529 views

சுடர் 23

தன் பயணம் முழுவதும் அஷ்வினை பற்றியே சிந்தித்துக்கொண்டு வந்தவன், வீட்டிற்குள் நுழைந்ததும் கண்டது, நீள்சாய்விருக்கையில் கன்னத்தில் கைவைத்து எதையோ சிந்தித்துக்கொண்டிருந்த கலைவாணியை தான்.

தான் வந்தது கூட தெரியாமல் அமர்ந்திருந்தவரை அழைத்தவன், “என்ன சித்தி, நான் வந்தது கூட தெரியாம எதையோ யோசிச்சுட்டு இருக்கீங்க? இவ்ளோ நேரம் எனக்காக வெயிட் பண்ணாதீங்கன்னு சொன்னேன்ல.” என்று கேள்வியாக ஆரம்பித்து திட்டில் முடித்தான்.

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், “நிரஞ்சா, அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்டா.” என்று ஆர்வமாக பேச துவங்கினார் கலைவாணி.

அவரின் ஆர்வத்தில் சிரித்துக்கொண்டவன், “பார்றா, யாராம் அந்த பொண்ணு?” என்று வினவினான் நிரஞ்சன்.

நம்ம சாகர் அடிக்கடி சொல்லுவான்லவினின்னு, அதான் அவன் பிரெண்டு, அந்த பொண்ணு தான்டா. எதேச்சையா ஃபோட்டோ எடுத்து க்ளீன் பண்ணும்போது தான் தெரிஞ்சுது.” என்று அவர் பேசிக்கொண்டே இருக்க, அதற்குள் நிரஞ்சன் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்துவிட்டான்.

அவனிற்கு பரிமாறிக்கொண்டே மீண்டும் பேச ஆரம்பித்தார் கலைவாணி.

ஹ்ம்ம், அந்த பொண்ணை இப்போ தான்டா நேர்ல பார்க்குறேன். ஒவ்வொரு முறையும் கூட்டிட்டு வரேன்னு சொல்லியே ஏமாத்திடுவான். கடைசியா அவளோட வரேன்னு சொல்லி போன் பண்ணான், அது தான் கடைசியா அவனோட பேசுனது!” என்று கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டார்.

நிரஞ்சனோ ஆறுதலாக அவரை தோளோடு அணைத்துக்கொண்டவன், “சித்தி, இப்படி எல்லாத்தையும் அவனோட சம்பந்தப்படுத்தி ஃபீல் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்லஎன்றவன், அவரை திசை திருப்பும் பொருட்டு, “எங்க உங்க வினியோட ஃபோட்டோஸ் எல்லாம் காட்டுங்க பார்ப்போம்.” என்றான்.

சில புகைப்படங்களை எடுத்து வந்து காண்பித்தவர், “இதோ இந்த ஃபோட்டோவை தான உனக்கு அன்னைக்கு அனுப்புனேன்?” என்று சிறுவயது அஷ்வினியின் புகைப்படத்தை காட்ட, அதை கண்டவனின் இதழ்களோ தன்னை அறியாமலேயே புன்னகைத்தன.

அப்போது தான் கலைவாணிக்கும் ஏதோ தோன்ற, அன்றைய நினைவுகள் மனதில் வலம் வரத்துவங்கின.

நிரஞ்சன் தான் அனுப்பிய புகைப்படத்தை கண்டு திட்டுவான் என்று நினைத்தற்கு மாறாக அவன் பெண்ணை பிடித்திருப்பதாக சொல்லியது, மேற்கொண்டு அவன் செய்த கலாட்டாக்கள் என்று அனைத்தும் நினைவிற்கு வர, நிரஞ்சனின் முகம் கண்டவர் தன் சந்தேகத்தை உறுதிபடுத்திக்கொண்டார்.

நிரஞ்சனின் காதை பிடித்த கலைவாணி, “படவா, நீ அமைதியா பொண்ணை பிடிச்சுருக்குன்னு சொன்னப்போவே சந்தேக்கப்பட்டிருக்கணும்டா. எப்படிடா அது அஷ்வினின்னு தெரியும்? உன்கூட வேலை பார்த்ததுல பழக்கமா, இல்ல சின்னதுல இருந்தே பழக்கமா? இந்த சாகர் பையனும் நீயும் வேற க்ளோஸாச்சே.” என்று கலைவாணி தன் கற்பனைத்திறனை வெளிப்படுத்த, “ஸ்ஸ்ஸ், சித்தி என் காதை விட்டீங்கன்னா, முழுசா சொல்லுவேன். அதுக்குள்ள உங்க கற்பனை குதிரையை பறக்கவிடாதீங்க.” என்று கூறினான் நிரஞ்சன்.

அது வந்து…” என்றவனிற்கு லேசாக வெட்கம் வேறு வந்து தொலைத்தது.

அவனின் வெட்கத்தை கண்டு நெட்டி முறித்த கலைவாணி, “பார்றா, ரோபோவையே வெட்கப்பட வச்சுட்டாளே வினி!” என்று சிரிப்புடன் கூறினார் கலைவாணி.

அவரை முறைக்க முயன்று தோற்றவன், தன் காதல் கதையை கூற ஆரம்பித்தான்.

எனக்கு சாகர்அஷ்வினி பிரெண்ட்ஷிப் பார்க்கும்போதே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும் சித்தி. சின்ன வயசுல அஷ்வினி மேல செமயா கோபம் கூட வந்துருக்கு. ஆனா, வயசு கூடும்போது அவ மேல பிரமிப்பு தான் ஏற்பட்டுச்சு! எத்தனையோ பேரு இவங்க நட்பை கொச்சைப்படுத்தி பேசுனப்போ கூட, நட்பை பிரேக் பண்ணிக்கல. இவ்ளோ ஏன், ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல நம்ம சாகரே, மத்தவங்க பேசுறதை கேட்டு வெக்ஸாகி பிரெண்ட்ஷிப் பிரேக் பண்ணிக்கலாம்னு சொன்னப்போ, அஷ்வினி தான் மறுத்துருக்கா. எந்த பிரச்சனைனாலும், இந்த சமூகம் பொண்ணுங்க மேல தான் பழியை போடுவாங்கன்னு தெரிஞ்சும் கூட, அவ அவளோட ஸ்டேண்ட்ல நின்னு அதை ஃபேஸ் பண்ணது, எனக்கு பிடிச்சுருந்தது. அதுமட்டுமில்லாம, அவ சாகர் மேல வச்சுருந்த பாசம், அவனுக்கு எந்த பிரச்சனைனாலும் முதல் ஆளா நிக்குறதுன்னு எல்லாத்துலயும் என்னை இம்ப்ரெஸ் பண்ணிட்டா.” என்று உதட்டில் உறைந்திருந்த சிரிப்பு மங்காமல் கூறி முடித்தான்.

டேய், உன் முகத்தை கண்ணாடியில பாரேன் டா. ப்பா, இவ்ளோ லவ்வு வச்சிருக்க அப்பறம் ஏன் டா நான் கல்யாணத்துக்கு கேட்டப்போ ஒன்னும் சொல்லல. என்கிட்ட சொல்றதை விடு, அந்த பொண்ணுகிட்ட கூட இன்னும் சொல்லாம, அவளை கோபப்படுத்திட்டு இருக்க.” என்றார் கலைவாணி.

சில நொடிகள் இறுகி இயல்பானவன், “எனக்கு அவளை வெறுப்பேத்தி பார்க்குறது ரொம்ப பிடிச்சுருக்கு சித்தி.” என்று கண்ணடித்துக்கூற, கலைவாணியோ, “இதுக்கெல்லாம் மொத்தமா சேர்த்து அவகிட்ட வாங்க போற பாரு.” என்று கூறிவிட்டு செல்ல, நாயகனின் மனம் முழுவதும் நாயகியின் வசம் தான்.

சிரிப்புடனே தன்னறைக்கு சென்று கெஞ்சிக்கூத்தாடி நித்திரையை தழுவிக்கொண்டான்.

*****

நாட்கள் அதன்போக்கில் வேகமாக செல்ல ஆரம்பித்து, மூன்று நாட்கள் கடந்து சென்று விட்டன.

இம்மூன்று நாட்களில் அஷ்வினிக்கோ அஷ்வினுக்கோ பெரிதாக எவ்வித மாறுதல்களும் ஏற்படவில்லை. அஷ்வினி புதிதாக வந்த ப்ராஜெக்ட்டிற்காக தீயாக வேலை செய்து கொண்டிருந்தாள். அஷ்வினோ தன் காதல் நிரஞ்சனிற்கு எப்படி தெரிய வந்தது என்ற குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருந்தான். அஷ்வினி மூலமாக தெரிய வந்திருக்கும் என்று அவன் சிறிதும் சந்தேகப்படவில்லை.

மாயாவிற்கோ முதல் நாளை தவிர, மற்ற நாட்கள் சாதாரணமாக தான் கழிந்தன. ஏனெனில், முதல் நாள் தான், மாயாவின் குடும்பத்தை சேர்ந்த நால்வரும் காவல் துறையினரிடம் சரணடைந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்டது.

அதை கண்டவளின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று அஷ்வினி குடும்பத்தினர் பதற்றமாக இருக்க, அவளுக்கோ நவீன் மற்றும் சம்பூர்ணாவின் நிலை குறித்த கவலை தான் மனதை அரித்துக்கொண்டிருந்தது.

ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தரும் விதமாக, இளையவர்கள் இருவரும் தான் மாயாவை சமாதானப்படுத்தினர்.

மாயாக்கா, அவங்க எல்லாரும் பேட்ல அதான் போலீஸ் அங்கிள் கூட்டிட்டு போறாங்க. நம்மகிட்ட எப்போ சாரி கேட்குறாங்களோ, அப்போ தான் அவங்க கூட நம்ம போகணும்.” என்று சம்பூர்ணா கூற, நவீனும், “ஆமா மாயாக்கா, நம்ம மேல அவங்களுக்கு பாசமே இல்லல, அப்போ எதுக்கு நம்ம ஃபீல் பண்ணனும்?” என்று ஆதரவாக மாயாவின் கைகளை பற்ற, இருவரையும் அணைத்துக்கொண்டாள் அவர்களின் உடன்பிறவாத சகோதரி.

அவர்களைக் கண்டு மற்றவர்களும் அமைதியாக இருக்க, அந்த சூழலை மாற்றியது அஷ்வினி தான்.

சரவணன் கூறியது போல, அவரின் நண்பரின் உதவியுடன் அருகிலிருக்கும் பள்ளியில் நவீன் மற்றும் சம்பூர்ணாவை சேர்க்க, அடுத்த நாளே புது பள்ளிக்கு சென்று வந்தனர் இருவரும்.

அவர்களின் பள்ளி கதைகளை கேட்டு, அவர்களுக்கு ஏதுவாக பேசி கிண்டல் செய்வதில் அஷ்வினிக்கு நிகர் அஷ்வினியே. இதை சாக்காக வைத்து, சற்று ஒதுக்கம் காட்டிய நவீனையும் தன்னுடன் இயல்பாக உரையாட வைத்தும்விட்டாள்.

அதே சமயம், மாயாவின் வேலையும் உறுதியாகிவிட, இம்மூன்று நாட்களும் அஷ்வினியுடனே அலுவலகத்திற்கு சென்று வருகிறாள். அதுவும், அவள் அஷ்வினின் குழுவிலேயே சேர்க்கப்பட, அஷ்வினியின் பார்வை அஷ்வினின் பக்கம் சந்தேகமாக திரும்பியதும், அவன் சத்தியம் செய்யாத குறையாக, தான் ஒன்றும் செய்யவில்லை என்று மறுத்ததும் தனி கதை.

மாயாவிற்கு அலுவலகத்தில் நேரம் நன்றாகவே கழிந்தது. தனக்கு பிடித்த துறை என்பதும் அதுவும் அஷ்வினின் கீழ் வேலை என்பதால் இன்னும் எளிதாக இருந்தது என்பதும் அவளின் மகிழ்ச்சிக்கான காரணங்களாக இருந்தன.

மேலும், ஜெனி, அக்ஷய் போன்ற நண்பர்களும் அஷ்வினியின் உபயத்தில் கிடைக்க, அவளின் நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்றே கூறலாம்.

*****

காலையில் அரக்கப்பறக்க கிளம்பி வந்த அஷ்வினியை கண்ட சித்ரா, “என்ன ஆச்சரியம்? சனிக்கிழமைங்கிறதை மறந்துட்டியோ?” என்று மகளை கேலி செய்ய, “ம்மா, இம்பார்ட்டண்ட் ப்ராஜெக்ட் ஒர்க் இருக்குன்னு சொன்னேன்ல, நேத்து தான் அதெல்லாம் முடிச்சு க்ளையண்ட்டுக்கு கொடுத்துட்டு வந்துருக்கோம். இன்னைக்கு அதுக்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்க போகணும். எனக்கு வேற டென்ஷனா இருக்கு!” என்று புலம்பிக்கொண்டே சாப்பிட அமர்ந்தாள் அஷ்வினி.

அப்போது காலை தேநீர் குடிப்பதற்காக அங்கு வந்த அஷ்வின், “ஹே குட்டிச்சாத்தான், எதுக்கு இவ்ளோ பதட்டமா இருக்க? அதான் வேலையெல்லாம் முடிச்சு கொடுத்தாச்சுல, இனி இப்படி சுத்தி என்ன யூஸ்? நிதானமா போ, எல்லாம் நல்ல ரிவியூ தான் கொடுத்துருப்பாங்க. ஏதாவது இஸ்யூன்னா பார்த்துக்க தான் உங்க ப்ராஜெக்ட் மேனேஜர் இருக்காருல. ஃப்ரீயா விடு.” என்று கூறிக்கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த மாயா, “அவளே டென்ஷனா இருக்கா, இதுல நீ வேற லெக்சர் கொடுத்து இன்னும் பதட்டப்பட வைக்குற.” என்றாள்.

இருவருக்கும் அந்த நேர்காணல் நிகழ்வு நினைவிற்கு வர சிரித்துக்கொண்டனர்.

கடந்த மூன்று நாட்களாகவே மாயாவிடம் சில பல மாற்றங்களை கண்டு கொண்டு தான் இருந்தாள் அஷ்வினி. முக்கியமாக அஷ்வினுடன் பேசும் விதத்தில்! அதைப் பற்றி கேட்டுக்கொள்ளவில்லை எனினும், அந்த மாற்றத்தை மனதிற்குள் ஆசுவாசத்துடன் வரவேற்கவே செய்தாள் அஷ்வினி.

இப்போதும் இருவரின் உரையாடல்களை கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “நானே இங்க டென்ஷன்ல இருக்கேன், நீங்க சிரிச்சு பேசி வெறுப்பேத்துறீங்களா? போயிட்டு வந்து இருக்கு உங்களுக்கு.” என்றவாறே அலுவலகத்திற்கு பயணித்தாள்.

அவள் பயந்ததை போல இல்லாமல், இலகுவாகவே சென்றது. அவர்களின் குழுவின் திறனை பாராட்டி அவர்களின் வாடிக்கையாளரிடமிருந்து மின்னஞ்சல் வேறு வந்திருக்க, அஷ்வினிக்கு குதூகலமாக இருந்தது.

பின்னே, இது அவளின் வெற்றி தானே! என்னதான் அவளின் குழுவின் பங்கும் இருந்தாலும், அக்குழுவை ஒருங்கிணைப்பதற்கு நிரஞ்சனின் உதவியும் இருந்தாலும், அவள் சிரத்தை எடுத்து செய்த வேலை, பலரின் அவநம்பிக்கையை உடைத்து அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது என்றால் அது அவளின் வெற்றி தானே.

அந்த மின்னஞ்சலை கண்டதும், அவள் முதலில் தேடியது நிரஞ்சனை தான். அதை கண்டு அவனின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்று பார்க்கவே விரும்பினாள்.

ஆனால், அதற்கு அவளிற்கு கொடுத்து வைக்கவில்லை போலும். அன்று நிரஞ்சனிற்கு வேறு ஏதோ முக்கிய வேலை வந்துவிட்டதால், அவன் அலுவலகத்திற்கே வரவில்லை.

அது தெரிந்ததும் மங்கையவளின் மலர்ந்த முகம் வெகுவாக கூம்பிப்போனது. அதை உணர்ந்த ஜெனியும் அக்ஷயும் ஒருவருக்கொருவர் பார்த்து உதட்டை பிதுக்கிக் கொண்டனர்.

பின்னர் அக்ஷய் தான், “சூப்பர் வினி. எப்படியோ சக்ஸஸ்ஃபுல்லா இந்த ப்ராஜெக்ட்டை கரைசேர்த்தாச்சு. நம்ம வேலையை பாராட்டி, நம்ம ஹெட் நாளைக்கு பார்ட்டி வைக்கப்போறாராம். அதுவும் கம்பெனி செலவுல. கேட்கவே எவ்ளோ ஆனந்தமா இருக்கு! எப்போ பார்த்தாலும் உங்க நொண்ணன் டீம் தான் இப்படி பார்ட்டிக்கு போவாங்க.” என்று பேசிக்கொண்டே இருக்க, அதில் சில விஷயங்கள் மட்டும் மேலோட்டமாக அஷ்வினியின் காதிற்குள் சென்று மூளையை அடைந்தன.

ஜெனியோ, “டேய் அரைவேக்காடு நிறுத்து உன் புலம்பலை. அஷ்வின் டீமும் நாளைக்கு பார்ட்டிக்கு போறாங்க. அதுல தான் இப்போ நம்மளையும் ஜாயின் பண்ண சொல்லியிருக்காங்க. இப்போ எதுக்கு உனக்கு அஷ்வின் டீம் மேல அவ்ளோ பொறாமை? அவங்க ப்ராஜெக்ட் முடிக்கிறாங்க, பார்ட்டி போறாங்க.” என்று கூற, “இப்போ எதுக்கு அந்த டீமுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ற?” என்று அக்ஷயும் பதிலுக்கு பேச, இருவரும் சண்டைக்கு ஆயத்தமாகினர்.

அடச்சே நிறுத்துங்க லூசுங்களா. இப்போ எதுக்கு தேவையே இல்லாத ஆணியை பிடுங்கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். அவங்க பார்ட்டிக்கு போறாங்க, நம்மளும் போறோம். என்ஜாய் பண்றோம். அவ்ளோ தான் டாட். இப்போ எனக்கு தலை வலிக்குது, நான் வீட்டுக்கு கிளம்புறேன்.” என்று அவர்களின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டாள் அஷ்வினி.

என்ன இவ வந்தா; மெயில் பார்த்தா; ஹாப்பியானா; திரும்ப சோகமானா; நம்மள திட்டுனா; இப்போ கிளம்பிட்டா!” என்று ஜெனியும் அக்ஷயும் புலம்பிக்கொண்டனர்.

*****

வீட்டிற்கு வந்ததும், அனைவரும் அவளை சூழ்ந்து கொள்ள, அவர்களின் கேள்விகளுக்கு ஒருவாறாக பதில் சொல்லிவிட்டு அறைக்கு செல்ல முயன்றாள்.

அவள் படியில் ஏறும்போது, “வினி, இந்த பசங்களுக்கு ஸ்கூலுக்கு ஏதோ வாங்கணுமாம், அப்படியே நாங்களும் ஷாப்பிங் போலாம்னு பிளான் பண்ணோம். நீயும் வரியா மா?” என்று சரவணன் வினவ, “இல்ல ப்பா, எனக்கு டையர்ட்டா இருக்கு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன். நீங்க போயிட்டு வாங்க.” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

கடந்த ஒரு வாரமாகவே அவளின் வேலைப்பளுவை பற்றி அறிந்ததால், குடும்பத்தினரும் அவளை வற்புறுத்தாமல் சென்றுவிட, அஷ்வினிற்கு மட்டும் உள்ளம் குறுகுறுத்தது.

அறைக்குள் வந்தவளிற்கோ, சம்பந்தமே இல்லாமல் கோபம் வந்தது. குறுக்கும் நெடுக்குமாக அந்த அறையை அளவிட்டவளிற்கு, என்ன செய்து எரிச்சலை போக்குவது என்று தான் தெரியவில்லை.

ஒரு பெருமூச்சுடன், தன் அலைபேசியிலிருந்து நிரஞ்சனின் எண்ணிற்கு முதல் முறையாக மின்னஞ்சல் தொடர்பான செய்தியை அனுப்பினாள். அதை அவன் பார்த்ததற்கு எதிரொலியாக நீல நிறத்தில் டிக் மார்க்ஒளிர, அதற்கு மறுமொழி தான் எதுவும் வரவில்லை.

ச்சை இவரெல்லாம் என்னத்துக்கு வாட்சப் வச்சுருக்காரு?’ என்று மனதிற்குள் வறுத்தெடுத்தவள், மீண்டும் அடுத்த நாள் நடைபெறும்பார்ட்டியை பற்றிய செய்தியை அனுப்ப, அதற்கு மட்டும், “ஓகே, வில் அட்டெண்ட்என்று பதில் வந்திருந்தது.

அடப்பாவி, ஒருத்தி மாங்கு மாங்குன்னு வேலை பார்த்துருக்கேன், அதை பாராட்ட ஒரு வார்த்தை சொல்லல! பார்ட்டிக்கு மட்டும்வில் அட்டெண்ட்டாம்ல?’ என்று வழக்கம் போல புசுபுசுவென்று மூச்சை விட்டுக்கொண்டே தூங்கி விட்டாள்.

அதன்பின்னான அவளின் நேரம், குடும்பத்தினருடன் கழிந்து விட்டது. மேலும், அதன்பின்னர் அவளிற்கு தனிமை கிடைக்காத காரணத்தினால், நிரஞ்சன் பற்றிய நினைவு சற்றே மங்கிப்போனது.

*****

அடுத்த நாள்பார்ட்டிக்காக பரபரப்பாக தயாராகிக்கொண்டிருந்தனர் அஷ்வினி மற்றும் மாயா. மாயாவும் அஷ்வினின் குழுவில் சேர்ந்துள்ளதால், அவளிற்கும் பார்ட்டிக்கான அழைப்பு வந்திருந்தது.

இரு பெண்களும் சேலையை கட்ட போராடிக்கொண்டிருக்க, தான் உதவுவதாக கூறிய சித்ராவையும், “நீங்க ஓல்டிஸ் ஸ்டைல்ல கட்டுவீங்க. நாங்களே யூட்யூப் பார்த்து கட்டிக்கிறோம்.” என்று கூறிவிட்டாள் அஷ்வினி.

ஒருவழியாக, தயாராகி விட்டு வெளியே வந்தவர்களை முதலில் பார்த்தது அஷ்வின் தான். என்ன தான் மறைத்து வைத்தாலும், இது போன்ற வெகு சில சூழலில் அவனின் காதல் அவனையும் மீறி வெளிப்பட்டு தான் விடுகிறது.

க்ரே நிற சேலையை சிங்கிள் ஃபிளீட்டில் கட்டி, அதை லாவகமாக கையாண்டு படியிலிருந்து இறங்குபவளை விட்டு சற்றும் அசையவில்லை அஷ்வினின் கண்கள்.

மாயாவின் பின்னே, அதே போன்று பேபி பிங்க் நிற சேலையை சிங்கிள் ஃபிளீட்டில் கட்டி, அதை பிடித்துக் கொண்டு படியில் இறங்க பாடுபட்டுக்கொண்டிருந்த உடன்பிறந்தவளை சற்றும் பார்க்கவில்லை அவன்.

அடப்பாவி, இங்க ஒருத்தி கஷ்டப்பட்டுட்டு இருக்கேன், இவனுக்கு இப்போ தான் ரொமான்டிக் லுக் கேட்குதோ!’ என்று மனதிற்குள் திட்டிய அஷ்வினி, “டேய் அண்ணா, சும்மா தான நிக்குற, எனக்கு வந்து ஹெல்ப் பண்ணேன்!” என்று பூஜை வேளை கரடியாக மாற, அப்போது தான் நிகழ்விற்கு வந்தவன் தன்னையே நொந்து கொண்டு, கவனமாக மாயாவின் புறம் கண்களை செலுத்தாமல் அஷ்வினி படியிலிருந்து இறங்குவதற்கு உதவினான்.

அதன்பின்னர், சித்ராவின் உதவியுடன் சேலையை சரியாக்கிவிட்டு பார்ட்டிக்கு கிளம்பினர்.

*****

அந்த பார்ட்டியிலும் அஷ்வினியின் கண்கள் நிரஞ்சனை தான் தேடின. அவன் அவளின் உழைப்பை பாராட்டவில்லை என்பதற்காக தேடுகிறாள் என்று கூறி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும், அவளின் ஆழ்மன உணர்வுகளை அவளே சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

இதோ அவனை பார்த்ததும், உள்ளுக்குள் ஏற்படும் குறுகுறுப்பும் மகிழ்ச்சியும் எதற்கென்று தெரியாமல், ஹாஃப் வைட் ஷர்ட், டார்க் ப்ளூ ஜீன் மற்றும் அதே நிறத்திலான ஓவர்கோட் அணிந்து வலம் வருபவனையே சுற்றிக்கொண்டிருந்தன அவளின் விழிகள்.

அவள் மட்டுமல்ல, அஷ்வின் கூட நிரஞ்சனை தான் பார்த்துக் கொண்டிருந்தான், சரியான சந்தர்ப்பம் அமைந்தால், அவனுடன் பேசி சமாதானம் செய்வதற்காக

அதை அஷ்வினியும் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள். அஷ்வின் பாவமாக நிரஞ்சனை பார்ப்பதும், நிரஞ்சன் அவனை தவிர்ப்பதும் என்று இருவரின் விழிமொழிகளை கண்டவள், ‘எதுக்கு இவங்க ரெண்டு பேரும் ஏதோ லவர்ஸ் குவாரெல் மாதிரி பிஹேவ் பண்றாங்க? ஆமா, இவங்க இதுவரைக்கும் ஒன்ஸ் தான் மீட் பண்ணயிருக்காங்க, அதுக்குள்ள அப்படி என்ன பாண்டிங்? இல்ல, எனக்கு தான் அப்படி தோணுதா! ஹ்ம்ம், இனி இவங்களை கேர்ஃபுல்லா வாட்ச் பண்ணனும்.’ என்று நினைத்துக்கொண்டாள்.

அப்படி ஒருமுறை நிரஞ்சனிடம் பேச அஷ்வின் சென்றபோது, சரியாக அதே சமயம் அக்ஷய் அங்கு வந்ததால், அவனிடம் பேசுவது போல அங்கிருந்து நகர்ந்துவிட்டான் நிரஞ்சன்.

அக்ஷயும் நிரஞ்சன் தன்னிடம் இப்போது நன்றாக பேசுவதால், இயல்பாக சிற்சில விஷயங்களை பற்றி பேசி நேரத்தை போக்கிக்கொண்டிருந்தான்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஜெனி பார்ட்டிக்கு வர இயலாததால், நிரஞ்சனுடன் சுற்றிக்கொண்டிருந்தான் அக்ஷய்!

தங்களை கடந்து சென்ற ஜோடியை கண்டு ஒரு பெருமூச்சுடன், “ஹ்ம்ம், எல்லா டீம்லயும் ஜோடி ஜோடியா சுத்துறாங்க? நம்ம டீமும் இருக்கே.” என்று முணுமுணுத்தவனிற்கு அப்போது தான் நிரஞ்சனின் நினைவு வர, ஒரு சமாளிப்பு புன்னகையுடன், “நீங்க சிங்கிளா பாஸ்?” என்று வினவினான்.

அவனின் முணுமுணுப்பை கேட்டாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒரு புன்னகையுடன், “ம் மேரிட் மேன். என்றான் நிரஞ்சன்.

எதே? கல்யாணம் ஆகிடுச்சா?! இது தெரிஞ்சா பல பேரு இதயம் வெடிச்சுடுமே.” என்று தான் தோழியின் நினைவில் கூற, நிரஞ்சனோ பெரிதாக சிரித்து, “ஹே ரிலாக்ஸ், இப்போதைக்கு ஐம் மேரிட் டூ மை ஒர்க். என் வேலையை ரொம்ப லவ் பண்றேன். இந்த மீனிங்ல தான் சொன்னேன்.” என்று கூற, “அட ஏன் பாஸ் நீங்க வேற, இன்னும் கொஞ்சம் விட்டுருந்தா, ஷாக்ல பேரலைஸ் ஆகியிருப்பேன்!” என்றான் அக்ஷய்.

அதே சமயம் நிரஞ்சனின் சிரிப்பை கேட்டு, தன் கட்டுப்பாட்டையும் மீறி அவனை பார்த்த அஷ்வினியால், இப்போது அவளின் கண்களை அவனை விட்டு திருப்ப முடியாமல் இருந்தது.

சில நொடிகளுக்கு முன்பு கூட, அவளின் கண்கள் நிரஞ்சனை தேட, அப்போது தான் தன்னையே திட்டிக்கொண்டு, அவளின் தேடுதலுக்கான காரணத்தை அறிய முயன்றாள் பாவை.

தேடுதலுக்கான விடையை முழுதாக அவளின் மனம் வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவன் மீது ஏற்பட்டிருந்த ஈர்ப்பை மட்டும் சுட்டிக்காட்டியிருந்தது.

அப்போதிருந்து இப்போது வரை, ‘இது எப்படி சாத்தியம்?’ என்று அவளின் மூளையை கசக்கி யோசிக்க, அவளின் மூளையோ, ‘அவன் தான் உன்னை அடிக்கடி பார்த்துட்டே இருந்தானே, உன்கிட்ட ரொம்ப நேரம் பேசுறது, உன்மேல எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்குறதுன்னு இருந்தா, ஈர்ப்பு வரத்தான் செய்யும்!’ என்று அவளிற்கு சாதகமான பதிலை தந்தது.

ஒருவேளை அவனும்என்னை லவ் பண்றானோ?’ என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டபோது தான் நிரஞ்சன் சிரித்தது.

சரி, அவனையே கேட்போம்.’ என்று ஒரு வேகத்தில் நிரஞ்சனருகே வந்தவள், “ஹலோ, நீங்க என்ன என்னை லவ் பண்றீங்களா? என்று கேட்டுவிட, கேள்வி கேட்கப்பட்டவனோ அமைதியாக அதே சமயம் எப்போதும் போல ஒருவித சுவாரசியத்துடன் அவளைப் பார்வையிட, அருகில் இருந்த அக்ஷய் தான் பதறிப்போனான்.

ஹே, இவரு யாருன்னு தெரிஞ்சு தான் பேசுறீயா?” என்று அக்ஷய் வினவ, “ஏன் தெரியாம? ப்ராஜெக்ட் மேனேஜர்னா, அவங்க செய்யுற தப்பை தட்டிக்கேட்க கூடாதா?” என்று எகிறினாள் அஷ்வினி. அவளுக்கிருந்த கோபத்தை இப்படி காட்டிக்கொள்கிறாளாம்!

நல்லா தட்டிக்கேட்ட போ.” என்று முணுமுணுத்தவன், அப்படி என்ன தப்பு செஞ்சுட்டாருன்னு இப்படி குத்தம் சொல்லிட்டு இருக்க?” என்று அக்ஷய் வினவ, இப்போதும் கூட நிரஞ்சன் அமைதியாக தான் இருந்தான்.

இவரு என்னையே அடிக்கடி பார்த்துட்டு இருக்காரு. எனக்கு அது அன்ஈஸியா இருக்கு.” என்று நிரஞ்சனைப் பார்த்துக்கொண்டே கூற, அவனோ அதற்கு மறுமொழியாக ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்.

சீ, அவரு நம்மளை எல்லாம் சூப்பர்வைஸ் பண்ண தான் வந்துருக்காரு. உன்னை மட்டுமில்ல, நம்ம டீம்ல இருக்க எல்லாரையும் அவரு க்ளோஸா வாட்ச் பண்ணி ரிப்போர்ட் தரணும். இது அவரோட வேலை. மோரோவர், அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு. அவரோட வைஃபை தவிர வேற யாரையும் அவரு லவ் பண்றதா இல்ல.” என்று அக்ஷய் கூறியதும், “வைஃபா!” என்று மானசீகமாக வாய் பிளந்தாள் அஷ்வினி.

அதே சமயம் நிரஞ்சனின் அலைபேசி ஒலியெழுப்ப, சிறு புன்னகையுடன் கூடிய தலையசைப்பை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர, அஷ்வினியோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

அவளை உலுக்கிய அக்ஷய், “ஹே வினி, ஷாக்ல செத்துடாத. நான் சும்மா தான் சொன்னேன். அந்த மனுஷன் அவரோட வேலையைத் தான் லவ் பண்றாராம்.” என்று நடந்ததைக் கூற, அவனின் தலையில் கொட்டியவள், “எரும எரும, கொஞ்ச நேரத்துல ஹார்ட் அட்டாக் வர வச்சுட்டியேடா பக்கி!” என்று மேலும் சில பல கெட்ட வார்த்தைகளால் அவனிற்கு அபிஷேகம் செய்தாள்.

ச்சை போதும் நிறுத்து வலிக்குது. உனக்கும் அவருக்கும் இடையில சம்திங் சம்திங் இருக்கோன்னு சந்தேகப்பட்டு தான் இப்படி சொன்னேன். இப்போ கன்ஃபார்ம்மாகிடுச்சு.” என்று அக்ஷய் கூற, “லூஸே, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணியிருந்தா நானே சொல்லியிருப்பேன். இவரு பெரிய டிடெக்டிவ்! எங்களுக்கு இடையில என்னன்னு கண்டுபிடிக்கிறாராம்.” என்று அலுத்துக்கொண்டாள் அஷ்வினி.

ஹே அப்போ சம்திங் சம்திங் தானா?” என்று அக்ஷய் கத்த, “வாய மூடு டா கொரங்கு! கத்தி கித்தி நீயே சொல்லிடுவ போல.” என்று அவனை அடக்கிவிட, சரியாக அதே நேரம் டி.ஜே பாடலும் ஆரம்பிக்க, அந்த இடமே ஆடல் பாடலில் களைகட்ட துவங்கியது.

அந்த இடத்தில் இருக்க முடியாமல் அஷ்வினி சற்று நகர்ந்து செல்ல, அப்போது அவளிற்கு பின்புறமிருந்து, “மேடம் எங்க கிளம்பிட்டீங்க?” என்ற குரல் கேட்க, அத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்த அவளின் இதழ்கள் சட்டென்று மௌனத்தை கடன் வாங்கிக்கொண்டன.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 எல்லாரும் பொங்கலை கோலாகலமா கொண்டாடுனீங்களா… நானும் பொங்கலை சிறப்பிச்சுட்டு வந்ததால, பொங்கல் ஸ்பெஷல் எபி போட முடியல… அதுக்காக சேர்த்து பெரிய எபியா போட்டுட்டேன்…😊😊😊 படிச்சுட்டு உங்க கருத்துகளை காயின்ஸ் மூலமாவோ, ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ சொல்லுங்க…😁😁😁

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
13
+1
1
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  4 Comments

  1. Janu Croos

   அடிப்பாவி வினி…என்ன இப்படி பொசுக்குனு போய் நீங்க என்ன லவ் பண்றீங்களானு கேட்டுட்ட…அம்புட்டு தைரியமா ராசாத்தி உனக்கு…
   இந்த நிரஞ்சன்.பேசுறத பாத்தா சாகர் அஷ்வினி எல்லாம் சின்ன வயசுல இருந்தே ஃபகரண்ட்ஸ் போலயே…அப்போ நிரஞ்சன வினிக்கு அடையாளம் தெரியலயா…
   அப்போ சின்ன வயசுல பழகினத வச்சு கண்டுபுடிச்சு தான் அஷ்வின் நினஞ்சன் கூட சேர்ந்து இந்த வேலை எல்லாம் பாக்குறானா….

   1. vaanavil rocket
    Author

    Haha aama ellathulayum nanga fast and furious ah irupom 🔥🔥🔥
    Sry for the late reply sis 🙏🙏🙏

  2. Super ud sis nice semma ud vini ennama posukkunu ipdi oru question kettuta adhuku response kuda pannala niranja ne adapavi unakku ipdi oru lov stry iruka niranja ashwin frndsnu therinja vini enna pannuvalo