530 views

சுடர் 25

ஹஸ்கி குரலில் ‘அஷி’ என்று நிரஞ்சன் அவளின் காதருகே விளிக்க, திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள் அஷ்வினி.

‘ச்சே என்ன கனவு இது? எதுக்கு இப்போ இந்த கனவு வந்துச்சு?’ என்று யோசிக்கும்போதே அவளின் அலைபேசி ஒலியெழுப்பி அவளின் சிந்தனையை கலைத்தது.

அது நிரஞ்சனிடமிருந்து வந்த செய்தி தான். அதைக் கண்டதும் தானாக அவளின் இதழில் புன்னகை ஒட்டிக்கொண்டது. அதில், பத்து மணிக்கு தயாராக இருக்குமாறும், அவளை ***** இடத்தில் ஏற்றிக்கொள்வதாகவும் இருக்க, மணியை பார்த்தவள் விழுந்தடித்துக்கொண்டு கிளம்ப ஆரம்பித்தாள்.

சரியாக ஒன்பது ஐம்பத்தைந்திற்கு தன்னறையிலிருந்து வெளியே வந்தவள், குழப்பமாக பார்த்த சித்ராவிடம், ‘பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங்’ என்று கூறிவிட்டு, அரக்கப்பறக்க சாப்பிட்டும் சாப்பிடாமலும் நிரஞ்சன் கூறிய இடத்தை அடைந்தாள்.

அஷ்வின் மற்றும் மாயா மருத்துவமனைக்கு சென்றிருந்ததால் அன்னையை மட்டுமே சமாளிக்க வேண்டியிருந்தது.

நிரஞ்சன் கூறிய இடத்தில், அவளிற்காக அவன் ஏற்கனவே காத்திருக்க, ஓடிச்சென்று வாகனத்தில் ஏறிக்கொண்டாள்.

“சாரி, லேட்டாகிடுச்சா?” என்று அஷ்வினி வினவ, “நீ ஆஃபிஸ் வரளவுக்கு லேட்டாகல!” என்று நிரஞ்சன் சிரிப்புடன் கூற அவனை முறைத்தாள் அஷ்வினி.

“இப்போ எங்க போறோம்?” என்று அஷ்வினி வினவ, “அங்க போறப்போ நீயே தெரிஞ்சுக்குவ.” என்றான் நிரஞ்சன்.

“ஹ்ம்ம், லவ்வை தான் வாய் திறந்து சொல்லல, அட்லீஸ்ட் இதையாவது சொல்லலாம்ல?” – மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து அவள் சத்தமாக பேசியிருக்க, “என்ன சொல்லணும்னு சொல்லேன். நீ சொல்ற மாதிரியே சொல்ல ட்ரை பண்றேன்.” என்று குறும்புச்சிரிப்புடன் கூறினான் நிரஞ்சன்.

மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவள் அதை சமாளிக்கும் விதமாக, “ஹலோ பாஸ், என் மைண்ட் வாய்ஸ், என் ப்ரைவசி! அதெல்லாம் எதுக்கு ஒட்டுக்கேட்டுட்டு இருக்கீங்க?” என்று வினவினாள்.

அப்போது வாகனத்தின் வேகத்தை குறைத்தவாறே அவளருகே வந்தவன், “மைண்ட் வாய்ஸ்னா, மனசுக்குள்ள பேசணும். இப்படி உதட்டை அசைச்சு பேசக்கூடாது.” என்றவனின் கண்கள் அவளின் உதட்டிலேயே நிலைத்துவிட, முந்தைய நாள் போல, இப்போதும் பெண்ணவளின் முகம் சூடாகி சிவந்து போனது.

உடனே, தலையை ஜன்னல் புறமாக திருப்பி, சில பல பெருமூச்சுகளை விட்டு, சூடேறிய முகத்தை இயல்பு நிலைக்கு திரும்பச்செய்தாள்.

அவளை அந்நிலைக்கு தள்ளியவனோ, ‘இதுக்கே இப்படியா!’ என்று கவனமாக மைண்ட் வாய்ஸில் பேசி சிரித்துக்கொண்டான்.

சிறிது நேரத்திற்கு பிறகு, நிரஞ்சன் அந்த வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்தியிருக்க, குழப்பமாக அவனை பார்த்த அஷ்வினியின் கண்கள் அப்போது தான் சுற்றுப்புறத்தை கண்டன.

அந்த வாகனம் நின்ற இடம் சிறு குன்றாக இருக்க, அந்த முன்பகல் நேரத்திலும் கூட ஆளரவமின்றி, சில பட்சிகளில் சத்தத்தை தவிர வேறு சத்தம் இல்லாமல் இருந்தது அந்த இடம்.

எதேச்சையாக சற்று தள்ளி பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்த மலையை கண்டவளிற்கு தூக்கிவாரிப்போட, தன்னருகே நின்ற நிரஞ்சனிடம், “போலாமா?” என்று பதற்றத்துடன் கூறினாள்.

அத்தனை நேரம் அவளின் முகத்திலிருந்த மகிழ்ச்சி சுத்தமாக துடைக்கப்பட்டிருப்பதை கண்டவன், அதற்கான காரணத்தை உணர்ந்து கொண்டு, ஒரு பெருமூச்சுடன் வாகனத்தை உயிர்ப்பித்தான்.

அதன்பின்னர், அந்த வாகனத்தில், அமைதியே குடிகொள்ள, அதை களைந்தவனாக, “அஷி, இப்போ எங்க போறோம்னு உனக்கு தெரிய வேண்டாமா?” என்று வினவ, அவளோ பதில் சொல்லாமல், கேள்வியை விழிகளில் தேக்கி அவனை பார்த்தாள்.

“நான் இப்போ வரைக்கும் மத்தவங்களுக்கு தெரியாம ஒரு ரகசியத்தை மறைச்சுட்டு இருக்கேன் அஷி. அதை இப்போ உனக்கு காட்டத்தான் கூட்டிட்டு போறேன்.” என்று நிறுத்தியவன், “ஏன்னா, அதனால நீ தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்க!” என்று மறைமுகமாக கூற, அஷ்வினியின் மனதில் சொல்லத்தெரியாத பதற்றம் உண்டானது.

அவனிடம் ‘என்ன ரகசியம்’ என்று கேட்க முயலவில்லை, அவனும் சொல்ல அவசரம் காட்டவில்லை.

அவளின் மௌனத்திலும், அவனின் இறுக்கத்திலுமே அந்த பயணம் முடிவுக்கு வந்தது. அந்த வாகனம் அப்போது நின்ற இடம், காட்டின் நுழைவுவாயில் போல காட்சியளித்தது.

“இதுக்கு மேல கார்ல போக முடியாது அஷி. ஒரு பத்து நிமிஷம் நடந்து போற மாதிரி இருக்கும். அங்க சில மக்கள் வாழ்ந்துட்டு இருக்காங்க. இப்போ அங்க தான் போறோம்.” என்றவாறே நிரஞ்சன் அவளை அழைத்துக்கொண்டு நடக்க, அவளோ ஏதோ மந்திரித்துவிட்டதை போல அவன் பின்னே சென்றாள்.

*****

சில நிமிட நடைக்கு பின்னர், அவள் கண்டது சிறு குடிசைகளும், அதில் வாழ்ந்த மக்களையும் தான். அவர்களின் தோற்றம், நடையுடை பாவனைகள் அனைத்தும் புதிதாக இருந்ததால், மனதில் தோன்றிய உணர்வை சற்றே ஒதுக்கிவிட்டு, அவர்களை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தாள்.

அவளின் பாவனையை கண்டு, அதை கலைக்க விரும்பாதவனாக, நிரஞ்சன் சற்று தள்ளி நின்று யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது தான் அந்த காட்சியை கண்டாள் அஷ்வினி. இத்தனை நாட்களாக யாரை தொலைத்து விட்டதாக எண்ணி கவலை கொண்டாளோ, யாரின் இறப்பிற்கு காரணமாகி விட்டதாக குற்றவுணர்வில் தத்தளித்து கொண்டிருந்தாளோ, அவனை உயிருடன் கண்டதில் திக்பிரம்மை பிடித்துப்போய் நின்றிருந்தாள்.

“சா…க…ர்…” என்று ஒவ்வொரு எழுத்தாக அதற்கு வலிக்காத வண்ணம் மெதுவாக முணுமுணுக்க, வாயுடன் சேர்ந்து கண்களும் அதன் வேலையை காட்ட, அவனின் பிம்பத்தை மறைப்பது போல, கண்ணீர் வழிந்தது.

தன்னை நிதானமாக்கியபடி மீண்டும் அந்த இடத்தை நோக்க, இப்போது அவன் அங்கு இல்லை. ஒருவித பதற்றத்துடன், அங்கும் இங்கும் பார்த்தபடியே, அந்த இடத்தை நோக்கி ஓடினாள் அஷ்வினி.

கண்கள் இரண்டும் சுற்றி சுழன்று அவனின் பிம்பத்தை எங்காவது கண்டுவிட மாட்டோமா என்று தேடிக்கொண்டிருக்க, அதற்கு அவளின் கால்கள் ஒத்துழைக்காமல், ஏதோ இடறி கீழே விழும்முன்னர், நிரஞ்சன் அவளை பிடித்திருந்தான்.

“அஷி, என்னாச்சு?” என்று அவன் வினவ, “நிரு… சாகர்… சாகர்… இங்க தான் இருந்தான்.” என்று அவனின் கைகளை விலக்கிக்கொண்டு வேறுபுறம் சென்று பார்க்க முயல, “அவன் இங்க இல்ல அஷி.” என்று சொல்ல வந்தவனை தடுத்தவள், “இல்ல, இங்க தான் பார்த்தேன்.” என்று நிரஞ்சனின் முகத்தை கூட பார்க்காமல், தன் இலக்கு ஒன்றே முக்கியம் என்பதைபள் போல தேடிக்கொண்டிருந்தாள்.

“ப்ச் அஷி, என்னைப் பாரு.” என்று வலுக்கட்டாயமாக அவளை திருப்பி, “சாகர் இங்க இல்ல. அங்க இருக்கான்.” என்று சற்று தொலைவிலிருந்த குடிசையை சுட்டிக்காட்ட, நிரஞ்சனிற்கு எப்படி தெரியும் என்றெல்லாம் கேள்வியை கேட்டு நேரத்தை வீணாக்காமல், விரைந்து அங்கு சென்றாள், தன் நண்பனை தேடி.

*****

அந்த குடிசைக்குள்ளே, சுவரை நோக்கி திரும்பியிருந்தவனிற்கு, ஏதோ தோன்ற திரும்பிப்பார்த்தவன், அங்கு அந்த கதவில் சாய்ந்தபடி, கண்ணீர் சிந்திக்கொண்டிருந்த தோழியை கண்டான்.

“ஹேர் ஆயிலு!” என்று ஆச்சரியமாக அவன் விளிக்க, அதற்கு மேல் தாங்காதவளாக, “சகு…” என்று அழைத்தவாறே அவனை அணைத்துக்கொண்டாள்.

இந்த ஒன்றரை வருடங்களாக, இப்படி ஒரு நிகழ்வு நடக்கவே நடக்காது என்று எண்ணியிருந்தவளின் முன், அவளின் எண்ணத்தை பொய்யாக்கி நின்றிருந்தவனை, கண்களை சிமிட்டக்கூட செய்யாமல் நிரப்பிக்கொண்டாள் அஷ்வினி. கண்களை சிமிட்டினால், கனவென்று மறைந்து போவானோ என்ற நினைப்பினாலோ!

சில நொடிகள், நண்பர்கள் இருவருக்குமிடையே பேச்சுவார்த்தை கண்களின் மூலமே நடைபெற, அமைதியாக இருந்த அந்த இடத்தில், காலடி சத்தம் கேட்டது.

வாசலுக்கு எதிர்புறம் நின்றிருந்ததால், அந்த காலடித்தடத்திற்கு உரியவனை சாகரே முதலில் கண்டான்.

“அண்ணா…” என்று சாகர் அழைக்க, அஷ்வினியும், யாரென்று திரும்பிப்பார்க்க, அங்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கதவில் சாய்ந்து நின்றிருந்த அஷ்வினியை போலவே நின்றிருந்தான் நிரஞ்சன்.

“அண்ணா?” என்று குழப்பமாக அஷ்வினி வினவ, “ஹே வினி, இவரு தான் என் அண்ணா, நிரஞ்சன் குமார்…” என்று சாகர் அறிமுகப்படுத்த, முதலில் அதிர்ந்தவள், பின்னர் நிரஞ்சனிற்கு முறைப்பை பரிசாக கொடுத்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.

நிரஞ்சனும், அவளை சமாதானப்படுத்துவதற்கு முயற்சிக்காமல், தம்பியின் நலனை குறித்து விசாரிக்கும் பொறுப்பான அண்ணனாக மாறினான். இருவருக்கும் நெருக்கமானவனாக இருக்கும் சாகருக்கா இருவரின் பார்வை பரிமாற்றத்தின் அர்த்தம் தெரியாமல் போகும்!

இருவரையும் ஆர்வமாக பார்த்தபடியே அண்ணனின் கேள்விகளுக்கு பதில் கூறியவனிற்கு, மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இது எப்படி சாத்தியம் என்றும் யோசித்துக்கொண்டிருந்தான்.

‘எப்பவும் அடிச்சுட்டு இருக்குறவங்க எப்படி ஒன்னு சேர்ந்தாங்க? இது தான் ஆப்போசிட் போல்ஸ் அட்ரெக்ட்டா!’ என்று நினைத்துக்கொண்டான்.

“சகு, நீ உயிரோட இருக்குறது எங்க யாருக்குமே தெரியாதுடா.” என்று நிரஞ்சனை மீண்டும் முறைத்துவிட்டு, “நீ எப்படி இங்க வந்த..? ஏன், எங்க யாரையும் கான்டேக்ட் பண்ணவே இல்ல?” என்று கேள்விகளாக கேட்க துவங்க, “நீ இன்னும் மாறவே இல்ல வினி. கேள்வி கேட்டா, பதிலுக்கு வெயிட் பண்ணனும்னு பொறுமை இருக்கா உனக்கு?” என்று  கேலி செய்தவாறே அவளை அங்கிருந்த மரகட்டிலில் அமர வைத்தான்.

“ம்ம்ம், எனக்கு எப்படி சொல்லன்னு தெரியல வினி. ஏன்னா, அந்த இன்சிடெண்ட்ல எனக்கு நடந்தது எதுவுமே ஞாபகமே இல்ல. இன்ஃபேக்ட், நான் யாருன்னே தெரியாத நிலைல தான் இருந்தேன். முதல் எட்டு மாசம் நடமாட்டமே இல்லாம இதே இடத்துல தான் படுத்திருந்தேன். அஞ்சு மாசத்துக்கு முன்னாடி, அண்ணாவோட பிரெண்ட் இந்த காட்டுவழியில தேடுனப்போ தான் என்னை பார்த்துருக்காங்க. அப்போ கூட, எனக்கு அண்ணா யாருன்னு தெரியல. அப்பறம் ரெண்டு மாசமா, அண்ணா அப்பப்போ இங்க வந்து, பழைய ஃபோட்டோஸ் எல்லாம் காட்டி கொஞ்சம் கொஞ்சமா என் நினைவுகளை மீட்டெடுத்தாங்க. இப்போ கூட எனக்கு முழுசா எல்லாம் ஞாபகம் இல்ல.” என்று சாகர் கூற, நண்பனின் துன்பத்தை அறிந்தவளிற்கு வேதனையாக இருந்தது

“ஹே வினி, இப்போ எதுக்கு கண்ணு வேர்க்குது உனக்கு? அதான் எல்லாம் சரியாகிடுச்சுல. இதோ இந்த காட்டுல வாழுறவங்க தான் என்னை காப்பாத்தி, மூலிகை ட்ரீட்மெண்ட் கொடுத்துருக்காங்க. இன்னும் கொஞ்சம் மீதி இருக்கு போல. எல்லாம் முடிஞ்சதும் ஊருக்கு போலாம்னு அண்ணா சொன்னாங்க.” என்று அவளிற்கு ஆறுதலளித்தான்.

நிரஞ்சனின் பெயரை கேட்டதும், “ஹும், எதுக்கு உங்க ‘அண்ணா’ நீ உயிரோட இருக்க விஷயத்தை எங்ககிட்ட சொல்லலையாம்?” என்று அண்ணாவில் அழுத்தம் கொடுத்து கேட்க, இரு ஆண்களும் சிரித்தனர்.

“அப்போ தான் ரெண்டு பேருக்குமிடையில என்னை வச்சு கோல்ட் வார் இருந்துச்சு, இப்பவும் உங்க சண்டை ஓயலையா?” என்று சாகர் வினவ, “உன் அண்ணன்னு தெரியுற வரைக்கும் நல்லா தான் பேசிட்டு இருந்தா.” என்று கூற, தன் அண்ணனை சந்தேகமாக பார்த்தான் சாகர்.

இளையவனின் பார்வையில் வேறுபுறம் திரும்பிக்கொண்ட அண்ணனை குறும்பு புன்னகையுடன் பார்த்தான் சாகர்.

அது பொறுக்காத அஷ்வினி, “உங்க ப்ரோமான்ஸ் எல்லாம் அப்பறம் வச்சுக்கோங்க. இப்போ, நீ இங்க இருக்க விஷயத்தை எல்லாருக்கும் சொல்லப்போறேன்.” என்று அலைபேசியை எடுக்க, இருவருமே அவளை தடுத்தனர்.

“இப்போ வேண்டாம் வினி. எனக்கு முழுசா குணமானதும் எல்லாருக்கும் சொல்லலாம்.” என்ற சாகரை, “அந்த மருத்துவச்சி உன்னை கூப்பிட்டாங்க சாகர். சொல்ல மறந்துட்டேன்.” என்று வெளியே அனுப்பி வைத்தான் நிரஞ்சன்.

அதுவே, சாகர் கூறிய காரணம் உண்மையில்லை என்பதை அஷ்வினிக்கு உணர்த்தியது.

“எதுக்காக சாகர் உயிரோட இருக்க விஷயத்தை மறைக்குறீங்க?” என்று நிரஞ்சனிடம் வினவ, அவனும் காரணத்தை கூற ஆரம்பித்தான்.

“அஷி, சாகரோட எதிரி அவனை கொல்றதுக்காக காத்திட்டு இருக்கான். இப்போ, அவனுக்கும் சாகர் உயிரோட இருக்க விஷயம் தெரிஞ்சுடுச்சு.” என்றவன் சர்வஜித் பற்றிய விஷயங்களையும், சாகரை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்யும் முயற்சியில் அவனின் பங்கு பற்றியும் உரைத்தான்.

“என்ன? அப்போ, சகுவை கொல்ல அந்த ராஜேஷை தூண்டுனது அந்த ரோக் தானா?” என்று மேலும் பல கெட்ட வார்த்தைகளில் சர்வஜித்தை திட்டினாள்.

பின் அவளே, “அது மட்டும் காரணம்னா, இப்போ சகு இருக்க இடமும் அவனுக்கு தெரிஞ்சுடுச்சே. இனி, ஏன் அவன் இங்க இருக்கணும்?” என்று சரியான கேள்வியை கேட்க, ‘இப்போ மட்டும் இவளுக்கு மூளை சுறுசுறுப்பா வேலை செய்யும்!’ என்று அலுத்துக்கொண்டான் நிரஞ்சன்.

“இன்னொரு காரணமும் இருக்கு அஷி.’ என்று நிறுத்தியவன், “மாயா…” என்றான்.

‘அச்சோ மாயாவை எப்படி மறந்தேன். அப்போ அஷு லவ்?’ என்று குழம்பியவளிற்கு, ‘சாகர் – மாயா – அஷ்வின்’ என்ற பெயர்களே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தன.

அவளின் யோசனை முகத்தை கண்ட நிரஞ்சன், “இங்க பாரு அஷி, சாகருக்கு உங்க காலேஜ் டேஸ் எதுவும் ஞாபகத்துல இல்ல. அவனுக்கு மாயா யாருன்னே இப்போதைக்கு தெரியாது. அதே மாதிரி, எனக்கு என்னமோ, சாகர் – மாயாக்கு இடையில லவ்ங்கிறதே இல்லன்னு தான் தோணுது!” என்றதும் அஷ்வினியின் முகம் கூம்பிப்போனது.

“ப்ச் அஷி, அன்னைக்கே சொன்னேன்ல, இப்படி உன்னை பிளேம் பண்ணிக்காத.” என்று கூற, அவளிற்கு அன்றைய நினைவும், அதனுடன் அஷ்வின் மாயாவின் காதலை பற்றி சாகரின் அண்ணனான நிரஞ்சனிடம் கூறியதும் நினைவிற்கு வர, அவளின் முகம் மேலும் கசங்கிப்போனது.

அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்ட நிரஞ்சன், “அஷி, திரும்ப என்னை லெக்சர் எடுக்க வைக்காத. மாயா, என்னைக்காவது அவ லவர்ரான சாகர் இல்லன்னு ஃபீல் பண்ணியிருக்காளா?” என்று வினவ, இல்லை என்று தலையசையத்தாள் அஷ்வினி.

“ம்ம்ம், அவளுக்கு இருக்குறதெல்லாம், சாகர் அவளால இறந்து போன குற்றவுணர்ச்சி. அவளோட காதலன் இறந்து போன குற்றவுணர்ச்சி இல்ல. இப்போ ரீசன்ட்டா நான் நோட்டீஸ் பண்ணதுல, அஷ்வின் – மாயா ரெண்டு பேருக்குமிடையில ஏதோ ஒரு ஃபீல் ஸ்டார்ட்டாகியிருக்கு. லெட்ஸ் சீ வாட் ஹேப்பன்ஸ்!”

“அப்போ, எவ்ளோ நாள் சாகர் இங்கயே இருப்பான்?”

“ஹ்ம்ம், தெரியல அஷி. அட்லீஸ்ட் மாயா அவளோட குற்றவுணர்ச்சியிலிருந்து வெளிவந்து கொஞ்சமாச்சும் அவ கேரியர்ல டெவலப்பாகுற வரைக்கும். அதுக்குள்ள, அஷ்வின் – மாயா, அவங்களுக்கு இடையில இருக்க ஃபீல் காதல்னு உணர்ந்துட்டா வெல் அண்ட் குட்.”

அத்தனை நேரம் அவனின் மார்பில் தலை வைத்து சாய்ந்திருந்தவள், தலையை நிமிர்த்தி அவனின் முகம் பார்த்து, “உங்களுக்கு வருத்தமா இல்லயா? சாகர் லவ்…” என்று இழுக்க, “அஷி, என்னைப் பொறுத்தவரை அது மெச்சுர்ட் லவ்வே இல்ல. ஒருவேளை, மெச்சுர்ட் லவ்வா இருந்துருந்தா, அன்னைக்கு சாகர் அவ்ளோ அவசரப்பட்டுருக்க மாட்டான். ரெண்டு பேருக்கும் இருந்தது ஜஸ்ட் அட்ரேக்ஷன் தான். அவங்க சேர்ந்துருந்தா கூட, அந்த அட்ரேக்ஷசன் நிலைச்சு இருக்குமாங்கிறது சந்தேகம் தான். சோ, இதுல எனக்கு வருத்தம் இல்ல தான். ஹோப் ஹீ கெட்ஸ் வாட் ஹீ டிசர்வ்ஸ். இந்த டைம் ஸ்பேஸ், சாகருக்கு மட்டுமில்ல, அஸ்வின் அண்ட் மாயாவோட லைஃபும் நல்லபடியா மாத்தும்னு நம்புவோம்.” என்றான்.

சில நொடிகள் மௌனமாக கழிய, அஷ்வினியை அதிலிருந்து வெளியே கொண்டு வரும்பொருட்டு, “நீ என்னோட சண்டை போடுவன்னு நினைச்சேன்.” என்று வழக்கம்போல அவளின் காதருகே பேச, அப்போது தான் அவளிருக்கும் நிலை உணர்ந்து வேகமாக விலகினாள்.

“இப்பவும் சண்டை தான்!” என்று கூறி வேறுபக்கம் திரும்பிக்கொள்ள, அப்போது உள்ளே நுழைந்தான் சாகர்.

“எங்கடா போன இவ்ளோ நேரம்?” என்று அஷ்வினி சாகரிடம் வினவ, “நான் அப்போவே வரலாம்னு பார்த்தப்போ, உள்ள ஏதோ சீன் ஓடிட்டு இருந்துச்சு. சரி எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டுன்னு வெளிய சுத்திட்டு லேட்டா வந்தா, என்னையே குத்தம் சொல்ற நீ?” என்றான் சாகர்.

அதில் அவளிற்கு வெட்கம் வந்து தொலைக்க, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “சரி நான் வெளிய போறேன்.” என்று ஓடிவிட்டாள்.

அதன்பிறகு சிறிது நேரம் சாகருடன் செலவளித்துவிட்டு, அவனிடம் விடைபெற்று கிளம்பினர் நிரஞ்சன் மற்றும் அஷ்வினி.

வாகனத்தில் செல்லும்போது, மாயா குடும்பத்தினரை கடத்தியது, அந்த போலிச்சாமியாரின் மூலம் சர்வஜித்தை கண்டுகொண்டது என்று அனைத்தையும் அஷ்வினியிடம் கூறினான் நிரஞ்சன்.

“எனக்கென்னமோ பயமா இருக்கு நிரு. ரொம்ப பெரிய இடத்துல மோதுறோம்.” என்று அவள் பயப்பட, “ட்ரஸ்ட் மீ அஷி, எல்லாம் நல்லபடியா முடியும்.” என்று அவளிற்கு நம்பிக்கையளித்தான் நிரஞ்சன்.

அஷ்வினி இறங்க வேண்டிய இடம் வர, “அப்பறம், நேத்து யோசிக்கிறேன்னு சொன்ன விஷயத்தை இப்போ யோசிக்கலாம்னு இருக்கேன்.” என்று அவன் கூற, நமுட்டுச்சிரிப்புடன், “நீங்க யோசிக்கவே வேண்டாம் பாஸ். நான் கோபத்துல இருக்கேன். பை…” என்று கூறிவிட்டு வாகனத்திலிருந்து வேகமாக இறங்கி நடந்தாள்.

நிரஞ்சனோ, ‘எத்தனை நாளைக்கு இவ அலைய வைக்கப்போறான்னு தெரியலையே!’ என்று அலுத்துக்கொண்டான்.

*****

“சார், அந்த சாகர் எங்க இருக்கான்னு தெரிஞ்சுடுச்சே, அவனை போட்டுடலாம்ல?”

“ஹ்ம்ம், போன முறை தான் அவனை என் கையால கொல்ல முடியாம போயிடுச்சு. இந்த முறை என் கையாலேயே அவனை ரசிச்சு கொல்லனும். ஆனா இப்போ வேண்டாம். இன்னும் கொஞ்ச நாள்ல எலெக்ஷன் வந்துடும். அதுக்குள்ள நம்ம பிளான் போட்டபடி எல்லா வேலையும் முடிக்கணும். நைட் பூஜைக்கான பார்ட்டி ரெடியா?”

“கொஞ்ச நேரத்துல பசங்க தூக்கிடுவாங்க சார்.” என்றான்.

“ப்ச், எப்பவும் கடைசி நேரத்துல தான் செய்வீங்களா! எப்படி தூக்குவீங்கன்னுலாம் எனக்கு தெரியாது, நைட் ரெடியா இருக்கணும். திரும்ப சொல்லிட்டேன் இது எலெக்ஷன் டைம். ஜாக்கிரதையா பண்ணுங்க.” என்று கூறிவிட்டு வீட்டிற்குள் வந்தான்.

அப்போது அவர்களின் உரையாடலை கேட்ட அவனின் அன்னை, “சர்வா, அம்மா சொல்றதை தயவுசெஞ்சு கேளு. தப்புக்கு மேல தப்பு பண்ணிட்டு இருக்க சர்வா! இதெல்லாம் வேண்டாம்.” என்று சொல்லும்போதே அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளிவிட்டவன், “என்னோட லைஃபுக்குள்ள நுழையுறதுக்கான உரிமையை உங்களுக்கு யாரு கொடுத்தா? நான் இப்படி இருக்குறதுக்கு காரணமே நீங்களும், உங்க ‘புருஷனும்’ தாங்கிறதை மறந்துடாதீங்க.” என்று ஏதோ சொல்ல வந்தவன் அதை சொல்லாமல், “ப்ச், வீட்டுக்கு வந்தாலே அது சரியில்ல, இது சரியில்லன்னு.” என்ற புலம்பலுடன் அறைக்கு சென்றான்.

‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பதை போல கண்டிக்க வேண்டிய வயதில் வாயை மூடிக்கொண்டு இருந்தால், இப்படி தான் ஆகும் என்பதை தாமதமாக உணர்ந்து கொண்டு, மகனின் வாழ்வு திசை மாறிப்போவதற்கு தானே காரணமாகி விட்டோமே என்ற குற்றவுணர்விலேயே உழன்றார் சர்வஜித்தின் தாய்.

*****

அஷ்வினியை நிரஞ்சன் இறக்கிவிடும் காட்சியைப் பார்த்த அஷ்வின் அவளிடம் வினவ, “நீ மட்டும் என்கிட்ட சொல்லிட்டு தான் எல்லாமே பண்றியா?” என்று கோபமாக பேசியபடி அவள் உள்ளே சென்றாள்.

‘எங்க போன?’ன்னு தான கேட்டேன்… எதுக்கு இப்படி குதிச்சுட்டு போறா? ஒருவேளை நிரஞ்சன் ஏதாவது சொல்லியிருப்பாரோ?’ என்ற குழப்பத்துடனே உள்ளே நுழைந்தான் அஷ்வின்.

அஷ்வினியோ மாயாவை விசாரித்துவிட்டு அவளின் அறைக்கு செல்ல, அவளிற்கு வால் பிடித்துக்கொண்டே அஷ்வினும் சென்றான்.

“எதுக்கு கோபம்னு சொல்லிடு வினிமா.” என்று பாசமாக அவன் பேச, “ஒழுங்கா ஓடிடுடா அண்ணா. செம கோபத்துல இருக்கேன்.” என்றவள், அவனின் பாவமுகத்தை கண்டு இறங்கியவளாக, சாகர் விஷயத்தை தவிர்த்து மற்றதை கூறி, “நிரஞ்சன் சொல்லித்தான் எனக்கு தெரியுது. அப்போ நீ என்னை நம்பவே இல்லைல.” என்று வினவினாள்.

‘அடப்பாவி பாஸ், இப்படி இவக்கூட கோர்த்துவிட்டுட்டீங்களே!’ என்று உள்ளுக்குள் சலித்துக்கொண்டாலும், “ஹே வினி, அப்படியெல்லாம் இல்ல. இந்த ஒருவருஷமா தான் நிரஞ்சனை எனக்கு தெரியும். அதுவும், சாகர் உடலை தேடி அவரு அலைஞ்சுட்டு இருந்தப்போ தான் பழக்கமாச்சு. அந்த டைம், சாகர் பேரை கேட்டாலே, நீ அப்செட்டான. அதான் உன்கிட்ட சொல்லல.” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

*****

முன்னாள் முதலமைச்சரின் மருமகள் கொலைமுயற்சிக்காக பிரபல தொழிலதிபர் சர்வஜித் கைது செய்யப்பட்டார்!” என்ற செய்தியே அடுத்த சில வாரங்களுக்கு தலைப்பு செய்தியாக மாறிப்போனது.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 இதோ உங்க 🌈🔥 அடுத்த எபியோட வந்துட்டேன்… இன்னும் ரெண்டு எபில கதை முடிஞ்சுடும்… அதையும் இந்த வாரத்துல முடிக்கலாம்னு நினைச்சுருக்கேன்… குறுக்க எந்த வேலையும் வந்துடக்கூடாதுன்னு ப்ரே பண்ணிக்கோங்க நட்பூஸ்… வழக்கமா சொல்றது தான்… உங்க கருத்துக்களை காயின்ஸ் மூலமாவோ, ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ சொல்லுங்க…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  6 Comments

  1. Archana

   வாவ் சகு சாகலையா😍😍😍😍😍😍 நல்லவேளை நாணியே உயிரோட கொண்டு வந்திட்டீங்க தகப்ஸ்😘😘😘😘😘

  2. Janu Croos

   எனக்கு தெரியும் இந்த சாகர் பயலுக்கு எதுவும் ஆகலனு. இவ்வளவு நாள் இளனால எத்தனை பேர் குற்றவுணர்ச்சியோட இருந்திருக்காங்க….கவலைப்பட்டு இருந்திருக்காங்க. இப்போவாவது அவன் நல்லா கருக்கான்னு தெரிஞ்சா சந்தோஷப்படுவாங்க.
   ஆனா நிரஞ்சன் ஏதோ பிளான் வச்சிருக்கான். அது படியே நடக்கட்டும்.

   1. vaanavil rocket
    Author

    Aama sis… Ellam avanoda safety kaga dhan sollama vachurupan 😁😁😁
    Sry for the late reply 🙏🙏🙏

  3. Interesting ud sis nice na guess panni sonnen sagar uyiroda irukan nu super sis nice ud

   1. vaanavil rocket
    Author

    Super sis 😍😍😍 Unga guess crct aagiduchu 😁😁😁
    Sry for the late reply sis🙏🙏🙏