970 views

சுடர் 2

சுடர் 2

செல்லும் வழியெல்லாம் ஒருவரையொருவர் முந்திக்கொண்டும், பார்வையாலே முறைத்துக்கொண்டும் தான் சென்றனர் அஷ்வின் மற்றும் அஷ்வினி. இவர்களின் இந்த சாகசம் மற்றவர்களின் போக்குவரத்தை லேசாக பாதிக்க, அதனால் அவர்களிடமிருந்து கிடைத்த அர்ச்சனைகளைக் கூட கண்டுகொள்ளவில்லை இருவரும்.

ஒருவழியாக, அன்றைய காலை பயணத்தை வெகு சிறப்பாக முடித்துக்கொண்டு அலுவலகத்தின் வாகன தரிப்பிடத்திற்கு வந்து சேர்ந்தனர். முதலில் வந்தது, அஷ்வினி தான். அதனால், வண்டியை விட்டு இறங்கி மிதப்பான பார்வையுடன் அஷ்வினை காண, அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல், தன் பொருட்களை எடுப்பதிலேயே குறியாக இருந்தான்.

டேய் அண்ணா, என்ன கண்டுக்காம இருக்க?” என்று நக்கல் தொனியில் கூறியவளை, அப்போதும் காணாமல், “குட்டிச்சாத்தான், எனக்கு இப்போ க்ளையண்ட் மீட்டிங் இருக்கு. சோ உன்னோட வெட்டிக் கதை பேச எனக்கு நேரமில்ல.” என்றான்.

அதைக் கேட்ட அஷ்வினி, “ஓய் யாரைப் பார்த்து குட்டிச்சாத்தான்னு சொன்ன? உனக்கு மட்டும் தான் மீட்டிங் இருக்கா, எங்களுக்கும் இருக்கு, நாங்களும் க்ளையண்ட் கூட பேசுவோம்.” என்று உதட்டை சுழித்துக்கொண்டாள்.

ச்சே இவனுக்கு மீட்டிங் இருக்குன்னு தெரிஞ்சுருந்தா, இன்னும் லேட் பண்ணிருக்கலாம்.” என்று அவனிற்கு கேட்கும் வகையிலேயே முணுமுணுக்க, அப்போது அவளை ஒன்றும் செய்ய முடியாத காரணத்தினால், முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

இவன் முறைக்குறதை பார்த்தா, கண்டிப்பா ஈவினிங் செமத்தியா இருக்கும் போலயேஎதுக்கும் உஷாரா இருப்போம்.’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவள், தன் அலைபேசியில் ஏதாவது செய்திகள், அறிவிப்புகள் வந்துள்ளனவா என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது அவளின் தோழியிடமிருந்து, “டூ மினிட்ஸ்டி. ஸ்டக் இன் ட்ராஃபிக். என்னை விட்டுட்டு உள்ள போயிடாதடி.” என்ற செய்தி வந்திருந்தது.

இவ ஒருத்தி, வாசல்ல இருந்து உள்ள போக, இவளுக்கு ஒரு துணை வேணும்!’ என்று சலித்துக்கொண்டே முகநூலில் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாள்.

எப்போதும் ஒரு இடத்தில் நின்று பழக்கப்படாத அவளின் கால்கள், அவளின் உத்தரவின்றியே அவ்விடத்தில் நடைபோட, அதை உணராமல் முகநூலில் வந்திருந்த மீம்களுக்குஹாஹாக்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தாள்.

திடீரென்று எதிலோ தலை இடித்துக் கொண்டதைப் போலிருக்க, அலைபேசியை நோக்கி குனிந்திருந்த தலையை நிமிர்த்தி பார்க்க, அங்கு ஆறடிக்கு சிறிதே குறைவான உயரத்தில், பரந்து விரிந்த தோள்களுடன் ஆஜானுபாகுவாக நின்றிருந்தவனைக் கண்டு பயந்து தான் போனாள்.

ஆனாலும், பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், புதிதாக வந்திருந்தவனை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.

அஷ்வினி மட்டுமல்ல, அவளிற்கு எதிர்புறம் நின்றிருந்தவன் கூட அவளைத் தான் பார்வையை சிறிது கூட அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனின் கூர்ப்பார்வை பாவையை அசைத்ததோ, அதுவரை அவளிற்கு சற்றும் சம்பந்தமில்லாத மௌனத்தை தத்தெடுத்திருந்தவள், அவளின் வாய் திறந்து, ”ஹலோ, பார்த்து வர மாட்டீங்களா? கண்ணை எங்க வச்சுட்டு வர்றீங்க?” என்று கோபமாக வினவினாள்.

அதுவரை சாதாரணமாக பார்த்துக்கொண்டிருந்தவன், இப்போது கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி அவளை சிறிது சுவாரசியத்துடன் பார்வையிட ஆரம்பித்தானோ!

ஹலோ, கேள்வி கேட்டா பதில் சொல்லாம கைகட்டி ஸ்டைலா நின்னுட்டு இருக்கீங்க?” என்று மேலும் அழுத்தி கேட்க, அப்போது தான் முதல் முறையாக வாய் திறந்து, “தேங்க்ஸ்.” என்றான்.

சாரி சொல்லுவான்னு பார்த்தா தேங்க்ஸ் சொல்றான்?’ என்று யோசித்தவள் புருவம் சுருங்க அவனை பார்க்க, அவனோ அவளின் புருவ சுழிப்பிற்கான காரணத்தை யூகித்தவனாக, “ஸ்டைலா நின்னுட்டு இருக்கேன்னு காம்ப்ளிமெண்ட் கொடுத்தீங்களே, அதுக்கு தான் தேங்க்ஸ்.” என்று சிரிப்புடன் கூறினான்.

இவன் நம்மள கலாய்க்கிறானோ!’ என்று யோசித்தவாறே, ஏதோ கேட்க நினைக்க, அதற்குள் அவளின் முயற்சியை தடுத்திருந்தது, தோழியிடமிருந்து வந்திருந்த அழைப்பு..

ஏய் எங்கடி இருக்க?” என்று அவன் மீதிருந்த கோபத்தை தோழியிடம் காட்டினாள்.

இதோ நான் உன்னைப் பார்த்துட்டேன்டி, வந்துட்டே இருக்கேன்.” என்று மறுபுறமிருந்து அவளின் தோழி கூறியபோதே அழைப்பை துண்டித்திருந்தாள் அஷ்வினி.

இப்போது அவனிருந்த இடத்தைப் பார்க்க, அது ஆளரவமின்றி காட்சியளித்தது.

எங்க இங்க இருந்த ஆளைக் காணோம்?’ என்று அஷ்வினி குழம்பும்போதே, அவளின் முதுகில் அடித்தாள் அவளின் தோழி ஜெனி.

போன்ல என்னை திட்டிட்டு இப்போ நீ இங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்க?” என்றாள் ஜெனி.

அது, இங்க ஒருத்தர்…” என்று நடந்ததைக் கூற ஆரம்பித்தவள், ‘நமக்கே நடந்தது உண்மையா பொய்யான்னு தெரியாது. ஒருவேளை நிஜமா இல்லைன்னா, அதுக்கும் இவ கலாய்ப்பா! சோ இப்போதைக்கு சொல்ல வேண்டாம்.’ என்று மனதிற்குள் நினைத்தவள், “ஒன்னுமில்லடி, வா போலாம்.” என்று ஜெனியை அலுவலகம் நோக்கி அழைத்துச் சென்றாள்.

உண்மையை சொல்லுடி. ‘இங்க ஒருத்தர்னு ஆரம்பிச்சேல?” என்று ஜெனி அதை விடாமல் வினவ, “அப்படியா ஆரம்பிச்சேன்? ஹான் அங்க ஒருத்தரும் இல்ல, என்னை தனியா நிக்க வச்சுட்டியேன்னு கேட்க வந்தேன். அப்பறம் தான் டைம் பார்த்து லேட்டாச்சுன்னு கூட்டிட்டு வந்துட்டேன். இன்னைக்கு என்னை வெயிட் பண்ண வச்சதுக்கு மார்னிங் பிரேக் நீ தான் ஸ்பான்சர் பண்ற.” என்று சமாளித்து விட்டாள் அஷ்வினி.

மேலும், ‘அங்க அவன் வந்தது உண்மையா இல்ல என்னோட கனவா? ச்சை, முழிச்சுட்டு இருக்கும்போது கூடவா கனவு வரும்! மானங்கெட்ட மைண்ட்டா இருக்கும் போலயே என்னோட மைண்டு!’’ என்று மனதிற்குள் புலம்பியபடியே நடந்தாள் அஷ்வினி.

என்ன நடந்துச்சுன்னு கேட்டதுக்கு, டீ அண்ட் பப்ஸ் செலவை என் தலைல கட்டிட்டாளே!’ என்பது ஜெனியின் மனக்குரல் அன்றி வேறு யாருடையதாக இருக்கும்.

*****

உள்ளே சென்ற இருவரையும் வரவேற்றது அவர்களின் குழுவில் இருக்கும் நியூஸ் கேதரர்அக்ஷய் தான். அலுவலகத்தில் எங்கு என்ன நடந்திருந்தாலும் அந்த செய்தியை உடனுக்குடன் அனைவருக்கும் வழங்கும் ஒரு அதிசய பிறவி அவன்.

ஹாய் கேர்ள்ஸ், இன்னைக்கு லேட்டஸ்ட் நியூஸ் என்னன்னு தெரியுமா? நம்ம ப்ராஜெக்ட் மேனேஜரை வேற டீமுக்கு ஷிஃப்ட் பண்றாங்க. அவருக்கு பதிலா புதுசா ஒருத்தர், நம்ம ஆஃபிஸோட பெங்களூரு ப்ரான்ஞ்லயிருந்து வந்துருக்காராம்.” என்றான் அக்ஷய்.

அந்த ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் வேற டீமுக்கு போறது எவ்ளோ நல்ல செய்தி?” என்று அஷ்வினி மகிழ, “ஹோல்ட் ஆன் லேடீஸ், இப்போ புதுசா வந்துருக்குறவரு, அதை விட ஸ்ட்ரிக்ட் என்று எதிர்பார்க்கப்படுகிறது!” என்று அக்ஷய் கூற, இரு பெண்களும் அவனை முறைத்தனர்.

உன் வாயிலயிருந்து வர ஒரு நியூஸாவது நல்ல நியூஸா இருக்கா?” என்று திட்டிவிட்டு அவரவர்களின் இருக்கை நோக்கி சென்றனர்.

அடுத்த அரை மணி நேரம் கழித்து, அஷ்வினியின் குழுவில் இருப்பவர்களை கலந்துரையாடல் அறைக்கு வரச்சொல்லியதும் மற்றவர்களுக்கு அதற்கான காரணம் புரிந்தே இருந்தது.

அனைவரும் அந்த அறைக்கு வந்ததும், இதுவரையில் அவர்களின் குழுவில் திட்டப்பணி மேலாளராக இருந்த ரஞ்சித் பேச ஆரம்பித்தார்.

ஹலோ ஆல். உங்களை எதுக்கு இங்க கூப்பிட்டுருக்கோம்னு உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்கும்.” என்று கூறியபடியே அக்ஷயைப் பார்த்தவர், மீண்டும் பேச ஆரம்பித்தார். அக்ஷயோ அவர் பார்வைக்கு எவ்வித எதிர்வினையை ஆற்றுவது என்று புரியாமல் அமர்ந்திருந்தான்.

என்னை வேற டீமுக்கு ப்ராஜெக்ட் மேனேஜரா ஷிஃப்ட் பண்ணியிருக்காங்க. அண்ட் உங்களுக்கு ப்ராஜெக்ட் மேனேஜரா, நம்ம பெங்களூரு ஆஃபிஸ்லயிருந்து நிரஞ்சன்னு ஒருத்தரை அப்பாயின்ட் பண்ணியிருக்காங்க. ஹீ இஸ் சோ டேலண்ட்ட். அவருக்கு கீழ ஒர்க் பண்றப்போ நீங்க இன்னும் நிறைய விஷயங்களை கத்துப்பீங்க. அவரைப் பத்தி டீடெயிலா அவரே இண்ட்ரோ கொடுப்பாரு. அண்ட் முக்கியமான விஷயம், அவரு நம்ம கன்சர்ன் ஹெட்டோட க்ளோஸ்னு கேள்விப்பட்டுருக்கேன். இன்ஃபேக்ட் இங்க ட்ரான்ஸ்ஃபெர் வேணும்னு அவரு கேட்டுக்கிட்டதுனால தான் இந்த ஸ்வாப்பே நடந்துருக்குன்னு நினைக்கிறேன். சோ அவருக்கிட்ட கேர்ஃபுல்லா இருங்க.” என்று ரஞ்சித் கூறினார்.

அவர் நிறுத்தியதும் அங்கிருந்தவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டனர்.

தலைவரைப் பார்த்தியா, கடைசி லைன்ல ஒரு பிட்டை போட்டாரு. என்னமோ, இவரு நல்லா பெர்ஃபார்ம் பண்ணியும் இவரை வேற டீமுக்கு மாத்துன மாதிரி ஒரு பில்ட்அப்பு! கடந்த ஆறு மாசத்துல, நம்ம டீம்ல சரியான பெர்ஃபார்மன்ஸ் இல்ல. அதுக்கு காரணம் யாருன்னு அலசி ஆராய்ஞ்சதுல நம்ம தலைவர் தான்னு தெரிய வந்துருக்கு. அதான், இந்த உடனடி ஸ்வாப் ஆக்ஷன் எடுத்துருக்காங்கன்னு நம்பத்தகுந்த வட்டாரத்துல இருந்த செய்தி வந்துருக்கு. இப்போ இவரு பேசுறதை வச்சு பார்க்கும்போது, நம்ம மேல இருக்க கடுப்பை டைரெக்ட்டா நம்மகிட்ட காட்ட முடியாத காரணத்துனால, புதுசா வர பி.எம்முக்கு எதிரா நம்மளை திருப்ப ட்ரை பண்றாருன்னு தெரியுது.” என்று பெரிய துப்பறிவாளனைப் போல் ரஞ்சித் செய்த சதிவேலைகளை புட்டு புட்டு வைக்க, அக்ஷயைப் பற்றி தெரியாத புதிதாக சேர்ந்த ஜுனியர் ஒருவன் அவனை வியப்பாக பார்த்தான்.

மேலும், “எப்படி சீனியர் இப்படியெல்லாம்? கலக்குறீங்க போங்க.” என்று பாராட்ட, அக்ஷய் அதை ஏற்கும் விதமாக தோளை தூக்க, அஷ்வினியும் ஜெனியும் அவனை மானசீகமாக காரித்துப்பினர்.

நம்ம ஜுனியரா ஜாயின் பண்ணப்போ, நம்ம சீனியர் நமக்கு சொன்னதை, அங்கங்க வெட்டி ஒட்டி, என்னமோ இவனே கண்டுபிடிச்சு சொல்ற மாதிரி சீனைப் போடுறான் பாரு.” என்று ஜெனி அஷ்வினியின் காதில் முணுமுணுக்க, “விடு விடு, இன்னும் எவ்ளோ நேரம் கதை கட்டுறான்னு பார்ப்போம். நமக்கும் ஒரு என்டர்டெயின்மெண்ட் வேணும்ல.” என்றாள் அஷ்வினி.

பின்னர், “இந்த புது ப்ராஜெக்ட் மேனேஜர். அவரு பேரென்ன? ஹான் நிரஞ்சன்அவரு எப்போ வருவாராம்? இவருக்காக நம்ம வேலையெல்லாம் விட்டுட்டு இங்க காத்திட்டு இருக்கணுமா?” என்று அஷ்வினி கேட்க, அவளையே திறந்த வாய் மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தனர், அக்ஷயும் ஜெனியும்.

அவர்களின் பாவனையைக் கண்ட அஷ்வினி, ‘ஒரு பெர்ஃபார்மன்ஸ் பண்ண விடுதுங்களா?’’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக, “எதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்துட்டு இருக்கீங்க அப்பரசந்திங்களா? உங்களை நம்பி ஒரு பெர்ஃபார்மன்ஸ் பண்ண முடியுதா? அடேய், அக்ஷய் நீ உருட்டுனப்போ நான் எவ்ளோ அழகா உண்மைங்கிற மாதிரியே ரியாக்ஷன் கொடுத்தேன்.” என்று புலம்பினாள்.

எம்மா, நீ பெர்ஃபார்ம் பண்றதுக்கு முன்னாடி தயவுசெஞ்சு ஸ்க்ரிப்ட் இது தான்னு சொல்லிடு. எப்படி எப்படி, வேலை இருக்குன்னு ஃபீல் பண்ற ஆளா நீ? அது சரி, உன் வாய் உன் உருட்டு!” என்று முணுமுணுத்தான் அக்ஷய்.

அஷ்வினி அவனை லேசாக அடிக்கும்போதே, அந்த அறைக் கதவை திறந்து கொண்டு வந்தான் அவன், நிரஞ்சன் குமார்.

*****

சார், அந்த பெரிய பொண்ணு கண்டிஷன் இன்னும் ஸ்டேபில் ஆகலைன்னு டாக்டர் சொல்றாரு. அந்த ரெண்டு சின்ன பசங்களும் மயக்கத்துல இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க முழிச்சுடுவாங்கன்னு நினைக்குறேன்.” என்று அந்த ஏட்டு கூற அதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், “ப்ச், என்ன குடும்பம்யா இது? சொந்த குழந்தைங்களையே கொல்ல நினைச்சுருக்காங்க.” என்றார்.

சார், அந்த பெரிய பொண்ணு அவங்களோட சொந்த குழந்தை இல்லையாம். அந்த சின்ன பசங்களோட பெரியப்பா பொண்ணாம்.” என்று ஏட்டு கூற, “அந்த பொண்ணோட, அவங்க சொந்த குழந்தைகளும் தான இருந்தாங்க. என்னமோ போய்யா, இப்போ விசாரிக்குறதுக்கு அந்த குடும்பமும் கையில சிக்கல, இந்த பசங்களும் முழிக்குற மாதிரி இல்ல. இவங்களுக்கு வேற சொந்தக்காரங்க இருக்காங்களான்னு விசாரிக்க சொன்னேனே, என்னாச்சு?” என்றார்.

சார், அது விசாரிச்சுட்டு இருக்காங்க. அதே மாதிரி, அந்த பெரிய பொண்ணோட போன் கான்டேக்ட்ஸுக்கும் ட்ரை பண்ண சொல்லிருக்கேன்.” என்று கூறினார்.

ஓகே, எதுவா இருந்தாலும் எனக்கு ரிப்போர்ட் பண்ணுங்க. அப்பறம் அந்த பசங்க கண்ணு முழிச்சதும் சொல்லுங்க. நான் ஸ்டேஷன் போய் பார்த்துட்டு வந்துடுறேன்.” என்று அந்த மருத்துவமனையை விட்டு கிளம்பினார் அந்த இன்ஸ்பெக்டர்.

*****

அந்த அறைக்குள் நுழைந்து நிரஞ்சன் குமாரைக் கண்டதும் அஷ்வினிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இவனா அந்த நிரஞ்சன் குமார்? அப்போ கார் பார்க்கிங்க்ல நடந்த சம்பவம் உண்மை தானா? ஐயோ, ப்ராஜெக்ட் மேனேஜர்னு தெரியாம வார்த்தையாடிட்டு வந்துருக்கேனே!’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

அடுத்த நொடியே, ‘அப்படியென்ன பெருசா பேசிட்டேன்? அவன் வந்து இடிச்சதுனால லேசா திட்டுனேன். அதுக்கு அவன் தான் ஏதோ பேசுனான். ஹ்ம்ம், ஏதாவது கேட்கட்டும் அப்பறம் இருக்கு அவனுக்கு!’ என்று இடித்ததற்கான முழு பொறுப்பையும் அவன் தலையில் கட்டிவிட்டாள்.

ஆனால், அவள் எதிர்பார்த்ததைப் போல, அவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

அதற்கும், ‘எப்படி இவன் என்னை தெரியாத மாதிரி போகலாம்?’ என்று மனதிற்குள் அவனுடன் சண்டை பிடித்தாள்.

மோதலில் ஆரம்பித்த இவர்களின் சந்திப்பு காதலில் முடியுமா?

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்… “என் காதல் சுடர் நீயடா(டி)” கதையின் இரண்டாவது அத்தியாயம் படிச்சுட்டு உங்க கருத்துக்களை ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ  பகிர்ந்துக்கோங்க…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
34
+1
2
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  13 Comments

  1. Janu Croos

   அவசரப்பட்டுட்டியே குமாரு🤦🤦🤦….புதுசா வந்த ப்ராஜெக்ட் மேனேஜர் கிட்ட உன் வார்த்தை ஜாலத்தை காட்டியிருக்கியே🤷‍♂️🤷‍♂️🤷‍♂️….இதுக்கு தான் அவசரப்படக்கூடாதுனு சொல்றது🤭🤭🤭….உங்கண்ணன்காரன் அமைதியா இருந்து🤐🤐🤐 எல்லாரையும் பதறவச்சா🤯🤯🤯…நீ பேசியே எல்லாரையும் அலர வைக்குறியே😩😩😩…..

   அவனும் நீ பேசின பேச்சுக்கு திரும்ப ஏதும் பேசாம🤫🤫🤫….நீ பேசுன பேச்சுக்கெல்லாம் தாங்கஸ்னு ஒரு வார்த்தையில பதில் சொல்லிட்டு போய்ட்டானே🧐🧐🧐….ஒரு வேளை உள்ளூர் ஓணான் தானே அப்புறமா அடிச்சுக்கலாம்னு நினைச்சிட்டானோ🤔🤔🤔….

   1. vaanavil rocket
    Author

    ஆமா அவசரப்பட்டுட்டியே🤣🤣🤣 ஹாஹா உள்ளூர் ஓணானா😂😂😂 இருக்குமோ🤔🤔🤔

  2. Archana

   இது என்னடா அஸ்வினிக்கு வந்த சோதனை🤣🤣🤣🤣 அப்போ சாகர்ன்னு ஒரு கேரக்டரே டீசர்லே போட்டீங்களே அந்த கேரக்டர் தான் மர்கையா வா கவர்பேஜ் பார்த்துட்டு ஒரு ஹீரோ இல்லைன்னு நினைச்சுட்டேன்🤔🤔🤔. கவர் பேஜ்ல மூணு ஹீரோ ரெண்டு ஹீரோயின் இருக்குலே அப்போ எந்த ஹீரோக்கு ஹீரோயின் லேது😑😑😑😑.

   1. vaanavil rocket
    Author

    பின்ன ஹீரோயின்னா நாலு அடி வாங்கணும்ல…😜😜😜 நான் சொல்ல மாட்டேன் பா…😉😉😉 நீங்க கெஸ் பண்ணுங்களேன்…😜😛😜

  3. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  4. Sangusakkara vedi

   Semma semma semma…. Rmba rmba nalla iruku ud … Ashwini character semma …. Niranjan entry nice…. Ithu thn anthanarabali family ya…. Ithu ethuku intha story la varuthu epdi connect panna poringa writer ji….

  5. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.

  6. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.