443 views

சுடர் 22

நிரஞ்சன் சாரதியிடம், “என்னாச்சு டா? எனி நியூஸ்?” என்றவாறே உள்ளே நுழைய, அவனோ, “ம்ம்ம், நம்ம தேடிட்டு இருந்த ஆளுக்கு சாகர் குடும்பத்தோட, அதாவது உங்க குடும்பத்தோட தான் சம்பந்தம் இருக்கு.” என்று கூறினான்.

அதைக் கேட்டதும், “வாட்?” என்று நிரஞ்சன் அதிரவும், “ஹே ஹாய், நான் இல்லாம என்ன டிஸ்கஷன் ஓடிட்டு இருக்கு?” என்றவாறு அஷ்வின் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அவனைக் கண்ட சாரதி, “என்ன ஆச்சரியம்? சாருக்கு இங்க வரதுக்கெல்லாம் வழி தெரிஞ்சுருக்கு போல?” என்று கிண்டலாக வினவ, அஷ்வினோ, “அண்ணா, அந்த குட்டிச்சாத்தானுக்கு சந்தேகம் வராம கிளம்புறது அவ்ளோ ஈஸியான விஷயமா? வேணும்னா கொஞ்ச நாளைக்கு நீங்க அவளை  தத்தெடுத்துக்கோங்க.” என்று சலிப்புடன் கூறினாலும், அவன் முகத்தில் சிரிப்பு குறையவில்லை.

“பாவம் பச்ச மண்ணுடா அந்த பொண்ணு! நீயும் இவனும் தான் சலிச்சுக்குறீங்க.” என்று யோசனையுடன் நின்றிருந்த நிரஞ்சனை சுட்டிக்காட்டினான்.

அவற்றை கண்டு கொள்ளாத நிரஞ்சனின் பார்வை முழுவதும் அஷ்வினின் மீது தான். அவனின் மனமோ அஷ்வினி கூறிய, ‘அஷ்வினின் காதலை’ பற்றித்தான் சிந்தித்துக்கொண்டிருந்தது.

“என்னாச்சு பாஸ்?” என்று அவனின் பார்வையை உணர்ந்து அஷ்வின் வினவ, நிரஞ்சன் பதில் கூறாமல் நின்றிருந்ததை கண்ட சாரதி, தான் கண்டுபிடித்ததை அஷ்வினிடம் கூறி, “அதை தான் யோசிச்சுட்டு இருக்கான்னு நினைக்குறேன்.” என்றான்.

“சாகர் குடும்பத்துக்கு சம்பந்தம்னா, யாரு? ஏன் மாயாவை டார்கெட் பண்ணனும்?” என்று அஷ்வின் குழப்பமாக வினவ, “சாகர் சந்தோஷமா இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறவங்களா இருக்கணும். இஃப் ஐ’ம் நாட் ராங், அது சாகர் அப்பா சம்பந்தப்பட்டதா இருக்கணும்.” என்றான் நிரஞ்சன்.

அதைக் கேட்ட அஷ்வின் புருவம் சுருக்கி யோசிக்க, “சரி தான் மச்சான். நாம தேடிட்டு இருக்குறது, சாகரோட எக்ஸ்-அப்பா தனசேகரனோட மகன் சர்வஜித் தான்.” என்றான் சாரதி.

*****

தனசேகரன் – கலைவாணி திருமணம் நடந்த பிறகு சில காலங்கள் நன்றாக தான் சென்றது அவர்களின் திருமண வாழ்வு. ஆனால், இடையில் ஏற்பட்ட பழக்கவழக்கத்தினால் தனசேகரின் குணம் மாறிப்போக, கலைவாணி கருவுற்றிருந்ததால் முதலில் அதை கவனிக்காமல் தான் போனார்.

அதனால், பின்னாளில் தன் வாழ்க்கைப்பாதையே மாறிப்போகும் என்று அறிந்திருந்தால், தன் கணவனின் மேலும் கவனத்தை செலுத்தியிருப்பாரோ!

அவருக்கு சாகர் பிறந்ததும் தான், கணவனிற்கு இரண்டாவதாக ஒரு குடும்பம் இருப்பதும், அந்த பெண்ணும் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

விஷயம் பெரிதாக, இரு குடும்பங்களும் மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த, காலங்காலமாக கூறி வருவது போல, “ஆம்பிளைன்னா அப்படியிப்படி தான் இருப்பாங்க… பொண்ணுங்க தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகணும்.” என்று கூறினர்.

சில பெண்களே, “புருஷனை முந்தானையில முடிச்சு வச்சுக்க தெரியல.” என்று கலைவாணியை கண்டு புரளி பேசினர்.

மேலும், கலைவாணியை எரிச்சல்படுத்தவென்றே, “வாணி, இதெல்லாம் தேவையா. நான் என்ன உன்னை அப்படியே விட்டுடுவேணா? எப்பவும் போல நீ அந்த வீட்டுலயே இரு. இங்க கொஞ்ச நாள், அங்க கொஞ்ச நாள்னு நான் இருக்கேன். நம்ம வாழ்க்கையும் எப்பவும் போலவே இருக்கும்.” என்று தனசேகரன் கூற, பொங்கிவிட்டார் கலைவாணி.

வீட்டின் நடுவில் நாற்காலிகளில் அமர்ந்திருந்த பெரியவர்களைப் பார்த்து, “உங்களை எல்லாம் கூப்பிட்டது எங்களை சேர்த்து வைக்க இல்ல. ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’னு பழைய பஞ்சாகத்தை யாரும் திரும்ப திரும்ப சொல்ல வேண்டாம். என்னால இந்தாளு கூட இனி வாழ முடியாது. இவரை பார்த்து என் பையனும் கெட்டுப்போக வேண்டாம்.” என்று பிரிவில் முடிவாக இருந்தார்.

இதனால் அவருக்கு கிடைத்ததெல்லாம், ‘பொழைக்க தெரியாத பொண்ணு’, ‘அழுத்தக்காரி, ‘திமிரு பிடிச்சவ’ போன்ற அடைமொழிகள் தான்.

அதற்கெல்லாம் சற்றும் கலங்காதவர், தந்தையுடன் முதலில் ஊரை மாற்றி வந்தார். அதற்கு அவரின் அக்காவும் அத்தானும் (நிரஞ்சனின் பெற்றோர்) உறுதுணையாக இருந்தனர்.

ஆனால், சிறிது நாட்களில் அவரின் அக்காவும் அத்தானும் விபத்தில் இறந்துவிட நிரஞ்சனின் பொறுப்பும் இவருடையதானது. அதில் அவருக்கு வருத்தமெல்லாம் இல்லை.

தனசேகரனை போல இருக்கக்கூடாது என்றே தன் இரு மகன்களுக்கும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று போதித்து தான் வளர்த்து வந்தார். புரிந்து கொள்ளும் வயது வந்ததும், நடந்ததை எல்லாம் இருவருக்குமே கூறினார்.

அதை கேட்ட இருவருமே தனசேகரனை வெறுத்தனர். ஆனால், அதன்பின்னர் அவரை தேடி சென்று நீதி கேட்க விழையவில்லை. அதை கலைவாணியும் விரும்பவில்லை.

“இதை உங்களுக்கு சொன்ன காரணம், நீங்க அந்தாளு மேல பழியுணர்ச்சியை வளர்த்து, அவரைப் பழிவாங்கனும்னு இல்ல. நீங்க உங்க வாழ்க்கைல இது மாதிரி ஒரு தப்பை பண்ணிடக்கூடாதுன்னு தான். பொண்ணுங்க ஒன்னும் ஆண்களுக்கு குறைஞ்சவங்க இல்ல. உங்களை மாதிரியே அவங்களும் உணர்வுகள் நிறைஞ்சிருக்க உயிர் தான். அவங்களோட உணர்வுகளோட விளையாடுறது ரொம்ப பெரிய தப்பு. அந்த தப்பை நீங்க எப்போதும் செய்யவே கூடாது.” என்றவரின் வார்த்தைகள் இப்போதும் நிரஞ்சனின் செவிகளில் எதிரொலித்தன.

ஆனால், இதையே தனசேகரன் தன் மகனிற்கு சொல்லி தரவில்லை போலும்!

*****

ஒரு பெருமூச்சை வெளியிட்ட நிரஞ்சனை கண்ட சாரதி, “அவனை தூக்கிடலாமா மச்சான்?” என்று வினவ, “அவனுக்கு பெரிய இடத்துல எல்லாம் கனெக்ஷன் இருக்குது சாரதி. அவ்ளோ ஈஸியா அவனை எடை போட்டுடக்கூடாது.  அவனோட பேக்ரவுண்ட்டை தரோவா செக் பண்ண சொல்லு.” என்றான் நிரஞ்சன்.

நிரஞ்சன் மனதிற்குள், ‘இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்ப!’ என்று கோபத்துடன் நினைத்துக்கொண்டான்.

“அந்த ராஜேஷை எங்க அடைச்சு வச்சுருக்கீங்க?” என்று அஷ்வின் கேட்கவும், ‘ஏன்டா?’ என்பதைப் போல பார்த்தான் சாரதி.

“என் பங்குக்கு நானும் வெளுக்கணும்ல.” என்றவனைக் கண்ட சாரதி, சூழலை இலகுவாக்கும் பொருட்டு, “அவன் என்ன துணியாடா வெளுக்க? சரி சரி, ரொம்ப ஆசைப்படுற, துரை அந்த ரூமுக்குள்ள தான் இருக்காரு. கொஞ்சம் பார்த்து பண்ணு டா ராசா, செத்துடப்போறான்.” என்று அஷ்வினை ராஜேஷ் இருக்கும் அறைக்கு அனுப்பி வைத்தான்.

அவன் சென்றதும் நிரஞ்சனிடம், “நீ வந்ததுல இருந்தே சரியில்ல. என்னாச்சு மச்சான்?” என்று வினவ, “ஒன்னும் இல்லடா, சரி வா நாம மத்தவங்களை பார்க்கலாம்.” என்று அவனை அழைத்து சென்றான்.

அங்கு அவர்கள் பசி மயக்கத்தில் வாடிப்போயிருக்க, “என்ன இங்க வச்ச பணம் அப்படியே இருக்கு?” என்ற கிண்டலுடன் சாரதி உள்ளே நுழைய, அவனை தொடர்ந்து நிரஞ்சனும் வந்தான்.

நிரஞ்சனை இதற்கு முன்னர் கண்டிருக்காததால் அந்த நால்வரும் பயந்து தான் போயினர். ஆம், சில நாட்களாக பூட்டிய அறையில் அடைந்து கிடந்ததால் ஏற்பட்ட மாற்றங்களில் பயமும் ஒன்று.

மாற்றங்களின் எண்ணிக்கை ஒவ்வொருவரிடமும் வித்தியாசப்பட்டுக் கொண்டு தான் இருந்தன.

சபாபதி, கன்னிகா மற்றும் பிரபாவதிக்கு தங்களின் பிள்ளைகளை காணாத ஏக்கத்துடன் சேர்த்து அவர்களின் வாழ்வை பணயமாக்கிய குற்றவுணர்வும் அவர்களை வதைத்தது.

அமிர்தவிற்கோ தன் மகனை காணாத ஏக்கமும், கண்முன்னே இத்தனை பணமிருந்தும் அதை உபயோகிக்க முடியாத கையறுநிலையும் வருத்தியது. சிலர் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் தங்களின் குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள்!

“என்ன பதிலே காணோம்? பணத்துக்காக தான, சொந்த குழந்தைகளை கூட பலிகொடுக்குறதுக்கு முன்வந்தீங்க? இப்போ அந்த பணம் உங்களுக்கு முன்னாடி குவிஞ்சு கிடக்கு! ஆனா, அதை சீண்டக்கூட இல்ல. உங்களை பார்த்தா பசி மயக்கத்துல இருக்க மாதிரி இருக்கு. ஓஹ், பசிக்கு பணத்தை அப்படியே சாப்பிட முடியாதுல?” என்று நக்கலாக வினவினான் நிரஞ்சன்.

அதில் தலை குனிந்த மற்றவர்களை கண்டு, “நாம பிறக்குறப்போ எதையும் கொண்டு வரதும் இல்ல, இறக்குப்போ எதையும் கொண்டு போறதும் இல்ல. அப்போ இடையில, மனுஷனா உருவாக்குன பணம், மதம், ஜாதின்னு ஏன் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க? இந்த ஜாதிகாரனா இருந்தா இறந்ததுக்கு அப்பறம் சொர்க்கம்னோ, பணக்காரன்னா இருந்தா சொர்க்கம்னோ எங்கயாவது நிச்சயிக்கப்பட்டிருக்கா? இவ்ளோ ஜாதி பார்க்குறவங்க, ஏன் உயிரைக் காப்பாத்த இரத்தம் தேடுறப்போ மட்டும் ஜாதி பார்க்குறதில்ல? இன்னும் ஜாதி, மதம்னு நீங்க சுத்திட்டு இருக்குறதுனால தான் இந்த மாதிரி சமூகவிரோத கும்பல் உங்களை வச்சு காசு சம்பாதிக்க ஏகப்பட்ட வழிகளை உருவாக்கி வச்சுருக்காங்க.” என்று அங்கு கூட்டி வரப்பட்ட போலிச்சாமியாரை அடித்து மிதித்தான்.

“என்கிட்ட இருந்து இவனையே காப்பாத்திக்க முடியாதவன், உங்க பணப்பிரச்சனையை தீர்த்து உங்களை பணக்காரன் ஆக்கப்போறானா? படிச்ச நீங்களே இந்த மாதிரி ஆளுங்களை நம்பும்போது, படிக்காத பாமர மக்களுக்கு எந்த மாதிரி விழிப்புணர்வு கொடுக்குறது?” என்று சலிப்புடன் வினவினான்.

நிரஞ்சன் கூறிய அனைத்தும் அவர்களின் பொட்டில் அறைந்ததை போல பல விஷயங்களை உணர்த்தியது.

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய, சபாபதி தான் பேச ஆரம்பித்தார்.

“எங்களை மன்னிச்சுடுங்க தம்பி. நீங்க சொன்னதை எல்லாம் இந்த கொஞ்ச நாள் தனிமை எங்களுக்கு நல்லாவே உணர்த்திடுச்சு. பணம் முக்கியம் தான். ஆனா, இந்த உலகத்துல வாழ அதை விட அன்பு முக்கியம்னு உணர்ந்துட்டோம். பணத்துக்காக எங்க பிள்ளைகளை சாவோட விளிம்புல விட்ட எங்களை நினைச்சா, இப்போ எங்களுக்கே அருவருப்பா இருக்கு.” என்று வருந்தியவர், “எங்க பிள்ளைங்க நல்லா இருக்கங்களான்னு மட்டும் சொல்லுங்க தம்பி.” என்று கெஞ்சினார் அவர்.

“ஜாதி ஜாதின்னு பெருசா பேசிட்டு திரிஞ்ச அந்த மனுஷனை ஜெயில்ல தள்ளியது அதே ஜாதிகாரங்க தான்னு தெரிஞ்சப்போவே என் பொண்ணுக்கு எவ்ளோ பெரிய தப்பு செஞ்சுருக்கோம்னு உணர்ந்துட்டோம் தம்பி. அந்த மனுஷனும் ஜெயில்ல சந்தோஷமா இல்ல, நாங்களும் வெளிய சந்தோஷமா இல்ல. ஆனா, என் பொண்ணை இவங்க கொலை செய்யுற அளவுக்கு போவாங்கன்னு எனக்கு சத்தியமா தெரியாது தம்பி.’ என்று சபாபதி – கன்னிகா, அமிர்தாவை பார்த்து வெறுப்புடன் கூறிய பிரபாவதி, “என் பொண்ணுக்கு இதுவரைக்கும் நல்ல அம்மாவா இல்ல, இனியும் இருப்பேனான்னு தெரியல! நீங்க அவளுக்கு யாருன்னு கூட தெரியல. ஆனா, ஒரு அம்மாவா கேட்குறேன், என் பொண்ணை நல்லா பார்த்துக்கோங்க தம்பி. இதுவரைக்கும் கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்ச பொண்ணு, இனியாச்சும் சந்தோஷமா இருக்கணும். திரும்ப இந்த கொலைகார கும்பலோட அவ சேர வேண்டாம். எங்க இருந்தாலும் அவ நல்லா இருக்கட்டும்.” என்று கண்ணீருடன் கூறினார் அந்த தாய்.

“உங்க பிள்ளைங்க நல்லா தான் இருக்காங்க.” என்று பொதுவாக கூறிய நிரஞ்சன், “இனி உங்களை இங்க அடைச்சு வைக்குறதுல எந்த யூஸும் இல்ல. அவங்கவங்க தவறை அவங்கவங்க உணர்ந்துட்டீங்கன்னு நினைக்குறேன்.” என்று அமிர்தாவை பார்த்துக்கொண்டே கூறியவன், “வெளிய உங்களை போலீஸ் தேடிட்டு இருக்காங்க, அவங்ககிட்ட சரணடையிறதும், தப்பிச்சு போறதும் உங்க விருப்பம். ஆனா, இனி உங்க பிள்ளைங்கோட நீங்க சேரணும்னா, அதை உங்க பிள்ளைங்க தான் முடிவெடுக்கணும்.” என்று கூறியவனை ஆமோதித்தவாறு மற்றவர்கள் அமைதியாக நின்றனர்.

நிரஞ்சன் சாரதியிடம் கண்களை காட்ட, அவனின் ஆட்கள் அந்த நால்வரையும் அழைத்துக்கொண்டு சென்றனர்.

அப்படி செல்லும்போது அமிர்தா தான், “ஹே, என் பையன் எங்க? அவனை எப்போ விடுவீங்க?” என்று கத்திக்கொண்டே செல்ல, அதைக் கண்டுகொள்ள தான் யாருமில்லை.

*****

வீட்டிற்கு வந்த அஷ்வினி சற்று தெளிவுடன் காணப்பட்டாள். அது அவள் சம்பூர்ணா மற்றும் நவீனிடம் வம்பிழுத்து விளையாடியதிலேயே தெரிந்தது.

அதை கண்ட சரவணனும் சித்ராவும் ஒருவரையொருவர் பார்த்து நிம்மதியாக புன்னகைத்துக்கொண்டனர். எப்போதும் கலட்டாவுடன் வளைய வரும் மகள் காலையில் சோர்வாக இருந்ததிலேயே அவளின் குழப்பத்தை கண்டுகொண்டனர் பெற்றவர்கள்.

அதை அவளே தீர்க்கவில்லை என்றால் விசாரிக்கலாம் என்று அஷ்வினிக்கான தனிப்பட்ட இடத்தை கொடுத்து விலகியே இருந்தனர். அவர்களின் தலையீடு இல்லாமலேயே மகள் தெளிந்துவிட்டாள் என்ற நிம்மதி தான் இப்போது இருவருக்கும்.

“என்னடி நீ மட்டும் வந்துருக்க? அஷ்வின் எங்க?” என்று சித்ரா வினவ, “அவன் பிரெண்டை பார்க்க போறேன்னு போயிட்டான் ம்மா. ஆனாலும், நீங்க அவனுக்கு ஓவரா தான் செல்லம் கொடுக்குறீங்க. பாருங்க நைட்ல பப்பு, கிளப்புன்னு ஆட்டம் போட்டுட்டு இருக்கான்.” என்று வேண்டுமென்றே கூற, அவளின் காதை பிடித்து திருகிய சித்ராவோ, “வாயாடி, என் பையனை பத்தி எனக்கு தெரியும்டி.” என்றார்.

அவர்கள் பேசியது புரியவில்லை என்றாலும் அவர்களின் செயலில் கைதட்டி சிரித்தாள் சம்பூர்ணா.

“அடியேய் குட்டி வில்லி! உனக்கு ரொம்ப எஞ்சாய்மென்டோ?” என்று அவளிடம் வம்பிழுத்தாள் அஷ்வினி.

அப்போது அறையிலிருந்து வெளிவந்த மாயாவிடம், “ஹே மாயா, எப்படி போச்சு இன்டர்வியூ?” என்று வினவ, மாயாவின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

*****

காலையில் கூறியதை போல, மாயாவை அலுவலகத்திற்கு அழைத்து செல்ல அஷ்வினே வந்திருந்தான்.

அவனுடன் இருசக்கர வாகனத்தில் செல்ல முதலில் தயக்கமாக தான் இருந்தது மாயாவிற்கு.

‘அவனோட லவ் தெரியலைன்னா இப்படி தான் தயங்கியிருப்பியா? உனக்கு தெரிஞ்சது அவனுக்கு தெரிய வேண்டாம், அவன் ஃபீல் பண்ணுவான்னு நினைச்ச நீயே, உன் ஆக்ட்டிவிட்டீஸ் மூலமா தெரிய வச்சுடுவ போல!’ என்று அவளின் மனசாட்சி அவளிற்கு எதிராக குரல்கொடுக்க, வேறு வழியில்லாமல் அவனுடன் சென்றாள் மாயா.

முதலிலிருந்த தயக்கம், அந்த பயணத்தின் போது அவன் கேட்ட அக்கறையான கேள்விகளால் முற்றிலும் அகன்று தான் போனது. மேலும், அவனிடம் எவ்வித ஒதுக்கமும் காட்டிவிடாமல், நட்புடன் இருக்கவும் தூண்டியது.

நேர்காணலிற்கு செல்லும் முன்னர் எல்லாருக்கும் ஏற்படும் பதற்றமே மாயாவிடமும் காணப்பட்டது.

அதை கண்ட அஷ்வின் தான், “ச்சில் மாயா. எதுக்கு இவ்ளோ டென்ஷன்? பதட்டமா இருந்தா ஈஸியா இருக்குறதையும் கோட்டை விட்டுட்டு வந்துடுவ. சோ ரிலாக்ஸா போ, நல்லா பண்ணு. உள்ள போற வரைக்கும் தான் டென்ஷனா இருக்கும். அதுக்கப்பறம் நீயே ஹேண்டில் பண்ணிடுவ.” என்று தொடர்ந்து பேசிக்கொண்டே போக, அது இன்னமும் மாயாவின் பதற்றத்தை அதிகரிக்க தான் செய்தது.

“அச்சோ, கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? நானே டென்ஷன்ல இருக்கேன்! நீங்க என்னை கூல் பண்றேங்கிற பேர்ல இன்னமும் டென்ஷனாக்கி தான் விடுறீங்க.” என்று கூற, முதலில் அவளின் அதட்டலான குரலில் அதிர்ந்தவன், பின்னர் சிரித்துக்கொண்டே, “பார்றா, மாயாக்கு கூட கோபம் வருது!” என்றான்.

அப்போது தான் நடந்ததை உணர்ந்த மாயா தன்னையே நொந்து கொண்டு, “ஐயோ, சாரி சாரி அஷ்வின். நான் தெரியாம அப்படி…” என்று திணற, “ரிலாக்ஸ் மாயா. நீ அப்படி இயல்பா இருந்தது தான் நல்லா இருக்கு. நான் கோபத்துல எல்லாம் சொல்லல. ஜஸ்ட் கிண்டலா தான் சொன்னேன். ஏன் நானெல்லாம் உன்னை கிண்டல் செய்யக்கூடாதா? நான் உன் பிரெண்டு இல்லையா?” என்று அஷ்வின் வினவ, மாயா ஏதோ கூற வருவதற்குள், அவளை நேர்காணலுக்கு அழைத்திருந்தனர்.

“ஆல் தி பெஸ்ட் மாயா.” என்ற வாழ்த்துடன் அவளை அனுப்பி வைத்தவனிற்கு இப்போது பதற்றம் தொற்றிக்கொண்டது.

ஒன்றரை மணி நேர நேர்காணலை முடித்துக்கொண்டு வெளியே வந்த மாயாவை நோக்கி ஆர்வத்துடன் சென்றவன், “எப்படி பண்ண மாயா?” என்று வினவ, அவளோ எதுவும் பேசாமல் கையை நீட்டினாள்.

“ஹே, நான் தான கங்கிராட்ஸ் சொல்ல கை நீட்டனும்!” என்று குழப்பமாக கூறினாலும், அவளின் கையை பற்ற, மாயாவோ சிரிப்புடன், “பிரெண்ட்ஸ்?” என்றாள்.

அதற்கு மலர்ந்து சிரித்தவன், “மேடம் ஒரு நிமிஷம் என்னை குழம்ப விட்டுட்டீங்க. சரி சொல்லு என்னாச்சு?” என்று அஷ்வின் வினவ, “நல்லா தான் பண்ணியிருக்கேன். ரிசல்ட் அப்பறம் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.” என்றாள் மாயா.

“ஓஹ் ஓகே மாயா. மோஸ்ட்லி பாசிட்டிவா தான் இருக்கும். இப்போ நான் உன்னை வீட்டுல டிராப் பண்ணிடவா?” என்று அஷ்வின் வினவ, “நோ அஷ்வின், நான் தனியா இந்த உலகத்தை ஃபேஸ் பண்ணனும்னு நினைக்குறேன். சோ, பஸ் ரூட் மட்டும் சொல்லு. நானே போயிப்பேன்.” என்று மாயா கூற, அவளின் மாற்றத்தில் அஷ்வின் மகிழத்தான் செய்தான்.

இருப்பினும், “ஃபர்ஸ்ட் டேவே எப்படி தனியா? அம்மா என்னைத்தான் திட்டுவாங்க.” என்று அவன் பாவமாக கூற, அவனை நக்கலாக பார்த்தவள், “அப்படியே ரொம்பத்தான் பயம் அம்மா மேல!” என்றாள்.

பல அறிவுரைகளுக்கு பின்னரே அவளை செல்ல அனுமதித்தான் அஷ்வின். மாயாவும் தன் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதை செய்தியாக அஷ்வினிடம் பகிரும்போது அத்தனை மகிழ்ச்சி அவளிற்கு… அவளின் முதல் வெற்றியாகிற்றே!

வீட்டிற்கு வந்த பின்னரும் கூட, தானா அஷ்வினிடம் அப்படியெல்லாம் பேசியது என்று மாயாவிற்கே ஆச்சரியமாக தான் இருந்தது. ஏனோ, அவனுடன் பேச பழக எளிதாக இருந்தது மாயாவிற்கு.

*****

தன் சிந்தனையில் மூழ்கியிருந்தவளின் முன் சொடக்கிட்டு அவளின் கவனத்தை தன்புறம் கொண்டு வந்த அஷ்வினி, “என்ன மேடம், அதுக்குள்ள ட்ரீம்ஸா? என்னாச்சு இன்டர்வியூ? ஓகேயா?” என்று வினவ, “ஓகேன்னு தான் நினைக்குறேன். பட் அஃபிஸியல் ரிசல்ட் இன்னும் சொல்லல.” என்றாள் மாயா.

“ஹே செம, அப்போ எனக்கு ஒரு ட்ரீட் கன்ஃபார்ம் ஆகிடுச்சு.” என்று அஷ்வினி சந்தோஷிக்க, அங்கு வந்த சித்ராவோ, “நீ இப்படி யாருக்காவது ட்ரீட் கொடுத்துருக்கியாடி?” என்று வழக்கம்போல அவளின் காலை வாரினார்.

அதை கேட்டு அனைவரும் சிரிக்க, “ம்மா, நீங்க ஒருத்தர் போதும் என் இமேஜை டேமேஜ் பண்றதுக்கு. இன்னும் கொஞ்ச நாள் தான், நான் பண்ற இந்த ப்ராஜெக்ட் முடியட்டும். அப்போ தான் நான் யாரு, என் டேலன்ட் என்னன்னு உங்களுக்கு புரியும்!” என்று கனவில் மிதக்க துவங்கினாள்.

கனவிற்கு காரணம் ப்ராஜெக்ட்டா இல்லை ப்ராஜெக்ட் மேனேஜரா என்பது அவளிற்கே வெளிச்சம்!

*****

“ஓகே சாரதி, நீ அந்த சர்வஜித் பத்தின ஏ டூ ஜெட் விஷயங்களை கலெக்ட் பண்ணி சொல்லு. அவனை எப்படி லாக் பண்றதுன்னு பார்க்கலாம்.” என்றபடி நிரஞ்சன் கிளம்ப, “பாஸ் நானும் வரேன்.” என்று கையிலிருந்த இரத்தத்தை கைக்குட்டையில் துடைத்தபடி வந்தான் அஷ்வின்.

“என்னடா உயிரு இருக்கா?” என்று சாரதி பதற்றமாக வினவ, “அதெல்லாம் இருக்கு.” என்றவாறே நிரஞ்சனுடன் வெளியே நடந்தான் அஷ்வின்.

தன் வாகனத்தை, அஷ்வினின் இருசக்கர வாகனத்திற்கு அருகே நிறுத்திய நிரஞ்சன், “உன் லவ் மேட்டரை என்கிட்ட சொல்லியிருக்கலாம் அஷ்வின்.” என்று இறுகிய குரலில் கூறியவன், எதிரிலிருந்தவன் அதிர்ச்சியுடன் நின்றிருப்பதை உணர்ந்தும் சட்டென்று கிளம்பி சென்று விட்டான்.

‘இவருக்கு எப்படி தெரியும்?’ என்று அங்கேயே திகைத்து நின்றான் அஷ்வின்.

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 யாராச்சும் என்னை தேடுனீங்களா…🤔🤔🤔 இதோ வெற்றிகரமா அடுத்த எபி போட்டுட்டேன்… அடுத்து என்ன வழக்கமா சொல்றது தான்… கதையை படிச்சுட்டு உங்க கருத்துக்களை ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ சொல்லுங்க…😁😁😁

இப்படிக்கு,

உங்க 🌈🔥

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  6 Comments

  1. Janu Croos

   அடேய் கூட்டுக்களவாணிகளா..எல்லாரும் சேர்ந்து தான் வேலை பாக்குறீங்களா….அஷ்வினுக்கும் நிரம்சனுக்கும் எப்படி பழக்கமாச்சு…
   அப்போ இந்த பிரச்சினைக்கு எல்லாம் காரணம் அந்த சர்வஜித் தானா….

   ஆம்பிளைனா ரெண்டு பொண்டாட்டி வச்சிருக்கலாமா….இதயே ஒரு பொண்ணு பண்ணினா…சமூதாய சீர்கேடு…கலாச்சார சீர்குலைவுனு எவ்வளவு வசனம் பேசியினுப்பாங்க….கலை அம்மா பண்ணதுதான் கரெக்ட்…என்ன அந்தாள செருப்பால ரெண்டு சாத்து சாத்தி இருக்கலாம்….

   1. vaanavil rocket
    Author

    Sry for the late reply 🙏🙏🙏
    Haha aama ellarum ore team dhan 😂😂😂
    Aama indha society evlovo madi irundhalum idhu mathri aan pen nu verupadu inum irundhutu dhan iruku

  2. Archana

   இந்த அஷ்வின் எங்க இருந்து வந்தான்😳😳😳 அடேய் எல்லாம் ஒரே கேங்கா 😑😑😑😑😑

  3. Interesting ud sis nice rmba miss pannen stry innum varalaye nu konjam regular ud kudunga sis pls sagar appa dha prb ah appo idhu kalaivani ku therinja avlo dhan

   1. vaanavil rocket
    Author

    Sry for the late reply sis 🙏🙏🙏 Kadhaiya full ah mudichutu vanga unga comment ku waiting 😁😁😁