494 views

சுடர் 19

வாய்க்குள் எதையோ முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்த அஷ்வினியை கண்ட சித்ரா, “ஹே வினி, எப்போ வந்த? வண்டி சத்தமே கேட்கல?” என்று வினவினார்.

நிரஞ்சனை மனதிற்குள் திட்டிக்கொண்டே அறைக்குள் செல்ல முயன்றவள் தாயின் கேள்வியில் நிற்க, “என்னடி கேட்டுட்டே இருக்கேன் சும்மா நின்னுட்டு இருக்க?” என்றார் அவர்.

ஏற்கனவே, தாமதமாக வருவதை வீட்டினில் சொல்லவில்லை என்பதால் தாயிடம் சமரசமாக பேச எண்ணி, “நான் ஸ்கூட்டில வரல.” என்றாள்.

அடுத்து சொல்ல வருவதற்குள், “என்ன ஸ்கூட்டில வரலையா? அப்போ எதுலடி வந்த? இதுக்கு தான் அஷ்வினோட சேர்ந்து வான்னு சொல்றது.” என்று புலம்ப ஆரம்பித்தவர், அப்போது தான் மாடியிருந்து இவர்களின் பேச்சுக்குரல் கேட்டு இறங்கி வந்து கொண்டிருந்த அஷ்வினிடம், “இவ தான் சொன்னான்னு நீயும் சரின்னு வந்துருக்கடா. இருந்து கூட்டிட்டு வந்தா தான் என்ன?” என்று அவனையும் திட்டினார்.

தப்பான டைம்ல என்ட்ரி கொடுத்துட்டோமோ!’ என்பது தான் இரட்டையர்களின் அப்போதைய மனநிலை.

ம்மா, நான் சொல்றதை முழுசா கேளுங்க. லேட்டானதால, ஸ்கூட்டில தனியா போக வேண்டாம்னு என்னோட ப்ராஜெக்ட் மேனேஜர் அவரோட கார்ல டிராப் பண்ணிட்டு போறாரு.” என்று விளக்கினாள் அஷ்வினி.

அதைக் கேட்ட அஷ்வின், அக்ஷயை பற்றி கேட்க முயல, தன் வாயசைவை கொண்டே அவனிடம் எதுவும் கேட்க வேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள் அஷ்வினி. அதற்கும் அன்னையிடம் திட்டு வாங்க வேண்டுமல்லவா!

ஆனால், அன்று எப்படியும் சித்ராவிடம் திட்டு வாங்க வேண்டும் என்று அவளின் தலையில் எழுதியிருந்தது போலும்!

உன் மேனேஜர் உன் மேல கேர் எடுத்து உன்னை டிராப் பண்ணிட்டு போறாரு, அவரை வீட்டுக்கு கூப்பிடனும்னு கூடவா உனக்கு தோணாது? என்ன பொண்ணோ! கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா?” என்று சித்ரா கோபப்பட, அவரை முறைத்தவள் மனதிற்குள், ‘அவனே எப்போ சான்ஸ் கிடைக்கும் கலாய்க்கலாம்னு இருக்கான். இதுல இந்த அம்மாக்கு சாரை உள்ள கூப்பிட்டு விருந்து வைக்கலன்னு ஃபீலிங்ஸ் வேற!’ என்று திட்டிக்கொண்டிருந்தாள்.

புசுபுசுவென்று மூச்சுக்காற்றை விடுபவளின் பாவனையை கொண்டே அவள் மனதில் நினைப்பதை புரிந்து கொண்ட அஷ்வின் சிரிப்பை அடக்கிக்கொண்டான்.

சித்ரா மகளிடம் பதிலை எதிர்பார்த்திருக்க, பதில் சொல்லாமல் விடமாட்டார் என்பதை புரிந்து கொண்டு, “ம்மா, மணியைப் பார்த்தீங்களா? அவரு வீட்டுக்கு போக வேண்டாமா?” என்று கூறி சமாளிக்க, “ம்ம்ம் அதுவும் சரி தான். அவரு ஃப்ரீயா இருக்கப்போ இன்னொரு நாள் வீட்டுக்கு கூப்பிடு.” என்று சித்ரா கூற, ‘ஐயோ, விருந்து வைக்காம விட மாட்டாங்க போலயே!’ என்று நொந்து போனாள் அஷ்வினி.

அவள் பதில் கூறுவதற்கு முன்னரே, “கவலைப்படாதீங்க ம்மா, நானே அவரை வீட்டுக்கு கூப்பிடுறேன்.” என்றான் அஷ்வின்.

அவனை நோக்கி துரோகிபார்வையை வீசி, “ம்மா, மாயா அப்பறம் குட்டீஸ் எங்க?” என்று பேச்சை மாற்றி அஷ்வினிற்கு பிபியை ஏற்றினாள்.

அவர் பதில் சொல்வதற்கு முன்னரே, “ம்மா, பால் எங்க? நாளைக்கு சீக்கிரம் போகணும் ம்மா. சோ இன்னைக்கு சீக்கிரம் தூங்கணும்.” என்று ஏதோ உளறி அவரை சமையலறைக்கு அப்புறப்படுத்தினான் அஷ்வின்.

ரெண்டுக்கும் என்ன தான் ஆச்சோ?” என்று புலம்பியபடியே சமையலறைக்கு சென்றார் சித்ரா.

அவர் உள்ளே சென்றதும், “அப்பறம்டா அண்ணா, காலையில தப்பிச்சுட்ட போல?” என்று நக்கலாக வினவினாள் அஷ்வினி.

அதான் இப்போ மாட்டிக்கிட்டேனே!” என்று அவன் முணுமுணுக்க, “சரியா சொன்ன, நீ என்ன பண்ற, பால் குடிச்சுட்டு அப்படியே ரூமுக்கு போலாம்னு நினைக்காம, எனக்காக மொட்டைமாடியில வெயிட் பண்ணுவியாம். நான் ஃபிரேஷ்ஷாகிட்டு மாடிக்கு வருவேனாம். நான் வரும்போது நீ அங்க இல்ல, நேரா போய் மாயா கிட்டயே சொல்லிடுவேன்.” என்று மிரட்டிவிட்டு பாடல் ஒன்றை முணுமுணுத்துக்கொண்டே மேலே ஏறினாள்.

அப்போது அஷ்வினிற்காக பாலை எடுத்து வந்தவர் அஷ்வினி மேலே செல்வதைப் பார்த்து, “அடியேய் நில்லுடி, நைட் சாப்பாடு எடுத்து வைக்குறேன்.” என்று கூற, “நான் எப்பவோ வெளிய சாப்பிட்டுட்டேன்.” என்றவாறே மேலே ஏறினாள்.

இதெல்லாம் முன்னாடி சொல்ல மாட்டியா? உனக்காக எடுத்து வச்சதெல்லாம் என்னடி பண்ண?” என்று சித்ரா கோபமாக வினவ, “அதையும் பால் குடிச்சுட்டு இருக்க அந்த நெட்டையனுக்கே கொடுங்க.” என்று அறைக்குள் சென்று மறைந்தாள்.

சித்ரா திட்டியபடி செல்ல, ‘குட்டிச்சாத்தான், ஒருநாள் என்கிட்ட மாட்டுவல, அப்போ வச்சு செய்யிறேன் உன்னை.’ என்று மனதிற்குள் தான் திட்ட முடிந்தது அஷ்வினால்.

*****

காலையிலிருந்து நடைபெற்ற நிகழ்வுகளை எண்ணிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவனை நீள்சாய்விருக்கையில் கன்னத்தில் கையை முட்டுக்கொடுத்தபடி அமர்ந்திருந்த கலைவாணியே வரவேற்றார்.

இது தான் நீ உன்னையே பார்த்துக்குற லட்சணமா நிரஞ்சா?” என்று அவர் வினவ, “இதைக் கேட்க தான் இவ்ளோ நேரம் முழிச்சுட்டு இருந்தீங்களா சித்தி?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

அவனின் கேள்விக்கு பதில் வராமல் போக, கலைவாணியை திரும்பிப்பார்க்க, அவரோ அவனையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார்.

என்னாச்சு சித்தி? எதுக்கு புதுசா பார்க்குற மாதிரி பார்க்குறீங்க?” என்றான்.

இல்ல, உன்னை ரோபோன்னு அந்த பொண்ணு சொன்னாளே, அதான் எந்த ஆங்கில்ல ரோபோவா தெரியுறன்னு பார்த்துட்டு இருக்கேன்.” என்று அவர் கூற, “சித்தி, அந்த லூசு சொன்னதை இவ்ளோ தீவிரமா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று பேசியபடி உடை மாற்ற சென்றான்.

அவனிற்கு உணவு எடுத்து வைத்துக்கொண்டே, “அந்த பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கு நிரஞ்சா.” என்றவர், அவன் சாப்பிட்டு முடிக்கும் நேரம், “அந்த பொண்ணு உனக்கு ரொம்ப க்ளோசோ?” என்று தூண்டிலும் போட்டார்.

அதில் சிக்குவதற்கு அவன் என்ன மீனா!

உங்க பேச்சு எந்த டெரக்ஷன்ல போகுதுன்னு கண்டுபிடிச்சுட்டேன், நீங்க அந்த பொண்ணை எங்க பார்த்தீங்கங்கிற ஆராய்ச்சியை மட்டும் தொடருங்க. நான் தூங்க போறேன்.” என்று கூறிவிட்டு தன்னறைக்குள் சென்றுவிட்டான்.

ச்சே, மாட்ட மாட்டிக்கிறானே!” என்று புலம்பியபடி அவரும் தூங்க சென்றார்.

*****

அறைக்குள் நுழைந்தவள், தூங்குவதற்கு தயாராக இருந்த மாயாவை பார்த்து, “ஹாய் மாயா. எப்படி போச்சு இன்னைக்கு? அஷ்வின் கூட ஹாஸ்பிடல் போனியே, என்ன சொன்னாங்க?” என்று வரிசையாக கேள்விகளை தொடுத்தாள் அஷ்வினி.

மெதுவா வினிநான் என்ன ஓடியா போகப்போறேன்?” என்று சிரித்தாள் மாயா. அவளின் வழக்கமான சிரிப்பு இல்லை என்றாலும், இதழை விரிக்கவாவது செய்தாளே என்று நினைத்துக்கொண்டாள் அஷ்வினி.

எங்க ரெண்டு பேரையும் காணோம்?” என்று வினவ, “சம்மு கீழயே படுக்குறேன்னு சொல்லிட்டா. பாவம், ஆண்ட்டி அங்கிள்!” என்று கவலைப்பட, சற்று முன்னர் சித்ராவிடம் திட்டு வாங்கிய கடுப்பில் இருந்தவள், “உங்க ஆண்டிக்கு இது தேவை தான். நல்லா அனுபவிக்கட்டும்!” என்று கூற, அதற்கு சிரித்தாள் மாயா.

எங்க நம்ம மிஸ்டர். ஹேண்ட்ஸம்? என்னைப் பார்த்ததும் ஓடிடுவானே.” என்று நவீனை வினவ, ஒருநொடி தயங்கிப் பின், “அஷ்வினோட ரூம்ல.” என்றாள் மாயா.

மாயாவின் தயக்கத்தை கவனிக்காமல், தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள சென்று விட்டாள் அஷ்வினி.

மாயாவிற்கு தான் அஷ்வினை நினைத்து சங்கடமாக இருந்தது. தனக்கு உதவி செய்ய போய் அவனிற்கு கெட்டது நடந்து விடுமோ என்று பயம் சூழந்தது பேதையவளின் நெஞ்சினில்.

சாகர் விஷயத்திற்கு பின்னர், அவளின் ஊரில் உள்ளவர்கள், அவளின் காதுபடவே, ‘இவளால தான அந்த பையன் இறந்தான்!’, ‘ராசி கெட்டவ’, ‘இனி இவளை யாரு கல்யாணம் பண்ணுவா?’, ‘அப்படி கல்யாணம் பண்ணாலும் அது நிலைக்குமா என்ன?’ என்பதை போன்று பேச, அவளே அவர்கள் கூறுவது உண்மை தானோ என்று எண்ண ஆரம்பித்தாள்.

அந்த மருத்துவர் இருவரையும் ஜோடி சேர்த்து வைத்து பேசும் போதும், அவளின் அதிர்ச்சிக்கு காரணம் தன்னுடன் இணைத்து பேசியதால் அஷ்வினிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பதற்றம் தான்.

இது முட்டாளத்தனம் என்று மூளைக்கு புரிந்தாலும் கூட, அவளின் மனம் நம்ப மறுக்கிறதே! அந்த அளவிற்கு, சுற்றத்தாரின் பேச்சு அவளின் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது.

அதே நினைவுடன் அறையின் மூலையை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை கலைத்தது அஷ்வினியே.

ஹே மாயா, என்ன உட்கார்ந்துட்டே கனவு காணுறியா?” என்று வினவியவள், மறுமொழி வழங்கும் வாய்ப்பை கூட அவளிற்கு விட்டுத்தராமல், “நானும் அஷ்வினும் மொட்டைமாடியில ஒரு வாக் போகப் போறோம். நீயும் வரியா?” என்றாள்.

இல்ல வினி, எனக்கு டையர்ட்டா இருக்கு. நீ போயிட்டு வா.” என்றாள் மாயா உடனடியாக.

மற்ற சமயம் என்றால், ‘நீயும் கண்டிப்பா வரணும்என்று இழுத்துக்கொண்டு போயிருப்பாளோ. அன்று அஷ்வினிடம் தனியாக பேச வேண்டும் என்பதாலும், அது மாயாவை பற்றிய விஷயம் என்பதாலும், அவள் வரவில்லை என்று கூறியதும் அஷ்வினியும் சரியென்று மொட்டைமாடிக்கு சென்று விட்டாள்.

******

அஷ்வினி வருவதற்கு முன்பே, இரவு நேர குளிர் காற்றிற்கு தன்னை ஒப்படைத்துவிட்டு நின்றிருந்தான் அஷ்வின்.

உடன்பிறப்பின் மிரட்டல் ஒருபுறம் இருந்தாலும், அவளிடம் எப்படி கூறுவது என்று ஒத்திகையும் பார்க்க வேண்டுமே! ஆனால், அதற்கான வழி கிடைத்த பாடில்லை.

அவன் ஒத்திகை பார்ப்பதற்குள், அஷ்வினியே மேலே வந்து விட்டாள்.

பங்ச்சுவேலிட்டில உன்னை மிஞ்ச ஆளே இல்லடா அண்ணா.” என்று வஞ்சப்புகழ்ச்சியை அள்ளித்தெளித்தவாறே வந்தாள் அஷ்வினி.

அதற்கு பதிலேதும் சொல்லாமல், “வந்த வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் கிளம்பலாமா?” என்று கோபமாக பேசினான் அஷ்வின். கோபமாக இருப்பது போல காட்டிக்கொண்டான். இல்லையென்றால் அத்தனை எளிதில் அவளிடமிருந்து தப்பிக்க முடியாதே.

பார்றா, ஹலோ ப்ரோ, நீ தான் சொல்லணும். மாயாவை காதலிக்குறன்னு நேத்து சொன்னியே, அது உண்மையா? உண்மைன்னா, எப்போ? எப்படி? ஏன் என்கிட்ட மறைச்ச? எல்லாத்தையும் டீடெயிலா சொல்லு பார்ப்போம்.” என்று கதை கேட்பதற்கு ஏதுவாக அமர்ந்து கொண்டாள்.

ஒரு பெருமூச்சுடன், “ஆமா மாயாவை நான் காதலிச்சேன் தான். எப்போ இருந்துன்னு எல்லாம் சரியா சொல்ல தெரியல. ஆனா, அவ ஃபர்ஸ்ட் டைம் காலேஜுக்குள்ள நுழையும்போதே நான் அவளைப் பார்த்துட்டேன். அப்போவே ஏதோ டிஃப்ரெண்ட் ஃபீல் என்னால உணர முடிஞ்சது.” என்று சொல்லி நிறுத்த, அஷ்வினியின் மனம் அதே நாளிற்கு பின்னோக்கி நகர்ந்தது.

*****

டேய் சகு, நம்ம இந்த இயர் சீனியர்னு கெத்து காட்டுறோம் டா.” என்று அஷ்வினி கூற, “கிழிப்ப, ஒருத்தனும் நம்மள மதிக்க மாட்டான். முன்னாடி போறவனுங்களை பார்த்தியா, எப்படி பாடியை பில்ட் பண்ணி வச்சுருக்காணுங்கனு? அவனுங்க என்னன்னு திரும்பி கேட்டாலே, கீழ விழுந்துடுவ. இதுல கெத்தை காட்டப்போறாளாம்.” என்றான் அவளை நன்கு அறிந்த அவளின் ஆருயிர் தோழன் சாகர்.

என்னையவே கிண்டல் பண்றேல! இதுக்காகவே, ஒரு ஜுனியர் கண்ணுலயாச்சும் கண்ணீர் வரவைக்கல…” என்று அவள் சபதம் மேற்கொள்ளும் போதே, “ஹே ஹேர் ஆயில், ஏற்கனவே உன் பேர் கேவலமா தான் இருக்கு. இதுல பேரை மாத்துறேன்னு இன்னும் கேவலமாக்கிடாத.” என்று அவளை கிண்டல் செய்து அதற்கும் அவளிடமிருந்து வாங்கி கட்டிக்கொண்டான்.

எடுத்த சபதத்தை முடிப்பதற்காக தன் மிரட்டலுக்கு பயப்படும் அளவிலான நபரை தேடிக்கொண்டிருந்தாள் அஷ்வினி. சாகரோ அஷ்வினியிடமும் அலைபேசியிலும் மாற்றி மாற்றி பார்வையை பதித்திருந்தான்.

ச்சே, எல்லாம் தடிமாடுங்க மாதிரி இருக்கானுங்களே!” என்று அவள் புலம்ப, “இன்னும் அஞ்சு நிமிஷம் தான் உனக்கு டைம், அப்பறம் நீ வரலைன்னாலும், உன்னை விட்டுட்டு நான் கிளாஸுக்கு போயிடுவேன்.” என்றான் சாகர்.

ஐயோ, ஏன்டா என் உடன்பிறப்புக்கு சப்ஸ்டிட்யூட் மாதிரியே பேசுற? அவனுக்கு தம்பியா அவதரிச்சுருக்க வேண்டியவன். நம்மள படைக்கிறப்போ கடவுள் ஏதோ கன்ஃபியூஷன்ல இருந்துருப்பாருன்னு நினைக்கிறேன், அதான் ஸ்வேப்பாகிட்டோம் போல!” என்று அஷ்வினி புலம்ப ஆரம்பித்தாள்.

உனக்கு கொடுத்த அஞ்சு நிமிஷத்தையும் புலம்பியே வேஸ்ட் பண்ணிட்ட, வா போலாம்.” என்று அவளின் கையைப் பிடித்து இழுக்க, அவளோ அருகிலிருந்த மரத்தைப் பிடித்துக்கொண்டு, “இன்னைக்கு என் சபதத்தை முடிக்காம வரமாட்டேன்டா.” என்று கத்திக்கொண்டிருந்தாள்.

இவர்களை மற்றவர்கள் வேடிக்கை பார்த்தாலும், எதுவும் கேட்கவில்லை. புதியவர்கள் மிரட்சியாக அவர்களை கடக்க, அவர்களின் செயல்களுக்கு பழக்கப்பட்டவர்களோ, இது வழமையாக நடப்பது தானே என்று சாதாரணமாக கடந்து சென்றனர்.

அப்போது தான் அஷ்வினி மாயாவை பார்த்தாள். உடனே, “ஹே சகு, அங்க பாரேன் அந்த பொண்ணை, அவங்க வீட்டுல டைரி ப்ராடெக்ட்ஸா ஊட்டி வளர்த்துருப்பாங்களோ? நல்லா வெள்ளையா, சப்பியா, அழகா இருக்காள!” என்று கூற, முதலில் தன்னிடமிருந்து தப்பிக்கவே பொய் சொல்கிறாள் என்று நினைத்து அந்த பக்கமே திரும்பவில்லை சாகர்.

டேய் உண்மையா தான்டா. அங்க பாரு.” என்று அவனிடமிருந்து போராடி விடுவித்த கரத்தை கொண்டு அவன் தாடையை பற்றி மாயா வரும் திசை நோக்கி திருப்பினாள்.

ஒருபக்க தோளில் தொங்கிய பையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு, ஒருநொடி நிமிர்ந்தும், மறுநொடி குனிந்தும் என்று சடுகுடு ஆடியபடி, கண்களில் அப்பட்டமாக தெரியும் பயத்துடனும் பதற்றத்துடனும், அவளின் நடை கூட பூமியை வருத்தாதபடி மெல்ல வந்து கொண்டிருந்தாள் மாயா.

அவளை கண்டதும் காதல் என்றெல்லாம் சாகருக்கு தோன்றவில்லை. அவளின் குழந்தைத்தனமான செயலில் சிரிப்பு தான் வந்தது.

எனக்கு ஒரு அடிமை சிக்கிடுச்சு டோய்.” என்று அஷ்வினி ஆர்ப்பாட்டமாக கூற, அவளிற்கு முன் மாயாவை அழைத்திருந்தான் சாகர்.

பேஎன்று தன்னைத் திரும்பிப்பார்த்த அஷ்வினியின் தாடையை தொட்டு மாயா வரும் திசை நோக்கி திருப்புவது இப்போது சாகரின் முறையாயிற்று.

சாகர் மாயாவை அழைத்ததற்கு காரணம், எதிர்புறமிருந்த வேறு துறையை சேர்ந்த மாணவர்கள் அவளை அழைக்க முயன்றதை சாகர் பார்த்திருந்தான். அவர்களின் பார்வையே சரியில்லை என்பது பார்த்ததுமே தெரிந்தது. மாயாவும் பயந்த சுபாவமாக தெரிய, அவர்களிடம் ஏன் மாட்ட வேண்டும் என்று தான் அழைத்திருந்தான்.

மாயா அருகில் வந்ததும், அஷ்வினி தொண்டையை செருமிக் கொண்டு ஏதோ கேட்க முயல அதற்குள், “உன் பேர் என்ன?” என்றிருந்தான் சாகர்.

இப்போதோ அவனை கோபமாக முறைத்துக்கொண்டிருந்தாள் அஷ்வினி.

மாயா திக்கித்திணறி அவளின் பெயரை கூற, “பேர் கேட்டதுக்கே இவ்ளோ பயந்தா, நீ எப்படி மத்த கேள்விகளை ஃபேஸ் பண்ணுவ?” என்று சாகர் கேட்கும்போதே, மாயாவிற்கு கண்கள் கலங்க துவங்கியன.

சகு, ஸ்க்ரிப்ட் படி நான் தான்டா அழ வைக்கணும்.” என்று பல்லைக் கடித்துக்கொண்டு முணுமுணுக்க, “இப்போ இது ரொம்ப முக்கியம்! உன் சபதத்தை, அழறவங்களை சமாதானப்படுத்துறதுன்னு மாத்திட்டு, அந்த பொண்ணை சமாதானப்படுத்து.” என்று அனுப்பிவைத்தான்.

அவனை முறைத்துக்கொண்டே சென்றவள், சிறிது நேரத்திலேயே மாயாவை சமாதானப்படுத்தி இருந்தாள். பேசும்போது, மாயாவும் அவர்கள் வகுப்பு (லேட்ரல் என்ட்ரி) என்பதை அறிந்து அவளையும் தங்கள் வகுப்பிற்கு கூட்டிச்சென்றனர்.

நொடிக்கு ஒருமுறை நண்பனை கண்டவள், சற்று நிமிர்ந்து மாடியில் நின்று மாயாவையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த உடன்பிறந்தவனையும் கண்டிருக்கலாம். மாயாவை பார்த்தவுடன் அவன் கண்கள் காட்டிக்கொடுத்த ஈர்ப்பு மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றாலும் உடன்பிறந்தவளிற்கு தெ(பு)ரிந்திருக்கலாம் அல்லவா!

தொடரும்…

வணக்கம் நட்பூஸ்…😍😍😍 இதோ அடுத்த அத்தியாயத்துடன் உங்க 🌈🔥 வந்துட்டேன்…😊😊😊 கதையை படிச்சுட்டு உங்க கருத்துக்களை ரியாக்ஷன்ஸ் மூலமாவோ, காயின்ஸ் மூலமாவோ, கமெண்ட்ஸ் மூலமாவோ சொல்லுங்க…😊😊😊

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  8 Comments

  1. Janu Croos

   அஷ்வினு…அப்போ சாகருக்கு முன்னாடியே நீ மாயாவ லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா….அத அவள்.கிட்ட சொல்றதுக்கு என்னடா…நீ லேட் பண்ணதால சாகர் அவள லவ் பண்ணி அத அவள் கிட்டயே சொல்லி டபுள் சைட் லவ் ஆக்கிட்டானீ….எல்லாம் விதி அஷ்வினு…வேற என்னத்தௌ சொல்றது…

   1. vaanavil rocket
    Author

    ஆமாவாம் எல்லாம் விதி…💔💔💔 அஷ்வினு😥😥😥

  2. Sangusakkara vedi

   So cute sagar vera yarayavathu love panni irunthurukalam…. Ashwin love thn high light ah iruku…😍😍😍😍

   1. vaanavil rocket
    Author

    😍😍😍 Aama va… Sagar ku vera jodi irundhurukalamo🤔🤔🤔
    Ashwin😍💔😍
    Sry for the late reply sis😊😊😊

  3. Archana

   அட பாவமே அஷ்வின்னே🤧🤧 விதி வினி ரூபத்திலே சதி ஆடிடுச்சு இல்லைனா, அந்த ரதி நீயே கதின்னு உன் லவ்வுலே விழுந்து அந்த மதி போல உங்க காதலும் ஜொளிச்சிருக்கும்😅😅

   1. vaanavil rocket
    Author

    Ada ena rhyming😁😁😁
    Aama vidhi dhan kaaranam…
    (Yarum en pakkam thirumbama iruntha sari dhan😜😜😜)

  4. Interesting ud sis nice super aswin fb starts ah

   1. vaanavil rocket
    Author

    Tq so much sis🤩😍😍
    Aama aana fb oru epi ku dhan irukum sis😁😁😁
    Sry for the late reply sis😊😊😊