482 views

சுடர் 24

மேடம் எங்க கிளம்பிட்டீங்க?” என்று அஷ்வினிக்கு பின்னிலிருந்து குரல் கேட்க, திரும்பிப் பார்க்காமலேயே அது யாரென்று தெரிந்தது. சில மணி நேரமாக அவளை சுற்ற வைத்தவன் அல்லவா!

அது, சவுண்டா இருக்கு. அதான் ரிலாக்ஸா கார்டன்ல நடக்கலாம்னு…” என்று அவள் இழுக்க, நிரஞ்சனோ புன்னகையுடன் அவளுடன் நடந்தான். அவ்வபோது ஓரக்கண்ணில் அவனை பார்த்துக் கொண்டே நடந்தவள், மறந்தும் வாய் திறக்கவில்லை.

அப்போ ஏதோ கேட்டிங்களே அஷ்வினி?” என்று நமுட்டுச்சிரிப்புடன் நிரஞ்சன் வினவ, தான் செய்ததை நினைத்து, ‘அச்சோ!’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவள், “அது சும்மா பிராங்க்.” என்று சமாளிக்க முயன்றாள்.

ஓஹ், நான் கூட உண்மைன்னு நினைச்சு ஃபீல் பண்ணேனே!” என்று நிரஞ்சன் கூற, “ஃபீலா?” என்று கேள்வியுடன் அவனை பார்த்தாள் அஷ்வினி.

நடப்பதை நிறுத்தி, அவள் புறம் திரும்பி, அவளின் முகத்தை பார்த்தபடி, “ஆமா ஃபீல் தான்.” என்று ஹஸ்கி வாய்ஸில் கூற, அவனை பார்த்துக்கொண்டிருந்தவள் தான் மூச்சடைத்துப் போனாள். உடலில் ஓடும் இரத்தமெல்லாம் திடீரென்று முகத்தை நோக்கி ஓடுவது போல, குப்பென்று சிவந்து தான் போனது அவளின் முகம்.

சில நொடிகளுக்கு மேல் அந்நிலையில் தாக்கு பிடிக்க முடியாதவளாக, “க்கும், நேத்து ஏன் கால் அட்டெண்ட் பண்ணல?” என்று வினவ, அக்கேள்வி எதிரிலிருந்தவனையும் சுயத்தை அடைய வைத்திருந்தது.

அவளின் நிலையையும், அதற்கான சமாளிப்பையும் கண்டவன் மௌனமாக சிரித்துக்கொண்டான். அப்போது அவளின் கேள்வி, முதல் நாள் நினைவிற்கு அவனை கூட்டிச்சென்றது.

*****

மனம் கவர்ந்தவளின் நினைவுடனே படுத்து எழுந்தவனிற்கு, அலைபேசியில் வந்திருந்த செய்தி, அனைத்தையுமே மறக்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.

அந்த செய்தியில் இருந்ததெல்லாம், ஒரு முகவரியும் அதனுடன், ‘கடந்த சில நாட்களா நீ தீவிரமா தேடிட்டு இருக்கவனை பார்க்கணும்னு நினைச்சா, இந்த இடத்துக்கு வாஎன்ற வாசகமுமே.

செய்தி அனுப்பப்பட்ட எண் நிச்சயமாக இப்போது உபயோகத்தில் இருக்காது என்பது நிரஞ்சன் அறிந்ததே! அதை ஒருமுறை உறுதிபடுத்திக்கொண்டு, சாரதியிடமும் சொல்லிவிட்டு, அவனை பார்க்க சென்றான்.

அவன் சர்வஜித். பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஆகியவர்களுடன் மறைமுகமாக தொடர்பில் இருப்பவன். அவர்களின் நிழலுலக அலுவல்களில் முக்கிய பங்கு வகிப்பவன். அவனை பற்றி வெளியில் தெரிந்ததெல்லாம்தொழிலதிபர்என்ற அவனின் ஒருமுகம் தான். இவ்வளவு ஏன், அந்த போலிச்சாமியாருக்கும் இவனிற்கும் தொடர்பு இருக்கிறது என்பதே சாரதி தீவிரமாக தேடிய பின்னர் தானே தெரிந்தது.

அத்தகையவன் கூப்பிட்டும் நிரஞ்சன் தனியாக தான் சென்றான். அதுவும் நிராயுதபாணியாக! சாரதி எவ்வளவோ எடுத்து சொல்லியும், நிரஞ்சன் தனியாக தான் சென்றான்.

சர்வஜித் நிரஞ்சனை அழைத்தது, அவனின் பினாமி பெயரில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு தான். அதுவே அவனின் செல்வ செழிப்பை கட்டியம் கூற, இந்த மாளிகை ஓங்கி உயர்ந்து நிற்பதற்கு எத்தனை பேரின் இரத்தம் சிந்தியிருக்கும் என்பதை எண்ணி ஒரு கசந்த முறுவலுடனே உள்ளே சென்றான் நிரஞ்சன்.

அங்கு நடுகூடத்தில், பிரம்மாண்ட நாற்காலியில் அமர்ந்திருந்த சர்வஜித்தை தான் பார்த்திருந்தான் நிரஞ்சன்.

அவனும் அவனிற்கு சளைக்காதவனாக, தன் கூர்மையான கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான்.

அட, நீ வரமாட்டன்னு நினைச்சேன்?” என்று நிரஞ்சனை மேலிருந்து கீழ் வரை நக்கலாக பார்த்தவன், ஆனா, என்னோட நினைப்பை பொய்யாகுறதே உங்களுக்கு வேலையா போச்சுல.” என்று திமிராக சிரித்துக்கொண்டான்.

நிரஞ்சனோ அமைதியாக, “எதுக்கு என்னை வர சொன்ன?” என்று வினவினான்.

ஹ்ம்ம், நீ ரொம்ப நிதானம்னு கேள்விப்பட்டிருக்கேன். என்ன பண்றது உன் தம்பி தான் உன்னை மாதிரி இல்லாம, ரொம்ப துள்ளிட்டு இருந்தான்.” என்று சர்வஜித் கூற, அதில் குழம்பிய நிரஞ்சனோ, “என்ன சொல்ற?” என்றான்.

ம்ம்ம், என்னத்த சொல்ல? அன்னைக்கு மட்டும் சும்மா இருந்துருந்தா, இன்னைக்கு உன் தம்பி உன்கூட இருந்துருக்கலாம்.” என்று பொடி வைத்து பேச, நிரஞ்சனிற்கு ஏதோ புரிவது போல இருந்தது. இருப்பினும், அவனிடமிருந்து விஷயத்தை வாங்க வேண்டும் என்று அமைதியாக இருந்தான்.

*****

கலைவாணி என்ன தான் நிரஞ்சன் மற்றும் சாகரிடம், தன் முன்னாள் கணவனின் குடும்பத்துடன் எவ்வித பிரச்சனையும் வேண்டாம் என்று கூறியிருந்தாலும், அதை தனசேகரன் தன் பிள்ளைக்கு சொல்லி கொடுக்கவில்லை.

மாறாக, கலைவாணியின் மேலிருந்த கோபத்தில், அவரையும் அவரின் குடும்பத்தையும் தவறாக கூறி, சர்வஜித்தின் மனதில் நஞ்சை கலந்திருந்தார். எல்லா பிள்ளைகளும் பிறக்கும்போது, போட்டி, பகை, பொறாமையின்றி நல்லவர்களாகவே பிறக்கின்றனர். ஆனால், அதன்பின்னான அவர்களில் குணநலன்கள், அவர்களை வளர்ப்பவர்களை பொறுத்து மாறுபடுவதே உலக இயல்பு.

அதில் சர்வஜித்தும் பொருந்தி தானே ஆக வேண்டும். தந்தையின் தவறான போதனை, வாயில்லா பூச்சியாக மாற்றப்பட்ட தாயின் சரியான கவனிப்பின்மை ஆகியன அவனை அரக்கனாகவே வளர வைத்தது.

அதுவே, சர்வஜித்திற்கு சாகர் குடும்பத்தின் மேல் பகையுணர்வு தோன்றவும், அவர்களை பார்க்கும்போதெல்லாம் சீண்டவும் வைத்தது.

என்னதான் மற்ற இருவரும், அவனின் குணத்தை அறிந்து விலகி வந்தாலும், அவர்களை சீண்டவே அவர்கள் இருக்கும் இடத்தை தேடித்தேடி வருபவன் சும்மாவா விடுவான்.

நிரஞ்சன் இருந்தவரை சாகர் கோபப்பட்டாலும், அவனை அடக்கி விடுவான். நிரஞ்சன் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்னர் சில காலங்கள் சர்வஜித்தின் தொல்லை இல்லாததால், அவன் தங்களை மறந்துவிட்டான் என்று தவறாக எண்ணி, சற்று நிம்மதியாகவே வெளிநாடு சென்றான். அந்த குள்ளநரி சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறது என்பதை அறியாமல்விட்டது யாரின் தவறோ!

ஆம், நிரஞ்சன் உள்ளவரை சாகரை சீண்டி சண்டை போட முடியாது என்பதை அறிந்த சர்வஜித், நிரஞ்சனின் நிழலிலிருந்து சாகர் வெளிவர காத்திருந்தான்.

அந்த சந்தர்ப்பம் கிடைத்ததும் தன் வேலையை காட்ட ஆரம்பித்தான் சர்வஜித்.

அதற்காக, அவன் சீண்டியதும் சாகர் பொங்கி எழவில்லை. நிரஞ்சனின் அறிவுரைகளை மனதிற்கொண்டு அமைதியாகவே கடந்து சென்றான். ஆனால், எத்தனை தான் அவனும் பொறுத்து போவான். நூறு தவறுகள் செய்யும் வரை பொறுப்பதற்கு அவன் கிருஷ்ணனும் அல்ல, எதிரிலிருப்பவன் சிசுபாலனும் அல்லவே!

ஒருமுறை, சாகரின் நண்பனின் தங்கை திருமணத்தில், மாப்பிள்ளைக்கு சொந்தம் என்று சர்வஜித்தும் கலந்துகொள்ள, அங்கு சர்வஜித்தின் சீண்டல்கள் எல்லையை கடந்தன.

சாகரை நோக்கி அவனின் சொல்லம்புகள் ஜாடை பேச்சாக திரும்ப, அதை பொறுத்துக்கொண்ட சாகரினால், கலைவாணியை பற்றிய அவனின் பேச்சினை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “எங்க அம்மா முறைப்படி கல்யாணம் பண்ணவங்க தான். ஆனா, உங்க அம்மா?” என்றவனால் அதற்கு மேல் தவறாக பேச முடியவில்லை. அது அவனின் குணமும் அல்ல. அப்போது அஷ்வினியும் அங்கு வந்து அவனை அழைத்து சென்றிருந்தாள்.

ஆனால், ஊர்வாயை அடக்க முடியுமா என்ன?

மற்றவர்கள் சர்வஜித்தின் தாயை தவறாக பேச, அந்த கோபமெல்லாம் சாகரை நோக்கி திரும்ப, அவனை கொல்ல வேண்டும் என்ற வெறிக்கு தூபம் போட்ட நாள் அன்றைய நாளாக மாறிப்போனது.

அதன்பின்னர், தன்னைத்தானே செதுக்கி தனக்காக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவனிற்கு, சாகர்மாயா காதலும், மாயாவின் குடும்பத்தை பற்றிய தகவல்களும் கிடைக்க, சரியாக திட்டமிட்டு சாகரை பழிவாங்கினான் சர்வஜித்.

*****

இவையனைத்தையும் நிரஞ்சனிடம் கூறிய சர்வஜித், “இப்போ சொல்லு, உன் தம்பிக்கு உன் அளவு நிதானம் இல்ல தான?” என்று வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றும் விதமாக பேசினான்.

இதை பத்தி ஒருமுறை கூட அவன் சொல்லையே!’ என்று வருந்திய நிரஞ்சன், “அவ்ளோ தான? இதை சொல்லத்தான் கூப்பிட்டியா?” என்று சர்வஜித்திடம் வினவினான்.

நிரஞ்சனின் நிதானம் சர்வஜித்தை ஆச்சரியப்படுத்தியதென்னவோ உண்மை தான்.

ஹான், ச்சேசே இதை சொல்றதுக்காகவா பிஸியா இருக்க உன்னை கூப்பிடப்போறேன்? எனக்கு தெரியக்கூடாதுன்னு ஒரு விஷயத்தை இத்தனை நாளா யாருக்குமே சொல்லாம ரகசியமா வச்சுருக்கியே, அது எனக்கு தெரிஞ்சுடுச்சுன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்.” என்று கூறி ஆர்ப்பாட்டமாக சிரித்தான் சர்வஜித்.

அதை கேட்ட நிரஞ்சன் அதிர்ந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘அதுக்கு என்ன இப்போ?’ என்ற ரீதியில் நிற்க, இப்போது அவனின் நிதானத்தில் ஆத்திரமான சர்வஜித், “என் அம்மாவை இந்த ஊரே இகழ்ந்து பேச காரணமான உன் குடும்பத்தை கடைசி வரைக்கும் நிம்மதியா வாழவே விடமாட்டேன்டா.” என்று கர்ஜித்தான்.

ஒரு நக்கல் சிரிப்புடன், “அதுக்கு முதல் காரணம் உங்க அப்பா தான்.” என்ற நிரஞ்சனை நோக்கி, அவனை விட நக்கலாக, “அதுக்கான தண்டனையா தான் அந்த ஆளை கைகால் விலங்காம படுக்கையில போட்டுருக்கேன்!” என்றதில், ‘இவன் சைக்கோவோஎன்ற எண்ணம் தோன்றாமல் இல்லை நிரஞ்சனிற்கு.

ஓஹ், அது உங்க குடும்ப பிரச்சனை. இப்போ நீ சொல்ல வேண்டியது எல்லாம் முடிஞ்சுடுச்சுனா, நான் கிளம்புறேன்.” என்று அங்கிருந்து வெளிவந்தான் நிரஞ்சன்.

அதன்பிறகு முதல் வேலையாக சாரதிக்கு அழைத்து, “நம்ம பிளானை எக்சிக்யூட் பண்ண ஆரம்பிக்கலாம்.” என்றான் நிரஞ்சன்.

*****

தன் நினைவினில் மூழ்கியவனை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்த அஷ்வினி, “ஹலோ பாஸ், என்ன யோசனை?” என்று வினவினாள்.

உதட்டோர சிரிப்புடன், “நீ கேட்ட கேள்விக்கு தான் பதில் யோசிச்சுட்டு இருந்தேன்.” என்று அவன் கூறியதும், “நேத்து என்ன பண்ணீங்கங்கிறது அவ்ளோ கஷ்டமான கேள்வியா என்ன?” என்றாள் அஷ்வினி.

அவனோ நமுட்டுச்சிரிப்புடன், “அந்த கேள்வியில்ல, அதுக்கு முன்னாடி ஏதோ லவ்னு கேட்டியே, அதுக்கு தான் யோசிக்கிறேன்.” என்று கூற, இப்போதும் மௌனத்தை கடைபிடித்தாள் மங்கை.

அவளிற்கும் புரிகிறது தானே, அவனின் பார்வையின் குலைவும், வார்த்தைகளின் நெகிழ்வும். இருந்தும் யார் முதலில் வாயை திறந்து கூறுவது என்ற மறைமுக போட்டியில் காதலர்கள் இருவரும் சிக்கியிருந்தனர்.

அவளின் அமைதியைக் கண்டவன், “சரி, நான் யோசிச்சுட்டு நாளைக்கு சொல்றேன்.” என்று கூற, அதற்கும் பதிலில்லை அவளிடம்.

எத்தனை நேரம் அமைதியாகவே நடப்பது. அதுவும் அஷ்வினி அமைதியின் அர்த்தம் உணர்வதெல்லாம் வெகு சில நேரங்களில் மட்டுமே

அப்போது நினைவு வந்தவளாக, “நேத்து ஏன் எனக்கு விஷ் பண்ணவே இல்ல?” என்று வினவ, “ஏன் நீ கூடத்தான் எனக்கு விஷ் பண்ணல. என்னமோ, நீ மட்டும் தனியா வேலை பார்த்த மாதிரி சொல்ற. நானும் தான அந்த ப்ராஜெக்ட்டுக்காக உழைச்சுருக்கேன்.” என்று வேண்டுமென்றே கூறினான் நிரஞ்சன்.

ஹ்ம்ம், வாயை திறந்து ஏதாவது சொல்லிட்டா, மகாராஜாக்கு கிரீடம் இறங்கிடும்னு நினைப்பு!” என்று அவள் முணுமுணுக்க, அவள் காதருகே, “நான் விஷ் பண்ணனும்னு ரொம்ப எதிர்பார்த்தியோ?” என்ற குரல் கேட்க விதிர்விதிர்த்து போனாள் பெண்ணவள்.

அத்தனை நெருக்கம் அவனிடம் இருந்து எதிர்பாராததாலோ, சற்று நேரம் அப்படியே இருந்தால் தன் கட்டுப்பாட்டை மீறி விடுவோம் என்ற பயத்தினாலோ, அதிர்ச்சியில் சமைந்திருந்தவள், “அஷ்அஷ்.. அஷ்வின் என்னை தேடுவான். நாநான் கிளம்புறேன்.” என்று அங்கிருந்து செல்ல முயன்றாள்.

அவளின் கைபிடித்து தடுத்தவன், “ஹே அஷி, நாளைக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும். என்னோட வருவியா?” என்று மென்குரலில் வினவ, அக்குரலிலிருந்த ஏதோ ஒன்று அவளை சம்மதிக்க வைத்தது.

பதில் சொன்ன பின்பு, சற்றும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்றவள் அஷ்வினை தான் தேடினாள்.

அவளின் தயக்கம், நடுக்கம், வெட்கம் அனைத்தும் நிரஞ்சனிற்கு உற்சாகத்தை தர, அவன் செய்யவிருக்கும் செயலின் தாக்கத்தையும் மீறி மகிழ்ச்சியாகவே நடமாடினான்.

*****

அந்த டிஜே சத்தம், ஆடல் பாடல் எல்லாம் மாயாவிற்கு புதிதாக இருக்க, அவளால் அதில் ஒன்ற முடியவில்லை. கூட்டத்தில் சிக்கியவளாக அவள் திருதிருவென்று விழிக்க, அதை கண்டுகொண்டவனாக அருகில் வந்த அஷ்வின், அவளை அழைத்துக்கொண்டு மறுபுறத்திற்கு சென்றான்.

என்னாச்சு மாயா? ஏன் ரெஸ்ட்லெசா இருக்க?” என்று அஷ்வின் வினவ, “அது, எனக்கு இது புதுசா இருக்கு அஷ்வின். என்னால இங்க அடாப்ட் பண்ணிக்க முடியுமான்னு பயமா இருக்கு.” என்றாள் மாயா.

மாயா, இங்க எல்லாத்துக்கும் நீ அடாப்ட் பண்ணிக்கணும்னு அவசியம் இல்ல. இங்க நடக்குறதை பாரு, உனக்கு பிடிச்சுருந்தா என்ஜாய் பண்ணு. இல்லைன்னா உனக்கு எது பிடிச்சுருக்கோ அதை பண்ணி என்ஜாய் பண்ணு. ‘அவங்க செய்யற மாதிரி நானும் செய்யலைன்னா, என்னை வேற மாதிரி நினைப்பாங்களோன்னு யோசிச்சே அவங்க ஒரிஜினாலிட்டியை இழக்குறவங்க தான் இங்க நிறைய. நீயும் அது மாதிரி உன்னோட ஒரிஜினாலிட்டியை இழந்துடாத.” என்று கூற, மாயாவும் சம்மதமாக தலையசையத்தாள்.

ஓகே, இப்போ கிளம்பலாமா?” என்று அஷ்வின் வினவ, “இல்ல எனக்காக உன் என்ஜாய்மெண்ட்டை ஸ்பாயில் பண்ணிக்காத.” என்று மாயா கூற, “எனக்கும் இந்த சவுண்ட்டெல்லாம் பிடிக்காது மாயா. இது மாதிரி பார்ட்டின்னா கொஞ்ச நேரத்துல நானும் கிளம்பிடுவேன்.” என்றவன் அஷ்வினியை தேடினான்.

மேபி வினிக்கு பிடிச்சுருக்கலாம்.” என்று மாயா கூற, “அவளுக்கும் பிடிக்காது. மேடம் எங்கயாவது தூரமா வாக்கிங் போயிட்டு இருப்பாங்க. வா அவளை தேடலாம்.” என்று கூறியவன், சில நிமிடங்களில் அஷ்வினியை கண்டும் கொண்டான்.

அஷ்வினிக்கோ எதிரில் வருபவர்களை கூட நிமிர்ந்து பார்க்க முடியாத அளவிற்கு மனம் ஒருநிலையில் இல்லாமல் அலைபாய ஆரம்பிக்க, முன்னே தெரியும் கால்களை கண்டுகொண்டே தட்டுத்தடுமாறி நடந்து வந்தாள்.

அவளின் நடையை தடுத்து, அவளை நிற்க வைத்த அஷ்வின், “ஹே குட்டிச்சாத்தான் என்னாச்சு?” என்று வினவ, அவளோ நிமிர்ந்தே பார்க்காமல், “தலைவலி!” என்றாள்.

மாயாவிடம் திரும்பி, “நான் சொன்னேன்ல.” என்று புன்னகைத்துவிட்டு, “சரி வாங்க வீட்டுக்கு போலாம்.” என்று இருவரையும் அழைத்துச் சென்றான்.

அஷ்வினியும் மந்திரித்து விட்டதை போல அவனின் பின்னே நடந்தாள். வாகனத்திலும் அவளின் அமைதியை கண்ட அஷ்வின், ‘தலைவலின்னா இவ்ளோ அமைதியா எல்லாம் இருக்க மாட்டாளே. ஏதோ நடந்துருக்கு. இந்த குட்டிச்சாத்தான் எதை மறைக்குதுன்னு தெரியலையே!’ என்று மனதிற்குள் புலம்பியபடி வாகனத்தை செலுத்தினான்.

*****

தன்னவளின் நினைவுகள் தந்த இனிமையில் மூழ்கியிருந்தவனை கலைத்தது சாரதியிடமிருந்து வந்த அலைபேசி சத்தம்.

மச்சான், நம்ம போட்ட பிளான்படி முதல் படியை எடுத்து வச்சாச்சு. அந்த போலிச்சாமியார் கிட்ட இருந்து கிடைச்ச தகவல் படி, மத்தவங்களுக்கு சந்தேகம் வரக்கூடாதுன்னு அந்த சர்வஜித் பண்ற கொலைகளுக்கு எல்லாம் அமாவாசை மாதிரியான நாட்களை தான் சூஸ் பண்ணுவானாம். அப்போ தான் விஷயம் வெளிய லீக்கானாலும், நரபலின்னு மக்களோட மூடநம்பிகையை வச்சு திசை மாத்திடலாம்னு பக்காவா பிளான் பண்ணியிருக்கான்.” என்று சாரதி கூற, “ம்ம்ம், இதெல்லாம் செய்யுற இடத்தை பத்தி டிடெயில்ஸ் கலெக்ட் பண்ணியா?” என்றான் நிரஞ்சன்.

எல்லாத்தையும் நம்ம சாமியாரே வாக்குமூலம் கொடுத்துட்டான் மச்சான். சும்மா சொல்லக்கூடாது, அடிச்ச அடியெல்லாம் வேஸ்ட்டாகல.” என்று சிரித்தான் சாரதி.

ம்ம்ம், நாம எடுத்து வைங்குற ஒவ்வொரு அடியும் ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். ஏன்னா, நாம மோதுறது பெரிய இடம்.” என்ற நிரஞ்சனை இடைவெட்டிய சாரதி, “நான் அப்போவே இந்த பிளான் ரொம்ப ரிஸ்க், வேண்டாம்னு சொன்னேன். நீதான் கேட்கல.” என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தினான்.

இல்ல மச்சான், சர்வஜித்தை நம்மால வேற எப்படியும் எதிர்க்க முடியாது. ஆட்சிபலம், அதிகாரபலம் எல்லாம் அவன்கிட்ட இருக்குன்னு மமதையில திரியிறான். அவனை அடக்கணும்னா, அதே ஆட்சி, அதிகாரத்தின் மூலமா தான் முடியும்.” என்றான் நிரஞ்சன்.

ஓகேடா, நாளைக்கு அமாவாசை.” என்று சாரதி நினைவுகூர, “ம்ம்ம், சோ நாளைக்கு சரியான நேரம் பார்த்து, அந்த போலிச்சாமியாரை வச்சு ரெண்டு பக்கமும் தகவல் போய் சேருற மாதிரி பார்த்துக்கோ. நாளைக்கு பகல்ல நான் இங்க இருக்க மாட்டேன். வேலை விஷயமா வெளிய போறேன்சோ நீ பார்த்துக்கோ.” என்றான் நிரஞ்சன்.

அதென்ன எனக்கு தெரியாம உனக்கு வேலை? கேட்டாலும் சொல்ல மாட்ட. சரி, பார்த்து போயிட்டு வா மச்சான். இங்க நான் பார்த்துக்குறேன்.” என்று அழைப்பை துண்டித்தான் சாரதி.

சாரதியின் கேள்வி மனதிற்குள் உறுத்தினாலும், சில நாட்கள் அதை பற்றி யாரும் அறிய வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருந்தான் நிரஞ்சன். அதுவும், சர்வஜித் விஷயத்தில் ஒரு முடிவு காணும்வரை அது மற்றவர்களுக்கு ரகசியமாகவே இருக்கட்டும் என்று நினைத்தான்.

மற்றவர்களுக்கு சரி, உற்றவளிடமும் ரகசியம் காக்கப்படுமோ?

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 உங்க 🌈🔥 அடுத்த அத்தியாயத்துடன் வந்துட்டேன்… கதையை படிச்சுட்டு உங்க கருத்துக்களை ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ சொல்லுங்க…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  8 Comments

  1. Janu Croos

   தம்பி நிரஞ்சன்…நீங்க எதையோ பெருசா மறைக்குறீங்களே…என்ன ராசா அது? எல்லார்க்கிட்டையும் மறைச்ச நீ முக்கியமா யாருக்கு தெரியக்கூடாதோ அவனுக்கு தெரியுற மாதிரி அசால்ட்டாவா இருப்ப! ஆன் ஙூடவே புத்துற சாரதிக்கு தெரியல, உனக்கு உதவி பண்ற அஷ்வினுக்கு தெரியல…ஆனா அந்த கபோதி சர்வஜித்க்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது? ஒருவேளை அது சாகர் பத்தின ஏதாவது விஷயமா?
   யாருக்கும் தெரிய வேணாம்னு நினைச்ச நீ…நாளைக்கு அஷ்வினிய எங்கயோ கூட்டிட்டு போக போறியே! அப்போ அந்த ரகசியத்தை அஷ்வினிக்கு சொல்ல போறியா?
   அப்படி என்ன ரகசியம் பா அது!!!

   1. vaanavil rocket
    Author

    Haha villain na ipdi dhan olinjurundhu otu keturupan pola 😂😂😂
    Ena ragasiyam… thangaluku theriyadhadhu onrumillai 😝😝😝
    Sry for the late reply 🙏🙏🙏

  2. Interesting ud sis nice sarva ne lusu dha kova pada vendiyadhu sagar dha ana ne kova padura achooo oru vela sagar uyiroda irukano adha secret ah irukumo

  3. Archana

   சைக்கோவா அவன் 😶😶😶😶 இப்படி சாகரே கொன்னுட்டான்😒😒😒 இதுக்கெல்லாம் காரணமானவன் அவன் அப்பாவே தானே போட்டு தள்ளிருக்கனும்🤦‍♀️

   1. vaanavil rocket
    Author

    Adhe adhey my son 😂😂😂 Avan appa va dhan padukai la padukka vachutane😂😂😂