462 views

சுடர் 20

இரவு நேர குளிர் அவர்களின் மேனியை தாக்கினாலும், பழைய நினைவுகளில் மூழ்கி விட்டதால், அந்த குளிர் கூட பெரிதாக உரைக்கவில்லை அவர்களுக்கு.

முதல் நாளே பயந்து பயந்து வந்தவளை பார்த்ததும், சட்டுன்னு என்ன பண்றதுன்னு புரியாம ஸ்டான்னாகி நின்னுட்டேன். அதுக்கப்பறம் அதுலயிருந்து மீண்டு சுயநினைவை அடைஞ்சு வந்து பார்த்தா, மாயா உங்க கூட பேசிட்டு இருந்ததை பார்த்தேன். உங்க கூட கிளாஸுக்கு போனதையும் பார்த்தேன். என்ன தான் அவ மேல ஈர்ப்பு ஏற்பட்டாலும், உங்களை மாதிரி அவளோட சட்டுன்னு என்னால பேச முடியல. அண்ட் அவளோட பயமும் ஒரு காரணம்.” என்று கூறிய அஷ்வின் நிறுத்தி அஷ்வினியின் முகத்தை கண்டான்.

அவளும் அதை ஆமோதிக்கும் விதத்தில் இருந்தாள். மாயாவின் பயம் பற்றி அவளும் அறிவாளே.

முதல் நாள் மட்டுமல்ல, அவள் அந்த கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருந்தாலும், மற்றவர்களிடம் பேச அத்தனை பயம். பெண்கள் கேட்ட கேள்விக்காவது பதில் சொல்பவள், ஆண்கள் வந்தாலே, பயத்தில் அவ்விடத்திலிருந்து விலகிச்சென்று விடுவாள்.

அவளின் செயல்களை கண்டு அஷ்வினி அவளிடம் விசாரித்தபோது தான் அவளின் குடும்பத்தினரின் ஜாதி வெறி பற்றியும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள் என்பதையும் விளக்கினாள் மாயா.

அப்போது கூட அஷ்வினி, ‘இப்படி எல்லாமா இருப்பாங்க. பயத்துல கூட கொஞ்சம் டெரரா சொல்றாளோ?’ என்று நினைத்தாள். ஆனால், கண்முன் நிகழ்ந்த கொடூரத்தை பார்த்தபோது தான் இத்தனை கொடிய ஜந்துக்கள் வாழும் சமூகத்தில் தான் தானும் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டாள்.

அதற்காக மாயாவை அப்படியே அவர்கள் விடவில்லை. பேசி பேசியே அவளை அவள் கூட்டிலிருந்து வெளி கொண்டு வந்த பெரும் பங்கு சாகரையே சேரும்.

தன் சிந்தனைகளிலிருந்து வெளிவந்தவள், “முதல் நாள் பேச முடியலைனாலும், அதுக்கப்பறமாவது அவளோட பேச ட்ரை பண்ணியிருக்கலாம்ல அஷு?” என்றாள் அஷ்வினி.

அவளிடமிருந்து எப்போதாவது தான் வெளிப்படும் அஷுஎன்ற பெயர். சரியாக சொல்ல வேண்டுமானால், அஷ்வினிற்கு ஆறுதலோ அறிவுரையோ கூறும் சொற்ப நேரங்களிலேயே அவனை அஷு என்று அழைப்பாள் அஷ்வினி.

விரக்தியாய் சிரித்தவன், “அப்போ மிஸ் பண்ணிட்டேன் வினி. அதுக்காக என்னையே நொந்து கொள்ளாத நாளில்ல! அதுக்கப்பறம் தான் என்னோட ஃபீலிங்க்ஸை எனக்குள்ளயே வச்சுட்டு இருக்கக்கூடாதுன்னு நல்ல பாடம் கத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா என் தனிமையில இருந்து வெளிவந்து உங்களோட பேசவும் ஆரம்பிச்சேன்.” என்றான்.

அவன் கூறுவதை உன்னிப்பாக கேட்டவளிற்கு அப்போது தான் அது உரைத்தது. சாகர் மாயா காதலிற்கு பிறகு நடந்த மாற்றங்களில், முக்கியமானது அஷ்வின் அவளுடன் நேரம் செலவளித்தது. எப்போதும் தனிமையை விரும்புபவன், தன்னுடன் அமர்ந்து பேசியதை ஆச்சரியமாக அனைவரிடமும் கூறி மகிழ்ந்தாள். அதற்கு பின்னர் இப்படியொரு வருத்தம் அவன் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் என்பதை அவள் உணரவில்லை.

உடன்பிறந்தவனின் அன்றைய வலியை இன்று உணர்ந்ததை போல, “சாரி டா அஷு, நான் கூட உன்னைப் பத்தி புரிஞ்சுக்கலைல! நீ எப்படி டா தனியா இதை கடந்து வந்த? நீ மாயாவை லவ் பண்ணதை சொல்லியிருந்தா…” என்று ஆற்றாமையுடன் பேசிக்கொண்டிருந்தவள் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் நிறுத்தினாள்.

அப்படி சொல்லியிருந்தா தான் எல்லாருக்குமே கஷ்டம் வினி. என்னோட கஷ்டம் என்னோடயே போகட்டும்னு தான் விட்டுட்டேன்.” என்றவனை அணைத்துக்கொண்டு, “ஐ ஷுட் ஹேவ் பின் தேர் ஃபார் யூடா அண்ணா!” என்று மீண்டும் அதையே சொல்லி அழுபவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் கலங்கிப்போனான் அஷ்வின்.

விடு வினி, நீ இவ்ளோ அழுக எல்லாம் தேவையில்ல. எனக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும். மாயாவை காதலிச்சேன்னு உனக்கு டவுட் வந்திருந்தாலே நீ எனக்காகவும் யோசிச்சுருப்பன்னு எனக்கு நல்லாவே தெரியும். சோ, இந்த விஷயத்துல நீ உன்னையே பிளேம் பண்ணிக்காத.” என்றான்.

மேலும், “உஃப் முடிஞ்சதை பத்தி இப்போ எதுக்கு பேசிட்டு?” என்று அஷ்வின் கூற, அவனிடமிருந்து பிரிந்தவள், “இல்ல அஷு, அட்லீஸ்ட் இப்போயாச்சும் உன் மனசுல இருக்குறதை கொட்டிடு. அந்த வலியை எவ்ளோ நாள் சுமந்துட்டு இருக்க போற? அப்போ தான் உன்கூட நானில்ல. ஆனா, இப்போ அப்படியில்ல.” என்று கண்களை துடைத்துக்கொண்டு கூறியவளை ஆதுரத்துடன் பார்த்தான்.

அஷ்வினிற்கும் தன் மனபாரங்களை யாரிடமாவது இறக்கி வைத்தால் என்னவென்று தோன்றியது போலும்! தன் வாழ்வில் மறக்க நினைக்கும் நினைவுகளை கூற ஆரம்பித்தான்.

மாயா உங்கிட்ட அவ குடும்பத்தை பத்தி பேசுனப்போ, நானும் அதே ரூம்ல தான் இருந்தேன். நீங்க பேசுற ஆர்வத்துல என்னை கவனிக்கல. முதல்ல வெளிய வந்துடலாம்னு தான் நினைச்சேன். ஆனா, என்னைப் பார்த்து மாயா இன்னும் பயப்படுவான்னு தான் அங்கேயே நின்னுட்டேன்.”

அங்க இருந்து பார்த்தப்போ உங்க ரெண்டு பேரு முகமும் நல்லாவே தெரிஞ்சுது. அவ குடும்பத்தை பேசும்போது நீ அவ சொன்னதை கேட்ட, ஆனா நான் அவ இடத்துல இருந்து ஃபீல் பண்ணேன் வினி. அவங்க அப்பாவைப் பத்தி பேசும்போதெல்லாம் ரொம்பவே பயந்திருந்தா.”

அப்போ நீ அவகிட்ட லவ்பத்தி சும்மா கேட்டதும், அவ முகம் வெளிறி போனதை நீ பார்த்தியான்னு எனக்கு தெரியல. ஆனா, நான் பார்த்தேன். அவ முகத்துல அன்னைக்கு தெரிஞ்ச பயம் தான், என் காதலை சொல்ல விடாம தடுத்துச்சு வினி. நான் என் காதலை அவகிட்ட சொல்றப்போ அவகிட்ட இருந்து மறுப்பு கூட வரலாம். ஆனா, பயத்தை மட்டும் அவ முகம் காட்டிடவே கூடாதுங்கிறதுல முடிவா இருந்தேன். நீயும் அவளோட பயத்தை போக்குற மாதிரி பேசவும், உன்கூட இருந்தா அவளோட பயம் கொஞ்சம் மட்டுப்படும்னு நினைச்சு, என்னோட காதலை சொல்ல தாமதிச்சேன். ஆனா…” என்றவனின் குரல் உடைய, குரலை போலவே கசங்கிய அவன் முகத்திலேயே பார்வையை பதித்திருந்தாள் அஷ்வினி.

அஷ்வின் எதை சொல்வதற்கு தயங்குகிறான் என்பதை உணர்ந்த அஷ்வினி அவன் கைகளை ஆறுதலாக அழுத்தினாள்.

இடையிடையே, அவளின் மனமும் பழைய நினைவுகளிற்கு பயணித்து வந்தது.

*****

மாயாவின் பயத்தை பற்றி அவளிடம் பேசியதும், அஷ்வினி முதலில் சந்தித்தது சாகரை தான்.

இருவரும் பேசிக்கொண்டதை அவனிடம் கூறியவள், “ஹே சகு, இந்த மாயா அவங்க குடும்பத்துக்கு இவ்ளோ பயப்படுவான்னு எதிர்பார்க்கல. பாவம் அவ! அவங்க அவ்ளோ பயமுறுத்தி வச்சுருக்காங்க. இனிமேலாச்சும், அவ நிம்மதியா இருக்கணும்.” என்று அஷ்வினி கூற, “அப்போ அந்த பயத்துல இருந்து அவளை எப்படி மீட்குறதுன்னு யோசி ஹேர் ஆயிலு.” என்றான் சாகர்.

அதான் எப்படின்னு எனக்கு தெரியலடா சகு.” என்று யோசித்தவள், “அவளுக்கு ஒரு மாரல் சப்போர்ட் இருக்குன்னு தெரிஞ்சா, மேபி அந்த பயத்துல இருந்து மீண்டு வரலாம்ல.” என்று வினவ, “பரவாலேயே ஹேர் ஆயிலுக்கு மண்டைக்குள்ள மூளையும் இருக்குன்னு ப்ரூவ் பண்ணிட்டியே!” என்று கிண்டலில் இறங்கினான் சாகர்.

என்னை கலாய்க்கணும்னா மட்டும் ஃபுல் எனர்ஜியோட வந்துடுவ.” என்று சிணுங்கியவள், பின்னர் ஏதோ கண்டுபிடித்த உற்சாகத்துடன், “ஹே, கண்டுபிடிச்சுட்டேன்! அவளுக்கு மாரல் சப்போர்ட்டா இருக்கப்போறதே நீதான்.” என்றாள்.

என்ன லூசி உளறுற? நான் எப்போ லவ் பண்றேன்னு சொன்னேன்?” என்று சாகர் தயங்க, “ஏன் உனக்கு தான் அவளை பிடிக்குமே. அப்போ அது லவ் தான? அப்போ உன்னை விட அவளுக்கு யாரு சப்போர்ட்டா இருக்க முடியும்?” என்று அவனிற்கு வாய்ப்பளிக்காமல் அஷ்வினியே தொடர்ந்து பேச, “வினி, இப்படி சட்டுன்னு முடிவெடுக்க இது சாதாரண விஷயம் இல்ல. நம்ம இன்னும் படிச்சுட்டு தான் இருக்கோம். அது மட்டுமில்லாம, மாரல் சப்போர்ட்டா இருக்க லவர்ரா இருக்கணும்னு அவசியம் இல்ல.” என்றான் சாகர்.

ப்ச், அது எனக்கும் தெரியும். பட் அந்த சப்போர்ட் லவர் கிட்டேயிருந்து கிடைச்சா அவளால ஈஸியா அந்த பயத்துல இருந்து மீண்டு வர முடியும். இப்போ எதுக்கு படிப்பு பத்தியெல்லாம் பேசுற? அவளை லவ் பண்ணா படிக்கிறதை நிறுத்தப்போறியா? இல்ல, லவ் சொன்னதும் அவளை படிக்க விடாம, பார்க் பீச்னு சுத்தப் போறியா? அப்படி மட்டும் பண்ண, நானே பிரேக்கப் பண்ணி விட்டுடுவேன் பார்த்துக்கோ.” என்று அவள் மிரட்ட, அதில் சிரித்த சாகர், “அடிப்பாவி, இன்னும் லவ்வே சொல்லல, அதுக்குள்ள பிரேக்கப்பா?” என்றான் பாவமாக.

அப்போ லவ்வை சொல்ல ஒத்துக்கிட்ட தான?” என்று மகிழ்ச்சியாக அஷ்வினி கத்தினாள்.

அந்த உரையாடல் இப்போது அஷ்வினிக்கு குற்றவுணர்வையே தந்தது.

*****

மாயா உங்க கூட பழகுன கொஞ்ச நாள்லயே அவகிட்ட மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சது. எப்பவும் என்னை பார்த்ததும் தலையை குனிஞ்சுட்டு போறவ, லேசா சிரிச்சுட்டு போறதே சந்தோஷமா இருக்கும். அதுக்கு காரணம் நீயும் சாகரும் தான்னு தெரியும். ஆனா, அப்போ சாகருக்கு மாயா மேல காதல் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. அவன் கண்ணுல காதலை நான் பார்க்கல. மேபி, நான் என்னோட கண்ணோட்டத்துலேயே பார்த்ததால, எனக்கு சாதகமா மட்டும் பார்த்துட்டேனோ என்னவோ!”

சரியா அப்போன்னு பார்த்து எனக்கு டைஃபாயிடு வந்துட, நான் காலேஜுக்கு வராத அந்த ஒரு வாரத்துல அவ்ளோ பெரிய மாற்றம் ஏற்பட்டுருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.” என்றவனின் குரல் பிசிறியது.

*****

டைஃபாயிடினால் அவதிப்பட்டு உடல் மெலிந்து உருக்குலைந்து இருந்தவனை பார்த்துக் கொள்ளுமாறு அன்னை கூறி அனுப்பியிருக்க, அஷ்வினி அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டவளாக, அவனை தன்னுடனே அழைத்துக்கொண்டு உணவகத்திற்கு வந்திருந்தாள்.

அஷ்வினும் வெகு நாட்கள் கழித்து தன்னவளை காணப்போகும் ஆர்வத்துடன் மறுப்பு கூறாமல் அவளுடன் வந்திருந்தான். தன்னவளாக நினைத்திருந்தவள், தன்னவளாக இனி இருக்க மாட்டாள் என்றும் அதை விதி தனக்கு வலிக்க வலிக்க புரிய வைக்கவே இங்கு அழைத்து வந்திருக்கிறது என்றும் தெரிந்திருந்தால், வந்திருக்க மாட்டானோ!

இருவரும் ஒன்றாக வருவதை ஆச்சரியமாக பார்த்த சாகர், அஷ்வினியை பார்த்து சைகையாலே வினவ, அவளோ இல்லாத சுடிதார் காலரை தூக்கி விட்டுக்கொண்டு, “பொறுப்பான உடன்பிறப்பா இவனைப் பார்த்துக்கப் போறேன்.” என்று கூற, சாகரோ அஷ்வினிடம் உதட்டைப் பிதுக்கியபடி, “ஆழ்ந்த அனுதாபங்கள்!” என்று கூற, அஷ்வினும் இதழ் விரித்து சிரித்தான்.

ஹப்பா இந்த அஷுக்கு இப்படியெல்லாம் சிரிக்க தெரியுமா? இனியாச்சும் இவன் மத்தவங்க கூட பேசி, இப்படி மனசு விட்டு சிரிக்கணும்.’ என்று நினைத்துக்கொண்டாள் அஷ்வினி.

சாகரின் வார்த்தைகள் உண்மையாக போவதையோ, அஷ்வினி மனதிற்குள் நினைத்தது பொய்யாகப் போவதையோ அவர்கள் இருவரும் அறியவில்லை.

ஓய் என்ன கொழுப்பா? இரு உன் ஆளுகிட்ட போட்டுக்கொடுக்குறேன்.” என்று அஷ்வினி மிரட்ட, சாகரோ சிரித்தபடி, “அவகிட்ட இதை சொன்னா, ‘ஓ அப்படியான்னு மட்டும் தான் சொல்வா. கண்டிப்பா உன்னை மாதிரி இல்ல. சோ ஸ்வீட்ல.” என்றான்.

இருவரின் பேச்சையும் புருவம் சுருக்கி கேட்ட அஷ்வின், “ஆளா?” என்று இருவரையும் பார்த்து வினவ, “ம்ம்ம் ஆமா, உனக்கு அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் தெரியாதுல, இந்த சகு பையன் லவ் பண்றான். அதுவும் யாருன்னு தெரியுமா? நம்ம மாயாவை.” என்று அஷ்வினி விளக்க, ‘மாயாஎன்ற ஒற்றை சொல்லில், அவன் உலகமே செயலிழந்தது போல திடுக்கிட்டு அமர்ந்திருந்தான் அஷ்வின்.

கதை கூறும் ஆர்வத்தில் அஷ்வினின் நிலையை கண்டுகொள்ளாத அஷ்வினியோ, சாகர் மாயாவிடம் காதலை கூறியதையும், அதை முதலில் அவள் மறுத்ததையும், அதன்பின்னர், தானே பேசி அவர்களை சேர்த்து வைத்ததையும் பெருமையாக அவள் கூற, அதில் ஒரு சொல் கூட அவனின் சிந்தையில் ஏறவில்லை என்பது அவளிற்கு தெரியவில்லை.

அப்போது மாயாவும் அங்கு வந்துவிட, அஷ்வினி, சாகர் மற்றும் மாயாவை கேலி செய்ய, அதற்கு மேல் அஷ்வினால் அங்கு இருக்க முடியவில்லை.

அவன் நிமிர்ந்து பார்க்கும்போது மாயாவும் அவனை பார்த்து சிரிக்க, அவளின் சிரிப்பையும் வலியோடு கண்களில் நிரப்பிக்கொண்டு அங்கிருந்து சென்றான் அஷ்வின்.

*****

தான் காதலியாக நினைத்தவள், தன் காதலி அல்ல என்று உணர்ந்த அந்த நொடிகளை மீண்டும் நினைத்துப்பார்த்தவனின் உள்ளம் அன்று போல இன்றும் வலிக்க, அப்போது அதை சொல்லி சாய்வதற்கு கூட தோள் இல்லாமல் துவண்டவனை இப்போது தாங்கிக்கொள்பவள் போல அணைத்துக்கொண்டாள் அவன் உடன்பிறந்தவள்.

சில நொடிகளில் தன்னை சமன்படுத்திக் கொண்டவன், “குட்டிச்சாத்தான், அவ்ளோ தான் என்னோட லவ் ஃபெயிலியர் ஸ்டோரி!” என்று முயன்று வரவழைத்த கேலிக்குரலில் கூற, அதை ரசிக்க மனமில்லாதவளாக இருட்டை வெறித்துக்கொண்டிருந்தாள்.

அவளின் மனநிலையை புரிந்தவனாக, தோளோடு அவளை அணைத்துக்கொண்டு, “ஹே வினி, நீ எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ற? பாஸ்ட் இஸ் பாஸ்ட். இனி ஃபீல் பண்ணி எதுவும் பண்ண முடியாது.” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

சாகர் மாயா உண்மைலேயே நல்ல ஜோடி. அதுவும் மாயாவை பயத்துல இருந்து மீட்க அவன் எடுத்த ஸ்டெப்ஸ் தான் மாயாவோட மாற்றத்துக்கு காரணம்.” என்றவன் ஒரு பெருமூச்சுடன், “அன்னைக்கு மட்டும் அவன் கொஞ்சம் அவசரப்படாம இருந்திருந்தா, இன்னைக்கு மாயா இந்த நிலைமைல நிக்க வேண்டிய அவசியம் இருந்துருக்காது.” என்று வருத்தமாக கூறினான்.

நண்பனின் இறப்பு அஷ்வினியின் கண்களில் கண்ணீரை வரவழைக்க, அதையும் உடன்பிறந்தவனின் தோளில் சாய்ந்து வடித்தாள்.

இப்போ நான் மாயாக்கு ஹெல்ப் பண்றதுக்கு காரணம் என்னோட காதல் இல்ல. அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருந்த காதல்! அண்ட் சாகர் தான் இப்போ இல்லையே, அப்போ மாயா என்னை லவ் பண்ணலாமேங்கிற எண்ணம் கூட எனக்கு இப்போ இல்ல வினி. அவ வாழ்க்கைல ரொம்பவே கஷ்டத்தை அனுபவிச்சுட்டா, நினைவுகள்ல இன்னும் வாழ்ந்துட்டு இருக்க சாகரா இல்ல நிஜத்துல இருக்க நானாங்கிற முடிவெடுக்குற மாதிரியான சூழ்நிலையில கண்டிப்பா அவளை நிறுத்த மாட்டேன்.” என்றவனின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் நிலத்தில் படும் முன்னர் அஷ்வினியின் கையிலும் பட்டுத் தெறித்தது.

என்னதான் காதல் இல்லையென்று சொன்னாலும், அவன் மனதின் அடியாழத்தில் மண்டிக்கிடந்த காதலை என்ன செய்ய முடியும் அவனால். இப்போதைக்கு, அதை மறந்து மறைத்து வைத்து மாயாவிற்கு உதவியாக இருக்க முடிவு செய்தான்.

மாயாவை தைரியமான பொண்ணா அவங்க குடும்பத்துக்கு முன்னாடி நிறுத்தனுங்கிற சாகரோட இத்தனை முயற்சியும் வீணாகக்கூடாது வினி. இந்த சமூகத்தை மாயா பயமில்லாம தைரியமா ஃபேஸ் பண்ணனும். அதைத்தான் சாகரும் விரும்புவான்.” என்று கூறியவனின் குரலில் அதை செய்து முடிப்பதின் வேகத்தை உணர்ந்தாள் அஷ்வினி.

ஒரு பெருமூச்சுடன், “சாகரோட முயற்சியும், உன்னோட முயற்சியும் வீணாகாதுடா அண்ணா!” என்றாள் அஷ்வினி.

சரி வினி, ரொம்ப நேரமாச்சு, நாளைக்கு வேற நீ சீக்கிரம் ஆஃபிஸுக்கு போகணும்ல, இப்போ போய் தூங்கு.” என்று அஷ்வின் கூற, “நீயும் வாடா.” என்று அவன் தனியாக இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் கூறினாள் அஷ்வினி.

நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் வினி.” என்றவன் அவளின் பயந்த பார்வையை உணர்ந்து, “பாஸ்ட் இஸ் பாஸ்ட்னு உனக்கு மட்டுமில்ல எனக்கும் தான் சொல்லிக்கிட்டேன். என்ன சொல்லி சமாதானப்படுத்துனாலும், மனசுல இருக்க வலியை குறைக்க கொஞ்ச நேரமாகும் வினி.” என்று அவன் கூற, அதைப் புரிந்து கொண்டவளாக, “நீயும் சீக்கிரம் தூங்கு அஷு. உன் ரூமுக்கு போனதும் மெசேஜ் பண்ணு.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

அஷ்வினி மனம் நிறைந்த பாரத்துடனும் குற்றவுணர்வுடனும் நடந்து வந்து கொண்டிருக்க, மாடிப்படியில் நின்றிருந்த உருவத்தை கண்டு அதிர்ந்தாள்.

அவள் வாய்திறந்து கத்தப்போக, அவளின் வாயை மூடியபடி அவளின் அறைக்கு இழுத்து வந்தது மாயா தான்!

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 இதோ உங்க 🌈🔥 அடுத்த எபியோட வந்துட்டேன்… எப்படியோ அஷ்வின் ஃபிளாஷ்பேக்கை முடிச்சாச்சு… ஃபிளாஷ்பேக் பற்றிய உங்க கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க நட்பூஸ்…😁😁😁

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  6 Comments

  1. Janu Croos

   அய்யயோ மாயா அம்புட்டையும் கேட்டுட்டாளா!!! பகல்ல பக்கம் பாத்து பேசு இரவுல அதுவும் பேசாதனு சும்மாவா சொன்னாங்க….அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் அறிவே இல்லை…
   அஷ்வினு உனக்குள்ள இவ்வளவு சோகமா…உன்ன இரும்பு மனுஷன்னு நினைச்சா நீ இவ்வளவு இளகினவனா…சொல்லாக்காதல் செல்லாதுன மாதிரி ஆயிடிச்சே பா உன் விஷயத்துல…

   1. vaanavil rocket
    Author

    Haha🤣🤣🤣 aama ketuta ini ena nadakka pogudho🤔🤔🤔
    Pch paavam ashwinu💔💔💔

  2. Archana

   எல்லா விஷயத்தையும் கேட்டு மாயா என்ன முடிவு பண்ண போறாளோ😶😶😶😶