபிரம் பெர்சனல் லைஃப்’ என்று கூறிவிட்டான்.

இவர்களில், பெரிதளவில் மாற்றத்தை சந்திக்காத இருவர், அஷ்வின் மற்றும் மாயா தான்.

அஷ்வின், எப்போதும் போல தன் காதலை மறைத்துக்கொண்டு, மாயாவிற்கு உதவிக்கொண்டிருக்க, மாயாவின் மனதில் தான் சிறிதாக அவன்மீது ஈர்ப்பு உண்டாகியிருந்தது.

இதோ இப்போது அந்த ஈர்ப்பு, காதலின் முதல் படியில் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்வதில் பெரும் தயக்கம் மாயாவிற்கு. தற்போதைய அவனின் மனநிலையை அவளால் கணிக்க முடியவில்லை. நூறில் ஒரு பங்காக, தன்மீது அவன் கொண்ட காதல் குறைந்திருந்தால் என்ற தயக்கம் அவனிடம் பேச தடை போட்டிருந்தது.

ஆனால், இவர்களை கவனித்துக்கொண்டிருந்த மற்றவர்களுக்கு, இருவரின் மனதும் புரிய, ‘இப்போதைக்கு இவங்க லவ் சொல்ல மாட்டாங்க.’ என்ற ஒருமித்த கருத்தின்படி, அவர்களின் காதலை நிச்சயித்த திருமணமாக மாற்ற முயற்சித்தனர்.

இருவரிடமும் தனித்தனியாக விஷயம் பகிரப்பட, அப்போதும் தயக்கம் தான் இருவருக்கும்.

இதோ, அதே தயக்கத்துடன் தான் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் பக்கவாட்டில் அமர்ந்திருந்தனர்.

*****

“மாயா, இந்த கல்யாணப்பேச்சு உனக்கு சங்கடமா தான் இருக்கும்னு எனக்கு தெரியும். சாகர் விஷயம், உன்னோட குடும்ப விஷயம்னு நீ ரொம்பவே கஷ்டப்பட்டு இப்போது தான் கொஞ்சம் நிம்மதியா இருக்க. அதுக்குள்ள இந்த கல்யாணப்பேச்சு உன்னைக் கண்டிப்பா டிஸ்டர்ப் பண்ணியிருக்கும். ஐ’ம் சாரி.” என்று அஷ்வின் மாயாவிற்காக பேச, அத்தனை நேரம் தான் செய்வது சரியா என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருந்த மாயா முடிவெடுத்து விட்டாள்.

“இல்ல அஷ்வின், இப்போ யோசிச்சு பார்த்தா, சாகர் மேல எனக்கு காதலெல்லாம் இல்லன்னு தான் தோணுது. ஹீ இஸ் மோர் தேன் அ பிரெண்ட். ஆனா, அது லவ் கிடையாது.” என்றவள் இப்போது அழவில்லை. அவளின் மனதில் சாகருக்காக எப்போதும் இடமிருக்கும். ஆனால், அது காதலுக்காக இடம் இல்லை.

அவள் சொல்ல வருவதை முழுதாக கேட்காமல், “நீ வொரி பண்ணிக்காத மாயா. நான் அப்பா அம்மாகிட்ட சொல்லிடுறேன்.” என்று அவன் எழப்போக, அவனின் கரத்தை பிடித்தவள், “வினு, நான் சொல்றது புரியலையா? இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்.” என்றாள்.

அப்போதும் புரியாமல் அவன் விழிக்க, “எனக்கு உன்னை பிடிச்சுருக்கு வினு… இத்தனை மாசமா, உன்னோட லவ்வை மறைச்சுட்டு, எனக்காக நீ கேர் பண்ணிக்குறது பிடிச்சுருக்கு. பொண்ணுன்னா வீட்டோட இருக்கணும்னு சில பழைமைவாதிகள் மாதிரி பிற்போக்குத்தனமா நினைக்காம, என்னோட பயத்தை போக்கி, இந்த உலகத்தை ஃபேஸ் பண்ண வச்சது எனக்கு பிடிச்சுருக்கு. இருட்டு தான் வாழ்க்கைன்னு நினைச்சுட்டு இருந்த எனக்கு, உன் காதல் மூலமா வெளிச்சத்தை அறிமுகப்படுத்துன உன்னை பிடிச்சுருக்கு.” என்று அத்தனை நேரம் அவன் கண்களை பார்த்து பேசியவள், குனிந்த தலையுடன், “இனி இந்த கல்யாணத்தை நிறுத்துறது உன் விருப்பம்.” என்றாள்.

அஷ்வினிற்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை. ‘இது எப்படி சாத்தியம்?’ என்ற எண்ணத்திலேயே அவன் உறைந்திருந்தான்.

தான் பேசி பல நிமிடங்களான பின்னும் அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக, நிமிர்ந்து பார்த்தவள் கண்டது அதிர்ச்சியிலிருந்த அஷ்வினை தான்.

“வினு…” என்று பலமுறை அழைத்த பின்னரே சுயத்தை அடைந்தவன், மாயாவை பார்க்க, அவளோ வேறு பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டாள்.

மெல்ல அவள் நாடியை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன், “மாயா, நீ சொன்னதெல்லாம் நல்லா யோசிச்சு தான் சொன்னியா? இல்ல, கல்யாணம்னு ஏதாவது கம்பல்சன்ல சொன்னியா?” என்று அவன் வினவ, “இப்போ நான் பொய் சொன்னேன்னு சொல்றியா?” என்று கோபமாக வினவினாள் மாயா.

“இப்போயெல்லாம் ரொம்ப கோபப்படுறியே மாயா!” என்று அஷ்வின் சிரித்துக்கொண்டே கூறியவன், அவளின் கரத்தை பற்றியபடி, “சரி வா, கல்யாணத்துக்கு சம்மதம்னு எல்லாருக்கிட்டயும் சொல்லிடலாம்.” என்று கூற, இத்தனை நேரமில்லாத வெட்கம் இப்போது அவளை சூழ்ந்து கொள்ள, “இல்ல நான் வரல, நீயே சொல்லு.” என்றாள்.

அவள் என்னதான் மறுப்பு கூறினாலும், அவளை அழைத்துக்கொண்டு தான் பெற்றோரிடம் சம்மதத்தை கூறினான்.

அவர்களின் சம்மதம் அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க, அஷ்வினிக்கு இருவரையும் ஓட்டுவதிலேயே நேரம் போனது.

“நீதான் இதுக்கெல்லாம் காரணமா?” என்று அஷ்வின் அஷ்வினியின் காதை பிடித்து திருக, “டேய் அண்ணா, விடுடா என்னை. நான் எல்லாம் காரணம் இல்ல. இப்படி குடும்பமே உங்களை கவனிக்குதுன்னு தெரியாம, லவ்ஸ்ஸா சுத்துன நீங்க தான்டா காரணம்.” என்றாள் அஷ்வினி.

பிறகு, திருமண பேச்சுவார்த்தைகள் அங்கு நடைபெற, கிடைத்த இடைவேளையில் இதை நிரஞ்சனிடமும் கூறியிருந்தாள் அஷ்வினி.

அலைபேசியை பார்த்தபடி நடுகூடத்தை வந்தவள் அறியவில்லை, இப்போது மொத்த குடும்பமும் அவளை கவனிப்பதை…

“வினி, அடுத்து உன் கல்யாணம் தான்.” என்று சரவணன் கூற, சட்டென்று திருமண பேச்சு தன்னை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்காதவள், “ப்பா, இப்போ எதுக்கு அவசரமா?” என்று அதிர்ச்சியுடன் கூறினாள்.

“ஓஹ், இப்போ கல்யாணம் வேண்டாமா? அப்போ போன வாரம் மாப்பிள்ளை என்கிட்ட கல்யாணத்தை பத்தி பேசுனாரே. நான் கூட ரெண்டு கல்யாணமும் சேர்த்து பண்ணலாம்னு நினைச்சேன்.” என்று அவர் கூற, ‘மாப்பிள்ளையா?!’ என்று குழம்பினாள் அஷ்வினி.

சில நொடிகள் அவளை குழம்பவிட்டு, பின்னர்தான், “போன ஃப்ரைடே ஈவினிங் நிரஞ்சன் வந்து பேசியிருக்காரு.” என்ற தகவலை கூறினர்.

‘அடப்பாவி ரோபோ, எனக்கு வேலை கொடுத்து அங்க உட்கார வச்சுட்டு, சைட் கேப்புல இங்க வந்து பேசியிருக்கியா!’ என்று நினைத்துக்கொண்டவள், “ப்பா, ரெண்டு கல்யாணமும் ஒன்னா செய்ய வேண்டாம். ஃபர்ஸ்ட் அஷ்வின் – மாயா கல்யாணம் முடியட்டும். அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு எங்க கல்யாணம் நடக்கட்டும்.” என்றாள்.

“ஏன்டி?” என்று சித்ரா வினவ, “ம்மா, இப்போ தான் நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சோம். உடனே எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது. கொஞ்ச நாள் எங்க லவ்வை என்ஜாய் பண்ணிட்டு, அப்பறமா தான் கல்யாணம் பண்ணிப்போம்.” என்றாள் அஷ்வினி.

“இவ இப்படி தான் உளறுவா, நீங்க மாப்பிள்ளைகிட்ட கேளுங்க.” என்று சித்ரா சரவணனிடம் கூற, “அவரும் அப்படி தான் சொல்வாரு.” என்றாள் அஷ்வினி.

சரவணன் நிரஞ்சனிடம் பேசிவிட்டு, “வினி சொல்ற மாதிரியே செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டாரு.” என்க, அஷ்வினியோ, “நான் தான் சொன்னேன்ல.” என்று அன்னைக்கு பழிப்பு காட்டியபடி தன்னறைக்கு சென்றாள்.

*****

அறைக்குள் நுழைந்ததுமே எண்ணியது போலவே நிரஞ்சனிடமிருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றதும், “எதுக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்ன?” என்றான் நிரஞ்சன்.

“ப்பா, என்ன வேகம் மிஸ்டர். ரோபோ! அவ்ளோவா நம்ம கல்யாணத்தை எதிர்பார்த்தீங்க?” என்று கிண்டலாக அஷ்வினி வினவ, “ப்ச், அஷி நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்.” என்றான் நிரஞ்சன்.

“எல்லாம் உங்க மாமியார் கிட்ட சொன்ன அதே ரீசன் தான். இன்னும் கொஞ்ச நாளைக்கு லவ்வை என்ஜாய் பண்ணிட்டு, அப்பறமா கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்றாள் அஷ்வினி.

அவள் கூறுவது உண்மை இல்லை என்று நிரஞ்சனிற்கு தெரிந்தாலும், இன்னும் எத்தனை முறை கேட்டாலும் உண்மையை சொல்லப்போவதில்லை என்பது புரிந்தவனாக வேறு விஷயங்களை பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அவனிற்கும் அப்போது திருமணம் செய்வதில் பெரிதாக ஆர்வம் இல்லையோ!

*****

மறுபுறம் மற்றைய ஜோடி மொட்டைமாடியில் பேசிக்கொண்டிருந்தனர்.

“நான் உன்னை லவ் பண்ணது உனக்கு எப்படி தெரியும்? எப்போ தெரியும்? வினி சொன்னாளா?” என்று அஷ்வின் வினவ, அவனின் தோளில் சாய்ந்திருந்த மாயா, “வினி இல்ல நீதான் சொன்ன.” என்றவள், அன்று இதே மொட்டைமாடியில் அவன் பேசியதை தானும் கேட்டதை விளக்கினாள்.

“ஓஹ், அப்போவே தெரியுமா? ஏன், அதைப்பத்தி என்கிட்ட எதுவும் கேட்கல? என்று அவன் வினவ, “ம்ம்ம், எனக்கு தெரிஞ்சுடுச்சுன்னு உனக்கு தெரிஞ்சா நீ வருத்தப்படுவன்னு நினைச்சேன். அதான் வினியையும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டேன்.” என்று மாயா கூற, அவளை தோளோடு அணைத்து தலை சாய்த்தான் அஷ்வின்.

*****

நாட்கள் விரைய, இதோ அஷ்வின் – மாயா திருமண நாளும் வந்துவிட்டது. அனைவரும் பம்பரமாக சுழன்று அவரவர்களின் வேலையை செய்ய, திருமண கனவில் திளைத்திருந்த மணமகனும், மணமகளும் தங்களுக்குள் சைகை மொழியில் பேசிக்கொண்டனர்.

முதல் வரிசையில் நிரஞ்சனின் சித்தியும் தாத்தாவும் அமர்ந்திருந்தனர். கலைவாணி தான், தன் கண்முன்னே அலைந்து கொண்டிருந்த தன் வருங்கால மருமகளை அவ்வபோது அழைத்து, குடிக்க தண்ணீர் கொடுத்து உபசரித்தார்.

அதை கண்ட சரவணனும் சித்ராவும், தங்கள் பெண் நல்ல இடத்தில் வாழப்போகிறாள் என்று நிம்மதி கொண்டனர்.

இருவரின் பாசப்பிணைப்பை கண்ட நிரஞ்சன், “சித்தி, இதெல்லாம் டூ மச். நானும் தான் ஓடியாடி வேலை பார்த்துட்டு இருக்கேன், என்னை என்னன்னு கேட்க கூட ஆளில்ல. மேடம் ஜஸ்ட் அங்கயிங்க நடக்குறாங்க, இதுக்கு இவ்ளோ பில்ட்-அப்பா?” என்றான்.

“பிள்ளையை பார்த்து கண்ணு வைக்காத நிரஞ்சா. எவ்ளோ களைச்சு போயிருக்கா, நீ போய் ஜூஸ் வாங்கிட்டு வா.” என்று அவனிடமே கூறினார்.

அவரருகே அமர்ந்திருந்த அஷ்வினியோ நமுட்டுச்சிரிப்புடன் அவனை பார்த்திருந்தாள்.

கீழே இத்தகைய கலாட்டா நடந்தது என்றால், மேடையில் அஷ்வின் அருகே வந்த சம்பூர்ணா, “நான் உங்களை அங்கிள்னு அப்போ கூப்பிட்டது சரி தானாம். நீங்க எனக்கு மாமா தானாம். வினி அண்ணி சொன்னாங்க.” என்று கூற, சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர்.

இப்படி அந்த இடமே கலாட்டாவாக இருக்க, நல்ல நேரத்தில் மாயாவின் கழுத்தில் தாலியை கட்டி தன் சரிபாதியாக்கி கொண்டான் அஷ்வின்.

அப்போது, “ஸ்மைல் பிளீஸ்…” என்ற சத்தம் கேட்க, அனைவரும் சத்தம் வந்த இடத்தை நோக்க, அங்கு அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான் சாகர்.

சாகரைப் பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சியடைவதை காட்டிலும் நிரஞ்சன் தான் அதிகம் அதிர்ந்தான்.

‘இவன் எப்படி இங்க?’ என்று அவன் யோசிக்கும்போது கலைவாணியின் நினைவு வர, வேகமாக அவரருகே சென்றான்.

கலைவாணியோ கண்சிமிட்டாமல் சாகரையே பார்த்துக்கொண்டிருந்தார், எங்கு கண்சிமிட்டினால், அவன் மறைந்துவிடுவானோ என்ற பயத்தினாலோ.

தன்னருகே வந்த நிரஞ்சனின் கைகளை பற்றிக்கொண்டவர், “நிரஞ்சா, அது நம்ம… சா… சாகரா..? என் பையன் உயிரோட இருக்கானா?” என்றவரின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.

அவரின் புலம்பலை கேட்ட நிரஞ்சனிற்கு, சாகர் உயிரோடு இருந்ததை அவரிடம் மறைத்தது குற்றவுணர்வை தந்தது.

அப்போது சாகரும் அன்னையை அடைந்திருக்க, இருவருக்குமிடையே பாசப்போராட்டம் நிகழ, இதற்கு காரணமான அஷ்வினியை ‘பாசமாக’ பார்த்தான் நிரஞ்சன்.

“ஹலோ மிஸ்டர். ரோபோ, இப்போ எதுக்கு என்னை முறைக்குறீங்க? எல்லாம் சரியா தான நடந்துட்டு இருக்கு.” என்று அஷ்வினி கூறினாள்.

அதற்கு நிரஞ்சன் பதில் கூறுவதற்கு முன்பே அங்கு வந்த மாயா, “அண்ணா, எங்களுக்காக தான் நீங்க சாகர் உயிரோட இருக்க விஷயத்தை யாருகிட்டயும் சொல்லாம மறைச்சீங்கன்னு நினைக்கும்போது, இத்தனை நல்லவங்களை கொடுக்க தான், கடவுள் இத்தனை கஷ்டங்களை கொடுத்திருக்காருன்னு நினைக்குறேன். எல்லாமே நல்லபடியா முடிஞ்சுது அண்ணா. இனி, சாகர் எங்கயோ இருக்க தேவையில்லை. அவங்க குடும்பத்தோட சந்தோஷமா இருக்கட்டும்.” என்றவள் சாகர் – கலைவாணியின் புறம் பார்வையை செலுத்தினாள்.

தாயும் மகனும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்வது கவிதையாக இருந்தது.

“அப்போ இந்த பிளான்ல எல்லாருமே கூட்டா?” என்று அஷ்வினி, அஷ்வின் மற்றும் மாயாவை நோக்கி வினவினான் நிரஞ்சன்.

“பின்ன, நீங்க மட்டும் தான் பிளான் போட்டு வில்லனை தூக்குவீங்களா, நான் ஹீரோயினாக்கும்! அதான் பிளான் போட்டு ஹீரோவோட தம்பியை தூக்கியாச்சு.” என்று கூறி கலைவாணியிடம் சென்றுவிட்டாள் அஷ்வினி.

அப்போது நிரஞ்சனை பாவமாக பார்த்த அஷ்வின், “இப்போ கூட என்கிட்ட பேச மாட்டீங்களா பாஸ்?” என்று வினவ, சிரித்தபடி அவனின் தோளில் தட்டிய நிரஞ்சன், “இனி பேசித்தானே ஆகணும். இதை சாக்கா வச்சு பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிட்டா?” என்று கூற, இருவருமே சிரித்துக்கொண்டனர்.

‘இத்தனை நாட்கள் சாகர் எங்கு சென்றான்?’ என்ற கேள்விக்கு, பலவற்றை மறைத்து சிலவற்றை மட்டும் கூறி சமாளித்தனர் அந்த நால்வர் குழு.

*****

திருமணம் முடிந்தாலும், இன்னமும் பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டு தான் இருந்தது அந்த மண்டபத்தில்.

தனியிடம் தேடி அந்த மண்டபத்தின் மொட்டைமாடியை அடைந்த நிரஞ்சன், இலக்கின்றி வெறித்தபடி நின்றிருந்தான்.

தன்னவனையே பார்வையால் சுற்றிக்கொண்டிருந்தவளின் கவனத்தில் படாமல்போகுமா அவனின் தனிமை பிரவேசம்.

அவன் கவனம் சிதைக்காமல் அருகில் வந்தவள், “எதை ரொம்ப நேரமா வெறிச்சு பார்க்குறீங்கன்னு சொன்னா, நானும் ஏதாவது தேறுமான்னு பார்ப்பேன்ல.” என்றாள்.

அவளின் வாசனை திரவியத்தின் நறுமணத்திலேயே அவள் வந்ததை தெரிந்து கொண்டவனோ, “எல்லாருக்கும் நல்லது பார்த்த நான், சித்திக்கு நல்லது செய்யலையோன்னு தோணுது.” என்றான் சோர்வாக.

அவன் தோளில் கைவைத்து சமாதானப்படுத்தியவள், “நிரு, எப்பவும் எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாது. அதே மாதிரி தான் நம்ம செய்யுறதும் எல்லாருக்கும் நன்மை கொடுக்கும்னு சொல்ல முடியாது. நீங்க செஞ்சது தப்புன்னு அத்தை சொல்லவே இல்லாதப்போ எதுக்கு இப்படி ஃபீல் பண்ணிட்டு இருக்கீங்க?” என்றாள் அஷ்வினி.

அதற்கு எவ்வித எதிர்வினையும் இல்லாமல் போனதால், “உங்களை இப்படி பார்க்க சகிக்கல மிஸ்டர். ரோபோ.” என்று வம்பிழுக்க, அது சரியாக வேலை செய்தது.

பின் அவளிடம், “எதுக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்ன?” என்று வினவினான் அவன். இப்போது ஓரளவிற்கு அதற்கான காரணத்தை யூகித்துவிட்டாலும், அவள் வாயிலிருந்து வரவேண்டும் என்று விரும்பினான்.

அவளோ புன்னகையுடன், “நீங்க வேணா உங்க தம்பி இல்லாம கல்யாணம் பண்ணிக்க நினைக்கலாம். நானெல்லாம் என் பிரெண்ட் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டேனாம். எனக்கு இருக்குறது ஒரே ஒரு அடிமை. என் கல்யாணத்துக்கு அவன் ஓடியாடி வேலை செய்ய வேண்டாமா?” என்றாள்.

என்னதான் இப்படி கூறினாலும், இதுவும் தனக்காக தான் என்பதை நிரஞ்சனும் அறிந்துதான் இருந்தான்.

அவளை இழுத்து அணைத்தவன், “தேங்க்ஸ்…” என்று அவளின் காதில் முணுமுணுக்க, “தேங்க்ஸ்லா எனக்கு வேண்டாம்.” என்று சிணுங்கினாள் அவள்.

“தேங்க்ஸ் வேண்டாமா, இல்ல இப்படி தேங்க்ஸ் வேண்டாமா?” என்று அவன் குறும்பாக புன்னகைக்க, “ஆசை தான்!” என்று அவனை தள்ளிவிட்டாள்.

அப்போது, “க்கும்… நான் வரலாமா?” என்று வாசல்புறம் சத்தம் கேட்டது.

சாகர் தான், தன் கண்களை கைக்கொண்டு மூடியபடி அங்கு நின்றிருந்தான்.

“எதுக்குடா கண்ணை மூடியிருக்க?” என்று அஷ்வினி வினவ, “ஒரு சின்ன பையன் இருக்கேன்னு கூட பார்க்காம, ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தா என்ன பண்றதாம் பன்னி… ச்சே அண்ணி!” என்று வேண்டுமென்றே அவனிடம் வம்பிழுக்க, “என்னையாடா பன்னின்னு சொன்ன?” என்று அவனைத் துரத்த ஆரம்பித்தாள் அஷ்வினி.

இருவரும் அந்த மண்டபத்தை சுற்றி ஓடுவதை கண்டவர்கள் சிரிப்புடன் அவர்களை பார்த்திருக்க, இதே மகிழ்ச்சி அவர்கள் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்க வாழ்த்தி விடைபெறுவோம்.

முற்றும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 உங்க 🌈🔥 ஒருவழியா கதையை முடிச்சுட்டேன்… கதையை படிச்ச எல்லாரும் அட்டெண்டன்ஸ் போட்டு கதை எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க… கதையில் உங்களுக்கு பிடிச்சது பிடிக்காதது எல்லாமே சொல்லலாம்…😊😊😊 உங்க கருத்துக்களை தெரிஞ்சுக்க ஆவலாக வெயிட்டிங் நட்பூஸ்…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
22
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  11 Comments

  1. Janu Croos

   அழகான அழுத்தமான கதை. நட்பு, பாசம், காதல், கோபம்னு அத்தனை விதமான உணர்வுகளும் இருக்கு.
   அஷ்வினி சாகரோட நட்பு அழகா இருந்துச்சு. அலுவும் நண்பனுக்கு ஒரு கொடுமை தன் கண்முன்னாலயே நடந்தத தாங்க முடியாம இருந்த அஷ்வினிக்கு அவனுக்கு ஒண்ணும் இல்லனு சொல்லி தெரியவந்ததும் அவளோட உணர்ச்சிகளை அழகா அழுத்தமா காட்டி இருந்துச்சு.

   நிரஞ்சன் தன்னோட தம்பிக்காக மட்டும் இல்லாம பல பேரோட மூடநம்பிக்கைகள மூலதனமா வச்சு வேலை பாக்குற பல பேருக்கு பாடம் கத்து குடுத்துட்டான்.

   அஷ்வின் நல்ல அண்ணன். நல்ல நண்பன். நல்ல காதலன். காதலிச்சத அந்த பொண்ணுக்கிட்ட சொல்லல ஆனா அந்த பொண்ணுக்காக எல்லாமே பண்ணான். அதுக்கு பரிசா அவன் காதல் ஜெயிச்சிடிச்சு.

   புள்ளைங்கள நல்லா வளர்க்குறதும் நாசமாக்குறதும் பெத்தவங்க கையில தான் இருக்குனதுக்கு உதாரணம் சர்வஜித்.

   அஷ்வினோட அப்பா அம்மா அருமையானவங்க. தன்னோட பிள்ளைங்கள மட்டுமில்லாம தங்க வீட்டுக்கு வந்த பிள்ளைங்கள கூட பாசமா பாத்துக்குறாங்க.

   இன்னும் மூடநம்பிக்கைகளால பல குடும்பங்கள் சிதைஞ்சு போறதையும். பெத்தவங்களே புள்ளைங்களுக்கு எதிரியா இருக்கதையும் அழுத்தமா சொல்லி இருக்கீங்க.
   கதை அவ்வளவு அருமையா இருந்துச்சு.
   இன்னும் பல கதைகள எழுத வாழ்த்துக்கள்.

   1. vaanavil rocket
    Author

    நன்றி சிஸ்😍😍😍 கதையோட முதல் எபியிலிருந்து லாஸ்ட் எபி வரைக்கும் உங்க கருத்துகளை சொல்லி ஊக்கப்படுத்தி, என்னை இந்த கதையை முடிக்க வச்சதுக்கு நீங்களும் ஒரு காரணம் 😍❤️😍 உங்களுக்கு இந்த கதை பிடித்ததில் மகிழ்ச்சி 😁😁😁

  2. Archana

   Thagapa kadasi vara rachu ku pair panave illa sagar ah😒😒😒😒😒 ஸ்ட்டோரி சூப்பரா இருந்துச்சு 😍😍😍 அதுவும் வினி இருக்கிற இடத்திலே என்ன பஞ்சம் வர போகுது, ரோபோ தான் கடைசி வர ரோபோவா வே திரிஞ்சிட்டு இருந்தான்🤣🤣🤣 இருந்தாலும் ரச்சுவே கடைசி வர காட்டாதது ஒத்துக்க முடியாதது அது மட்டும் தான் குறை🙃🙃🙃🙃🙃

   1. vaanavil rocket
    Author

    Thani epilogue vachudalam my son for sagar and rachusree 😊😊😊Tq so much da for the continuous support from beginning to the end of the story…😍😍😍 Happy that u liked the story…😍❤️😍

  3. Interesting stry sis super moodanambikkai ah la vara prb ah theliva solli irukinga sis lov frndship emotion ellame super super nice stry sis

   1. vaanavil rocket
    Author

    Tq so much sis 😍😍😍 Story starting la irundhu support panni nan reply panna late panna kooda unga comments kuduthadhuku romba thanks 😊😊😊 Happy that u liked the story sis 😍❤️😍

  4. அவல் பொங்கல்

   என் காதல் சுடர் நீயடா(டி) வானவில் ராக்கெட்

   அஷ்வின் அஷ்வினின்னு டிவின்ஸ் அவங்க லைஃப்ல நடந்த சில கசப்பான சம்பவம் தான் இந்த கதை..

   அஷ்வினி இதும் ஒரு அரலூசு, ஆர்வகோளாரு ஹீரோயின். அவ ஃபிரண்ட் ஒருத்தனுக்கு ஏற்கனவே இருக்க பிரச்சனை தெரியாம இவ இழுத்து விடுற உரண்டைல மொத்தத்துல ஒரு பெரிய சம்பவம் நடந்து முடிஞ்சிருச்சு.

   இதுக்கு நான் தான் காரணம்ன்னு ஒரு குருப் குற்றவுணர்ச்சில புலம்ப இன்னொரு குருப் இதுக்கு நீங்க காரணம் இல்லன்னு சமாதாணம் பன்னி உண்மைலயே என்ன நடந்ததுன்னு கண்டுபிடிக்கிறது தான் கதை.

   வாணவில் ராக்கெட் பேருக்கு ஏத்தமாதிரி பல நட்பு, காதல், கோபம், பழி, மூடநம்பிக்கை, குற்றவுணர்வு, காமெடின்னு எல்லா பீலிங்சையும் கலந்து கட்டி எழுதிருக்காங்க.

   கதைல சுயநலமா ஒரு குடும்பமும், அன்பும் எதிர்பார்ப்பு இல்லாத பாசமும் கொண்ட ரெண்டு குடும்பங்கள காட்டிருக்காங்க. அதோட நிரஞ்சன்னோட சித்தி கேரக்டர் ரொம்ப புடிச்சிருந்தது.

   இன்னமும் இந்த சமுதாயம் ராசி கெட்டவ, வாழ தெரியாதவ, வாழாவெட்டின்னு ஆண் பெண் யாரு தப்பு பண்ணாலும் பெண் மேல தான் தப்பு சொல்லுறதையும் லைட்டா டச் பண்ணிருக்காங்க

   அதே நேரம் பொண்ணு அது மகளா இருந்தாலும் சரி மருமகளா இருந்தாலும் சரி அவளுக்கான ஸ்பேஸ் நாம கொடுக்கனும் இதே நேரம் அவங்க கலங்கி நிக்கும் போது தோள் கொடுக்க நாம இருக்கனும்ன்னு சொல்ற பேரெண்ட்ஸ் இருக்காங்கன்னும் காட்டிருக்காங்க..

   கதைல மாயான்னு ஒரு பயந்த சுபாவம் உள்ள பொண்ணு கேரெக்ட்டர்ர நல்லா பண்ணிருந்தாங்க. பொதுவா இது மாதிரி கேரெக்ட்டர்ர லூசாதான் காட்டுவாங்க. பட் அந்த பொண்ணு பயந்த சுபாவம் உள்ள பொண்ணு தான் அது தெளிஞ்சதும் அது தன்ன சரியா கேட்ச் பண்ணி அவ லைஃப்ஃப செலெக்ட் பன்னது சூப்பர்.

   இந்த மூட நம்பிக்கைன்ற பேர்ல மக்களை ஏமாத்துறது ரொம்ப இடத்துல இன்னும் நடந்துட்டு தான் இருக்கு ஆனா நரபலி எல்லாம் இன்னும் இருக்கான்னு எனக்கு தெரியல..

   கதைல நிறைய டிவிஸ்ட் ஓபன் பன்னல ஆனா அத அடுத்த பார்ட்டா அவங்க எழுதும் போது சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்..

   அதே மாதிரி பிட்டுபிட்டா ஃபிளாஸ்பேக் வருது. எல்லா கேரக்டர்ஸ்ஸும் முழுதா இண்ட்ரோ ஆகாத இடத்துல பிட்டு பிட்டா சம்பவம் இருந்தது கொஞ்சம் குழப்பமா இருந்தது..

   கதைய இன்னும் பிளான் பண்ணி எழுதிருக்கனும்.

   ரொம்ப நல்ல முயற்சி.

   வாழ்த்துக்கள் வானவில் 💐💐

  5. Karthika R

   Superb story 👌🏻👌🏻👌🏻 kaadhal, pasam, frndship, ellame romba super ah solirukinga 👌🏻👌🏻👌🏻👌🏻 ashwini sagar frndship osm😍😍😍 avana nenechu ava feel pannathulam sema… Ashwin ashwini bonding azhagu😍😍😍😍 niranjan oru annan ah sagar kaga pannathelam sema 👌🏻👌🏻 niranjan vini pair lovely😍😍😍😍😍 ashwini akshay Jeni frndship sema😍😍😍😍😍 meera oda feelings ah purinjikitu ashwin avaloda guilt la irunthu velila vara vechathu sema 😍😍😍😍 ashwin love ah purinjikitu meera avanoda life Start pannathu azhagu 😍😍😍😍 Sagar oda purithal sema😍😍😍😍😍 Sagar அம்மா oda boldness sema👌🏻👌🏻👌🏻 aswin ashwini parents lovely 👌🏻👌🏻👌🏻👌🏻 narabali la innum Nadakuthu appadinum bothu romba kashtama iruku.. மூடநம்பிக்கை ல epothan oru mudivuku varumnu iruku.. Nice concept.. oru epilogue potu vita story fulfill ana feel kedaikum…. Good story 👌🏻👌🏻👌🏻👌🏻

  6. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  7. 9தானிய பொங்கல்

   என்ன ஒரு வில்லத்தனம் இந்த ராக்கெட்டுக்கு😂😂😂 ஒவ்வொரு எபிலயும் ஒவ்வொரு கேள்விய மனசுல வரவைக்கிறங்களே…
   முதல் எபி ல இருந்தே😍
   ஆரம்பமே கலகலனு இருக்கிற அஸ்வினி எண்ட் தனது அறையே சொர்க்க்ம்னு இருக்கிற அஸ்வின் குடும்பம் அழகான அன்பான குடும்பம்😍 கலகலப்பான ஹீரோயினி னு நாம நினைச்சா வைச்சங்களே twist அவ( அதுக்குனு கலகலனு இல்லனு சொல்லல அவளும் அவ friends அஷய், ஜெனி எல்லாம் சேர்ந்து அடிக்கிற லூட்டியும் இருக்கு) பழைய விசயத்தை மறந்துட்டளா இல்லையனு அப்படி என்ன தான் நடந்தது ஆனலும் என்ன நடந்து இருந்தாலும் அவளை தாங்கும் குடும்பம்😍
   நிரஞ்சன் இவன் வில்லனா ஹீரோ வானு ஒரு குழப்பு குழப்பி எடுத்துட்டங்க.
   அடேய் அந்த சின்ன பொண்ணு போட்டோ பார்த்து நீ கட்டிக்கிறேன்னு சொன்னதும் ஏதோ சித்திய கலாய்க்க சொல்லுறனு நினைச்ச அவ யாருனு தெரிஞ்சு தான் சொல்லி இருக்கியா கேடி😂😂

   🙄சாகர்🙄
   யார் இவன்🤔
   இவனுக்கும் அஸ்வினிக்கும் என்ன சம்பந்தம் அவன் சாவுக்கு தான் தான் காரணம்னு இவ புலம்ப என்ன காரணம்🤔
   இவனுக்கும் நிரஞ்சனுகும் என்ன சம்பந்தம்🤔
   மாயாக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்🤔( ஆமா யாரிந்த மாயா னு தானே கேட்குறீங்க… Wait கரோ wait கரோ சொல்லுறேன்)
   #மாயா#
   அவ தாங்க படிப்பறிவு இருந்தும் ஜாதி வெறி ல கொலையே பன்னினாலும் அதை பெருமையா சொல்லுற, பணம் கிடைக்கும்னு ஜோசியம் பார்த்து பெற்ற பிள்ளைகள் னு கூட பார்க்கது நரபலி கொடுக்க கூட தயங்காத குடும்பத்தில் பிறந்தவ😔😔😔 இவளும் அந்த சின்ன வாண்டுகள் இரண்டும் ரொம்ப பாவம்😔😔😔
   மீண்டும் அதே கேள்விகள்
   இவளுக்கும் அஸ்வினிக்கும் என்ன சம்பந்தம் ஏன் அவ மேல கோபமா இருக்கா🤔
   இவளுக்கும் நிரஞ்சனுகும் என்ன சம்பந்தம் hospital அவ இருக்க காரணமானவங்கள இவன் ஏன் தூக்கினான்🤔
   அது சரி அஸ்வினிக்கு தெரியும் ஏன் நிரஞ்சனுக்கே தெரியுது அப்ப நம்ம அஸ்வினுக்கு மாயா வ தெரியுமா🤔 விழுந்து விழுந்து அவளுக்கு உதவி பண்ணுறான் அவ பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டு வர பாடு படுறான் அப்ப என்னவா இருக்கும்🤔
   இப்படி தாங்க இந்த கதைய நான் படிக்கும் போது ஒவ்வொரு கேள்வியா வந்தது எல்லாத்துக்கும் விடை கதையில இருக்கு லிங்க் 👇👇👇👇 இருக்கு( அதையும் நீயே சொல்லிட்ட என்னனு தானே கேக்குறீங்க அப்புறம் vaanavil கிட்ட ஆரு அடிவாங்குறது😉😉)
   இதுல யாருக்கு ஜோடி யாரோனு கேள்வி வேற😂😂😂
   ஆனா ஒன்னு முதல்ல நிரஞ்சன் அப்புறம் அஸ்வினி அப்புறம் அபிநந்தன் கடைசியா சாகர் இப்படி எல்லோரையுமே வில்லன்னு சந்தேகபட வச்சிட்டீங்களே
   அருமையா அழகா கதையை தந்த ஆசிரியருக்கு ஒரு பாராட்டுகள் 👏
   போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்….💕💕💕
   ஆனா கடைசி வரைக்கும் அபிநந்தன கொண்டு வருவீங்கனு எதிர்பார்த்தேன்😔😔😉😉😂😂😂😂😂

  8. kanmani raj

   மூடநம்பிக்கையும், சாதிவெறியும் இம்மண்ணில் இருக்கும் வரை மக்கள் என்றும் முன்னேற முடியாது என்ற அருமையான கருத்தை வலியுறுத்தி அழகான ஒரு கதையை உருவாக்கியதற்கு வாழ்த்துக்கள் சகி. வெற்றிக்காகவும் வாழ்த்துகள்.

   ஆரம்பம் முதல் இறுதி வரை கதை சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் இருந்தது படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. கதை மாந்தர்கள் அனைவரும் கருத்தை கவர்ந்தனர். அதிலும் அஷ்வினி போன்ற ஒரு பெண் இருந்தால் எந்த சூழலையும் கடந்து வரலாம். அவ்வளவு நேர்மறை எண்ணங்கள் அதில் இருந்தது. ஆண் பெண் நட்பு பற்றி கூறிய கருத்துகள் அருமை.

   மொத்தத்தில் நட்பையும், காதலையும், குடும்ப பாசத்தையும் துணை கொண்டு மூட நம்பிக்கைகளையும், ஜாதியையும் எதிர்த்து நிற்கும் அழகான கதையே இந்த காதல் சுடர் நீயடா(டி).